• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
650
நீலாங்கரை:

இரவு மணி பத்து. ஜன்னல் வழியாக நுழைந்த குளிர்ந்த காற்று அறையின் அமைதியைத் தழுவிக் கொண்டிருந்தது. ரேகா, தன் மூன்று வயது மகன் ருத்ரனின் தலையை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். அவன் தூக்கத்தில் முணுமுணுத்தபடி அவள் நைட்டியைப் பற்றிக்கொண்டிருந்தான்.

"இந்த ஒரு பிடிமானம் தான் கடந்த ரெண்டு வருஷமா என்னைத் தாங்கிப் பிடிக்குது..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளுக்கு, லேசாகக் கண்கள் கசிந்தன. எல்லையில் பனிச்சரிவு என்று செய்தித் தாள்களில் படிக்கும் போதெல்லாம், மித்ரனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அவள் செய்த பிரார்த்தனைகள் ஏராளம்.

திடீரென்று அவளது ரூம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

"இந்த நேரத்துல அத்தை எதுக்குக் கூப்பிடுறாங்க? ஒருவேளை தாத்தா பாட்டிக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ?" என்று பதறியபடி மெதுவாக எழுந்தாள். மகனின் பிடியை மென்மையாக விடுவித்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு போய் கதவை திறக்க வெளியே அவள் எதிர்பார்த்த போல அவளது அத்தை இல்லை.

கருகருவென வெட்டப்பட்ட தலைமுடி, அடர்த்தியான மீசை, தோளில் ஒரு பெரிய பேக், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ராணுவச் சீருடை. ரேகாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டது போன்ற ஒரு பிரமை.
எதிரே அவளது காதல் கணவன் மித்ரன் தான் நின்று கொண்டிருந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன் கிளம்பும்போது பார்த்த அதே கம்பீரம். ஆனால் அவன் கண்களில் இருந்த அந்த ஏக்கம் இப்போது அவளை ஊடுருவியது. ரேகாவுக்குக் கைகள் நடுங்கத் தொடங்கின. பேச நினைத்தாள், ஆனால் குரல் வரவில்லை. தொண்டை அடைக்க, கண்கள் தானாகக் குளம் கட்டின.

"ரேகா..." என்று அவன் அழைத்த அந்த ஒரு வார்த்தை, அவள் சுமந்திருந்த காத்திருப்பு எனும் பாரத்தை அப்படியே இறக்கி வைத்தது.

"நீங்க... நீங்க எப்படி? போன் கூட பண்ணல..." என்று விக்கித்து நின்றவளை நோக்கி ஒரு படி முன்னே வந்தவன், "உனக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ இவ்வளவு அதிர்ச்சியாவேன்னு நினைக்கல" என்று புன்னகைத்தபடி அவளது கண்ணீரைத் துடைக்கக் கையை நீட்டினான்.

சட்டென்று தன்னவனின் கைகளைப் பற்றிக்கொண்டவள் இது வெறும் கனவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது போல அவனது விரல்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் மார்பு விம்மித் தணிய, அவன் தோளில் தலைசாய்த்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அந்த இரண்டு வருடத் தனிமை, பயம், ஏக்கம் எல்லாம் அந்தத் தழுவலில் கரைந்து போயின.

"சரி சரி... அழாதே. நான் வந்துட்டேன்ல... நம்ம பையன் எங்க?" என்று மித்ரன் கேட்கவும், ரேகா அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அவன் உள்ளே தூங்குறான்... வாங்க" என்றாள்.

தங்களது ரூமிற்குள் நுழைந்த மித்ரன், மெத்தையில் சுருண்டு படுத்திருந்த மகனை ஒரு நீண்ட பெருமூச்சோடு பார்த்தான். அவன் கிளம்பும்போது தத்தித் தத்தி நடந்த குழந்தை, இப்போது வளர்ந்து சிறுவனாக மாறியிருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. குனிந்து மகனின் நெற்றியில் ஒரு மென்மையான முத்தமிட்டான். அவனது கரடுமுரடான மீசை பட்டதும், தூக்கத்தில் ருத்ரனும் லேசாகச் சிரித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

"இவனுக்கு உங்களை மாதிரியே தான் சிரிப்பு மாமா..." என்று மெல்லிய குரலில் சொன்ன ரேகாவின் குரலில் அத்தனை பெருமிதம்.

அதைக் கேட்டு மனைவியை நிமிர்ந்து பார்த்தவன். " எப்படித்தான் சமாளிச்சியோ? ரொம்ப இளைச்சுட்ட ரேகா" என்றான் அக்கறையுடன்.

"நீங்க வந்தாச்சுல்ல, இனி எல்லாம் சரியாயிடும். இருங்க, முதல்ல டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் போய் உங்களுக்குப் பிடிச்சதைச் சமைக்கிறேன்" என்று உற்சாகமாகச் கதவை திறந்து வெளியே போக முயன்ற மனைவியின் கையை எட்டி பிடித்தான்.

அந்த கையின் இறுக்கம் ரேகாவிற்கு உள்ளுக்குள் ரத்தத்தை சூடாக்க, வேகமாக இழுக்கவும் கணவனின் நெஞ்சில் மேல் பின்வாக்கிலே வந்த மோதி நின்றாள்.

ஏன் டி...இரண்டு வருஷம் கழித்து வந்திருக்கேன்...இந்த சோறு அங்கு கிடைக்காதா யென்று மனைவியை இறுக்கமாக பிடித்து அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தான்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அதே அணைப்பை கண்களை மூடி ரசித்தவள்,பின்னர் தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருவதால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லைனு எனக்கு நல்லா தெரியும் மாமா.

ம்ம் என்றவன் சரி போ யென கைகளை விலக்க, உதட்டோரம் சிந்தும் சிரிப்போடு கீழே வரும் மருமகளை பார்த்த உமா சரிமா நீ பார்த்துக் கொள் என்று அவரது அறைக்குள் சென்று விட்டாள்.

மணி பத்தைத் தாண்டினாலும், ரேகாவுக்குள் ஒரு புதிய ஆற்றல் பிறந்தது போல இருந்தது. வேகமாக அடுப்பைப் பற்றவைத்தாள்.

தனது கணவன் மிகவும் விரும்பி உண்ணும் மிளகு ரசம். சூடாக ஒரு உருளைக்கிழங்கு வறுவல்.
மணக்க மணக்க நெய் ஊற்றிய சாதம். எப்போதும் மித்ரன் சாய்ஸ் இது தான்.

அரை மணி நேரம் கடந்திருந்தது. மகனுக்கு அரணாக கட்டிலின் இரண்டு பக்கம் இருக்கும் இரண்டடி உயரத்தில் இருக்கும் சட்டங்களை இணைத்து லாக் பண்ணி விட்டு கதவை லேசாக திறந்து வைத்து கீழே வரும் போது சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.

தனது அம்மா பாட்டி இருக்கிறார்களா என்று ஒருமுறை ஹாலை சுற்றி பார்த்தவன் ஓய் என்றபடி சமையலறை வாசலில் வந்து நின்றான்.

கணவனின் சத்தம் கேட்கவும் மாமா யென திரும்ப, ராணுவ உடையில் இருந்து மாறி, ஒரு சாதாரண கைலிக்கும் சட்டையுக்கும் மாறியிருந்த தன்னவனைப் பார்க்கும்போதுதான், 'தன் கணவனாக' வீட்டிற்குள் வந்துவிட்டான் என்ற நிஜம் அவளுக்குள் முழுமையாக உறைத்தது.

"இவ்வளவு லேட் ஆகுதே இன்னும் காணுமேனு வந்தேன் டி, என்றவாறு உள்ளே வந்தவன் அங்கிருந்த கிச்சன் மேடையில் உட்கார, சமைத்ததை தட்டில் போட்டு கணவனின் முன்பு நீட்டினாள்".

அதுக்குள்ள இத்தனை ஐட்டமா?"

"உங்களுக்கு பிடிச்சது எதுவுமே இல்லாம நான் எப்படிச் சாப்பிட்டேன்னு எனக்குத்தான் தெரியும். இப்போ அமைதியா சாப்பிடுங்க" என்றாள்.

சரிங்க பொண்டாட்டி...

உங்க வார்த்தைக்கு அப்பில் ஏது என்றபடி முதல் கைப் பிடி சாதத்தை வாயில் வைத்ததும் கண்களை மூடியவன், ஆஹா... ஆஹா...."எல்லையில என்னதான் விதவிதமா சாப்பாடு கொடுத்தாலும், என் பொண்டாட்டி கை மணத்துக்கு எதுவும் ஈடாகாது " என்றான்.

மாமாஆஆஆ யென்றாலும் ரேகாவோ தன்னவன் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்

மீஞ்சூர்:

சில நாட்கள் கடந்திருக்க...

அரசு நிலத்தில் அமையவிருக்கும் அந்தப் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தான் என்பதால், ஊர் மக்களின் கூட்டத்தாலும் மேளதாளங்களாலும் களைகட்டியிருந்தது.

இத்தனை வருடத்தில் இந்த நாளுக்காக தானே காத்திருந்தனர் அங்குள்ள மக்கள்.அதனால் அந்த இடமே ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கமாகத் தெரிந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் சைரன் ஒலியுடன் போலீஸ் பாதுகாப்போடு காரும் வந்தது.

மாவட்ட ஆட்சியர் மிருதுளா, காரிலிருந்து இறங்கியதுமே ஒரு கம்பீரமான அமைதி அவளுடன் சேர்ந்தே வந்தது. கதர் புடவையில், நெற்றியில் சிறு திலகத்துடன், அதிகாரத்திற்கே உரிய நிதானத்தோடு மேடையை நோக்கி நடந்தவளை பார்த்தவர்கள் கையெடுத்து கும்பிட்டனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
650
அவளும் சிறு சிரிப்புடனே அவர்களை பார்த்து கை கூப்பியவாறு
அடிக்கல் நாட்டுவதற்காகத் தோண்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே மிருதுளா சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கே கிடந்த ஒரு சிறு பள்ளத்திலும், ஈரமான மண்ணிலும் அவளது கால் சறுக்கவும்,ஒரு நொடி நிலைதடுமாறியவள், நிலைமையைச் சமாளிக்க முயன்றும் அது முடியாமல் போகவும் பின்னோக்கிச் சாயத் தொடங்கினாள்.

சுற்றியிருந்த அதிகாரிகள் பதற்றத்தில் "மேடம்!" என்று அலறுவதற்குள், மின்னல் வேகத்தில் ஒரு கரங்கள் அவளைத் தாங்கிப் பிடித்தன.

ஒரு கையை அவளின் முதுகிலும், மற்றொரு கையை அவளின் தோளிலும் கொடுத்து, விழப்போன மிருதுளாவைத் தன் நெஞ்சோடு அணைத்தாற்போலத் தாங்கிப் பிடித்திருப்பவனை பார்க்க மற்றவர்களுக்கு தவறாக தெரியவில்லை.விக்ரமைப் பற்றி சுற்றுவட்டத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும் என்பதால் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர்.

விழப்போன பயத்தில் இருந்தவளின் மூடிய கண்கள் மெல்லத் திறந்தபோது, அவளுக்குத் தெரிந்தது விக்ரமின் தீர்க்கமான கண்கள் மட்டுமே. அந்த ஒரு நொடி, கலெக்டர் என்கிற அதிகாரம் மறைந்து, ஒரு சாதாரணப் பெண்ணின் தவிப்பும், தற்காக்கப்பட்ட நிம்மதியும் அவள் முகத்தில் மின்னியது. அவனது பிடியின் வலிமையில் ஒரு விவரிக்க முடியாத பாதுகாப்பு இருப்பதை மிருதுளாவும் உணர்ந்து கொண்டாள்.

விக்ரமின் பார்வையில் ஒரு அதிகாரி என்கிற மரியாதையைத் தாண்டி, "உனக்கு நான் இருக்கிறேன்" என்கிற ஆழமான அக்கறை அப்பட்டமாக தெரிந்தது. அவளது கண்கள் தன் கண்களைச் சந்தித்தபோது, அவன் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.

சுற்றிலும் இருந்த சத்தங்கள் அவர்கள் இருவருக்கும் அந்த நொடி கேட்கவில்லை. மண்ணின் வாசனையும், பதற்றமான மூச்சுக் காற்றும் மட்டுமே எஞ்சியிருக்கவும் மிருதுளா மெல்லத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவனிடமிருந்து விலகி நின்றாள்.

பின்னர் சுதாரித்தவளின் உதடுகளோ "நன்றி" என்று சொல்லத் துடித்தன, ஆனால் கண்கள் தான் ஏற்கனவே அவனிடம் அதைச் சொல்லிவிட்டிருந்தனவே.

விக்ரமும் மெல்லியத் தலையசைப்போடு தன் கைகளை விலக்கிக் கொண்டான், ஆனால் அவனது விரல்களில் இன்னும் அவளது கதர் புடவையின் சிலிர்ப்பு ஒட்டியிருந்ததை உணராமலில்லை.

மிருதுளாவைத் தாங்கிப் பிடித்த அந்த நொடிக்குப் பிறகு, விக்ரமின் மனநிலை ஒரு அமைதியான புயலுக்குப் பின் உருவான நிசப்தத்தைப் போல இருந்தது. அவனது உள்ளுக்குள் ஆயிரம் உணர்வுகள் மோதினாலும், வெளியே அவன் ஒரு பாறையைப் போல உறுதியாக நின்றான்.ஆனால் மனப்போராட்டமோ சொல்ல முடியாத சிலிர்ப்பை தந்துக் கொண்டிருந்தது.

கூட்டத்தில் ஒருவனாக தான் நின்றிருந்தான். ஆனால் அவள் காரிலிருந்து இறங்கிய நொடிகளிலிருந்து அவளை உன்னிப்பாக கவனிக்க மறக்கவில்லை. விழப்போகிறாள் என்று தெரிந்த நொடியே சுற்றத்தை மறந்தவன் புயலைப்போல வேகமாக வந்துவிட்டான். அவளைத் தாங்கிய போது அவனது கைகளில் உணர்ந்த அந்த மென்மை, அவனது முரட்டுத்தனமான வாழ்க்கையில் இதுவரை அறியாத ஒன்றல்லவா.

ஒரு மாவட்ட ஆட்சியர், இவ்வளவு அதிகாரமிக்க ஒரு பெண், தன் கைகளில் ஒரு பூவைப் போலச் சாய்ந்திருந்ததை அவனால் இன்னும் நம்பவே முடியவில்லை.

அவளது புடவையின் வாசனையும், அந்தப் பதற்றமான மூச்சும் அவனது சட்டையில் இன்னும் ஒட்டியிருப்பதாகவே இந்த நொடிகள் வரை உணரலானான்.

ஆனால் இன்னொரு மனமோ,
"அவள் ஒரு கலெக்டர், நான் ஒரு சாதாரண மனிதன்" என்கிற எதார்த்தம் அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது. அவளைத் தொட்டுத் தூக்கியது கடமை என்றாலும், அந்தத் தொடுதலில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று அவன் தன் மனதைக் கட்டுப்படுத்தினான். ஒருவேளை தான் பிடிமானம் கொடுத்ததில் அவளுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்பட்டிருக்குமோ என்கிற முதன் முதலாக லேசான பயமும் அவன் மனதின் ஓரத்தில் இருந்தது.

அந்தப் பார்வை தந்த தாக்கம்
மிருதுளா தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, விக்ரமை ஏறிட்டுப் பார்த்த அந்த ஒரு நொடிப் பார்வை இருக்கிறதே... அது அவனது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பார்வையில் அதிகாரம் இல்லை, வெறும் ஒரு பெண்ணின் நன்றியும், சிறு திகைப்பும் மட்டுமே இருந்தது. அந்தப் பார்வைக்காகத் தன் உயிரையே கொடுக்கலாம் என்கிற ஒரு விசித்திரமான எண்ணம் அவன் மனதில் மின்னல் வெட்டியது.

இப்படி ஒரு மின்னல் உண்டானதை உணர்ந்தவன் உடல் ஒரு நொடி ஆடிவிட்டது. இது தப்பு அவள் என்னோட நண்பனின் தங்கை. என்னோட வாழ்க்கையிலும் மனசிலையும் அகல்மதி மட்டும்தான் என்று சொல்லிக் கொண்டவனை பார்த்து மனசாட்சி சிரித்துக்கொண்டிருந்தது.
.

மீஞ்சூர்:

இன்று வெளியே இன்ஸ்பெக்சனுக்கும் போயிருந்ததால் வீட்டுக்கு வரவே மிருதுளாவிற்கு இரவு எட்டு மணி ஆகி இருந்தது.

வழக்கத்தை விட நேரமாகவும் மாலாவும் அவ்வப்போது வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது காரும் உள்ளே வருவதை பார்த்த பிறகு தான் அவருக்கு நிம்மதியாகவே இருந்தது.

சோர்ந்து போய் இறங்கி வரும் மகளைப் பார்த்தவர் எதுவும் சொல்லாமல் சிரித்த முகத்துடன் இருக்க அவளும் லேட் ஆயிடுச்சு ம்மா என்றவாறு உள்ளே போனாள்.

சரி குட்டிமா குளிச்சிட்டு வா டிபன் எடுத்து வைக்கிறேன் என்கவும் ஒரு பத்து நிமிஷம் என்றவாறு தனது ரூமிற்கு போனவள் ஹப்பாடா என்றபடி பெட்டில் படுத்து விட்டாள்.

அந்த மாவட்த்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்திற்கு தான் என்று இன்ஸ்பெக்சனுக்கு போக வேண்டி இருந்தது. தரைமட்டத்தில் இருந்து ரொம்ப உச்சியில் இருக்கும் மலை கிராமத்திற்கு காட்டு வழியாக தான் இரண்டு மணி நேரம் ஏறி செல்ல வேண்டும்.

அதன் காரணமாக அசதியாக இருக்க... சிறிது நிமிடங்கள் சென்று எழுந்து போய் குளித்து வந்த பிறகுதான் சோடையே நீங்கியது போல இருந்தது.

பின்னர் வெளியே வரவும் மாலாவும் மகளுக்கு டிபனை பரிமாறினாள்.

நீங்களும் வாங்கமா சாப்பிட என்க...இருக்கட்டும் நீ சாப்பிடு குட்டிமா என்றார்.

சாப்பிட்டு எழுந்தவள் சிறிது நேரம் டிவியில் அவளுக்கு பிடித்த பாடல் சேனலை பார்த்து விட்டு ரூமிற்கு போகவும், அங்கே துவைக்க போட்டிருந்த புடவையை பார்த்ததும் காலையில் நடந்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தது.

நல்லவேளை அந்த கடுவன் பூனை மாமா வீட்டுல கீழே விட்டானே அதேபோல விடாம காப்பாற்றினானே. .

இங்கேயும் அப்படியே விட்டு இருந்தால் மானம் காத்தில் பறந்து இருக்கும்.இன்னைக்கு மட்டும் பாதுகாக்க பிடிச்சிட்டு நின்றவன் அன்று மட்டும் ஏண்டா விட்ட என்று திட்டும் போது இரண்டாவது முறையாக இந்த மனுசன் காப்பாற்றி இருக்கிறாரே இதுவரைக்கும் ஒரு தேங்க்ஸ் கூட வாய் திறந்து நம்ப சொல்லல.

சரி பரவால்ல மூனாவது முறை காப்பாற்றும் போது சொல்லலாம் என்கும் போது அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அதோடு நிற்கவில்லை விக்ரமின் கரங்கள் இன்னும் தனது இடையில் இருப்பது போல தோன்றவும் அவளது உடலை தொடுவதற்கே அவளுக்கு கூச்சமாக இருந்தது.

அண்ணாஆஆஆ...நீ கையில கிடைக்கிற அன்னைக்கு உனக்கு இருக்கு மண்டபிடி.ஒரு வார்த்தை இந்த மனுஷன் தான் ஊர் பிரசிடென்ட் என்று சொன்னியா. அது போய் தொலையட்டும் பரத் அண்ணா நாளைக்கு தானே உனக்கு பிறந்தநாள் வரேன் உன்னை நேரில் வந்து கவனிச்சிக்கிறேன்.

பாப்பா நோபானு மட்டும் மூச்சிக்கு 300 முறை சொல்லுவியே நீயும் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லை தானே... இருக்கு உனக்கு என்றவாறு தூங்கலானாள்.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top