• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 24.

'ஒரு வேளை இவன் நம்மள சந்தேகப்படரானோ?'என்று மனதில் நினைத்தபடி வெளியில் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு சரியென்பது போல தலையை அசைத்திருந்தாள் அரசி.

"என்ன அரசி ரொம்ப சீக்கிரமாவே என் ஆபிஸ் அறையை கூட்டி துடைத்து விட்டாயா?"என்றபடி தன் அலுவலக அறையை எட்டிப் பார்த்தார் ராஜேந்திரன்.

"ம்.. அறை சுத்தமா இருக்கு."என்றபடி அவர் திரும்பும் சமயத்தில்,

"என்னங்க ப்ளாக் டீ வேனும்னு கேட்டிருந்திங்களே, இந்தாங்க"என்றபடி தேநீர் அடங்கிய குவளையை அவர் முன்பு நீட்டியிருந்தார் நாச்சியார்.

பிறகு, ராஜேந்திரன் தன் மனைவியிடமிருந்து தேநீர் குவளையை வாங்கியவர்,அரசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிப்சிப்பாக தேநீரை அருந்த ஆரம்பித்தவரின் விழிகளில் இதழருவி தென்பட்டிருந்தாள்.

"என்ன உன் பொண்ணு உலக அதிசயமா இன்னைக்கு அவளோட அறையிலிருந்து வெளிய வந்திருக்கா போல?"என்று நக்கலாக தன் மனைவியிடம் கேட்டிருந்தார் ராஜேந்திரன்.

நாச்சியார் திரும்பி தோட்டத்திற்கு செல்லும் வாயிலின் கதவு திறந்திருந்ததும் புரிந்து கொண்டார்.

இதழருவியை தவிர்த்து அந்த கதவை யாரும் திறக்க மாட்டார்கள் என்பது நாச்சியார்க்கு நன்கு தெரிந்த ஒன்று.

எப்படியோ தன் மகள் இன்றாவது அறையிலிருந்து வெளிவந்திருக்கிறாளே என்று மகிழ்ச்சியுடன் திரும்பி தன் கணவரை பார்த்து உதடு பிரியாது புன்னகைத்து விட்டு சமையலறையை நோக்கி நடை போட்டிருந்தார் நாச்சியார்.

அவர் கையோடு அரசியலையும் தன்னோடு சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.

தனது அறையில் சாதனா தன் கைபேசியில் சாகித்தியனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு "ஹலோ"என்று சாகித்தியன் சொல்லியிருக்க,

"நான் சாதனா பேசுரேன்."மெல்லிய குரலில் கூறியிருந்தாள்.

"ம்.. சொல்லுங்க.என்ன விசயம்?"என்று இயல்பாக கேட்டிருந்தான் சாகித்தியன்.

"அது வந்து நீங்க எழுதி தந்த ப்ரிஸ்க்ரிப்ஷன தொலைச்சுட்டேன்.அதுனால எப்படி மாத்திரை சாப்டனும்னு எனக்கு தெரியல?

எது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடர மாத்திரைன்னு கொஞ்சம் சொல்ரிங்களா?"சற்று பணிவாக அவனிடம் கேட்டிருந்தாள் சாதனா.

சாகித்தியனும் பொறுமையாக மூன்று வேளைக்கு என்னென்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை
கூறியவன் பின்பு,"மறக்காம காயத்தில் தண்ணீர் மட்டும் படாம பார்த்துக்குங்க."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்திருந்தான்.

சாதனா அவனிடம் பணிவாக பேசியதற்கு காரணம் உண்டு.கேரளாவில் நடந்ததை நினைத்து இதுதான் சமயம் என்று தன்னை பழி வாங்காது தனக்கு வலிக்காதபடி சாகித்தியன் வைத்தியம் பார்த்தது அவளின் மனதை சற்று அசைத்துப் பார்த்தது.

அந்த நொடியில் இருந்து சாதனாவிற்கு சாகித்தியனை பிடிக்க ஆரம்பித்தது.தற்பொழுது அவனிடம் ப்ரிஸ்க்ரிப்ஷன் காணோம் என்று பொய் கூறியிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது.

சாகித்தினிடம் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பு அவளுக்கு.எப்படியாவது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் மூளையில் சற்றென்று உதித்தது இந்த ஐடியா.

தற்பொழுது அதை செயல் படுத்தியும் இருந்தாள் பாவை.சாகித்தியன் உடன் கைபேசியில் பேசி முடித்ததும் அவளின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை தோன்றி மறைந்தது.
 
Joined
Jan 29, 2025
Messages
111
ஆனந்தி இல்லம்,

சாகித்தியனுக்கு சாதனா தனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

'பரவாலையே, மேடம் எனக்கு போன் பண்றாங்களோ!‌ முன்னாடி மாதிரி அந்த பேச்சுல திமிர காணோமே! அதுக்கு பதிலா இன்னைக்கு அந்த பேச்சுல ஒரு மரியாதையும் பணிவும் இருந்தது!'என்று மனதில் நினைத்தபடி தான் அணிந்திருந்த சட்டையின் காலர் பட்டனை போட்டுக் கொண்டிருந்தான் சாகித்தியன்.

சில நிமிடங்களில் சாகித்தியன் தன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வரவும்,

"சாகித்தியன் யார் கூடயோ போன்ல பேசிடிருந்தமாதிரி இருந்தது? யார் அவங்க? அதுவும் நீ ரொம்ப அக்கறையா காயத்துல தண்ணீர் படாம பார்த்துக்கங்கன்னு என்று கூறினாய்.

அவங்க யாரென்று நான் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.யாரது?"என்று சாகித்தியனின் தோள்பட்டையில் கை போட்டான் சந்தோஷ்.

"மாமா உங்க தங்கச்சி தான் கைபேசியில் அழைப்பு விடுத்து பேசினது போதுமா.இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதிங்க."என்று அவசரமாக சாகித்தியன் கூறியபடி தன்தோள் பட்டையிலிருந்து தன் மாமனின் கையை எடுத்து விட்டு வேக நடை போடவும்,

"சாகித்தியன்.."தன் மாமனின் குரலில் தன் வேக நடையை கட்டுப்படுத்தி நின்ற இடத்திலிருந்து தன் தலையை மட்டும் திருப்பி "சொல்லுங்க."என்று நிதானமாக கேட்டிருந்தான்.

"நீ எப்பவும் மருத்துவமனைக்கு வீட்ல இருந்து சார்ப்பா ஒன்பது மணிக்குதான கிளம்புவ?இன்னைக்கு எட்டு மணிக்கே கிளம்பி போறதா பார்த்தா காலையில் டிபன் கூட சாப்பிடாம போயிருவ போல இருக்கே."என்று கூறிவிட்டு சந்தோஷ் சாகித்தியன் பதிலுக்காக காத்திருக்க,

"இப்பதான் எனக்கு ஒரு போன் வந்தது.ஒரு எமர்ஜென்சி கேஷ் வேற மருத்துவமனையில் இருந்து நம்ம மருத்துவமனைக்கு எடுத்துட்டு வராங்க.இந்த நேரத்துல கண்டிப்பா நான் அங்க இருக்கனும் மாம்ஸ்."என்று அவசரமாக பதிலை கூறிவிட்டு தடதடவென்று படிகளில் இறங்க ஆரம்பித்திருந்தான் சாகித்தியன்.

"அம்மா நான் மருத்துவமனைக்கு போயிட்டு வரேன்."என்று சத்தமாக சமையல் அறைக்குள் இருக்கும் தன் தாயிக்கு கூறிவிட்டு வீட்டின் முக வாயிலை அவசர நடையுடன் போர்டிகோவை அடைந்து தன் மகிழுந்தில் ஏறி செலுத்த ஆரம்பித்திருந்தான் சாகித்தியன்.

அரைமணி நேரத்தில் தனது மருத்துவமனையை அடைந்தவன் தனது கேபினுக்கு விரைந்து வந்தவன் பச்சை நிற உடையை அணிந்து கொண்டு வேக நடையுடன் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றிருந்தான் சாகித்தியன்.

அங்கு ஒரு பெண் உயிருக்கு போராடிய படி வாடி வதங்கி போனவளாக பெட்டில் படுத்திருந்தாள்.அவளின் நெஞ்சில் பல யொர்கள் இனைக்கப்பட்டிருந்தன.அவள் சீராக மூச்சு விடுவதற்கு ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவித்திருந்தார்கள்.

மூன்று மணி நேரம் கழிந்த நிலையில் அவளின் நெஞ்சில் துளைத்திருந்த இரண்டு டோட்டாக்களை கவனமாக அகற்றி அந்த பெண்னின் உயிரை காப்பாற்றி இருந்தான் சாகித்தியன்.

அந்த பெண்ணின் நெஞ்சில் துளைத்திருந்த இரு டோட்டாக்களை பார்த்ததுமே 'இது போலிஷ் கேஷ்'என்று தெரிந்து கொண்டவன் முதலில் தன் அண்ணன் இதழரசனுக்கு மெசேஜை தட்டி விட்டிருந்தான்.

அந்த பெண்ணுக்கு உறவுகள் யாரும் இல்லை.அனாதி ஆசிரமத்தில் இருந்து கல்லுரி படிப்பை முடித்தவள் தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறாள்.

கதிரவன் தனது ஒளியை நன்றாக கூட்டிலிருந்த நேரம் அது.கடிகாரத்தில் இரண்டு முட்களும் ஒரு சேர பன்னிரெண்டை தொட்டிருந்தது.

ராஜேந்திரன் இல்லம்,

இதழருவியும் சரி சாதனாவும் சரி தத்தமது அறையில் இருந்தனர்.அரசியும் நாச்சியாரும் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

ராஜேந்திரன் மட்டும் யாரையோ வெகு நேரமாக யாரையோ எதிர் பார்த்து நடுக் கூடத்தில் போடப்பட்ட நீள்விருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரின் பார்வை அடிக்கடி வாசலை தாண்டி வந்தது.

இரண்டு நாளிகை கடந்த நிலையில் வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்ததும் படாரென்று எழுந்து வேக நடையுடன் வாசலை அடைந்தார்.அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காது அந்த மகிழுந்தில் இருந்து விக்ரம் இறங்கினான்.

"என்ன விக்ரம் இது? சீக்கிரமா வருவேன் என்று சொல்லி விட்டு ரொம்ப தாமதமாக வந்துள்ளாய்?சரி சரி உள்ள வா."என்று இயல்பாக விக்ரமை தன்னுடன் வீட்டிற்குள் அழைத்து வந்தார் ராஜேந்திரன்.

நடுக் கூடத்தில் போடப்பட்ட நீள்விருக்கைகளில் ஒன்றில் விக்ரமை அமரச் சொல்லி விட்டு தானும் மற்றொரு நீள்விருக்கையில் அமர்ந்தவர்,

"நாச்சியா.. டீ போட்டு எடுத்துட்டு வா.மாப்ளை வீட்டுக்கு வந்திருக்கார்."என்று சத்தமாக கூறிவிட்டு விக்ரம் புறம் திரும்பினார் ராஜேந்திரன்.

"என்ன விசயம்? ஏதாவது முக்கியமான விசயமா?"என்று சன்ன குரலில் அவர் கேட்க,

"அங்க்கிள் முக்கிய விசயம்தான்.அதுக்கு முன்னாடி நான் இதழருவிய பார்க்கனும்."என்று தீர்க்கமாக சன்ன குரலில் கூறிக்கொண்டிருந்தவன்,

நாச்சியார் டீ குவளையுடன் வருவதை பார்த்ததும்,
"அங்க்கிள் எப்படி இருக்கிங்க? இன்னும் எங்க கல்யாணத்துக்கு ஐந்து நாள்தான் இருக்கு.

நான் கல்யாணத்ததான் எளிமை நடக்கட்டும்னு சொன்னேன்.ஆனா,எங்க வரவேற்பு விழா ரொம்ப க்ரேண்டா இருக்கனும்.நீங்களும் அப்பாவும் அதற்கான ஏற்பாடுகள சேர்ந்து செய்யனும்.அதுதான் என்னோட விருப்பம் கூட."என்று சிரித்தபடி அவன் கூறி முடிக்கவும் நாச்சியார் டீ குவளையை அவன் முன்பு நீட்டவும் சரியாக இருந்தது.

'ஓ..நாச்சியாவ பார்த்ததும்தான் பேச்சை திசை மாற்றியிருக்கரான் விக்ரம்.'என்று மனதில் நினைத்தபடி,
"நிச்சயமாக மாப்பிள்ளை.வரவேற்பை நீங்க ஆசைப்பட்டபடி ரொம்ப க்ரேண்டா பண்ணிடலாம்."என்று பெயரிக்கு சிரித்தபடி ராஜேந்திரன் கூறவும், நாச்சியார் சிறு புன்னகையுடன் அந்த இடத்திலிருந்து அகன்றிருந்தார்.

இவர்கள் பேசும் அனைத்தையும் சமையல் அறையில் நின்று ப்ளூடூத் வழியாக கேட்டுக் கொண்டிருந்தான் இதழரசன்.

நாச்சியார் சமையலறைக்குள் வருவது தெரிந்ததும் அவன் ப்ளூடூத்தை கழட்ட பார்க்கும் சமயத்தில்,

"தம்பி நீங்க ப்ளூடூத்தை எதற்காக கழட்டறிங்க? நீங்க வந்த வேலையை சிறப்பா செஞ்சு முடிங்க தம்பி.நீங்க யாருன்னு நீங்க வந்த முதல் நாளா நீங்க யாருன்னு எனக்கு தெரியும்."என்று நாச்சியார் பொறுமையாக கூறவும்,

அதிர்ச்சியுடன் அவரை பார்த்திருந்தான் இதழரசன்.'தான் பெண் வேடத்தில் இருப்பது இவருக்கு எப்படி தெரியும்?'என்று மனதில் நினைத்ததை அவன் வெளியே கேட்க முயன்ற பொழுது,

"எப்படி தெரியும்ன்னு கேட்க வர்றீங்கதான தம்பி?"என்று அவரே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல ஆரம்பித்திருந்தார் நாச்சியார்.

"பொதுவா பெண்கள் லேடிஸ் பர்ஸதான் வைத்திருப்பார்கள்.ஆனா நீங்க வழக்கத்துக்கு மாறா ஜென்ஸ் ப்ரஸ வைத்திருந்தீர்கள்.

அதுல உங்க குடும்ப புகைப்படத்த பார்த்தேன்.நீங்க போலிஷ் அதிகாரியா இருக்கிங்க.உங்க தம்பி எங்க இரண்டாவது மாப்பிள்ளை சாகித்தியன் மருத்துவரா இருக்காரு.

நீங்க இங்க வந்ததற்கு ஏதோ முக்கிய காரணம் இருக்கும்னு புரிஞ்சுதான் நான் அமைதியா இருந்தேன்.என் கணவர் ஏதோ தப்பான வேலை செய்திட்டு இருக்கராருன்னு என் உள்மனசு சொல்லுது தம்பி.எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்க தயார்."என்று கூறியவர்,

நினைவு வந்தவராக"ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேளுங்க தம்பி.நான் செய்வதற்கு தயார்."என்று கூறிவிட்டு அமைதியாக அவர் இருக்கவும்,

இதழரசன் தன் இருகைகளை கூப்பி ரொம்ப நன்றி என்று சொல்லாமல் சொல்லி இருந்தான்.

"தம்பி உங்க நல்ல நேரம் என் கணவரோட கண்ணிலயோ இல்ல என் இரண்டாவது பொண்னு சாதனா கண்ணில் படல.அது ரொம்ப நல்லதா போச்சு.

அவளுக்கு உங்க நடையில் சந்தேகம் வந்து என்கிட்ட இரண்டு மூன்று நாளைக்கு முன்னாடி வந்து நீங்க ஆம்பள மாறி நடக்குறிங்கன்னு சொன்னா.

உனக்குத்தான் அப்படி இருக்கு.எனக்கு பொண்ணு நடக்கர மாதிரிதான் இருக்குன்னு ஒரே போட போட்டுட்டேன்.ஆனா அதற்கு பிறகு நீங்க பெண் வேடத்தில் இருக்கும் பொழுது பொண்ணு மாதிரிதான் நடந்திங்க."என்று கூறிவிட்டு அவர் சின்க்கில் இருந்த பாத்திரங்கள் கழுவு ஆரம்பிக்க

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று மீண்டும் பீளூடூத்தில் கேட்க ஆரம்பித்தாள் அரசி என்ற பெயரில் பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன்.

'ஓ மை காட்.இவன் இதழருவி அறைக்கு இப்ப எதுக்காக போறான்னு தெரியலையே.இவன் போற நேரத்துல அரசி (பஞ்சவர்ணகிளி)இருந்தா காரியமே கெட்டுமே!'என்று மனதில் நினைத்தபடி டென்சனில் ஆள்காட்டி விரலை கொண்டு நெற்றியை இருமுறை அழுத்தமாக தேய்த்து இருந்தான்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top