• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
663
மீஞ்சூர்:

மேலும் இரண்டு நாட்கள் தினேஷ் குமாரி சென்னையில் இருந்து விட்டு மீஞ்சூருக்கு வந்து விட்டனர்.

ஆபீஸ் போகும் போது வரும் போதும் எப்படியாவது விக்ரம் மிருதுளாவின் கண்ணில் பட்டு விடுவான் ஆனால்,கடந்த நான்கு நாட்களாகவே இதுவரை அவனை பார்க்கவில்லையே..

துரை அவ்வளவு பிசியோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது மாலாவோ போனில் அழுது கொண்டே பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

என்ன ஆச்சுங்க அம்மா என்று வீட்டுக்குள் போக அம்மா இறந்துட்டாங்க டா என்று சொல்லவும் அப்படியா..பாட்டி நல்லா தானே இருந்தாங்க அம்மா? .

ம்ம்.. பாத்ரூம் போனாங்களாம் வழுக்கி விழுந்ததில் பின்னாடி தலை அடிபட்டு ஸ்பாட்ல இறந்துட்டாங்களா என்று அழுது கொண்டே மாலா சொல்ல அச்சச்சோ நாளைக்கு வேற எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா இல்ல நான் உன்கூட வந்துருவேன் என்கவும் இருக்கட்டும் டா.

எனக்கு தெரியாதா..நான் போயிட்டு வரேன் நீ வந்து என்ன பண்றேன்னா வசு அம்மா கூட இரு. தனியாக இருக்க வேண்டாம் என்றார்.

பரவாயில்லங்க மா நான் இருந்துகிறேன் என்றாள்.

இல்லை உன்னை தனியா விட்டுட்டு என்னால நிம்மதியா போக முடியாது என்றவர் கையோடு அவளையை அழைத்துக் கொண்டு உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் இதுல பேக் பண்ணி வச்சிருக்கேன் என்கவும் அம்மா என்றவளுக்கு விக்ரம் கூட அந்த வீட்டில் எப்படி இருப்பது என்று யோசனையாகவே இருந்தது

எப்படியாவது ஒரு ரெண்டு வாரம் இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருடா நான் வந்துடுறேன் என்று கண்ணீரோடு மாலா சொல்லவும் ஐயோ அம்மா நான் பாத்துக்கிறேன். நீங்க தான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறீங்க இப்ப எதுக்கு தேவை இல்லாம பாட்டிக்கு சிரமத்தை கொடுக்கணும்? .

அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் பேசிட்டேன் என்றார். .ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்க என்றவள் மாலாவுக்கு டிக்கெட்டையும் புக் பண்ணினாள்.

கால் மணி நேர பயணத்தில் வசந்தரா வீட்டிற்கு வந்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொண்டு மாலாவும் டிரைவரும் கிளம்பி விட்டனர்.

வாங்க கலெக்டர் அம்மா இன்னைக்கு தான் உங்களுக்கு வர வழி தெரிஞ்சுதா என்று இருவரும் கிண்டல் பண்ண என்னோட வேலை பத்தி தெரிஞ்சு நீங்களே கேக்குறீங்களே பாட்டி இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியலையா என்றவள் முதல்ல நான் ஒரு காபி குடிக்கிறேன்.

இந்த அம்மா புடிச்சு இப்படி இழுத்துட்டு வந்துட்டாங்களே என்க...போய் பிரஷ் ஆகிட்டு வாடா நான் போட்டு வைக்க சொல்கிறேன் என்றார்.

சரி சரி என்றவள் எப்போதும் அவள் லீவுக்கு வந்தால் தங்கும் அறைக்கு போனவள் ப்ரஷாகி வர சூடான காபியும் கூட சாப்பிட ஸ்நாக்சும் வசந்தரா கொடுக்க நீங்க மறக்கவே இல்லை பாட்டி...காபி கூட ஏதாச்சு சாப்பிடுவேன் என்பதை என்கவும் எப்படி ராஜாத்தி மறக்க முடியும் என்றார்.

பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது நேரமும் கடந்து சென்றதே தவிர விக்ரம் வந்தபாடில்லை .இரவு உணவையும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவளுக்கு போரடித்தது.

சரி ஹாலில் போய் டிவி பார்க்கலாம் என்றால் பாட்டியும் தாத்தாவும் நிச்சயமாக தூங்காமல் அவளுக்கு துணைக்காக வந்து உட்கார்ந்து இருப்பார்கள் என்று தெரிந்ததால் போனை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு படம் கண்ணில் படவும் அது பார்த்துக் கொண்டே இருந்தவள் அவளை மறந்து தூங்கிவிட்டாள்.

மறுநாள் விடியலும் தொடங்கியது.பிரஷ் ஆகி கீழே வரவும் அங்கே ஹாலில் சுந்தரபாண்டியன் தாத்தாவும் வசுவும் இருப்பதை பார்த்துக் கொண்டே வந்தவள் இந்த கடுவன்பூனை எங்க தான் போச்சு ஆளையே காணுமே?.

ஒருவேளை ஜிம்முல சுத்திட்டு கிடக்கும் என்று முணவிக்கொண்டவள் குட் மார்னிங் தாத்தா குட் மார்னிங் பாட்டி என்க...குட் மார்னிங் குட்டிமா என்றவர்கள் ,சாந்தி குட்டிமா வந்துட்டா பாரு என்று குரல் கொடுக்கும் போது வீட்டில் இருந்த சமையல் ஆளும் அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துட்டு போனார்.

பின்னர் அவர்களிடம் பேசிக்கொண்டே காபி குடித்தவள் நியூஸ் பேப்பரை படித்துவிட்டு ஆபீசுக்கு தயாராகவும் அதுவரை விக்ரம் அங்கு இல்லாமல் இருப்பதை பார்த்தவள் எங்கு தான் போனார் அந்த மனுஷன் என்று நினைத்தவள் எப்படி கேட்பது என்று யோசனையாகும் போது விக்ரம் கிட்ட இருந்து போன் வர தாத்தா பேசிக்கொண்டிருப்பதை வைத்து அவன் ஊரில் இல்லாத விஷயம் தெரிந்தது.

அதனால்தான் அந்த கடுவன்பூனை நம்ம கண்ணிலே படவில்லையா என்று யோசனையானவள் பின்னர் சாப்பிட்டு ஆபீசுக்கு சென்று விட்டாள்.

அங்கிருந்து மாலாவிற்கு ஃபோன் பண்ணி நல்லபடியா போய்ட்டீங்களா என்று விசாரிக்க ஆச்சுடானு அந்த நேரத்தில் அட்டென்ட் பண்ணி அவளுக்கு பதில் சொல்லியவர் நான் ப்ரீயா கிட்ட பேசுறேன் டா என்றார்

நீலாங்கரை:

சென்னையின் அந்த மாலை நேரத்து மிதமான காற்றில், தினேஷின் மனது மட்டும் சற்று படபடப்பாக இருந்தது. பல வருடங்களாக பழகிய வீட்டிற்குப் போவதற்கு இன்று ஏன் இவ்வளவு யோசனை? கார் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தினேஷின் கைகள் லேசாக நடுங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி குமாரி, "என்னங்க... ரொம்ப யோசிக்கிறீங்களா?" என்று மெல்லக் கேட்டாள்.

"இல்லம்மா...என் உயிர் நண்பன். ஆனா இன்னைக்கு நான் போறது விக்ரமோட மாமாவா. ஒருவேளை அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நம்ம நட்பு பாதிக்குமோன்னு ஒரு சின்ன பயம்," என்றார் தினேஷ்.

அமைதியாக புன்னகைத்த குமாரி "உங்க மேல அவங்களுக்கு இருக்கிற அன்பு அளவில்லாதது. விக்ரம்க்கு உங்களை விட ஒரு நல்ல மாமா இருக்க முடியாது. நீங்க கேக்குறதை அவங்க தட்டவே மாட்டாங்க." வாங்க யென்றார்.

பின்னர் நீலாங்கரையில் இருக்கும் சுரேந்திரனின் வீட்டு வாசலில் கார் நின்றது. அவர்களுக்காக வாசலிலேயே சுரேந்தர் காத்துக்கொண்டிருந்தார். "வாடா தினேஷ்! என்ன இன்னைக்கு ரொம்ப நேரமாச்சு? குமாரி, வாம்மா... உள்ள வாங்க," என உற்சாகமாக வரவேற்றார்.

உள்ளே சென்றதும் காபி, பலகாரங்கள் என உபசரிப்புகள் முடிந்தன. எங்கடா சித்தப்பா சித்தி காணும் என்று தினேஷ் கேட்க உன் பேரனோடு ஷாப்பிங் என்று சிரித்தார்.

அரை மணி நேரங்கள் கடந்து இருக்க வெளியே போயிருந்த அவர்களும் வீட்டிற்கு வந்த பிறகு பரஸ்பரம் நலம் விசாரித்து பொதுவான விஷயங்களைப் பேசி முடித்ததும், தினேஷ் மெல்லத் தொண்டையை கணைத்துக்கொண்டு நண்பனின் கண்களை நேராகப் பார்த்தார்.

குட்டிமா மேல எனக்கு உரிமை இருக்கா என்க...அடிச்சு பல்லெல்லாம் உடைக்க போறேன் பாரு எதுக்கு இப்ப தேவையில்லாம பேசிட்டு இருக்க என்று சுரேந்தர் முறைக்க, மனசுல பட்டுச்சுடா அதை வச்சுக்கிட்டே இருக்க முடியாது
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
663
"இன்னைக்கு ஒரு உரிமையில உன் முன்னாடி வந்து நிக்கிறேன். விக்ரம் பத்தி உனக்குத் தெரியும். படிப்பு, குணம் எல்லாம் உனக்குத் தெரிஞ்சதுதான். இதை இன்னும் ஆழமான பந்தமா மாத்துனா என்னன்னு குமாரியும் நானும் ஆசைப்படுறோம். நம்ப குட்டிமாவை விக்ரம்க்குப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்," என நிதானமாகச் சொன்னார்.

அமைதியாகத் தினேஷின் கையைப் பற்றிக்கொண்ட சுரேந்தர் 20 வருஷத்துக்கு முன்னாடி நீ நான் பிரகாஷ் மூணு பேரும் மணாலிக்கு போயிருந்தோமே அன்னைக்கும் அந்த ஹோட்டல்ல பிரகாஷ் விக்ரமுக்கு குட்டிமாவை கேட்டானே உனக்கு ஞாபகம் இருக்கா? என்று நண்பனை நினைத்து கண் கலங்க..அது எப்படிடா மறக்க முடியும் என்றார்.

பிறகு "இதைச் சொல்ல உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? அவளுக்கு இன்னொரு அப்பா வீட்டுக்குப் போற மாதிரிதான். விக்ரம் மாதிரி ஒரு பையனைத் தேடிப் பிடிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். எனக்கு முழு சம்மதம்டா!"

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தினேஷ் தம்பதிகளுக்கு கண்கள் கலங்கின. தினேஷின் மனதில் இருந்த பாரம் இறங்கியது. நண்பர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.

"அப்பா... காரியத்தை முடிச்சிட்டீங்களா?" என போனில் கேட்ட பரத்திடம்,டேய் உன் அப்பன் போன காரியம் என்னைக்குமே தோத்ததில்லைடா என்று சிரித்தார்.

ஆனால் விக்ரமுக்கு இப்போதைக்கு இதை பற்றி தெரிய வேண்டாம் என்கவும் எதுக்குடா என்று சுரேந்தர் கேட்க பிசினஸ்ல எதுவோ பிரச்சனைன்னு ஆந்திரா வரைக்கும் போயிருக்கான் டா.

அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் நல்லபடியா முடிச்சுட்டு வரட்டுமே பிறகு நம்ம பிள்ளைங்க கல்யாண வேலையை பார்க்கலாம். ஆனா பரத்துக்கு முன்னாடி விக்ரமுக்கு கல்யாணம் பண்ணினால் நல்லதுன்னு எனக்கு தோணுது என்கவும் தாராளமா பண்ணிடலாம் டா.

குட்டிமா கிட்ட இந்த விஷயத்தை பற்றி சொல்லனுமா வேண்டாமா என்று சிரித்துக்கொண்டே சுரேந்தர் கேட்க, தாராளமா சொல்லுடா.

புள்ளை விருப்பத்தை கேட்காமல் நம்மளே முடிவு பண்ணிட்டோமே என்கவும் நம்ம புள்ள பத்தி நமக்கு தெரியாததா என்று சுந்தரி பாட்டி சொல்ல...

ம்ம்..

அடுத்த வாரம் தொடர்ந்து ஒரு நாலு நாள் கவர்மெண்ட் ஹாலிடேஸ் வருது அதுக்கு வரேன்னு சொல்லி இருக்கா அப்ப பேசிடலாம் என்றவர் நண்பனிடம் பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்க மற்றவர்களுக்கு விக்ரம் தான் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக வரப்போவதை நினைச்சு சந்தோஷம் தாங்கவில்லை.

இன்றுதான் மித்ரன் வேலையில் முதல் நாள் என்பதால் எல்லா முடித்து வரவே எட்டு மணி ஆனது.வீட்டிற்கு வந்தவன் அங்கிருந்த தினேஷ் குமாரியை பார்த்து சித்தப்பா சித்தி என்று இருவரை அணைத்துக் கொண்டு எப்படி இருக்கீங்க என்றான்.

வாழ்த்துக்கள் கண்ணா என்றனர்.

என்ன ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்க...எல்லாம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று சொல்லவில்லை என்றவர்கள் பின்னர் விக்ரம் மிருதுளா பற்றி சொல்ல அப்படிபோடு ஒரு மனுஷன் வேலைக்கு போயிட்டு வந்த நேரத்தில் எவ்வளவு விஷயம் பேசி முடிச்சிட்டீங்களே ஆனா அவனை எப்படித்தான் சமாளிக்கிறது என்று தெரியவில்லை சித்தப்பானு வருத்தமாக சொன்னான்.

அதை நான் பார்த்துகிறேன் என்று தினேஷ் சொல்ல சரி சித்தப்பா என்றான்.

ஆந்திரா:

மாலை ஆறு மணி வரை தனது கன்ஸ்ட்ரக்ஷன்ல இருந்து விட்டுதான் விக்ரம் அங்கிருந்து ரூமிற்கு கிளம்பினான்.

பின்னர் ரெப்ரஷாகி கடமைக்கு சாப்பிட்டவன் , வீட்டிற்கு போன் பண்ணி தனது தாத்தாவிடம் இங்கு நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல நான் உடனே கிளம்பி வரட்டுமா என்று கேட்டார்.நான் பார்த்துக்கிறேன் நீங்க உங்க டார்லிங் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிரிக்க பேரன் தன்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணுகிறான் என்பது சுந்தரமூர்த்திக்கு புரிந்தது.

மேலும் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்தவனுக்கு ஊரை விட்டு ஓடிவந்தும் பயன் இல்லை என்பதை அவன் உணரத் தொடங்கினான்.

தூரங்கள் நினைவுகளை அழிப்பதில்லை; மாறாக, அவை தனிமையைப் பயன்படுத்தி நினைவுகளை இன்னும் புதைக்க ,விக்ரம் இப்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டான்.

அவன் மாற்ற வேண்டியது இடத்தை அல்ல, அவனது இதயத்தை. மிருதுளா அவனுக்குள் ஒரு அங்கமாகிவிட்டாள். அவளை விட்டு விலக அவன் எவ்வளவு தூரம் ஓடினாலும், அவனது நிழலைப் போலவே அவளது நினைவுகளும் அவனுடனேயே பயணிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

அந்த நல்லிரவு நேரத்தில் ஹோட்டல் பால்கனியில் நின்றிருந்த விக்ரமின் கைகளில் சூடான காபி இருந்தது, ஆனால் அவன் கண்கள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

"மிருதுளாவை எனக்குப் பிடிக்கும் என்பது உண்மைதான்... ஆனால் அவளுக்கு என் அன்பு ஒரு சாபமாகிவிடக் கூடாது."
சிறுவயதில் இழந்த பெற்றோர், பிறகு அவனுக்குப் பக்கபலமாக இருப்பாள் என்று நினைத்த அகல்மதியின் உறவு எல்லாம் காலத்தின் கோலத்தால் அவனை விட்டுப் பிரிந்து போனதை நினைக்க உள்ளுக்குள் வலித்தது.

"நான் யாரை நேசித்தாலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற அந்தப் பிம்பம் அவன் மனதில் ஆழமாகப் பதிய, மிருதுரா தேவதையைப் போன்றவள். அவளது சிரிப்பும், துள்ளலும் அவனது 'துரதிர்ஷ்டமான' நிழல் பட்டு மங்கிவிடக் கூடாது என்று பயந்தவன், இந்த குழு கன்ஸ்ட்ரக்ஷன் முடியுற வரைக்கும் ஊருக்கே போக கூடாது என்று முடிவெடுத்து அறைக்குள் வந்து படுத்தவனுக்கு தூக்கமே வரவில்லை.

ஒரு வாரம் கடந்திருக்க, மீட்டிங் முடிந்து திரும்பும் வழியில், ஒரு பூங்காவைக் கடந்தபோது ஒரு தந்தை தன் மகளைத் தூக்கி விளையாடுவதைப் பார்த்து விக்ரமின் இதயம் கனத்தது.

அவனுக்கும் ஒரு அழகான குடும்பம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசையே அவளுக்கு ஆபத்தாகிவிடுமோ என்ற குற்ற உணர்வு தான் அவனைத் தடுத்தது.

"நான் அவளைத் தேடிப் போனால், என் வாழ்வில் இருக்கும் தனிமை அவளையும் தொற்றிக்கொள்ளும். அவள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நான் அவளை விட்டு விலகி இருப்பதே சரி." என்று சொல்லிக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் வலித்தது.

ஆனால், அவன் உடல் விலகிச் சென்றாலும், அவன் ஆன்மா அவளோடுதான் சுற்றிக்கொண்டிருந்தது.

அன்று இரவு, விக்ரம் தனது சூட்கேஸை திறக்க அதனுள் ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து பிரிக்க, அதில் மிருதுளாவின் கழுத்தில் விக்ரம் மாலை போடுவது போல புகைப்படம் இருந்தது.

அதைத் தடவிப் பார்த்தபடியே மெல்லிய குரலில் பேசலானான்.
"மிருது... நீ என் அருகில் இருந்தால் நான் முழுமையடைவேன். ஆனால், நான் முழுமையடைவதை விட நீ நலமாக இருப்பதுதான் எனக்கு முக்கியம் டி. என் துரதிர்ஷ்டம் உன்னைத் தீண்டக் கூடாது. அதனால்தான் இந்த ஓட்டம். உன் நினைவுகள் என்னைச் சித்திரவதை செய்தாலும் பரவாயில்லை, நீ வேறொரு உலகில் மகிழ்ச்சியாக இரு."

எங்கிருந்தாலும் நீ நல்லா இருக்கணும் அது போதும் டி என்றவாறு டைரியை மூடியவன், தனது செல்போனை எடுத்து அவளது நம்பரை 'Block' லிஸ்டில் இருந்து நீக்கப் போனான். ஆனால் கை நடுங்கியது. ஒருவேளை அவள் மெசேஜ் அனுப்பி, அதற்கு அவன் பதில் அனுப்பிவிட்டால், மீண்டும் அந்தப் பாச வலைக்குள் விழுந்துவிடுவோம் என்று பயந்து போனைத் தூக்கி எறிந்தான்.

சேருமா?
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
663
எதாவது சங்கதி இருக்கும் 🤣😁😁😁😍
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top