• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

இந்த வளந்து கெட்டவனுக்கு என்னாச்சு?, இப்படி நிற்குறானென்று நினைத்தவள்,மாறனை தாண்டி உள்ளே சென்றாள்.


அம்மா என்று பூஜையறையிலிருப்பவரை கூப்பிட, வந்துட்டியாமா என்றபடியே திரும்பியவர், புடவையில் கண்ணுக்கு அழகாய்,அச்சில் வார்த்த சிலை போல், இயல்பான ஒப்பனையோடு இருப்பவளை கண்டு, மாறனோடு அவளை ஜோடியாக நிற்க வைத்து கற்பனையில் பார்த்தவருக்கு, திருப்தியாக இருந்தது.

அழகா இருக்கம்மா.ஃப்ரிஜில் பூ இருக்கு வச்சிட்டு வாயென மீண்டும் தனது வேலையை தொடர்ந்தார்.

ஃப்ரிஜை திறந்தவள் வாவ் மல்லிப்பூ என்று கையிலிருந்த பூவில் வாசம் பிடித்தவளின் செயல்களை இரண்டு கண்கள் ரசித்தது.

ஓஓஓ இவளுக்கு மல்லிப்பூ ரொம்ப புடிக்கும் போல. நல்லவேளை டா மாறா. இந்த பூவை வர வச்சியேனு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான்.

பூஜைக்கு அழைத்தவர்களும் வந்தும் பூஜையும் ஆரம்பமானது.அவரவருக்கு தெரிந்த அம்மன் பாடல்களை பாடினர்.

தாமரையையும் விஸ்வம் பாடச்சொல்ல, பாடியவளின் குரலில் அனைவரும் மெய்மறந்து போனார்கள்.

பின்னர் அம்மனுக்கு ஆரத்தி காட்டி, பிரசாதத்தை கொடுத்து, விரதத்தை நல்ல முறையில் முடித்தனர்.

வந்திருந்தவர்களுக்கு, வீட்டில் செய்த பிரசாதத்தோடு,கிப்ட் பாக்ஸை கொடுக்க,அவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.

சிறப்பா பூஜை முடிஞ்சிட்டு இல்லையா பூரணியென விஸ்வம் கேட்க,ஆமாங்க.
இந்த முறை தாமரை இருப்பதால் தான், அவர்களுக்கும் கொடுத்தனுப்ப பிரசாதம் அதிகமா செய்ய முடிஞ்சிது.

இல்லையென்றால், வழக்கம் போல சாமிக்கு மட்டும் கொஞ்சம் செய்து விட்டு, கடையில் வாங்கி தான் கொடுத்திருக்கனும்.

எல்லா பிரசாதமும்,நல்லா இருந்துச்சிமா என்றவனிடம் உளுந்து வடை மட்டும் தான் நான் செய்தேன் பா.மற்றது,மாங்காய் சாதம், பருப்பு வடை பாயசமெல்லாம் தாமரை தான் பண்ணுச்சிப்பா.

ஓஓஓ மேடம் சமையல்ல டாப் போல.

அப்படி இல்லைங்க சார். ஓரளவிற்கு தெரியுமென்றாள்.

இவ ஒருத்தி, என்றைக்கு தான் இந்த சாரை விட்டு தொலைவாளென்று தெரியவில்லையேனு புலம்பினான்.

சரிங்கம்மா நான் ரூமிற்கு போறேனென்று சொல்ல, ஒரு நிமிஷம்மா என்ற பூரணி, பூஜையறையில் இருந்த தாம்பூலத்தை எடுத்து வந்தவர், வாங்கோ என்று விஸ்வத்தை கூப்பிட்டார்.

இந்தாமானு இருவரும் இணைந்து தாம்பூலத்தை நீட்ட,ஒரு நொடி அதிர்ந்தவள், பின்னர் இருவரின் காலில் விழ, தீர்க சுமங்கலியாக வாழுமா என்று ஆசீர்வதித்தனர்.

எழுந்தவள் தாம்பூலத்தை வாங்கும் போது அவள் கண்கள் கலங்கியது.

ஏன்மா, என்னாச்சென பூரணி பதற, வேதாம்மைவை தவிர, வேறு யாரும் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து, டிரஸ் வாங்கி தந்தது இல்லைங்கம்மா.

அட.... இவ்வளவு தானா, ம்னு சொல்லு, வாரம்,வாரம் பூரணி உனக்கு வாங்கி தருவாளென்றார் விஸ்வம்.

அதுக்கென்னங்க வாங்கி தந்து விட்டால் போச்சென்று சிரித்தார்.

பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு,தனது அறைக்கு வந்து கதவை தாழிட்டவள், அதன் மேலே சாய்ந்து உட்கார,இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வழிந்து ஓடியது.

சற்று முன்னர் நடந்த விஷயத்தை நினைக்க,இன்னும் அவளுக்கு அழுகை வந்தது.

அதாவது பூஜையில் அனைவரும் அவரவர்களுக்கு தெரிந்த பாடல்கள் பாடியும், சுலோகங்களையும் சொல்லி முடித்த பின்னர், ஆரத்தி காட்டும் போது, எல்லாரும் கண்ணை மூடி வேண்டிக்கொண்டனர்.

அப்பொழுது தமிழ் தெரிந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் பரிபூரண நலனோடு இருக்கனும், அவர் செய்யும் தொழில் சிறக்கனுமென்று சொல்வது அவள் காதில் விழும்போது, தாமரையின் மூடியிருந்த கண்களுக்குள் கதிர் வந்து போனான்.

காலையிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்தது, தனக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டியவனுக்காக தான் என்பது, அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

என்னதான் படித்த பெண்ணாகவும், வழக்கமான பெண்களை போல தாலி சென்டிமென்டில் அடங்கி போகமாட்டேனென்று வி. வி. கிட்ட சொன்னாலும், அவளுக்குள் இருந்த நம் பாராம்பர்ய கலாச்சார உணர்வு விழிப்போடு இருப்பதே உண்மை.

கதிர் மேல் கோவமாக இருந்தாலும், அவனுடனான அந்த முகம் தெரியாத சந்திப்புகளை, நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள் ஓர் சிலிர்ப்பு வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.

நேற்று விரதம் பற்றி பூரணி சொல்லும் போது நமக்கு எதுக்கென்று இருந்தவள், காலை எழும்போது, கதிருக்காய் விரதமிருக்க மனம் சொல்லியது.

மனதில் குழப்பம் வரும் போதெல்லாம்,கண்ணை மூடி கடவுளிடம் வேண்டுவதை போல, விரதம் இருக்கலாமானு கடவுளிடம் வேண்ட,அவள் மனம் அமைதியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.

பிறகே அந்த விஷயத்தில் இறங்கினாள்.

அதையெல்லாம் நினைத்து சத்தமின்றி அழுதவள், அடேய் உன்னை புருஷனா ஏத்துக்கவும் முடியலை, வேண்டானு விலக்கவும் முடியலை, எதுக்குடா என் வாழ்க்கையில் வந்தாயென்று கதறினாள்.

சீமக்கரை...

சிந்து என்று திலகா கதவை திறந்து இறங்க,அவரின் சத்தம் கேட்டு மற்றவர்களும் சிந்துவின் அருகில் வந்தனர்.

தனது அம்மாவின் தலையை தூக்கி மடியில் வைத்தவன், அம்மா அம்மா என்று தட்டி எழுப்ப, கண்ணா இந்த தண்ணியை முகத்தில் தெளியென்று திலகா கொடுக்க, அதை வாங்கி சிந்துவின் முகத்தில் தெளித்தான்.

கண்ணை விழித்து, பின் பதறி எழுந்தவர், தனது அப்பாவிடம் சென்று கையை கூப்ப,அவரோ அங்கிருந்து வீட்டினுள்ளே சென்று விட்டார்.

தோட்டத்தில் கடலை உடைத்துக்கொண்டிருந்ததால் வாசலில் நடக்கும் விஷயம், வீட்டு பெண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

அம்மாடி சிந்துனு கூப்பிட்ட வெற்றிவேல் வாங்க உள்ளே போகலாமென்றார்.

அடேய் வந்தவங்களை வாங்கனு கூப்பிடாமல், இப்படி புள்ளையாரு போல நாம நிக்கிறோமென்ற வேலுவோ வாங்க வாங்கனு வீட்டிற்குள் அழைத்தான்.

அப்பொழுது,வாசலுக்கு ஓடி வந்த வள்ளி அப்பாயி, நான் பெத்த மவளே வந்துட்டியாடினு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதற, அதைக்கண்ட சிந்துவோ அம்மா என்று ஓடிப்போய் வள்ளி அப்பாயின் காலில் விழுந்து கதறி அழுதார்.

சீதாவும், ராதாவும் வாசலுக்கு வந்து அங்கிருந்தவர்களை உள்ளே அழைத்துப்போய் ஷோஃபாவில் உட்கார சொல்லி, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்.

வள்ளி அப்பாயியும், சிந்துவும் வாசலிலே அழுவது தெரிந்து, பிரகாசம் தாத்தா வெளியே போனவர், வள்ளி உம் மவளை உள்ள கூப்பிட்டு போ என்றார்.

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த பார்வதி, அக்கா என்க, பாரு என்று எழுந்து போய் தங்கையை கட்டிக்கொண்டு சிந்து அழ, பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வந்தது.

அவர்களிடம் வந்த சீதா, ரெண்டு பேரும் உள்ளே வாங்கண்ணி என்கும் போது வெளியே சென்றிருந்த பெருமாளும் வந்து விட்டார்.

டவுனுக்கு போயிருந்த முத்துக்கும், செல்வத்திற்கும் ஃபோனில் விஷயத்தை சொல்ல, அவர்களும் அதிர்ந்து போய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு, அவ்வளவு அமைதியாக வீடு இருந்தது.

பள்ளிக்கூடம் சென்றிருந்த நிலவனும், செல்வியும் வீட்டிற்கு வந்தவர்கள், அங்கிருப்பவர்கள் யாரென்று தெரியாததால், அமைதியாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.

இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமென்று வெற்றிவேல் பேச ஆரம்பித்தார்.

அங்கிருப்பவர்களை பார்த்தவர் அனைவருக்கும் வணக்கம், நான் வெற்றிவேல். அவங்க என்னோட மனைவி திலகா.இது என் தங்கச்சி சிந்து, அது என் மருமவன் நவீன். நாங்க அசாமிலிருந்து வரோம்.உங்க எல்லாருக்கும் கோவமிருக்கும், இல்லையென்று சொல்ல முடியாது.

இத்தனை வருஷத்திற்கு பிறகு இன்றைக்கு தான் இங்க வரனுமென்று கடவுள் எழுதி வைத்திருக்கிறார் போலனு அவர் பேசும் போது, எஸ்கியூஸ்மி சாரென்று அவருடைய எஸ்கார்ட் வர, திரும்பி பார்த்தவர், என்வென்று கேட்க,தமிழ்நாடு சி. எம். ஆபீஸ்ல இருந்து கால் வந்திருக்கென்றார்.

ஓ என்றவர், கொடுங்க என்று வாங்கியவர், வணக்கம் நான் அமைச்சர் வெற்றிவேல் பேசுறேன்..

என்னாஆஆஆ அமைச்சராஆஆஆஆ என்று கதிர் வீட்டினர் அதிர்ந்தனர்.

சார்.. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நான் என்னோட குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயமாக வரும் போது, அரசாங்கத்திடம் எந்த பாதுகாப்பும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.பொது மக்களுக்கு உங்க பாதுகாப்பை கொடுங்கள்.எனக்கு அரசியல் வேறு, குடும்பம் வேறு. அதை என்றும் நான் ஒன்றாய் பார்ப்பது இல்லை.

அங்கு அசாமிலே நான் சொல்லியதை சி. எம். கேட்காமல் என்னோட பாதுகாப்புக்கு இரண்டு எஸ்கார்ட் அனுப்பியிருக்காங்க.அது போதாதுனு இங்க ஸ்டேஷனில் இருந்தும் எஸ். ஐ, இரண்டு கான்ஸ்டபிளை விட்டு போயிருக்காங்க.அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.

உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க சாரென்று கட் பண்ணியவர் ஃபோனை கொடுக்க, எஸ்கார்ட் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.

எல்லாரையும் பார்த்து தப்பா எடுத்துக்க வேண்டாம், திடீர்னு தவிர்க முடியாத கால் வந்து விட்டது என்கவும், சார் நீங்க அமைச்சரா என்றனர்.

ஹாஹாஹா என்று சிரித்த வெற்றிவேல், சிந்துவை என் கூட பொறந்தவளாக நான் ஏற்றுக்கொண்டு முப்பத்தைந்து வருஷமாகிட்டு.அதனால் அனேகமா உங்களுக்கு நான் அண்ணனாக தான் இருப்பேனென்றார்.

அவரின் பேச்சும், பழகும் எளிமையையும் பார்த்தவர்கள் என்னா மனுஷனென்று உள்ளுக்குள்ளே பாராட்டினர்.

சிந்து என்று வெற்றிவேல் கூப்பிட, கீழே குனிந்து அழுது கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்க, என்ன நடந்துச்சினு அவங்களுக்கு சொல்லுமா.

அவங்களுக்கும் உண்மை தெரியனும் மா.இன்னும் எத்தனை வருஷம், மனசுக்குள்ளே நீ அழுது கொண்டிருப்ப?.

இனி மறைக்க என்ன இருக்கென்ற உண்மையை சிந்துவின் மனசாட்சி உணர்த்த,வீட்டினர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.

அவர் என்ன சொல்லப்போறாரோயென்ற கேள்வி, அனைவரின் முகத்திலும் தெரிந்தது

நடப்பது நடக்கட்டுமென தனது மனதை தேற்றிக்கொண்டு,என்ன நடந்தது என்பதை சிந்துவும் சொல்ல தொடங்கினார்.
திலகாவும் என் கூட ஒன்னா படித்தவள் தான்.ஆனால் பாரு, கவிதாவுக்கு இது தெரியாது.திலகா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் பரதநாட்டியம் சொல்லி தருகிறார்களென்று தெரிஞ்சிது.

எனக்கும் அதை கத்துக்க ஆசை.உங்க கிட்ட சொன்னால் விட மாட்டீங்கனு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு பொய் சொல்லி விட்டு, நான் மட்டும் காலையிலே சீக்கிரம் போவேன்.

அங்க போய்ட்டு வரும் போது தான் வீர் கூட பழக்கமாச்சு.இது திலகாவுக்கும் தெரியாது.வீட்டை நினைச்சி பயம் இருந்தாலும், வீர் பேச்சில் எனக்கு தைரியம் வந்ததுச்சு.

அப்பொழுது தான் பேச்சு போட்டியில் கலந்துக்க மதுரைக்கு போயிருந்தேன்.
நான் பேசி முடித்து கீழே வந்து தண்ணி குடிக்க போனேன், அங்கு வீரோட கூட இருக்கவன் வந்து சிந்துனு கூப்பிட்டான்.யார்னு நான் திரும்பி பார்த்து சொல்லுங்கணானு கேட்க, வீர் சாகப்போறேனு சொல்லுறான்மா.

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டுறான். உனக்காக தான் என்னையும் கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்கு வந்துருக்கான்னு சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டு நானும் பதர, தங்கச்சி ஸ்கூல் டிரஸோட பேசிக்கிட்டு இருப்பதை, யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.இதை போட்டு கிட்டு வா என்று,என் கையில் ஒரு கவரை கொடுக்க,அதை வாங்கி பார்த்தேன்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அதில் முஸ்லீம் போடும் புர்கா இருந்துச்சி.இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பாத்ரூமிற்கு போய் அதை போட்டுக்கிட்டு நான் அவனோடு வெளியே போனேன்.

அங்க யாரும் இருப்பது போல தெரியலை.

எங்கணா இருக்கானு நடக்கும் போது, பக்கத்தில் ஒரு கார் வந்து நிக்க, அதில் இருந்து சிந்துனு வீர் கூப்பிட்டான்.

கார் கதவை திறந்ததும் நானும் அதில் ஏற, அவன் நண்பன் நீங்க பேசிட்டு வாங்கனு அங்கையே நின்று கொண்டான்.

என்னாச்சு வீர்?, எதுக்கு இப்படினு கேட்க,எங்க வீட்ல வேற பொண்ணு பார்த்துட்டாங்க.உன்னை தான் கட்டுவேன்னு சொல்ல,அவங்க கேட்கலை. நீ இல்லையென்றால் நான் செத்துடுவேன் சிந்துனு மருந்து பாட்டிலை காட்டி அழுதான்.

எனக்கு என்ன பண்றதுனு ஒன்னும் புரியலை. சரி வீட்டில் பேசி பாக்கலானு சொல்ல,இப்போ வீட்டுக்கு போனால் நிச்சயம் அந்த பொண்ணு கூட எனக்கு கல்யாணம் பண்ணிடுவாங்க.நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, அதான் கடைசியா உன்னை பார்த்துட்டு போகலானு வந்தேன்னான்.
அவன் சொன்னதையெல்லாம் நானும் நம்பி, இப்போ என்ன பண்ணலானு கேட்க,இன்றைக்கே நாம ஊர விட்டு போகலாம்.உனக்கு என் மேல உண்மையான காதலிருந்தால் என்னை நம்பி வா என்க நானும் சரினு சொல்லிட்டேன்.அதே காரில் சென்னைக்கு போனோம்.

பிறகு அங்கிருந்து டிரைன்ல ஏறி, பூனேக்கும்-பாம்பேக்கும் நடுவுல இருக்கும் கல்யான் என்ற ஊருக்கு மறுநாள் போய் சேர்ந்தோம்.இங்கே யார் வீட்டுக்கு வந்திருக்கோமென்று நான் கேட்க, என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இங்கிருக்கிறான்.அவன் கிட்ட ஏற்கனவே நம்மள பத்தி சொல்லிருக்கிறேன்.அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்னு சொன்னான்.

ஸ்டேஷன்ல இருந்து கொஞ்ச தூரம் நடந்து போகும் போது ரெண்டு தெரு வந்துச்சு.அதுல வலது பக்கமிருந்த தெருவுக்குள் இருந்த கடைசி வீடு கிட்ட போய், கதவைத் தட்ட ,உடனே கதவும் திறக்க, அங்கே ஒரு பொண்ணு, பையனும் இருந்தாங்க.

என்னோட பிரண்டு இவன். அது அவனுடைய வைஃப்னு என்கிட்ட சொன்னான்.

கொஞ்ச நேரம் போனதும்,வேலை இருக்கு நாங்க மூணு பேரும் வெளியில போயிட்டு வரோம்.அப்படியே உனக்கு போட்டுக்கொள்ள, இன்னும் ரெண்டு செட் டிரஸ் வாங்கிட்டு வரேன்.நீ வெளியே போகாமல் பத்திரமா வீட்டில் இருனு சொல்லிட்டு அவங்க மூணு பேரும் போயிட்டாங்க.

அப்போது யாரோ தட்டுற போல சத்தம் கேட்டுட்டு இருந்துச்சு.நான் பயந்துகிட்டு கதவை திறக்கவில்லை.திரும்பவும் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டுச்சு.

நான் போய் கதவ திறக்க, ஒரு அம்மா அங்க நின்னாங்க. அவங்க ஹிந்தில ஏதோ பேசினாங்க எனக்கு எதுவும் புரியல.

நீங்க பேசறது எனக்கு புரியலைனு நான் தமிழ்ல சொல்ல, அதை கேட்ட அந்த அம்மா, ஐயோ எப்படி இந்த படுபாவி கிட்ட வந்து மாட்டினாய்?,நீ யாரு? எந்த ஊரென்று கேட்டதும் எனக்கு ஒன்னும் புரியல.

என்னம்மா சொல்றீங்கன்னு நான் கேட்க, ஐயோ இந்த ரெண்டு பயலுகளும் அப்பாவி பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து, பணத்துக்காக விக்கிறது தான் வேலையா வச்சிருக்காங்க.இங்க அவனுங்கள ஒன்னும் பண்ண முடியாது. பெரிய பெரிய ஆளுங்களை தெரியும்.
எத்தனையே பொண்ணுங்க அவனுங்களால் சீரழிஞ்சு போயிருக்காங்க.

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சால், அவனுங்க இல்லாத நேரத்துல தப்பிக்க வைக்கிறோம்.நீ எந்த ஊருனு கேட்க, நான் மதுரைனு சொல்ல,சீக்கிரம் இங்கிருந்து கிளம்பு, இப்போதைக்கு உன்னை விலை பேச தான் யார்கிட்டயோ போயிருக்கானுங்கனு சொன்னாங்க.

அதைக் கேட்டு எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. தப்பு பண்ணிட்டோமேனு அழுதேன்.

சீக்கிரம் போயிடு. இந்தானு அந்த அம்மா தான், இடுப்புல இருந்து 100 ரூபாய் காசு கொடுத்து என்னை அனுப்பி வச்சாங்க.

அந்த அம்மா காலில் விழுந்து நன்றி சொல்லிட்டு, புர்காவை எடுத்து போட்டுக்கிட்டு நானும் ஸ்டேஷனுக்கு வரும் போது, அப்பதான் ஒரு ட்ரெயின் கிளம்பப்போகும் சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் அதுல ஏறிக்கிட்டேன்.
அது எந்த ஊருக்கு போகுதுன்னு எதுவுமே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்துல டி டி ஆர் வந்து டிக்கெட் கேட்க, என்கிட்ட டிக்கெட் இல்லைனு சொல்ல,அப்போ பைன் கட்டு, இல்லை அடுத்த ஸ்டேஷன்ல இறங்கென்க, என் கிட்ட இருந்த நூறு ரூபாயை காட்டினேன்.

அந்த நேரம், சார் அவங்களுக்கு ஒரு டிக்கெட் குடுங்கனு ஒரு குரல் கேட்டு,நான் திரும்பி பார்த்தேன்.

எந்த ஊருனு என் கிட்ட மராட்டியில் கேட்க, நான் முழிப்பதை பார்த்து, அசாம்கு தாங்கனு அவரே சொல்லிட்டார்.எனக்கு அவர் பேசியதில் அசாம்னு ஊர் சொன்னது மட்டும் புரிந்தது.

டிக்கெட் வாங்கி என் கிட்ட கொடுத்தவர், அவருக்கு தெரிந்த எல்லா மொழியில் பேச, நான் எதுவும் பதில் சொல்லலை.

அப்போ ஊமையா இருப்பாளோனு அவர் தமிழ்ல சொல்லுறது என் காதில் விழ, நான் ஒன்னும் ஊமை இல்லைனு சொன்னேன்..

அப்போ மேடம் தமிழோனு கேட்டார்?

நீலகிரி....

ஒன்பதாம் நாள் , காரியத்திற்கு தனது மனைவியோடு பவியின் தாத்தா வந்திருந்தார்.பேத்தியை பார்த்த பவியின் பாட்டிக்கு, வேதனையாக தான் இருந்தது.

இந்த வயதில் மகனை பறி கொடுத்த நம்மை விட,ஒரே நாளில் தாய் தந்தையை இழந்து அனாதையாக நிற்கும் பேத்திக்காக தனது வைராக்கியத்தை விட்டவர், கணவர் மற்றும் இத்தனை வருடம் அவர்களை மகள் போல பார்த்துக்கொண்ட, தூரத்து உறவுக்கார பெண்மணியோடு நீலகிரிக்கே வந்து விட்டார்.

இவர்கள் வந்தது தெரிந்த பின்னர், மூக்கையனும் இங்கே வருவதை நிறுத்திக்கொண்டார்.

ஒன்பதாம் நாள் காரியத்திற்காக, சில நெருங்கிய உறவுகளை மட்டுமே பவியின் தாத்தா அழைத்திருந்தார்.

உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி,மயிலாவும் காரியத்திற்கு வரவில்லை.
மூக்கையன் மட்டும் பவியின் தாத்தாவிற்கு உதவியாக இருந்தார்.

அய்யரை வைத்து இறந்தவர்களுக்கு செய்யும் பூஜையை முடித்து, வந்திருந்தவர்களுக்கு கடையில் ஆர்டர் பண்ணிய உணவை பரிமாறினர்.

தம்பி வரலையானு பவியின் பாட்டி கேட்க,மருதுக்கு கொஞ்சம் வேலைங்கம்மா, அதனால் தான் வர முடியலை.

தன்னை தவிர்கிறார்கள் என்பது பவிக்கு நன்கு புரிந்தது.ம்கும்,என் கழுத்தில் தாலியை கட்டிருக்கான், இவன் வேறு எங்கே போய்ட போறான்?, நாய் போல என் கால்களை சுற்றி வர வைக்கவில்லையென்றால், நான் பவியில்லைனு உள்ளுக்குள் உரமேற்றிக்கொண்டாள்.

தாய் தந்தை காரியம் முடிந்த மறுநாளிலிருந்து, தான் வேலை பார்க்கும் ஸ்கூலுக்கு போக தொடங்கினாள்.

மர நிழலில் உட்கார்ந்து கொண்டு கணவன் மனைவி இருவரும் மூங்கில் கூடையை பின்னிக்கொண்டிருக்க, மூக்கையனின் ஃபோனிற்கு கால் வரவும் கட்டில் மேலேயிருந்ததை எடுத்து பார்க்க, மருதுனு வந்தது.

அட்டென் பண்ணி சொல்லுப்பா என்க, சவுதிக்கு போகப்போற விஷயத்தை சொல்லியவன்,மூவரையும் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.

கணவரிடம் என்னங்க என்க, நம்ப மூனு பேரையும் அங்க வரசொல்லுறான்.

ஓஓ என்ற மயிலா சரிய்யா, சின்னவன் பள்ளிகூடத்துல இருந்து வரட்டும், சாயங்கால பஸ்ஸுல போகலாமென்று மயிலா சொல்ல, ம்ம் என்றவர் விட்ட வேலையை தொடர்ந்தார்.

இருவரும் மீதமிருந்த கூடைகளை பின்னி முடிக்க, மதியம் மூன்று மணியானது.சரி புள்ள,கையோட இந்த கூடைய கொண்டு போய் நான் குடுத்துட்டு வந்துடுறேன்.

நீ நாலு சோத்தை அள்ளி வயித்துல போடு என்றபடியே, கூடைகளை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு, மூக்கையன் அங்கிருந்து சென்றார்.

வீட்டின் உள்ளே வந்த மயிலா, பானையில் இருந்த நீராகரத்தில் உப்பை அள்ளி போட்டு, உறியில் இருக்கும் தயிரில், இரண்டு கோப்பை கொட்டாங்குச்சி கரண்டியால் அள்ளி நீராகரத்தில் போட்டு, அதே கரண்டியின் பிடியில் நீராகரத்தை கலக்கியவர்,அன்னார்ந்து குடித்து முடித்தார்.

மூவருக்கும் தேவையான துணிகளை எடுத்து பையில் வைக்கும் போது, வீட்டிற்கு வத்தவரோ இந்தா புள்ளைனு கூடைக்கான பணத்தை நீட்ட,அதை வாங்கி சாமி படத்திற்கு முன்பு வைத்தவர், வாயா சாப்புடு.

இரு புள்ள, ரெண்டு சொம்பு தண்ணிய மேல ஊத்திட்டு வரேனென்று வெளியே போனார்.

பின்னர்,மருது சொல்லியது போல மூவரும் கிளம்பி பவி வீட்டிற்கு வர, அங்கு வாசலிலே பவியின் பாட்டியும், தாத்தாவும் இருப்பதை கண்டவர்கள் கோவைக்கு போய் வருகிறோம் என்றனர்.

உள்ளே இருந்தே மூக்கையன் சொன்னதை கேட்டுக்கொண்டே வந்த பவி, அவன் வர சொன்னானோ?, சொல்லாமலே ஓடிப்போய்விட்டானே உங்க பையனென்று திமிராக கேட்க, வாய மூடுடி என்றார் பவியின் பாட்டி.

வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு கூப்பிட மரியாதை தெரியவில்லை, பெரியவங்ககிட்ட எப்படி பேசனும் என்ற அறிவும் இல்லை,என்னோமோ உன்கிட்ட அடிமையா இருக்குற போல, அவன் இவன்னு பேசுறியே?.அடிச்சி பல்லையெல்லாம் ஒடைச்சிடுவேன், இப்படி தான் உன்னை வளர்த்துருக்காளா உன் அம்மா?.

அவள் முறையா கட்டிக்கிட்டு வந்திருந்தால் மட்டு மரியாதை தெரிந்திருக்கும், உனக்கும் சொல்லி கொடுத்து நல்லபடியா வளர்த்திருப்பாள்.அவளே ஒடி வந்தவள் தானே, பின்ன அவளுக்கு இருக்கும் சாக்கடை புத்தி தான் உனக்கும் இருக்கும்.

இன்னொரு முறை இப்படி பேசுறதை பார்த்தேன் தொலைச்சி கட்டிடுவேன்.ஒழுங்கு மரியாதையா அவங்க கிட்ட மன்னிப்பு கேளுடி என்றார்.

ம்கும், நான் மன்னிப்பு கேட்கனுமா, கனவுல கூட நினைக்காதீங்க,நான் ஒரு டீச்சர், என் படிப்பு,உத்யோகம் எங்கே, ஆப்ட்ரால் கூட பின்னிகிட்டு ஆடு மேய்க்கிற இவங்க எங்கே?.

உங்கள் உருட்டல் மிரட்டலெல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்களென்று உள்ளே சென்று விட்டாள்.

அவள் பேசுனதை மனதில் வைத்துக்கொள்ளாதீங்க என்றவர்கள், நீங்க நல்லபடியாக போய் வாங்களென்றனர்

பவி மேல் கொஞ்சம் நஞ்சம் இருந்த எண்ணமும்,அவள் பேசிய பேச்சில் சுத்தமா மருதுவின் பெற்றோருக்கு விட்டு போய்விட்டது.

ரொம்ப தங்கமான பொண்ணை தான் என் மவனுக்கு கட்டி வச்சிருக்க. இதுக்காகவே உனக்கு கோயில் கட்டி கும்பிடனுமென்றார் மூக்கையன்.

பின்னர் பஸ்ஸில் ஏறி கோவைக்கு வந்தனர்.அவர்களை அழைத்து போக மருதுவும் பஸ் ஸ்டேண்டிற்கு வந்திருந்தான்.மகனை பார்த்த மயிலாவிற்கு,குற்ற உணர்சியாக இருந்தது.

மூவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் பிரபலமான நகை கடைக்கு போனவன், தனது சம்பாத்தியத்தில் இதுவரை சேர்த்து வைத்த பணத்திலிருந்து தாய்க்கு தாலி செயின், தந்தைக்கு கெட்டி காப்பும், மிலனுக்கு ஒரு செயினையும் வாங்கி கொடுத்தான்.

எதுக்குப்பா இதெல்லாமென்க, உங்களுக்குனு இதுவரை நான் எதுவுமே செய்ததில்லை பா.நீங்களும் என் சம்பளத்தை பற்றி கேட்டதில்லை. என் மன திருப்திக்காக வாங்குறேன் என்றவன்,ஹோட்டலுக்கு அழைத்து போய் சாப்பிட வைத்து, அறைக்கு கூட்டி வந்தான்.

இரண்டு நாட்கள் மகனுக்கு பிடித்தவைகளையெல்லாம் மயிலா செய்து கொடுத்தார்.

விசாவும் வந்து சேர, பவியின் தாத்தாவிற்கு மட்டும் விஷயத்தை சொல்லிவிட்டு,சவுதிக்கு கிளம்பி விட்டான்.

கண்மணி வருவாள்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top