• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
உன் விழியோடு நானாகிறேன்

சிறுபிள்ளைப் போல் சிந்தியா ஆதிரையின் கையைப் பிடித்து தட்டாமாலை சுற்றினாள்.அவள் பிடித்து சுற்றிய சுற்றில் தலையில் கைவைத்து ஓரமாக அமர்ந்தளைப் பார்த்து சிந்தியா சிரித்தப்படி “என்ன வயசாகிட்டு வருதோ?” என்று சொன்னாள்.

அவளைப் பார்த்து முறைக்க முடியாமல் தலையை கவிழ்ந்தப் படி இருந்தாள்.

சிந்தியா “உன் பொண்ணு எப்படி இருக்கா?நல்லா வளர்ந்துட்டாளா? பார்த்து ரொம்ப நாளாச்சே”என்றாள்.

ஆதிரை “நானும் இங்கே வந்து சேர்ந்ததும் போன் பண்ணனும்னு நினைச்சேன் இரு வீடியோ கால் பண்ணுறேன்” என்று தன் அன்னையின் கைப்பேசிக்கு அழைத்தாள்.

அவளின் அழைப்பை எடுத்தவர் “ஹலோ ஆதிரை ஊருக்கு நல்ல படியா போய்ட்டியாம்மா” என்று கேட்கவும் இவளும் “ம்ம்… நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன் வியன்கா எங்கேம்மா?”

“இதோ பக்கத்துல தான் இருக்கா”என்று தன் பேத்தியிடம் கைப்பேசியைக் கொடுத்தார்.

புன்னகை முகமாய் வாங்கியவளோ “அம்மா கேரளாக்கு போயாச்சா? ஜாலியா இருக்கீங்களா?” என்று ஆறு வயதுக் கொண்ட தன் மகள் கேட்கவும் அவளும் தன் பெண்ணை பார்த்தபடியே ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.

பக்கத்தில் இருந்த சிந்தியாவைப் பார்த்த வியன்கா “ஆன்ட்டி பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க எங்க அம்மாவை விட” என்று சொல்லி சிரித்தாள்.

வியன்காவிடம் சிந்தியாவும் ஆதிரையும் பேசி சிரித்து கடைசியாக வியன்கா ஆதிரை தன்னை அடிக்கடி கைப்பேசியில் அழைத்து பேசி தொந்தரவு செய்யக் கூடாது என்ற ஒரு பெரிய உத்தரவை போட்டு விட்டு அழைப்பை துண்டித்தாள்.

அன்றைய நாள் இப்படியே பலகதைகள் பேசி சிந்தியாவின் உடைகள் சரியாக போட வேண்டியதை எடுத்து வைப்பதில் நேரம் சென்றது.

மாலை வேலையில் சிந்தியா தன்னோடு கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றாள்.

மணமக்களின் பெற்றோர்கள் ஒரு வண்டியிலும் இரண்டு பேரின் உடன் பிறந்தவர்கள் இன்னொரு வண்டியில் மதன்,சிந்தியா இவர்களோடு ஆதிரையிலும் தர்ஷனும் சேர்ந்துக் கொள்ள கூடவே குட்டிம்மாவோடு இன்னும் இரண்டு பிள்ளைகளும் சேர்ந்துக் கொண்டனர்.

இம்முறை மதன் காரை ஓட்டுவதால் சிந்தியா முன்னால் அமர்ந்திருக்க ஆதிரையும் தர்ஷனும் அவர்களுக்கு நடுவில் குட்டிம்மா தன் தோழிகளோடு அமர்ந்திருந்தாள்.பிள்ளைகள் எல்லாம் பேசி சிரிக்க இதைப் பார்த்து மற்ற மூவரும் சிரிக்க ஆதிரை தான் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து சிந்தியா தமிழில் சொல்வதற்கு முன்னாலேயே மதன் அவர்களுக்குள் பேசுவதற்கான அர்த்தத்தைச் சொன்னான்.அதைப் பார்த்த தர்ஷன் “நான் வேணும்னா போன்ல கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஆன் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று மலையாளத்தில் தான் கேட்டான்.

அவன் சொன்ன டிரான்ஸ்லேட்டர் வார்த்தையின் மூலம் புரிந்துக் கொண்டவள் விழிகளாலேயே அவனை எரித்து விடுவதைப் போல் பார்த்து முறைத்தாள்.இதைப் பார்த்த குனிந்து சிரித்தப்படியே திரும்பிக் கொள்ள சிந்தியாவோ “உன்னை பற்றி பேசுனா மட்டும் டிரான்ஸ்லேட்டர் தேவையில்லை போல” என்று அவளும் சேர்ந்துக் கொள்ள ஆதிரைக்குத் தான் என்னச் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

ஆனால் மதனோ “இவ்வளவு நேரமா எல்லோரும் பேசுனாங்கல்ல அதை வைச்சு ஓரளவு யூகிச்சாங்க என் தங்கச்சி” என்று அவன் ஆதரவு தரவும் ஆதிரை “ஆமாம் அதை வைச்சுத் தான் புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.

உடனே தர்ஷன் “தமிழை தலைகீழா எழுதினா மலையாளம் அவ்வளவுதான்” என்று சொல்லவும் அந்த நேரத்தில் ஒரே சிரிப்பாகத் தான் இருந்தது.

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வரவும் எல்லோரும் துணி கடைக்குச் சென்றனர்.அப்போது சிந்தியாவின் கைகளைப் பிடித்த ஆதிரை மெதுவாக “ஹேய் யார்னே தெரியாதவங்க என்னை கிண்டல் பண்ணுறது சரியில்லை”

அவளோ சிரித்துக் கொண்டே “ஏன் யார்னே தெரியாதவங்கன்னு நினைக்கிற இன்றையிலிருந்து ப்ரெண்ட்ஸ் ஆகிக்கோங்க”

“அதெப்படி முடியும்?” என்று ஆதிரை யோசனையாகக் கேட்க சிந்தியா “ப்ச் ஆதி எல்லோரும் ஒன்றாக இருக்கப் போறது இந்த ஒருவாரம் தான் அப்புறம் எல்லோரும் அவங்க இடத்திற்கு போய்டுவோம் அப்புறம் நம்மளே நினைச்சாலும் இதே மாதிரி எல்லோரையும் ஒன்னு சேர்க்க முடியுமான்னு நினைச்சா கஷ்டம் தான் ஏன்னா அப்போ அவங்க சூழ்நிலை எப்படி இருக்கும்னு தெரியாது அதனால சிரித்து பேசி சந்தோஷமாக இந்த நேரத்தை புது உறவுகளோடு இருந்துட்டுப் போகலாம் சரியா அதனால எதையும் பெரிசா எடுத்துக்காதே எல்லாமே ஒரு நல்ல நினைவுகள் தான்” என்று சிந்தியா சொல்லவும் ஆதிரையால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

அவள் சொல்வதும் எல்லாம் உண்மை தானே.ஏன் தன்னால் இப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று நினைத்தவள் அவள் சொல்வது போல் இருந்து விட்டுப் போகலாம் என்று முடிவெடுத்தாள்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு தேவையான உடையை வாங்கத் தான் எல்லோரும் வந்திருந்தனர்.முதலில் மணமக்களுக்கு உடையை எடுத்து முடிக்கவும் அடுத்து மற்றவர்களுக்கு எடுத்தனர்.

அப்படி அவர்கள் உடை எடுக்கும் போதே ஆதிரைக்கும் சில துணிகளை வைத்துப் பார்த்தாள் சிந்தியா.

ஆதிரை “எனக்கு எதுக்கு வைச்சுப் பார்க்கிறே? நானே நிறைய பர்சேஸ் பண்ணிட்டேன்” என்றதற்கு “ப்ச் அமைதியா இரு ஆதிரை எல்லாத்துக்கும் கேள்வி கேட்காதே! அவரோட தங்கச்சிகளுக்கு எடுக்கிறதுக்காத் தான் கடைசியில் ஒரு இளஞ்சிவப்பு நீண்ட மேக்ஸியை எடுத்துக் கொண்டாள்.கடைசியில் எல்லோரும் மிகப்பெரிய குடும்பமாக ஒரு உணவகத்திற்குச் சென்றனர்.இவ்வளவு நபர்களோடு உணவருந்தச் செல்வதெல்லாம் ஏதோ வித்தியாசமாக இருந்தது.அவரவருக்கு பிடித்த உணவு அதை பண்டமாற்று முறையில் இரசித்து கருத்துச் சொல்லி சாப்பிட்டு சிரித்து பேசி பெரிய கும்மாளமிட்டு என்று அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.

மனம் முழுவதும் அழுத்தம் இல்லாமல் லேசாக இருக்கவே காரில் அமர்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.பயணம் முடிந்து வீட்டிற்கு அருகில் வரவும் சிந்தியா ஒரு முறை அழைத்ததும் விழித்துக் கொண்டாள்.எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சியும் சோர்வும் சேர்ந்துக் கொள்ள இன்னும் சில புதுஉறவுகள் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தனர்.

அவர்களிடமும் விசாரிப்பு அறிமுகப்படுத்துதல் என இன்னும் கொஞ்சம் அந்த இரவை நீளப்படுத்தியது.அதோடு எல்லோரும் படுக்கச் செல்ல ஆதிரை தன் அறையில் உள்ள மெத்தையில் படுத்துக் கொண்டாள்.சிறிது நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து படுத்திருப்பதை போல் உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க அங்கே சிந்தியாவும் குட்டிம்மாவும் படுத்துக் கொண்டனர்.கீழே இன்னும் சில சிறு வயதுப் பெண்களும் படுத்துக் கொண்டனர்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் புதியதாக இருந்தது.யாருமே இல்லாமல் தனிமையில் இருந்தவளுக்கு ஏதோ சுற்றி எங்கிலும் அவளோடு இருக்க பலபேர்.அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கையையும் காலையும் மேலே போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் சிந்தியா.

அந்த கணமான அணைப்பினில் விழிகளை மூடியவள் அப்படியே தூங்கிப் போனாள்.திடீரென்று பதறியபடி விழித்தவள் நேரத்தைப் பார்க்க அது காலை ஐந்து மணியை காட்டியது.எப்போதும் எழுந்து பழக்கமானாதால் படுக்கையிலிருந்து எழ முயற்சிக்க இன்னொரு சின்ன பாதம் மேலே இருந்தது.யாரென்று பார்த்தால் குட்டிம்மா இவளோடு ஒட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்.

அவளையும் அவளுடைய அம்மாவையும் விலக்கி விட்டு கீழே அதை விட மோசமாக ஒவ்வொரு பக்கமாக கிடந்தவர்களை தாண்டி குதித்து குளியலறைக்குச் சென்று நேராக மொட்டை மாடிக்குச் சென்றாள்.

சில்லென்ற தென்றலும் விடிந்தும் விடியாத ஒரு வானிலையில் தூரத்தில் சிறிது சிறிதாக கூவிய குயிலின் கானத்தில் மெய்மறந்து கண்களை மூடியபடி நின்றவள்

இயற்கை தாயின் மடியில்

பிரிந்து எப்படி வாழ இதயம்

தொலைந்து சலித்து

போனேன் மனிதனாய்

இருந்து பறக்க வேண்டும்

பறவையாய் திரிந்து தெரிந்து

பறந்து… என்ற மெதுவாக பாடிய போது இம்முறையும் அங்கே புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்து மெதுவாக இரு கைகளையும் தட்டி பாராட்டியபடி “வாவ் செமையா பாடுறீங்க ஆதி” என்றான் ஆங்கிலத்தில்.

அவளோ மெதுவாக “என்னன்னு அர்த்தம் தெரியாமலேயே பாராட்ட வந்துட்டாங்க” என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து கொஞ்சம் சத்தமாகவே தனக்குள் புலம்பினாள்.


அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.அவனோ அவளைப் பார்க்க அவளின் பார்வையில் கோபமும் திமிரும் தான் தெரிய வேறு எங்கோ பார்வையை நிலைத்து நின்றாள்.
 
Last edited:
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
“நான் பாராட்டினதுக்கு சின்னதா ஒரு தாங்ஸ் சொல்லலாமே!” என்றதற்கு சட்டென்று அவனைப் பார்த்து முறைத்தவள் “எனக்கு எந்தவிதமான பாராட்டும் தேவையில்லை” என்றாள்.

அவனோ அசராமல் “அப்படியா! சரி அப்போ பெரிய இயற்கை இரசிகையா?” என்று சொல்லி சிரித்தான்.மெதுவாக “யாராவது பொண்ணுங்க தனியா வந்து நின்னா உடனே வந்து பேச வேண்டியது” என்று முணுமுணுத்தவள்

இம்முறை “தர்ஷன் நீங்க என்னைத் தொந்தரவு பண்ணுறத்துக்கே இங்கே வந்த மாதிரி இருக்கு” என்றாள் இன்னும் கோபம் குறையாமல்.

அவனோ அதே புன்னகையோடு “இதை நானும் சொல்லலாம் இல்லையா? நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண வந்து இருக்கீங்கன்னு” என்ற போது அவளோ புரியாமல் பார்த்தாள்.

அவனோ தன் கைகளை நீட்டி எதிர்புறம் காட்ட அங்கே யோகா பாய் விரிக்கப்பட்டு இருந்தது.அங்கே அவன் அமர்ந்திருந்ததை அவள் கவனிக்கவில்லை என்பதை புரிந்து அமைதியாக நின்றாள்.

அவனோ விடாமல் “இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்களுக்கு முன்னாடி இங்கே வந்தது நான் தான்” என்றான்.

அவளோ அதை கவனிக்காதது போல் நின்றுக் கொண்டாள்.அவளின் மனசெய்கையை முதலில் விழிகள் தான் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.அதை அவன் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் நின்றான்.

“என்ன பதிலே இல்லை” என்று அவளை திரும்பவும் சீண்டிப் பார்த்தான்.அவளோ “இது எல்லாருக்குமான பொது இடம் இங்கே தனக்கானது பேசுறதுக்கு யாருக்கும் இல்லை” என்று சொன்னவள் “எதாவது தொல்லை பண்ணிட்டே இருக்கிறது” என்று முணங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.தர்ஷனுக்கு தமிழ் தெரியாது என்று அவனிடம் இவ்வளவு நேரப் பேச்சும் ஆங்கிலத்தில் தான் இருந்தது.

எப்போதும் போல் தயாராகி முழுநீள மேக்ஸி உடையை அணிந்தபடி வெளியில் நின்று சிந்தியாவுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.அப்போது தர்ஷன் அந்தப் பக்கமாகச் செல்லவும் சிந்தியா அவனிடம் தமிழில் “மதன்கிட்டே சாப்பாடு அரேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் விசாரிக்கச் சொல்லு நான் கால் பண்ணால் எடுக்கலை நீ வெளியே தானே போற உன் கூட ஆதிரையையும் அழைச்சிட்டு போ அவளுக்கும் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்.

அதற்கு தர்ஷன் “அவங்களுக்கு என்கூட வர விருப்பம்னா எனக்கு பிரச்சினை இல்லை” என்று தமிழில் பேசவும் ஆதிரை தான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தவள் சிந்தியாவின் கையைப் பிடித்து இழுத்து கொஞ்சம் தள்ளி வந்தவள் “ஹேய் அவருக்கு தமிழ் தெரியுமா?”

“யாருக்கு தர்ஷனுக்கா அவன் தமிழன்டி நம்ம சென்னைத் தான்” என்றாள்.

அவளோ “அப்படியா! அப்போ நேற்று மலையாளத்துல பேசுனாங்க”

“அது மலையாளம் அவனுக்கு தெரியும் அதனால பேசினான் இதெல்லாம் ஒரு டவுட்டுன்னு கேட்டுட்டு நீ சீக்கிரம் கிளம்பு கொஞ்சம் வெளியே சுத்திப் பார்த்துட்டு வா இன்னும் நாலு நாளைக்கு எங்கேயும் நகர முடியாது வியன்காவுக்கு எல்லோருக்கும் எதாவது வாங்குவல்லே அதான் போகச் சொல்றேன்” என்று அவளை துரத்துவதிலேயே இருந்தாள் சிந்தியா.

தர்ஷன் மெதுவாக அவர்கள் பக்கம் எட்டிப் பார்த்து “ப்ளீஸ் லேடிஸ் எனக்கு நேரமாகுது நான் சீக்கிரமா போகனும் உங்க சோகக் கதையை அப்புறமாக பேசுங்க” என்றதற்கு சிந்தியா “போ ஆதி அப்புறம் பேசிக்கலாம்” என்று அவளை காரில் ஏற்றிய பிறகு தான் அங்கிருந்து சென்றாள்.

கொஞ்சம் தயக்கத்தோடு முன்னால் அமர்ந்தவளைப் பார்த்து லேசான புன்னகையோடு காரை ஓட்ட ஆரம்பித்தான் தர்ஷன்.

ஒரு பெருத்த அமைதி அங்கே நிலவி இருக்க தர்ஷன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.ஆதிரை யோசனையாக அமர்ந்திருந்தவள் மெதுவாக அவன் புறம் திரும்பி பார்த்தாள்.அவனோ காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.

அவர்கள் இருந்த பகுதியிலிருந்து கொஞ்சம் வெளியே கொஞ்ச தூரம் வந்ததும் “உங்களுக்கு எங்கே போகனும்?’’ என்று அவன் பேச்சை ஆரம்பிக்கவும் ஆதிரை வேகமாக “சாரி தர்ஷன் உங்களுக்கு தமிழ் தெரியும்னு எனக்குத் தெரியாது நான் ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்” என்றாள்.

அவனோ “எனக்குத் தமிழ் தெரிஞ்சதுனால சாரி கேட்கிறீங்க இல்லைன்னா நீங்க பேசினதைப் பற்றி யோசிச்சு இருக்க மாட்டீங்க அப்படித் தானே” என்று அவன் கேட்கவும் அவளிடம் பதிலில்லை.

“எல்லோரும் எப்பவும் ஒரே மாதிரியாகவும் ஒரே எண்ணத்தோடயும் இருக்க மாட்டாங்க ஆதி அதை புரிஞ்சுக்கோங்க உங்க கூட்டை விட்டு நீங்க முதல்ல வெளியே வாங்க அப்போத் தான் மற்றவங்களை பார்க்கிற முறையும் மாறும் என்னை நல்லவன்னு காட்டிக்கிறதுக்காக நான் சொல்லலை இதே மாதிரி நீங்க வேற யாரையும் வருத்தப்பட வைக்கக் கூடாதுங்கிற எண்ணத்தில் தான் சொன்னேன்” என்றான்.

அவன் சொல்வது எல்லாம் உண்மைதான் என்ற அர்த்தத்திலும் அவனின் இந்தக் குரல் எங்கேயோ கேட்ட நினைவை அவளுக்குத் தர யாரென்ற நினைவில் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே அமைதியாக இருந்தாள்.
 
Top