• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
685
சென்னை முதல்வர் அலுவலகம்:

அழுத்தமான ஷூ சத்தம் அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. யாரையும் கண்டு கொள்ளாமல் முதல்வரின் அறைக்குப் போன அந்த உருவம் சல்யூட் வைக்க தலையை அசைத்தவர் நாம் எதிர்பார்த்தது தானே என்க ஆமாம் சார்.

நான் கிளம்புறேன் சார் என்றவாறு வெளியே வந்தவனின் முகத்தில் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை.

படியில் இறங்கி வந்தவனின் முன்பு கார் வந்து நிற்க அதில் ஏறியவன் ம்ம் என்கவும் காரின் பின் சீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ரெடிங்க சார் என்றனர். பின்னர் சென்னையில் இருந்து புறப்பட்ட தனி விமானம் அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் மீஞ்சூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்தவர்கள் இறங்கி வர போலிஸ் வாகனம் தயாராக இருக்கவும் அதில் ஏறிச் சென்றனர்.

மீஞ்சூர்:

மிருதுளா அங்கு கடத்தப்பட்ட நேரத்தில் கமிஷனர் மற்றும் அவளது அலுவலகம் இரண்டிற்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது.

அதை எடுத்து படித்து பார்க்க...மீஞ்சூர் மாவட்டத்தின் கலெக்டர் மிருதுளா சுரேந்தர் அவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம்..காரணம் விரைவில்...என்பதோடு கடிதம் முடிந்திருக்க இரண்டு இடத்திலும் அதிர்ந்து போனார்கள்.

விக்ரமோ தனது கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் அடுத்த பில்டிங்கிற்கான வரைபடத்தை வரைந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் ஏனோ ஒருவிதமான சஞ்சலத்தோடே இருந்தது.

அதனால் வேலையில் கவனம் சிதற ஷிட் என்று எழுந்தவனோ சற்று நிமிடங்கள் நடந்துவிட்டு சரி நம்ப ஆளுக்கு கால் பண்ணலாம் என்று முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கு கால் பண்ண நாட் ரீச்சபுள் என்று வரவும், அட...

விக்ரம் இன்றைக்கு தான் அங்கு கீழையூருக்கு போறேன்னு சொன்னாளே மறந்துட்டியா அங்க தான் நெட் ஒர்க் கிடைக்காதே என்று மனசாட்சி சொல்லிக் கொண்டதும் அட ஆமாம் என்று தனது தலையில் தட்டிக்கொண்டவன் பின்னர் பரத்துக்கு கால் பண்ண, சொல்லுடா என்ன பண்ற என்றான்.

சும்மா டா என்றவனோ சிறிது நிமிடங்கள் பேசி விட்டு போனை வைத்தவனோ மீண்டும் வேலையை பார்க்க உள்ளம் மட்டும் சஞ்சலமாகவே இருந்தது.

அது மட்டும் இல்லாமல் மிருதுளா கடத்தப்பட்ட செய்தியை அவர்களின் கையால் மூலமாக நியூஸ் சேனலுக்கும் போக, காட்டுத்தீயாகப் பரவியது. ஒரு மாவட்டத்தின் கலெக்டரே கடத்தப்பட்டார் என்ற செய்தி, ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸாக ஓடத் தொடங்கியது.

இதைக் கேள்விப்பட்ட பரத் உடனே விக்ரமுக்கு சொல்ல என்ன என்று அதிர்ந்தான்.

அப்போதுதான் சுந்தரி பாட்டி டிவியை ஆன் பண்ணி உட்கார தொலைக்காட்சியில் அந்தச் செய்தி மின்னல் போலத் தோன்றியது:

"பிரேக்கிங் நியூஸ்: மலைவாழ் மக்களுக்குச் சாலை அமைக்க முயன்ற மாவட்ட ஆட்சியர் மிருதுளா மர்மக் கும்பலால் கடத்தல்!

இதைக் கேட்ட உமாவின் கையில் இருந்த கோப்பை நழுவித் தரையில் விழுந்து சிதறியது. "ஐயோ... என் புள்ளைக்கு என்னாச்சோ? என்னங்க,... நம்ம மிருதுளாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம்!" என்று அலறினாள்.

ஐயோ என் பேத்தி என்று சுந்தரி பாட்டி கதறினார். மகளின் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்பட்ட அதே கண்கள், இப்போது பயத்தில் கலங்கின.


இங்கு எல்லாரும் மிருதுளாவை நினைத்து அழுது கொண்டிருந்தனர்.

மிருதுளா வீட்டினர் உடனே மீஞ்சூருக்குப் புறப்பட்டவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தபோது, கலெக்டர் அலுவலகமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. போலீஸ் வாகனங்கள், மீடியாக்கள், அழுதுகொண்டிருந்த மக்கள் என கூட்டமாக இருந்தது.

" சார் என் பொண்ணு எங்க? அவளைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் சுரேந்தர் கேட்க, பிளீஸ் சார் கொஞ்சம் அமைதியா இருங்க"

காட்டுக்குள் வர விடமால் மிரட்டல் இருக்கிறது.மேடம் பத்திரமாக திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியம் கண்டிப்பா நல்ல செய்தி வரும்," என்று அதிகாரி சமாதானப்படுத்த முயன்றார்.

குகைக்குள் கட்டப்பட்டிருந்த மிருதுளாவிடம் மாஸ்க் போட்டுக்கொண்டிந்த அந்தக் கும்பல் மிரட்டிக் கொண்டிருந்தது. "ரோடு போடுற பிளானை கேன்சல் பண்ணு, இல்லைன்னா நீ உயிரோட போக மாட்டே," என்று கத்தினான் அதன் தலைவன்.

"என் உயிர் போனாலும் பரவாயில்லை, அந்த மக்களுக்குப் பாதை வந்தே தீரும்," என்று மிருதுளா சிங்கப்பெண்ணாகப் கர்ஜித்தாள்".

ஓஓஓஓ...

உன் உயிரை எடுப்பது எனக்கு முக்கியம் கிடையாது. ஆனால் இதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் எத்தனை வருஷம் ஆனாலும் இதே குகையில் தான் நீ கிடக்கணும்.

இந்த இடத்தை எந்த கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாது என்றவன் பொம்பளை பிள்ளை பார்த்து. எந்த அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது. அதை மீறி நடந்தது என்பனின் குரலில் அங்கிருந்தவர்களுக்கு உயிர் பயம் வராமலில்லை.

பத்தே நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்த பரத் அதிர்ந்து நிற்கும் நண்பனை ஓங்கி தட்ட அதில் சுதாரித்த விக்ரம் மிருது என்று கத்தினான்.

பின்னர் இருவரும் அவளைத் தேடி மலைப்பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கே போலிஸார் நிற்க கீழே இறங்கிய இருவரும் அவர்களிடம் போக, அங்கே கவிழ்ந்து கிடந்த ஜீப்பையும், சிதறிக் கிடந்த அவளது காகிதங்களையும் கண்டதும் விக்ரம் நிலைகுலைந்து போனான்.

"மிருதுளா... உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்!" என்று கத்திய அவனது குரல் அந்தப் பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.

விக்ரம்... உங்கள் சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற கமிஷனர் அவரிடம் இருந்த லெட்டரை விக்ரமிடம் நீட்ட அதை வாங்கி படித்தவனுக்கு அவ்வளவு கொலைவெறி வந்தது.

எங்கு இருந்து கண்காணிக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு நொடியும் நம்மள அவங்க வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்க இதற்கு அப்புறம் முன்னேறி போகவே முடியலை என்றார்.

நேரமும் கடந்து செல்ல வேகமாக ஒரு கார் வந்து அங்கு நிற்க, அதிலிருந்து இறங்கி வந்தவனோ விக்ரம் பரத் இருவரையும் பார்த்துக்கொண்டே கமிஷனரிடம் வந்தவன் தனது அடையாள அட்டையை காமிக்க வெல்கம் சார் என்று அவர் கை குலுக்க, மற்றவர்கள் சல்யூட் அடித்தனர்.

என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தவன் பார்வையோ அங்கே சுற்றம் மறந்து நிற்கும் விக்ரமின் மேல் தான் இருந்தது. பரத் எதுவும் சொல்லாமல் தனது நெற்றியை தடவிக் கொண்டு புதிதாக வந்திருக்கும் ஆபீஸரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன ரீசன் என்பது தெரியவில்லைங்க சார் அது பற்றி அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதிலிருந்து உள்ள போக நாங்க முயற்சி பண்ணினோம் ஆனால் எங்க போலீஸ்காரர் இரண்டு பேரை அவர்கள் தாக்கி விட்டார்கள்.

அதனால் தான் மாற்றுத் திட்டத்தை யோசித்துக் கொண்டே இருக்கிறோம் என்க, காய்ஸ் என்கவும் அவனுடன் இருந்து மற்ற ஐந்து அதிகாரிகளோ எஸ் சார் என்றனர்.

ஓகே என்றவனோ சற்று தள்ளி இருக்கும் விக்ரம் முன்னால் வந்து நிற்க, அவனோ மிருதுவின் நினைவில் இருப்பதால் இதை உணரவில்லை.

அடேய் மச்சான் என்று பரத் விக்ரமின் தோளை தட்டினான்... அதில் சுதாரித்தவன் மித்து பற்றி தெரிஞ்சுடுச்சா என்கவும் ,கொஞ்சம் முன்னாடி பாருடா என்று பல்லை கடித்தான்.

மிருதுளாவின் சிந்தனையில் இருந்தவனோ ஒருவேளை அவளை தான் காப்பாற்றி விட்டார்கள் என்று நினைத்து வேகமாக திரும்பியவன், அங்கிருந்தவனை பார்த்து மச்சான் என்று அவனின் தோளில் சாய, தன் மேல் இருந்தவனை நிமிர்த்தியவன் ஓங்கி இரண்டு அரை விக்ரமின் கன்னத்தில் விட்டான்.

மற்ற போலீஸ்காரர்களோ அதிர்ந்து போய் இதை பார்க்க, வாங்கிய அறையில் விக்ரம் பாவமாக பார்க்கவும் அறிவு கெட்ட முட்டாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறிவா யோசிப்பாங்களா? இல்லை மனசாட்சிப்படி யோசிப்பாங்களா என்று பல்லை கடிக்கவும் அந்த கேள்வி விக்ரமின் சிந்தனையை தட்டி எழுப்ப, தனது வேஷ்டியை மடித்து கட்டியவனோ நேராக போய் காரைத் திறந்து அதில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போனவன் சிறிது நிமிடத்தில் ரெடியாகி வர, இவ்வளவு நடந்திருக்கு ஒரு போன் பண்ணி சொல்லணும்னு உன்னால முடியல...அப்படி என்ன ஆயிரத்தெட்டு ஆபரேஷன் பண்ணி கிழிக்கிறதில் தொரை பிஸியென்று பல்லை கடித்துக் கொண்டே மித்ரன் கேட்டான்.

தற்பொழுது நண்பனாக இல்லாமல் ஒரு சிபிஐ ஆபீசராக மித்ரன் இருப்பதை பார்த்த பரத், மெசேஜ் பண்ணி இருந்தேன் நல்லா பாரு என்று பொறுமையாக சொன்னவன், எப்பா சாமி...நல்லவேளை நமக்கு அந்த அறை விழவில்லை. இந்த நாதாரிப்பயல் அடி ஒவ்வொன்றும் இடி போல இருக்குமே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

தற்பொழுது விக்ரம் பேண்ட் சர்ட்டில் வருவதை பார்த்து மித்ரனோடு வந்த ஆபிஸர்கள் அவனுக்கு சல்யூட் வைக்க தலையை அசைத்து விட்டு அதிர்ந்து நிற்கும் கமிஷனரிடம் வந்தவன், தனது ஐடி கார்டை காட்ட...மேலும் அவர் அதிர்ந்து போனார்.

சார் இந்த கேஸ் நாங்கள் பார்த்துகிறோம். எங்களுக்கு அசைன் பண்ணிய கேஸ் தான். நிச்சயமா உங்களுடைய உதவி தேவைப்பட்டால் நாங்கள் கேட்போம் என்று விக்ரம் சொல்ல, ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேடா நான் உன் அங்கிள் டா என்றார்.

ம்ம்...யாருக்கும் இந்த விஷயம் தெரியாது அங்கிள். எங்க மூணு பேருக்கு தான் தெரியும். உங்க பிரண்டுக்கு தெரிஞ்சா எப்படி குதிக்க போறாருன்னு தெரியல என்க..ஹா ஹா என்று சிரித்தார்.

பின்னர் அங்கிருந்து எல்லாரும் கிளம்புவது போல கிளம்பி வந்தவர்கள் பாதி வழியில் காரை நிறுத்தி விக்ரம் பரத் மித்ரனோடு மற்ற அந்த ஆபீஸர்களும் இறங்கிக் கொள்ள, டாக்டர் சார் எதற்கு என்கவும் வைத்தியம் பண்றதுக்கு ஆள் வேண்டுமே அதற்காகத்தான் என்று சிரிக்காமல் மித்ரன் சொல்ல, அவன் சொன்ன அந்த தோரணையில் அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.

சார் எந்த காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று மித்ரன் சொல்ல, கண்டிப்பாக... நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவர்கள் இங்கு தான் இருப்போம் ஆல் த பெஸ்ட் என்றார்.

விக்ரம், ஒரு சாதாரண மனிதனாகப் போயிருந்தால் என்றோ சோர்ந்து போயிருப்பான். ஆனால், அங்கே தவித்துக் கொண்டிருப்பது அவனது தேவதை, இந்த மாவட்டத்தின் நம்பிக்கை - மிருதுளா. அதனால் அவனது கால்களுக்குப் பின்னால் காதலின் வேகம் இருந்தது.

சூரியன் மெல்ல மலைகளுக்குப் பின்னால் மறையத் தொடங்கியிருந்தது. காடு இருளத் தொடங்கியது. திட்டமிட்டபடி மின்மினி பூச்சிகளை பிடித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொண்டு இரண்டு இரண்டு பேராகா ஆளுக்கொரு திசையில் போனார்கள்.

"மிருதுளா... மிருதுளா!" என்று அவன் மனம் கதறிக் கொண்டிருந்தது. காட்டின் சலசலப்பும், தூரத்தில் கேட்ட நரியின் ஊளையும் அவர்களுக்கு பயத்தை தரவில்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
685
திடீரென விக்ரமின் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தபோது, அது மிருதுளாவின் கைக்கடிகாரம். அதன் கண்ணாடி உடைந்திருந்தது. அதைப் பார்த்ததும் விக்ரமின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. "அவளைக் காயப்படுத்திட்டாங்களா?" என்ற எண்ணம் அவனைப் பித்தனாக மாற்றியது.

சார் என்று கூட வந்தவன் கூப்பிட திரும்பி பார்க்கவும் சற்று தள்ளிப் பார்த்தபோது, புற்கள் நசுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. யாரோ ஒருவரை இழுத்துச் சென்ற தடம் அது.

"பயப்படாதே மிருதுளா... இதோ வந்துட்டேன். உனக்கு ஒண்ணும் ஆகாது," என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே அந்தத் தடத்தைப் பின்தொடர்ந்தான்.

அடர்ந்த காடு, சுற்றிலும் காரிருள். விக்ரம் மட்டும் தனியாக இல்லை; அவனோடு மிருதுளாவின் அண்ணன்கள் பரத் மற்றும் மித்ரன் இருவரும் களத்தில் இறங்கியிருந்தனரே.

ஒருபக்கம் தங்கை என்ற பாசம், மறுபக்கம் தன் வருங்கால மனைவி என்ற காதல் - மூவரின் தேடலும் அந்தப் பெருங்காட்டை நடுங்க வைத்தது.

குகையின் ஒரு மூலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தாள் மிருதுளா. அங்கங்கே காயம், அதிலிருந்து வழிந்த ரத்தம் காய்ந்து போயிருந்தது. அந்த ரவுடிகள் அவனது தலைவனுக்குத் தெரியாமல் அவளைக் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.

விக்ரமின் ஆழ்மனதில் ஏதோ ஒரு உருத்தல். "மிருதுளா... உனக்கு ஏதோ ஆகிடுச்சு, என் மனசு சொல்லுது," என்று அவன் தவித்த தவிப்பு, அந்த மலைக்காற்றின் வேகத்தை விட அதிகமானது.

மிலிட்டரியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மித்ரன் கையில் ஒரு டார்ச் லைட், மறு கையில் ஒரு சிறிய கத்தியுடன் வந்தவன் "ஹேய் இங்க பாருங்க, இந்த மரக்கிளை உடைக்கப்பட்டிருக்கு. இது ஏதோ ஒரு வண்டி போன தடம்!" என்று சைகை காட்டினான்.

"அந்தப் பயலுகள் மட்டும் கையில் கிடைச்சா... என் தங்கச்சி மேல கை வச்சதுக்கு அவங்க உயிரோட இருக்க மாட்டாங்க!" என்று பற்களைக் கடித்தபடி பரத் முன்னேறினான்.

விக்ரமின் கண்கள் தரையைத் தேடின. திடீரென ஒரு பாறை இடுக்கில் ஒரு சிறிய துண்டுத் துணி சிக்கியிருந்தது.வேகமாக போய் அதை எடுத்து பார்க்க அது மிருதுளா காலையில் கட்டியிருந்த புடவையின் ஒரு பகுதி!

"உடனே அவர்கள் பாஷையில் சிக்னல் கொடுக்க அடுத்த அரைமணி நேரத்தில் மற்றவர்களும் அங்கு வந்து சேர, பின்னர் அந்த வழியில் மிகுந்த எச்சரிக்கையோடு முன்னேறினர்.

அவர்கள் குகைக்கு மிக அருகில் நெருங்கிவிட்டனர். தூரத்தில் தீ மூட்டியிருக்கும் வெளிச்சம் தெரிந்தது. கடத்தல் கும்பலின் சிரிப்புச் சத்தம் அந்த நிசப்தத்தைக் கலைத்தது.

விக்ரம் மெதுவாகக் குகையின் ஓரம் பைனாகுளரால் உள்ளே நோட்டம் விட, அங்கே ரத்தக் காயங்களுடன் சுவரில் சாய்ந்து மயங்கிக் கிடந்த மிருதுளாவைப் பார்த்ததும் அவனது இதயம் சுக்குநூறானது. அவளது முகத்தில் தெரிந்த அந்த வலி, விக்ரமை ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது.

"மச்சான்... அங்க பாரு, மிருதுளா... அவளுக்கு அடிபட்டிருக்கு!" என்று விக்ரம் துடித்தான்.

"டேய் அமைதியாக இரு... அவங்க கிட்ட துப்பாக்கி இருக்கு. நாம திட்டமிட்டுத் தாக்கணும். மித்ரன் நீ வலது பக்கம் போ, விக்ரம் நீ பின்வாசல் வழியா உள்ள நுழைஞ்சு மிருதுளாவை விடுவி... நான் இவங்களை முன்னாடி இருந்து கவனிக்கிறேன்."

பின்னர் மூவரும் மூன்று திசைகளில் பிரிந்தனர். மற்ற ஐவரும் துப்பாக்கியோடு தயாராக இருக்க, காட்டின் இருளில் வேட்டைக்காரர்களாக மாறிய அந்த மூன்று சிங்கங்களும், அந்த ரவுடிக் கும்பலைச் சுற்றிலும் வளைத்தன.

பரத் கொடுத்த சிக்னலுக்காகக் காத்திருந்த விக்ரம், பூனைப் பாதத்தோடு குகையின் பின்புறம் இருந்த ஒரு சிறிய இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்தான். அங்கே இரண்டு ரவுடிகள் துப்பாக்கியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

"இப்பவே இவளை முடிச்சிடலாமா? இல்ல அந்த ரோடு பிளான் கேன்சல் ஆகுற வரைக்கும் வச்சிருக்கலாமா?" என்று ஒருவன் கேட்க, விக்ரமின் கைகள் தானாகவே அருகில் இருந்த ஒரு கனமான கல்லை இறுகப் பற்றின.

திடீரென குகையின் முன் வாசலில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. பரத் ஒரு சிறிய பட்டாசைக் கொளுத்திப் போட்டு ரவுடிகளின் கவனத்தைத் திசைதிருப்பினான். ரவுடிகள் பதறிப்போய் முன் பக்கம் ஓட, இதுதான் சமயம் என விக்ரம் பாய்ந்தான்.

முன்னால் நின்றிருந்த ரவுடியின் தலையில் கல்லை வீசி நிலைகுலையச் செய்த விக்ரம், அடுத்த நொடியே பாய்ந்து அவனது துப்பாக்கியைப் பிடுங்கி எறிந்தான். "என் மிருதுளா மேலேயே கை வைப்பியா?" என்று கத்திக்கொண்டே அவனை சரமாரியாகத் தாக்கினான்.

மறுபுறம் மித்ரன் குகைக்குள் குதித்தான். தன் தங்கையை அந்த நிலையில் பார்த்த அவனுக்கு ரத்தம் கொதித்தது. ஓடி வந்த இன்னொரு ரவுடியைத் தூக்கி அப்படியே பாறையில் மோதியவன் "குட்டிமா... இதோ வந்துட்டோம்டா!" என்று கத்திக்கொண்டே எதிரிகளைப் பந்தாடினான்.

சண்டையின் சத்தத்தில் மெல்லக் கண் திறந்தாள் மிருதுளா. மங்கலான வெளிச்சத்தில் விக்ரம் ரவுடிகளுடன் மோதிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளது கண்களில் கண்ணீர் முட்டியது.

விக்ரம் எல்லாத் தடைகளையும் மீறி அவளருகே ஓடி வந்து அவளது கட்டுகளை அறுத்தெறிந்தவன், அவள் சரிந்து விடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

"மிருதுளா... பயப்படாதே... நான் வந்துட்டேன். உன் விக்ரம் வந்துட்டேன்," என்று அவளது காயமடைந்த முகத்தை வருடினான்.

அவள் பேச முயன்றாள், ஆனால் பலவீனம் அவளைத் தடுத்தது. விக்ரமின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அந்தத் தொடுதல் அவளுக்கு உலகிலேயே மிகப்பெரிய பாதுகாப்பைத் தந்தது.

பரத்தும் மித்ரனோடு மற்ற ஐவரும் அந்த ரவுடிக் கும்பலை முழுமையாகக் கட்டிப்போட்டுவிட்டு ஓடி வந்தனர். பரத், மித்ரன் இருவரும் தன் தங்கையின் நிலையைப் பார்த்துத் துடித்துப்போனார்கள். "மிருது... அண்ணன் இருக்கோம்டா. ஒன்னும் ஆகாது," என்று அவளது தலையைக் கோதினார்கள்.

வெளியே போலீஸ் வாகனங்களின் சைரன் சத்தம் கேட்டது.

"விக்ரம், மிருதுளாவைத் தூக்கிட்டு வா... நாம இங்கிருந்து கிளம்பணும். அவளுக்கு உடனே ட்ரீட்மென்ட் வேணும்," என்று பரத் சொல்ல, விக்ரம் அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான். அந்த அடர்ந்த காட்டை விட்டு வெளியே வரும்போது, ஒரு மாவட்டத்தின் கலெக்டராக அல்லாமல், தன் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக மிருதுளா பாதுகாப்பாகத் திரும்பினாள்.

மித்ரனோ அங்கிருந்தவர்களை அரஸ்ட் பண்ணி தங்களது கஸ்டடிக்கு அனுப்பி வைக்கச் சொன்னவன் காய்ஸ் என்க, எஸ் சார் என்றவனுங்களிடம் ஏதோ சொல்ல, சல்யூட் அடித்துக்கொண்டு போலிஸாரோடு இணைந்து கொண்டனர்.

மருத்துவமனையின் அந்த வெள்ளை நிற வராண்டாவில் அமைதி நிலவியது. அவசர சிகிச்சைப் பிரிவின் (ICU) கதவுகள் திறக்கப்பட, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டிருந்த மிருதுளாவை வெளியே கொண்டு வந்தார்கள். அவளது நெற்றியில் பெரிய கட்டு, கைகளில் சிராய்ப்புகள்... ஆனால் முகம் இப்போது அமைதியாக இருந்தது.

வீட்டினர் எல்லோரும் ஓடி வந்தார்கள். மகளை அந்த நிலையில் பார்த்ததும் உமா அப்படியே நிலைகுலைந்து போனாள். "ஐயோ... என் கண்ணு... உன்னை இப்படிப் பார்க்கவா நாங்க ஆசைப்பட்டோம்?" என்று கதறி அழத் தொடங்கினாள். அவளது கைகள் நடுங்கிக் கொண்டே மிருதுளாவின் பாதங்களைத் தொட்டு அழுதன.

சுரேந்தர் தன் மனைவியைத் தாங்கிப் பிடித்தார். அவருக்கும் கண்கள் கலங்கியிருந்தன, ஆனால் மகளின் வீரத்தைப் பார்த்து உள்ளுக்குள் ஒரு பெருமிதம். "உமா, அழாதே... நம்ம பொண்ணு ஒரு கலெக்டர். அவ இப்போ ஒரு ஜெயிச்ச மனுஷியாத் திரும்பி வந்திருக்கா. பாரு, அவ முகத்துல இருக்கிற அந்தத் தெளிவைப் பாரு," என்று தேற்றினார்.

அருகிலேயே நின்றிருந்த விக்ரம், ரத்தக் கறைகளும் அழுக்கும் படிந்த சட்டையோடு சோர்ந்து போயிருந்தான்.

பாதுகாப்பான இடத்தில் குற்றவாளிகளை வைத்து பூட்டி விட்டு அந்த சிபிஐ ஆபிசர்கள் ஹாஸ்பிடலுக்கு வர, அவர்களின் காயங்களை சுத்தம் செய்த பரத் அதற்கான மருந்தை போட்டு கட்டு கட்டி நிமிர இரண்டு மென்மையான கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு அழுதது.

ஏய் கமலி எனக்கு ஒன்னும் இல்லடி என்கவும், எதுவும் பேசாமல் அவனை அங்கிருந்த சேரில் உட்கார வைத்தவள் அவனுக்கும் ஏற்பட்டிருக்க காயத்தை துடைத்து மருந்து வைத்தாள்.

கலெக்டர் நல்ல முறையில் காப்பாற்றப்பட்டார்.அதோடு அவர்களை கடத்தி வைத்த கும்பலையும் அரெஸ்ட் பண்ணி விட்டதாகவும் செய்தி ஒளிபரப்பானது.

மருந்து மயக்கம் தெளிந்து மிருதுளா மெல்லக் கண்களைத் திறந்தவள் முன்னால் நின்றிருந்த அம்மாவையும் அப்பாவையும் பார்த்ததும் அவளது இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"அம்மா... அழாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகலை," என்று பலவீனமான குரலில் சொன்னாள்.

மகளின் கையல் முத்தமிட்டவர், "இனிமே நீ இப்படி ஆபத்தான வேலைக்குக் போகக்கூடாதுடா," என்று சொல்ல, மிருதுளா விக்ரமைப் பார்த்தாள்.

விக்ரம் அவளது கண்களைப் பார்த்து, "இல்லங்கத்தை... அவ செய்யுறது தான் சரி. அவளுக்குப் பின்னாடி நான் எப்பவும் இருப்பேன். அந்த மலைவாழ் மக்களுக்கு ரோடு போட்டுத் தர்றதுதான் அவளோட லட்சியம். அதை அவ கண்டிப்பா நிறைவேத்துவா," என்று உறுதியாகச் சொன்னான்.

மருத்துவமனைக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். தங்களைக் காக்கத் துணிந்த அந்தப் பெண் கலெக்டருக்காக அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்தனர்.

"உமா, பாரு... நம்ம பொண்ணு நமக்கு மட்டும் மகளல்ல, இந்த ஊருக்கே மகளா மாறிட்டா," என்றார் சுரேந்தர் பெருமையுடன். பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அவளை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

எல்லாரும் ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்த விக்ரம் மிருது ஆசைப்பட்டபடி அந்த ரோடு உருவான பிறகு தான் எங்களுடைய கல்யாணம். அதுவரைக்கும் யாரும் இந்த பேச்சை எடுக்க கூடாது என்று உறுதியாக சொல்லிவிட, விக்ரமை காதல் நிறைந்த கண்களோடு மிருதுளா பார்க்க நான் இருக்கேன் என்றான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஏன்டா அயோக்கிய ராஸ்கல்களா? ரெண்டு பேரும் சிபிஐ ஆபிஸர்களென்று ஏன்டா சொல்லை?.மூணு எருமை மாடும் ரகசியமா அப்பப்போ ஏதாச்சு காரணம் சொல்லிட்டு வெளியூருக்கு போகும்போதே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. நானும் ஏதோ காதல் கத்தரிக்காய் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனா இதை எதிர்பார்க்கவே இல்லை என்று சுந்தரமூர்த்தி அதிர்ச்சியோடு சொன்னார்..

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top