• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
"வள்ளி அப்பாயி கேட்கும் கேள்விக்கு,கதிரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை".

மனைவி பேசிய பேச்சுகள்,தலைக்கு மேல் வளர்ந்த மகனின் கேள்விகளெல்லாம் ஒன்று கூடி,பெருமாளின் நெஞ்சத்தை குத்தி கிழித்தது.

சட்டென்று வீட்டிலிருந்து வெளியே வந்தவருக்கு,கோயிலில் போய் சிறிது நேரம் இருக்கலாமென்று தோன்ற,அதன்படியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

"ஐயனார் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவரின் காதில் விழுந்த வார்த்தைகளில், அப்படியே ஆணி அடித்தார் போல நின்றார்".

"அங்கு வலது பக்கம் மரத்தின் கீழே,குடி போதையில் இருந்த குப்பன்,கதிருக்கு தென்னக்கள்ளில் போதையை கலந்து கொடுத்ததையும்,அதை செய்ய சொல்லி முதலாளி மகள் தேவி தான் தனக்கு பணம் கொடுத்ததையும் பெருமையாக, தனது கூட்டாளியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"பின்னர்,கையில் இருந்த பணத்தை காட்டியவன், இந்தாடா உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ".

நீ என் உசுரு,என் நண்பன்டானு வாய்க்கு வந்தபடி போதையில் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்ட பெருமாளிற்கு,தேவியின் மேல் கோபம் வந்தது.

"முதலில் இதை பற்றி கேட்டே ஆகனுமென்று வந்த வழியே திரும்பி கண்ணன் வீட்டை நோக்கி வந்தவரோ உள்ளே கண்ணன் பேசிய அனைத்தையும் கேட்டு,மேலும் அதிர்ந்து போய் நின்றார்.

கதிர் வீட்டிலோ ஏதோ அசம்பாவிதம் நடந்த வீடு போல,ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்.

தேனூரில் இருக்கும் நெல்லு மண்டிக்கு பணம் வாங்க சென்ற ஜானும், வேலுவும் வீட்டிற்கு வர,அங்கே வீடு பூட்டியிருந்தது.
எங்கே போயிட்டு இந்த அம்மா?என்றவன்,சரி வாடா பனைமரம்.

"வள்ளி செல்லத்து கிட்ட பணத்தை குடுத்து வைக்கலாம்".அம்மாகிட்ட அது குடுத்துடும் என்று சொல்லிக்கொண்டே இருவரும் கதிர் வீட்டை நோக்கி வரும் போது, அங்கே தெரிந்தவர் ஒருவர், அடேய் வேலு எங்கடா போயிருந்த?.
என்னென்னமோ நடந்து போய்ட்டுடா என்றார்.

அவர் சொன்னதைக்கேட்டவன்,என்ன மாமா சொல்லுற?.நம்ப நெல்லு பணம் வாங்குறதுக்காக,அப்பா தான் குமார் கடை வரைக்கும் போய்ட்டு வரச்சொல்லுச்சினு, நானும் இவனும் காலையிலே போய்ட்டோம்.யாருக்கு என்னாச்சி மாமானு பதறிக்கொண்டே வேலு கேட்க,நம்ப கதிரு பயல் இப்படி பண்ணிட்டானேனு புலம்பினார்.

யோவ் மாமா...முதல்ல விஷயத்தை சொல்லி தொலையா.தலையும் புரியலை, வாலும் புரியலை என்றபடியே அவரிடம் சத்தம் போட்டான்.

பின்னர்,சற்று முன்பு நடந்ததையெல்லாம் அவர் சொல்ல,கேட்ட இருவருக்கும், பேரதிர்ச்சிலாம் ஒன்னும் ஏற்படவில்லை.ஆமாம்... நண்பன் ஏதோ ஒரு முடிவு எடுத்து தான் அமைதியாக இருக்கிறான் என்பது,முன்பே தெரிந்த ஒன்று தான்.

"கதிர் இப்படி ஒரு காரணத்தை சொல்வான் என்று,கொஞ்சம் கூட அவர்கள் எதிர்பார்க்க வில்லை".
நடந்ததற்கு அவன் சொல்லிய காரணத்தை கேட்ட பிறகு தான், நண்பனின் மேல் இருவருக்கும் கோபம் வந்தது.

வாடா முதல்ல அங்க போகலாமென்று வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன்,கதிர் வீட்டை நோக்கிச்சென்றான்.

சிறிது நிமிடத்தில் வாசலில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு,இருவரும் உள்ளே வர,அவர்கள் கண்ணில் பட்டதோ, ஆளுக்கொரு மூலையில் அழுது கொண்டிருக்கும் வீட்டினர்.

எங்க அவன்? என்று நிலவனிடம் கேட்க, அண்ணன் என்று,தோட்டத்து பக்கம் கையைக்காட்டினான்.

பல்லை கடித்துக்கொண்டே கோவத்தோடு தோட்டத்து கதவு வழியாக சென்று பார்க்க,கதிரோ அங்கே கிணற்றடியின் ஓரத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த இருவரும், என்னடா ஆச்சு?? என்றபடியே அவனிடம் ஓடிப்போனவர்கள், ஒருவன் கதிரின் தலையை பிடிக்க,இன்னொருத்தன் கிணற்றிலிருந்து நீரை இறைத்து எடுத்தவன்,இந்தா வாய் கொப்பளிடா பங்காளி.

நண்பர்களின் குரலைக்கேட்டவன், தெரியலைடா தலை சுத்துது என்றவாறு வாளியில் இருந்த தண்ணீரை அள்ளி, வாயை கொப்பளித்து துப்பி விட்டு, முகத்தை கழுவிக்கொண்டு எழுந்தான்.

சீதாவோ நடக்கும் கூத்துகளை ஓரமாக உட்கார்ந்துக்கொண்டு,கண்ணில் நீர் வழிய, பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.இப்போ எப்படிடா இருக்கென ஜான் கேட்க, தலை தான் சுத்துர போல இருக்குடா.

நல்லா தானேடா இருந்த. அதுக்குள்ள உனக்கு என்னாச்சு என்று ஜான் கேட்டு முடிப்பதற்குள், நண்பனின் கன்னத்தில் மாறி, மாறி தன் பங்கு வேலுவும் அறைந்தான்.

என்னடா பண்ணி வச்சிருக்க?, எங்க இருந்து உனக்கு இப்படி பழிவாங்குற எண்ணம் வந்துச்சி??என்று கேட்டுக்கொண்டே மேலும் அறைந்தான்.

அடேய் மாப்பு நிறுத்துடா என்ற ஜானோ, ஒரு வழியாய் அவனை மேலும் அடிக்க விடாமல் தடுத்தவன்,டேய் என்னமோ இவனுக்கு நடந்துருக்குடா.ஆளை பாருடா, வித்யாசமா இருக்கான்.

அப்பொழுது தான் வேலுவும் கதிரை கவனித்து பார்த்தான்.

"தலையில் கை வைத்து கீழே குனிந்து நின்றான்".

டேய் என்னடா பண்ணுது என்று கேட்கும் பொழுதே, கீழே விழப்போன கதிரை தாங்கி பிடித்தவன், பங்காளி, பங்காளி, டேய் பங்காளி என்று கதிர் கன்னத்தை ஜானும் தட்டி எழுப்பினான்.

செல்வி...செல்வி என்கும் வேலுவின் குரலில் ஓடி வந்தவள்,அங்கே மயங்கி இருந்த அண்ணனை பார்த்து, அய்யோஓஓஓ அண்ணா என்று அருகில் வந்தவள், அண்ணாக்கு என்னாச்சிணானு பதறினாள்.

செல்வியின் சத்தத்தில், வீட்டின் உள்ளே இருந்தவர்களும் தோட்டத்திற்கு ஓடி வந்தனர்.

அண்ணா ...அண்ணா...என கத்திக்கொண்டிருந்தவளின் தலையில் தட்டிய வேலுவோ,ஏய்... எதுக்குடி இப்படி கத்தி ஊர கூப்புடுற?."போய் ஒரு சொம்பு மோர் எடுத்து வா".

"அண்ணாஆஆஆ..மாமா என்று அவள் இழுக்க, உன் அண்ணன் தான் போடி என்றவன், அடேய் பனைமரம் என்க, ஜான் நிமிர்ந்து பார்த்தான்".

கீழே குனிந்த வேலு, தனது தோளின் மேல் கதிரை தூக்கிப்போட்டவன், வீட்டின் உள்ளே தூக்கிச்சென்று, முற்றத்திலிருந்த சோபாவின் மேல் படுக்க வைத்து விட்டு,அந்த ஃபேனை போடுடா பனைமரமென்றான்.

உள்ளே வந்தவர்கள் எல்லாரும், என்னாச்சோ ஏதாச்சோ என்று அழ, அதைப்பார்த்த வேலு, கொஞ்சம் வாய மூடுறீங்களா?.

"எதுக்கு எடுத்தாலும் ஒப்பாரி வைக்குறதை தவிர,ஒரு மண்ணும் தெரியாதானு சத்தம் போட்டான்".

பனைமரம் இவன் தலையை புடிச்சி உட்காரு என்றவன்,செல்வி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க என்று சத்தம் போட,இதோ மாமா என்று சொல்லிக்கொண்டே வந்தவள், அவனிடம் சொம்பை கொடுத்தாள்.

"அதை வாங்கியவன், கதிரின் வாயை திறந்து உள்ளே ஊற்றினான்".

ஒரு சொம்பு முழுவதையும் ஊற்றியவன், சாய்ச்சி உட்கார வை டா என்று சொல்லி,சொம்பை செல்வி கையில் குடுத்து விட்டு, மாப்பு, மாப்பு என்று கதிரின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.

கதிரும் சிறிது நொடிகளில்,சிரமப்பட்டு கண்ணை திறந்தவன் தன்னை சுற்றி எல்லாரும் கவலையாக நிற்பதை பார்த்தவன், ஒன்னும் இல்லை, ஏதோ மயக்கம் தான்.

அப்பொழுது,முத்து... பெரியவன் போய் ரொம்ப நேரம் ஆகுதுப்பா.போய் என்னனு பார்த்துட்டு வா என்றார் பிரகாசம் தாத்தா.

சரிப்பா என்று அவர் வெளியே போனார்.

இவ்வளவு நடந்தும் சீதாவோ மகன் இருக்கும் திசையில் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.

முத்துவோ ஏரிக்கரை,கோயில்,பெருமாளின் நண்பர்கள் வீடு என்று,அங்கெல்லாம் தேடி பார்க்க,பெருமாள் எங்கையுமே இல்லை.அண்ணன் எங்கே போயிருக்குமென்று யோசித்துக்கொண்டே வந்தார்.

அப்பொழுது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த பூசாரி,முத்துவை பார்த்து கையை அசைத்தார்.

வண்டியை நிறுத்தியவர், சொல்லுணா என்க, கதிர் பற்றி கேட்டார்.

நடந்தது இனி மாற்ற முடியாது. ஆக வேண்டியதை பாக்கலாம்டா தம்பி என்றார் பூசாரி.

சரிணா என்ற முத்துவிடம், அண்ணா என்னடா சொல்லுது? அதற்கு முத்துவோ, வீட்டில் நடந்ததை சொல்லி விட்டு, பெருமாளை தேடி வந்ததை சொல்ல, அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான், கண்ணன் மச்சான் வீட்டு பக்கம் போனார்டா என்றார்.

அட... நான் இதை யோசிக்கவே இல்லை.சரிணா, நான் போய்
அங்க மாமா வீட்டில் பார்க்குறேன்னு சொல்லிக்கொண்டு, வண்டியை கண்ணன் வீட்டு பக்கம் ஓட்டினார்.

தேவி வீடு...

சொல்லுங்கப்பா?,எதுக்கு இப்படி ஒரு புத்தி உங்களுக்கு?.அப்படி இரண்டு குடும்பத்தையும் பிரிச்சு வைக்கிறதில் உங்களுக்கு என்ன ஆனந்தம்?.
உங்க கிட்ட கொஞ்சம் கூட இத நான் எதிர்பார்க்கல என்று தேவ் சத்தம் போட, உனக்கு என்னடா தெரியும் என்றார் கண்ணன்?.

எனக்கு எதுவும் தெரியாது தான்.

அதும் உங்களை போல,அடுத்த குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்தலாம் எனக்கு தெரியாது தானென்று தேவும் கோபமாக சொன்னான்

என்னடா வாய் நீளுது? என்று கண்ணன் கேட்க, இப்போ நீங்க சொல்ல போறீங்களா?, இல்லையா என்று அங்கிருந்த பூ ஜாடியை தட்டி விட, அந்த பீங்கான் ஜாடியோ தரையில் விழுந்து,தூள் தூளாக சிதறியது.

மகனின் கோவ முகத்தை பார்த்து கண்ணனுக்கே, ஒரு நொடி பகீரென்று இருந்தது.

அதான் உங்க லட்சணம் தெரிஞ்சிட்டே இன்னும் மறைக்க என்ன இருக்கு என்றார், தன் பங்கிற்கு வசந்தி.

இப்போ உங்களுக்கு என்ன நடந்ததுனு உண்மை தெரியனும் அப்படி தானே. சரி சொல்றேன் கேட்டுக்குங்க.

மூன்று தலைமுறையா அன்பழகனோட குடும்பம் தான், பஞ்சாயத்து தலைவராக ஊர் மக்கள் தேர்ந்தெடுத்துட்டு வந்தாங்க.எங்க தாத்தா காலத்திலிருந்து போராடுனோம் அந்த பதவிக்கு.ஆனால் மக்களுக்கு அவங்க குடும்பத்தின் மீது தான் நம்பிக்கை இருந்துச்சி.

சரி, தனித்து நிற்குறப்போ தான பதவி தான் இல்லை.அந்த குடும்பத்தில் பொண்ணை கட்டி மருமகனா உள்ளே போய் விட்டால், பிறகு பதவி கிடைச்சிடும்னு, நானும் எங்க அப்பாவும் முடிவு பண்ணுனோம்.

பெருமாளோட பெரிய தங்கச்சி, சிந்துவ கட்டிக்க சொன்னார் எங்க அப்பா.ஆனால் எனக்கு பெருமாளோட பெரியம்மா பொண்ணு, பார்வதிய தான் புடிச்சிருந்தது.அதும் இல்லாமல் பார்வதி பெயரில் இருக்கும் சொத்துக்கு, யாரும் பங்குக்கு வர மாட்டாங்கனு இருந்தேன்.

ஒரு வழியா எங்க அப்பாவ சரிகட்டி,வீடு தேடி போய் பொண்ணு கேட்டதுக்கு,அந்த வள்ளியும்,அவங்க வீட்டுக்காரு பிரகாசமும் பார்வதியை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

பிறகு,பார்வதிய தன்னோட அண்ணன் பையனுக்கே அந்த பெருமாளோட அம்மா கட்டி வச்சிட்டாங்க.

ஆசைப்பட்ட பொண்ணும் கிடைக்கல. அதே போல பதவியும் கிடைக்கலை.

"இதற்கு நடுவுல, எங்கப்பா இந்த விளங்காதவளை புடிச்சி என் தலையில கட்டி வச்சுட்டாரு".

என் கண்ணு முன்னாடியே, நான் ஆசைப்பட்ட இரண்டும் அவங்க கையில இருக்குறதை பார்த்து, எவ்வளவு வலினு சொல்ல முடியாது.அதும்,அந்த ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

எங்க அப்பாவும்,எதுக்கும் லாயக்கு இல்லைனு சொல்லிக்காட்டி கிட்டே இருந்தாரு.

எல்லாம் சேர்ந்து எனக்கு வெறி ஏறிட்டு. எப்படியாவது அந்த குடும்பத்தை பிரிக்கணும்னு இருக்கும் போது தான், பெருமாள் கூட பழக்கம் வச்சிக்கிட்டேன்.
அந்த கூறுகெட்டவன்.நான் சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டுவான்.அந்த நம்பிக்கைய வச்சி தான்,ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சேன்.

நல்லா போய்கிட்டு இருந்ததை,உன் கூட பொறந்தவளால் திரும்ப ஒன்னு சேருற போல ஆகிட்டேனு அனைத்தையும் சொல்லி முடித்தார்.

அண்ணனை தேடி வந்த முத்துவும் இவைகளையெல்லாம் கேட்டு விட்டு,ஆத்திரம் பொங்க, அடேய்,நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடானு வாசலிலே நின்று கோவமாக கேட்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி...

பவி வீட்டு திண்ணையின் ஒரு பக்கம் மூக்கையன் உட்கார்ந்திருக்க,அவருக்கு சில அடி தள்ளி,வீட்டு பாடம் செய்து கொண்டிருந்தான் மிலன்.அப்பொழுது,மூக்கையன் ஃபோனுக்கு கால் வந்தது.

எடுத்தவர்,சொல்லுப்பா மருது என்க, நான் கோவைக்கு வந்துட்டேன் பா.
"சரிப்பா உடம்பை பார்த்துக்கோ என்றவரிடம், அவள் எப்படி இருக்காப்பா?".

"யாரைப்பா கேட்குறனு மூக்கையன் கேட்டதற்கு,பவி தான் பா என தயங்கி தயங்கி மருது சொல்ல, இப்போ தான் அந்த புள்ளை நினைப்பு உனக்கு வந்துருக்கா?".

எப்படி ஓடி, ஆடி திரிஞ்ச புள்ளை, இன்னைக்கு இருக்குற இடத்திலே பொம்மை போல இருக்கு."அந்த கவலை கொஞ்சம் கூட உனக்கு இல்லை?".

"உன் ஆத்தாகாரி பண்ணுனது தான் பெருசா தெரியுது உனக்கு,அப்படி தானே?.அப்பானு அவன் இழுக்க,அப்பா தான் டா."யார் இல்லைனு சொன்னால்?".

"முதல்ல உனக்கு சிநேகிதி,அடுத்தது தான் உனக்கு பொண்டாட்டி".நீ இந்த நேரத்தில் அந்த புள்ளை கூட இருக்கனும்.அது தான் நல்ல மனுஷனுக்கு அழகு.ஆனால்,நீ என்ன பண்ணிருக்க?கோழை பயல் போல ஓடி ஒளிஞ்சிகிட்ட.உன்னை இப்படி தான் வளர்த்துருக்கேனா?.

"ஆசப்பட்ட வாழ்க்கை இந்த உலகத்துல எத்தனை பேருக்கு கிடைச்சிருக்கு?".

அவங்களாம் உன்னை போல ஓடியா போய்ட்டாங்க?.

கிடைச்ச வாழ்க்கையை வாழலையா? என கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு மகனை துளைத்தெடுத்தவர்,புரிஞ்சி நடந்துக்கோ என்று கடைசியாக சொல்லி விட்டு, நான் வைக்குறேன்னு அழைப்பை துண்டித்தார்.

மூக்கையன் இவ்வளவு நேரம் பேசியதையெல்லாம், உள்ளேயிருந்த வேதாவும்,கேட்டுக்கொண்டு தான் இருந்தார்.

சிறிது நொடிகள் சென்று வெளியே வந்தவர்,அண்ணா என்று கூப்பிட, சொல்லு வேதாமா.

பவிய பற்றிய கவலை எனக்கு தீர்ந்துட்டுணானு வேதா அழுது கொண்டே சொல்ல,எனக்கும் பொண்ணு தான் மா.தாமைரை வேற, பவி வேறனு நான் இதுவரை நினைச்சது இல்லைமா.

இந்த வாய் தான் சொல்லுச்சி ரெண்டு பேரும் ஊட்டுக்கு மருமவளா வந்தாலும் சந்தோசம்னு சொல்லி கண் கலங்கியவர்,ஏத்தா,அங்க ஊருக்கு விஷயத்தை சொல்லிட்டியா? என்க,பவி பெற்றோரின் இறப்பை பற்றி, சீமக்கரையில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு இன்னும் சொல்லவில்லை என்று அப்போது தான் ஞாபகம் வந்தது.

அச்சோ அண்ணா...நான் அதை மறந்தே போய்ட்டேன்ணானு தலையில் தட்டிக்கொண்டவர், தன் ஃபோனை தேட, அது வீட்டில் இருப்பது நினைவு வந்தது.

காலையில முதல் வேலையா அண்ணன் கிட்ட இதை சொல்லனும்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டவர், நாளைக்கு சொல்லிடுறேன்ணா என்றார்.

அம்மா வேதா,எனக்கு ஒரு யோசனை தோனுதுமானு மூக்கையன் சொல்ல, சொல்லுங்கண்ணா என்க, தாமரைய இங்க வர வச்சா என்ன மா??.

ஒன்னா வளர்ந்த புள்ளைங்க, மனசு விட்டு பேசவோ,இல்லை அழவோ எதாவது வழி இருக்கும் இல்லையா? என்றவரின் வார்த்தையைக் கேட்ட வேதாவோ,நீங்க சொல்றது சரிணா.

ஆனால், தாமரை இங்கு வந்தால் சரி வருமாணா?.

'எல்லாம் சரி வரும்தா'.

பாரத்தை அந்த மலையம்மா மேல வைத்துட்டு,நல்லதையே நினைப்போம் மா.எதுக்கும், இதைப்பற்றி நீயும் யோசனை பண்ணுமா என்றவர், நான் செத்த நடந்துட்டு வரேன்,மயிலா வந்தா சொல்லுத்தானு அங்கிருந்து சென்றார்.

ஒரு வேளை தாமரை இங்கு வந்தால், பவி இயல்புக்கு திரும்ப வழி உண்டென்பது சாத்தியம் தான். சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், இல்லை சோகமான விஷயமாக இருந்தாலும் தாமரையிடம் தான் முதலில் ஷேர் பண்ணுவாள் பவி என்பது, வேதாவிற்கு தெரிந்த விஷயம் தான்.

அப்படி பார்த்தால், மீண்டும் பவியை பழையப்போல கொண்டு வர, தாமரையை இங்கு வர வைப்பதே நல்லது.நிச்சயமாக,தாமரையால் பவிக்கு மாற்றம் வர வாய்ப்பு இருக்கின்றதென்பது வேதாவுக்கு புரிந்தது.

நாளைக்கு அண்ணன் கிட்ட விஷயத்தை பக்குவமாக சொல்லி விட்டு, தாமரையை இங்கே வர சொல்லனுமென்ற உறுதியான முடிவோடு வீட்டின் உள்ளே சென்றார்.

சீமக்கரை...

எவருக்கும் காத்திருக்காமல் உலகிற்கே தன் செங்கதிர்களை ஒரே சமமாக வீசிக்கொண்டு,கிழக்கே உதயமாக ஆரம்பமானான் ஆதவன்.

தாமரை வீடு..

இரவு யார்,யார் எங்கெங்கு உட்கார்ந்து இருந்தார்களோ,அதே இடத்தில் சுருண்டு படுத்திருந்தனர்,வீட்டில் உள்ளவர்களெல்லாரும்.

வழக்கமாக எழும் நேரத்தில் விழிப்பு வர, முற்றத்தில் படுத்திருந்த கவிதாவோ எழுந்து போய் முகத்தை கழுவியவர், மகளின் அறைக்கதவை பார்க்க,அது சாத்தியே இருந்தது.

பின்னர் வழக்கமான வேலைகளை செய்ய ஆயத்தமாக, தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர்.

தோட்டம், முன் வாசல், மாட்டு தொழுவத்தையும் கூட்டி, குப்பைகளை அள்ளிச்சென்று, பின்புறம் இருந்த குப்பை மேட்டில் கொட்டி விட்டு, கை, கால்களை கழுவிக்கொண்டு, ரெடியாக வைத்துச்சென்ற வாளியையும், வெண்ணெய் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு, மாட்டு கொட்டகைக்குள் சென்றார்.

பின்னர், மாட்டின் மடியில் வாளியில் இருந்த நீரை அள்ளி தெளித்து விட்டு, வெண்ணெயை சிறிது தொட்டு, தன் கைகளில் தடவிக்கொண்டவர், பாலை கறக்க தொடங்கினார்.

வேண்டிய பாலை கறந்து விட்டு, கன்னுக்குட்டியை அவிழ்த்து விட, அதுவோ துள்ளிக்குதித்து ஓடி வந்து, தாயின் மடியில் பசியாறியது.

பால் வாளியோடு அடுப்பங்கறைக்கு சென்றவர், வீட்டில் உள்ளவர்களுக்கு டீயை போட்டு,எடுத்து வந்து கொடுக்க, முதல் நாள் காலையிலிருந்து எதுவும் வயிற்றிற்கு ஆகாரம் உண்ணாததால், அந்த டீயை எடுத்து குடித்தனர்.

அல்லியும், தாமரையை தவிர மற்றவர்கள் எழுந்து விட்டனர்.காலை எட்டு மணி ஆகியது, ஆனால் தாமரை மட்டும் கதவை திறந்து வெளியே வரவில்லை.

இப்படி உள்ளையே உங்க மவள் அடைந்திருந்தால் சரியாகிடுமாங்க?, என்று கவிதா கேட்க,அதற்கு என்ன பண்ண சொல்லுற? என்றார் அன்பு.

போய் எழுப்புங்க. ஒரு வாய் டீயாவது பகுடிக்கட்டுமென்று கவிதா கண் கலங்க, மனைவியை ஒரு முறை முறைத்தவர், எழுந்து போய், அம்மாடி தாமரை, தாமரை என்று கூப்பிட்டார்.
உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.பின்னர் கதவை தட்டுவதற்கு கையை வைக்க, அது திறந்து கொண்டது.

தாமரை என கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தவரை, வெறும் அறை தான் வரவேற்றது.

பாத்ரூம் போயிருக்கும் போலனு நினைத்துக்கொண்டவர் வெளியே வந்து, ரூம்ல இல்லை, குளிக்கிற அறையில் இருக்கு போல என்றார்.

அரை மணி நேரம் கடந்து சென்றும், அவள் வெளியே வராததால், கவிதா, உள்ள போய் பாரு என்றார்.

ம்ம் என்று சொல்லிக்கொண்டே மகளை தேடி வந்தவர், பாத்ரூம் கதவை தட்ட போக, அது வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

எங்கே போனாளென்று திரும்பியவரின் பார்வையில் பட்டது, அங்கிருக்கும் டேபிளின் மேலே இருந்த வெள்ளை பேப்பர்.

என்னது இது?,என அச்சத்தோடே அதன் அருகில் சென்று, பவுடர் டப்பாவின் கீழே இருந்த பேப்பரை எடுத்து படித்து பார்த்தவர், தாமரை என்று கத்தினார்.

கவிதாவின் குரல் கேட்டு வீட்டினர் ஓடி வந்து,என்னாச்சி என்க, கடிதத்தை கணவரிடம் கொடுத்து விட்டு, தன் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

மனைவி கொடுத்த கடிதத்தை படிக்க தொடங்கினார் அன்பு...

அன்புள்ள...,அல்லி மற்றும் சிவா இருவரின் பெற்றோர்களுக்கு, வேதவள்ளி சிவசாமி அவர்களின் வளர்ப்பு மகள் தாமரை எழுதுவது...

இத்தனை வருடங்களாக உங்கள் இருவரையும் என்னை பெற்றவர்கள் என்று நான் நம்பியிருந்தது, நீங்கள் மறைத்திருந்த விஷயத்திலே, எனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

உங்கள் இரு பிள்ளைகளுக்கு தெரிந்த விஷயங்கள், எனக்கு தெரியவில்லை, தெரியக்கூடாது என்ற எண்ணம் எப்பொழுது உங்களுக்கு வந்து விட்டதோ, அப்பவே நான் மூன்றாவது மனுஷி தான் உங்களுக்கு என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.

உங்கள் குடும்ப பிரச்சினையில், கண்டவன் என் வாழ்க்கையை நாசமாக்க வழி வகுத்த,உங்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டேன்.

"நானும் ஓர் முட்டாள் பெண்".

இத்தனை வருடம், கண்ணைப்போல் பாதுகாத்த தாயின் அருகில் இருக்காமல், நம்ம அப்பா, அம்மா, குடும்பமென எண்ணி, உங்களோடு சிறிது நாட்கள் இருக்க நினைத்து வந்தது, எவ்வளவு பெரிய தவறென்று புரிந்து கொண்டேன்.

"உங்கள் யாரையும் திரும்ப சந்திக்க,துளியும் எனக்கு விருப்பமில்லை".

நிச்சயமாக என்னைத்தேடி என் வேதாம்மா வருவார்கள், அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லவும்.

இத்தனை நாட்கள் உங்கள் வீட்டில் தங்க அனுமதி கொடுத்ததற்கும், அதைப்போல், மூன்று வேளை உணவு கொடுத்ததற்காகவும், ஒரு மாதம் வெளியே தங்கினால் எவ்வளவு ஆகுமோ, அந்த தொகையை, இந்த அறையில் இருக்கும், டிராவின் உள்ளே வைத்திருக்கின்றேன்.

தயவு செய்து என்னை தேட வேண்டாம்.

தாமரை.

கடிதத்தை படித்து முடித்தவர், இப்போ உனக்கு நிம்மதியா?.

இனி சந்தோஷம் தானே?, இதை தானே எதிர் பார்த்தே? என்று மனைவியை கேட்க,அய்யோ,அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லைங்கனு கதறி அழுதார்.

வேற எப்படி?, எத்தனை முறை உன் கிட்ட சொன்னேன், தாமரைக்கு குடும்ப பிரச்சினை தெரியட்டும் கவிதானு.
ஒவ்வொரு முறை நான் சொல்ல போகும் போதெல்லாம், உருப்படாத காரணத்தை சொல்லி, தடை பண்ணிக்கிட்டே இருந்த.

அது இப்போ தெரிஞ்சி, என் பொண்ணை வீட்டை விட்டு, இல்லை எங்கையோ கண்காணா இடத்துக்கு தொரத்தி விட்டுட்டியேடி பாவி.

என் பொண்ணு உன் அப்பன் வீட்டுல இருக்கவங்களை பற்றி தப்பா நினைக்க கூடாது இது தான உன் எண்ணம்?.

"தன் மனதில் இருந்ததை பட்டென்று சொல்லிய கணவருக்கு, கவிதாவால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை".

"அப்பொழுது, மச்சானென்ற குரல், வாசலில் கேட்டது".

பதினைந்து வருடங்களுக்கு பின்னர் கேட்கும் குரல், கண்ணை மூடி திறந்த அன்பு, எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.

மீண்டும் மச்சான் என்ற அழைப்பு வீட்டின் உள்ளே கேட்பது போலிருக்க, கலா அப்பாயி தான் யாரு என்றபடியே ரூமிலிருந்து வெளியே வந்து பார்க்க, அங்கு தன் அண்ணன் குடும்பம் நிற்பதை பார்த்து விட்டு,ஆத்தி என்று நெஞ்சில் கை வைத்தார்.

எம்மாடி கவிதா... யாரு வந்துருக்காங்கனு பாரென்று கலா அப்பாயி சொல்ல,அழுது கொண்டிருந்தவர், யாருத்தைனு வெளியே வந்து பார்த்தவர் எங்கே வந்திங்களென்று, வேறு பக்கம் திரும்பிக்கொண்டு கேட்க, எம்மாடி கவிதா என்று பெருமாள் கூப்பிட, வாய மூடு."என் பேர சொல்லக்கூட உனக்கு அருகதை இல்லை".

ச்சை... சாகுற வரைக்கும் உன் முகத்தை பார்க்க கூடாதுனு இருக்கேன். "மரியாதையாக வெளியே போய்டு என்றார்".

ஆத்தா... இந்த அண்ணனை என்று சொல்ல வர, நிறுத்து.யாருக்கு, யார் அண்ணன்?.

"எனக்கு கூடப்பிறந்தவன் என்று, இந்த உலகத்துல எவனும் இல்லை".

அய்யோஓஓஓ,நான் பெத்த மவளே என்று கண்ணீரோடு வள்ளி அப்பாயி கூப்பிட, மவளா?,நானா?...

நீயெல்லாம் ஒரு தாயா?என்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top