- Thread Author
- #1
நேசம்
ராசி… ராசி…
அம்மா.. ஏன்மா என் பேரை ஏலம் போடுற, இங்க தானே நிக்கிறேன்.
ஏன்டி, “நா கத்திகிட்டே இருக்கிறேன்,எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நிக்குறே,என்னன்னு கேட்டா உன் வாயில இருக்க முத்து கொட்டிருமா,வர வர உனக்கு காதே கேட்க மாட்டேங்குது” என்றார் காமாட்சி.
அம்மா அவளுக்கு காது கேட்குது,உனக்குத்தான் கேட்கல போல என்றாள் அவரின் பெரிய மகள் சித்ரா.
என்னடா, “என்ன ஒரே சத்தம்”என்றபடி வந்தார் கருணாகரன்.
கருணாகரன் மற்றும் காமாட்சி தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள்,அதில் மூத்தவள் சித்ராவுக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.அவள் கணவன் சதீஷ்,அவர்களுக்கு சர்மா என்ற ஒரு மகன் இருக்கிறான்.
இரண்டாவது பெண் தான் ராசி,அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்.மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் எடுக்கின்றாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவளுக்கு விடுமுறை.
நேற்று மாலையே வீட்டிற்க்கு தன் மூத்த மகள் குடும்பமும் வந்திருக்க கடைவரை சென்று வர அப்போதிருந்தே அழைத்துக் கொண்டிருக்கிறார் காமாட்சி.
அவளும், “இரும்மா வர்றேன்” என பதில் கொடுத்துவிட்டாள்.ஆனால் அது அவளது தாய்க்கு கேட்கவில்லை.
சித்ராவோ, என்னம்மா எதுக்கு கூப்டீங்க என்க,
இல்லடி, மார்கெட் வரைக்கும் போகனும், இவளைக் கூப்பிட்டா இன்னும் காணோம்,அதான்.
அம்மா அவ அப்போவே வந்துட்டா,நீதான் திரும்பி பாக்காம கத்திகிட்டே இருக்க.
ஆமாடி எனக்கு முதுகுலையும் கண்ணு இருக்கு பாரு “சரி சரி நேரமாகுது,மாப்பிள்ளை எழுந்துட்டாரா” என்றார் காமாட்சி.
ம் அம்மா,நேரமா எழுந்து அப்பா கூட வாக்கிங் போனாங்க,இந்நேரம் வந்துருக்கணும் என்ற போதே கருணாகரன் ஹாலில்,என்னடா ஒரே சத்தம் என பேசுவது கேட்க,
“இதோ அப்பாவே வந்துட்டாங்களே”.
எனத் தன் தந்தையை நோக்கி சென்றாள் சித்ரா. “குளித்து விட்டு வருகிறேன்” என சதீஷ் அவனது அறைக்குள் சென்று விட்டான்.
இத்தனை சம்பாசனையும் சமையலறையில் நடைபெற்று கொண்டிருக்க,தாயும் மகளும் ஹாலுக்கு வந்தனர்.
என்னங்க கொஞ்சம் மார்கெட் வரைக்கும் போய்ட்டு வரணும் என்றார் காமாட்சி.
அதுவரை அமைதியாக இருந்த ராசி என்னம்மா வாங்கணும்,அப்பா இல்லைன்னா மாமா கிட்ட குடுத்து விடுங்க, எனக்கு வேலை இருக்கும்மா என்றாள்.
“என்னடி வேலை??, உன் பிரென்ட் கூட அரட்டை அடிக்கிறதுதானே,அதெல்லாம் நாளைக்கு பார்த்துக்கோ.ஒழுங்கா சமையலுக்கு ஹெல்ப் பண்ணு என சொல்ல,
“அம்மா நீ சமையல் செஞ்சாத்தான் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்குமாம் அதனால நீயே செஞ்சிரு,என்னப்பா நான் சொல்றது சரிதானே” என்றாள்.
ரொம்ப சரி,காமாட்சி என்ன இருந்தாலும் உன் கைப்பக்குவம் வருமா? என்க அவருக்கு பயங்கர கோவம்.
ஆமா நாளைக்கு அவள கட்டிக்குடுத்துட்டு சமையல் செய்ய நம்மளும் அங்க போயிடலாம் சரியா,அவ ஒரு வேலையும் செய்ய வேணாம் என்க,
என்ன பேசுற காமாட்சி அதெல்லாம் என் பொண்ணு பார்த்துக்குவா, சித்ரா எப்படி இருந்தா இப்போ அவ மாறல. அதெல்லாம் சரியா போயிடும்,பிள்ளைங்க நம்ம வீட்ல இருக்கவரைக்கும் தான் இந்த சுதந்திரம்,அம்மா கையாள சாப்பாடுன்னு இருக்கும், அதுக்குப்பிறகு அவங்களே நினைச்சாலும் ஏன் நீயே நினைச்சாலும் அவள இப்போ மாதிரி அப்போ பார்த்துக்க முடியாது.அதுனால அவ பிரியப்பட்டா செய்யட்டும் இல்லன்னா விட்டுடு சரியா என்க,
இப்படி பேசிபேசியே என் வாயை அடச்சிருங்க,இவளுக்கு நீங்க ஓவரா செல்லம் குடுக்கிறீங்க,அவளும் இப்போல்லாம் என் பேச்சைக் கேட்கிறதே இல்லை பார்த்துக்கோங்க,என முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு தந்தையையும் மகளையும் ஒரு முறை முறைத்துவிட்டு தேவையான பொருட்களை ஒரு லிஸ்ட் போட்டு எழுதி வந்து கொடுத்தார்.
நீங்களே போய் வாங்கிட்டு வாங்க,எனக்கு வீட்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கு என சொல்ல, கருணாகரனோ சரிம்மா, ஆயிரத்து ஒன்பதாவது வேலையா ஒரு கப் டீ போட்டுட்டு வந்துடு,குடிச்சிட்டு மார்கெட் போறேன் என சொன்னார்.
“இன்னிக்கு பால் வரல, அதனாலே நீங்க பால் வாங்கிட்டு வந்தாதான் டீ, காபி எல்லாமே போங்க” என அவர் மனைவி ஒழுங்கு காட்டிவிட்டு உள்ளே செல்ல இவரோ பாவமாக மகளை பார்க்க, அவள் எப்போதோ உள்ளே ஓடிவிட்டாள்.
தன் இன்னொரு மகளைத் தேட
அங்கு சித்ரா அவரைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.
மனதிற்குள்,“அட வானரமே உனக்குத்தான இவ்வளவு நேரம் சப்போட் பண்ணினேன்,நீ என்னடான்னா எனக்கு ஒரு பிரச்சினைன்ன உடனே விட்டுட்டு ஓடிட்டே” என்று ராசியை திட்டியவாரே, மார்கெட் கிளம்பி சென்றார் கருணா.
பின்னாடியே வந்த சர்மாவை கவனிக்கவில்லை,அப்பிச்சி என்னையும் கூட்டிட்டு போங்க பிளீஸ் என்க,டேய் அங்க வந்து சாக்லேட் அது இதுன்னு கேட்க கூடாது சரியா என்றார்.சித்ரா அவன் தன் தந்தையோடு செல்லவும் ராசியின் அறைக்கு சென்றாள்.
அவன் சரி என்றதும் அப்பிச்சியும் பேரனும் மார்கெட் கிளம்பினர்.இங்கு சொல்வதுதான் அப்படி ஆனால் ஒரு சாக்லேட் விட்டுவைக்காமல் அனைத்தையும் வாங்கிவிடுவான் சர்மா.கருணாவும் கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்து விடுவார்.
இது எப்போதுமே நடக்கும் ஒன்று தான்,எனவே பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.
ராசியின் அறையில் அக்காவும் தங்கையும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஏய் அப்பா பாவம் டி என்றாள் சித்ரா,அக்கா அதெல்லாம் அப்பா பார்த்துப்பாங்க ஆமா சர்மா எங்க என்க, அவனா அப்பா கூட இருந்தான்.அப்பா அவனை மார்கெட் கூட்டிட்டு போனாங்க என்றாள்.
சித்ரா அம்மாவுக்கு உதவி செய்ய சமையலறைக்கு சென்று விட, ராசியும் சமையல் அறைக்கு செல்ல திரும்பியவள், ஹாலில் கேலண்டரில் நேற்றைய தேதி கிழிக்கப்படாமல் இருப்பதை கண்டு, அதனை சரி செய்தாள். அப்போதுதான் முழு காலண்டரையும் பார்வையிட ராகவேந்திரா படம் .
அதை கண்டவளுக்கு நேற்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது. வெள்ளிக்கிழமை மாலை பள்ளி விட்டு வெளியே வந்த போது இரண்டு சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் தெரியாமல் மோதிக்கொண்டனர். அதில் இருவருமே கீழே விழுந்து விட்டனர். ஒருவனுக்கு மட்டும் உள்ளங்கையில் சிராய்ப்பு. இன்னொருவனுக்கு அடி எதுவும் படவில்லை.
இதை பார்த்தவுடன் வேகமாக அந்த சிறுவர்களுக்கு பக்கத்தில் சென்றாள் ராசி.
அப்போது அவளை விட அவளுக்கு முன்னையே வேகமாக ஒருவன் வந்து நின்றிருந்தான். பார்க்க ஆளுமையான தோற்றம். பார்த்தவுடன் கண்ணில் ஒட்டிக் கொள்ளும் ஒரு கம்பீரம்,அழகு. ஒரு சிறுவனை அவன் தூக்கி விட மற்றொரு சிறுவனை இவள் தூக்கி விட்டாள்.
“டேய் பார்த்து வர மாட்டீங்களா டா கொஞ்சம் கவனமா வாங்க “என்று விட்டு அதில் ஒரு பையனை மட்டும் அதாவது அடிபட்ட பையன், அவன் தான் இவனின் அண்ணன் மகன் தர்ஷன்.
அவனிடம், “அச்சச்சோ காயம் ஆயிடுச்சா செல்லத்துக்கு சரி வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கலாம்” என ஆறுதலாக பேசி விட்டு, மற்ற சிறுவனிடம் திரும்பி “உனக்கு ஒன்னும் அடிப்படலையே சரி பார்த்து பத்திரமா போ” என்று விட்டு அவன் தர்ஷனை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,தர்ஷனும் ராகவ் சித்தப்பா கை ரொம்ப வலிக்குது என்ன சொல்வது இவளுக்கு கேட்டது. அப்படித்தான் தெரியும் அவனுடைய பெயர். அதற்கு மேல் அவனைப் பற்றி எந்த ஒரு விவரமும் தெரியாது.
அங்கு அவள் ஒரு நிற்பதையே அவன் கண்டு கொள்ளவில்லை. அதே நினைவுடன் இருந்தவள் அவள் அம்மா அழைக்கவும்,அங்கு சென்று விட்டாள்.
அன்றைய பொழுது மிகவும் சந்தோஷமாக அழகாக தன் அக்கா குடும்பத்துடன் சென்றது.
அன்று மாலை கருணாகரனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை பேசியவருக்கு அளவில்லாத சந்தோஷம். உடனே அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தன் மனைவியிடமும் தன் மாப்பிள்ளை மற்றும் சித்ராவிடமும் பகிர்ந்து கொண்டார்.
தரகர் தான் போனில் பேசி இருந்தார். ராசிக்கு ஒரு நல்ல வரன் வந்திருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை அன்று பெண் பார்க்க வருவதாகவும் செய்தி சொல்லி இருந்தார்.
அவளுக்கும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கின்றனர்.எதுவுமே சரிப்பட்டு வரமாட்டேன் என்கிறதே, ஜாதகம் பொருந்துவதே இல்லை.
அதனால் இதுவரை மாப்பிள்ளை என்று வீட்டுக்கு யாரும் வந்ததில்லை.இதுதான் முதல் முறை அதனால்தான் இவ்வளவு சந்தோஷம்.
இந்த விஷயம் இன்னும் ராசிக்கு தெரியாது. தெரிந்தால் என்ன சொல்லுவாளோ. அவளுக்கு காதல் அது இது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஆனாலும் இந்த ராகவேந்திரா படத்துடன் கூடிய நாட்காட்டியை பார்த்தவுடன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றாள்.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லையே. அப்புறம் எப்படி அவளது பெற்றோருக்கு தெரியும்.
வீட்டில் அவளை பெண் பார்க்க வருகின்றார்கள் என்று திங்கட்கிழமை மாலைதான் சொன்னார்கள் ராசியிடம். ஏனோ அவளுக்கு மனது பிசைய ஆரம்பித்தது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று அம்மா நான் வேற லீவு சொல்லலையே என்க.அவளுக்கே இது சிறுபிள்ளை தனமாகத்தனமாகத் தான் தோன்றியது.
“ஏன்டி போன் பண்ணி லீவு சொல்ல முடியாதா” என்று சொன்னார் அவளது தாய். அம்மா முக்கியமான ஒரு கிளாஸ் இருக்குமா கண்டிப்பா போயே ஆகணும் என்க அவளை முறைத்தார் காமாட்சி.
ஆமாம், பின்னே மூன்றாவது படிக்கும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றாள். இதில் முக்கியமான வகுப்பு என்றால் கோபம் வரத்தானே செய்யும்.
“கிறுக்குத்தனமா எதுவும் யோசிக்காம ஒழுங்கா நாளைக்கு லீவ சொல்லுடி என்றார்”அவருக்கு எதுவும் தோன்ற, ராசி உன் மனசுல யாரும் இருக்காங்களா என்று கொஞ்சம் தயங்கி மிகுந்த பயத்தோடு தான் கேட்டார். ஏனென்றால் இதுவரைக்கும் தன்மகள் காதல் வயப்பட்டிருப்பாள் என்ற அளவுக்கு நினைத்ததும் இல்லை அந்தளவுக்கு ராசியும் நடந்ததில்லை.
இவள் இப்போது தயங்கவும் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது.
அவரின் பயத்தை புரிந்து கொண்ட ராசி, “என்னம்மா நீ எதையோ யோசிக்கிற, இல்ல கொஞ்சம் பயமா இருக்கு அதான்” என்றாள்.
“ஐயோ, ஒரு நிமிஷத்துல உயிரே போயிடுச்சு ஏன்டி உங்க அக்காவுக்கும்தானே மாப்பிள்ளை பார்
த்து கல்யாணம் பண்ணி வச்சோம்.அவ என்ன பயந்துகிட்டே இருக்கா பயந்துகிட்டே இருந்தா எப்படி கல்யாணம் நடக்கும்.