• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு...

கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கதிர்,குட்டி போட்ட பூனை போல பால்கனியில் நடந்து கொண்டிருந்தவனோ அவ்வப்போது வராத அழைப்பை போனில் பார்கவும் மறக்கவில்லை.

"எங்கே போய் தொலைஞ்சான் இவன்?"
சித்தி வீட்டுக்கு போனானா?இல்லை செவ்வா கிரகத்துக்கு போயிருக்கானானு தெரியலையே? என்று நண்பனை திட்டிக்கொண்டிருக்க, ரொம்ப புகழாதடா மாப்பு என்றவாறு வேலுவும் அங்கு வந்தான்.

நண்பனின் குரலைக்கேட்டவன் ஒருவித பரபரப்போடு வாடா வாடா...எங்கடா போய் தொலைஞ்சே? எவ்வளவு நேரம் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது?

அப்படியா?என்ன விஷயம் சொல்லு மாப்பு என்றபடி அங்கிருந்து சிமெண்ட் கட்டையின் மேலே உட்கார்ந்து கொண்டு வேலு பார்க்க,கதிர் அவனை முறைதக்கவும் எதுக்கு மாப்பு இவ்வளவு பாசமா பாக்குற?என்க,செருப்பு பிஞ்சிடும் டா.உன் தங்கச்சிகாரி கிட்ட கேட்டியா?,இல்லையானு? சொல்லி தொலைடா.

சரி... மாப்ளை ரொம்ப சூடா இருக்கான், இனியும் விளையாட்டு வேண்டாம் என்று உள்ளுக்குள் நினைத்தவன்,ம்ம் அல்லி கிட்ட கேட்டேன் டா என்க, சொல்லுடா மச்சான் யாரவள்? என்று ஆர்வமாக அவனருகில் வந்து கதிர் கேட்க,தாமரை என்றான்.

"அவன் சொன்ன பெயரை கேட்டவன், தாமரையா!,இந்த ஊர்ல நமக்கு தெரியாத பேரா இருக்கே?என்று யோசனையாக,கவிதா சித்தியோட பெரிய பொண்ணு தாமரை.

வேலு சொன்னதைக்கேட்டு அதிர்சியானவன்,நிஜமாவாடா?என்க, ம்ம்...தாமரை ஊருக்குள்ள வந்த இரண்டு நாள் ஆகுதுடா.

ஓஓஓ என்ற கதிர்,அதற்கு பிறகு அதைப் பற்றி எதுவும் பேசாமல் உள்ளே சென்றவன்,தனது பீரோவில் இருந்த செயினை எடுத்து வந்து இதை உன் தங்கச்சி கிட்ட கொடுத்துடா மாப்பு என்றபடி வேலுவின் முன்பு நீட்டினான்.

என்னடா இது என்றவனுக்கு, அன்றைக்கு மோதுனதில் என் சட்டை பட்டன்ல மாட்டிகிச்சி,அந்த புள்ளையோடது தான் என்க,ஓஓஓ என்றவன்,அப்போ அவ்வளவு தானா?

ஹம்யென எங்கையோ பார்த்துக்கொண்டு கதிர் சொன்னான்.

சரி குடுடா என்று செயினை வாங்கி கொண்ட வேலு,நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படு காலையில் பார்க்கலாமென்று நண்பனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

தன் மேல் மோதியவள் தனது அத்தை மகள் தானா?,அவ இப்போ எப்படி இருப்பாள் என்று யோசித்தவனுக்கு, அவன் மேல் அவள் விழுந்த தருணம் நினைவுக்கு வந்தது.

பஞ்சு மூட்டை போல எவ்வளவு மென்மையா இருக்கானு தலையை உதறியவன் இது சரி வராதுடா கதிர் என தன் இதயத்தின் மேல் கை வைத்து சொல்லிக்கொண்டான்.

அப்பொழுது,அண்ணா சாப்ட வா என்று கதவிற்கு பின்னாலிருந்து செல்வி கூப்பிடுவது கேட்கவும்,தற்பொழுது இருக்கும் மனநிலைக்கு சாப்பிடவே தோன்றவில்லை.கதவை திறந்தவன், கொஞ்ச நேரம் கழித்து வரேன் செல்வி என்க,சரிணா என்று அங்கிருந்து சென்றாள்.

கதவை மூடிவிட்டு கட்டில் மேல் வந்து படுத்தவனுக்கு டாலர் நினைவு வர, அவசரப்பட்டு கொடுத்துட்டோமோ என்றவன்,இனி அவளை நினைக்க கூடாதுடானு சொல்லி விட்டு கட்டிலிருந்து எழுந்தவன் கீழே சென்றான்.

அவன் கீழே வர அங்கு டீவியில் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும்"... என்ற பாடல் ஓட அதைக்கேட்டவனுக்கு மீண்டும் தாமரை நினைவு வந்தது. வாப்பா என வள்ளி அப்பாயி பேரனை கூப்பிட,அவள் நினைவிலிருந்து வெளியே வந்தவன்,சாப்டியா அப்பாயி என்றவாறு அவரின் அருகில் உட்கார,நீ வருவனு தான் உட்கார்ந்திருக்கேன்.

"உன்னை யாரு இப்படி இருக்க சொன்னா என்றவன்,அம்மா சாப்பாடு எடுத்து வா என்க,ராதாவும்,சீதாவும் சாப்பாட்டு பாத்திரங்களோடு அங்கு வந்தனர்.பின்னர் மாமியாருக்கும் பிள்ளைகளுக்கும் பரிமாற,நீங்களும் உட்காருங்களேம்மா என்றார் வள்ளி அப்பாயி.

இருக்கட்டுங்கத்தை...அவங்க மூன்று பேரும் இன்னும் வரலையேனு ராதா சொல்ல,இந்த நேரத்தில் எங்கே போயிருக்காங்க என்றான் கதிர்.

பொங்கல் வருதேப்பா,கோயில் பூஜை, மஞ்சுவிரட்டு பற்றி பேசணும்னு ஊர் கூட்டம் போட்டுருக்காங்க.ஓஓஓ... என்றவன்,அம்மா நாளைக்கு நிலவன் வந்துருவான் காலையிலே சீக்கிரமா நான் போகனும்.

"சரிப்பா என்றனர்"

சாப்பிட்டு முடித்தவன் டீவியின் முன்பு அமர,அடுத்த பாடல் ஓடியது." அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே..பருவம் சுமந்து வந்த பாவாடை தாவணியே"
என்று.அந்த பாடலை கேட்டவனோ,என்னடா கதிர் உனக்கு வந்த சோதனை?என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், சேனலை மாற்ற,ஏன்ணா நல்ல பாட்டு தானே?,உனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டு என்றாள்.

ஆமா செல்வி.வேற என்ன ஓடுதுனு பாக்குறேன் என சமாளித்து விட்டு சில சேனல்களை மாற்றியவனுக்கு அந்த சேனலே பரவாயில்லை என்று தோன்ற மீண்டும் அதே சேனலை வைத்தான்.

பாட்டியும் அவர்களோடு வந்து டீவி பார்க்க,அப்பாயி வெற்றிலை குடு என்று கதிர் தனது கையை நீட்ட,இதோப்பு என்றவர்,தனது சுருக்கு பையிலிருந்து ஒரு கொட்டப்பாக்கை எடுத்து அவனிடம் கொடுக்கவும் அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டான்.

பின்னர்..கொழுந்து வெற்றிலையை தேடி எடுத்தவர்,அதன் மேல் அளவாக சுண்ணாம்பை தடவி அதை நான்காக மடித்து இந்தாப்பு என பேரனிடம் நீட்ட, டீவியை பார்த்துக்கொண்டே வாங்கி வாயில் போட்டு மெல்ல தொடங்கினான்.

சிறிது நிமிடம் சென்று, அவன் முன்பு எச்சில் துப்பும் குவளையை நீட்டியவர் இதுல துப்பிக்கப்பு என்க,அதை வாங்கியவன் வாயில் இருந்த வெற்றிலையின் சாற்றை துப்ப,அப்பு உன் நாக்கை காட்டு?.

பாட்டியிடம் தனது நாக்கை நீட்ட, வெற்றிலையின் கறையோ நன்கு கோவை பழம் போல் சிவந்திருந்தது. என் அப்புவ கட்டிக்க போறவள் ரொம்ப கொடுத்து வச்சவ என்று அப்பாயி சொல்ல,அவனுக்கு உடனே தாமரையின் நினைவுதான் வந்தது

ஐயோ என்ன இவ நினைவு வந்து இப்படி நம்மள பாடா படுத்துதேனு முணவியவன்,என்ன அப்பாயி விளையாடுறியா?, சுண்ணாம்பு அதிகமா தடவி குடுத்துட்டு இல்லாத கதைய சொல்லிட்டு இருக்கியே?

" அப்பு....அனுபவஸ்தி சொல்லுறேன்.நீ பாக்க தான போற என்றவர்,ஏன் அப்பு, அந்த தேவிக்கு உன்னை தான் புடிச்சிருக்காமே கட்டிக்க வேண்டியதானே என பேரனை நோட்டம் விட்டு பார்த்தார்.

எதேஏஏஏ...!

என்ன கிண்டலா இருக்கா உனக்கு?.

எனக்கு பொண்டாட்டினா அது தாமரை தான் என சொல்ல வந்தவன் பின்னர் வார்தையை அடக்கி கொண்டு, எங்கேயாவது பொறந்துருப்பாள்.அது சத்தியமா தேவி இல்லை.இப்போ எனக்கு கல்யாணம் கில்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இல்லை.

அப்படி உங்களுக்கு கல்யாண சோறு சாப்பிட ஆசையா இருந்தால் வளவனுக்கு பண்ணி வச்சி வாய்க்கு வக்கனையா சாப்டுங்கனு சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.

தாமரை வீடு.....

என்ன தாமரை உன் பெரியம்மாவ பார்த்திட்டியா என கலா அப்பாயி கேட்க, பார்த்துட்டேன் அப்பாயி,அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம் என்றவள் போனில் பேசிய விஷயத்தை அங்கிருந்த தனது தந்தை,தாத்தா மற்றும் அப்பாயிடம் சொல்ல, அதைக்கேட்டவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

எல்லாம் அந்த மாரியாத்தா கருணை தான் என்றவருக்கு,ஆமா கிழவி. கஷ்டபட்டு படிச்சி திறமையை வளர்த்துகிட்டது என் அக்கா.நீ ஈசியா ஆத்தா தான் காரணம்னு சொல்லுற என்றாள் அல்லி.

நல்லா சொல்லு அல்லி என சிவாவும் சொல்ல,அட போங்கடா போக்கத்தை பயலுங்களா,அவ கருணை இல்லாமல் எதுவும் நடக்காது.

சரி அப்பாயி,நீங்க சொல்ற போலவே இருக்கட்டும் என்றவள்,முதல் ஓவியம் நம்ப குலதெய்வத்தை தான் வரையலானு இருக்கேன்.அதோடு நாளைக்கே வேலைய ஆரம்பிக்கலானு இருக்கேன் அப்பாயி என்றவளுக்கு, அப்படியா என்றவர்,எலே அல்லி அந்த காலண்டர்ல நாளைக்கு நல்ல நேரம் பாரு என்க,ம்ம் என்றவள் எழுந்து போய் பார்த்து விட்டு,காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பதரை வரை நல்ல நேரம் இருக்கு அப்பாயி.

ஏம்மா கவிதா...காலையில சாமிக்கு கொஞ்சம் பொங்கல் வைத்து பிள்ளைகளோடு நீயும் கூட போயிட்டு சூடத்தை ஏத்தி ஆத்தாவ வேண்டிகிட்டு வா என கலா அப்பாயி சொல்ல, சரிங்கத்தை.நேரமாகிட்டு, வாங்க சாப்பிடலாமென கவிதா கூப்பிட,நாங்க அம்மா வீட்டிலே சாப்பிட்டோம் என்ற மூவரும் அவரவர் அறைக்கு சென்று படுத்தனர்.

நடந்த நிகழ்வுகளை நினைத்து தாமரைக்கு தான் தூக்கமே வரவில்லை .

இவ்வளவு பெரிய வாய்ப்பு தனக்கு கிடைக்குமென்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.அவள் ஆசைப்பட்டது எல்லாம் வி.வி..யிடம் அசிஸ்டெண்டாக சேரணும்.

இன்று அவரே இப்படி ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருப்பது தன் மேல் உள்ள நம்பிக்கையால் என்பது புரிய,கடவுள் புண்ணியத்தில் இதை நல்லபடியா முடித்து அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் கண்ணை மூடி தூங்கலானாள்.

அதிகாலையில் எழுந்தவளோ தலை குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டு முன்பக்க வாசல் கதவை திறந்து,முன் தினம் இரவே எடுத்து வைத்த சாணியை வாலியில் கரைத்தவள் வாசல் முழுவதும் தெளித்து விட்டு,தென்னை விளக்கமாறால் கூட்டி முடிக்க,அல்லியும் எழுந்து வந்தவள், இந்த நள்ளிரவில் என்ன பண்ணுறக்கா என்றபடி அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்தாள்.

தங்கைக்கு ஒரு சிரிப்பை பதிலளித்து விட்டு கூட்டிய விளக்கமாரை ஓரமாக வைத்து விட்டு,கோலமாவு டப்பாவை எடுத்து,வாசலில் புள்ளி வைத்து கோலமிட தொடங்கினாள்.

நிலவனை அழைக்க செல்லனும் என முன்தினம் இரவே அம்மாவிடம் சொல்லியிருந்ததால்,மகனின் அறைக்கு வந்து எழுப்பி விட்டவர்,தம்பி சுடு தண்ணி காய வச்சிருக்கேன் கீழயே குளிச்சிக்கப்பா என சீதா சொல்ல, சரிம்மா என்றவன் காலை கடனை முடித்து விட்டு கீழே செல்ல,அங்கு சீதாவோ குளிப்பதற்கு பதமாக நீரை கலந்து வைத்திருந்தார்.

சிறிது நிமிடத்தில் குளித்து முடித்து வந்தவனுக்கு சூடாக டீயை கொடுக்க, வாங்கி குடித்துவிட்டு மேலே சென்றவன் தயாராகி அம்மாவிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறிச்சென்றான்.

கவிதா வீட்டின் வழியாகத்தான் மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டும்.

இத்தனை வருடங்களாக அந்த பக்கம் பார்காமல் சென்றவனுக்கு இன்று ஏதோ உள்ளுணர்வு தூண்ட, வண்டியின் வேகத்தை குறைத்து அத்தை வீட்டு பக்கம் திரும்பி பார்க்க,அங்கே தலையில் துண்டை கட்டிக்கொண்டு வாசலில் பெண்ணொருத்தி கோலம் போடுவதும், அவளின் பின்புற வரி வடிவமும் தெரிந்தது.

" ஓஓஓ...இவ்வளவு சீக்கிரம் எழும் பழக்கம்லாம் இவளுக்கு இருக்கோ என நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தை அதிகரித்து சென்றவனின் சிந்தனை,அவள் முகம் எப்படி இருக்கும் என்கும் யோசனையானது.

தேவி வீடு....

வெளியே வந்த வசந்தியோ,கணவர் இன்னும் யோசனையோடே திண்ணையில் இருப்பதை கண்டவர், அப்படி என்ன சிந்தனை இந்த மனுஷனுக்கு?சரி கூப்பிட்டு பார்ப்போமென்று தேவ் அப்பா,தேவ் அப்பா என்க,மனைவியின் அழைப்பில் கண்ணனும் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தார்..

"சாப்ட வாங்க என்க,ம்ம் என்றவர், எழுந்து உள்ளே போய் கையை கழுவிட்டு வந்து உட்கார கணவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே,மகள் சொன்ன விஷயத்தை காதில் போட்டு வைத்தார்.

சாப்பிட்டுக்கொண்டே அதைக் கேட்ட கண்ணன்,சரி வசந்தி தாராளமா நேரம் எடுத்துக்கட்டும்,ஆனால் நான் பாக்குற மாப்பிள்ளையை தான் கட்டிக்கனும்னு சொல்லிடு என்றபடி எழுந்து சென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
அப்பா அம்மா பேசியதை தனது அறையிலிருந்து கேட்ட தேவியோ, சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
பின் தனது ரூமில் இருக்கும் கண்ணாடி முன்பு வந்து நின்றவள்,கதிர் மாமா, என்றைக்கு இருந்தாலும் நீங்க தான் என் புருஷனென்று சிரித்தாள்.

பின்னர்,தன் அறையிலிருந்த கபோர்டை திறந்து அதனுள் இருந்த டைரியை எடுத்தவள்,மெத்தையில் படுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் பக்கத்தை திருப்ப,அதில் சில நிகழ்வுகளை எழுதியிருந்தாள்.

"கதிரின் மேல் காதல் வந்த நாள் பற்றி எழுதிய பக்கத்தை தேடி எடுத்து படிக்க தொடங்கினாள் தேவி.அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக, அங்கே குறித்து வைத்திருக்கும் தேதியும் வருடமும் சொல்லியது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு...

தேவி அப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து ரிசல்ட் வரும் நாளுக்காக காத்திருந்தாள்.இந்த இடைப்பட்ட நாளில் டவுனுக்கு போய் டைப்ரைட்டிங் கத்துக்கொள்கிறேனென்று தந்தையிடம் சொல்ல,இருக்கும் நாட்களில் ஒழுங்கா சமையலை கத்துக்கொள் என்று மகளுக்கு வசந்தி சொல்ல,அவ கிடக்குறாள் நீ தாரளமாக போம்மா என கண்ணனும் மகளுக்கு சம்மதம் சொல்லி விட்டார்.

தேவியும் தேனூரில் இருக்கும் டைப்ரைட்டிங் கிளாஸில் சேர்ந்து விட்டாள்.தினமும் அவளை பஸ்டாப்பில் விடுவதும் மீண்டும் கூப்பிட்டு வருவதும் கண்ணனுடைய வேலையானது.

இதோடு டைப்ரைட்டிங் கிளாஸ்கு தேவி செல்ல ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆனது.அன்றும் வகுப்பு முடிந்து தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸிற்காக தேவி காத்திருக்க நேரம் போனதே தவிர பஸ் வந்த பாடில்லை.

அப்பொழுது தற்செயலாக தேவி திரும்ப,அங்கே தனது ராயல் என்பீல்டில் நீலக்கலர் சட்டை வெள்ளை வேஷ்டியோடு,காற்றில் முன் உச்சி முடிகள் பறக்க கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் கதிர் தெரிந்தான்.

இதுவரை அவனை ரசித்து பார்த்ததில்லை.இன்று ஏனோ அவளுக்கு அவன் அழகனாக தெரிய, முதல் முறையாக அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சில அடி தள்ளி வந்து நின்றவன்,என்ன மா பஸ் இன்னும் வரலையா?

கதிரின் கணீர் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,இன்னும் வரலைங்க மாமா என்க,சரி வா மா.வீட்டுக்கு தான் போறேன்,உன்னை அப்படியே விட்டுட்டு போறேன் என்கவும்,ம்ம் என்றவள் அவன் வண்டியின் பின்னால் ஏற, போலாமா மா என கதிர் கேட்க, போகலாம் மாமாமென்றாள்.

"தேவ்,கண்ணன் தவிர யாருடனும் இப்படி சென்றதில்லை.அவனின் அருகில் அமர்ந்தவளுக்கு ஏதோ உள்ளுக்குள் மாயங்கள் செய்தது.கதிரோ அவள் படிப்பை பற்றி பேசிக்கொண்டே வர,தேவியோ கதிரோடு மாயலோகத்தில் உலாவிக்கொண்டிருந்தாள்.

இரண்டு மணி நேரப்பயணம் அவளுக்கு இன்னும் நீளாதா என்று இருந்தது.தேவியின் வீட்டினருகில் வந்து வண்டியை நிறுத்தியவன் இறங்குமா என்க,அதுக்குள்ளே வந்துட்டோமா என்றாள் கனவுலகில் இருந்தவள்.

அப்பொழுது வண்டி சத்தம் கேட்டு வீட்டின் உள்ளேயிருந்த வசந்தி,யாரென்று வாசலுக்கு வந்து பார்க்க,அங்கே கதிரும் தேவியும் நின்றனர்.

அவரை பார்த்தவனோ,நல்லா இருக்கீங்களாத்தை?டவுன்ல தேவி நின்னு கிட்டு இருப்பதை பார்த்தேங்கத்தை.சரி வீட்டுக்கு தான் போறோமேனு கூப்பிட்டு வந்தேன்.

"அதற்கு,நல்லா இருக்கேன் கதிரு.நல்ல காரியம் செய்தப்பா.மாமாவும்,தேவும் மாடு வாங்கும் விஷயமாக வெளியே போயிருக்காங்கப்பா.எப்படி இவளை கூப்பிட்டு வருவதுனு நானும் கவலையா தான் இருந்தேனென்றார்.

"அச்சோ...வாசலிலே நிக்குறியே,உள்ளே வாப்பா என்க,இருக்கட்டுங்கத்தை.நம்ப வீடு தானே எப்போ வேண்டுமானாலும் வரலாம் என்றவன்,இருவரிடமும் சொல்லிக்கொண்டு தனது வீட்டை நோக்கி வண்டியில் சென்றான்.தனது அறைக்குள் வந்தவளோ கதிரின் நினைவில் மூழ்கினாள்.

அன்றிலிருந்து அவனை ரசித்து பார்க்க தொடங்கினாள்.அடிக்கடி கதிரின் கண்ணில் படுமாறு அவளது செய்கைகளை செய்யத் தொடங்கினாள்.

சில நாட்களாக தன்னை பார்க்கும் தேவியின் பார்வையில் வித்யாசம் இருப்பது புரிந்துகொண்டான்.சின்ன புள்ளை தானே கூப்பிட்டு பேசினால் புரிந்து கொள்வாளென்று இருந்து விட்டான்.

இப்படியே நாட்கள் செல்ல,அன்று ஒரு நாள் வேலுவுடன் வரப்பில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தவன் தூரத்தில் இருக்கும் விளாம்பழம் மரத்தின் கீழே தேவி நிற்பதை பார்த்தான்.

நீலகிரி....

சரி நேரம் ஆகுது நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்றவள்,உள்ளே போய் தனக்கு வாங்கி வந்த தீனி மூட்டையை எடுத்துக்கொண்டு,மயிலாவிடம் போய்ட்டு வரேன்மா என்றவாறு அங்கிருந்து பவி சென்றாள்.

பார்த்து போ பவி என்றவர்,ஏம்பா புள்ளை தனியா போகுது பாரு,கூட போய் விட்டுட்டு வா என்க,எந்த எருமையும் எனக்கு துணைக்கு வர வேண்டாம்.நான் ஆன்ட்டி வீட்டுக்கு தான் போறேனென்று திரும்பி பார்க்காமல் சொல்லிக்கொண்டே போனாள்.

மூங்கில் கூடையை பிண்ணி முடித்தவர், தம்பி என்க,மருதுவோ சொல்லு மா என்றான்.ஏம்பா...பாப்பாவை விரும்புறியானு தயக்கமாக கேட்க, ஆமாம்மா.மகன் சொன்னதைக் கேட்டவருக்கு பெரிதாக அதிர்ச்சி ஒன்றும் வரவில்லை.

சிறிது நாட்களாகவே மகனை கவனித்து கொண்டுதானே இருக்கின்றார். தாயறிதா ரகசியம் இல்லையே.பாப்பா நல்ல புள்ள தான்.ஆனால்...., நமக்கெல்லாம் அவங்க பொண்ணு குடுப்பாங்களாப்பா?என்று கவலையாக கேட்டார்.

ஏம்மா கொடுக்க மாட்டாங்க? என்று மருது திருப்பி கேட்க,எப்பா நம்ப யாரு?,அவங்க யாரு? என்க,மேடம் அப்படி எல்லாம் பார்க மாட்டாங்கம்மா. தாமரையோட அப்பா,அம்மா எல்லாம் இத்தனை வருஷமாக நம்பகூட பழகியிருக்காங்களே என்றைக்காவது வேற்றுமை பார்த்திருக்காங்களா?என்று மருது கேட்க,அப்படி இல்லப்பா.பழக்கம் வேறு,பொண்ணு கொடுக்குவது வேறு.

நாளை பின்ன ஏதாச்சும் ஒன்னு சொல்லிட்டா மனசு தாங்காது.ஊர்ல இருந்து வரும் போது உன் முகத்தில் இருந்த சந்தோஷம்,நர்சம்மா வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து இல்லை. அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன் என்றவர், நர்சமா கிட்ட வேண்டுமானால் இந்த விஷயத்தை நான் பேசி பார்க்கட்டுமா?.

அதற்கு,மருதுவோ..எதுக்குமா இவ்வளவு அவசரப்படுற என்க,இது அவசரம் இல்ல தம்பி அவசியம் தான். பாப்பா வெளிநாடு போயிடுச்சுன்னா திரும்ப எப்ப வரும்னு தெரியாதுப்பா. உனக்கும் வயசு போகுது.

"உன் அத்தக்காரி வேற அவ மவளை உன் தலையில் கட்டி வைக்கலாம்னு கங்கணம் கட்டி கிட்டி திரியுரா"

அம்மா...அவளை எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன் வீணா பகல் கனவு காண வேண்டானு உன் நாத்தனாருக்கு சொல்லிடுமா.அதுவுமில்லாமல் எனக்கு பொண்டாட்டினா அது தாமரை மட்டும் தானென்று மருது உறுதியாக சொல்ல, எனக்கு மருமகளா பாப்பாவை ஏத்துக்க சம்மதம் தான்.

சரி...வாயேன் ஒரு எட்டு போய் எதுக்கும் நர்சம்மா கிட்ட இதை பற்றி பேசிட்டு வரலாமேயென்க,நான் எப்படிமானு தயங்கினான்.

சரி நீ வர வேண்டாம்,நானே போய் பேசிட்டு வரேனென்றவர்,உள்ளே போய் தான் பிண்ணிய மூங்கில் கூடையை ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்துவிட்டு,வாசலில் இருக்கும் மண் பானையில் இருந்த தண்ணீரை அள்ளி முகத்தை கழுவியவர்,இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து முகத்தை துடைத்து விட்டு,அங்கிருந்து வேதா இருக்கும் வீட்டை நோக்கிச் சென்றார்.

சிறிது நிமிட நடையில் வேதா இருக்கும் வீட்டின் வாசலுக்கு வந்தவர் நர்சம்மா, நர்சம்மா என்று வாசலிலிருந்து கூப்பிட, கதவு சும்மாதான் சாத்தியிருக்கு, உள்ளே வாங்க என்றார்.

"கதவை திறந்து உள்ளே வந்த மயிலா, அங்கு சோபாவில் படுத்திருந்த வேதாவை பார்த்தவர்,என்னாச்சு நர்சம்மா?,உடம்புக்கு ஏதாச்சும் சுகம் இல்லையா என்க,ஒன்னும் இல்லை. சும்மா அசதியா இருக்க போல இருந்துச்சினு படுத்தேன்.

காலையிலேயே நீ வேற நல்ல சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டியா சாப்பிட்டது தூக்கம் வர போல இருந்துச்சு அதான் என்றவர்,எப்படி இருக்கிற?,இங்க பக்கத்துலதான் இருக்குற,வந்து ஒரு எட்டு பார்க்க முடியல?

என்னங்கம்மா பண்றது?,பத்து கூடை பிண்ணிக்கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறாங்க.அதிலேயே நேரம் போகுது.சின்னவனை பள்ளிக்கூடம் அனுப்புவதும்,மூணு வேளைக்கு ஆக்குவதுக்கும்,ஆடு மாடுகளை பார்ப்பதற்கே நேரம் போயிடுதும்மா என்றவருக்கு,இரு டீ எடுத்து வரேன் என்று சோபாவிலிருந்து வேதா எந்திரிக்க,மயிலாவோ வேண்டாம்மா என்றார்.

"எனக்கும் குடிக்கனும் போல இருக்கு மயிலா,சரி இருங்கம்மா நான் போட்டு வரேனென்றவர் சிறிது நிமிடத்தில் ஆவி பறக்க இரண்டு டம்ளரில்
எடுத்து வந்தவர் வேதாவிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.

பின்னர் மேலும் சிறிது நேரம் பொதுவாக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நர்சம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். நான் கேட்க போற விஷயம் புடிக்குமா, இல்லையானு தெரியாது.அதனால நீங்க எங்களை தப்பா நினைக்க கூடாது என்ற மயிலாவிடம் எதுக்கு இப்படி பீடிகை போட்டுக்கிட்டிருக்க?.

"இத்தனை வருஷமா பழகுறேனே என்றைக்காவது வேற்றுமை பார்த்து பழகியிருக்கேனா?அப்போ நீங்களாம் தாயா புள்ளையா பழகுனதுலாம் சும்மா தான் போலனு வேதா சொல்ல, அய்யோ மன்னிச்சிடுங்க நர்சம்மா.

உங்கள பத்தி ஒரு குறை சொல்ல முடியாது.ஆனால் நான் கேட்க வந்த விஷயமே வேற என்க,என்ன மயிலா செலவுக்கு ஏதாச்சு பணம் வேணுமா?.

"அதெல்லாம் அந்த மலையம்மன் புண்ணியத்துல இருக்குமா என்க,வேற என்ன விஷயமென்று வேதா கேட்க,அது வந்துங்கம்மா...நம்ப பெரியவனுக்கு பாப்பாவ கட்டிக் கொடுக்குறீங்களா?

இதை எதிர்பார்க்காத வேதாக்கு உள்ளுக்குள் திடுக்கிட்டது.தனக்குள் இருக்கும் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவர்,என்ன திடீர்னு இப்படி என்றார்.

.இல்லம்மா..ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தவனோ சந்தோஷமா சாப்பாடு எடுத்துட்டு இங்க வந்தான்.ஆனால் திரும்பி வரும்போது அந்த சந்தோஷம் அவன் மூஞ்சில இல்லை.

தாய் அறியாத சூலா..இது...உங்களுக்கு தெரியாததா என்று சொல்லிக்கிட்டு தலையை சொரிய,ஆமா ஆமா என்றவர், மருதுக்கும் தாமரைக்கும் பிடிச்சிருந்தா எனக்கு சந்தோஷம் தான் மயிலா. இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு ஒன்னும் தடங்கலில்லை.

ஆனால்...இது நான் மட்டும் முடிவெடுக்க முடியாது, அண்ணா,அண்ணி தான் முடிவெடுக்கணும்.பொங்கல் முடியட்டும்.எப்படியும் தாமரையை அனுப்பி வைக்க ஏர்போர்ட்டுக்கு போகணும் இல்லையா,அப்போ அண்ணா கிட்ட நேர்ல இதை பற்றி நான் பேசுறேன்.

அப்போ உங்களுக்கு சம்மதமா என்று ஆச்சர்யமாக மயிலா கேட்க,ஏன் இப்படி கேக்குற?,மருது நல்ல பையன்.மருது போல ஒரு புள்ள தாமரைக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்.இப்பொழுது இது தான் என்னால சொல்ல முடியும்.

முழு நம்பிக்கையும் நான் தர முடியாது. என்னதான் நான் வளர்த்தவளா இருந்தாலும் பெத்தவங்க அவங்க தானேயென்று வேதா சொல்ல,நீங்க சொல்றது எனக்கு புரியுதுங்கம்மா.

இது எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.எங்க நீங்க இதுக்கு சம்மதிக்காமல் போய்விடுவீங்களோனு உள்ளுக்குள்ள அச்சம் அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.சரிமா நீங்க சமைக்க வேண்டாம் நானே சமைச்சு கொடுத்து அனுப்புகிறேன்.

பாப்பா வீட்டில் இல்லைனு எனக்கு தெரியாதுங்கமானு வருத்தத்தோடு மயிலா சொல்ல,இருக்கட்டும் நான் ஒரு ஆளு தானே பாத்துக்குறேன் என்றார்.

எங்கம்மா பவி வந்துச்சு காணுமென்க, பவியோட அப்பா இப்பதான் போன் பண்ணுனாரு,அதான் வீட்டுக்கு போயிருக்கிறாள்.

அப்போ சரிங்கம்மா நான் போய் மதியத்துக்கு சோறாக்கி மருது கிட்ட கொடுத்து அனுப்புறேன்,நீங்க கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுங்க நான் வரேம்மானு கதவை சாத்திய மயிலாவோ சந்தோஷமாக தனது வீட்டை நோக்கிச் சென்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top