Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
"என்னடி எங்களை அசிங்கப்படுத்திறியா? உன் நண்பர்கள் எதிர்க்க என்னை கேவலப்படுத்தி பாக்குறியா? இதோ பாரு ரோஜா, வேணாம் நீ என்னை ஏற்கனவே கோர்ட் வாசல்ல நிக்க வச்சி அசிங்கப்படுத்திய நிகழ்வையே என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பண்ணிகிட்டு இருந்த உன்னை அப்படியே" என்று கத்தியவன்... ரோஜாவை நோக்கி கோவமாக தன் கரங்களை ஓங்கினான்.
ராஜன் தன் அம்மாவை அடிக்க வருகிறான் என்று புரிந்து கொண்ட குழந்தை திக்ஷி, ரோஜாவை கட்டிக்கொண்டு "அம்மா" என்று அழ தொடங்கினாள்.
"என்னடா தங்கம் பயந்துட்டியா? இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் நம்ம பயப்படக்கூடாது செல்லம். சரி சரி அழாத. நீ வா நம்ம அப்பாகிட்ட போகலாம்" என்று திக்ஷியை செல்லம் கொஞ்சியப்படி ரோஜா தன் தோள் மீது குழந்தையைக் கிடத்திக் கொண்டவள், துர்வாவை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
"துர்கா! பாப்பா இங்க இருந்தா பயந்துடுவாள். நீங்க தாத்தாவையும், பாப்பாவையும் கூட்டிகிட்டு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. டேய்... இவங்கள அந்த ரூமுக்கு அழைச்சிட்டு போ" என்று ரோஜா தன் நண்பனிடம் சொன்னவள் தன் கையில் இருந்த திக்ஷி பாப்பாவை துர்வாவிடம் தந்தாள்.
"இல்லமா பரவாயில்ல. நாங்க இங்கேயே இருக்கோம். நானும் உன் அப்பாகிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு" என்று துர்வாவின் தாத்தா சொன்னதும்,
"என்ன ஐயா? என்கிட்ட என்ன பேசணும்?" என்று ரோஜாவின் அப்பா கேட்க,
"அப்பா... உங்களைப் பார்க்க வந்தவங்க எல்லாம் போகட்டும். அப்புறமா நம்ம குடும்ப விஷயத்தை பேசிக்கலாம்" என்று ரோஜா சொன்னதும், ராஜனின் முகம் மேலும் கோவமாக மாறியது.
"என்ன உங்க குடும்ப விஷயமா? ஏய் ரோஜா! என்ன நீ, என் குடும்பம், உன் குடும்பம்னு இப்படிப் பிரிச்சு பேசுற" என்று ராஜனின் அம்மா ரோஜாவை பார்த்து கேள்வி எழுப்பினாள்.
"இங்க பாருங்க. என் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லன்னு நீங்க பார்க்க வந்து இருக்கிங்க. அதுக்காக உங்க பிள்ளைக்கு நான் டீ மட்டும் தான் தர முடியும். பழையப்படி பொண்டாட்டியா எல்லாம் வர முடியாது. ஒரு வேள உங்களுக்கு அப்படி எதாவது ஐடியா இருந்தா, அந்த நினைப்பை இந்த நொடியே குழி தோண்டி புதைச்சுருங்க" என்று ரோஜா தெளிவாகச் சொல்லி தன் தந்தையின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"என்னடி இவ்ளோ நேரம் அமைதியா இருந்துட்டு, இப்போ என்னமோ பாயிண்ட்டா பேசுற மாதிரி பேசுற. என்ன விஷயம்?" என்று ராஜன் அகங்காரமான குரலில் கேள்வி கேக்க,
"எனக்கு எப்பவும் சாக்கடையில் கல் எரிந்து பழக்கம் இல்லை. இத்தனை வருஷமா உங்க குடும்பம் என்னை மலடின்னு சொல்லும் போது, உங்களை ஆண் மகனாக காட்டிக்கொள்ள வேண்டும்னு நீங்க எப்படி அமைதி க்காத்திங்களோ, அப்படி தான் நான் இப்போ நீங்க பேசுன சில கேவலமான சொற்களை கேட்டும் அமைதியா இருந்தேன்" என்று ரோஜா தெளிவாக பேசும் தைரியத்தை கண்டு கனகா கை தட்டிச் சிரித்தாள்.
"இங்க பாரு ரோஜா. நாங்க எல்லாம் உன்னை பிள்ளை பெத்து தர சொல்லி கஷ்டப்படுத்தியது தப்பு தான். அதை நாங்க உணர்ந்துட்டோம். நடந்ததை எல்லாம் மறந்துடுவோம். நீ வீட்டுக்கு வந்துடு. வேணும்னா இப்போ தான் இந்த டெஸ்ட் டியூப் பேபி இருக்கே. இல்லனா ஒரு பிள்ளையை தத்து எடுத்துக்கூட வளத்துக்கலாம். ஆனா, நீ என் வீட்டுக்கு வந்தா மட்டும் போதும் ரோஜா" என்று கண்களில் கண்ணீருடன் ராஜனின் அம்மா ரோஜாவிடம் கெஞ்சினாள்.
"அப்பா இவங்க இப்போ வந்து இப்படி அழறாங்களே. இங்க நடக்குற விஷயங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு நான் என்ன பண்ணனும்னு தோணுது" என்று ரோஜா தன் தந்தையிடம் தெளிவாக கேட்டாள்.
"ரோஜா உன் கல்யாண வாழ்கை இப்படி ஆனதுக்கு நான் தான் காரணம். அந்த கவலை தான் என்னை இன்னைக்கு இந்த நிலைமையில உக்கார வச்சிருக்கு. வாழ வேண்டிய வயசுல என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையான்னு நான் தினமும் எனக்குள்ள அழுதுகிட்டு இருக்கேன்மா. இனி உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணுடா. ஒரு அப்பாவா நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உனக்கு பக்கபலமா இருப்பேன்" என்று சொன்ன ரோஜாவின் தந்தை கண்கள் கலங்கினார்.
"தாத்தா நீங்க காலையில திக்ஷி பாப்பா என்கூடவே இருக்கணும்னா, துர்காவை நான் ஏத்துக்கணும்னு சொன்னிங்க இல்லையா? அதைப் பற்றி நீங்க என் அப்பாகிட்ட இப்போ பேசுங்க" என்று ரோஜா துர்வாவின் தாத்தாவை பார்த்து தைரியமாக சொன்னதும், சிரித்த முகத்துடன் துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவை நோக்கி அடி எடுத்து வைத்தார்.
"ஐயா! என் பேரன் துர்வேஸ்வரன். இவ என் கொள்ளு பேத்தி. உங்க மக ரோஜாவை என் பேரனுக்கு மறுமணம் பண்ணி வைக்க, உங்க சம்மதத்தை கேட்டு நானே இங்க வரதா தான் இருந்தேன். ஆனா, இப்படி ஒரு சூழ்நிலையில் உங்ககிட்ட இவங்க கல்யாணத்தை பற்றி பேச எனக்கும் சங்கடமா தான் இருக்கு" என்று துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவிடம் அவர் மனதில் உள்ளதை, உள்ளபடி போட்டு உடைத்தார்...
"என்ன? மறுமணமா? இதுக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். இவ என் பொண்டாட்டி" என்று ராஜன் ரோஜாவின் கரங்களை பிடிக்க போனவனை தடுத்தான் ரோஜாவின் நண்பன்.
"என்ன உங்க பொஞ்சாதியா? அதெல்லாம் முடிந்த கதை. இனி ரோஜா வாழ்க்கையில நீங்க இல்ல. முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என்று ரோஜாவின் தோழி சொன்னதும்,
"என்ன ரோஜா இதெல்லாம்? உனக்கு விவாகரத்து நடந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள உனக்கு புது மாப்பிள்ள கேக்குதா? ச்சீ அசிங்கமா இல்ல உனக்கு" என்று ராஜனின் அக்கா அவள் பங்குக்கு குரைத்தாள்.
"ஒரு நாளோ, ஒரு வருஷமோ, மறுமணம் என்பது அவங்கவங்க தனி பட்ட விஷயம். இதுல உங்களுக்கு என்ன ப்ரோப்லேம்?" என்று கனகா கோவமாக கேட்டாள்.
"ஐயா! நீங்க சொல்லுங்க, உங்க மகளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக நீங்க சம்மதம் சொல்லுவிங்களா?" என்று வயதில் மூத்ததவராக இருந்த துர்வாவின் தாத்தா, ரோஜாவின் அப்பாவிடம் மரியாதையாக கேட்டார்.
"இதுல நான் சொல்ல என்ன இருக்கு. என் மகளுக்கு இதுல விருப்பம் இருந்தா, எனக்கும் பரிபூர்ண சம்மதம் தான்" என்று ரோஜாவின் தந்தை சொன்னதைக் கேட்டதும், ராஜன் கோவத்தின் உச்சிக்கு சென்றவன், அருகில் இருந்த டீ கப்பை தூக்கி கீழே வீச, குழந்தை திக்ஷி பயத்தில் அலறினாள்.
ரோஜா குழந்தையை தன் வசம் தூக்கி கொண்டவள், பிள்ளையை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினாள்.
"உங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை. ஒழுங்கா உங்க அம்மா அக்காவை அழைச்சிட்டு இங்க இருந்து வெளிய போயிடுங்க. இல்லைனா நீங்க பண்ண மாதிரியே, நானும் சட்டப்படி உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் சொல்லிட்டேன்" என்று ரோஜா முதல் முறை கோவமாக ராஜனிடம் பேசினாள்.
"நீ எங்க வேணா போ. ஆனா, உனக்கு இன்னோரு கல்யாணம் எல்லாம் நடக்க நான் சம்மதிக்க மாட்டேன்" என்று ராஜன் வெறி பிடித்தவனை போல கத்தியவன், ரோஜாவின் கையை பிடித்து தன் வசம் இழுக்க, இந்த முறை ராஜனின் கன்னத்தை பதம் பார்த்தது ரோஜாவின் கரங்கள்.
"என்ன நானும் போனா போகுதுன்னு விட்டா ரொம்ப பண்ற? என்ன விஷயம்? உங்களுக்கு என்னை பற்றி நல்லா தெரியும். நான் அதிகமா பேச மாட்டேன். ஆனா, தேவையான இடத்துல பேசாமல் இருக்கவும் மாட்டேன். என்னை பொறுத்தவர நீங்க என் வாழ்க்கை எனும் புத்தகத்தின் மேல் உறை மட்டும் தான். உறையை வைத்து புத்தகத்தின் கருத்தை எடை போட முடியாது. சோ, என் வாழ்கை புத்தகத்தின் கிழிந்த உறையான உங்களை நான் எப்போவே தூக்கி எறிஞ்சிட்டேன். மறுபடியும் அந்த உறையை எடுக்க நான் குப்பையை கிளறினால், அந்த துர்நாற்றம் என்னையும் சேர்த்து என்னை சார்ந்தவர்களின் சுவாசத்தையும் அசுத்தப்படுத்திடும். அதனால நீங்க தயவு செய்து இங்க இருந்து வெளிய போயிடுங்க" என்று ரோஜா அதிகமாக பேச விரும்பாத நிலையில் தன் மனதில் உள்ள கருத்தை தெரிவித்தாள்.