• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி-4

“ஹலோ! சொல்லு அண்ணா?” என தயக்கத்துடன் ஜீவானந்தத்திடம் பேசும் கதிர்வேலனை அஞ்சன விழிகளால் பார்த்துக்கொண்டு இருந்தாள் முல்லை.
'தேங்க்ஸ்டா கதிரு, ரெண்டு வருஷம் கடந்து என் முல்லையை நான் இன்னைக்கு தான் பார்த்தேன். ஆனா பாரு அவகிட்ட சேர்ந்த மாதிரி பத்து நிமிஷம் கூட பேச முடியல. ஆனா பரவாயில்லடா, நான் தந்ததா சொல்லி அவளுக்கு நீ எதாவது வாங்கி கொடுத்தப்பாரு அதுக்கே அவ சந்தோசமா இருப்பாள்' என ஜீவானந்தம் சொன்னதும்,
“ஆமா... நீ கொடுத்ததா சொன்ன...தால தான் நான் கொடுத்த பூவை வாங்கிக்....கிட்டா” என்ற கதிர்வேலனின் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து கோர்வையாக வர மறுத்தது.
'நல்ல வேலை பண்ண டா! சரி நீ முல்லையை பஸ் ஏத்திவிட்டுட்டு நேராக எம்ஸ் காலேஜ்க்கு வந்துடு' என ஜீவானந்தம் சொன்னதும்,
'ம்...' என்றப்படி அலைபேசியை துண்டித்த கதிர்வேலன் அதை முல்லையிடம் கொடுத்தார்.
கைபேசியை தன்வசம் வாங்கிக்கொண்ட முல்லை,'மாமா சார்... நான் கிளம்புறேங்க'என்றவள் பேருந்தை நோக்கி நடந்து சென்றாள்.
அன்னம்போல் நிலத்தோடு இசைவாய் சென்ற அவளின் நடையின் அழகு, கதிர்வேலனின் மனதை மயங்கச் செய்ய,
'ஹேய் ரவா லட்டு...'என்று தன்னையும் மீறி முல்லையை அழைத்தார்.
'ஹையையோ கூப்பிடுறாரே! பயத்தை முகத்துல காட்டாத முல்லை'என தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்ட முல்லை,
'என்னங்க மாமா சார்' என பேருந்து படிக்கட்டில் நின்றப்படி தலையை மட்டும் திருப்பி கேட்டாள்.
'ஏன்? கிட்ட வந்து என்னனு கேட்டா இவளோட மெல்லிடை மேலும் மெலிஞ்சிடுமா' என அவளின் கொடியிடையை தன்னை மீறி ரசித்ததவறாக,
'கம் ஹேர்!' என்று முல்லையை
மீண்டும் தன் அருகே அழைத்தார் கதிர்வேலன்.
பேருந்தில் இருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தவள்,
'என்னங்க மாமா சார்… ஜீவானந்தம் மாமா எதாவது கொடுக்கச் சொல்லியிருந்தாரா!? நீங்க மறந்துட்டீகளா?' என்று மெதுவாகச் சிரித்தபடி கேட்டாள் முல்லை.
அவளின் சிரிப்பை பொய்யாக்கும் விதமாக தலை ஆட்டியபடியே,
'ஆமாம்… உன் தலையில ஒரு குட்டு கொடுக்கச் சொல்லிருந்தாரு…
அதைத்தான் மறந்துட்டேன்'என்றார் கதிர்வேலன்.
'மாமா அப்படியெல்லாம் சொல்ல மாட்டாக..." என்ற முல்லையின் குரல் தொய்ந்து அவள் கண்களில் நிறைந்திருந்த தண்ணீர்க் கண்ணாடி, மெதுவாக உடைந்து கண்ணீர் குன்றாத உணர்வுகளோடு கசிந்தது.
முல்லையின் கண்ணீரை பார்த்து, 'இந்தா... இப்போ ஏன் கண்ண கசக்குறவ, அண்ணா அதெல்லாம் ஏதும் சொல்லல' என கதிர் வேலன் உண்மை சொன்னதோடு மட்டும் இல்லாமல் முல்லையின் கண்ணீரை துடைக்க தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினார்.
கதிர்வேலனின் கையில் இருந்த வெள்ளை நிற கைகுட்டையை பெற்றுக்கொண்ட முல்லை,'அப்போ பொய் சொன்னிகளா!' என கேட்டவளின் நுனி மூக்கு ரத்த சிவப்பாக மாறி இருந்தது.
முல்லையின் கேள்விக்கு,'ம்...' என கதிர்வேலன் கண்களை மூடி திறக்க,
'ஏன் பொய் சொன்னிக!?' என கேட்ட முல்லை கைக்குட்டையில் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் கதிர்வேலனிடமே அதை கொடுத்தாள்.
'ம்... உண்மையை சொன்னால் மட்டும் நீ என்ன பண்ண போற!' என எதிர் கேள்வியை கேட்டுக்கொண்டே, முல்லையின் கண்ணீரை உள்வாங்கிகொண்ட பருத்தி துணியை மடித்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் கதிர்வேலன்.
'என்ன உண்மை, ஆமா நீங்க ஏன் என்னை கூப்பிட்டீக!?' என முல்லை கேக்க,
'ம்... உன்னை ட்ராப் பண்ணதுக்கு காசு கேக்க தான்' என்றார் கதிர்வேலன்.
'என்ன காசா!' என அவள் மிருண்டு விழிக்க,
'பின்ன... சும்மாவா உன்னை இவ்ளோ தூரம் அழைச்சிட்டு வருவாங்க!?'என்ற கதிர்வேலன்,
முல்லையின் முன்னே கையை நீட்டிக்கொண்டு,
'சீக்கிரமா காசை கொடு' என்றார்.
'ஏன் மாமா சார்... நான் உங்க அத்தை பொண்ணு தானே! என்கிட்ட கூட காசு தான் கேப்பிகளா?' என முல்லை தைரியமாக கதிர்வேலனின் முகத்தை பார்த்து கேள்வி கேட்டாள்.
'என் அத்தையா! இருந்தாலும் கூட காசு கேப்பேன்'என கதிர்வேலன் மீண்டும் முல்லையிடம் கையை நீட்ட,
தன் பையில் இருந்து பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள் முல்லை.
பணத்தை வாங்காமல் முல்லையை கேள்வியாக பார்த்து,'எவ்ளோ இருக்கு?' என கதிர்வேலன் கேக்க,
'நூறு ரூபாய்' என்றாள் முல்லை.
'அது உன்னை அழைச்சிட்டு வந்து விட்டதுக்கு, இப்போ நான் திரும்பி போக யாரு பணம் தருவாங்க'என கதிர்வேலன் கேக்க,
'ஓ... அப்போ உங்களுக்கு 200rs. வேணுமா, இப்போ தான் எனக்கு நீங்க ஏன் பணம் கேக்குறீகனு புரியுது' என்றவளின் முகத்தில் ஒரு அருவருப்பு தெரிந்தது.
முல்லையின் முக மாற்றத்தை பார்த்து,'என்ன புரியுது!?' என கதிர்வேலன் கேக்க,
'மாமா சார்...நீங்க இப்படியே குடிச்சிகிட்டு இருந்தால் மீனாவை கஸ்தூரி சித்தி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாக' என்றவள், கதிர்வேலன் தன்னிடம் பணம் கேப்பதே குடிக்க தான் என்று தவறாக எண்ணிக்கொண்டாள்.
'என் கல்யாணத்தை பற்றிய கவலை உனக்கு வேண்டாம்,நீ முதல்ல பணத்தை எடு' என்று கதிர்வேலன் கேக்க,
ரூபாய் 200யை எடுத்து கதிர்வேலனிடம் கொடுத்தாள் முல்லை.
'ம்... இப்போ கிளம்பு, போனதும் அண்ணனுக்கு போன் பண்ணி பேசு' என்ற கதிர்வேலனிடம் சம்மதமாக தலையாட்டியவள் வேகமாக பேருந்தில் ஏறி ஜன்னல் அருகே அமர்ந்து கதிர்வேலனை பார்த்து கையெசைத்து விடைபெற்றாள் முல்லை.
தன்னை கடந்து செல்லும் முல்லை பயணிக்கும் பேருந்தை பார்த்த கதிர்வேலன் பெருமுச்சுடன் தன் புல்லட்டில் ஜீவானந்தம் வர சொன்ன காலேஜை நோக்கி பயணித்தார்.

********************
முல்லையை சிவகங்கை பேருந்தில் கதிர்வேலன் ஏற்றி விட்டதை பார்த்த பார்வதியின் தம்பி கேசவனுக்கு, குன்னக்குடி பேருந்து நிலையத்தில் பழ கடை வைத்து இருக்கும் வியாபாரி ஒருவர்,முல்லையை குன்னக்குடியில் பார்த்த காட்சியை தகவலாக தெரிவித்து இருந்தார்.
முல்லையின் தந்தை முருகனின் கட்டளைக்கு அடிப்பணிந்து பாண்டியன் குடும்பத்தோடு தன் மகளும் ஒட்டுதல் இல்லாமல் தான் இருக்கிறாள் என்று எண்ணிய முருகனுக்கு கேசவனின் மூலம் கிடைத்த தகவல் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'என்ன மாப்புள சொல்றிங்க,என் மவ முல்லையை குன்னக்குடி பார்த்தாங்களா?' என சிவகங்கையில் வசிக்கும் முருகன் கோபத்துடன் கேட்டார்.
'இதுக்கு தான் பொட்ட பிள்ளைக்கு படிப்பு எல்லாம் வேண்டாம், அவ பெரிய மனுஷி ஆனதுமே என் தம்பிக்கு கட்டிக்கொடுங்கன்னு நான் தலைபாடா அடிச்சிகிட்டேன்' என்றார் முல்லையின் சித்தி பார்வதி.
தன்னையும் தன் மகளையும் பிரிக்க பாண்டியன் தான் ஏதோ சதீத்திட்டம் தீட்டுகிறார் என்று எண்ணிய முருகனுக்கு ஆத்திரம் புத்தியை இழக்க செய்தது.
'இன்னைக்கு அவ வரட்டும், நீங்க சொல்றது மட்டும் உண்மையா இருந்தால் என் மகள் காலை உடைத்து நானே அவளை பூமிக்குள்ள புதைச்சுடுறேன்' என முருகன் கோவத்தோடு கொந்தளித்தவருக்கு தெரியவில்லை முருகனின் கோவம் தான் அவரை தன் மகளிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க போகிறது என்று.
'இந்தாங்க... அவசரப்பட்டு முல்லைகிட்ட கோவப்படாதிங்க, ஏன்னா உங்க பொண்ணு மேஜர், முல்லையை நீங்க கண்டிக்க போய்! கடைசியா அவ சொல்லாம அந்த பாண்டியன் வீட்டுல போய் தங்கிட போகிறாள்'என பார்வதி சொல்ல,
முருகனும் எப்போதும் போலவே இயல்பாக இருந்துகொண்டவர் மனதில் மட்டும், பாண்டியன் மீது கொண்டுள்ள பகையிணர்வு அதிகமாகி இருக்க, அந்த சூட்டோடு முருகன் சில அவசர முடிவுகளை எடுத்தார்.

****************
புல்லட்டில் இருந்து இறங்கிய கதிர்வேலன் காலேஜ் வளாகத்திற்குள் நுழைய, அவரை தூரத்தில் இருந்து பார்த்த அவரின் அண்ணன் ஜீவானந்தம்,'என்னடா என்ன காரியம் பண்ணி வச்சிருக்க!?'என கேட்டுக்கொண்டே தன் தம்பியை நோக்கி கேள்வியை எழுப்பினார்.
'என்னாச்சு! உயிரோட தானே இருக்கான்!' என கேக்கும் கதிர்வேலனுக்கு தன் அண்ணனின் கோவம் எதனால் என்று தெரிந்து தான் இருந்தது.
'உயிர் மட்டும் தான் கதிரு இருக்கு, உனக்கு ஏன் இந்த வேலை! அவனை போலீஸ்ல சொன்னால் அவங்க பார்த்துக்க போறாங்க' என்ற ஜீவானந்தத்தின் முகத்தில் பதற்றம் நிறைந்து இருந்தது.
'போலீஸ் எல்லாம் சரியா வராது அண்ணா... காரணம்! அவன் அப்பா பெரிய ஆளு. அதான் நானே என்ன பண்ணணுமோ அதை பண்ணிட்டேன்' என்ற கதிர்வேலன் தன் சட்டை காலரை ஒரு கையால் தூக்கி விட்டப்படி ஜீவானந்தத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தப்படி பதில் அளித்தார்.
'நீ பண்ண வேலையின்னால அப்பா தான் நாளைக்கு பஞ்சாயத்துல கைகட்டி நிக்கணும் கதிர்' என ஜீவானந்தம் சொல்ல,
'அவசியம் இல்லை அண்ணா... யாரும் என் மேல புகார் தர மாட்டாங்க' என்று நம்பிக்கையோடு சொன்னார் கதிர்வேலன்.
அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இவர்களை பெற்ற தந்தை பாண்டியன் நேரே கதிரின் அருகே கோவத்தோடு வந்து நின்றார்.

தன் தந்தையின் கோவம் மொத்தமும் கதிர்வேலன் மீது தான் என்று அறிந்துருந்த ஜீவானந்தம்,'அப்பா... நான் பேசிட்டேன். நீங்க தம்பியை திட்டாதீங்க' என்று தன் உடன் பிறப்புக்கு தோள் கொடுத்தார்.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
'நீ அமைதியா இரு ஆனந்த்! ஏன்டா... குடிச்சிட்டு எவனையாவது அடிச்சு பிரச்சனை பண்ணுறது தான் உன் வேலையா!?' என பாண்டியன் கோவமாக கேட்டதும்,
'ஹையோ... நான் குடிச்சிட்டு அடித்து இருந்தால் இந்நேரம் ஸ்ரீனு பரலோகத்தில் தான் இருந்து இருப்பான்' என்றார் கதிர்வேலன்.
'பண்றதை பண்ணிட்டு என்னிடமே மரியாதை இல்லாமல் பேசுறியா!'
என காலேஜ் வளாகம் என்றும் பாராமல் பாண்டியன் தன் இளைய மகனை அடிக்க கையை ஓங்கியதும்,
'அப்பா... தப்பு ஸ்ரீனி மேல தான் அப்பா' என்று ஜீவானந்தம் சொல்லை முடிக்கும் முன்னே பாண்டியன் கதிர்வேலன் கன்னத்தில் அடித்து இருந்தார்.
'தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை கை நீட்டாக்கூடாதுனு உங்களுக்கு தெரியாதா!?' என ஜீவானந்தம் தன் தந்தையை எதிர்த்து கதிர்வேலன் பக்கம் நின்று பேச,
'விடு அண்ணா... தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை தோழனாய் நினைக்கிறாரு நம்ம அப்பா' என்ற கதிர்வேலனுக்கு பாண்டியனிடம் இருந்து அடிவாங்குவது பழகி போன செயல் தான்.
அரும்பு மீசை வளரும் காட்டிலும் தாய் தந்தையரை எதிர்த்து பேசும் காலகட்டத்தில் அத்தனை ஆண்கள் பெண்களின் நடுவே தன் இளைய மகனை கை நீட்டி அடித்தும் கொஞ்சமும் முகம் சுனுங்காத கதிர்வேலனை பார்த்து பாண்டியனுக்கு தான் செய்த செயல் தன்
மீதே கோவத்தை வர வைத்தது.
கதிர்வேலனை அத்தனை பேர் முன்னே அடித்தும் அவர் தன் தந்தையை மீறி எதிர்த்து பேச வில்லை என்பதால் சற்று சாந்தம் அடைந்த பண்டியன்,
'டேய்...நீ அடிச்சதுல அவன் செத்து போயிருந்தா அவன் குடும்பதுக்கு யாருடா பதில் சொல்லுவாங்க!?' என கேட்டார்.
'அப்பா... அவன் பண்ண கேவலத்தால பூ தொடுத்து விக்குற குடும்பம் பாதிக்க பட்டு இருக்கே! அதுக்கு யாரு பதில் சொல்லுவாங்க' என ஆதங்கத்துடன் கேட்டார் கதிர்வேலன்.
'நீ சொல்லுறது புரியாம இல்லை கதிரு. ஆனா அதே சமயம் பஞ்சாயத்து, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் எதுக்கு இருக்கு!?' என ஜீவானந்தம் கேக்க,
'அதானே எதுக்கு இருக்கு!?'என எதிர் கேள்வியை எழுப்பினார் கதிர்வேலன்.
கதிர்வேலனின் கேள்வியில் உள்ள நியாயம் பாண்டியனுக்கும் ஜீவானந்ததுக்கும் புரியாமல் இல்லை,
ஆனால் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் பாண்டியனின் இளைய மகனே பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட வில்லையெனில் ஊரில் யாரும் தங்களின் வார்த்தைக்கு மதிப்பு தர மாட்டார்கள் என்ற எண்ணம் பாண்டியனுக்கு இருந்தது.
'அண்ணா... பூ தொடுத்து, வீட்டு வேலை செய்து, கோவிலை சுத்தம் பண்ணி காசு சேர்த்து தான் தன் மகளை படிக்க வைக்க இந்த காலேஜூக்கு தேவகி அக்கா அவங்க மகள் கனகாவை படிக்க அனுப்பி வச்சாங்க.
ஆனா படிக்க வந்த இடத்துல அந்த புள்ளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறேன்னு அவளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து பதினெட்டு வயது கூட முழுசா ஆகாத அந்த பொண்ணை அவன் எப்படியெல்லாம் நாசம் பண்ணிருக்கான்னு உங்களுக்கு தெரியுமா!
இவன் பண்ண கேவலம் பத்தாதுன்னு அதை வீடியோ எடுத்து வச்சி அந்த பொண்ணை அடிக்கடி மிரட்டி அவன் சொன்ன இடத்துக்கு எல்லாம் வர சொல்லி இருக்கான்'என கதிர்வேலன் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையில் இருந்து பேசினார்.
'இவன் பண்ண கேவலத்தை கனகா யார்கிட்டயும் சொல்ல முடியாம தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணி இருக்காள், ஆனா தன் மகளை காப்பாற்றி! தேவகி அக்கா தன் பொண்ணோட நிலைமைக்கு யாரு காரணமோ அவங்களுக்கு தண்டனை வாங்கி தர சொல்லி நம்ம வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட முறையிட்டு இருக்காங்க' என்று கதிர்வேலன் சொல்லும் போது தான், ரோஜாவின் தூண்டுதலால் தான் ஸ்ரீனிவாசன் என்கிற வாத்தியாரின் உயிர் நாடியை கதிர்வேலன் அடித்து நொறுக்கியுள்ளார் என்று பாண்டியனுக்கும் ஜீவானந்ததுக்கும் புரிந்தது.
'நீ பண்ணது தப்புனு நான் சொல்லல கதிரு ஆனாலும்' என்று ஜீவானந்தம் தயங்கியதும்,
'அண்ணா... நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்காங்க, தண்டனைகள் கடுமையனால் தான் தவறுகள் நடக்காது! இப்போ என்ன? அந்த ஸ்ரீனி குடும்பத்துல என் மேல வழக்கு தருவார்களா!சரிதரட்டும். நானே ஜெயிலுக்கு போறேன்' என்று தீர்மானமாக சொன்னார் கதிர்வேலன்.
தன் சகோதரனின் செயலில் உள்ள நியாயத்தையும், கோவத்தில் உள்ள காரணத்தையும் புரிந்துகொண்ட ஜீவானந்தம் தன் தந்தை பாண்டியணை சமாதானம் செய்தார்.
என்னதான் சொன்னாலும் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட கதிர்வேலனின் செய்கையில் பாண்டியனுக்கு உடன்பாடு இல்லையெனினும், யாரோ ஒரு பெண்ணுக்கு ரோஜாவும் கதிர்வேலனும் நியாயம் வாங்கி தர எண்ணியதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து தான் இருந்தார்.
'அப்பா...நீங்க இந்த விஷயத்தை பெருசு படுத்தாதீங்க, பிரச்சனைன்னு வந்தால் பிறகு என்ன பண்ணலாமுன்னு யோசிப்போம்' என ஜீவானந்தம் தைரியம் சொன்னார்.
'என்னமோ பண்ணுங்க. ஆனா இதுக்கு மேல இந்த பையன் யார் மேலையாவது கையை வச்சான்! அப்புறம் நானே இவனை சிலம்பம் எடுத்து மண்டையை அடித்து உடைப்பேன்'என்று பாண்டியன் கோவமாக சொன்னதும்,
கதிர்வேலன் கைகளை மார்புக்கு நடுவே கட்டிக்கொண்டு, 'வேண்டாம் அப்பா சார்... அப்படியெல்லாம் பண்ணாதீங்க,மீ பாவம்' என்று கிண்டலான தோரணையில் சொன்னதும் ஜீவானந்தத்திற்கு சிரிப்பு வந்தது.
தன் இளைய மகனின் செய்கையில் பாண்டியனுக்கும் சிரிப்பு வர,'எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு, அந்த ஸ்ரீனியோட அண்ணன் போலீஸ்க்காரன், அவனுக்கு அவனோட தம்பி என்றால் உசுரு, போதாக்குறைக்கு ஸ்ரீனிக்கு அடுத்த வாரம் கல்யாணம் நடக்க இருந்தது' என்று பாண்டியன் சொல்லும் முன்னே,
'இனி எதுவும் நடக்காது' என்ற கதிர்வேலன் தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு காலேஜில் இருந்து சிலம்பம் கத்துக்கொடுக்கும் மைதானத்தை தேடி விரைந்து இருந்தார்.
'என்ன ஆனந்த் இது, அப்போ ரோஜா சொல்லி தான் கதிரு அந்த ஸ்ரீனியை இப்படி பண்ணி இருக்கானா' என பண்டியன் கேக்க,
'உங்களுக்கு தான் தெரியுமே அப்பா! ரோஜா சொன்னால் இவன் என்னவேனா பண்ணுவான். சரி நீங்க வாங்க நான் கார் ஸ்டார்ட் பண்ணுறேன்' என ஜீவானந்தம் சொன்னதும்! இதற்கு மேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று எண்ணிக்கொண்டே பாண்டியனும் காலேஜில் இருந்து ஜீவானந்தத்துடன் கிளம்பினார்.

*********************
குன்னக்குடியில் இருந்து முல்லை பயணித்த பேருந்து சிவகங்கை பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
யாரேனும் தன்னை பார்க்கும் முன்னே திருச்சி பேருந்து அருகே சென்ற முல்லையை தூரத்தில் இருந்தப்படி கண்காணித்துக் கொண்டு இருந்தான் பார்வதியின் தம்பி கேசவன்.
'பார்த்திங்களா மாமா உங்க மகளை! குன்னக்குடி பஸ்ல இருந்து இறங்கிட்டு எதுவும் தெரியதையை போல திருச்சி பஸ் பக்கத்துல இருந்து வெளியே வரதை பாருங்க' என கேசவன் சொன்னதும், முருகன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு முல்லையை காரில் அமர்ந்தப்படி முறைத்து பார்த்து இருந்தார்.
தன் தந்தையின் கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்த முல்லையை கேசவன் தான் கையை அசைத்து வரவேற்க, 'மாப்புள்ள...முல்லைகிட்ட நீங்க எதைப்பற்றியும் கேக்காதீங்க' என்றார் முருகன்.
காரின் அருகே வந்த முல்லை பின் இருக்கையில் அமர்ந்து இருந்த தன் தந்தையை பார்த்து,'அப்பா... எப்படி இருக்கீக' என கேட்டதும்,
'முன்னாடி சீட்ல உக்காரு, வீட்டுக்கு போய் பேசிப்போம்' என்ற முருகனின் முகத்தில் கோவம் அப்பட்டமாக தெரிந்தது.
தன் தந்தையின் இயல்பே இப்படி தான் அறிந்து இருந்த முல்லை காரில் ஏறி அமர்ந்ததும், இரண்டு வருடங்கள் கடந்து முல்லையை பார்த்த கேசவனுக்கு அவள் செழுமையான அழகில் அவளில் இருந்து பார்வை அகலமால் அவளிடத்திலேயே உறைந்து நின்றது.
'மாப்புள்ள... வண்டிய எடு' என்ற முருகனின் குரலைக் கேட்டு கேசவன் காரை கிளப்பியதும்,'உன் போனை கொடு' என்றார் முருகன்.
கேசவனிடம் தான் முருகன் பேசுகிறார் என எண்ணிய முல்லை, காரின் ஜன்னல் வழியே தன் பார்வையை செலுத்தி இருந்தாள்.
'முல்ல... மாமா உன்னோட போனை தான் கேக்குறாரு' என கேசவன் சொன்னதும்,
'என் போனையா!' என முல்லை கேள்வியை எழுப்பும் முன்னே தன் இடது கையால் முல்லையின் போனை பரித்து முருகனிடம் கொடுத்தான் கேசவன்.
முல்லையின் அலைபேசியை தன் சட்டை பையில் வைத்துக்கொண்ட முருகனின்
செயலில் முல்லையின் முகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
'அப்பா... என் போன்' என்று முல்லை கேட்டதும்,
'என்கிட்டயே இருக்கட்டும்' என்ற முருகனின் குரலில் கோவத்தை கண்டுகொண்டாள் முல்லை.
கேசவன் காரை முருகனின் வீட்டு வாசலில் நிறுத்தியதும்,'நீ வீட்டுக்குள்ள போ,மாப்புள்ள நீ கோவிலுக்கு காரை விடு' என்ற முருகனின் முகத்தில் தெரிந்த கோவத்துக்கு என்ன காரணம் என்று முல்லை யோசிக்கும் முன்னே,
'வாடி முல்ல... என்னடி இது! நாளைக்கு நிச்சியத்தை வச்சிக்கிட்டு இப்போ தானா உன் அப்பன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வருவான்!?' என்ற பக்கத்து வீட்டு பத்தமினி பாட்டியின் வார்த்தையைக் கேட்டு முல்லைக்கு தூக்கி வாரி போட்டது.

-தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top