• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
658
கனியூத்:

இந்தாங்க மாமா டீ யென்று சந்திரிகா டம்ளரை நீட்ட, மனைவியிடம் இருந்து வாங்கி குடித்தவர், பேரப்பிள்ளை எடுத்துட்ட வயசாகிட்ட டி என்று சந்திரன் சிரிக்க, ஆமா நான் கிழவி ஆகிட்டேன். இந்த ஐயா இன்னும் குமரனாகவே இருக்கார் பாருங்களேன் யென்று சந்திரிகா முறைக்க, மாமன் எவ்வளவு இளமை னு காட்டட்டுமா டி?.

இப்போதும் ஒன்னும் கெட்டுப் போகலை. ரஞ்சித்- ரேகாவிற்கு தம்பி இல்லை தங்கை ஏன் சேர்த்தே டுவின்ஸ் ரெடி பண்ண நான் தயார் தானென்று தனது மிலிட்டரிகார மீசையை முறுக்கி விட..

கணவர் சொன்னதை கேட்டவர் அய்யோ மாமா... என்ன பேசுறீங்க?
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா?.. பேரப்பிள்ளை எடுத்தாச்சு இப்போது தான் ஐயாவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ என்று கணவரை முறைக்க, ஹா ஹா என்று சந்திரன் சிரித்தார்.

அப்பொழுது அவரது போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும், டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் உன் அண்ணன் தான் என்றவாறு அட்டெண்ட் பண்ணியவர் சொல்லு சுரேன்?. அங்கு எல்லாரும் நல்லாருக்கீங்களா? என்றார்

நாங்கள் நல்லாருக்கோம் மாமா. ஃப்ரி யா இருக்கீங்களானு சுரேந்தர் கேட்க, ஆமா டா. வீட்டில் தான் இருக்கேன். இனி தான் மில்லுக்கு போகணும்.

சரி மாமா.

ஒரு முக்கியமான விஷயம் பேச தான் போன் பண்ணினேன். வர புதன்கிழமை என் தங்கச்சிமகளை பொண்ணு கேட்டு வரலானு இருக்கோம் மாமா. மித்து 3 மாத லீவில் வந்திருக்கான். அதான் கையோடு அவன் கல்யாணத்தை முடித்து விடலாம்னு இருக்கோம்.
நீங்கள் என்ன மாமா சொல்றீங்க?.

தனது தங்கை புருஷனும் அத்தை மகனுமாகிய சுரேந்தர் சொல்லியதை கேட்டவர், சரி சுரேன் நல்லபடியாக பண்ணலாம் என்க, ஹம் மாமா. நாம் தான் ஏற்கெனவே ஜாதக பொருத்தம் பார்த்து விட்டோமே, அதனால் கையோடு தட்டை மாத்திக்கலாம்னு அப்பா அம்மா சொல்றாங்க.

அப்படியா என்றவர் சரி சுரேன் என்றவாறு அழைப்பை கட் பண்ணி விட்டு தனது மனைவியிடம் விஷயத்தை சொல்ல சந்திரிகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

என்ன தான் தனது உடன்பிறந்தவரின் பிள்ளைக்கு தான் மகளை கொடுக்க போகிறோம் என்பது தெரிந்தாலும் தானாக போய் எப்படி இந்த விஷயத்தை பேசுவதென சந்திரன்- சந்திரிகா இருவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தான் இருந்தனர்.

ஏன் இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலை என்று பேச்சு ஊர்கார்களோடு தெரிந்தவர் களும் கேட்கும் போது மித்ரன் மிலிட்ரியில் இருப்பதை சொல்லி சமாளித்து வந்தனர்.

இருந்தும் வயசு பொண்ணுக்கு இன்னும் கல்யாண பேச்சு ஆரம்பிக்கவில்லையே என்ற கவலையும் இருவரை வாட்டாமலில்லை.

நாட்களும் ஓட புதன்கிழமையும் வந்தது.

நீலாங்கரையிலிருந்து இரண்டு பஸ்ஸில் புறப்பட்டவர்கள் கனியூத்திற்கு வந்து சேர காலை 11 மணியானது. பின்னர் ஊர் வழக்கப்படி தட்டு மாற்றும் வைபோகம் ஆரம்பமானது.

வீட்டில் நடப்பதென்றாலும் சந்திரனும் மகளுக்கான பங்ஷனை நிச்சயதார்த்தம் போல அமர்களமாகவே செய்திருந்தார். மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கள் என்கவும் தனது நண்பர்களோடு மித்ரன் மேடைக்கு வர அவனுக்கான டிரஸ் மற்ற பொருட்கள் இருந்த தாம்பாளத்தை சந்திரன் தம்பதியினர் கொடுத்தனர்.

அதேபோல் ரேகாவிற்கும் கொடுத்து சீக்கிரம் தயாராகி வரச்சொல்லி விட்டு முகூர்த்த ஓலையை இரண்டு ஊர் கார்கள் முன்னிலையில் எழுத, மித்ரனும் தயாராகி வந்தான்.

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,

பட்டு வேட்டி சட்டையில் இருந்தாலும், மித்ரனின் உடல்மொழியோ இன்னும் அந்த எல்லையில் நிற்கும் வீரனைப் போலவே எச்சரிக்கையாகவும் கம்பீரமாகவும் இருக்க,ஆனால், அவனது உள்ளம் மட்டும் ஒரு குழந்தையைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது.

அப்போது, அறையின் மூலையில் இருந்து மெதுவாக வெளியே வந்தாள் ரேகா.

நான்கு வருடங்களாக அவனது பதுங்கு குழியில் ஒட்டி வைத்திருந்த அந்தச் சிறிய புகைப்படத்தில் இருந்த பெண், இப்போது ஆறடி தூரத்தில் உயிருடன் நிற்கிறாள். புகைப்படத்தில் அவளது கண்கள் அசையாது, ஆனால் இப்போது அவள் இமைப்பதைக் கண்டதும் அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்கிறது. "நாலு வருஷம்... 1,460 நாட்கள்... இதற்காகத்தான் உயிர் பிழைத்திருந்தேனா?" என்ற எண்ணம் அவனது கம்பீரத்தையும் மீறி கண்களில் லேசாக ஈரத்தை கசிய முயற்சித்தது.

தலைகுனிந்துதான் வந்தாலும் மித்ரனின் ஆழமான பார்வையின் அதிர்வை அவள் உணர்ந்தவளோ மெதுவாகத் தலைதூக்கி அவனைப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்தன.

சுற்றியிருந்த உறவினர்களின் சத்தம், மேளதாளம், குழந்தைகளின் கூச்சல் என அனைத்தும் அப்படியே 'அமைதி' ஆனது போல் ஒரு நிசப்தம் நிலவுகிறது.

ரேகாவுக்கு அவன் முகம் முன்பை விடக் கொஞ்சம் ஒடுங்கினாலும் அதே கம்பீரத்தோடு இருப்பது தெரிந்தது.

மித்ரனுக்கோ தன்னவள் முகத்தில் ஒரு முதிர்ச்சியும், தன்னைப் பிரிந்திருந்த ஒரு நீண்ட கால வலியும் தெரியாமலில்லை.

ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. அந்த முதல் பார்வையில் "நீ வந்துட்டியா?" என்ற கேள்வியும், "உனக்காக வந்துட்டேன்" என்ற பதிலும் மௌனமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பொறுமையாக வந்தவளோ அவன் அருகே அமரும்போது, அவளின் சேலைத் தலைப்பை மெல்லத் தொட்டவனுக்கு "இது நிஜம்தான், நான் கனவு காணவில்லை."என்பது.

சுற்றியிருந்த பெரியவர்கள், "என்ன பொண்ணும் மாப்பிள்ளையும் மௌன விரதம் இருக்காங்களா?" என்று கிண்டல் செய்ய, இருவரும் தர்மசங்கடத்துடன், ஆனால் மனதுக்குள் மிகுந்த ஆத்மார்த்தமாக ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் புன்னகைத்துக் கொண்டனர்.

நான்கு வருடங்களாகத் தினமும் ஒரு முறையாவது அவன் பாதுகாப்பு குறித்து இறைவனிடம் வேண்டாத நாளில்லை. செய்தித்தாளில் 'எல்லைப்பகுதி' என்ற வார்த்தையைப் பார்த்தாலே துடித்துப்போன அவளது மனது, இப்போது அவன் கம்பீரமாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே கரைந்து போனது.

தனது அண்ணனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மிருதுளாவின் பார்வையோ அவ்வப்போது விக்ரமை தீண்டாமலில்லை.

ஆனால் கடிவாளம் கட்டிய குதிரை போல அவள் ஒருத்தி பார்ப்பதை கூட உணராமல் தனது நண்பன் பரத்தோடு பேசியபடி மித்ரனையும் ரேகாவையும் தான் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் பெரியவர்கள் மோதிரத்தை எடுத்து நீட்ட, மித்ரனோ ரேகாவின் வலது கையைப் பிடிக்க, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவளது விழி ஓரத்தில் ஒரு துளி நீர் திரண்டு நினாறது.

தன்னவன் கைகள் முரடாக, தழும்புகளுடன் இருப்பதை உணரும்போது அவளுக்குள் ஒரு வலி பிறக்காமலில்லை.

"இந்தத் தழும்பெல்லாம் எனக்காகத்தானே.... உங்களைப் பார்க்கவே பயமா இருந்தது. வருவீங்களா மாட்டீங்களான்னு..."

மித்ரனோ அவளது விரலை லேசாக அழுத்திப் பிடிக்க,அந்த அழுத்தம், "நான் வந்துட்டேன்... இனி உனக்காகவே இருப்பேன்" என்ற ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமாக இருந்தது.

"உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டேன். இனி இந்தத் தழும்புல உன் கை மட்டும் தான் இருக்கும்."
என்கவும் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

நான்கு வருடக் கோபம், ஏக்கம், காதல் எல்லாம் அந்த ஒரு நொடிப் பார்வையில் வெளிப்பட, அவள் கண்கள் "இனிமேல் உன்னை அனுப்ப மாட்டேன்" என்று அவனிடம் மௌனமாகச் சண்டையிட்டன.

ரஞ்சித்தால் வெளிநாட்டிலிருந்து வரமுடியாத சூழல் என்பதால் மச்சான் முறையாக விக்ரம் தான் மித்ரனுக்கு எல்லாம் செய்தான். பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு நிச்சயமும் நல்லபடியாக முடிந்தது.

அப்போது தனது மேனேஜரிடமிருந்து கால் வர உள்ளே சத்தமாக இருக்கவும் சற்று தள்ளி வந்து வெளியே உள்ள தோட்டத்தில் விக்ரம் பேசிக்கொண்டிருந்து விட்டு உள்ளே வரும் போது சொந்தக்கார குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மிருதுளாவோ அவர்கள் துரத்தி வருவதை கண்டு ஓடி வந்தவளோ விக்ரம் மேலே இடித்து கீழே விழப் போக, எட்டி அவளை பிடித்தவனுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு...

ஏனென்றால் விக்ரமின் வலிமையான கைகளோ மிருதுளா கட்டியிருந்த புடவையின் இடைவெளியில் இருக்கும் வெறுமையான இடையை இறுக்கி பற்றியிருந்தது.

வழவழப்பான இடிப்பிலிருக்கும் சூட்டை உணர்ந்தவனுக்கு முதன் முதலான அவனுக்குள் ஓர் ஆண் மகனாய் உணர்ச்சிகள் தூண்டுவதை அறிந்ததும் ஒன்னும் சொல்ல முடியவில்லை.

பட்டென கையை எடுத்தவன் அங்கிருந்து வேகமாக சென்று விட,பிடிமானம் இல்லாததால் பின் வாக்கில் கீழே விழுந்தவளுக்கு நன்கு அடிபடவும் அப்பா என்று கத்தி விட்டாள்.

அவளின் கத்தல்கள் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் எதிலிருந்தோ தப்பி ஓடி வருவது போல படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு வந்தவனோ, கதவை தாழிட்டு ரெஸ்ட் ரூமிற்குள் போய் ஷவரை திறந்து கீழே நின்றவனின் சிந்தனையோ அகல்மதியை எத்தனையோ முறை தொட்டிருக்கும் போதெல்லாம் ஏன் நமக்கு இப்படி ஒரு உணர்வு வரவில்லை என்ற கேள்விகளே பூதாகரமாக அவனுக்கு முன்பு நின்றது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றானென்று தெரியவில்லை. கதவு தட்டும் சத்தம் வேகமாக கேட்கவும் அதில் நிகழ்விற்கு வந்தவன் ஷவரை நிறுத்தி விட்டு ஈர துணிகளை மாற்றிக் கொண்டு யாரென கதவின் அருகில் போய் கேட்க, ஏய் லூசு பயலே என்ன டா பண்ணி தொலையிர?.

எவ்வளவு நேரம் உன்னை தேடுரதென பரத் திட்டுவது கேட்டு கதவை திறக்கவும், உள்ளே வந்தவனோ அங்கு டவலை கட்டிக் கொண்டிருக்கும் விக்ரமை ஒரு மார்க்கமாக பார்க்க, லூசு பயலே சின்ன பசங்க விளையாடி கிட்டு இருந்ததுங்க கூல்டிரிங்ஸ் மேல ஊத்திடுச்சுங்கடா.

அதான் என்று சமாளித்து வேற டிரஸ் எடுத்து மாற்றிக் கொண்டவன் நீ எதுக்கு இப்படி உயிர் போன போல கத்திட்டு இருந்த என்கவும் ஃபேமிலி போட்டோஸ் எடுப்பதற்கு உன்னை தேடிட்டு இருக்காங்க நாயே வந்து தொலைடா என்றான்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
658

பின்னர் இருவரும் கீழே வந்தவர்கள் பின்னர் விதவிதமாக பேமிலி போட்டோவும் தனித்தனியாக நண்பர்களோடும் எடுத்துக் கொண்டு சந்திரன் வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டனர்.

போட்டோஸ் எடுக்கும் போது மிருதுளா மட்டும் இல்லாததையுமா கவனித்தான்.

கார் ஓட்டிக் கொண்டிருந்த விக்ரமின் நினைவுகளோ எங்கே இவள காணும்? கீழே விழுந்ததில் எங்க அடி பட்டதுனு தெரியலையே..

இருந்தாலும் இப்படி நீ பண்ணி இருக்க கூடாதா என்று தனது மனதோடு பேசிக்கொண்டு வர டேய் என்று பரத் கூப்பிடுவது அவனுக்கு காதில் விழவில்லை. அதனால் ஓங்கி அவன் தோள்பட்டையில் ஒன்று வைக்கவும், அந்த வலியில் ஏன் டா என்று முறைத்துக் கொண்டு திரும்ப, செவிட்டு முண்டமே...எவ்வளவு நேரம் கூப்பிட்டிட்டு வரேன்?உன் சிந்தனை எல்லாம் எங்க தான் இருக்குடா நாயே நம்ம ஊருக்கு போக வேண்டிய வழி அங்கு. நீ எந்த பக்கம் போயிட்டு இருக்க என்று திட்டவும் பிறகு தான் அவன் வேறு வழி மாறி வருவது புரிந்து.
இல்லடா இங்கு ஒருத்தரை பார்க்கணும் என்று சமாளித்தான்.

இப்பயா மச்சி என்கவும் ஆமாடா சரி பரவால்ல இன்னொரு நாளைக்கு பாத்துக்கலாம் என்று காரை திருப்பி விட்டு வந்தான்.

ச்சை...நல்லா ஓடி ஆடிக்கிட்டு இருந்த புள்ள திடீர்னு இப்படி அடிபட்டுடுச்சு என்ற பரத் சொல்ல, விக்ரமோ எதுவும் தெரியாது போல யாருக்குடா என்றான்.

நம்ப குட்டிமாக்கு தான் டா.

நல்லவேளை கடவுள் புண்ணியம்..இல்லை என்ன நடந்திருக்குன்னு சொல்ல முடியாது என்கவும் என்ன டா சொல்ற என்று விக்ரமோ அதிர்ந்து போய் காரை நிறுத்தினான்.

ஆமாடா வராண்டா திண்டுல தான் விழுந்திருக்கு..இன்னும் ஒரு அடி தள்ளி விழுந்திருந்தாலும் என்ன நடந்திருக்குமோ.நல்லவேளை தலையை தூக்கிடிச்சு..கீழ விட்டு இருந்தாக்க அய்யோ...நினைத்து பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு.
புள்ளை ரொம்ப பயந்துடுச்சுடா. இன்ஜெக்ஷன் போட்டுட்டு வந்து இருக்கிறேன் என்கவும் விக்ரமிற்கோ மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

எந்த தப்பும் அவள் செய்யவில்லை நாம் ஏன் இப்படி பண்ணினோம் என்று தன்னை தானே நொந்து கொண்டவன், இப்ப எப்படி டா இருக்கா என்க..

அதைக் கேட்டு விக்ரமாவை அதிர்ச்சியாக பார்க்க,நண்பனின் பார்வையை உணர்ந்தவன் எதுக்கு நாயே இப்படி பார்க்கிற என்கவும் இல்லை இதுவரைக்கும் எந்த பொம்பள பிள்ளையும் வாடி போடின்னு நீ பேசி நான் பார்த்ததே இல்லையே டா.

அகல்மதியைகூட சொல்வது ரேர். இன்னைக்கு குட்டிமாவ டி ன்னு சொல்றியே அதாண்டா ஆச்சரியமா இருக்கு என்கவும், இதுவேரையா என்று தனக்குள்ளே முணவியவன் பேச்சு வார்த்தைல வந்துடுச்சு உடனே அண்ணன்காரனுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது என்று நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே அதிகாலையில் ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

நீலாங்கரை:

அம்மு இப்போது வலி எப்படி இருக்கு கடவுள் செய்த புண்ணியம் தான். எதுவும் ஆகலை என்று தனது மகளின் தலையை தடவிக் கொண்டு உமா கண்ணீருடன் சொல்ல, ஐயோ அம்மா நான் நல்லா இருக்கிறேன்.
எதுக்கு தேவை இல்லாம இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கு என்று மிருதுளா முறைத்தாள்.

நீ ஏண்டி சொல்ல மாட்ட ஆசையா ஒத்த பொம்பள புள்ளைய பெத்து வைத்திருக்கிறேன் உனக்கு ஏதாவதுனா தாங்க முடியுமா என்கவும், மை டியர் அப்பாஆஆஆஆ....சத்தியமா உங்க பொண்டாட்டியோட ரோதனை தாங்க முடியல. நேத்தில இருந்து இதையே சொல்லி புலம்பிட்டு இருக்காங்களென்றாள்.

சுரேந்தருக்கும் அப்படித்தான் இருந்தது இருந்தாலும் மகளுக்கு முன்பு அதை காட்டிக்கவில்லை.

இவள்லாம் என்ன வக்கீல்னு தெரியல கோர்ட்டில் மட்டும் தான் இவ வீர வசனம் எல்லாம் பேசறது வீட்டுக்குள்ள அதே எலி குட்டி தானே என்று அந்த சூழலை கலகலப்பாகிய சுரேந்தர் சரிடா கிளம்பலாமா என்றார்.

ஹம் போகலாம் என்றவள் பின்னர் வீட்டிலும் சொல்லிக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு வந்தவள் உதப்பூருக்கு பிளைட்டில் ஏறியவளுக்கு விக்ரமின் செயல்கள் தான் ஞாபகம் வந்தது.

கடுவன் பூனை இவனை நான் என்ன பண்ணிட்டேன் வீணா போன வெங்காயம் பன்னாடப் பயல்..பிடிக்காமல் இருந்தாலும் எனக்கு அடிபட்டு இருக்காது என்று இடுப்பில் கைய வைக்கும் போது அங்கே விக்ரமின் கரம் இருப்பது போல் தோன்றவும் இதுவரை இருந்த கோவம் போய் மௌனமாக சிரிப்பு வந்தது.

அதன் பின்னர் நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடத் தொடங்கியது.பெரியவர்கள் குறித்த நன்னாளில் மித்ரன் ரேகாவின் திருமணம் நல்லபடியாக முடிந்து இருவரும் அவர்கள் வாழ்க்கையையும் தொடங்கினர்.

ரேகாவோ தலைமைச் செயலகத்தில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பதால் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியவில்லை. திருமணத்திற்காக போட்டிருந்த இரண்டு வார விடுமுறையும் முடிந்துவிட மனமே இல்லாமல் வேலைக்கு புறப்படவும் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மித்ரனோ என்ன போகலாமா என்கவும், ம்ம் என்றாள்.

பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு வண்டியில் புறப்பட்டவனோ ஒரு மணி நேரத்தில் அவள் வேலை பார்க்கும் ஆபிஸிற்கு வந்து சேர்ந்தவன் மனைவி இறக்கிவிட்டு சரி செல்லம் பாய் என்கவும் ஓகே என்று உள்ளே போக அவள் போகும்வரை பார்த்துக் கொண்டே நின்றவன் பின்னர் சிரித்துக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டான்.

மதிய சாப்பாடு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னும் உனக்கு லீவு எத்தனை நாள் இருக்கு என்கவும், வர ப்ரைடே எனக்கு பிளைட் ங்கப்பா என்க, சரிப்பா என்ற சுரேந்தர் மிருதுளாவுக்கு கால் பண்ணி சாப்பிட்டியா என்று விசாரிக்க இப்ப தாங்கப்பா என்றாள்.

சரி குட்டிமா இப்போது பெயின் ஒன்றும் இல்லை எங்கவும் ஓகே பா நான் பெட்டரா தான் இருக்கிறேன் வீட்ல எல்லாரும் என்ன பண்றாங்க என்கவும் இப்பதான்டா லன்ச் சாப்பிட்டு முடித்தோம்..

ஓ... எங்கே உங்கள் காதலி பொண்டாட்டி என்க...கேஸ் விஷயமா அம்மா கோர்ட்டுக்கு போய் இருக்கா என்று சிரித்தார்.

மேலும் சிறிது நிமிடங்கள் தனது தந்தையோடு பேசிவிட்டு போனை வைத்த மிருதுளாவும் தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.

அதோ இதோ என்று மித்ரன் மிலிட்டரிக்கு செல்ல வேண்டிய நாளும் வர விக்ரம்- பரத்தும் நீலாங்கரைக்கு வந்து விட்டனர்.

ரேகா தான் கணவனை அணைத்துக் கொண்டு ரொம்ப அழுது கொண்டிருந்தாள் ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்தியவன் பின்னர் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு தனது நண்பர்களோடு ஏர்போர்ட்டுக்கு வந்தான்.

நண்பர்கள் மூவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்கும்போது மித்ரன் செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வர பின்னர் அவன் அங்கிருந்த புறப்பட இவர்கள் இருவரும் மீஞ்சூர் நோக்கி புறப்பட்டானுங்கள்.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top