- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
25
அப்பாவின் உடல்நிலை சரியில்லாதது, அவளின் அவசரக் கல்யாணம் அதிலும் ஸ்ரீனிவாசனை திருமணம் முடித்தது சரியா? தவறா? என வினாத்தாள் போல் விடை தெரியாமல் திணறிக் கொண்டிருந்த தருணங்கள். தன் குழப்பத்தால்தான் திருப்பூரில் இருந்தாள்.
தர்ஷனையும், சிந்துவையும் திருப்பூர் கார்மெண்ட்ஸையும், கோவை டெக்ஸ்டைல்ஸையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி, ஸ்ரீனிவாசன் சென்னை சென்றிருந்தான்.
அப்பாவைப் பற்றின தவறான அபிப்ராயங்கள் ஒரு முடிவுக்கு வந்ததுமே, கணவனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டது அவளின் மனது. ‘அன்றொரு நாள் மனம் கேட்டது அவன் வேண்டுமென்று. லூசு பிடிச்சி அலையப்போற என்று. அது இன்று நடக்கிறதோ!’ என தோன்ற வைத்த தருணங்கள். இருந்தாலும் சில விஷயங்கள் முடிவுக்கு வராமல் கணவனிடம் தன் மனம் திறக்க மனமில்லை அவளுக்கு.
திடீரென்று ஒருநாள் இரவில் வந்தவனை எதிர்கொள்ள முடியாமல் திணற, பாரதியின் அறிவுறுத்தலில் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் அவளின் நலம் விசாரித்து தெரிந்த பின், நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“இண்டர்நேஷனல் ஸ்கூல் யூனிபார்ம் மாறுது. அதுக்கான ரெடிமேட் ட்ரஸ் பள்ளியிலேயே டிஸ்ட்ரிப்யூட் பண்றாங்க. சைஸ் வாரியா, பிஃப்த் ஸ்டாண்டர்ட் வரை ஸ்கர்ட் அன்ட் டாப் மேல கோட். கோட்கு பதிலா வேற எதாவது டிபரண்டா இருந்தாலும் ஓகே. சிக்ஸ்த்லயிருந்து சுடிதார் செட். அப்புறம் ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்ஸ்க்குன்னு எப்பவும் ஆர்டர் வந்துகிட்டேதான் இருக்கும். நெருங்கின ரொம்ப பாபுலரான கார்மெண்ட்ஸ்கு மட்டும் தெரியுற மாதிரி சீக்ரெட்டா அனோன்ஸ் பண்ணியிருக்காங்க. சோ, இந்த ஆர்டர் நமக்கு கிடைச்சா கோடிக்கணக்குல வருமானம்ன்றது ஒருபுறம்னா, நம்ம கார்மெண்ட்ஸ் அடுத்த லெவல்கு போகும். இதுக்கான எஸ்டிமேட் போடணும். அதான் உன்னைத்தேடி வந்தேன். ட்ரஸ் மாடல் நீ பண்ணினா சரியாயிருக்கும்னும் தோணிச்சிது. நீ படிச்சதும் அது சம்பந்தமாதான” என்றான் விளக்கமாய்.
அவளுக்குத் தெரிந்தது, தன்னைப் பார்க்க எதோ ஒரு காரணம் தேவை. மற்றபடி இதைப்போல் பல ஆர்டர்களை ஈசியாக தன்னிடம் இழுக்கும் திறமையுள்ளவன் என்பது தெரியாதவளா அவள். ஏற்கனவே அவனைப்பற்றித் தெரிந்திருந்தாலும், இந்த கொஞ்ச நாட்களில் கவனிக்காதது போல் அவன் புராணத்தைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள். கணவனுக்கான தன்னுள் மறைந்திருந்த காதல் வெளிவருவதை எண்ணித் தன்னாலேயே உதடுகள் புன்னகையைத் தத்தெடுக்க, ஒருவித சுவாரஸ்யத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிற? நான் என்னவோ உன்னைக் கவர் பண்றதுக்காக வந்த மாதிரி பார்க்கிற?” என்றதில் இன்னுமே சிரிப்பு வர, வாய்விட்டு சத்தமாக சிரித்தவளையே மென்மையாக பார்த்திருந்து, “அப்படியே என்னோட வந்திரேன் ரதி. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றான் தன் ஏக்கத்தை வார்த்தையாக வெளியிட்டு.
சட்டென்று சுதாரித்தவள், “இ...இல்ல நான் அப்பா கூடதான் இருக்கப்போறேன்” என்றாள் வேகமாய்.
“ஹ்ம்... உன்னிஷ்டம்” என தோளைக்குலுக்கி, “சரி வா இந்த ஹெல்பாவது பண்ணலாமே” என்றவன் வேலைக்கு இடையில், “ஆமா இந்த விஷயம் அண்ணனுக்கு தெரியுமா?” என்றாள் கேள்வியாய்.
“எனக்கே தெரிஞ்சிருக்குன்னா, என்னோட சீனியர் என் மச்சானுக்கு தெரியாமல் இருக்குமா? அவரும் இன்னைக்கு தீயா வேலை செஞ்சிட்டிருப்பார். டௌட்னா காலையில கேட்டுப்பாரு” என்று முடிக்குமுன் கதவு தட்டப்பட்டது.
சூடான டீயுடன் வெளியே நின்றிருந்தாள் தாரிணி.
“பாரு என் மச்சான் தீயா வேலை செய்யல. டீயால வேலை செய்யிறாரு” என்றான் கேலியாய்.
“அண்ணா, எதோ வேலை செஞ்சா ஓகேதான” என்றுவிட்டு தாரிணி சென்றிருந்தாள்.
இருவருமாக அன்றிரவே அனைத்தையும் செய்து முடித்து மடிக்கணிணியை மூட இரவு மூன்றானது. இருவரும் ஒரே அறையில் எப்படி என்று திணறலுடன் திண்டாடிய நிமிடங்கள், கண்ணுள் வந்து சென்றது அழகாய்.
“என்ன சுருள் முடிஞ்சிருச்சா?” என்ற கணவனின் கேலியில் நினைவு வந்தவள், சந்தோஷத்தில், “அந்த ஆர்டர் நமக்கு கிடைச்சிருக்கா? கங்க்ராட்ஸ்” என்றாள் கணவனின் கண்பார்த்து.
“கங்க்ராட்ஸ் உனக்கும்தான்” என்றவன் ஒரு கையால் அவளை அணைத்தபடி வைத்து, இன்னொரு கையால் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சாக்லேட் எடுத்து, “ஸ்வீட் எடு கொண்டாடு” என்று அவளுக்கு ஊட்டிவிட்டான்.
“தேங்க்ஸ்” என்றாள்.
“நீயே வச்சிக்கோ.”
“என்னத்த?” என புரியாமல் அவள் விழிக்க,
அவள் கண்களையே பார்த்திருந்தவனின், “என்னைத்தான்” என்ற பதில் வித்தியாசமான சத்தத்தில் வர, “ம்… வச்சிக்கிட்டா போச்சி” என்றவள் குரலிலுள்ள குழைவு அவனைக் குழைக்க, “நிஜமாத்தான?” என்றான் குரல் மாறாமல்.
“அப்ப நான் என்ன பொய்யா சொல்றேன். நிஜமாவே வச்சிக்கிறேன்” என்று வேகமாக பதிலளித்தவள், கணவனின் ஆர்ப்பாட்டமான சிரிப்பில் தான் உளறியிருப்பது தெரிய, சட்டென்று உதடு கடித்தாள்.
“மெய்தான்னு தெரியுது” என்றபடி இன்னுமே தன்னுடன் இறுக்க, “நா...நான் இல்ல. நான் அண்ணாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடப்பார்த்தவளைத் தடுத்து, “எங்க எஸ்கேப்பாகப் பார்க்கிற? ஒழுங்கா சொன்னதைச் செஞ்சிட்டுப் போ” என்றான்.
“ப்ளீஸ் என்னை விடுங்களேன்” என்றவள் கெஞ்சல் அவனைச் சேராதிருக்க, “இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படிப் பண்றீங்க? வச்சிக்கிட்டா போச்சின்னு சொல்லவேயில்ல தெரியுமா?” என குரலில் அப்பாவித்தனத்தைக் காட்டி கண்சிமிட்டினாள்.
“நீ எதுவும் சொல்லலை” என்றவன் பார்வை அவள் கண்ணிலிருந்து இறங்கி இதழில் இடம்பிடித்து, “உன் உதடுதான் சொல்லிச்சி” என்றான் பார்வையை நகர்த்தாமல்.
“அ...அதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவள் பார்வை வெட்கத்தில் தரை பார்க்க, “விடுமா. நான் மட்டுமே பொறுப்பாகிக்கறேன்” என்று தலை சரித்து மென்மையாக முத்தமிட்டு வன்முறையில் இறங்க ஆரம்பித்தான்.
“ஹ்ம் விடுங்க. பாட்டி, அண்ணி இல்லன்னா தர்ணி வந்துரப்போறாங்க” என்று கணவனைத் தள்ளிவிட்டு நகர்ந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்த,
“அப்ப நாங்க வந்தா பரவாயில்லையா? நாங்க எதையும் பார்க்கலபா? எந்த சத்தமும் எங்களுக்கு கேட்கல” என்றதில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர்.
முதலில் திகைத்து பின் மகிழ்ச்சியில், “சிந்து அண்ணி” என்று ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“எப்படியிருக்க பாகீ? ஹேய்! பதில் வேண்டாம் கிச்சன் ரொமான்ஸ் பார்த்தாலே தெரியுது” என்றாள் குறும்பாய்.
“ச்சோ அண்ணி. அதெல்லாம் ஒண்ணுமில்லை. காஃபி கேட்டு வந்தாங்க” என்றாள் தரையைப் பார்த்தவாறு.
“ஓ...ஒண்ணுமில்லையா? அப்ப ஏன் இந்தக் கண்ணு என்னை நேரா பார்க்காம தரையைப் பார்க்குது?”
“சிந்துமா என் முறைப்பொண்ணை ரொம்ப கலாய்க்காத. உனக்கு கலாய்க்கணும்னு தோணினா, இதோ நிற்கிறானே தர்ஷன் ஓ சாரி சு...தர்ஷன் அவனை கலாய்.”
“ஹலோ மிஸ்டர் ப்ரதர். அதுக்கு நான் லைசன்ஸ் வாங்கியாச்சி. நீங்க சொல்லித்தான் செய்யணும்னு இல்ல. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்களே சு...தர்ஷன்” என்றாள் கிண்டல் குரலில்.
“அடி பின்னிருவேன். அண்ணன், தங்கச்சி ரெண்டுபேருக்கும் நான்தான் ஊறுகாயா. ஓடிப்போயிருங்க” என்றான் அவன்.
“அண்ணா சைட்டடிச்ச முறைப்பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க. அப்போதிருந்த சூழ்நிலையில வாழ்த்தக் கூட முடியலை. அதுக்கப்புறம் சொல்லணும்னு நினைச்சா, அதுக்கு வேல்யூ இருந்த மாதிரி தெரியலை” என்றாள் அவர்கள் தனித்தனியாக இருந்ததை நினைத்து. “ஆனா, இப்ப இருக்கு” என்று அவளின் சிவந்த முகம் பார்த்து, “அதான் வாழ்த்துறேன்” என்றாள்.
“அதனாலென்ன இதற்கும் சேர்த்தே வாழ்த்திரு” என்று ஆர்டர் கிடைத்ததைச் சொன்னான்.
“வாவ்! கண்டிப்பா வாழ்த்தியே ஆகணும்” என்று மேற்கொண்டு எப்படி செய்யலாம் என நால்வரும் விவாதித்தார்கள். இவர்களின் பேச்சினூடே ஒவ்வொருவராக எழுந்து வர, கிடைத்த ஆர்டருடன், கிச்சன் ரொமான்ஸை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று சொல்லி அனைவருக்கும் சிந்து ஒளிபரப்ப, அந்த பரபரப்பினூடே குற்றாலம் கிளம்பினார்கள் அனைவரும்.
ஸ்ரீனிவாசன், ப்ரவீண், சுதர்ஷன் மூவரின் கார்களில் கிளம்ப, தனக்கு வேலைய இருப்பதாகச் சொல்லிய சங்கரையும், நீங்க குடும்பத்தோட போறீங்க. இடையில் நாங்கள் எதற்கென்று கேட்ட ஜெகனையும் விடவில்லை அவர்கள்.
வாகனத்தை எல்லாம் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அவரவர் ஜோடியின் கைகோர்த்து நடக்க ஆரம்பிக்க, ராஜியால் வேகமாக நடக்க முடியாதென்பதால் ஜெகன் அவளின் வேகத்திற்கு கைபிடித்து அணைத்தாற்போல் வர, “வாவ்! எவ்வளவு சூப்பராயிருக்குல்ல. அப்படியே ஜில்லுன்னு காற்றடிக்குது” என்ற கோரஸ் குரல்களில் அருவி அருகில் வந்துவிட்ட குதூகலம் இருந்தது.
“ஆமா சூப்பராத்தான் இருக்கும். எல்லாரும் ஜோடியா வந்திருக்கீங்கள்ல அப்படித்தான் இருக்கும்” என்ற நவீனின் சலிப்பில், “டேய்! அதுக்காக இருபத்தொரு வயசு பையனுக்கு ஜோடி ரெடி பண்ணியா கூட்டிட்டு வர முடியும்?” என்று ப்ரவீண் கேட்டான்.
“ஏன் பாகீ அக்காக்கு என் வயசுதான? அவங்களுக்கு மேரேஜ் பண்ணிட்டீங்க?” என்றான் வேகமாய்.
“நவீ நீ கவலையேபடாத. இங்க இருக்கிறதுல அழகான பொண்ணா பார்த்து தள்ளிட்டுப் போயிரலாம்” என பாகீரதி சொல்ல, அவள் பார்வை சென்ற இடம் பார்த்த தாரிணி வந்த சிரிப்பை அடக்கி, “கண்டிப்பா பாக்கி. எனக்கும் இந்தப்பொண்ணு ஓகே” என்று அந்த அழகுப்பெண்ணைக் காட்டினாள்.
அவள் காண்பித்த இடத்திலிருந்த குரங்கைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க, “அக்கா! அண்ணி கேலி பண்ணலாம். தம்பிய நீங்க பண்ணலாமா?” என்றான் பாவமாய்.
“நான் இப்ப உன்னோட அக்கா இல்ல. உன் அண்ணியோட ப்ரண்ட் மட்டும்தான்” என்றாள் சிரித்தபடி.
“ஹேய் ரதி! ஏன் என்னோட மாப்பிள்ளைய கலாய்க்கிற? அந்த உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு.” ஸ்ரீனிவாசன் ஆதரவாக பேசி கலாட்டா செய்ய, “வேண்டாம் விட்டுருங்க நான் பாவம். டேய் குட்டீஸ்! இந்த ஓல்ட்ஸ் கூட நமக்கென்ன வேலை. வாங்க நாம தனியா என்ஜாய் பண்ணலாம்” என்று குழந்தைகளுடன் நகர்ந்தான்.
“நவீ அந்தப்பக்கம் உன் முறைப்பொண்ணுங்க நிறைய இருக்காங்க. மாட்டின மகனே கொஞ்சியே கொன்னுருவாங்க. ஒழுங்கா எங்க கூடவே வா” என்ற ப்ரவீணின் அன்பான அழைப்பில், “குட்டீஸ் வேற வழியேயில்லை. எல்லா பாதையையும் லாக் பண்ணிட்டாங்க. சோ, இவங்க லூட்டியை சகிச்சிட்டு நாமளும் போவோம்!”
“நீங்க எங்க போனாலும் நாங்களும் வர்றோம் சித்தப்பா” என்று அசராமல் பதிலளித்தார்கள். “நண்பேன்டா” என இருவரையும் சேர்த்தணைத்தான்.
குற்றாலத்தில் ஆடி முடித்து செண்பகா அருவி, தேனருவி, என்று பார்த்து முடித்து புலியருவி செல்வதாக அனைவரும் கிளம்ப, “அது கொஞ்சம் கஷ்டம் சட்டுன்னு ஏற முடியாது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்” என்று சிலர் அறிவுரை செய்தனர்.
பெண்களைக் கீழ் நிறுத்தி ஆண்கள் அதை சாதித்தே தீருவது என்று மேல்வரை சென்று வந்தார்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தமே. இடையில் கொண்டு வந்திருந்த உணவை அனைவரும் சாப்பிட்டு, மறுபடியும் சுற்ற ஆரம்பித்து வீடு வர மாலையானது.