• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

குறையொன்றும் இல்லை - இறுதி அத்தியாயம்.

Joined
Feb 6, 2025
Messages
111
"என்னடி எங்களை அசிங்கப்படுத்திறியா? உன் நண்பர்கள் எதிர்க்க என்னை கேவலப்படுத்தி பாக்குறியா? இதோ பாரு ரோஜா, வேணாம் நீ என்னை ஏற்கனவே கோர்ட் வாசல்ல நிக்க வச்சி அசிங்கப்படுத்திய நிகழ்வையே என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பண்ணிகிட்டு இருந்த உன்னை அப்படியே" என்று கத்தியவன்... ரோஜாவை நோக்கி கோவமாக தன் கரங்களை ஓங்கினான்.
ராஜன் தன் அம்மாவை அடிக்க வருகிறான் என்று புரிந்து கொண்ட குழந்தை திக்ஷி, ரோஜாவை கட்டிக்கொண்டு "அம்மா" என்று அழ தொடங்கினாள்.
"என்னடா தங்கம் பயந்துட்டியா? இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் நம்ம பயப்படக்கூடாது செல்லம். சரி சரி அழாத. நீ வா நம்ம அப்பாகிட்ட போகலாம்" என்று திக்ஷியை செல்லம் கொஞ்சியப்படி ரோஜா தன் தோள் மீது குழந்தையைக் கிடத்திக் கொண்டவள், துர்வாவை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
"துர்கா! பாப்பா இங்க இருந்தா பயந்துடுவாள். நீங்க தாத்தாவையும், பாப்பாவையும் கூட்டிகிட்டு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. டேய்... இவங்கள அந்த ரூமுக்கு அழைச்சிட்டு போ" என்று ரோஜா தன் நண்பனிடம் சொன்னவள் தன் கையில் இருந்த திக்ஷி பாப்பாவை துர்வாவிடம் தந்தாள்.
"இல்லமா பரவாயில்ல. நாங்க இங்கேயே இருக்கோம். நானும் உன் அப்பாகிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு" என்று துர்வாவின் தாத்தா சொன்னதும்,
"என்ன ஐயா? என்கிட்ட என்ன பேசணும்?" என்று ரோஜாவின் அப்பா கேட்க,
"அப்பா... உங்களைப் பார்க்க வந்தவங்க எல்லாம் போகட்டும். அப்புறமா நம்ம குடும்ப விஷயத்தை பேசிக்கலாம்" என்று ரோஜா சொன்னதும், ராஜனின் முகம் மேலும் கோவமாக மாறியது.
"என்ன உங்க குடும்ப விஷயமா? ஏய் ரோஜா! என்ன நீ, என் குடும்பம், உன் குடும்பம்னு இப்படிப் பிரிச்சு பேசுற" என்று ராஜனின் அம்மா ரோஜாவை பார்த்து கேள்வி எழுப்பினாள்.
"இங்க பாருங்க. என் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லன்னு நீங்க பார்க்க வந்து இருக்கிங்க. அதுக்காக உங்க பிள்ளைக்கு நான் டீ மட்டும் தான் தர முடியும். பழையப்படி பொண்டாட்டியா எல்லாம் வர முடியாது. ஒரு வேள உங்களுக்கு அப்படி எதாவது ஐடியா இருந்தா, அந்த நினைப்பை இந்த நொடியே குழி தோண்டி புதைச்சுருங்க" என்று ரோஜா தெளிவாகச் சொல்லி தன் தந்தையின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"என்னடி இவ்ளோ நேரம் அமைதியா இருந்துட்டு, இப்போ என்னமோ பாயிண்ட்டா பேசுற மாதிரி பேசுற. என்ன விஷயம்?" என்று ராஜன் அகங்காரமான குரலில் கேள்வி கேக்க,
"எனக்கு எப்பவும் சாக்கடையில் கல் எரிந்து பழக்கம் இல்லை. இத்தனை வருஷமா உங்க குடும்பம் என்னை மலடின்னு சொல்லும் போது, உங்களை ஆண் மகனாக காட்டிக்கொள்ள வேண்டும்னு நீங்க எப்படி அமைதி க்காத்திங்களோ, அப்படி தான் நான் இப்போ நீங்க பேசுன சில கேவலமான சொற்களை கேட்டும் அமைதியா இருந்தேன்" என்று ரோஜா தெளிவாக பேசும் தைரியத்தை கண்டு கனகா கை தட்டிச் சிரித்தாள்.
"இங்க பாரு ரோஜா. நாங்க எல்லாம் உன்னை பிள்ளை பெத்து தர சொல்லி கஷ்டப்படுத்தியது தப்பு தான். அதை நாங்க உணர்ந்துட்டோம். நடந்ததை எல்லாம் மறந்துடுவோம். நீ வீட்டுக்கு வந்துடு. வேணும்னா இப்போ தான் இந்த டெஸ்ட் டியூப் பேபி இருக்கே. இல்லனா ஒரு பிள்ளையை தத்து எடுத்துக்கூட வளத்துக்கலாம். ஆனா, நீ என் வீட்டுக்கு வந்தா மட்டும் போதும் ரோஜா" என்று கண்களில் கண்ணீருடன் ராஜனின் அம்மா ரோஜாவிடம் கெஞ்சினாள்.
"அப்பா இவங்க இப்போ வந்து இப்படி அழறாங்களே. இங்க நடக்குற விஷயங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு நான் என்ன பண்ணனும்னு தோணுது" என்று ரோஜா தன் தந்தையிடம் தெளிவாக கேட்டாள்.
"ரோஜா உன் கல்யாண வாழ்கை இப்படி ஆனதுக்கு நான் தான் காரணம். அந்த கவலை தான் என்னை இன்னைக்கு இந்த நிலைமையில உக்கார வச்சிருக்கு. வாழ வேண்டிய வயசுல என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையான்னு நான் தினமும் எனக்குள்ள அழுதுகிட்டு இருக்கேன்மா. இனி உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணுடா. ஒரு அப்பாவா நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உனக்கு பக்கபலமா இருப்பேன்" என்று சொன்ன ரோஜாவின் தந்தை கண்கள் கலங்கினார்.
"தாத்தா நீங்க காலையில திக்ஷி பாப்பா என்கூடவே இருக்கணும்னா, துர்காவை நான் ஏத்துக்கணும்னு சொன்னிங்க இல்லையா? அதைப் பற்றி நீங்க என் அப்பாகிட்ட இப்போ பேசுங்க" என்று ரோஜா துர்வாவின் தாத்தாவை பார்த்து தைரியமாக சொன்னதும், சிரித்த முகத்துடன் துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவை நோக்கி அடி எடுத்து வைத்தார்.
"ஐயா! என் பேரன் துர்வேஸ்வரன். இவ என் கொள்ளு பேத்தி. உங்க மக ரோஜாவை என் பேரனுக்கு மறுமணம் பண்ணி வைக்க, உங்க சம்மதத்தை கேட்டு நானே இங்க வரதா தான் இருந்தேன். ஆனா, இப்படி ஒரு சூழ்நிலையில் உங்ககிட்ட இவங்க கல்யாணத்தை பற்றி பேச எனக்கும் சங்கடமா தான் இருக்கு" என்று துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவிடம் அவர் மனதில் உள்ளதை, உள்ளபடி போட்டு உடைத்தார்...
"என்ன? மறுமணமா? இதுக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். இவ என் பொண்டாட்டி" என்று ராஜன் ரோஜாவின் கரங்களை பிடிக்க போனவனை தடுத்தான் ரோஜாவின் நண்பன்.
"என்ன உங்க பொஞ்சாதியா? அதெல்லாம் முடிந்த கதை. இனி ரோஜா வாழ்க்கையில நீங்க இல்ல. முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என்று ரோஜாவின் தோழி சொன்னதும்,
"என்ன ரோஜா இதெல்லாம்? உனக்கு விவாகரத்து நடந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள உனக்கு புது மாப்பிள்ள கேக்குதா? ச்சீ அசிங்கமா இல்ல உனக்கு" என்று ராஜனின் அக்கா அவள் பங்குக்கு குரைத்தாள்.
"ஒரு நாளோ, ஒரு வருஷமோ, மறுமணம் என்பது அவங்கவங்க தனி பட்ட விஷயம். இதுல உங்களுக்கு என்ன ப்ரோப்லேம்?" என்று கனகா கோவமாக கேட்டாள்.
"ஐயா! நீங்க சொல்லுங்க, உங்க மகளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக நீங்க சம்மதம் சொல்லுவிங்களா?" என்று வயதில் மூத்ததவராக இருந்த துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவிடம் மரியாதையாக கேட்டார்.
"இதுல நான் சொல்ல என்ன இருக்கு. என் மகளுக்கு இதுல விருப்பம் இருந்தா, எனக்கும் பரிபூர்ண சம்மதம் தான்" என்று ரோஜாவின் தந்தை சொன்னதைக் கேட்டதும், ராஜன் கோவத்தின் உச்சிக்கு சென்றவன், அருகில் இருந்த டீ கப்பை தூக்கி கீழே வீச, குழந்தை திக்ஷி பயத்தில் அலறினாள்.
ரோஜா குழந்தையை தன் வசம் தூக்கி கொண்டவள், பிள்ளையை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினாள்.
"உங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை. ஒழுங்கா உங்க அம்மா அக்காவை அழைச்சிட்டு இங்க இருந்து வெளிய போயிடுங்க. இல்லைனா நீங்க பண்ண மாதிரியே, நானும் சட்டப்படி உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் சொல்லிட்டேன்" என்று ரோஜா முதல் முறை கோவமாக ராஜனிடம் பேசினாள்.
"நீ எங்க வேணா போ. ஆனா, உனக்கு இன்னோரு கல்யாணம் எல்லாம் நடக்க நான் சம்மதிக்க மாட்டேன்" என்று ராஜன் வெறி பிடித்தவனை போல கத்தியவன், ரோஜாவின் கையை பிடித்து தன் வசம் இழுக்க, இந்த முறை ராஜனின் கன்னத்தை பதம் பார்த்தது ரோஜாவின் கரங்கள்.
"என்ன நானும் போனா போகுதுன்னு விட்டா ரொம்ப பண்ற? என்ன விஷயம்? உங்களுக்கு என்னை பற்றி நல்லா தெரியும். நான் அதிகமா பேச மாட்டேன். ஆனா, தேவையான இடத்துல பேசாமல் இருக்கவும் மாட்டேன். என்னை பொறுத்தவர நீங்க என் வாழ்க்கை எனும் புத்தகத்தின் மேல் உறை மட்டும் தான். உறையை வைத்து புத்தகத்தின் கருத்தை எடை போட முடியாது. சோ, என் வாழ்கை புத்தகத்தின் கிழிந்த உறையான உங்களை நான் எப்போவே தூக்கி எறிஞ்சிட்டேன். மறுபடியும் அந்த உறையை எடுக்க நான் குப்பையை கிளறினால், அந்த துர்நாற்றம் என்னையும் சேர்த்து என்னை சார்ந்தவர்களின் சுவாசத்தையும் அசுத்தப்படுத்திடும். அதனால நீங்க தயவு செய்து இங்க இருந்து வெளிய போயிடுங்க" என்று ரோஜா அதிகமாக பேச விரும்பாத நிலையில் தன் மனதில் உள்ள கருத்தை தெரிவித்தாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
குறை ஒன்றும் இல்லை..

"துர்கா. தாத்தா இன்னைக்கு காலையில உங்க வீட்ல வச்சி என்கிட்ட பேசுன விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அப்போ நான் இருந்த மனநிலையில எனக்கு என்ன பண்றதுனே தெரியல. ஆனா, என்னால திக்ஷி பாப்பாவை விட்டுட்டு கண்டிப்பா இருக்க முடியாது. ஆனா..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு விழுங்க,
"என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் நீ திக்ஷிக்கு அம்மாவா இருக்கணும்னு கட்டாயம் இல்லை ரோஸ்" என்று துர்வா அவன் மனதில் பட்டதைச் சொன்னான்.
"அப்படி இல்ல துர்கா. உங்களுக்கு என்னை மறுமணம் பண்ணிக்க சம்மதமா?" என்று ரோஜா கேட்டதும், துர்வா தன் தாத்தாவை பார்த்து,
"ஏன் தாத்தா? இனிமே நான் பச்ச மிளகாய போட்டே சட்னி சாப்பிடலாம் போல" என்று துர்வா சொன்னதும் ரோஜாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
"அப்புறம் என்ன? எங்க சீனியர் துர்வாவுக்கும், எங்க ரோஜாவுக்கும் சீக்கிரமா கல்யாண ஏற்பாடு பண்ணுங்க அங்கிள்" என்று சந்தோஷமாக சொன்னான் ரோஜாவின் தோழன்.
துர்வா தன் குழந்தையை தூக்கிக்கொண்டு ரோஜாவின் தந்தை அருகில் சென்றான்.
அவன் பக்கம் வந்து நின்ற ரோஜா தன் தந்தையை பார்த்தவள், "அப்பா என்னோட வருங்கால வாழ்க்கையை நான் திக்ஷி பாப்பா கூட வாழணும்னு தான் ஆசைப்படுறேன். என் ஆசை தப்பா அப்பா?" என்று தன் தந்தையின் கரங்களை பற்றிக் கொண்டு கேட்டாள் ரோஜா.
"தப்பு இல்லமா. என் மக எந்த முடிவையும் யோசிக்காம எடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் அப்பாவா கண்டிப்பா உன் ஆசை நிறைவேற நானும் உறுதுணையா இருப்பேன்" என்று சொன்ன ரோஜாவின் அப்பா, திக்ஷியை தன் மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தார்.
"அங்கிள் நீங்களும் எங்க கூட நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. ரோஸ் அப்போ தான் இன்னும் சந்தோஷமா இருப்பாள். நம்ம எல்லாம் ஒரே குடும்பமா இருக்கலாம். என் தாத்தாவுக்கும் நல்ல நண்பன் கிடைத்த மாதிரி இருக்கும்" என்று துர்வா அன்பாக பேசும் தோரணையை மதித்த ரோஜாவின் தந்தை துர்வாவின் கரங்களை பிடித்து கொண்டவர்,
"கண்டிப்பா வரேன் தம்பி. என் மகளுக்காக இல்லைனாலும், என் பேத்திக்காக வருவேன்" என்று சொல்லிக்கொண்டே ரோஜாவின் தந்தை திக்ஷியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
"அப்புறம் என்ன, ஒரு நல்ல நாள் பார்த்து துர்வா, ரோஜா கல்யாணத்தை தடபுடலா நடத்திட வேண்டியது தான். எப்படியோ வந்த இடத்துல எல்லாமே நல்லதாவே நடந்து இருக்கு" என்று சிரித்த முகத்துடன் சொன்ன கனகாவை பார்த்து ரோஜா அழகாக கண் அடித்தாள்.
"இன்னும் உங்களுக்கு என்ன தெரியணும்? அதான் எங்க ரோஜா அவ மனசுல என்ன இருக்குன்னு சொல்லிட்டா இல்ல. முதல்ல எல்லோரும் இந்த வீட்டை விட்டு கிளம்புங்க" என்று ராஜனை அதட்டினான் ரோஜாவின் நண்பன்.
"இரு இருடா. இவங்கள இப்படியே எல்லாம் அனுப்பக்கூடாது. நல்லா நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டு வெளிய அனுப்பனும். அப்போ தான் நம்ம ரோஜாவின் வாழ்க்கையில இவங்க திரும்ப வந்து பிரெச்சனை பண்ண மாட்டாங்க. ரோஜா உன் மனசுல இருக்குற ஆதங்கத்தை எல்லாம் இந்த ஆள் முகத்தை பார்த்து அசிங்கமா நாலு வார்த்தை கேட்டு வெளிய அனுப்புடி" என்றாள் ரோஜாவின் தோழி.
ரோஜா, துர்வாவின் அருகில் இருந்த குழந்தையை தன் தோள் மீது கடத்தி கொண்டவள் ராஜனை நோக்கி வந்தாள்.
"உங்க உடம்புல இருக்குறது முதல்ல குறையே இல்லை. ஆனால், அதை மறைக்க என் மேல பழி போட்டு வேடிக்கை பார்த்ததுக்கு பதிலா, என்கிட்ட முன்னாடியே உண்மையை சொல்லி இருந்தா, இந்நேரம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே ஒரு பிள்ளையை தத்து எடுத்து குறை இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம்.
ஆனா, இப்போ கூட உங்க உடம்புல இருக்குற விஷயத்தை சுட்டி காட்டி நான் உங்களை வெறுக்கல. ஏன்னா ஒரே ஒரு விபத்து நடந்தால் அந்த விஷயம் எனக்கும் கூட வரலாம். ஆனா, நான் அன்னைக்கு உங்களை வேணான்னு முடிவு பண்ணது உங்க உள்ளத்துல இருந்த குறைக்காக தான். இனி என் வாழ்க்கையில நீங்க இல்ல. இவங்க எல்லாம் சொல்றது போல நான் இந்த வார்த்தையை இன்னும் ஆதங்கப்பட்டு, அக்ரோஷமாக உங்களிடம் அதிகப்படியான சொற்களை உபயோகித்து பேச முடியும்.”
“ஆனா, நான் அப்படிப் பண்ண மாட்டேன். ஏன்னா நான் ஐந்து வருடம் உங்க வீட்ல உங்கள் மனைவியா, இவங்களுக்கு மருமகளா, இவங்களுக்கு நாத்தனாரா வாழ்ந்து இருக்கேன். அந்த உறவுக்கு மதிப்பு தந்து தான் என் வார்த்தைகளை இன்னும் மரியாதை குறையாமல் உபயோகப் படுத்துகிறேன். உங்க மேல எனக்கு கோவம் இருந்தது இல்லை. ஆனா, வருத்தம் இருந்து இருக்கு. நமக்குள்ள எப்போ விவாகரத்து நடந்துச்சோ அப்போதுல இருந்து அந்த வருத்தமும் காணாமல் போயிடுச்சு. நான் எனக்கான வாழ்க்கையை வாழ தயாராகிட்டேன். இனி உங்களை சார்ந்த யாருமே என்னை தொந்தரவு பண்ணாதீங்க. இது மட்டும் தான் உங்களுக்கு நான் சொல்ல வேண்டி இருந்தது. நீங்க போகலாம்" என்று சொன்ன ரோஜா திக்ஷியை தூக்கி கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
"இந்த ஜென்மத்துல இனிமே ரோஜா என்னுடையவள் இல்லை. வாங்க போகலாம்" என்று ராஜன் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.
"எனக்கு ரொம்ப சந்தோசம் ஐயா. ஊருக்குப் போனதும் ஒரு நல்ல நாளில் ரோஜா, துர்வா கல்யாணத்தை நல்ல படியா நடத்திடலாம்" என்று துர்வாவின் தாத்தா சொன்னதும்தான் ரோஜாவின் தந்தை தன் இதயம் சீராக துடிப்பதை உணர்ந்தார்.
"சீனியர் நீங்க போய் குழந்தை கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்க உங்க கல்யாணத்துக்கு என்ன எல்லாம் பண்ணலாம்னு பிளான் பண்ணுறோம்" என்று ரோஜாவின் தோழன் சொன்னதும், துர்வா வெட்கப்பட்டுச் சிரித்தான்.
"பாருடா. துர்வாக்கு வெக்கம் எல்லாம் வருது. சரி சரி போ. குழந்தைக்கூட போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்று கனகா நாசுக்காக துர்வாவை ரோஜாவின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.
ரோஜாவின் அறை கதவை தட்டிக்கொண்டு துர்வா உள்ளே நுழையா, கண் எதிரில் குழந்தை அழகாக கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தாள்.
"வாங்க துர்கா. பாப்பா இப்போ தான் தூங்குனா. உள்ள வாங்க" என்று ரோஜா துர்வாவை தன் அறைக்குள் அழைக்க, துர்வா அந்த அறையை சுற்றிப் பார்த்தப்படி உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
சில நொடி மௌனத்தை உடைக்க முடிவு செய்த துர்வா, "ஏன் ரோஸ்? உனக்கு உண்மையாவே என்னை கல்யாணம் பண்ண இஷ்டம் தானா? இல்லை திக்ஷி பாப்பாவுக்காக தான் சம்மதம் சொன்னியா?" என்று துர்வா கேட்ட கேள்வியில் உள்ள சந்தேகத்தை தீர்க்க முடிவு செய்தாள் ரோஜா.
தன் அலமாரியில் துணிகளுக்கு அடியில் இருந்த ஒரு கிரீட்டிங் கார்டை எடுத்து அவன் கையில் தந்தாள். அந்த அட்டையை பிரித்து பார்த்த துர்வா, "ரோஸ்! இந்த கார்ட்?" என்று ரோஜாவைப் பார்த்து ஆச்சிரியமாக கேள்வி எழுப்பியவனுக்கு, விடையாக ரோஜாவின் புன்னகை அவள் இதழோரத்தில் மலர்ந்தது.
"துர்கா! நம்மை நேசிக்கிற உள்ளத்துக்காக வாங்கி வைத்த அன்பளிப்பு கடைசி வரை அவர்கள் கையில் சேராமல் அவர்களின் காதல் முற்றுப்புள்ளியாக முடிந்து போவதுண்டு. ஆனா, உங்க மேல எனக்கான கடந்த கால உணர்வுக்கு பெயர் தான் காதல் என்று நான் உணர்ந்த தருணம், முதல் முதலாக உங்களுக்காக வாங்கிய க்ரீட்டிங் கார்ட் தான் இது. ஆனா, இந்த அட்டையை நான் உங்ககிட்ட தருவதற்கு முன்பே, என் அப்பா என் கல்யாண பத்திரிகையை ஊரெல்லாம் தர முடிவு பண்ணியதால, இத்தனை வருடம் இந்த கார்ட் எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஆனா எப்போ நம்ம இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்தோமோ, அப்போவே ஒரு காலத்தில் என் மனதில் நீங்க இருந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் தானே?"
ரோஜா தன் உணர்வுகளை வெளிப்படையாக துர்வாவிடம் தெரிவித்த தருணம், துர்வா, ரோஜாவைக் காதலுடன் கைபிடிக்க, இவர்கள் இருவரும் திக்ஷி பாப்பாவின் நெற்றியில் தன் இதழ் பதித்து தன் அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள்....
✍சொல்லாத காதல்!
சொல்ல நினைத்த காதல்!
சொன்ன பின் பிரிந்த காதல்!
திருமணத்திற்கு பிறகு முறிந்த காதல்!
சொல்ல துடிக்கும் காதலென்று,
இப்படிப் பல ரகப்பட்டக் காதல்,
நம் வாழ்வில் வந்து மலர்ந்தாலும்,
மறைந்தாலும்...
குறையொன்றும் இல்லை
குறையில்லா காதல் நமக்குக் கிட்டுமெனில்.

🙏........முற்றும்........
நன்றி......🙏
உங்கள் நான் 🔱லீலா சந்திரன்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top