• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
121
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

✨படலம் - 6

ஆறு வயதுகூட
முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி.

அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ.. எத்தனை முறை நீ இங்க தனியா வரவே கூடாதுனு சொல்லி இருக்கேன்' என்ற ஆணின் குரல் கேட்டு சித்ரா திரும்பி பார்த்தாள்.

பார்க்க ஆறடி உயரத்தில், வைரம் பாஞ்ச தேகம் என்று சொல்லும் அளவுக்கு கட்டு மஸ்த்தான ஆள் ஒருவன் சித்ராவின் கண் எதிரே வந்து நிற்க்க,'கருப்பா' என்று ஓடிப்போய் சிறுமி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள... யார் இவர்கள் என்ற கேள்வி சித்ராவின் மனதில் தோன்றியது.

தன் எதிரே நிற்கும் ஆடவனை பார்த்த சித்ரா,'இந்த நேரத்துல உங்க குழந்தையை தனியா விட்டுட்டு நீங்க என்ன ஆழ்ந்த தூக்கத்துல இருந்திங்களா!?' என்று கேட்டாள்.

சித்ராவின் கேள்விக்கு பதில் தராத ஆடவன்,'தேனு... இங்கன எல்லாம் வர கூடாதுன்னு சொல்லிருக்கேனே!! ஏன் புள்ள இங்க வந்த!?' என்று கேட்டான்.

'கருப்பா... இவங்க தான் நம்ம தோப்பை வாங்க போறதா செல்வம் மாமா சொன்னாரு கருப்பா..அதான் இவங்ககிட்ட பேசி. என் அம்மா அப்பா கல்லறையை ஒன்னும் பண்ணாதீங்கன்னு சொல்ல வந்தேன் கருப்பா' என்றாள் சிறுமி தேன்மொழி @ தேன்.

இந்த பங்களாவை X Mla சம்பத்திடம் சித்ரா வாங்கியதை அறிந்திடாத சிறுமி சித்ராவை தவறுதலாக எண்ணி இருக்க. கருப்பன் என்கிற கருப்பசாமியும் கூட சித்ராவை சம்பத்தின் குடும்பம் தான் என்று நம்பினான்.

சித்ராவை அழுத்தமாக முறைத்த கருப்பன், 'தேனு... இவங்க எல்லாம் பணத்துலயே ஊறுன உயர் ரக ஊறுக்காய்ங்க. இவங்கள நம்ம சட்டப்படி தான் சமாளிக்கணும்' என்றவன் சிறுமி தேனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து அவன் தோப்பை நோக்கி நடந்தான்.

கருப்பன் தன்னை தவறுதலாக எண்ணி இருக்கின்றான் என்று அறிந்துக்கொண்ட சித்ரா அவர்கள் செல்லும் பாதையை உறுத்து பார்க்க,'மேடம்... அந்த குழந்தை தினமும் என்கிட்ட வந்து இதயே தான் மேடம் கேட்கும்'என்றான்.

'புரியல... என்ன கேப்பாங்க' என்று சித்ரா வினாவும் நேரம் அங்கே ஈஷாவும் வந்தவள்,'என்ன மேடம்!! என்ன பிரச்சனை!?' என்று கேட்டாள்.

'Nothing' என்ற சித்ரா...'நீங்க சொல்லுங்க. அந்த குழந்தைக்கு என்ன வேணுமாம்' என்று கேட்க,
'அதோ அந்த தோப்புல தான் மேடம் அந்த குழந்தையோட அப்பா அம்மா சமாதி இருக்கு' என்றான் வாட்ச் மேன் செல்வம்.

'என்ன அப்பா அம்மாவா... அப்போ அந்த Guy யாரு!?' என்று சித்ரா கருப்பனை பற்றி விசாரிக்க,
'அவரு பேர் கருப்பசாமி மேடம்' என்றவன் அவர்களின் குடும்ப கதையை சொல்ல ஆரம்பித்தான்.

கருப்பசாமிக்கு மூணு தம்பிங்க மேடம். இவரு அவங்கள நல்லா படிக்க வச்சாரு. ஆனா இரண்டாவது தம்பி பழனி சாமி பக்கத்து ஊருல வேற ஜாதி பொண்ண காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டாரு மேடம்.

ரெண்டு ஊரும் ரத்த கலவரமா மாறிப்போச்சி மேடம். கருப்பசாமி ஆளு முறுக்கமானவரா இருந்தாலும்,சட்டத்துக்கு கட்டுப்பட்டவறு.

அதனால கோர்ட்க்கு போய் அவங்க தம்பி கல்யாணத்தை சட்டபடி ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு மேடம்.

அவங்க தம்பிக்கு இதே தோப்புல சின்ன மாடி வீடு கட்டிக்கொடுத்து நல்லா வாழ வச்சாரு மேடம்.

மீதம் இருக்குற இரண்டு தம்பிங்களுக்கும் பிஸ்னஸ் பண்ண எல்லா உதவியும் பண்ணாரு மேடம்.

ஆனா பாருங்க. காதலிச்சி கல்யாணம் பண்ண அந்த பையனை பக்கத்து ஊர்க்காரங்க கண்டம் துண்டாம வெட்டிப் போட்டுட்டாங்க மேடம்.

அந்த பையன் பழனி சாமி சாகும் போது அவன் பொஞ்சாதி நிற மாச கர்பிணி மேடம்.
அந்த பொண்ணும் அதோட புருஷன் செத்த சோகத்துல இந்த தேன்மொழி குழந்தையை பெத்து போட்டுட்டு செத்து போச்சு மேடம்.

அந்த புள்ள இறந்த நாளுல இருந்து இந்த கருப்பசாமி தான் அந்த தேனு பாப்பாவை அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா வளர்த்துக்கிட்டு இருக்காரு மேடம்.

அதோ அந்த தோப்புல தான் தேன்னோட அம்மா அப்பா சமாதி கூட இருக்கு மேடம்.
ஆனா பாருங்க. அந்த கருப்பசாமியோட மீதம் இருக்குற ரெண்டு தம்பிங்க இந்த தோப்பை X. Mla சம்பத்க்கு விற்க முன் பணம் வாங்கிட்டாங்க மேடம்.

இந்த வார கடைசியில அந்த தோப்புல இருக்குற பனை மரத்தை எல்லாம் வெட்டிட்டு அங்க அந்த சம்பத் ஐயா UD Complex கட்ட போறாரு மேடம்' என்று தனக்கு தெரிந்த கதையை வாட்ச் மேன் செல்வம் சொல்லி முடித்தார்.

மொத்த கதையையும் கேட்டு தெரிந்துகொண்ட சித்ரா,'ம்... நாளையில இருந்து நீங்க பகல் டூட்டி வந்தா போதும்' என்று செல்வத்திடம் சொல்ல.
'மேடம் அப்போ நைட்டுக்கு!?' என்று இழுத்தான் செல்வம்.

செல்வாவின் கேள்விக்கு சித்ரா பதில் தராமல் ஈஷாவை பார்த்தப்படி பங்களாக்குள் சென்று இருக்க,'அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் செல்வம். நீங்க பகல் டூட்டி பார்த்தா போதும். ஆனா உங்களுக்கு முழு சம்பளம் வந்துடும்' என்றவள் அவளும் சித்ராவை தொடர்ந்து உள்ளே சென்றாள்.

'நைட்ல தான் ஒரு வீட்டுக்கு வாட்ச் மேன் தேவை. இவங்க என்ன நைட்ல நம்ம வேலை பார்க்க வேணான்னு சொல்லுறாங்க.' என்று தனக்குள் புலம்பியவனுக்கு சித்ராவின் செயல்கள் புரியாத புதிராக தான் இருந்தது.

சித்ரா அவள் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருந்தவளின் கண்கள் எதிரே இருக்கும் தோப்பின் மீது பதிந்து இருக்க, 'பாவம் தான் மேடம் அந்த குழந்தை' என்றாள் ஈஷா.

'ம்... பாவம் தான். ஒரு பக்கம் பணம். இன்னோரு பக்கம் ஜாதி வெறி. இன்னோரு பக்கம் கூட பிறந்த ரத்தமே சொத்துக்காக அடுத்தவரின் உயிரை வாங்கும் அவலம்ன்னு இங்க எல்லாமே பாவமான செயல் தான் நடக்குது' என்று சித்ரா சொல்ல. அவளின் வார்த்தையில் உள்ள வலியை ஈஷா புரிந்து இருந்தாலும் அதன் விவரம் அவளும் அறிந்துகிருக்க வாய்ப்பில்லாமல் போனது.

சித்ரா மீண்டும் அமைதியாக அதே இடத்தில் நின்று இருக்க,
'மேடம் நாளைக்கு நைட் அந்த கலா கதையை முடிக்கணும்னு அவளுக்கு time Fix பண்ணி இருந்திங்க' என்றாள் ஈஷா.

ஈஷாவின் வார்த்தையைக் கேட்டு,'ம்...' என்ற சித்ரா அவள் கையில் இருந்த கடிகாரத்தை இணைய தளத்தில் இணைத்து அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவள்,'டெலீட்' என்ற பட்டனை அழுத்த. அந்த படம் அவள் கைக் கடிகாரத்தில் இருந்து மறைந்து போனது.

'ஆனா மேடம்... நம்ம இந்த ஊருல இருக்கோம். கலா இப்போ இருக்குறது துபாய்ல... அவள அங்க வச்சி நம்மனால ஒன்னுமே பண்ண முடியாது மேடம்' என்றாள் ஈஷா.

அவள் சொல்லை கேட்டு,' கலா இந்தியால லேண்ட் ஆகி two hrs ஆச்சு' என்று சிறு நகைப்புடன் சித்ரா சொல்ல, ஈஷாவின் கண்களில் ஆச்சிரியம் மிளிர்ந்தது.

'மேடம்... அப்போ நாளைக்கு நைட்'என்று... ஈஷா கேட்க,'எந்த மாற்றமும் இல்ல. சம்பவம் உறுதி தான். நீ போய் படு' என்று சித்ரா சொன்னதும்,'GOOD NIGHT மேடம்' என்ற ஈஷா சித்ராவின் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
121
இரவு பத்து மணியை கடந்து இருக்க, முல்லை அவள் அறையில் அதீத கோபத்துடன் குட்டி போட்ட பூனையை போல நடந்துக்கொண்டு இருந்தவள் சித்ராவின் மீது உள்ள மொத்த கோவத்தையும் அவள் விரல்களில் வளர்ந்து இருக்கும் நெகத்தின் மீது தான் காட்டினாள்.

'அக்கா... இப்போ ஏன் நீ இவ்ளோ கோவமா இருக்க' என்று கந்தன் முல்லையின் அறைக்கு வந்தவன் தன் அக்காவின் செயலில் குழப்பம் அடைந்தவனாக கேட்க, அவனையும் அதே கோவத்தோடு முறைத்து வைத்தாள் முல்லை.

'என்ன அக்கா... கேள்வி கேட்டா ஏன் முறைக்கிற... ஆமா இன்னைக்கு வந்த அந்த ரவுடி பையன் யாரு அக்கா' என்று கந்தன் கதிரை பற்றி விசாரிக்க,
'டேய் யாரை பார்த்து ரவுடின்னு சொன்ன' என்ற முல்லை கோவத்தில் கந்தனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து இருந்தாள்.

'அவனை சொன்னா நீ என்னை அடிப்பியா... அப்போ நல்லா கேட்டுக்கோ. அவன் ரவுடி மட்டும் இல்ல. அவன் சரியான பொறு...' என்று கந்தன் வார்த்தையை முடிக்கும் முன்னே முல்லை அருகே இருந்த ஜாடியை தூக்கிக்கொண்டு அவனை அடிக்க வந்தாள்.

'ஐயோ அண்ணா... இந்த அக்காவை பாரு என்னை அடிக்க வருது' என்று கந்தன் முல்லையிடம் இருந்து தப்பித்து அந்த அறையில் இருந்து கத்திக்கொண்டே வெளியே ஓடி வர...'டேய் என்னடா ஆச்சு' என்று பதற்றதுடன் மாறன் அங்கே வந்தான்.

'அண்ணா அண்ணா... அக்கா என்னை அடிக்க வராங்க' என்ற கந்தன், மாறனின் பின்னே ஓடிப்போய் ஒளிந்துக்கொள்ள,'டேய் ஒழுங்கா இந்த பக்கம் வாடா' என்று கந்தனை கோவமாக அழைத்தாள் முல்லை.

தன் தங்கையின் கோவத்தையும்,அவள் கையில் இருந்த ஜாடியையும் பார்த்த மாறன்,'என்னாச்சு... மறுபடியும் நீங்க சண்ட போட ஆரம்பிச்சிட்டீங்களா' என்று கேட்க, அதே தருணம் ஈஷா அவள் அறையில் இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

'என்னாச்சு... இங்க என்ன பிரச்சனை' என்ற ஈஷா முல்லை நின்ற கோலத்தை பார்த்து,'என்னாச்சு மாறா' என்று கேட்க,'அந்த ரவுடி பையலை பற்றி பேசினதால என் அக்கா என்னை அடிக்க வராங்க' என்றான் கந்தன்.

'டேய்... மறுபடியும் மறுபடியும் கதிரை நீ ரவுடின்னு சொன்ன... மவனே உன் வாயை நான் அடிச்சு உடைத்துடுவேன்' என்ற முல்லை, மீண்டும் கந்தனை அடிக்க விரட்டிக்கொண்டு செல்ல... அவனோ 'ஐயோ காப்பாத்துங்க' என்று அந்த இடமே அதிரும்ப்படி கத்தினான்.

'பாப்பா! என்ன நீ... யாரோ ஒருவனை ரவுடின்னு சொன்னதுக்கா நீ நம்ம தம்பிகிட்ட சண்டைக்கு வருவ?' என்று மாறன் கேட்க,

'கதிர் ஒன்னும் யாரோ ஒருவன் இல்ல. அவரு என்னோட' என்று முல்லை அவள் மனதில் உள்ளதை சொல்லும் முன்னே,
' ஈஷா...' என மாடியில் இருந்து சித்ரா கர்ஜித்த குரல் ஒலித்தது.

'ஐயோ மேடம் வேற கூப்பிடுறாங்க. pls எல்லோரும் போய் படுங்க' என்று ஈஷா சொல்ல...
'உங்க மேடம் கூப்பிட்டா நீங்க போங்க. அதுக்கு நாங்க ஏன் போய் தூங்கணும்' என்று கடுப்பாக கேட்டாள் முல்லை.

கீழ் தளத்தில் நடக்கும் செயல்கள் அனைத்தையும் மாடியில் அவள் அறையில் அமர்ந்தப்படி CCTVயில் பார்த்து இருந்த சித்ரா, முல்லையின் பேச்சில் முகம் மாறியவள் வேகமாக அவள் அறையில் இருந்து வெளியே வந்து மாடியில் இருந்தப்படியே கீழே இருப்பவர்களை பார்த்து முறைத்தாள்.

'அக்கா அக்கா CR மேடம் மேல இருந்து உன்ன தான் பாக்குறாங்க' என்று கந்தன் சொல்ல...'பார்க்கல டா... முறைக்கிறாங்க' என்றான் மாறன்.

'மேடம்... ஒண்ணுமில்ல மேடம்... இவங்க ஏதோ சும்மா ஜாலியா பேசிகிட்டு இருக்காங்க' என்று ஈஷா சொல்ல.
'இவங்க மூணு பேருக்கும் நாளைக்கு காலேஜேஸ் ஸ்கூல் இருக்கு தானே,Ask them to go and sleep with time' என்றாள் சித்ரா.

சித்ராவின் வார்த்தைக்கு மரியாதை தரும் விதமாக,'பாப்பா போய் படு. காலையில பேசிக்கலாம்' என்று மாறன் முல்லையின் காதில் சொல்ல,

'நீ என்ன!? இவங்களுக்கு இப்படி பயப்புடுற' என்ற முல்லை ஓர கண்ணால் மாடியில் நின்று அவளையே முறைத்து பார்க்கும் சித்ராவை பதிலுக்கு இவளும் முறைத்து வைத்தாள்.

'மாறன்... உங்க சிஸ்டரை உள்ள போக சொல்லுங்க' என்று ஈஷா சொல்ல,அப்போதும் முல்லை உள்ளே போகாமல் சித்ராவை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

'உன் தங்கச்சிக்கு தலையில அடிப்பட்டதால மண்டைக்குள்ள எதாவது பிரச்சனை ஆகிடுது போல.நான் வேணும்னா வேற விதமா வைத்தியம் பார்க்க ஏற்பாடு பண்ணட்டா!?' என்று சித்ரா கேட்க,

'அக்கா உன்னை அவங்க பைத்தியமுன்னு சொல்லுறாங்க' என்ற கந்தன் வாயிவிட்டு சத்தமாக சிரித்து இருந்தான்.

கந்தனின் வார்த்தையில் மாறனும் ஈஷாவும் சட்டென்று சிரித்து விட,'என்னை பார்த்தா உங்களுக்கு எல்லாம் லூசு போல தெரியுதா. இருங்க இருங்க காலையில முதல் வேலையா நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வைக்கிறேன்'என்ற முல்லை கோவமாக அவள் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

முல்லையின் அர்த்தமில்லாத கோவத்தை பார்த்த ஈஷா,'மேடம்... இங்க நான் பார்த்துக்குறேன்' என்றதும் சித்ரா முல்லையின் அறையை முறைத்த வண்ணமாக தன் அறைக்குள் நுழைந்து அவள் வேலைகளில் கவனத்தை செலுத்த தொடங்கினாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் விநாயகத்தின் வீட்டு மொட்டை மாடியில்,கையில் மது கோப்பையுடன் நின்று இருந்த கதிர் மூக்கு முட்ட குடித்து இருந்தவன்,'அவ என் மேலையே கைவச்சிட்டா டா வெங்கி' என்று தன் பெரியம்மா பையனிடம் புலம்பிக்கொண்டு இருந்தான்.

'டேய் டேய் இப்போ ஏன் டா இப்படி புலம்புற' என்று வெங்கடேஷ் கேட்க, அதே சமயம் மீனா மாடிக்கு வந்தவள், 'கோவம் நாய் பேய்க்கு கூட தான் வரும்' என்றாள்

'இந்தாடி மீன்னு... ஒழுங்கா கீழ இறங்கி ஓடிடு. இல்ல நான் இருக்குற கோவத்துக்கு உன்னை எண்ணெய் இல்லாம பொரித்து தின்னுடுவேன் சொல்லிட்டேன்' என்று கோவமாக சொன்னான் கதிர்

'அட ஏன் கதிர் மாமா என்கிட்ட கோவப்படுற!! நான் உண்மையை தானே சொன்னேன். ஆமா... என்ன உன் தோழன் உதயாவுக்கு அடி பலம் போல' என்று நகைப்புடன் கேட்டாள் மீனா

'என்னடி... நீ என்ன பெரிய புலன் விசாரணை பெண் புலியா' என்று கதிர் கேட்க .

'நான் புலியா பூனையான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இதனால் வரை சிங்கம் சிங்கமுன்னு சுத்திகிட்டு இருந்த உன்னை ஒருத்தி பங்கம் பண்ணி இருக்கா பாரு IAM SO ஹாப்பி' என்றாள் மீனா

காலையில் இருந்து சித்ரா மீது அதீத கோவத்தில் இருந்த கதிருக்கு இப்போது மீனாவின் கிண்டல் பேச்சு அவனை மீண்டும் சூடேற்றி பார்க்க, இறுதியாக கையில் இருந்த மது பான கோப்பையை கீழே தூக்கி அடித்தவன்,அதே வேகத்தில் மீனாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து இருந்தான் .

இவர்களுக்குள் இது சகஜம் என்றாலும், இந்த இடத்தில் கதிர் மீனாவை அறைந்ததற்கு காரணம் சித்ராவாக தான் இருந்தது .

கதிர் கோவத்தில் அறைந்தாலும் அவனுக்கு மீனா மீது பாசம் இருந்த காரணத்தால் தன்னை தானே சமாதானம் செய்துகொண்டவன்,'இங்க பாரு... மறுபடியும் என்கிட்ட இப்படி எல்லாம் பேசுற வேலை வச்சிக்காத' என்று அவளை கண்டித்தான்.

கதிரின் பேச்சைக்கேட்டு மீனா வாய் விட்டு சிரித்தவள், 'என்னை அடிச்சிட்டா நீ வீரனா ஆகிடுவியா கதிர்!?' என்று கேட்க,

'மறுபடியும் அரை வாங்குறதுக்குள்ள இங்க இருந்து ஓடிடு சொல்லிட்டேன்' என்றான் கதிர்.

' ஹாங் போறேன் போறேன்... ஆனா இதுவரை பொண்ணுங்கன்னா எப்படி இருக்கணும்னு நீ தானே முடிவு பண்ணிருக்க...பட் எனக்கு என்னமோ இனி யாரோ ஒரு பொண்ணு ஆட்டி வைக்குற மாதிரி தான் நீ இனி ஆட போறன்னு தோணுது' என்றாள் மீனா.

'ஏய்...என்னடி..பேச்சு எல்லாம் எல்லை மீறுது... இரு இரு உன்னை பெரியம்மாக்கிட்ட சொல்லி சீக்கிரமா எவனுக்காவது கல்யாணம் பண்ணி வீட்டோட கட்டி வைக்க சொல்லுறேன்' என்றான் கதிர்.

'போடா குடி காரா... உனக்கு வேணும்னா நீ யாராவது ஒரு புள்ளபூச்சியை கல்யாணம் பண்ணி வீட்டோட கட்டிபோட்டு வை ' என்ற மீனா வெங்கட்டை பார்த்து முறைத்த வண்ணம் அங்கிருந்து சென்று இருந்தாள்.

கதிரின் கோவத்தை கண்டு அமைதியான சுபாவம் கொண்ட வெங்கட் சற்று பயந்தவன், 'டேய் தம்பி...என்னடா உன் வருங்கால அண்ணியை கை நீட்டி அடிச்சிட்ட' என்று கேட்க,
சற்றும் தாமதிக்காமல் கதிரின் கரங்கள் வெங்கட்டின் கன்னத்தையும் பதம் பார்த்தது.

'என்னடா பேசிகிட்டு இருக்கும் போது அடிக்கிற?' என்று வெங்கட் கேட்க,
'உனக்கு எத்தனை முறை சொல்லுறது. மீனாவை உன் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க' என்றான் கதிர்.

'டேய்... ஆனா நான் மீனாவை தான் டா காதலிக்கிறேன்' என்று வெங்கட் சொல்ல,
'பெரியம்மா நமக்கு கோடிஸ்வர வீட்டு பெண்ணை தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க' என்ற கதிரை அழுத்தமாக பார்த்தான் வெங்கட்.

'என்ன அப்படி பாக்குற' என்று கதிர் கேட்க,
'ஒ... அப்போ என் அம்மா யாரை சொன்னாலும் நீ அவங்கள கல்யாணம் பண்ணிப்பியா' என்று கேட்டான் வெங்கட்.

'ஆமா... அவங்க சொன்னா பண்ணி தானே ஆகணும்' என்று கதிர் சொல்ல...
வேகமாக வெங்கட் கதிரின் walletட்டை எடுத்தவன்,அதில் அவன் மறைத்து வைத்து இருந்த சின்ன புகைப்படத்தை எடுத்து கதிரின் முன்னே நீட்டினான்.

இந்த நொடி வரை சித்ராவால் கோவத்தின் உச்சியில் இருந்த கதிரின் கண்கள் அந்த புகைப்படத்தை பார்த்து கனிவாக மாறி இருக்க... அவன் இதழ் ஓரத்தில் புன்னகை மலர்ந்து,'முல்ல டா... என் ரத்தின முல்ல டா' என்றவன் அந்த புகைப்படத்தை பார்த்தப்படியே அவன் அறைக்குள் சென்று தன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

கதிர் அவன் கையில் இருந்த படத்தை உற்று பார்த்தவன். அதில் கதிரும் முல்லையும் ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்று அந்த கோப்பையை ஜோடியாக கையில் ஏந்தி இருக்கும் காட்சி தெரிந்தது.

அந்த படத்தை மேலும் உற்று பார்த்தவன்,
அவள் வதனத்தில் தன் விரல்க்கொண்டு வருடியவன், 'அழகி டி நீ' என்றவன் தன்னிலை மறந்து அவள் புகைப்படத்துக்கு முத்தம் கொடுக்க... தன் தங்கை மகனின் செயலை தூரத்தில் இருந்து சாமுண்டிஸ்வரியின் கண்கள் படம் எடுத்துக்கொண்டு இருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் VCR பங்களாவில் தங்கி இருக்கும் முல்லைக்கு அழுகை முட்டிக்கொண்டு வர...
வேகமாக அவள் கைப்பையில் இருந்து முருகன் பார்வதி புகைப்படத்தை எடுத்து,'எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல' என்று புலம்பினாள்.

நீண்ட நேரம் தன் மனகுமறளை கொட்டி தீர்த்தவள், அந்த படத்தின் பின்னே அவள் மறைத்து வைத்து இருந்த கதிரின் புகைப்படத்தை எடுத்து,'அன்னைக்கு என்னமோ உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் இந்த கதிர் வேலன் உனக்கு உதவ ஓடி வருவான்னு சொன்னிங்க. ஆனா இப்போ என்ன!! இந்த ராங்கி பேச்சை கேட்டு என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டீங்க' என்ற முல்லையின் மனதில் கதிர்வேலன் எப்படி இடம் பிடித்தான் என்பதை அடுத்த பகுதியில்
வாசிப்போம்.

- தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top