• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

தாமரையிடமிருந்து ஃபைலை வாங்கிய மாறன், சில நொடிகளில் படித்து விட்டு, பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தான்.


அவர்களும் படித்து முடித்த பின் கேள்விக்கணையை தொடுக்க, அணைத்து கேள்விக்கும் அசராமலும் சாதூர்யமாக பதில் சொல்லிய விதத்தை பார்த்து மாறனுக்கு வியப்பாக தான் இருந்தது.

ஐவரின் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை சொன்னாள்.

ஓகே தாமரை,நம்ப டெக்ஸ்டைல்ஸ் ஸ்பெஷலே பிகரை தத்ரூபமாக பிரதிபலிக்குறது தான்.நம்ப பிராண்ட் சேரிஸ் எல்லாம் பார்த்தீங்கள் என்றால் உங்களுக்கு அது புரியும்.

இப்போ நாங்கள் ஒரு சிச்சிவேஷனை சொல்லுறோம்.அதுக்கு டிராயிங் பண்ணுங்க என்றார் ஹச். ஆர் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ்.

கண்டிப்பாக சார், என்ன கான்செப்ட் சொல்லுங்க என்று ஆங்கிலத்தில் தாமரையும் கேட்டாள்.ஓகே என்றவர், மாறனை பார்க்க, நீங்களே சொல்லுங்க அங்கிள் என்றான்.

எதிர்பாராத சூழலில் ஒரு பொண்ணு கழுத்தில் ஒருவன் தாலி கட்டுறான், அதை பார்த்து அவள் அதிர்ச்சியாகுறாள். இது தான் கான்செப்ட் என்கவும் அவர் சொன்னதைக்கேட்டவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அடக்கொடுமையே, என் வாழ்க்கையையே நான் வரையனுமா?என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர்கள், வாட் ஹேப்பன் தாமரை? என்க, சாரி சார் என்றவள், கொஞ்சம் டைம் குடுங்க தாராளமா வரைஞ்சி காட்டுறேன் என்கவும், ஓகே.அங்கு நோட் பேட்,பென்சில் இருக்கு ஆல் தி பெஸ்ட்.

தேங்க்யூ சார் என்றவள், அவர் சொன்ன இடத்திற்கு எழுந்து போய், அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவள், கண்ணை மூடி தன் இஷ்ட தெய்வத்தை வணங்கியவள், நோட் பேடை எடுத்து பென்சிலால் வரையத்தொடங்கினாள்.

பதினைந்து நிமிடம் கடந்து சென்றது.

ஒரு முறை வரைந்த ஓவியத்தை செக் பண்ணியவள், அதை எடுத்து போய் அங்கிருந்தவர்களின் முன்பு நீட்டினாள்.

ஹச். ஆர், அதை வாங்கி பார்த்து எக்ஸலண்ட் என்று பாராட்டி விட்டு, மற்றவர்களிடமும் காட்ட, மாறனை தவிர மற்றவர்கள் அவள் வரைந்த ஓவியத்தை வெகுவாக பாராட்டினர்.

அந்த ஓவியத்தில் சீமக்கரையில் கதிர் தனது கழுத்தில் தாலி கட்டியதையும், ஊர் மக்கள் அதிர்ந்து பார்த்ததையும் அப்படியே வரைந்திருந்தாள்.

ஓகே தாமரை, வெளியே வெய்ட் பண்ணுங்களென்று அவளை அனுப்பி வைத்து விட்டு, மீதம் இருந்தவர்களை இன்டர்வியூ பண்ணினர்.

மதியம் உணவு வேளையும் வந்தது.

அங்கிருந்தவர்களை நான்காவது தளத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பிட்டு வருமாறு,ஆபிஸ் பாய் சொல்லிச்சென்றார்.

எல்லாரும் எழுந்து கேன்டீனுக்கு செல்ல, தாமரை மட்டும் போகாமல், கையில் எடுத்து வந்திருந்த ஓவிய நோட்டில் வரைந்து கொண்டிருந்தாள்.இதையெல்லாம் உள்ளே இருந்த சிசிடீவியின் மூலயமாய் மாறன் பார்த்துக்கொண்டிருந்தான்.

லஞ்சுக்கு போகாமல் இவள் என்ன அப்படி வரைந்து கொண்டிருக்கிறாள்? என்று முணுமுணுத்தவன், கேட்டீனுக்கு கால் பண்ணி, அவளுக்கு மாதுளை ஜூஸும், வெஜ் சான்ட்விச்சும் சொல்லி விட்டு, தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தான்.

சிறிது நிமிடம் சென்று, மேடம் என்ற குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்த தாமரையின் முன்பு, கையில் இருந்த டிரேவை நீட்டினார் சர்வர் ஒருவர்.

நான் எதுவும் ஆர்டர் பண்ணவில்லையே? என்று அவள் ஆங்கிலத்தில் சொல்ல,மாறன் தம்பி தான் கொடுக்க சொன்னாங்கம்மா என்று அவர் தமிழில் பதில் சொன்னார்.

நீங்க தமிழானு ஆச்சர்யமாக கேட்டாள்.

நம்ப ஊரு கோயம்புத்தூரு தானுங் அம்மணி.

அப்படியாணா என்று சிரித்தவள், நான் நீலகிரி என்றாள்.

அப்படிங்களா அம்மிணி சந்தோஷம் என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

சரி அம்மணி இதை குடிச்சிட்டு, அப்படியே சான்ட்விட்சையும் சாப்புடு, பொறவு நேரம் கிடைக்கும் போது பேசலாம் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து சர்வர் சென்று விட்டார்.

சர்வரிடம் தாமரை சிரித்து பேசிக் கொண்டிருப்பதையும் சிசிடீவியின் மூலயமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், சிரித்தால் இவள் முகம் நல்லா தான் இருக்கு.

அப்புறம் எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு போலயே மூஞ்சி வைத்திருக்கிறாள்? என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.

பின்னர் தனக்கு ஆர்டர் பண்ணிய உணவு வந்ததும், மாறன் சாப்பிட்டு முடிக்கவும் மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

தாமரையும் சர்வர் கொடுத்துச்சென்றதை சாப்பிட்டு முடித்தவள், அதை கொண்டு போய் அங்கிருந்த டஸ்ட்பின்னில் போட்டு விட்டு, அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அதைப்போல் வெயிட் பண்ண சொல்லியிருந்த கேன்டிடேஸும் அங்கு வந்து சேர்ந்தனர்.பின்னர் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான வேலை நியமன லட்டரை கொடுத்தனர்.

தாமரையும் உள்ளேப்போக, அவளை டிசைனிங் பிரிவிற்கு செலக்ட் பண்ணியிருந்தனர்.

மாதச் சம்பளம் மற்றும் வேலையின் டீட்டைல்ஸெல்லாம் இந்த லட்டரில் இருக்கின்றது படித்து பாருங்க என்றார் ஹச். ஆர்.

எஸ் சார் என்றவள், கடிதத்தை படித்து முடிக்க,ஆல் த பெஸ்ட் தாமரை. நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணிக்குங்க.

நிச்சயமாக என்னோட பெஸ்டை கொடுப்பேன் என்றவள்,தேங்க்யூனு சொல்லிக் கொண்டு, கதவை திறந்து வெளியே வந்தாள்.

வீட்டுக்கு எப்படி போக?, நமக்கு வழி வேறு தெரியாதேனு யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஆபீஸ் அட்டெண்டர் அவளருகில் வந்து,மேடம், சார் உங்களை அஞ்சாவது மாடியில் இருக்கும், டிசைனிங் ஃப்ளோரை சுற்றி பார்க்க சொன்னாங்க என்றார்.

ஓகே என்றவள், அங்கிருந்து லிப்டில் ஏறி அஞ்சாவது மாடிக்கு செல்ல,டிசைனிங் செக்க்ஷன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த ரிசப்ஷனுக்கு சென்றவள் உள்ளே போக கேட்க வர, ஆர் யு தாமரை என்று கேட்க?, எஸ், ஆம் தாமரை என்றாள்.

ஓகே மேம் என்றவர்,உள்ளே போங்க என்க, தேங்க்யூ என்று அங்கிருந்த கதவை திறந்து உள்ளேப்போனாள்.

ஏற்கெனவே அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது.அவரவர் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது தாமரை என்ற குரல் கேட்டு வலது பக்கம் திரும்பி பார்க்க, அங்கே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்று கொண்டிருந்தார்.

அந்த பெண்மணியின் அருகில் சென்றவள் மரியாதை நிமித்தமாக விஷ் பண்ண, சிரிப்போடு ஏற்றுக்கொண்டவர், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்றவர், கபோர்டில் இருக்கும் ஃபைல்ஸை காட்டி இதையெல்லாம் படித்து பாருங்கள்.

உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.

தாமரையும் அங்கிருந்த ஃபைலை எடுக்காமல், டிசைனிங் பற்றிய புக்ஸ் இருந்த ரேக்கில் இருந்து ஒரு புக்கை எடுத்தவள்,உள்ளே இருந்த சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்க, அதற்குள் மூழ்கினாள்.

கிளம்பலாமா என்ற கணீர் குரலில்,திடுக்கிட்டு எழும் போது இவ்வளவு நேரம் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகம், கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
நீலகிரி....

மிலன் ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டிருக்க,அவனுக்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்து மூடியவர், சின்னவனே எம்புட்டு நேரம்ல தலைய சீவுவ.வந்து நாலு சோத்தை வயிற்றில போட்டுக்க சாமி என்றார் மூக்கையன்.

சீவிய தலையை கண்ணாடியில் பார்த்து,சீப்பை எட்டி பனை ஓலை வேய்ந்திருக்கும் கூரையில் சொருவியவன், கையை கழுவி விட்டு திரும்பும் போது, மருது வருவதை பார்த்தான்.

அப்பாஆஆஆ, அண்ணன் வரான்ப்பா என்று குரல் கொடுக்க, மிலனின் வார்த்தையைக்கேட்ட மூக்கையன் வெளியே வந்து பார்க்க, பெரிய மகன் வருவது தெரிந்தது.

எலே நேரமாவுது கிளம்புடானு சின்ன மகனை சத்தம் போட்டவர்,வாப்பா என்றார்.

ம்ம் என்றபடியே உள்ளே வந்தவன், மூலையில் இருந்த பனை ஓலைப்பாயை எடுத்து தரையில் விரித்தவன், எரவானத்தில் இருந்த தலகாணியை எடுத்துப்போட்டு, அதன் மேல் படுக்க,எய்யா ஒரு வாய் சாப்பிட்டு படுப்பா.

வேண்டாம்பா, இப்போ தான் அம்மா டீ குடுத்துச்சி. நைட் ஷிப்ட் பார்த்துட்டு உடனே கிளம்பிட்டேன்.கொஞ்ச நேரம் படுக்குறேன்பானு கண்ணை மூட,எட்டி ஃபேன் சுவிட்சை ஆன் பண்ணியவர், சின்ன மகன் சாப்பிட்ட தட்டை வெளியே எடுத்து போய் கழுவி விட்டு, அங்கிருந்த மரப்பரணில் மேல் கவிழ்த்து வைத்தார்.

பின்னர் மர நிழலில் கட்டியிருந்த ஆடுகளுக்கு புல்லு கட்டை எடுத்து போட்டு விட்டு, இன்னொரு குண்டானில் வடி தண்ணியை வைக்க,ஆடுகளும் அந்த நீரை குடித்து, தனது தாகத்தை தீர்த்துக்கொண்டது.உள்ளே வந்து மகனை பார்க்க,மருதுவும் தூங்கியிருந்தான்.

கதவை இழுத்து சாத்தியவர், மயிலா பாதியில் விட்டுருந்த மூங்கில் கூடையை பிண்ணிக்கொண்டிருக்க, அய்யோஓஓ என் குடி மூழ்கிட்டே என்ற குரல் தூரத்தில் கேட்டது.

என்ன நம்ப தங்கச்சி குரல் போல இருக்கேனு வழியை பார்க்க, மூக்கையனின் தங்கை தான் வந்து கொண்டிருந்தார்.

சத்தம் போட்டுக்கொண்டே வந்தவர் அண்ணனை பார்த்ததும், என் தலையில மண்ணள்ளி போட உனக்கு எப்படிணா மனசு வந்துச்சி?.பொறந்ததுல இருந்து எம் மவ செல்லத்துக்கிட்ட மருது தான் உன் புருசன்னு சொல்லி வளர்த்தேனே?.

அதையெல்லாம் மண்ணா போய்ட்டே.

என் ஆத்தா அப்பன் உசுரோட இருந்திருந்தால் இப்படி என் மவ தலையெழுத்து அந்தராசியில நிக்குமானு? ஒப்பாரி வைத்தார்.

தங்கையின் அழுகையை கண்டவர்,எம்மா முருகாயி, அழாதத்தா. கடவுள் போட்ட முடிச்சி நாம என்ன செய்ய?.ஆமாம் உனக்கு எப்படி விசயம் தெரியும்?.

பக்கத்து மலையில் தான் முருகாயி கணவன் ஊர்.இங்கிருந்து போனவர்கள் யாராவது சொல்லி இருந்தால் தான் விஷயம் தெரிந்திருக்குமென்று மூக்கையனும் புரிந்து கொண்டார்.

அண்ணனின் கேள்விக்கு காத்துல வந்து சேர்ந்தது.நடந்தது ஆமாவா, இல்லையா?

இங்க பாரு முருகாயி, எப்ப வேணா வா எத்தன நாள் வேண்டுமானாலும் தங்கு. உனக்கு என்ன வேணுமோ கேளு,அண்ணன் உசுரோட இருக்கிற வரைக்கும் உனக்கு செய்வேன்.எனக்கு அப்புறம் என் மகனுங்க செய்வானுங்க.ஆனால் என் புள்ளைங்க கல்யாண விஷயத்துல மட்டும் தலையிடாதே.

நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது.அவன் தலையில மலையம்மா என்ன எழுதி வச்சிருக்காளோ அதுப்படித்தான் நடக்கும்.மருமகளா பவி தலைல தான் எழுதியிருக்கு.அப்படியே நடந்துடிச்சி.உன் மகளுக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து நானே முடிச்சு வைக்கிறேன்.

மாமன்காரனா என்ன செய்யணுமோ அதை உன் வீடு தேடி வந்து செய்வேன். இதோட நிறுத்திக்கிறது தான் மரியாதை என்றார்.

அண்ணனின் கோப குணம் தெரிந்து, இனியும் இதைப்பற்றி பேசி ஒன்னும் புண்ணியமில்லைனு முருகாயிக்கு புரிந்துவிட்டது.

அண்ணா,என் கூடப்பிறந்தவன் நீ செய்யாம வேற யார் செய்யப் போறானு அப்படி பேச்சை மாத்தியவர், எங்க மைனிய காணும் என்க, பவி வீட்டுக்கு போயிருக்கிறாள்.உள்ள சோறு இருக்கு போட்டு சாப்பிடு, போத்தா என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நீலகிரி!

தூங்கி எழுந்தவன்,வேறு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்து, தொட்டியில் இருந்த தண்ணியை அள்ளி முகத்தை கழுவியவன், தலைக்கு மேல் படர்ந்திருந்த வேப்பங்கிளையில் ஒன்றை எட்டி பிடித்து ஒடித்தவன், அதால் பல்லை துலக்கினான்.


இப்பொழுது தான் எழுந்து வந்திருக்கும் மகனை பார்த்தவர், எப்பாடி மணி என்ன ஆகுது?,போய் சாப்பிடு என்றார் .

வாயை கொப்பளித்து முடித்தவன் நீ சாப்டியா பா என்றான்.

இன்னும் ஒரு கூடை இருக்கு. அதுக்கு தலை கட்டிட்டால் வேலை முடிஞ்சுரும். அதை முடிச்சிட்டு நான் வறேன். நீ போய் சாப்பிடுப்பா.முடிச்சிட்டே வாப்பா ஒன்னா சாப்பிடலாம்.

மகனைப் பார்த்து சிரித்தவர், காத்தாட இங்க உக்காரு என்க, தந்தையின் பக்கத்தில் கிடக்கும் கயிற்று கட்டிலில் வந்து மருது உட்கார, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன் அத்தை வந்துட்டு போச்சி.

அதற்கு ஓ என்றவன், அத்தை எதற்காக வந்திருப்பார் என்று அவனுக்கு புரிந்தமையால் அமைதியாக இருந்தான்.

சிறிது நொடிகள் சென்று அப்பா என்று கூப்பிட, வேலையை செய்து கொண்டே சொல்லுப்பா என்றார்.

நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் பா என்க,அது எனக்கு நல்லா புரியுது.ஏதோ நல்ல முடிவா எடுத்த பிறகு தான், இவ்வளவு காலையிலே நீ வந்திருக்கேன்னு மனசுல பட்டுடுச்சு என்று மூக்கையன் சொல்ல, தந்தையின் அனுபவ அறிவை எண்ணி மருதுவும் சிரித்து விட்டான்.

சிரிக்கும் மகனை பார்த்தவர், சொல்லுப்பா, என்ன விஷயம்?.

நீ சொன்னப்போல முதல்ல அவளுக்கு நல்ல நண்பனா இருந்து, இப்போ இருக்கும் இறுக்கத்திலிருந்து, அவளை வெளியே கொண்டு வருவதுனு முடிவு பண்ணிட்டேன் பா. கொஞ்சம் சிரமம் தான், ஆனால் மனசு வச்சால் முடியாதது எதுவும் இல்லைனு நீ சொல்லுவியேப்பா...அந்த நம்பிக்கையோடு ரெண்டு மாசம் மெடிக்கல் லீவு கேட்டு வந்துருக்கேன்பா.

நீ சொன்னதை கேட்ட பிறகு, எனக்கு அங்க நிம்மதியா இருக்க முடியலைப்பா.
கோழை பயல் போல தான் இதிலிருந்து தப்பிச்சி ஓடி போயிருக்கேன்.என் தப்பை எனக்கு புரிய வச்சிட்டப்பா.

சாய்ந்தரம் மனநல மருத்துவர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிருக்கேன். அவளை கூட்டிக்கிட்டு நான் போய்ட்டு வரேன்.இதற்கு அவங்க நல்ல தீர்வு தருவாங்களென்று மனதில் இருந்ததை மருது சொல்லி முடிக்க,அப்போ, தாமரைய நீ மறந்துட்டியா என்றார்.

தந்தையின் கேள்விக்கு வேறு பக்கம் திரும்பியவனின் கண்கள் கலங்கியது. உன் கேள்விக்கான பதில் இப்போதைக்கு என் கிட்ட இல்லைப்பா. ஆனால் பவிய பழைய நிலமைக்கு கொண்டு வர என்னால் முடிந்த எல்லாம் செய்வேன்.

மகனின் மன உணர்வுகளை மூக்கையனால் புரிந்து கொள்ள முடிந்தது.சரிப்பா, எல்லாம் அந்த ஆத்தா பார்த்துப்பாள் என்றவர், பிண்ணிய கூடைகளை எடுத்து போய் அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, வெளியே வந்தார்.

தேவையில்லாததான அறுத்து போட்டிருந்த கூப்பைகளை அள்ளிக்கொண்டு போய் குப்பை மேட்டில் போட்டு விட்டு,தொட்டியில் இருந்த தண்ணீரில் கை, கால், முகத்தை கழுவியர், வாப்பா சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றார்.

உள்ளே வந்தவர் இரண்டு தட்டை எடுத்து கீழே வைத்து விட்டு, மயிலா சமைத்தவைகளையும் எடுத்து வைத்தவர், சொம்பில் தண்ணி எடுக்க போக,உள்ளே வந்த மருது தட்டுகளுக்கு முன்பு போய் உட்கார்ந்தான்.

தண்ணீர் சொம்போடு வந்தவர், அவனுக்கு எதிர் புறமாய் உட்கார்ந்து இருவருக்கும் உணவை பரிமாற, பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

மகன் சாப்பிட்ட தட்டையும் எடுத்து போய் வெளியே இருந்த தண்ணீரில் கழுவி, காய வைத்து விட்டு, கட்டிலின் மேல் ஓய்ந்து உட்கார்ந்தார்.

இவ்வளவு நேரம் கீழே குனிந்து கொண்டே மூங்கில் கூடையை பின்னியதால், கழுத்து பக்கம் வலித்தது. வலம், இடம் இரண்டு பக்கமும் தலையை திருப்பியவர், கட்டில் மேல் அப்படியா மல்லாந்த வாக்கில் படுத்து கண்ணை மூடினார்.

சிறிலு நிமிடங்கள் சென்று கண்ணை திறக்க, மருதுவோ தனது அப்பாவின் தோள் பட்டையையும், கழுத்தையும் பிடித்து விட்டுக்கொண்டிருந்தான்.

மகனை பார்த்து சிரித்தவர், ஒன்னும் இல்லை தம்பி. ரொம்ப நாள் கழித்து குனிந்து பிண்ணினேன் அதான் லேசா வலி வந்துட்டு.கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகிடும் என்றவர், நீ போய் அவங்களை பாருப்பா என்க..

உள்ளே போய்,மேல் சட்டையை போட்டுக்கொண்டவனும் பவி வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

வழியில் பார்ப்பவர்கள் அவனிடம் நலம் விசாரிக்க, அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே சென்றவன், பவி வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்க்க, மயிலா சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.

அம்மா என்றவாறே மயிலாவின் அருகில் சென்றவன், அவ எங்க இருக்காளென்று கேட்டவனுக்கு, ரூம்ல போய் பாருப்பா என்றார்.

சரிமா என்ற மருது, அங்கிருந்த பவியின் அறையின் முன்பு வந்தவன், தயங்கிக்கொண்டே கதவை திறந்தான்..

சீமக்கரை...

வளவனிடம் வந்த அன்பழகன், நீ என்ன சொல்லுற?என்க..

எதை மாமா சொல்ல? என்றவாறே கலங்கி நின்றான்.

அப்பு என்னப்பா, எதா இருந்தாலும் சொல்லுய்யானு மீண்டும் அன்பழகன் கேட்க, பெருமாள் சொல்லிய அனைத்தையும் தனது அத்தை குடும்பத்திடம் சொல்லி முடித்தான்.

அதைக்கேட்ட அன்பு,ம்கும் வருஷங்கள் மாறி விட்டாலும் வார்த்தைகள் மாறாது அப்பு.ஆயிரம் பேர் சொல்லி குடுக்கலாம்.உங்கப்பனுக்கு அறிவு எங்கேடா போச்சு?.பிறந்ததிலிருந்து ஒன்றாக வளர்ந்தும்,எவனோ சொன்னானு நம்பிருக்கானே இதை என்னவென்று சொல்ல?.

என்னை பார்த்தால் பணத்துக்கும், பதவிக்கும் ஆசப்படுற போலவா இருக்கு?.அத்தனை பேருக்கு முன்னாடி என்ன வார்த்தை கேட்டார் அந்த ஆளு.
அவர் பேரை சொல்லக்கூட எனக்கு இஷ்டம் இல்லப்பு.எப்படியோ அப்பன் பங்குக்கு அவர் அசிங்க படுத்திட்டார்.

இப்போ மகன் பங்குக்கு அவனும் பண்ணிட்டான். இன்னும் உசுரு தான் இருக்கு, அதுவும் குடுத்தால் உங்க வீட்டில இருக்கவங்களுக்கு திருப்தியாகிடும் இல்லையா?.

அய்யோ மாமா,ஏன் இப்படி பேசுறீங்க?,மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.

என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அப்பு என்னோட வேதனை தெரியும் அப்பு.பெத்த பொண்ணு எங்க போனான்னு தெரியலை, அது கண்டுபிடிக்க வழியில்லாம இருக்கனேனு தலையில் அடித்துக்கொண்டு அன்பு அழுதார்.

தாமரையை கண்டுபிடிச்சிடலாம் மாமா கவலைப்படாதீங்க என்றவன், அது கூட படிச்ச பிள்ளைங்க, பிரண்ட்ஸ்ங்க யார் வீட்டுக்காவது போயிருக்கலாம் இல்லையா?,அதை முதலில் விசாரிக்கலாம் என்றான்.

வளவன் சொன்னதையெல்லாம் உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த வேதா, அறைக்கதவை திறந்து வெளியே வந்தவர் வளவா என்றார்.

அந்த குரலில் பின்பக்கமாய் வளவன் திரும்பி பார்க்க, வேதா நின்று கொண்டிருந்தார்.

அவர் அருகில் சென்றவன் என்னையாம்மா கூப்பிட்டீங்க?

உன்னை தானப்பா என்றவர், அவன் கன்னத்தை ஆதுரமாக தடவி விட்டு,தாமரைக்கு பவி,மருது இருவரை தவிர,வேற நண்பர்கள் யாருமே இல்லை கண்ணா.

வேதா சொன்னதை கேட்ட வளவன், ஒருவேளை இவங்களுக்கு தெரியாமல் வேறு யார் கூடயாவது கிளாஸ்ல பழக்கம் இருக்கலாமேமா?.

அதுக்கு வாய்ப்பு இல்லை கண்ணா. மூணு பேருமே வேற யாருகிட்டயும் ஓட்ட மாட்டாங்க என்கவும், இதுவேறையா என்றவன்,அப்போ எங்க தாம்மா தாமரை போயிருக்கும்?.

ஒன்னும் புரியலையேனு வளவன் சொல்ல, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமானு கவிதா கேட்க, மனைவி பக்கம் திரும்பி பார்த்த அன்பு, மரியாதையா வாய மூடிக்கிட்டு உன் வேலையை பாரென்றார்.

கணவரின் வார்த்தையைக் கேட்ட கவிதாவோ வாயை மூடி சத்தம் இல்லாமல் அழுதார்.

அல்லி, போய் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வா என்று வளவன் சொல்ல,சரி மாமா என்றவள், ப்ரிஜில் இருந்த பாலை எடுத்துட்டு போய்,அவளுக்கு தெரிந்த போல டீயை போட்டவள், சிறிது நிமிடத்தில் எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுக்க, வேதா, கவிதாவை தவிர மற்றவர்கள் குடித்தனர்.

ஒருவேளை தாமரை சிங்கப்பூருக்கு போயிருக்குமானு,அன்பு கேட்க, இதை பத்தி நான் யோசிக்கவில்லையேணா என்று சொல்லி விட்டு, பேகில் இருந்த ஃபோனை எடுத்து வி. வி.என்ற நம்பருக்கு கால் பண்ணினார்.

முதல் அழைப்பு ஏற்கப்படவில்லை. பின்னர் மீண்டும் கால் பண்ண,இந்த முறை அட்டென்ட் பண்ணிய வி. வி,சொல்லுங்க வேதா...

பின்னர் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, தாமரையை நேற்றிலிருந்து காணுமென்க, அதைக் கேட்ட வி. வி இப்பொழுது தான் விஷயத்தை கேட்பது போல அதிர்ந்தார்.

என்ன சொல்றீங்க வேதா?, தாமரையை காணுமா?, என்னாச்சு?.

தனக்கு தெரிந்தவைகளை வேதாவும் சொல்ல, ம்ம் என்றவர், எனக்கும் ஒன்னும் கால் பண்ணலை.கவலைப்படாதீங்க வேதா. உங்க நல்ல மனதிற்கு தாமரை எங்கே இருந்தாலும் நல்லாருப்பாள்.

தாமரையை பற்றி எது தெரிந்தாலும் நான் இன்ஃபார்ம் பண்ணுறேன், அதேப்போல் உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் என்றவாறு ஃபோன் அழைப்பை கட்டானது.

என்னாச்சு வேதா?, அவங்களுக்கு எதாவது தெரியாமானு பதற்றமாக அன்பு கேட்க, இல்லைணா.தாமரை அவங்களை கான்டக்ட் பண்ணலைனு சொல்லுறாங்க.

அய்யானரப்பா எம்மகளை சீக்கிரம் என் கண்ணுல காட்டுய்யா என்றவர்,ஆமா வளவா நீ வந்ததும் என்னமோ சொன்னியே முத்துவும் பாவம் பண்ணிட்டான்னு.

யாருக்கு என்ன பாவம் பண்ணுனான்?, அதுக்கு ஏன் நீ வேதாகிட்ட மன்னிப்பு கேட்குற?என்க,அதில் வேதாவை நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையில் என்ன கண்டானோ தெரியவில்லை.அமைதியாக கீழே குனிந்து கொண்டான்.

வளவனை பார்த்தவர், உன்னை தான் கேட்குறேன் என்கவும்,ஒன்னும் இல்லை மாமா.அப்பா பண்ணிய விஷயத்துக்கு தான் அப்படி சொன்னேன் என்று சமாளித்தான்.

கதிர் வீடு..

அப்பா நான் ஒரு முடிவு பண்ணிருக்கேனென்று கதிர் சொல்ல, இப்போ யார் குடிய கெடுக்க உத்தேசமோவென்று, சமையலறையிலிருந்து சீதாவின் குரல் கேட்டது.

சொல்லு அப்பு, என்ன விஷயமென்றார்? பிரகாசம் தாத்தா.

நான் செஞ்ச தப்பை நானே சரி பண்ணுறேன்.

தாமரை எங்கே இருந்தாலும் தேடி கூப்பிட்டு வந்து, ஊரறிய என் பொண்டாட்டியா ஏத்துக்க போறேனென்றான்.

அவன் வார்த்தையை கேட்டு மற்றவர்களுக்கு சரியென்று பட,அங்கு வந்த சீதா, கழுத்தை வெட்டிட்டு மருந்து போட்டால் சரியாகிடும் போல என்க..

பெருமாள், கதிர்,மற்றும் முத்துவிற்கு சீதாவின் வார்த்தை சாட்டையடி போல் இருந்தது.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top