New member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 17
- Thread Author
- #1
அத்தியாயம் 6
இன்னும் வெளியே பலவிதமான சத்தங்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தன. கண்ணாடி ஜன்னலின் வழியே கண்மணி வெளியே பார்த்துக் கொண்டிருக்க, தேவ் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு திரும்பியவளோ,
“என்ன தேடறீங்க?”
“உதவிக்கு யாரையாச்சும் கூப்பிட
போன் எதுவும் இருக்கான்னு பார்க்கறேன். இப்போதைக்கு வெளியே போறது அவ்வளவு நல்ல ஐடியா இல்ல, அதோட இங்கேயே இருக்கவும் முடியாது, போனவங்க திரும்பி வந்து கடைக்குள்ள தேடி பார்த்தா நாம வகையா சிக்கிப்போம்.”
சிறிது நேரத்திற்கு பிறகு ஓய்ந்து போய் வந்தமர்ந்தவனிடம்,
“ இவங்களை பார்த்தா டெரரிஸ்ட் மாதிரி எனக்கு தெரியல? கண்டிப்பா கூலிப்படையாத் தான் இருக்கனும், ஏன்னா நான் கவனிச்சவரை அவங்க யாரோ ஒரு குறிப்பிட்ட நபரை குறி வச்சு தான், இந்த பாம் ப்ளாஸ்ட்ட நிகழ்த்தி இருக்கனும்.”
“ உனக்கும் அப்படி தான் தோனுதா?”
சட்டென்று அவனை நோக்கித் திரும்பியவளோ,
“உனக்கும்ன்னா? அப்போ…”
“ம்ம்ம் அவங்க தேடிட்டு இருக்கற அந்த ஆள் நான் தான்னு நினைக்கிறேன், ஏன்னா அந்த பாம் வெடிச்சதே என்னோட வண்டில தான். நல்லவேளையா நான் அந்த டைம் ஒரு ஷாப்ல இருந்தேன், ஆப்டர் த பாம் ப்ளாஸ்ட் காருல நான் இறந்து கிடக்கேனான்னு தேடி கொல்லற அளவுக்கு, எனக்கு யார் எதிரியா இருப்பாங்க?”
தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டவனோ புருவத்தை உயர்த்தி,
“வாட்?”
“ஒருவேளை இது உங்க மனைவியோட வேலையா இருக்குமோ, ஏன்னா இப்படி கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்யற வேலையை மோஸ்ட்லி இப்ப அவங்க தான் செய்யறாங்க, அது தான் தினம் தினம் பேப்பர்ல போடறானே?”
அவளை முறைத்தவனோ,
“ஏன் நீ நல்ல விஷயங்களையே பேப்பர்ல பார்க்க மாட்டியா?”
“அது எங்க இருக்கு? அப்படியே இருந்தாலும் ஏதாவது ஒரு மூலையில தான் இந்த விஷயத்தை எல்லாம் போடுவாங்க, அதை விடுங்க நீங்க இப்ப தான் புதுசா அரேஜ் மேரேஜ் பண்ணியிருக்கீங்களா? அப்பறம் உங்க மனைவி…”
“ஹேய் ஹேய் ஸ்டாப் ஸ்டாப் நான் இன்னும் சிங்கிள் தான், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. முதல்ல நான் இங்க இருக்கிறது என் பேரண்ட்ஸ்க்கே தெரியாது, என் ஆபீஸ்ல கூட ஆன்சைட்க்கு ஒரு வேலை விஷயமா போறதா தான் சொல்லி இருந்தேன், ஆனா நான் இங்கிருக்கறது இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?”
“உங்க போன்…அது மூலமா நீங்க இருக்க இடத்தை அக்யூரெக்ட்டா கண்டு பிடிக்கலாமே?”
“யா கரெக்ட் அதுக்கும் வாய்ப்பு இருக்கு, ம்ம்ம்… பரவாயில்லையே அறிவுதா நீ?”
“சும்மா சும்மா அதையே என்கிட்ட இருந்து கேட்காதீங்க, உங்க கிட்ட கொடுத்துட்டு நான் என்ன சும்மா போறதா? சரி போன் தேடுனீங்களே என்ன ஆச்சு?”
“இங்க எங்கேயுமே இல்ல… ஹேய் ப்ரீசர் பாக்ஸ்ல என்ன தேடற? அங்க எல்லாம் போன் வச்சிருக்க மாட்டாங்க.”
இரண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பி நின்று அவனை முறைத்தவளோ,
“அடிக்கடி உங்க மேல் மாடி காலின்னு ப்ரூப் பண்ணிக்கிட்டே இருக்கீங்க, காலைல இருந்து நான் எதுவுமே சாப்பிடல ரொம்ப பசிக்குது, அதுதான் ஏதாவது உள்ள இருக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
என்னை இழுத்துட்டு வந்தது தான் வந்தீங்க, இந்த ஐஸ்கிரீம் பார்லர்க்குள்ள வராம, பக்கத்துல இருக்கற அந்த மளிகைக் கடைக்குள்ள இழுத்துட்டு போயிருக்கலாமில்ல, அங்கயாவது ஏதாவது சாப்பிட இருந்திருக்கும்.”
“ஆமா ஆமா நான் பக்கத்துல இருக்குற அந்த கடையோட பூட்டை உடைக்கிற வரைக்கும், உன்னை துரத்திட்டு வந்தவங்க நின்னு வேடிக்கை பார்ப்பாங்க பாரு, அப்படி பண்ணி இருந்தா அவங்க கைல இருக்கற துப்பாக்கி குண்டு எப்பவோ உன் மண்டைல இறங்கி இருக்கும்.”
அவனது வார்த்தைகளில் சட்டென்று அவளது உடல் தூக்கி வாரிப் போட்டது ஆனால் அடுத்த நிமிடம்,
“ஹைய் பட்டர்ஸ்காட்ச் சூப்பர் சூப்பர், உங்களுக்கு என்ன வேணும்?”
“எனக்கு எதுவும் வேணாம் தாயே.”
ஒரு பட்டர்ஸ்காட்ச் ஃபேமிலி பேக் டப்பாவை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கு எதிரில் அமர்ந்தவள், ஒவ்வொரு ஸ்பூனாக ரசித்து ரசித்து உண்ணத் தொடங்கினாள். குழந்தை போன்று குதூகலமான முகத்தோடு உருமாறி நிற்கும், அந்த குமரியின் அழகை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டவளோ, அவனது கண்களை கூர்ந்து கவனித்து தனது ஆட்காட்டி விரலை அவன் முகத்திற்கு நேரே நீட்டிய படி,
“இந்த கண்ணுக்குள்ள என்னை இழுக்கனும்னு பார்க்கறீங்களா என்ன? நான் மாட்டேன் ப்பா, எனக்கு நிறைய கடமை இருக்கு, எங்க ஊருக்கு ஒரு பெரிய ஆபீஸரா போய் நின்னு, எங்க அப்பாவை பெருமைப்படுத்தணும். அதோட நான் தேடுற மாப்பிள்ளை நீங்க கிடையாது, அவனுக்கு நிறைய மண்டையில மூளை வேணும்.”
அவளது வார்த்தைகளை கேட்டு கண்கள் சுருங்க சிரிப்பவனின் அழகை கண்டவளது இதயம், அவளே அறியாமல் அவன் வசம் சென்று கொண்டிருந்தது.
“பரவால்ல சிரிச்சா நல்லாவே இருக்கீங்க, வேணும்னா உங்கள வெயிட்டிங் லிஸ்ட்ல போடலாம்.”
“ஆஹான்…ஆனா பாருங்க மேடம், நீங்களே எனக்கு வாழ்க்கை கொடுக்க முன் வந்தாலும், அதை ஏத்துக்கற அளவுக்கு என்கிட்ட மன தைரியம் இல்லம்மா, உன்ன வச்சு இந்த கொஞ்ச நேரமே என்னால சமாளிக்க முடியல, வாழ்க்கை ஃபுல்லா வச்சு சமாளிக்க என்னால முடியாதும்மா.”
அவனது கிண்டல் பேச்சில் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, சிரித்தபடியே அவள் முகத்திற்கு நேராக தனது வலது கையை உயர்த்தியன்,
“ ஐ ம் தேவ்.”
எனக் கூற, டப்பாவிற்குள் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பி,
“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேசக் கூடாது, நம்மள பத்தி எதுவும் சொல்ல கூடாதுன்னு என் அப்பத்தா சொல்லி இருக்காங்க, அவங்க இருக்கும்போது அந்த பேச்சை கேட்கறனோ இல்லையோ, இல்லாதப்ப கண்டிப்பா கேட்கணும் இல்லையா?”
ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி அவள் இதழ்களுக்கு ஈடாக கண்களும் கதை பேசியதைக் கண்டு, தலையை உலுக்கியவனோ எழுந்து கதவை நோக்கிச் செல்ல, அவசரமாக கண்மணியும் எழுந்து அவன் பின்னே ஓடினாள்.
வெளியே மழை தூரல்கள் சிதறத் தொடங்கி இருக்க, ரோடும் சற்று வெறிச்சோடியே காணப்பட்டது. கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தவன் தன்னை தொடர்ந்து வரும் கண்மணியை நக்கலாக பார்த்து,
“முன்ன பின்ன தெரியாத ஆள் பின்னாடி வரலாம்னு மட்டும், உங்க அப்பத்தா சொல்லிக் கொடுத்திருக்காங்களா என்ன?”
“யாரு எவருன்னு தெரியாட்டியும், ஆபத்துல இருக்கிறவங்களுக்கு உதவி செய்யணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால அந்த முகமூடி ஆட்கள்கிட்ட இருந்து உங்கள காப்பாத்த, பாடிகார்டா உங்க பின்னாடி வரேன் அவ்வளவுதான்.”
என்று தோள்களை குலுக்கியபடி அவனோடு இணைந்து நடந்தவளை கண்டவனது இதழ்கள் புன்னகை சிந்தியது. .