• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
42
அத்தியாயம்- 15

அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது.

சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.

"வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த சரணையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.

மயக்கத்தில் இருந்த சிறுவனைத் தன் கரங்களால் ஏந்திக்கொண்ட வர்மன், சற்றும் தாமதிக்காமல் காரை நோக்கி விரைந்தான்.

"வர்மா... அருணை என்கிட்ட கொடு டா. உன் கையிலையும் ரத்தம் வருது வர்மா" என்ற மாயனின் வார்த்தையைக் காதில் வாங்காத வர்மன் சிறுவனைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கியவனின் இதயம் துடிக்க மறுத்தது.

வர்மனையும் சிறுவனையும் பின் தொடர்ந்த மகதிக்கு அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று யூகிக்க கூட நேரம் இல்லாமல் அவள் வாழ்வில் அடுத்தடுத்து அசம்பாவீதங்கள் நடந்த வண்ணமாகவே இருந்தது.

மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை வர்மன் காரில் படுக்க வைக்க,
"பாப்பா நீ முன்னாடி உக்காந்துக்கோ, வர்மா... நீ அருண் பக்கத்துல இரு, நான் காரை எடுக்குறேன்" என்ற மாயன் காரை மருத்துவ மனையை நோக்கி விரட்டினான்.

வழியெல்லாம் சிறுவனைக் கட்டிக்கொண்டு தனக்குள்ளே அழும் வர்மனை பார்த்து மகதிக்கு ரம்யா மீது எல்லை இல்லாத கோவம் எழுந்தது.

"அருண்... அருண் அப்பாவைப் பாருடா" என்று வர்மன் சிறுவனின் கன்னத்தில் தட்ட, அருணோ கண்களைத் திறவாமல் பொம்மையைப் போல இருந்தான்.

"மாயா... சீக்கிரம் போ மாயா" என்ற வர்மனின் தோள் பட்டையில் ரத்தம் கசிந்த வண்ணமாகவே இருக்க,

"அண்ணா... வர்மா கையில பிளட் அதிகமா வருது" என்று மாயனிடம் சொல்லும் மகதி, சிறுவனின் நிலையைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி போனாள்.

"இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போயிடலாம்" என்ற மாயன், அடுத்த பத்தே நிமிடத்தில் தன் காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த, ரத்த வெள்ளத்தில் வர்மன் காரிலிருந்து கீழே இறங்கியவன் அதித ரத்த போக்கினால் அப்படியே மயங்கிக் கீழே விழப் போனாவனை தாங்கிப் பிடித்தாள் மகதி.

"சிஸ்டர்..."என்று மாயன் கத்தும் சத்தம் கேட்டு மருத்துவமனையின் பணியாளர் ஸ்ட்ரெச்சருடன் வந்தவர்கள், வர்மன் மற்றும் அருணை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

சிறுவனுக்கு ஒரு பக்கமும், வர்மனுக்கு மறுபக்கமும் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க,
"பாப்பா நீ இங்கேயே உக்காரு, நான் ராஜன் சாருக்கு விஷயத்தைச் சொல்லிட்டு வரேன்" என்ற மாயன் தன் கைபேசியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

அருண் மற்றும் வர்மனின் நிலையை எண்ணி மகதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

"கடவுளே! அருண் சின்னக் குழந்தை, அவன் பாவம், அந்தப் பிஞ்சு மனசை ஏன் இப்படி கஷ்ட்டப்படுத்தி பாக்குறிங்க, அருணை எப்படியாவது காப்பாத்துங்க கடவுளே" என்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலக்கடவுள் விநாயகரிடம் கண்ணீர் மல்க வணங்கினாள் மகதி.

சிறுவனுக்காகத் தெய்வத்திடம் மன்றாடும் மகதியின் மனதில், வர்மனின் நிலையை எண்ணியும் கவலை அதிகரிக்க,
அவளின் கட்டுப்பாட்டை மீறி மகதியின் கண்கள் ஈரமானது.

கடவுளின் முன்னே கண்ணீருடன் நின்று இருந்த மகதியை "பாப்பா..."என்று அழைத்த மாயனின் குரலில் மகதி கண்கள் திறந்தாள்.

"பாப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜன் சார் வந்துடுவாரு" என்று மாயன் சொல்ல,
"அண்ணா...இங்க என்ன தான் நடக்குது!?" என்ற மகதியின் கேள்வியில் மாயன் அமைதியாக நின்று இருந்தான்.

"ரம்யா யார்? அவள் தான் அருணின் அம்மா என்றால்! அவளே ஏன் தன் குழந்தைக்கு இப்படியொரு பாவத்தைச் செய்யத் துணிய வேண்டும்? அப்போ! அப்போ அருணின் அப்பா என் வர்மன் இல்லையா?" என்ற மகதியின் கேள்விக்கு 'இல்லை' என்ற ரீதியில் தலையசைத்தான் மாயன்.

மாயனின் பதிலில் மகதிக்கு சின்னதொரு மகிழ்ச்சி துளிர்த்தது, ஆனால் சிறுவனின் நிலையை எண்ணியவள், "அப்போ அருணோட அப்பா யாரு?" என்று கேட்டாள் மகதி.

"பாப்பா... ராஜன் சார் ஒரு காலத்துல சினிமாவில் நடன துறையில் பெரிய ஆளாக இருந்தாரு.

அவருக்கு அப்போ திருமணம் முடிந்து அருள்மொழி வர்மன், மயில் வர்மன்னு இரட்டை பிள்ளைகள் பிறந்து இருந்தாங்க.

நடனத்து மேல இருந்த பக்தியில் அவர் குடும்பத்தை மறந்துட்டாரு.

ராஜன் சாரோட வேலை பழுவில் அவரு வருஷத்துக்கு ஒரு மாதம் கூடக் குடும்பத்தோடு செலவழிக்க முடியாமல் போச்சு.

ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளை அவரு வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வச்சாரு.

ராஜன் சாரோட பொஞ்சாதிக்கு அவங்க பக்கத்துல கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லைனு தனிமையா இருக்க பிடிக்காம அவங்க பல நண்பர்களோட பேசத் தொடங்கினாங்க.

நம்மகிட்ட நல்லா பேசுற எல்லோரும் நல்லவுங்க இல்லையே! அப்படி தான் ராஜன் சாரோட மனைவிகிட்ட பேசிப் பழகிய ஒரு தயாரிப்பாளர் ராஜன் சார் மனைவிக்கு ஆசைக்காட்டி, அவங்கள அவரோட அழைச்சிட்டு போயிட்டாரு.

தன் மனைவியின் இந்தச் செயலுக்குத் தானும் ஒரு காரணமுன்னு நினைத்த ராஜன் சார் மேற்கொண்டு சினிமா பக்கமே போகாமல் வீட்டோட இருக்க ஆரம்பிச்சாரு.

விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளான நம்ம அருள்மொழி வர்மனும்,மயில் வர்மனும் இந்த ஊருக்கு வந்தாங்க.

தன் அம்மாவின் இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க தன்னோட அப்பா மட்டுமே காரணம் என்று எண்ணிய மயில்வர்மன் அவரோட அப்பாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு மறுபடியும் வெளியிறுக்கு போயிட்டாரு.

ஆனா இந்த நிலைமையில தன் அப்பாவைத் தனியா விடக்கூடாதுன்னு நம்ம வர்மன் மட்டும் அவங்க அப்பாகூடவே இருந்தான்.

நடன துறையில் ராஜன் சார் உருவாக்கி இருந்த அவர் அடையாளத்தை நம்ம வர்மன் காப்பாத்த எண்ணினான்.

அதற்காக வர்மன் எல்லா வகையான நடந்ததையும் கத்துக்கிட்டான்.
அப்படி தான் வர்மன் சென்னைக்கு வந்து உங்க வீட்டுல தங்கினான்.

வர்மன் தன்னை முழுதாக நடனத்துக்கு அர்ப்பணித்து இருக்க, வெளியூரில் வசிக்கும் வர்மனோட சகோதரன் மயில் வர்மனோ ரம்யாவின் காதல் வலையில் சிக்கி இருந்தான்.

ரம்யா அனாதையாக வளர்ந்த பொண்ணு.
ரம்யா வளர்ந்த ஆஸ்ரமத்தில் தான் போலீஸ் கமிஷனர் சைத்ராவும் வளர்ந்து இருக்காங்க.

தன் அப்பாவை வெறுத்துட்டு போன வர்மனோட அண்ணன் ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தான் ரம்யாவும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள்.

ரம்யாவும் மயிலவர்மனும் பேசிப் பழகிய குறுகிய காலகட்டத்தில் மயில்வர்மன் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு ராஜன் சார்கிட்ட வந்து சம்மதம் கேட்டாரு.

அப்போ தான் நானும் சென்னையில இருந்து மும்பை வந்த சமயம்.

பல வருடம் ஒன்றாக வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ராஜன் சாரோட பொஞ்சாதியே அவரை விட்டுட்டு வேறொருவருடன் போனதால, ராஜன் சாருக்கு சில பெண்கள் மீது உள்ள மரியாதை குறைந்து போனது.

"வேண்டாம் மயிலு...பெண்களை நம்பாத, உன் அம்மா பண்ண கேவலத்தை பார்த்தும் நீ எப்படிடா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற" என்று ராஜன் சார் ஆதங்கத்தில் தன் மகன் மயில்வர்மனை கண்டித்தார்.

"என் அம்மா இந்த வீட்டை விட்டுப் போக நீங்கத் தான் காரணம். எங்களுக்காக உழைக்கிறேன், எங்களுக்காக உழைக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே நீங்க எங்களை மறந்துட்டு உழைக்க ஆரம்பிச்சீங்க. உங்களுக்கு எங்க நினைப்பே இல்லை. அதான் என் அம்மா நீங்களும் வேண்டாம் நாங்களும் வேண்டாமுன்னு அவங்க வாழ்க்கையை தேடி போய்ட்டாங்க.

எனக்கு என் அம்மா மேல எந்தக் கோவமும் இல்லை. அவங்கள பற்றி இப்போ நான் உங்ககிட்ட பேச வரல. நான் ரம்யான்னு ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்க கல்யாணத்துக்கு உங்களை அழைக்கத் தான் வந்தேன்" என்று மயில்வர்மன் சொன்னதும்,ராஜன் சாருக்கு அதித கோவம் எழுந்தது.

"நான் இவ்வளவு சொல்லியும் நீ மறுபடியும் கல்யாணம் காட்சின்னு, பேசுனதையே பேசிக்கிட்டு இருக்கியா!
இங்க பாரு டா மயிலு! கல்யாணம் பண்ணிக்காத. எந்தப் பொண்ணையும் நம்பாத. மீறி என் பேச்சைக் கேக்காம கல்யாணம் பண்ணா உனக்கு அப்பான்னு ஒருவன் இருக்குறதையே நீ மறந்துடு" என்று ராஜன் சார் கண்டிப்புடன் சொல்லிட்டாரு.

"ராஜன் சார் பேச்சை மீறி அன்னைக்கு வீட்டை விட்டுப் போன
மயில்வர்மன் மறுபடியும் அவங்க அப்பாவைப் பார்க்க வரவே இல்லை"
என்று மாயன் வர்மனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மகதியிடம் சொல்லிக்கொண்டு இருக்க,
குழப்பத்தில் இருந்த மகதியின் உள்ளம் சற்று தெளிய ஆரம்பித்து இருந்தது.

"இப்போ மயில்வர்மன் எங்க இருக்காரு?" என்ற மகதியின் கேள்விக்கு மாயனின் பதில் மீண்டும் மௌனமாக மட்டுமே இருந்தது.

"சொல்லுங்க அண்ணா... வர்மனோட அண்ணன் எங்கே?" என்று மீண்டும் மகதி கேட்க,
"ராஜன் சார் கல்யாணத்துக்கு சம்மதம் தரலைனு மயில்வர்மன் கொச்சுகிட்டு வெளியூர்ல போய்ச் செட்டில் ஆகிட்டான்.

அந்த ஊருல இருந்தப்படியே ரம்யாவை கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.

நம்ம வர்மனுக்கு மட்டும் அடிக்கடி போன் செய்து மயில்வர்மன் பேசிக்கிட்டு தான் இருந்தான்.

ஆனால் ஒரு வருஷமா மயில்வர்மன்கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் நம்ம வர்மனுக்கு வரவே இல்லை.

தன் சகோதரனுக்கு என்ன ஆனதுன்னு வர்மன் கவலைப்பட்டதால ராஜன் சாருக்கு தெரியாம நானும் வர்மனும் மயிலைப் பார்க்க அவன் ஊருக்குப் போனோம்.

ஆனா நாங்க போன இடத்துல எங்களுக்குப் பேர் அதிர்ச்சி காத்து இருந்தது" என்று மாயன் சொல்ல,

"என்ன அண்ணா...ஏன்? மயில்வர்மனுக்கு என்னாச்சு?"என்ற மகதியின் கேள்விக்கு ஒன்பது வருடத்திற்கு முன்பு நடந்த கதையை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் மாயன்.

மயில்வர்மன் வேலை செய்த இடத்தில் அவனின் முகவரியை வாங்கிக்கொண்டு வர்மனும் மாயனும் மயிலைப் பார்க்க அவன் வீட்டுக்குச் சென்று இருந்தார்கள்.

"மாயா... இந்த வீடு தானே?" என்ற வர்மன், தன் சகோதரனைக் காணும் ஆவளில் மயில்வர்மனின் வீட்டுக்குள் நுழைய, அங்கே நிறைமாத கர்ப்பிணியாக நடு வீட்டில் அமர்ந்து இருந்தாள் ரம்யா.



 
Joined
Feb 6, 2025
Messages
42
வர்மனை பார்த்ததுமே தன் கணவனின் சகோதரன் தான் இவன் என்று அறிந்துகொண்டாள் ரம்யா.

ரம்யாவின் வீட்டில் அங்கங்கே மது பாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் இருப்பதை பார்த்து வர்மன் முகம் மாறினான்.

வர்மனை கண்டுகொள்ளாமல் ரம்யா திமிராக அமர்ந்து இருக்க,"நான் மயிலோட தம்பி... மயில் எங்கே? ஏன் அவன் எனக்குப் போன் பண்ணுறது இல்லை?" என்று வர்மன் கேட்டான்.

வர்மனின் கேள்விக்கு, "ம்... உன் அண்ணன் ஜெயில்ல இருக்கான்" என்ற ரம்யாவின் முகத்தில் கொஞ்சமும் பதற்றம் இல்லை.

"என்ன சொல்லுறீங்க! ஜெயில்லையா?" என்ற வர்மனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.

"ஆமா ஆமா... ஜெயில்ல தான்" என்ற ரம்யா அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என்ற எண்ணம் கூட இல்லாமல், சிகெரட் ஒன்றை பற்ற வைத்தது புகைக்கத் தொடங்கினாள்.

ரம்யாவின் செயலில் முகம் மாறிய வர்மன் "மயில் ஏன் ஜெயிலுக்கு போகணும்?"என்று கேட்க,
"என்னைக் கேட்டா! எனக்கு என்ன தெரியும்" என்று தோள்களைத் தூக்கி அசால்ட்டாகப் பதில் சொன்னாள் ரம்யா.

பொறுமை இழந்த வர்மனோ,"ஏங்க...மயிலுக்கு என்னாச்சு?" என்று கோவமாகக் கேட்க,

"அவன் ஒரு கையாலாகாதவன். அவனைக் கல்யாணம் பண்ணதுக்கு நான் வேற எதாவது தொழிலில் செய்து வாழ்ந்து இருக்கலாம்" என்ற ரம்யாவின் வார்த்தைகளில் வர்மனுக்கு மேனி கூசியது.

இருப்பினும் தன் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டவன், "இப்போ மயிலுக்கு என்னாச்சுன்னு சொல்லப் போறிங்களா இல்லையா!?" என்று கேட்க, பொறுமை இழந்தவளாக ரம்யா வர்மனை முறைத்து பார்த்தாள்.

"ஏய்... அவனைப் பற்றி என்கிட்ட எதுவும் கேக்காத, ஆமா! நீ அவன் கூடப் பிறந்தவன் தானே! உன் அண்ணன் இந்த ஊரைச் சுற்றி கடன் வாங்கி வச்சிருக்கான். நீ வந்தது வந்துட்ட, ஒழுங்கா எனக்கு எதாவது பணத்தை கொடுத்துட்டு போ" என்ற ரம்யாவின் உடலில் மதுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

"ஏங்க... வயத்துல பிள்ளையை வச்சிக்கிட்டு இப்படி குடிக்கிறிங்களே! இதெல்லாம் குழந்தைக்கு ஒத்துக்காதுனு உங்களுக்குத் தெரியாதா?" என்று வர்மன் கேட்க,

"ஓ! உங்க குடும்ப வாரிசு மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருக்கா?" என்று ஏளனமாகக் கேட்டாள் ரம்யா.

ரம்யா பேசப் பேச வர்மனுக்கு அதித கோவம் எழுந்தது.
பெண் உருவத்தில் இருக்கும் பேயைப் போலத் தான் ரம்யா வர்மனின் கண்ணுக்குத் தெரிந்தாள்.

'இவளுக்காகவா தன் தந்தையை எதிர்த்து, மயில்வர்மன் இவளைத் திருமணம் செய்தான்' என்ற கேள்வி வர்மனின் மனதில் தோன்றியது.

தன் சகோதரனுக்கு என்ன ஆனது என்ற பதற்றத்தில் வர்மன் தவித்து இருக்க,"ஹாய் ரம்மு" என்ற அழைப்புடன் சரண் என்பவன் ரம்யாவின் வீட்டிக்குள் நுழைந்தான்.

சரண் அருள்மொழிவர்மனை பார்த்து, மயில்வர்மன் என்று
நினைத்தவனின் முகம் கேள்வியாக மாறியது.

"ஏய் ரம்மு... இவன் எப்படி ஜெயில்ல இருந்து வெளிய வந்தான்?" என்று சந்தேகமாக கேட்டான் சரண்.

"டேய்...இவன் மயிலோட ட்வின் பிரதர்" என்ற ரம்யா, அருகே இருந்த மதுவை உட்கொள்ள ஆரம்பித்தாள்.

ரம்யாவின் நடத்தையைப் பார்த்துக் கடுப்பான மாயன்,"வர்மா... நம்ம இங்க இருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம், நீ வா. மயில் ஏன் ஜெயில்ல இருக்கான்னு நம்மளே கண்டு பிடிப்போம்" என்றவன் தன் நண்பனை அழைத்துக்கொண்டு நேராக அந்த ஊரில் உள்ள சிறைசாலைக்கு சென்றான்.

தன் சகோதரனைக் காண சிறைசாலையில் உள்ள காவலரின் அறையில் காத்து இருந்த வர்மனுக்கு, தன் சகோதரன் எதற்க்காக ஜெயிலில் இருக்கின்றான் என்ற கேள்வி அவன் நிம்மதியை குழைத்தது.

"மேடம்... இவங்க கைதி மயில்வர்மனை பார்க்க வந்து இருக்காங்க"என்று காவலாளி சொல்ல,

அப்போது அந்த ஊரில் இன்ஸ்பெக்டராக இருந்த சைத்ராவை முதல் முதலில் அருள்மொழிவர்மன் சந்தித்தான்.

மயில்வர்மனின் உருவத்தில் இருக்கும் அருள்மொழி வர்மனை பார்த்து,
"நீங்க!" என்று சந்தேகமாகச் சைத்ரா கேள்வி எழுப்பினாள்.

"நானும் மயிலும் இரட்டை சகோதரர்கள்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வர்மன்,
"மேடம்... என் பிரதர்க்கு என்ன ஆச்சு? எதுக்காக அவரை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டான்.

வர்மனை நட்புடன் பார்த்த சைத்ரா,"எல்லாத்துக்கும் காரணம் மயிலோட மனைவி தான்" என்றாள்.

"என்ன சொல்றீங்க மேடம், மயிலோட மனைவியா?"என்று வர்மன் கேட்க,
"ஆமா... ஆக்சுவலி உங்க பிரதர்
மயில்வர்மனுக்கு, நானும் ரம்யாவும் பிரெண்ட்ஸ் தான்.
நானும் ரம்யாவும் ஒண்ணா ஒரே அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தோம்.

பணத்து மேல ரம்யாவுக்கு அதிக ஆசை. மயில்வர்மன் பணக்கார பையன்னு நினைத்துத் தான் ரம்யா உங்க பிரதரை காதலிக்க ஆரம்பிச்சாள்.

ஆனா உங்க குடும்பத்துல என்ன பிரச்சனைன்னு தெரியல, மயில்வர்மன் உங்க சொத்து எதுவும் வேண்டாமுன்னு சொல்லித் தான் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

ஃபர்ஸ்ட் பியூ மன்த்ஸ் அவங்க நல்லா இருந்தாங்க. ஆனா போகப்போக ரம்யாவுடைய தேவைகளை மயிலால பூர்த்தி செய்ய முடியல.

ரம்யா ரொம்ப ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாள்.

ரம்யாவுடைய பேராசையால மயில்வர்மன் சம்பாதனையை மீறி ஊர சுத்தி கடன் வாங்கி ரம்யாவை சந்தோஷமா வச்சுக்க முயற்சி பண்ணினாரு.

ஆனா அப்படி கடன் வாங்கியும் ரம்யாவுடைய தேவைகள் அதிகமானதே தவிர, குறைந்த பாடு இல்லை.

பணத்துக்காக ரம்யா போதைப் பொருள் விற்று, நிறைய முறை போலீஸ்லையும் அரெஸ்ட் ஆகிட்டாள்.

ஏன்! நானே ரம்யாவை பலமுறை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சு இருக்கேன்.

ஆனா இந்த முறை ரம்யா பண்ணது பெரிய கடத்தல் விவகாரம்.

அவள் மாசமா இருக்கிறதால அவ பண்ண குற்றதுக்கு உங்க பிரதர் தானாகவே முன்வந்து அரெஸ்ட் ஆகிட்டாரு"
என்று சைத்ரா சொல்ல, வர்மனின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

தன் நண்பனின் நிலையை கண்டு மாயன் வர்மனுக்கு தைரியம் சொல்ல,
"மேடம்...இப்போ நான் என் மயிலைப் பார்க்கலாமா?"என்று வர்மன் கேட்டான்.

"தாராளமா..." என்ற சைத்ரா, அவளுடைய சொந்த முயற்சியில் வர்மனின் உடன் பிறந்த சகோதரன் மயில்வர்மனை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் சகோதரனைப் பார்த்த வர்மனுக்கு பேச வார்த்தைகள் மறந்து, கண்களில் கண்ணீர் மட்டுமே பெருகியது.

"மயில்! என்னடா...உனக்கு எதுக்குடா இந்த நிலைமை?"என்று வர்மன் தன் சகோதரனைப் பார்த்துக் கண்கள் கலங்கினான்.

"அப்பா பேச்சை நான் கேட்டு இருக்கணும் வர்மா. நான் தப்பு பண்ணிட்டேன்"என்று மயில்வர்மன் கதறி அழுதான்.

"வர்மா... எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுவியா?" என்று தன் சகோதரன் முன்னே கையேந்தி நின்றான்
மயில்வர்மன்.

"நீ கவலைப்படாத மயிலு. உன்னை உடனே நான் ஜாமின்ல எடுக்க ஏற்பாடு பண்ணுறேன்"என்று வர்மன் சொல்ல,

"அது முடியாது வர்மா.ஏன்னா நான் இப்போ அரெஸ்ட் ஆகி இருக்கிறது ரொம்ப பெரிய கேசு டா. எனக்கு எப்படியும் பத்து வருஷமாவது தண்டனை கிடைக்கிறது உறுதி" என்றான் மயில்வர்மன்.

"ஏண்டா! நீ என்ன பைத்தியமா, யாரோ செஞ்ச தப்புக்கு நீ எதுக்காகத் தண்டனை அனுபவிக்கணும்! பேசாம கோர்ட்ல இது எல்லாத்துக்கும் காரணம் ரம்யா உண்மையைச் சொல்லு" என்று வர்மன் சொன்னான்.

"இல்லடா வர்மா. ரம்யா வயித்துல வளர்வது என்னோட குழந்தை. என் குழந்தையை நெனச்சு தான், நானாகவே இந்தப் பழியை ஏத்துக்க முடிவு பண்ணேன்" என்ற
மயில்வர்மானின் தந்தை பாசத்தை எண்ணி வர்மனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் போனது.

"வர்மா....என்னைப் பற்றி நீ கவலைப்படாதே, எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுடா,
ரம்யாவுக்கு குழந்தை பிறந்தால், அவள் என் குழந்தையை யாரிடமாவது விற்க கூடத் தயங்க மாட்டாள்.

அதனால நீதான் என் குழந்தையைப் பத்திரமா வளர்க்கணும். அவனுக்கு நீயே தாயாகவும் தந்தையாகவும் இருக்கனும். என் குழந்தையை அனாதையா
ஆக்கிடாத டா" என்று
மயில்வர்மன் தன் சகோதரனிடம் கதறி அழுதான்.

"டேய்... ஏன்டா இப்ப அழற!? என்ன நடந்தாலும் சரி. ரம்யா வயத்துல வளர்வது உன் குழந்தை.நம்ம வீட்டு வாரிசுடா.நான் உன் குழந்தையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதனால உன்னையும் இப்படியே விட்டுடுவேன் நினைக்காத.நான் முதல் வேலையா வக்கிலை பார்த்து உன்னை வெளியே எடுக்க முயற்சி பண்றேன்" என்று தன் சகோதரனுக்குத் தைரியம் கொடுத்தான் வர்மன்.

"வர்மா... அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. எனக்கு வாழவே பிடிக்கலடா. சைத்ரா மூலமா உன்ன கான்டெக்ட் பண்ணி எப்படியாவது என் குழந்தையைக் காப்பாத்துன்னு உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு.

ஆனா இப்படியொரு நிலைமையில் நான் இருக்கிறது தெரிஞ்சா! நீயும் அப்பாவும் கவலைப்படுவீங்கன்னு தான் நான் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவே இல்லை" என்ற மயில்வர்மனின் உடலில் அதிகப்படியான சோர்வு காணப்பட்டது.

"இங்க பாரு மயிலு...நீ எதுக்கும் கவலைப்படாத. என்ன நடந்தாலும் சரி, உன்னை ஜெயில்ல இருந்து வெளியே அழைச்சிட்டு வர வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்று வாக்குறுதி கொடுத்த வர்மன், தன் சகோதரனை வெளியே எடுப்பதற்காக வக்கீலைப் பார்க்க முடிவெடுத்தான்.

தன் சகோதரனின் தோழி என்ற முறையில் சைத்ராவிடம் தன் கைபேசி எண்ணைக் கொடுத்தான் வர்மன்.

அன்றைய நாள் முழுதும் தன் சகோதரனை ஜாமினில் எடுக்க முயன்ற வர்மனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

தன் சகோதரனை எண்ணி வர்மன் கவலைக்கொண்டு இருக்க,
வர்மனின் கைபேசிக்கு சைத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

"வர்மா... ரம்யாவை பற்றிப் பேசணும், உடனே கிளம்பி அரசு மருத்துவமனைக்கு வாங்க" என்று சைத்ரா சொல்ல, வர்மனும் மாயனும் அவசரமாக மருத்துவ மனைக்குச் சென்றார்கள்.

"என்னாச்சுங்க?" என்று வர்மன் கேட்க,"உங்க அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு" என்ற சைத்ரா, குழந்தையை வர்மனிடம் கொடுத்தாள்.

சைத்ராவிடமிருந்து தன் சகோதரனின் குழந்தையைக் கண்களில் கண்ணீருடன் வாங்கிய வர்மன், குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்தான்.

வர்மனின் கண்ணீரை பார்த்துச் சைத்ராவும் கண்கள் கலங்க,
அதே தருணம் சைத்ராவின் அலைபேசி சிணுங்கியது.

விடாமல் ஓசை எழுப்பும் கைபேசியை உயிர்ப்பித்து,"ஹலோ சொல்லுங்க" என்றாள் சைத்ரா.

"மேடம்.... கைதி மயில்வர்மன் அவனோட செல்லுல செத்து கிடைக்குறான் மேடம்" என்றார் காவலாளி.

"என்ன சொல்லுறீங்க!? மயில்வர்மன் இறந்துட்டாரா?"என்ற சைத்ராவின் வார்த்தையைக் கேட்டு,

தன் சகோதரனின் குழந்தையைக் கையில் ஏந்திருந்த வர்மனுக்கு, தன் உடலை விட்டு உயிர் பிரிந்த உணர்வு ஏற்பட,
அப்படியே குழந்தையை தன் இதயத்தோடு அணைத்துக்கொண்டு கதறி அழுதான் வர்மன்.



 
New member
Joined
May 2, 2025
Messages
19
இப்படியும் ponnunga இருக்கஙக தான் இவள கொல்லணும்
 
New member
Joined
Feb 8, 2025
Messages
26
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை
 
New member
Joined
May 2, 2025
Messages
18
ஐயோ அக்கா அருண் பாவம். மயில் இப்போ உயிரோட இல்லையா. இந்த ரம்யா ஒரு பொண்ணா ச்சி இவளை தண்டிக்கணும் பாவமா இருக்கு அக்கா kathai
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
Super super super super super super super super super super super super super super 🤩😍🥰🤩💗🤩🤩💗🤩🤩💗🤩🤩💗
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top