Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
"சொல்லு... நீயெல்லாம் ஒரு தாயா?".
உன் மவன் அத்தனை பேருக்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு,நீ நல்ல மனுஷியா இருந்தால் என்ன பண்ணிருக்கனும்?.
"அன்றைக்கு, இந்த வாயால் எதையாவது கேட்டியா?".யார் வீட்டு எழவோனு தானே ஒப்பாரி வச்சிக்கிட்டு நின்ன?,இப்போ என்ன மகள், மண்ணாங்கட்டினு."உங்களையெல்லாம் பார்த்தால், எனக்கு கொலை வெறி வருது".
அதான்,உன் பேரன் பண்ணிய காரியத்தால என் மவளை வீட்ட விட்டு போக வச்சிட்டிங்களே, இன்னும் என்ன மீதி இருக்கென்று அழுது கொண்டே கவிதா கேட்டார்.
என்ன...,தாமரை வீட்டை விட்டு போய்ட்டாளானு கதிர் வீட்டினரும் அதிர்ந்தனர்
அப்பொழுது, அத்தை என வளவன் கூப்பிட,அவன் குரலைக்கேட்டு திரும்பியவர்,அய்யா வளவாஆஆஆ...
உன் அத்த மவ லட்டர் எழுதி வச்சிட்டு எங்கையோ போய்டாள் சாமி என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
என்னத்தை சொல்லுற?,என்ன நடந்துச்சினு சொல்லு?? என்றபடி கவிதாவிடம் வந்தவன்,முதல்ல அழாதே.
எங்கே போயிருக்க போகுது,வேதா அம்மாகிட்ட தான் போயிருக்கும் என்றவன்,சிவா... அடேய் சிவா...
எதுவும் சொல்லாமல் அங்கு வந்து நிற்பவனை பார்த்தவன் ஏன் இதையெல்லாம் சொல்ல மாட்டியாடா என்று முறைத்தவன்,சாதாரணமா ஃபோன் பண்ற போல,வேதாம்மாக்கு கால் பண்ணு.
வளவன் சொன்னதைக்கேட்டவன், சரி மாமானு ஃப்ரிஜ் மேல் இருந்த ஃபோனை எடுத்தவன், வேதாவின் நம்பருக்கு கால் பண்ண,சுவிட்ச் ஃஆப் என்ற கணினி குரல் கேட்டது.
மாமா ஃஆப்ல இருக்கு என்றவன், மருது அண்ணன் வீட்டுக்கு ஃபோன் பண்ணுறேன் என்றவாறு, மூக்கையன் நம்பருக்கு கால் பண்ணினான்.
நீலகிரி...
இனி மகன் வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ என்ற யோசனையோடே, அந்த மலையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்த மூக்கையன் செல்லிற்கு, கால் வரும் சத்தம் கேட்டது.
தனது பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்த பார்க்க, சிவா என்று வர, என்னவா இருக்கும், சிவா புள்ள ஃபோன போடுதே என்று யோசனையாக, கால் கட் ஆனது.
பின்னர், மீண்டும் அழைப்பு வர, அட்டென் பண்ணியவர், சொல்லுப்பா, நல்லா இருக்கியா சிவா?, ஊட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?.
எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா, அங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?, அத்தை ஃபோனுக்கு கால் போட்டேன் ஃஆப்ல இருக்குனு வருது."அதான் உங்களுக்கு பண்ணுனேன்".
ஆமா பா, சார்ஜ் இல்லைனு வேதா சொல்லுச்சி என்றவர், இரு போய் கொடுக்குறேன் என்றவரிடம், சரிங்கப்பா,அத்தை வீட்டுக்கு போனதும், ஒரு மிஸ்டு கால் விடுங்கப்பா.நான் கால் பண்ணுறேன் என்றவாறு கட் பண்ணினான்".
ஃபோனை எடுத்துக்கொண்டு வேக எட்டுக்களோடு நடந்தவர், வேதா, வேதா என்று கூப்பிட, வரேண்ணானு சொல்லிக்கொண்டே வெளியே வந்தவர், சொல்லுங்கண்ணா?.
அம்மாடி... சிவா புள்ளை ஃபோன் பண்ணுச்சி.உன் ஃபோனுக்கு போகலைனு சொல்லுச்சி.இந்தா முதல்ல பேசுமா என்று தனது ஃபோனை நீட்டினார்.
மூக்கையினிடமிருந்து ஃபோனை வாங்கியவர், அண்ணா.., அண்ணாகிட்ட விஷயத்தை சொல்லிடட்டுமா?,ஹம் சொல்லுடுமா,எதுக்கு இதை மறைச்சிக்கிட்டு இருக்கனும்?. "என்றைக்கு இருந்தாலும் தெரியத்தானே போகின்றது".
எப்போ தெரிந்தாலும் விஷயம் ஒன்னு தான்.அதுக்கு எதுக்கு நாளை வளர்த்தி கிட்டு...
நீங்கள் சொல்வதும் சரிதான்ணா என்றவர் சிவா நம்பருக்கு கால் பண்ணினார்.இரண்டு ரிங் போனதும், கட் ஆகியது.மீண்டும் கால் பண்ண போகும் போது, சிவா நம்பரிலிருந்தே கால் வந்தது.
அட்டென் பண்ணியவர், சிவா என்க, நான் தான் அத்தை என்றவனிடம், எப்படி இருக்கீங்க எல்லாரும்?.பொங்கல் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா?.
தாமரைக்கு இது தான் புது அனுபவமாச்சே.நல்லா என்ஜாய் பண்ணுனாளா? என்று கேள்விகளை அடுக்கினார் வேதா.
அத்தை.... என்று சிவா தயங்க, என்னடா?, நான் பாட்டுக்கு கேள்வி கேட்டு கிட்டு இருக்கேன்.நீ எதுவும் சொல்லாமல் தயங்கிட்டு இருக்குற?. யாருக்காவது உடம்பு சரியில்லையா? என்று பதற,அத்தை என்று மீண்டும் தயங்கியவன்,அக்கா...அக்காவை காணும் என்று,ஒரு வழியாக, விஷயத்தை சொல்லிவிட்டான்.
அதைக்கேட்டு என்னாஆஆஆஆ என்று அதிர்ந்தவர், என்னடா சொல்லுற?.
என் பொண்ணுக்கு என்ன நடந்துச்சி? என்று பதறி கத்தியவர், ஃபோனை அப்பாக்கிட்ட கொடு என்றார் கோவக்குரலில்.
ம்ம் என்றவன், அன்புவிடம் ஃபோனை நீட்ட, அம்மாடி... உம் பொண்ணை தொலைச்சிட்டேன்மானு அன்புவும் அழுதார்.
அண்ணா..என்ன நடந்துச்சிணா?, என்னாச்சி என் பொண்ணுக்கு?என்க,லட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு போயிடுச்சிமானு சொல்லிக் கொண்டிருக்கும் போதத,அம்மா என்ற அல்லியின் சத்தம் கேட்கவும், ஃபோன் கால் கட்டானது.மீண்டும் சிவாவின் நம்பருக்கு கால் பண்ண, அழைப்பு போகவில்லை.
அங்கிருந்த மூக்கையனிடம், அண்ணா நான் உடனே ஊருக்கு போயாகணும்.
என்ன விஷயம்னு வந்து சொல்லுறேன்.
இப்போ எதுவும் என்னால் சொல்ல முடியாது என்றவர், ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு வந்தவர், தேவையான துணிகளை ஃபேகில் எடுத்து வைத்தவரின் கண்ணில் இருந்து கண்ணீரோ அருவியாக ஓடியது .
அய்யோ என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனு தெரியலையே?.
எங்கே போனாள்னு எப்படி தேடுவேன்னு அழுதுக்கொண்டே தேவையானதை எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டி வெளியே வந்தவர், தனக்கு ஒரு வாரம் லீவ் வேண்டும் என மேல் அதிகாரியிடம் மூக்கையன் ஃபோனில் இருந்து பர்மிஷன் வாங்கிக்கொண்டு, மயிலாவிடம் சொல்லச்சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
வேதாவின் நல்ல நேரம், அப்பொழுது தான் கோவைக்கு செல்லும் கடைசி பஸ்ஸும் அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தது.வேகமாக சென்று ஏறியவர், காலியாக இருந்த இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டார்.
சிறிது நிமிடத்தில் பஸ் அங்கிருந்து புறப்பட, டிக்கெட், டிக்கெட் என்று சொல்லிக்கொண்டே நடத்துனரும் வந்தார் .
கோவை என்று வேதா சொல்ல, டிக்கெட்டை கிழித்து கொடுத்தவர், வேதா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, மீதம் சில்லரையை திருப்பி கொடுத்துச்சென்றார்.
கதிர் வீடு...
தூங்கி எழுந்தவன் மணியை பார்க்க, காலை பத்து மணி என்று காட்டியது. என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் என்று சொல்லிக்கொண்டே எழுந்தவனுக்கு, தலை பாரமாக இருப்பது போலிருந்தது.
என்னாச்சி?, தலை பாரமாக இருக்கிற போல தோனுதே என்றவாறு, பாத்ரும் உள்ளே சென்றவன், காலை கடனை முடித்து, குளித்து வெளியே வந்தான்.
பின்னர் கபோர்டில் இருந்து வேஸ்டி, சட்டையை போட்டுக்கொண்டவன், ஈர துண்டை பால்கனியில் இருக்கும் கொடியில் காய வைத்து விட்டு, கீழே வந்தான்.
வீடே அமைதியாக இருப்பதை பார்த்து, எல்லாரும் எங்கே போனாங்க?, என்று சொல்லிக்கொண்டே வந்தவன் வாசலுக்கு வர, அங்கே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வேலுவும், ஜானும் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
ஏன் டா வெளியே உட்கார்ந்து இருக்கீங்க? என்றபடியே அவர்களிடம் வந்தான்.கதிரின் குரலைக்கேட்டு இருவரும் திரும்பி பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
அடேய்...உங்களை தான்டானு சொல்லிக்கொண்டே அருகில் வந்தவன், எங்கேடா வீட்ல யாரையுமே காணும்?.
ம்ம் என அவனை ஒரு பார்வை பார்த்த வேலு, மருமகளை கூப்பிட்டு வர தான் போயிருக்காங்க என்றான்.
மருமகளா?
எந்த மருமகளை என்று கதிர் கேட்க, இப்பொழுது ஜானும் அவனை முறைத்து பார்த்தான்.
என்னடா பங்காளி என்க,வேகமாக எழுந்தவன் தன் பங்கிற்கு இரண்டு அறையை விட்டு, பண்றதையெல்லாம் பண்ணிட்டு கேள்வி வேறயாட உனக்கு?.
கோவத்தை மூட்டாத, செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு, சாவகாசமா வந்து கேள்வி?.மரியாதையா வாய மூடிகிட்டு கொஞ்ச நேரம் இரு.
நண்பனின் கோபம் கண்ட கதிரோ, அமைதியாக போய், வேலுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
"வழக்கத்திற்கு மாறாக மூவரும் அமைதியாக இருந்தனர்".
சிறிது நிமிடங்கள் இப்படியே மௌனமாக கடந்து சென்றது.
அப்பொழுது காலடி சத்தம் கேட்டு மூவரும் நிமிர்ந்து பார்க்க, தாமரை வீட்டிற்கு சென்றவர்கள் சோக முகத்தோடு திரும்பி வந்தனர்.
யாரும் எதுவும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றதை பார்த்த வேலுவோ,எழுந்து அவர்கள் பின்னாடியே சென்றான்.
வாடா என்று கதிரையும் கூப்பிட்டுக்கொண்டே ஜானும் எழுந்து வீட்டின் உள்ளே செல்ல, அவர்களோ ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்.
உள்ளே வந்த வேலுவோ,வள்ளி அப்பாயின் அருகில் சென்றவன்,செல்லம்... போன விஷயம் என்னாச்சி?.சித்தியும், சித்தப்பாவும் என்ன சொன்னாங்க?.
அவர் எதுவும் பதில் சொல்லாமால் இருக்க, அத்தை நீங்களாவது சொல்லுங்க என்ன நடந்துச்சி என்கவும், அக்கா,தங்கை இருவரும் வாயை திறக்கவில்லை.
அப்பொழுது உள்ளே வந்த வளவனையும், செல்வியையும் பார்த்தவன், டேய் அங்க என்னடா நடந்துச்சி?.
சித்தப்பா எதாவது சண்டை போட்டாறா என்க,வளவனும் அமைதியாக இருக்க, உன்னை தான்டா கேட்குறேன் என்று சத்தமாக கேட்டதும்,அதற்கு வளவனோ தாமரை வீட்டை விட்டு போயிட்டாள் மாமா.
அவன் சொன்னதைக்கேட்டு கதிர், ஜான், மற்றும் வேலு மூவரும் அதிர்ந்தனர்.
என்னடா சொல்லுற?என்ற கதிருக்கு, லட்டர் எழுதி வச்சிட்டு தாமரை அண்ணி, வீட்டை விட்டு போய் விட்டாங்கள் என்றாள் செல்வி.
அப்பாகாரர்,அத்தைகாரிய ஊரை விட்டு அனுப்புனாரு.இப்போ மகன்காரன்,அவளோட அண்ணன் மகளை அதையே பண்ண வச்சிட்டான்.
வழி வழியா,இப்படி அற்புதமான செயலை செய்யும், நல்ல குடும்பம் நம்பளோடது இல்லையா? என்று சீதா கேட்க,அம்மாடி சீதானு வள்ளி அப்பாயி சொல்ல, நான் வாய மூடி என்ன புண்ணியம்?.நடந்தது இல்லைனு மாறிடுமா?, இல்லை நடக்கவேயில்லைனு மாத்திக்காட்ட முடியுமா?.இன்றைக்கு கவிதா கேட்ட கேள்வியையெல்லாம், அன்றைக்கே உங்களை கேட்டுருக்கனும் என்றார்.
அம்மா... தலையும் புரியாம, வாலும் புரியாமல், நேற்றிலிருந்தே நீ பேசிக்கிட்டு இருக்க.என்ன தான் அப்படி நடந்துச்சினு, யாராவது முதல்ல சொல்லி தொலைங்க?.சும்மா ஆளாளுக்கு, அது இதுனு சொல்லிக்கிட்டு.
யார்?,யாரை? ஊரை விட்டு தொறத்தி விட்டது?.
"அப்படி யார், தாமரைக்கு முன்னாடி போனது?".
அப்பாயி... "உன் மருமவளுங்க நான் கேட்ட கேள்விங்களுக்கு வாய தொறக்க வழியில்லை".நீயாவது சொல்ல முடியுமா? என்று வளவன் முறைத்தான்
உங்க எல்லாருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை தானே தெரியனும்?
நானே அதை சொல்லுறேன்டா நல்லவனே என்ற குரலை கேட்டு, அங்கிருந்த அனைவரும் பெருமாளை பார்த்தனர்.
கணவரின் வார்த்தையைக் கேட்ட சீதாவோ, மீண்டும் அவைகளை கேட்க மனமில்லாமல், அங்கிருந்து எழுந்தவர் அறைக்குள் சென்று விட்டார்.
கதிரோ போகும் தனது அம்மாவையே, பார்த்துக்கொண்டிருந்தான் .
நீலகிரி...
இரண்டரை மணி நேரம் பயணம் செய்த பேருந்தோ,இரவு ஒன்பது மணிக்கு, கோவை பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தது.கோயம்புத்தூர் வந்துருச்சி இறங்குங்க என்று நடத்துனரும் குரல் கொடுத்தார்.