• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
359
பூமாலை 9


கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவன் சரிங்க மாமா நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்க. நான் எஸ்டேட் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று விக்ரம் சொல்ல, சரி கண்ணு என்று அவர்கள் ஐவரும் காரில் ஏறி செல்ல, தனது போனிலிருந்து மித்ரனுக்கு கால் பண்ணினான்.

கடைசி ரிங்கில் அட்டென் பண்ணியவன் "சொல்லு மச்சி, வேலை எல்லாம் எப்படி போகுது? என்றான்."

"வேலையெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... இப்ப நான் எங்க இருந்து பேசுறேன்னு தெரியுமா? கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறேன். இப்பதான் மிருதுளாவைப் பார்த்துட்டு வர்றேன்."

சிறு மௌனத்திற்குப் பிறகு "ஓ... பார்த்தியா? குட்டிமா அங்கதான் ஜாயின் பண்ணியிருக்கா டா" என்று மித்ரன் சொல்லவும், அவளா குட்டிமா... எப்பாஆஆஆ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்ட விக்ரம், "என்னடா 'அங்கதான் ஜாயின் பண்ணியிருக்கா'ன்னு இவ்வளவு சிம்பிளா சொல்ற? அவ கலெக்டர்னு எனக்குத் தெரியும், ஆனா நம்ம ஊருக்கே அவதான் கலெக்டரா வந்திருக்காங்கிற விஷயம் உனக்குத் தெரியும்தானே? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?"

"இல்லடா... அவ இன்னைக்குத்தான் சார்ஜ் எடுத்தா. நீ வேலை விஷயமா அங்க போவேன்னு எனக்குத் தெரியும்." சரி சர்ப்ரைஸா இருக்கட்டும் என்கவும் , மயிர் சர்ப்ரைஸ்.

"நான் போறேனோ இல்லையோ, அது முக்கியம் இல்லடா. நேத்து கூட உன் கூட எவ்வளவு நேரம் பேசினேன்? ஒரு வார்த்தை 'இவள் நம்ம ஊருக்கே வர்றா'ன்னு சொல்லியிருக்கலாம்ல? அங்க அவ முன்னாடி போய் நிக்கும்போது, எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சியா? அவளுக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. எனக்கு அசிங்கமாப் போச்சுடா."

தனது நண்பன் இத்தனை வருடங்களில் மிருதுளா என்று கூட சொல்லியதில்லை. ஆனால் இன்று அவள் இவள் என்று பேசுவதை கேட்ட மித்ரனுக்கு திகைப்பு தான் வந்தது.

ஹலோ ஹலோ எருமை மாடு லைன்ல இருக்கியா என்று விக்ரம் கத்தவும் அந்த குரலில், "இதுல என்னடா அசிங்கம்? அவ அவ வேலையைப் பார்க்கப்போறா. நாம எதுக்கு நடுவுல?".

"டேய், அவ வேலையைப் பார்க்கட்டும், அது வேற. ஆனா அவ நம்ம ஊருக்கே அதிகாரியா வர்றப்போ, என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க பாரு... அதுதான் எனக்குப் புரியல. நான் என்ன அவகிட்ட சிபாரிசா கேட்கப்போறேன்? மிலிட்டரிக்கு போனதுல இருந்து நீ ரொம்ப 'ரிசர்வ்டு' ஆயிட்ட மச்சி. நண்பன்கிட்ட கூட எதையும் ஓப்பனா பேச மாட்டேங்குற. இது சரியில்லைடா."

அடேய்.... ராசா...."ஏன் டா ஏன், நான் வேணும்னு பண்ணல..."

ஓஓஓ"சரி விடு... உனக்கு இது சாதாரணமாத் தெரியலாம். ஆனா எனக்கு இது அப்படி இல்ல. நான் அப்புறம் பேசுறேன்" என்று விக்ரம் போனை கட் பண்ண..

எப்பா நல்லவனே ...

ஆமா எந்த அதிகாரி கலெக்டர் வந்தா உனக்கு எங்க ராசா வலிக்குது?.
என்ன என்னைக்கும் இல்லாம புதுசா அவளைப் பற்றி சொல்லவில்லை என்று இப்படி குதிச்சுக்கிட்டு இருக்க என்று மனசாட்சி கேட்கவும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே.என் நண்பனோட தங்கச்சி அந்த எண்ணம் மட்டும் தான் எனக்கென்றான்.

ஆஹான்..

அப்படியா!

உன் பார்வையை பார்த்தால் அப்படி இல்லையே ராசா. என்னமே புது பொண்டாட்டி யை ரசிக்கிற போல இன்ச் இன்ச் ஆ பாத்துட்டு இருந்தியே அதை நான் கவனிச்சேன் தான் என்கவும், மரியாதையா ஓடிப் போயிடு என்று பல்லை கடித்தவன் பின்னர் தனது ஜீப்பில் ஏறி வீட்டை நோக்கி சென்றான்.

அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் அங்கே ஹாலில் உட்கார்ந்து இருக்கும் தனது தாத்தா பாட்டியை பார்த்து சாப்பிட்டீங்களா? என்க, இப்போது தான் விக்கி. ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம் என்று வசுந்தரா தனது பேரனிடம் கேட்கவும், கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிருந்தோம் பாட்டி.

புதுசா வந்திருக்கிறது யார் தெரியுமா? என்க... எங்களுக்கு எப்படி தெரியும் பா நீதான போயிட்டு வந்த என்று சுந்தரமூர்த்தி சொல்லவும் புது கலெக்டர் வந்து இருக்காங்க.சரி மரியாதை நிமித்தமாக பார்க்க போயிருந்தோம். அங்க போனா நம்ம மிருதுளா உக்காந்து இருக்கா...ஓஓஓ...அப்படியா என்று இருவரும் புதிதாக கேட்பது போல் ஆச்சரியமாக கேட்க, ஆமாம் தாத்தா எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

அந்த எருமை மாட்டு பயல் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லைனு தனது தாத்தா பாட்டியிடமும் நண்பனை திட்ட மறக்கவில்லை.

சரி விடு கண்ணு எப்படியும் குட்டிமா வீட்டுக்கு வருவா, பாத்துக்கலாம் வா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்கவும், ஹம் என்றவன் கையை கழுவிட்டு வந்து உட்கார, வசுந்தரா வும் பேரனுக்கு பரிமாறினார்.

பின்னர் சாப்பிட்டு மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த விக்ரம் அங்கிருந்த சோபாவில் உட்கார, கண்கள் மட்டும் கலெக்டர் ஆபீஸில் கண்ட அந்த ஒரு காட்சியிலேயே நிலைத்திருந்தன.

"அவளா இது?" என்று அவனுக்குள் ஆயிரம் முறை கேட்டுக்கொண்டான். காலங்கள் அவளை இவ்வளவு மாற்றியிருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவள் அமர்ந்திருந்த அந்த உயர்ந்த நாற்காலிக்கும், அவன் நின்றிருந்த இடத்திற்கும் இடையே இருந்த தூரம் அவனை மிகவும் பாதித்தது. அவளைப் பார்த்த அந்த ஒரு நொடியில் அவன் உடல் சிலிர்த்ததை நினைத்து இன்னும் அதிராமலில்லை.

சிறிது நிமிடங்கள் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனது போனிற்கு கால் வரவும் அதில் கலைந்தவன் பின்னர் தனது வேலையை பார்க்கலானான்.

கலெக்டர் இல்லம்:

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவளிடம் முதல் நாள் எப்படி போனது என்று மாலா கேட்க, நல்லா போச்சுங்கம்மா. சரி நான் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று ரூமிற்கு போய் ரெபிரஷாகி வரவும், சூடான காபி கப்பை கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் அமைதியாக ஜன்னல் ஓரம் போய் நின்றாள்.

ஜன்னல் வழியாக வெளியே இருக்கும் அழகிய மலர் தோட்டங்களும் நீண்டு வளர்ந்த மரங்களை விட அவளது கண்களுக்குள் விக்ரமின் முகம் மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தது.

அவன் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் அவள் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போனாள். ஆனால், ஒரு கலெக்டராக அந்த இடத்தில் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ள முடியாமல் போனது அவளுக்குள் ஒரு பாரத்தை ஏற்படுத்தியது.

கடைசியாக இவங்களை எப்ப பார்த்தோம் என்று யோசிக்கும்போது தனது அண்ணனின் கல்யாணத்தில் சந்தித்தது தான் அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள்.ஆனால் இதன் நடுவில் எவ்வளவு மாற்றம். ..

இருவருமே வெவ்வேறு அறைகளில் இருந்தாலும், இருவரது மனமும் அந்த ஒரே ஒரு சந்திப்பையே சுற்றிச் சுற்றி வந்தன. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அந்த மௌனமான சந்திப்பு இருவரின் இரவையும் தூக்கமில்லாமல் ஆக்கிவிட்டது.

எந்தவிதமான அரசு ஆரவாரமும் இன்றி, ஒரு சாதாரணப் பெண்ணாக, நீண்ட வருடங்களுக்கு பிறகு மாலா வுடன் வீட்டிற்குள் நுழைந்த மிருதுளா முதலில் தாத்தா-பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

வரவேற்பறையில் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும் தாத்தா, கண்ணாடிக்கு மேல் கண்களை உயர்த்தி, "வாம்மா மிருதுளா.. இப்பதான் உனக்கு நேரம் கிடைச்சதா?"

கலெக்டர் மேடம் என்று சுந்தரமூர்த்தி கூப்பிட தாத்தா என்று சிரித்தாள். சிறு வயதில் மிருதுளா விளையாடிய கதைகளையும் பகிர்ந்து கொண்டவர் "அப்பவே தெரியும் நீ பெரிய ஆளா வருவேன்னு" என்று அவர் சொல்லும்போது மிருதுளாவின் கண்களில் ஒரு பெருமிதம் மின்னியது.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
359

வேகமாக கிச்சனிற்குள் போன பாட்டி, மிருதுளாவிற்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து வைத்திருந்தததை எடுத்து வந்தவர் "கலெக்டர் ஆயிட்டா மட்டும் போதுமா, உடம்பைப் பார்த்துக்கணும்" என்று ஒரு தாயுள்ளத்தோடு அவர் சொல்லும் அறிவுரைகள் அந்த இடத்தைப் பாசத்தால் நிறைத்தது.

அவளுக்கு பிடித்த லட்டுவை பார்க்க, ஆஹ நான் வருவேன் னு தெரியும் அதானே என்க...ஆமா டா குட்டிமா என்று அவளின் கன்னத்தை தடவினார்.

அரசுப் பணியின் அழுத்தங்களுக்கு மத்தியில், இத்தகைய சந்திப்புகள் மிருதுளாவிற்கு மன அமைதியைத் தந்தது.

"வெளியே மத்தவங்களுக்கு நீ கலெக்டர் அம்மா.. ஆனா எனக்கு நீ இன்னும் அந்தப் பழைய குட்டி மிருதுளா தான். இரு, உனக்கு அந்தத் தினை மாவு உருண்டை பிடிக்குமே, அதை செஞ்சு வச்சிருக்கேன்,என்றார் வசுந்தரா."

"நீங்க இன்னும் அதை மறக்கலையா பாட்டி? ஊர்ல எல்லாரும் என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்குறாங்க, ஆனா உங்ககிட்ட வந்தா மட்டும் எனக்கு இந்த உருண்டைக்காக அடம் பிடிக்கிற அந்த பழைய ஞாபகம் தான் வருது."

இதைக்கேட்ட சுந்தரமூர்த்தி சிரித்துக்கொண்டே, "பதவி வரும்போது பணிவும் வரணும்னு உன் தாத்தா அடிக்கடி சொல்லுவான். அதை நீ சரியா கடைபிடிக்கிறதை பார்க்கும்போது பெருமையா இருக்குமா."

"நீங்க எல்லாரும் சொல்லிக் கொடுத்ததுதான் தாத்தா. சரி, நான் கிளம்புறேன். இன்று சில இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது அதான் காலையிலே உங்களை பார்த்துட்டு போகலாம் னு வந்தேன்".

மாலா ம்மா இங்கையே இருக்கட்டும் நான் வர லேட் ஆகும் பாட்டி. அம்மா அங்கு தனியா இருப்பாங்களே என்க, இதை நீ சொல்லணுமா டா?.உன் பதவியை யாரும் தவறாக பேசக்கூடாது என்று தான் இங்கு நீ தங்கலைனு எங்களுக்கு தெரியும் கண்ணு என்றார்.

சரிங்க பாட்டி நான் கிளம்புறேன் என்று வெளியே வந்தவளுக்கு விக்ரம் அங்கு இல்லாத சிந்தனை மட்டும் ஓடாமல் இல்லை. காலையிலே இந்த மனுஷன் எங்க போனாரு என்று யோசித்துக் கொண்டே காரில் ஏறிச் சென்றாள்.

ஊர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான 'ஆரம்ப சுகாதார நிலையம்' அமைய வேண்டும் என்பதற்காக முறைப்படி மனு தயாரித்து மாவட்ட ஆட்சியர் மிருதுளாவிடம் கொடுத்திருந்தனர்

அந்த மனுவின் அடிப்படையில், ஆய்வு செய்ய ஊர் எல்லையில் ஒதுக்கப்பட்டிருந்த அந்த காலி இடத்திற்கு மிருதுளாவின் கார் வந்து நின்றது. அங்கே ஊர் மக்களுடன் காத்திருந்த விக்ரம், ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கே உரிய பொறுப்புடன் அவளை வரவேற்றான்.

விக்ரம் அங்கு இருப்பான் என்பதை அவள் எதிர் பார்க்கவில்லை.அடுத்தது இன்று இன்ஸ்பெக்ஷன் வரேன் என்று அவளும் யாரிடம் சொல்லவில்லை.

காரில் இருந்து கீழே இறங்கியவள் சுற்றி அந்த இடத்தை பார்க்க, "வாங்க மேடம். இந்த இடம் தான் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறதுக்கு ஏதுவான இடம்னு நாங்க தீர்மானம் போட்டு மனு கொடுத்திருந்தோம். ஊர்ல இருந்து இது ரொம்ப பக்கம், அதே சமயம் மெயின் ரோட்டுக்கும் வசதியா இருக்கும்."

மிருதுளா வும் அந்த இடத்தை வரைபடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். ஒரு கலெக்டராக அவளது பார்வை மிகத் தீர்க்கமாக இருந்தது.

"இடம் நல்லா தான் இருக்கு. ஆனா, பின்னாடி வர்ற மழைக்காலத்துல இங்க தண்ணி தேங்குறதுக்கு வாய்ப்பு இருக்கா? ஏன்னா ஒரு ஹாஸ்பிட்டல் கட்டுறப்போ இதையெல்லாம் பார்க்கணும்."

"இல்லை மேடம், இது மேட்டுப் பகுதிதான். வடிகால் வசதிக்கும் நாங்க பிளான் பண்ணி வச்சிருக்கோம். இந்த ஊர் மக்களுக்கு ஒரு அவசர சிகிச்சைன்னா கூட 15 கிலோமீட்டர் போக வேண்டியிருக்கு. நீங்க தான் இதுக்கு ஒரு வழி பண்ணனும்."

ஊர் மக்கள் அனைவரும் ஆவலுடன் அவளது பதிலுக்காகக் காத்திருந்தனர். மிருதுளா அங்கிருந்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சில நிமிடம் ஆலோசித்தாள். பிறகு ஊர் மக்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

அந்த புன்னகையிலேயே ஏதோ நல்ல செய்தி இருக்கிறது என்பது அங்கிருந்தவர்களுக்கு புரிந்து விட்டது.

"அனைவருக்கும் வணக்கம்.உங்க மனு ரொம்ப நியாயமானது . மக்களோட அடிப்படைத் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் ஒரு நல்ல அதிகாரிக்கு அழகு. இடமும் தகுதியா இருக்கு. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் உடனே எடுக்கச் சொல்றேன் என்றாள்."

இதைக் கேட்ட மக்களின் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி தெரிந்தது. விக்ரமுக்குத் தன் நண்பனின் தங்கை என்ற உறவைத் தாண்டி, ஒரு நேர்மையான அதிகாரி தன் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது பெரும் திருப்தியைத் தந்தது.

ஆமாம் நான் வருகிறேன் என்று சொல்லவில்லை பின்ன எப்படி எல்லாரும் இங்கே வந்தீர்கள் என்று அந்த கேள்வியை மிருதுளா கேட்க அதெல்லாம் அப்படித்தான் மா என்று ஊர் தலைவர் சிரித்தார்.


நீலாங்கரை:

"என்னங்க... முக்கியமான விஷயம் பேசணும்" என்று சுந்தரி சொல்ல, பேப்பர் படித்துக் கொண்டிருந்த வேலன் தனது கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு ம்ம் "சொல்லு சுந்தரி, என்ன விஷயம்? முகமே ரொம்ப பிரகாசமா இருக்கு?"

"வசு நம்ப விக்ரமிற்கு , குட்டிமாவை பொண்ணு கேட்குறாங்க!"

மனைவி சொன்னதை கேட்டவர் "என்னது... வசு பொண்ணு கேட்டுச்சா? நிஜமாவா சொல்ற?"

"ஆமாங்க. விக்ரம் நம்ம குட்டிமாவுக்கு ஏத்த ஜோடியா இருப்பான்ங்கிறது என் நம்பிக்கை. நீங்க என்ன சொல்றீங்க."

"சரி சுந்தரி, உனக்குத் திருப்தின்னா எனக்கும் அதுல சம்மதம்தான். நாம் மட்டும் ஆசைப்பட்டால் போதாது.பிள்ளைகள் விருப்பம் முக்கியம்.அந்த மாயக் கண்ணன் இருவருக்கும் தான் என்று முடிச்சு போட்டிருந்தால் அது தான் நடக்கும் என்றார்.

ருத்ரா அம்மாவையும் பேச விடு யென ரேகா புலம்ப முடியாது என்றவனே தனது தந்தையிடம் இல்லாத கதைகளை சொல்லிக் கொண்டிருக்க, மகனின் பேச்சை மித்ரன் ரசித்துக் கேட்டாலும் மனைவியின் தவிப்பை உணராமலும் இல்லை.

சரி குட்டி அம்மா கிட்ட குடு இப்போது அவளை எப்படி திட்டுரேன் பாரு என்க ம்ம் என்ற சின்னவன் நல்லா வேண்டும் என்றபடி தாயிடம் போனை கொடுக்க, ஓய்...இதுக்கு தான் சொன்னேன் அடுத்தது ரெடி பண்ணலாம் அவனுக்கும் துணையாக இருக்கும் னு எங்கே டி கேட்ட என்க, மாமா என்று முறைத்தாலும் ரேகாவிற்கு சிரிப்பு வராமலில்லை.சிறிது நேரம் மனைவியிடம் பேசிவிட்டு போனை வைத்தான்.

உமா யென்று சுரேந்தர் கூப்பிட...துணிகளை மடித்துக் கொண்டிருந்தவர் சொல்லுங்கனு திரும்ப, குட்டிமாவுக்கு கல்யாணம் பண்ணனும் என்கவும் உமாவோ கணவனை முறைத்தார்.

ரெண்டு வருஷமாக சொல்லிட்டு இருக்கேன் அப்போது உங்களுக்கு கண்ணு தெரியலையா என்க... நேற்று பிசினஸ் மீட்டிங்கில் அந்த வாசு குரூப் ஓனர் அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டார் டி. உடனே நான் எதுவும் பதில் சொல்லலை. வீட்டில் பேசிட்டு சொல்றேனு சொல்லிட்டு வந்துட்டேன். நீ என்ன சொல்ற?.

இதைக் கேட்டவர்... அவங்க பையனுக்கா?.. நல்ல பையன் தான். சரி பார்க்கலாம் என்று இருவரும் பொதுவாக பேசிவிட்டு படுத்தனர்.


சேருமா?
 
Active member
Joined
May 9, 2025
Messages
155
Vikram and kutty a would be a good match
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top