• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
663
வழக்கம்போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்த மிருதுளா,வசுவோடு பேசிக்கொண்டே இரவு டிபனை செய்தாள்.

நீ உட்காரு..சாந்தா செய்யும் என்று சொன்னாலும் இருக்கட்டும் பாட்டி எனக்கும் போர் அடிக்குது.நல்லா தான் சமைப்பேன் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்றாள்.

பின்னர் எல்லாரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாட்டி எனக்கு போர் அடிக்குது புக் ஏதாச்சும் இருக்கா?.

நம்ம வீட்டுல ஏது புக்கு?.

யாரு படிக்கிறு?...ஆனா எல்லாமே பிசினஸ் சம்பந்தமாக தானே இருக்கும் அதுதான் விக்கி வச்சிருப்பான் என்று யோசித்தவர், அட ஆமாம்..மதியோட ரூம்ல இருக்கும் போய் பாரு டா.

ஆமாம்...இந்த விஷயம் எனக்கு ஞாபகம் இல்லையே பாட்டி. மதி அக்கா தான் கதை புக் படிப்பாங்களே என்று சிரித்தவள் ஓகே ஓகே குட்நைட் என்று சொல்லிக்கொண்டு மாடியில் இருக்கும் இரண்டாவது அறையின் கதவை திறந்து உள்ளே போனவள் லைட்டை ஆன் பண்ணி பார்க்க யாரோ யூஸ் பண்ணுவது போல இன்னும் சுத்தமாகவே இருந்தது.

அப்பொழுது தான் தினமும் அந்த அறையையும் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று மிருதுளாவுக்கு புரிந்தது.

மதியை நினைத்து கவலைப்பட்டவள் பின்னர் அங்கிருந்த அலமாரியை திறந்து பார்க்க அதோ முழுவதுமாக துடைக்கப்பட்டது போல இருக்கவும் எங்க இதுல அக்கா நிறைய புக்ஸ் வச்சிருப்பாங்களே ஒன்னு கூட காணோமே என்று யோசனையோடு மற்ற வால்ட்ரோபை திறந்து பார்க்க அதில் ஒரு ஒரே சூட்கேஸ் மட்டும் தான் இருந்தது. வேற எதுவும் இல்லை.

ஒருவேளை இதுல எடுத்து வச்சிருக்காங்க போல என்று யோசனையோடு அந்த சூட்கேஸை எடுத்து அங்கிருந்த பெட்டில் மேல் வைத்தவள் அதை திறந்து பார்க்க உள்ளே மதி வாங்கிய கோப்பைகளும் மெடல்களும், அதன் கீழே வெல்வெட்டால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருப்பது போல் இருக்கவும் என்ன இது என்ற யோசனையோடு அதை எடுத்தவள் துணியை பிரித்து பார்க்க உள்ளே ஒரு டைரி இருந்தது.

ஆஹா மதியக்க ஒரு வேலை கதை எழுதலாம்னு முடிவு பண்ணி இருப்பாங்களோ இல்ல வேற யாருடையதாக இருக்குமா என்ற யோசனையோடு உள்பக்கம் திரும்ப அதில் "யாருக்கு மாலை? "ஆசிரியர் அகல்மதி என்று இருக்கவும்... என்னாது அக்கா நாவலாசிரியராக என்று ஆச்சரியப்பட்டவள் டைரியை மட்டும் எடுத்துக் கொண்டு சூட்கேஸை பழையபடி அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது ரூமிற்கு வந்தவளோ டைரியை திறந்து படிக்கலானாள்.

டைரி:

மீஞ்சூர்,அழகான மலைக் கிராமம். இந்த ஊரில் வசிக்கும் வேலாயுதம், சுந்தரமூர்த்தி, முருகன் ஆகிய மூவரும் இணைபிரியாத நண்பர்கள்.

வேலாயுதம்: எதற்கும் அஞ்சாதவன், சிறு வயதாக இருந்தாலும் ஊர் நியாயங்களுக்குத் துணிந்து நிற்பவன்.

சுந்தரமூர்த்தி: ரொம்ப அமைதியானவன், மண்ணின் ஈரத்தையும் பயிரின் மொழியையும் அறிந்த விவசாயி.

முருகன்: நகைச்சுவை உணர்வு மிக்கவன், எப்பேர்ப்பட்ட கவலையையும் தன் பேச்சால் போக்கிவிடும் ஆற்றலைக் கொண்டவன்.

அன்று பங்குனி உத்திரத் திருவிழா

திருவிழா ஏற்பாடுகள்
ஊரே களைகட்டியிருந்தது.
வேலாயுதமோ தோரணங்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தான். சுந்தரமூர்த்தி தன் தோட்டத்தில் விளைந்த பூக்களைக் கோயிலுக்குக் கொண்டு வந்து குவித்திருந்தான். முருகன்? அவன் வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய் கடையருகே நின்று கொண்டு ஊர் வம்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.

நேரமும் கடந்து செல்ல
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி ஊர்வலம் கிளம்பும் நேரம். திடீரென மேளக்காரர்களுக்கும், பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் இடையே சின்னதாக ஒரு வாக்குவாதம் வெடித்தது.

அப்போது வேலாயுதம் முன்னே வந்து நின்றான். "இது எங்க ஊர் திருவிழா, இங்கே சண்டைக்கு இடமில்லை!" எனத் தன் கம்பீரக் குரலில் கர்ஜித்தான்.

சுந்தரமூர்த்தியோ சண்டையை வளர்க்காமல், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றான். "சாமி கும்பிட வந்த இடத்துல எதுக்குங்க கோபம்?" என அமைதியாகப் பேசினான்.

முருகனோ லாவகமாகப் புகுந்து, ஒரு நகைச்சுவையைப் போட்டு, அங்கிருந்த பதற்றத்தைத் தணித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிட, பின்னர் அன்று இரவு, திருவிழா முடிந்து அனைவரும் கலைந்த பின், அந்த மூவரும் மட்டும் குளக்கரையில் அமர்ந்திருந்தனர்.

"ஏண்டா சுந்தரம், நான் கோபப்பட்டப்போ நீ ஏன் தடுத்த?" என்று
சுந்தரமூர்த்தி கேட்க, "நீ அடிக்கப் போயிருந்தா, திருவிழா நின்னு போயிருக்கும் வேலா. நமக்குத் தேவை ஒற்றுமைதான்."

ஆமா டா... இந்த பேச்சை விடுங்கள் நான் மட்டும் அந்த ஜோக்கை சொல்லல நம்ம மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல 'ஸ்பெஷல்' சோறு சாப்பிட்டு இருப்போம்!" என்று முருகன் சொல்ல, மூவரும் பலமாகச் சிரித்தனர். அந்தச் சிரிப்பு அந்தக் குளத்து நீரில் அலைகளாய் பரவியது.

"கிராமத்துத் திருவிழாக்கள் தெய்வத்திற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை; சிதறிப்போகும் உறவுகளையும், தடம் மாறும் நண்பர்களையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைப்பதற்காகவும்தான்." என்று உணராதவர் யாருமில்லை.

காலச்சக்கரம் சுழன்றது. படிப்பு, வேலை என மூவரும் வெவ்வேறு திசைகளுக்குச் சென்றனர். சுந்தரமூர்த்தியோ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு அவர்களின் குலத்தொழிலான விவசாயத்தை பார்க்கலானான்.

முருகன் தனது டாக்டர் படிப்பை முடித்து விட்டு மீஞ்சூரில் வேலை பார்க்க வந்துவிட, வேலாயுதம் சென்னையில் வக்கீலாக இருக்கிறான்.

வருடங்கள் மட்டுமே போனது ஆனால், அவர்களின் நட்பு மட்டும் மாறவில்லை. நகரத்து நெரிசலில் சிக்கியபோதும், வேலாயுதத்தின் கம்பீரமும், முருகனின் சிரிப்பும், சுந்தரமூர்த்தியின் நிதானமும் அவர்களைத் தாங்கிப் பிடித்தன.

சில வருடங்கள் கழித்து, அதே ஊர் மந்தையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர்.

"என்னடா வேலா, ரொம்ப இளைச்சிட்ட போல?" என முருகன் கிண்டல் செய்ய, சுந்தரமூர்த்தி தன் நிலத்திலிருந்து கொண்டு வந்த இளநீரை வெட்டி நண்பர்கள் இருவருக்கும் நீட்டினான்.

ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா என்று வேலாயுதம் சிரிக்க சொல்லுடா என்றனர். பின்னர் அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல, அடி சக்கை என்று நண்பர்கள் கிண்டல் செய்தனர்.

ஆமா டா. பேர் சுந்தரி... ஆனால் நான் வீட்ல சொல்லிட்டேன்டா கல்யாணம் நடந்தா எங்க மூணு பேருக்கும் கோவில்ல ஒண்ணா தான் நடக்கணும் அதுக்கு தகுந்த போல ஏற்பாடு பண்ணுங்கனு...

நண்பனின் வார்த்தையை கேட்ட இருவரும் வேலா என்று அணைத்து கொள்ள, நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா என்று சுந்தரமூர்த்தி சிரிக்கவும் சொல்லு சொல்லு காதலும் ஒர்க்அவுட் ஆயிடுச்சா கலெக்டர் அம்மா ஒத்துக்கிட்டாங்களா என்று கேட்க ஆமாண்டா ஏதோ மனசு இறங்கி வந்து கல்யாணம் பண்ணிக்க சம்மதித்து விட்டாள் என்கவும் சரிங்க கலெக்டர் புருஷன் என்று கிண்டல் பண்ணினார்கள்.

முருகனுக்கு அவனது அத்தை பெண்ணான வள்ளியை தான் திருமணம் செய்வதாக சிறுவயதில் இருந்து பேச்சு இருந்தது.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

நாட்களும் ஓட நண்பர்கள் ஆசைப்பட்ட போல அவர்கள் ஊரில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலில் நண்பர்கள் மூவருக்கும் ஒரே மேடையில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் சிறப்பாக திருமணம் நடந்த முடிந்தது.

மற்ற சடங்குகள் முடிந்து நண்பர்களும் அவரவர் மனைவிகளோடு வாழ்க்கையை தொடங்கினர். இவனுங்களை போல இவர்கள் மனைவிகளும் நல்ல தோழிகளாகிவிட்டனர்.

ஒரு வருடம் கடந்திருக்க, சொல்லி வைத்தப் போல மூவருக்கும் முதல் வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. இதிலையுமா டா ஒற்றுமை என்று தெரிந்தவர்களும் ஊர்காரர்களும் கிண்டல் பண்ணினார்கள்.

பிள்ளைகளும் வளரத் தொடங்கினார்.

மேலும் ஐந்து வருடங்கள் கடந்திருக்க, வசு- சுந்தரி இருவரும் மீண்டும் கர்பமாகி ஆளுக்கொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாளுங்கள்.

வேலப்பன்- சுந்தரி தம்பதி தங்களது மகனுக்கு சுரேந்தர், மகளுக்கு சுரேகா என்று பெயர் வைத்தனர்.

சுந்தரமூர்த்தி- வசுந்தரா தம்பதியினர் மகனுக்கு பிரகாஷ் என்றும், மகளுக்கு பவானி என்று பெயர் சூட்டினார்.

முருகன்- வள்ளி தம்பதிக்கு தினேஷ் மற்றும் கீதா என்ற மகள்.

இவர்களைப் போல மூவரின் மகன்களும் நண்பர்களாகினர். பின்னர் ஊட்டியில் இருக்கும் கான்வெண்ட் ல சேர்த்து விட, வருடங்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.

சுரேந்தர்- பிரகாஷ் இருவரும் இன்ஜினியரிங் முடித்து விட்டு அவர்கள் பெற்றோர் ஆரம்பித்த தொழிலோடு புதிய தொழிலையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்த, முருகன் போலவே தினேஷும் டாக்டருக்கு படித்து முடித்தான்.

வேலை நிமித்தமாக பிஸியாக இருந்தாலும் மூவரும் நட்பை விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை வளர்த்துக் கொண்டானுங்கள்.

பிள்ளைகளுக்கு திருமண வயது வரவும், முதலில் பவானி க்கு தெரிந்த இடத்தில் இருந்து மாப்பிள்ளை வர அவளுக்கு சீர்வரிசை பொருட்களோடு திருமணம் செய்து பூனேவிற்கு அனுப்பி வைத்தனர்.

கீதாவோ தற்போது தான் டீச்சர் டிரைனிங் முடித்திருக்க, அவளை பிரகாஷ் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தான். இனியும் இதை மறைக்க வேண்டாம் என்று தயங்கியவாறு நண்பர்களிடம் சொல்லிவிட, தினேஷ் நண்பனை ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான்.

இதை எதிர்பார்க்காத பிரகாஷும் சுரேந்தரும் என்னடா பண்ற என்று கத்த, பின்ன வேற என்னடா பண்றது.போன வாரமே அத்தை மாமாவும் கீதாவை பொண்ணு கேட்டுட்டு போய்ட்டாங்கள்.

அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் இருக்கு இன்னும் இந்த பரதேசி பயலுக்கு தெரியலையே என்று தினேஷ் சிரிக்க என்னடா சொல்ற என்று இப்பொழுது அவர்கள் இருவரும் அதிர ஆமாண்டா விளக்கெண்ணெய், நீ பிசினஸ் கட்டிக்கிட்டு மாரடி
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
663
காதலுக்கெல்லாம் நீ கொஞ்சம் கூட லாய்க்கு கிடையாது கீதா சின்ன சின்ன விஷயத்திலும் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் எதிர்பார்க்கும் என் தங்கச்சி கையால செருப்படி விளக்கமாத்தடி வாங்குவது நிச்சயம் என்கவும் அட மானங்கெட்டவனே நீ எல்லாம் ஒரு நண்பனாடா என்று முறைதான்

மேலும் சிறிது நிமிடங்கள் நண்பர்கள் மூவரும் கேலி கிண்டல்களோடு பேசிவிட்டு அவரவர் வீட்டிற்கு வந்தனர்.

அப்பொழுது இரவு சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பிரகாஷ் என்று சுந்தரமூர்த்தி கூப்பிட சொல்லுங்கப்பா என்றான். நம்ம கீதாவை தான் உனக்கு பொண்ணு பாத்து இருக்குப்பா நம்ம கண்ணு முன்னாலே வளர்ந்த புள்ள நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகள் நீ என்ன சொல்ற என்கவும் தனது மனதில் உள்ள ஆசையை வெளியே காட்டிக் கொள்ளாத பிரகாஷ் உங்க விருப்பம் ப்பா. என்னோட நல்லது கெட்டது உங்களுக்கு தெரியாதா என்று சிரித்தான்.

மகனை நினைத்து சந்தோஷப்பட்டவர்கள் அவர்கள் குறித்த போல மறாவது வாரத்தில் சொந்த பந்தங்களோடு போய் கீதா பிரகாஷின் நிச்சயதார்த்தத்தை சிறப்பாக செய்து முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது பவானி மாசமாக இருப்பதாக செய்தி வந்தது. தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வரப்போவது நினைத்து பவானி வீட்டினர் ரொம்ப சந்தோஷப்பட்டனர்.

அதேபோல் நாட்களும் ஓட அவர்களின் பெற்றோர்களைப் போல நண்பர்கள் மூவருக்கும் அதே அம்மன் கோயிலில் ஊரே அசந்து போகும் அளவுக்கு சீரும் சிறப்போடும் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிய அவர்களும் அவர்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அதேபோல் பூனாவிலிருந்த பவானி வாசு தம்பதியருக்கு முதல் குழந்தை ஆண்மகன் பிறக்கவும் அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

சுரேந்திரனுக்கு அவனது மாமன் மகளாகிய உமாவையும் சுரேந்திரன் தங்கை சுரேகாவிற்கு உமாவின் அண்ணன் சந்திரனுக்கு பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தனர் தினேஷிற்கு அவர்கள் தூரத்தை உறவு பெண்ணான குமாரியை பெண் எடுத்திருந்தனர்.

இங்கே பிரகாஷின் மனைவி கீதாவோ வழக்கம் போல் வேலைக்கு போய்க்கொண்டு இருக்கும்போது தலை சுற்றல் போல இருக்கவும் கிளாஸ் ரூமில் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

அப்பொழுது அவளது தோழி இன்னொரு ஆசிரியர் வரவும் கீதாவை பார்த்தவர் என்ன ஆச்சு என்க..தெரியவில்லை தலை சுத்துது.

அப்படியா?.

எதாவது சங்கதியா என்று விஷமமாக கேட்க...அதன் பிறகு யோசித்த கீதாவிற்கு நாட்கள் தள்ளிப் போய் இருப்பது ஞாபகம் வரவும் ஆமாம் அப்படித்தான் நினைக்கிறேன் என்றாள்.

பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் கணவன் வருகைக்காக காத்திருந்தாள். அன்றைய நாளோ பிரகாஷ் வழக்கத்தை விட தாமதமாகவே வந்தான்.

ரூமிற்கு வந்தவன் மனைவியின் சோர்ந்த முகத்தை பார்த்துவிட்டு என்ன ஆச்சு கீதா என்க..அவன் காதில் விஷயத்தை சொல்லவும் அப்படியா என்றவன் மணாயை பார்க்க இரவு 9 என்று காட்டியது.

சரி இருந்தாலும் பரவாயில்லை என்று அவளை அழைத்துக் கொண்டு தினேஷ் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் போகாமல் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போய் பரிசோதனை பண்ண கீதா மாசமாக இருப்பது தெரிந்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட இரண்டு வீட்டருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.

சில நாட்களின் இடைவெளியில் சென்னையிலிருந்த உமாவும் தினேஷின் மனைவி குமாரியும் அடுத்தடுத்து கண்சிவாக இருப்பது தெரிந்து நண்பர்கள் மூவரும் அவர்களை வாரிசு வரவேற்க ஆவலோடு காத்திருந்தனர்.

ஒரு நல்ல நாளில் முதலில் கீதாவிற்கு வளையல் போட்டு அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்த பிறகு உமாவுக்கும் குமாரிகும் நல்ல நாளை பார்த்து வளையல் காப்பு விட்டனர்.

பத்தாவது மாத இறுதியில் கீதாவும் முதல் வாரிசாக ஆண்மகனை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு பதினாறாம் நாள் தீட்டு கழித்தது விக்ரம் என்று பெயர் சூட்டினார்.

விக்ரம் பிறந்த மறாவது வாரத்தில் உமாவிற்கும் குமாரிக்கும் இரண்டு நாள் இடைவெளியில் குழந்தை பிறந்தது அவர்களுக்கும் முதல் குழந்தை ஆண் குழந்தையாகவே பிறக்க நண்பர்களை கையில் பிடிக்க முடியவில்லை.

சுரேந்தர் அவனது மகனுக்கு மித்ரன் என்றும் தினேஷ் அவனது மகனுக்கு பரத் என்றும் பெயர் வைத்தார்கள்.

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு நாள் பவானியிடமிருந்து தகவல் வந்தது அவர்களின் குழந்தை தண்ணீரில் விழுந்து இறந்து விட்டதாக.

இதைக் கேட்டவர்களோ பதறி அடித்து பூனாவிற்கு போனவர்கள் குழந்தைக்கான சடங்கு எல்லாம் முடித்துவிட்டு பவானி சிறிது நாள் எங்களோடு இருக்கட்டும் என்று ஊருக்குள் அழைத்து வந்தார்கள்.

இங்கே தனது அண்ணன் மகனை பார்த்தவளும் மனதை தேற்றிக்கொண்டவள் பின்னர் நிதர்சனம் புரிந்து கொண்டு கணவர் வீட்டுக்கு சென்று விட்டாள்...

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top