• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
56
பாலைவனத்து முல்லை
பகுதி- 26

முல்லை கதிரை வேகமாக அடித்த வேகத்தில்,'அடி டி அடி.. இன்னும் நல்லா அடி. ஏன் கையில அடிக்கிற.உன் காலுல கிடக்குற செருப்பைக்கொண்டு அடி. டேய் நாகா. பார்த்தியா டா இந்த ரவா லட்டை. என்னை அடிக்கிறா டா. இரு இரு. என்னை அடிச்ச உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு' என்ற கதிர்.. தன் இருக்கையில் இருந்து எழுந்து முல்லையின் கையை பிடிக்க போனவன்..
'No. அது தப்பு.. பொம்பள புள்ள மேல கை வைக்கக்கூடாது.போ.நீ போய் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு வா. அப்புறம் பாரு உன்னை நான் எப்படி அடிக்கிறேன்னு' என்ற கதிர்.
'போ. போடி போ.' என்று உளறியவாரு அப்படியே இருக்கையில் சரிந்து விட...
'அண்ணா.இங்க என்ன நடக்குது.அப்போ நாளைக்கு இவங்களுக்கு கல்யாணம் இல்லையா' என்ற கனகாவின் கேள்வியில் இருந்து ரோஜாவை அவள் பார்த்து இருக்கிறாள் என்று அறிந்துக்கொண்ட நாகராஜன்,
'கனகா.. சின்னமாவை (ரோஜாவை) நீ பார்த்தியா?' என்று நாகராஜன் கேட்க.
'ஆமா அண்ணா. நான் ரோஜா அக்காவை பார்த்தேன்' என்று கனகா சொல்ல.'எங்க மா பார்த்த?' என்று கேட்டாள் முல்லை.
'தாலிகாத்தம்மன் கோவில் இருக்குல்ல. அந்தப் பக்கம் தான் ரோஜா அக்கா ஸ்கூட்டில போனாங்க. சரி நான் கூட நாளைக்கு அங்க தான் அவங்களுக்கு கல்யாணம் நடக்க போகுதே.அதனாலதான் போறாங்கன்னு நெனச்சேன். ஆனா ஏன் தனியா போறாங்கன்னு யோசிச்சுக்கிட்டே தான் வந்தேன். அதான் உங்ககிட்ட கேட்கலாமுன்னு கார் கதவ தட்டுனேன். சொல்லுங்க அண்ணா நாளைக்கு தானே ரோஜா அக்காவுக்கு கல்யாணம்' என்று கேட்டாள் கனகா.
'ஹாங். ஆமா ஆமா நாளைக்கு தான் கல்யாணம். சரி நீ பார்த்து வீட்டுக்கு போ. நாளைக்கு கதிர் கல்யாணத்துக்கு வந்துடு' என்ற நாகராஜன். சற்றும் தாமதிக்காமல் தன் காரை தாலிக்காத்த அம்மன் கோவிலை நோக்கி விரட்டினான்.
************************************
இதே தருணம். பாண்டியனின் வீட்டில் கஸ்தூரி கையில் போனுடன் அமர்ந்தப்படி ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருக்க.
முருகனும் பார்வதியும் கையில் நகை பையுடன் உள்ளே நுழைந்தார்கள்.
'என்னங்க இது. வீடே அமைதியா இருக்கு. ரோஜா. முல்ல.' என்ற பார்வதியின் குரலை கேட்டு சமையலறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள் மீனா.
'சித்தி.. முல்லையும் ரோஜாவும் கடைக்கு போய் இருக்காங்க' என்று மீனா சொல்ல.
'என்ன மீனா சொல்ற.ரோஜா வெளிய போய் இருக்காளா' என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டார் பார்வதி.
'ஆமா சித்தி.ரோஜாவை கதிர் மாமா அழைச்சிட்டு போய் இருக்காரு போல. ஆனா முல்லை நாகராஜன் அண்ணன் கூட தான் வெளியே போய் இருக்காள்' என்று மீனா சொல்லும் சமயம் வீட்டின் சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தின் நேரம் இரவு பத்து மணியை காட்டியது.
'என்ன மா நீ.பந்தக்கால் வைத்த பிறகு கல்யாண பொண்ணு வீட்டுல இருந்து வெளிய போகக்கூடாதுன்னு அவங்களுக்கு தெரியாதா' என்று முருகன் கேட்க.
'ஐயோ. சித்தப்பா. நானும் அம்மாவும் கடைக்கு போய்ட்டு வரதுக்கு முன்னாடியே ரோஜா வீட்ல இல்ல' என்ற மீனா..
நாகராஜனுடன் முல்லை சென்று இருப்பதை மீண்டும் சொன்னாள்.
'என்னங்க. கதிருக்கு போன் பண்ணுங்க.' என்று பார்வதி சொல்ல.. அதே சமயம். பாண்டியன் வீட்டுக்குள் நுழைய. ஜீவாவோ இது வரை வீடு வந்து சேராமல் இருந்தார்.
வீட்டின் நடுவே பதற்றதுடன் நின்று இருந்த பார்வதி மற்றும் முருகனை பார்த்த பாண்டியன்.'என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க.' என்று கேட்டதும்.
'இல்ல மாமா.. கதிர் மாப்புள்ள. ரோஜாவையும் முல்லையையும் வெளியே அழைச்சிட்டு போய் இருக்காருன்னு மீனா சொல்லுது. அதான் என்னன்னு கேட்டுகிட்டு இருக்கேன்' என்று தயக்கத்துடன் சொன்னார் முருகன்.
'என்ன சொல்லுற மச்சான். இந்த நேரத்துல நம்ம வீட்டு பசங்க வெளிய போய் இருக்காங்களா. என்ன சொல்லுற நீ' என்று பாண்டியன் புரியாமல் கேட்க.
'அதானே. என்ன நடக்குது இங்க.. நாளைக்கு 7மணிக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படி அர்த்த ராத்திரியில் ஏழரையை கூட்டிட்டு போய் இருக்காளே அந்த ரோஜா' என்று கஸ்தூரி ஒன்றும் தெரியாத பாப்பாவை போல பேசுவதை கண்டு பார்வதிக்கு சந்தேகம் எழுந்தது.
கஸ்தூரி பேசுவதை காதில் வாங்காத பாண்டியன். உடனே கதிரின் செல் போனுக்கு அழைத்து பார்க்க. மறுமுனையில் இருந்து எந்த வித பதிலும் இல்லாமல் போனது.
கதிர் தான் பதில் தரவில்லை.. நாகராஜனின் கைபேசிக்காவது தொடர்பு கொள்வோம் என்று எண்ணிய பாண்டியனுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.
'என்ன இது. என்னமோ சரியில்லையே.நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இந்த பசங்க ஏன் வெளியே போனாங்க.' என்று பாண்டியன் மேலும் பதற்றம் அடைந்தார்.
பாண்டியனின் நிலையை கண்ட முருகன்,'மாமா நீங்க பதட்ட படாதீங்க. வண்டி எடுத்துட்டு போய் பசங்க எங்கன்னு பார்த்து நான் அழைச்சிட்டு வரேன்' என்ற முருகன் அவரது காரில் அங்கிருந்து வெளியே செல்ல.
'போ போ.. நீ எங்க போனாலும் உன்னால அந்த ரோஜாவை பார்க்கவே முடியாது' என்று தனக்குள் எண்ணிய கஸ்தூரி.'யாரு எக்கேடு போனால் என்ன. என் மகிழ்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்' என்ற ரீதியில் மீண்டும் ரீல்ஸ் மீது அவர் கவனத்தை செலுத்தி இருந்தார்.
நேரம் இரவு 11 மணியை தொட்டது. நாகராஜனின் கார் தாலிக்காத்த அம்மன் கோவிலை சென்ற அடைந்தது.
காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த கதிர்வேலனோ மதுவின் வீரியத்தில் முழு போதையில் உளறிக்கொண்டு தான் இருந்தார்.
நாகராஜன் மட்டும் காரில் இருந்து இறங்கியவன். கோவில் வாசலை சென்று பார்க்க.. அங்கே கோவில் கதவு பெரிய பூட்டால் பூட்டி இருந்தது.
கோவில் அக்கம் பக்கத்தில் ஈ எறும்பு கூட இல்லாத நிலையில்.
'சின்னமா எங்க தான் போய் இருப்பாங்க' என்று எண்ணிய நாகராஜனுக்கு நேரம் கடக்க கடக்க பயம் கூடிக்கொண்டே போனது.
இதற்கு மேலும் தாமதித்தால் அது ரோஜாவின் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும் என்று எண்ணிய நாகராஜன் மீண்டும் காருக்குள் ஏறி அமர்ந்தவன்.
'முல்ல. நம்ம உடனே விஷயத்தை பாண்டியன் ஐயாகிட்ட சொல்லி. போலீஸ்ல சொல்ல சொல்லலாம்' என்ற நாகராஜன். காரை ஸ்டார்ட் செய்ய.
அந்த தருணம் பார்த்து நாகராஜனின் கார் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது.
'என்ன அண்ணா கார் ஸ்டார்ட் ஆகலையா' என்று முல்ல கேட்க.
'அத நாலு மிதி மிதிடா நண்பா. அப்போ தான் பைக் ஸ்டார்ட் ஆகும்' என்று சம்மந்தமே இல்லாமல் உளறும் கதிரை பார்த்து முல்லைக்கு அதிகப்படியான கோவம் எழுந்து முன் இருக்கையில் இருந்த முல்லை பின் பக்கம் திரும்பி கதிரின் வாயில் மீண்டும் வேகமாக ஒரு குத்து வைக்க.
'ஐயோ..' என்று வலியால் கத்தினான் கதிர்.
'இங்க எவ்ளோ பிரச்சனை ஓடுது. இவுக என்னன்னா குடிச்சிட்டு கவலையே இல்லாம உளறிக்கிட்டு இருக்காக' என்ற முல்லை.
'அண்ணா. நீங்க போன் பண்ணி பாண்டியன் மாமாகிட்ட விவரத்தை சொல்லுங்க' என்றாள்.
காரில் அமர்ந்துக்கொண்டு நாகராஜன் போனை எடுத்து பாண்டியணை அழைக்க முயற்சித்த தருணம்.
முன் இருக்கையில் அமர்ந்து இருந்த முல்லை கண்ணாடி வழியே தூரத்தில் பார்த்து,'அண்ணா. அங்க பாருங்க பூட்டி இருந்த கோவில்லருந்து ரெண்டு ஆளுங்க வெளிய வராங்க' என்றாள்.
'என்னமா இது. பூட்டி இருந்த கோவிலுக்குள்ள இருந்து இவங்க மட்டும் எப்படி வெளியே வராங்க' என்று நாகராஜன் கேட்க..
'அவங்கக்கிட்ட இன்னோரு சாவி இருக்கும் டா வெண்ண' என்று மீண்டும்
புலம்பினார் கதிர்.
கதிர் முல்லை நாகராஜன் என்று மூவரும் காரில் அமர்ந்தபடி கோவிலிலிருந்து வெளியே வந்த இரண்டு ஆசாமிகளை பார்த்துக் கொண்டு இருந்த சமயம் அதில் ஒருவன் தார்ப்பாய் மூடி வைக்கப்பட்டிருந்த வண்டியில் ஏறி அமர்ந்ததும். காரில் அமர்ந்திருந்த முல்லை,'அண்ணா அங்க பாருங்க இது ரோஜா உடைய ஸ்கூட்டி தானே' என்றாள்.
'அட ஆமா.சின்னம்மா வண்டிய இவனுங்க ஏன் எடுக்குறானுங்க?? இல்லையே என்னமோ ஒன்னு இடிக்குதே'என்று நாகராஜன் சொல்ல..
'இடித்தால் நகர்ந்து உட்காருடா லூசு பயலே' என்றார் கதிர்வேலன்.
'இங்க பாருங்க மாமா சார்.. போலீஸ் வந்தாலும் பரவால்லன்னு உங்க கழுத்த நானே நெருச்சிடுவேன். கொஞ்ச நேரம் வாயை மூடுறீங்களா' என்று முல்லை ஹதீத கோவத்தில் கத்த
'கொல்லு டி ரவா லட்டு கொல்லு.உன்கூட வாழ தான் எனக்கு கொடுத்து வைக்கல. உன் கையால நான் சாகுற பாக்கியமாவது கிடைக்கட்டும்' என்று கதிர்வேலன் மேலும் உளறியவனின் ஒரு வார்த்தை கூட முல்லையின் காதில் விழவில்லை என்பது தான் உண்மை.
ஆம். கதிர் உளறுவதை தாண்டி. முல்லையின் கவனம் கோவிலில் இருந்து வெளியே வந்த இருவரின் மேலே இருக்க.
அந்த இருவரில் ஒருவன் மட்டும் ரோஜாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
'அண்ணா. அந்த ஆளு நம்ம ரோஜா வண்டியை எடுத்துக்கிட்டு எங்க போறாரு' என்று முல்லை கேட்க,
'இரு மா. இங்க என்னமோ நடக்குது கொஞ்சம் அமைதியா இரு' என்ற நாகராஜன் காரில் உள்ளே அமர்ந்தபடி வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒருவன் ரோஜாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்க, மற்றொருவன் மீண்டும் கோவிலுக்குள் சென்று கோவிலை பூட்டி இருந்தான்.
 
Member
Joined
Dec 5, 2025
Messages
56
'முல்ல. கோவில் பூட்டியதற்கு பிறகு யாருமே கோவில் குள்ள போகக்கூடாது, அதை மீறி இவன் உள்ள போறானா கண்டிப்பா சின்னம்மா உள்ள இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கு..நீ கார்லயே இரு நான் உள்ள போயி அங்கே என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வரேன்' என்று நாகராஜன் சொல்ல,'அண்ணா இருங்க நானும் வரேன்' என்றாள் முல்லை.
'நீ வேணாம்மா. கதிரை இந்த நிலைமையில நம்ம தனியா கார்ல விட்டுட்டு போக முடியாது' என்று நாகராஜன் சொல்ல.
'இல்ல. நானும் வரேன்' என்று முல்லை சொல்ல...'ஏய் எங்க போறீங்க என்னையும் அழைச்சிட்டு போங்க' என்று கதிர் சொல்ல,
'டேய் நாங்க என்ன சினிமாவுக்கா போறோம். கோவிலுக்கு போறோம்டா' என்றார் நாகராஜன்.
'கோவிலுக்கு தானே. அப்ப வா நானும் வருவேன்' என்று கதிர்வேலன் அடம் பிடிக்க 'அண்ணா.இவரு குடிச்சிட்டு உளறிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா இவரையும் கார்ல தனியா விட்டுட்டு போறது சரியில்ல.வாங்க மூன்று பேரும் போகலாம்' என்று முல்லைச் சொல்ல.
நாகராஜன்,கதிர்வேலன், முல்லை ஆகிய மூவரும் கோவிலின் அருகே செல்ல.கோவில் பூட்டி இருந்ததால், உள்ளே எப்படி செல்ல முடியும் என்று நாகராஜன் யோசித்த தருணம் கதிர்வேலன் குடிபோதையில் இருந்தாலும்,'என்ன யோசிக்கிறீங்க.உள்ள போகலாமா' என்று கேட்டான்.
'ஆமா மாமா சார்.கோவிலுக்குள்ள போகணும், ஆனா கோவில் பூட்டி இருக்கே' என்று முல்லை சொல்ல,
'அடியே லூசு ரவா லட்டு. கோவில் பூட்டி இருந்தா சாவி போட்டு திறக்க வேண்டியதானே! இது கூட உனக்கு தெரியலையே லூசு லூசு' என்று கதிர்வேலன் சிரிக்க.
'நீங்க ரொம்ப அறிவாளி தான். சாவி எங்க கிட்ட இருந்தா நாங்க ஏன் காத்துக்கிட்டு இருக்க போறோம்' என்றாள் முல்லை.
'ஓ!! அப்ப சாவி இல்லாம யாருக்கும் தெரியாம கோவில் குள்ள போகணுமா.. அப்ப!! ஏன் முன் வாசல் வழியாக போகணும்! வாங்க பின் வாசல் வழியாக போகலாம்' என்று கதிர் சொல்ல,
'ஆமா.நண்பன் சொல்ற மாதிரி பின்பக்கம் வழி இருக்கும். வாங்க போகலாம்' என்ற நாகராஜன், கோவிலின் பின்பக்கம் செல்ல.அங்கேயும் வாசல் கதவு பூட்டி இருந்த பட்சத்தில்.வேறு வழியே இல்லாமல் கோவிலின் மதில் மீது ஏறி நாகராஜன் முதலில் கோவிலுக்குள் இறங்க..
'அய்யய்யோ அண்ணா நான் எப்படி மேலே ஏறி வருவது' என்று முல்லை கேட்க
'இதோ மாமா இருக்கிறேன். மாமா உன்னை ஏத்தி விடுறேன்' என்ற கதிர்,முல்லை எதிர்பார்க்காத தருணத்தில் அவளை தன் கைக்கொண்டு தூக்கியதும்.முல்லை மதில் மீது ஏறி கோவிலின் உள்பக்கம் குதித்ததும்.
'என்னை விட்டு போகாதீங்க நானும் வருவேன்,நானும் வருவேன்' என்ற கதிரும் மதில் மீது ஏறி கோவிலுக்குள் குதிக்க.
கதிர், நாகராஜன்,முல்லை ஆகிய மூவரும் எப்படியோ கோவிலுக்குள் சென்று இருந்தார்கள்.
நள்ளிரவு 12 மணியை தாண்டி இருக்க..கோவில் முழுதும் இருள் சூழ்ந்து இருந்த நேரத்தில்,
ஏன் ஒருவன் மட்டும் கோவிலுக்குள் சென்றான் என்ற யோசனையிலேயே நாகராஜனும் முல்லையும்,
ஒருவேளை! இங்கே ரோஜா இருக்கிறாளா என்று தேடி அலைய.இவர்களை அதிகபடியாக தேடவிடாமல் கடவுள் ரோஜாவை இவர்கள் கண் முன்னே காட்டினார்.
***************************************
கோவில் பின்புறத்தில் தெப்பக்குளத்தின் அருகே இருந்த அறைக்கு வெளியே ஒருவன் நின்று இருக்க..உள்ளே ரோஜா,'டேய் என்னை விடு. என் கை கட்டை கழட்டி விடு' என்று கத்தியதும்.
ரோஜாவின் முன்னே இன்னொருவன் இருக்கையில் அமர்ந்து,
'உன்னை இந்த நேரத்தில் வெளியே விடவா நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்கணும்.பொறுமையா இரு கண்ணு.நாளைக்கு காலைல இந்த ஊர் கூடி உனக்கும் எனக்கும் கல்யாணம் நடத்த போகுது. அதுக்கு அப்புறமா நானும் நீயும் ஜோடியா வெளியே போகலாம்' என்று ஒருவன் சொல்ல.அவன் தான் சுந்தரேசனின் தம்பி சீனிவாசன் என்பதை நாகராஜன் அறிந்து இருந்தவன்,
'டேய் சீனி. நீ தான் என் சின்னம்மாவை கடத்தினியா' என்று கேட்டப்படி அந்த அறைக்குள் ஓடி வந்தான்.
நள்ளிரவில் கோவிலுக்குள் யாரும் வர வாய்ப்பில்லை என்று எண்ணியிருந்த ஸ்ரீனிவாசனின் கண் எதிரே நாகராஜன் வந்து நிற்க,' நாகா என்னை காப்பாத்துங்க' என்று ரோஜா கத்தும் சமயம்,
'ரோஜா. நீ இங்கதான் இருக்கியா'என்று பதற்றத்துடன் முல்லை அந்த அறைக்குள் ஓடி வர..
'டேய் இங்க எல்லாரும் என்ன பண்றீங்க' என்ற கதிர்வேலனும் அறைக்குள் நுழைய.கதிர்வேலனின் பார்வை சீனிவாசனை பார்த்ததும் தன்னிலை மறந்து சத்தமாக சிரிக்க ஆரம்பித்து இருந்தான் கதிர்வேலன்.
சீனிவாசனின் பின்னே அடியாள் ஒருவன் நின்று இருக்க.'டேய் நீங்க எல்லாம் எப்படி உள்ள வந்தீங்க' என்று கோபத்துடன் அந்த ஒருவன் நாகராஜனை அடிக்க வந்த வேதத்தில்,கதிர்வேலன் அவன் கையை மடித்து ஓங்கி மூக்கில் ஒரு குத்து விட்டவன், 'நான் இருக்கும் போதே என் நண்பனை நீ அடிப்பியா, ஆமா நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க' என்று அதே குடிபோதையில் கதிர் கேட்க.
கதிர்வேலன் அடித்த அடியில் அங்கிருந்து ஒரே ஒரு அடியாலும் மயங்கி கீழே விழ.கதிர்வேலனை பார்த்த சீனிவாசனுக்கு பயம் எழுந்தது.
'டேய் வேணா. நீ ஒரு தடவை என் மேல கைய வச்சதுக்கே என் அண்ணன் உன் குடும்பத்தை நடுரோட்டில் நிற்கவைக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணிட்டாரு.
மறுபடியும் என்கிட்ட பிரச்சனை பண்ற வேலை வச்சுக்காத ஒழுங்கா இங்க இருந்து போயிடு' என்று சீனிவாசன் சொல்ல..
'டேய்.என் சின்னம்மாவை எதுக்குடா இங்க கடத்திட்டு வந்து இருக்கீங்க' என்று நாகராஜன் கேட்க,'அதெல்லாம் சொல்ல முடியாது ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து வெளியே போங்க' என்று சீனிவாசன் மீண்டும் கத்தும் சமயம் முல்லை ரோஜாவின் கையில் கட்டி இருந்த கட்டை விடுவிக்க …
ரோஜா கோபம் கொண்டவள். அருகே இருந்த கட்டையை கொண்டு சீனிவாசன் தலையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க.. சீனிவாசன்,'ஐயோ அம்மா' என்று வலியால் துடித்தான்.
'சொல்லுடா எதுக்காக என்னை கடத்தினீங்க..இப்ப சொல்றியா இல்ல இந்த கட்டையால் அடிச்சு முட்டை குழம்பு வைக்கவா' என்று கோபத்துடன் ரோஜா கத்த..
'சொல்றேன் சொல்றேன்.. இன்னைக்கு நைட்டு முழுக்க நீயும் நானும் இந்த கோவில்ல இருந்துட்டா! நாளைக்கு காலைல இந்த ஊரே உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும்முனு என் அண்ணன் சொன்னாரு. அத வச்சு உங்க குடும்பத்தை பழிவாங்கலாம்னு நாங்க பிளான் போட்டோம்' என்று ரோஜாவிடம் சீனிவாசன் உண்மையைச் சொல்ல.
கதிர்வேலன் அந்த மது மயக்கத்திலும் 'வாவ். வாட் எ பிளான்!!' என்று சொல்ல, கோபம் கொண்ட ரோஜா கதிரின் தலையில் கட்டையால் இரண்டு அடி அடித்தாள்.
'ஐயோ ரோஜா.எதுக்காக மாமா சாரை அடித்த' என்று முல்லை கேட்கும் தருணத்தில். முல்லையின் தலையிலும் ரோஜா கட்டையால் அடிக்க.ஒரே சமயத்தில் கதிரும் முல்லையும் கோவிலின் அறையில் மயங்கி கீழே விழ,
'சின்னமா!! என்ன பண்றீங்க' என்று நாகராஜன் புரியாமல் கேட்க.
'இது வரை ஒன்னும் பண்ணல.இனிமே தான் செம்மையா பண்ணப் போறேன்' என்றாள் ரோஜா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top