• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

இறுதி பாகம் 12

Active member
Joined
Jun 3, 2025
Messages
721
எதுக்கு வாத்தி நீயும் உன் பொண்டாட்டி இப்படி பதறிங்க?உங்களை வர சொன்ன நான் இங்க இருக்கிறேன் அம்மாச்சி கிட்ட கேட்டு என்ன புண்ணியம் என்று டைனிங் டேபிளில் இருந்து மாறன் குரல் கொடுக்க மகனின் நக்கலை கேட்டு இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.

ஒரு விஷயம் சொல்றேன் தெம்பா கேளுங்க என்கவும் என்னப்பா என்று வேகமாக வந்து கேட்க,சொல்லாம எங்க போயிட போறேன் என்று மாறன் கேட்க, ஏன்டா நாங்க உன்ன பெத்தோமா இல்ல நீ எங்கள பெத்தாயா என்று வேதவள்ளி மகனை முறைத்தார்.

அப்பொழுது படியில் இறங்கி வந்த நிலவனும் வெரோனிகாவும் அவர்களை பார்த்து தயங்கி நிற்க, காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் சின்ன மகன் பக்கத்தில் யாரோ ஒரு பொண்ணு இருப்பதை பார்த்து யோசனையாக...

அது உன்னோட மருமகள்,போய் ஆசீர்வாதம் பண்ணுங்க என்றான்.

என்ன என்று மதியும் வேதவள்ளியும் அதிர்ந்தனர்...

ரெண்டு பேரும் காதலிச்சாங்க மூணு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டாங்க இப்போதைக்கு உங்க குடும்ப வாரிசு அந்த பொண்ணு வயித்துல வளருது என்றவன்,அக்கா சூடா இன்னும் ஒரு சப்பாத்தி எடுத்துட்டு வாங்க என்று கிச்சனிலிருந்த வேலையாளுக்கு மாறன் குரல் கொடுக்க வேகமாக போன மதி சின்ன மகனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர் பெரியவன் இருக்கும்போது உனக்கு என்னடா அவசரம்?.

ஏன் இப்படி பண்ணனு என்று கேட்டு வேதவள்ளியும் அவர் பங்குக்கு மகனை அடிக்க,அம்மா உங்களை அடிக்கிறதுக்கா வர சொன்னேன்?ரெண்டு பேரையும் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு முறைப்படி ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணுங்க பொண்ணு ஒன்னும் உன் மவன் பின்னாடி காதலிக்கிறேனு சுத்தலை.

பேர் வெரோனிகா விக்டர் நோ நோ வெரோனிகா நிலமாறன்.ஜெர்மனி சிட்டிசன் அவங்க அப்பா அம்மா இங்கதான் இருக்காங்க,நான் கூப்பிட்டு வரேனென்று மாறன் சொல்ல, நான் போய் வர சொல்கிறேன் அண்ணா நீங்கள் இருங்கள் என்று வெரோனிகா சொன்னாள்..

வேண்டாம் மா...நீலு போய் உன் மாமனாரையும் மாமியாரையும் கூப்பிட்டு வாடா என்கவும்,இதோ ணா என்று மாடிக்கு போனவன் விக்டரையும் பியூலாவையும் அழைத்துக் கொண்டு கீழே வர அங்கிருந்த மதிவாணனை பார்த்து விட்டு மதி என்று கூப்பிட திரும்பிப் பார்த்தவர் விக்டர் என்றார்.

படியிலிறங்கி வேகமாக வர இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்ள என்னடா நடக்குது என்று மற்றவர்கள் பார்த்தனர்.

டேய் இத்தன வருஷம் எங்கடா இருந்த என்று மதி கேட்க,அதெல்லாம் பெரிய கதை அப்புறம் சொல்றேன் நீ எப்படி டா இங்கு என்றார்.

இது என்னுடைய மாமியார் வீடு டா என் அப்பாவுடைய கூட பொறந்த தங்கச்சி தான் அத்தை என்று சாலா பாட்டியை காட்டியவர்,என்னடா சொல்ற என்று விக்டர் அதிர...ஆமாம் டா, கோத்தகிரியில் எங்க அப்பாவோட தங்கச்சி இருக்காங்கன்னு நாம ஸ்கூல் படிக்கும்போது சொல்லி இருக்கேன்னு அவங்க தான் என்றவர்,சொன்ன போல பியூலாவை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?.

அப்போ இந்த பொண்ணு உன்னோட பொண்ணாடா என்கவும் ஆமாடா என்றார்.

ரொம்ப நல்லா தான் போயிடுச்சு என்று எழுந்து போய் கையை கழுவிட்டு வந்த மாறன் அப்பா உங்க பிரண்டோட பொண்ணை தான் நீலு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்க,இல்லையே என்றார்.

அது இருக்கட்டும் ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் நானும் மெடிசன் படிப்பதற்காக சென்னை போயிட்டேன்.நீயும் திருச்சியில் உள்ள காலேஜிலையே ஜாயின் பண்ணிட்ட..சந்தர் எங்கே இருக்கிறான் டா?

எதாவது அவனை பற்றி தெரிந்ததா என்க, அதெல்லாம் பெரிய கதை டா அப்புறம் உனக்கு சொல்றேன் என்று பால்ய நண்பர்கள் இருவரும் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டவர்கள் பழைய கதை எல்லாம் பேச ஆரம்பித்தனர். .

வேதவள்ளியோ மருமகளை பார்த்து சிரித்தவர் வேற என்ன பண்ணுவது என்று மனதிற்குள் சொல்ல நிலமாறனோ தனது மனைவியை அழைத்துக் கொண்டு போய் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.

இப்ப எத்தனை மாசம் ஆகுது என்க, நாலு மாசம் ஆன்ட்டி என்றாள்.

மாறனோ தனது தாய் தகப்பனை பார்த்தவன் நாளை காலை எட்டு மணிக்கு எங்களுக்கு சென்னைக்கு பிளைட் அங்கிருந்து நான் டெல்லி போய்டுவேன் வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு அவன் ரூமிற்கு சென்று விட்டான்.

மறுநாள் வேலனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியவர்கள் கவிக்கு உடல்நிலை சரியில்லாத இருப்பதால் அவள் கொஞ்சம் குணமான பிறகு கோர்ட்டில் ஒப்படைப்பதாக சொல்ல பின்னர் மற்ற ஆதாரங்களையும் கொடுக்க கவிக்கும் வேலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கணும் என்று ஜட்ஜ் தீர்ப்பளித்தார்.

ஹாலில் பேசிக் கொண்டிருக்கும் போது விக்டர் மதி என்ற குரல் கேட்டு திரும்பியவர்கள் அங்கிருந்தவன் யாரென்ற அடையாளம் தெரியாமல் பார்க்க, சந்தர் டா என்க...

நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் இருவரும் வேகமாக போய் சந்தரை அணைத்துக் கொண்டு எங்க போன என்ன ஆச்சு என்று நண்பர்கள் பேசலானார்கள்.

பின்னர் அன்று இரவே மாறன், நிலவன், அவன் மனைவி மகனோடு டெல்லிக்கு வந்து விட்டனர்.அதன் பிறகு வழக்கம் போல் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

மறுநாள் தனது மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு மதிவாணனும் வேதவள்ளியும் ஊருக்கு வந்தவர்கள் நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து சில மாதங்களுக்கு முன்பு காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்று சொல்ல அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

விக்டரும் பியூலாவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ஜெர்மனிக்கு கிளம்ப,வெரோனி தனது தாய் தந்தையை கண்ணீரோடு பார்க்க இவங்களும் உனக்கு அப்பா அம்மாதான் நீ மகள் போல நடந்து கொள்ளனும் மருமகளா நடந்துக்க கூடாது என்று மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு சென்றனர்.

மூன்று மாதங்கள் கடந்து ஓடியது மாதத்தில் ஒரு நாள் ஆர்த்தியின் கல்லறைக்கு போய் நிலமாறன் மட்டும் பூச்செண்டு வைத்துவிட்டு சிறிது நிமிடம் கண்ணை மூடி அவள் ஆத்மாவிற்கு பிரார்த்தனை பண்ணிக்கொண்டு வருவான்.

தற்போது வெரோனிக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கு சொந்த பந்தங்களை கூட்டி விமர்சையாக வளைகாப்பு விட்டனர்.அதற்காக ஜெர்மனியில் இருந்து கலாவோடு வந்து வாழ்த்தி விட்டு இன்னும் ஐந்து வருடம் தான் வேலை என்பதால் அதன் பிறகு இந்தியாவில் வந்து செட்டில் ஆயிடுவதாக மகளிடம் வாக்கு கொடுத்துவிட்டு விக்டரும் பியூலாவும் சென்றார்கள்.

நிலவனோ இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து மனைவியை பார்த்துவிட்டு கோத்தகிரிக்கு செல்வான்.அப்படி ஒரு நாள் வந்திருந்த போது வெரோனி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் என்றதும் சொல்லுங்க நீலு என்றாள்.

நீ எதுக்காக வந்தியோ இதுவரைக்கும் அதை பண்ணவே இல்லையே என்கவும் என்னமோ என் மனசுக்கு அந்த சதாசிவத்தை மீட் பண்ணி பேசணும்னு தோணவே இல்லை.

அந்த ஆளுக்கு நான் யாரென்று தெரிய வேணாம் எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்று கணவனின் நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டாள்.பின்னர் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.

யார் என்று போய் வேதவள்ளி கதவை திறக்க அங்கே புகழேந்தியும் ராஜகுமாரியும் நின்று கொண்டிருந்தனர்.இருவரையும் பார்த்தவர் கோபம் வந்தாலும் வீடு தேடி வந்தவர்களை அவமானப்படுத்தக் கூடாது என்பதால் வாங்க என்றார்.

உள்ளே வந்தவர்கள் அங்கே மதிவாணன் நிலமாறன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நிற்க வாங்க சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்க என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேணாங்க சம்பந்தி.
நாங்கள் சாப்பிட்டு தான் வந்தோம் நீங்க முடிச்சிட்டு வாங்க என்று அங்கிருந்து சோபாவில் உட்கார் வேலை ஆட்களிடம் ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லி கொடுத்துவிட்டு வேதவள்ளியும் சாப்பிட்டு வரேனென்று போனார்.

கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்த மதியிடம் எங்களை மன்னித்து விடனும் சம்மந்தி என்று புகழேந்தி அவர் கையை பிடிக்க நான் மன்னிக்கிறதுக்கு என்ன இருக்குங்க என்றார்.

பொண்ணு அத்தனை பேருக்கு முன்னாடி பண்ணது தப்புதான் எத்தனையோ முறை உங்களை நேரில் வந்து பார்த்து பேசணும்னு இருந்தோம். ஆனா எங்களுக்கும் ஒரு வித குற்ற உணர்ச்சி தான்.

என் பொண்ணு மாப்பிள்ளையை தான் நினைச்சுட்டு இருக்குறா அது இல்லாம அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை தெரிஞ்சிருக்கு என்றவர் அன்று மகள் சொல்லியதெல்லாம் அவரிடம் சொல்ல தொடங்கினார். .

வேலன் பேலஸ்:

கணவர் இத்தனை மாதமும் தன்னிடம் நடித்திருக்கிறார் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து சரோஜா சதாசிவத்திடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார்.

அதேபோல் வேலனை அரெஸ்ட் பண்ணிய விஷயமும் அவர்கள் ஆர்த்தியை கொலை பண்ணியது எல்லாம் செய்திகள் வழியாக கேள்விப்பட்ட சரோஜா மகளையும் பார்ப்பதை நிறுத்தி விட்டார்.

நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லையே எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு ஒரு தவ வாழ்க்கையை மேற்கொள்வது போல மாறிப் போனார்.

சதாசிவமும் மனைவியிடமும் தாயிடமும் எவ்வளவோ கெஞ்ச உன்னோட அப்பா புத்தி தான் உனக்கு இருக்கு அவர் எப்படி திருட்டுத்தனம் பண்ணுவாரோ நீயும் அப்படித்தானே பண்ணுவ என்க...

அய்யோ அம்மா அப்படி சொல்லாதீங்க என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.எனக்கு தெரிஞ்சு நான் செய்த மிகப்பெரிய பாவம் அதுதான் அதை இத்தனை வருஷம் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன் என்று சதாசிவம் அழ...உன் அப்பா பண்ணியதை விடவா பெரிய தப்பு பண்ணிருக்க போற என்ன சொல்லு என்றார்.

அதாவது நான் உண்மையிலேயே காதலிச்சது சந்திரிகாவை தான் மா என்க, என்ன சொல்ற என்று சரளா அதிர ஆமாம் மா. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகுதான் அப்பா எனக்கு சரோஜாவோட கல்யாணம் ஏற்பாடு பண்ணினார். மனசுல அவள நினைச்சுக்கிட்டு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை.

அதனாலதான் நைட்டு யாருக்கு தெரியாம சந்திரிகாவை கூப்பிட்டு நான் ஊரை விட்டு போலாம் நினைக்கும்போது அவதான் சொன்னா முதல்ல நீ ஒரு வேலைக்கு போயிட்டு நாலு காசூ சம்பாரி அதன் பிறகு வந்து என்னை கூப்பிட்டு போன்னு..

அதேபோல எனக்கும் ஒரு காலேஜ்ல வேலை கிடைத்தது அங்கே வீடு எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டு இங்க வந்து யாருக்கும் தெரியாம சந்திரிகாவையும் அவங்க பாட்டியையும் கூட்டிட்டு போனேன்.

அங்கே அந்த ஊர்க்காரங்க முன்னாடி கல்யாணம் பண்ணி வாழும் போது அவர் கன்சிவா இருந்தா அப்பொழுதுதான் அப்பா விளம்பரத்துல நீங்க ரொம்ப சீரியஸா இருக்கீங்க உடனே வர சொல்லி செய்தி கொடுத்திருந்தார்.

எனக்கு ஏதோ அப்பா பொய் சொல்றாருன்னு நினைச்சுக்கிட்டு வர இஷ்டம் இல்லை.சந்திரிகா தான் நீங்க போயி பாத்துட்டு வாங்கன்னு அனுப்புனா நானும் அங்க இருந்து கோயம்புத்தூருக்கு வந்தேன் எப்படி நான் வர விஷயம் அப்பாவுக்கு தெரிந்ததுன்னே தெரியல அங்க கார்ல எனக்காக காத்திருந்தார்.

கார்ல ஏறி உக்காந்துட்டு என் அம்மாவுக்கு என்ன ஆச்சு கேட்க அம்மா ரொம்ப சீரியஸா இருக்கானு போயிட்டு இருக்கும்போது பின்னாடி இருந்து ஏதோ ஒரு துணியை வைத்து அழுத்தினாங்க நான் மயக்கம் ஆயிட்டேன்.

எனக்கு மயக்கம் தெரிஞ்சி கண்ணு முழிச்சு பார்க்கும்போது அது ஏதோ ஒரு இருட்டறை போல இருந்தது.மூணு மாசமா அந்த ரூம்குள் தான் அடைச்சு வச்சிருந்தாங்க வாரத்துல ஒரு நாள் அப்பா வந்து சரோஜாவை கல்யாணம் பண்ணிக்கலனா உன் அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டிக்கொண்டே இருந்தார்.

நான் அதுக்கு சம்மதிக்கவில்லை என்றால் ஒரு நாள் நீங்க தூங்கிட்டு இருக்கும் போது உங்க நெத்தியில துப்பாக்கி வச்சி இருக்க போல போட்டோ எடுத்து எடுத்து காட்டினார். அதை பார்த்ததும் கண்டிப்பா செய்வார்னு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன் மா.

ஆனால் மறந்தும் சந்திரிகாவையும் அவங்க பாட்டியும் எந்த ஊர்ல இருக்காங்கன்னு நான் சொல்லவே இல்ல அப்போ அப்பா என்ன சொன்னாருனா சரோஜா கூட நீ வாழலனா கண்டிப்பா அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொல்லுவேன்னு சொன்னாரு.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
வயித்துல என்னோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்கிறவள் தூரத்தில் இருந்தே நல்லா இருக்கட்டும்னு நான் அதுக்கப்புறம் சந்திரிகா தேடி போகவே இல்லமா ஆனா உள்ளுக்குள்ள ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருந்தேன்.

இப்படியே ஒன்றரை வருஷம் போனதுக்கு அப்பறமா தான் குழந்தையை தூக்கிட்டு ஊருக்கு வந்தா. அப்பதான் அவ பாட்டி இறந்துட்டாங்கன்னு எனக்கு தெரிஞ்சது.

குழந்தைக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடல் போயிட்டு வரும்போது நான் குழந்தையை தூக்கிட்டேன் என்கிட்ட இருந்து புடுங்கிட்டு போயிட்டா பிறகு அவள் கிட்ட என் நிலையை சொல்லலாம்னு இருக்கும்போது தான் இது எப்படியோ அப்பாவுக்கு தெரிஞ்சு அவளையும் என் குழந்தையையும் ஆள் வச்சி தீ விபத்து போல கொன்னுட்டாருமா என்று கதற..

இதையெல்லாம் சரளாவோடு அந்த பக்கம் வந்த சரோஜாவும் கேட்டு கையில் இருந்த பாத்திரத்தை அதிர்ந்து போய் தவற விட அந்த சத்தத்தில் இருவரும் பார்க்க அங்கே சரோஜா நிற்பது தெரிந்தது.

கணவரை ஒரு பார்வை பார்த்த சரோஜா தனது கழுத்தில் இருந்த தாலியை அறுத்து அவர் மூஞ்சிலேயே தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றார்.

பணத்தாசையால் எத்தனை பேர் வாழ்க்கையை தனது கணவர் கெடுத்திருக்கிறார் என்பது புரிந்து சரளாவிற்கு கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

நேராக அங்கிருந்து பூஜை அறைக்கு போனவர் எதற்கு இப்படி ஒரு சோதனையை கொடுத்த..இதுக்கு எங்களை கொன்று இருக்கலாமே என்று அழுதார்.

அதிர்ந்து போயிருந்த சதாசிவம் தனது வயது மறந்து வேகமாக ஓடியவர் அங்கே போய்க்கொண்டிருக்கும் சரோஜாவை போய் தடுத்து நிறுத்தி மனைவின் காலில் விழுந்தவர் உன்னிடம் சொல்லாமல் இருந்தது தப்புதான் என்ன மன்னிச்சிடு.

சந்திரிகாவும் குழந்தையும் உயிரோடு இருக்கணும் என்றால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்பதற்காக தான் இதை மனசுல போட்டு புதைத்தேன்.
ஆனால் உனக்கு உண்மையான கணவனாக தான் வாழ்ந்தேன் மா.

உன் மேல் நான் வைத்த அன்பு பொய்யில்லை மா என்று மனைவியின் காலை கட்டிக் கொண்டு அழ, இத்தனை வருடங்களாக கணவர் தன்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதை நினைத்து பார்த்த சரோஜா கீழே குனிந்து அழுது கொண்டிருந்த கணவரின் கண்ணை துடைத்து விட்டவர் விதி என்று ஒன்று எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்..

இனி உங்களுக்கு நான் எனக்கு நீங்கள் அது போதுமென்று கண்ணீரோடு சொல்ல மனைவியிடம் தனது கடந்த கால வாழ்க்கையை சொல்லியதால் சிறிது பாறம் குறைந்தது போல இருந்தது.

சூடாமணி:

கதவு தட்டும் சத்தம் கேட்டு அழுது கொண்டிருந்த மலர்விழி கண்ணை துடைத்துக் கொண்டு போய் கதவை திறக்க அங்கே புகழேந்தி தான் நின்று கொண்டிருந்தார்.

மலர் உள்ள வரட்டுமா என்க அவள் வழிவிட்டு நிற்கவும் உள்ளே போய் அங்கிருந்து சேரில் உட்கார்ந்தவர் உனக்கு மாப்பிள்ளை எப்படி தெரியும் சொல்லு என்க,பின்னர் அழுது கொண்டே நடந்ததெல்லாம் மலர்விழி சொல்ல கேட்டவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

யாரின் மீது தப்பு??

சூழல் தான் இப்படி இருக்கு வேற என்ன சொல்ல முடியும் என்றவர் இன்னமும் நீ மாப்பிள்ளையை விரும்புறியா என்க, ஆமாம் பா.கல்யாணம்னு நடந்தா எனக்கு அவர் கூட தான்.

கொஞ்ச நாள் அவர் மனசுல இருக்குற கோவம் போகட்டும் என்றவள் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தாள்.அதோ இதோ என்று மூன்று மாதங்கள் கடந்திருக்க பிறகுதான் அவர்கள் வீடு தேடி பார்க்க வந்ததாக சொன்னார்கள்.

இதைக் கேட்டு அவர்களுக்கும் மலர்விழி மேல் தப்பு இல்லை என்றாலும் அதை அத்தனை பேருக்கும் முன்னாடி பேசி இருக்க வேண்டாமே என்றனர்.இதற்கு என்ன சொல்றதுன்னு தெரியல..எங்களுக்கும் உங்க பொண்ணு புடிச்சதால் தான் என் பையனுக்கு பேசி முடிச்சோம்.

இதுல நாங்க முடிவு எடுக்க என்ன இருக்கிறது சம்மந்தி என் பையன் ஓகே சொல்லி விட்டால் எங்களுக்கு எந்த தடங்கலும் இல்லை என்று சொல்ல இது போதுங்க சம்மந்தி என்றவர் என் பொண்ணுக்கு டெல்லியில் வேலை கிடைச்சிருக்கு..

மாப்பிள்ளைக்காகவே அங்க இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருக்கா என்கவும் அதைக் கேட்டு சிரித்தவர்கள்,தானா பழுக்க வேண்டிய பழத்தை கல்லால் அடித்து தான் பழுக்க வைக்கணும்னு விதி இருந்தா யாரால் மாற்ற முடியும் என்றனர்.

மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு அவர்களும் அங்கிருந்து கிளம்பி சூடாமணிக்கு வந்தனர்.

பெற்றோர்கள் வருகைக்காக மலர்விழியும் வாசலையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.காரை நிறுத்திவிட்டு இறங்கி வரும் இருவரின் முகத்தை பார்த்தவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியலை.

உள்ளே வந்த ராஜகுமாரி மகளைப் பார்த்து சிரிக்க மூன்று மாதங்களுக்கு பிறகு தன்னை பார்க்கும் அம்மாவின் பார்வையை கண்டவள் என்னை மன்னிச்சிடுமா என்று போய் ராஜகுமாரியின் கையை பிடித்துக் கொண்டாள்.

சம்பந்தி வீட்டில் எல்லாருக்கும் சம்மந்தம் தான் இனி மாப்பிள்ளை மனசை மாற்ற வேண்டியது உன்னுடைய கையில தான் இருக்கு என்கவும் ரொம்ப தேங்க்ஸ் பா என்று அழுதாள்.

எங்கள் பொண்ணோட வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் அவசரப்பட்டு இனிமே எதுவும் பண்ணாதே யோசிச்சு பண்ணு என்க சரிப்பா என்றவள் டெல்லிக்கு போவதற்காக பேக்கிங் பண்ணினாள்.

அந்த வாரத்தில் தான் மஞ்சுவுக்கும் திருமணம் இருப்பதால் அதை முடித்துவிட்டு மலர்விழியும் டெல்லிக்கு புறப்பட்டாள்.

டெல்லி:

டெல்லிக்கு வந்தவளை வரவேற்பதற்காக நிலவன் அங்கே காத்திருந்தான்.

அண்ணா என்க...வாடா மலரு. நா மட்டும் இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது என் மச்சானுக்கு தெரிந்தது நார் நாரா என்ன கிழிச்சிடுவான்.கடுகளவு சந்தேகமும் வரக்கூடாது சரியா டா என்க, நான் பாத்துக்குறேன் ணா.

அந்த விசுவாமித்திரரை ஒரு வழிக்கு கொண்டு வராமல் நான் திரும்ப தமிழ்நாட்டுக்கு போக மாட்டேன் என்க இதுதான் என் தங்கச்சி என்று சிரித்தவன் பின்னர் காரில் அழைத்துக் கொண்டு வேதநந்தனிடம் சென்றான்.

நிலவனோடு சாதாரணமாக சிரித்து பேசிய படியே வரும் மலரை பார்த்த அங்கிருந்து ஆபீசர்கள் சொந்தக்கார பொண்ணு போல என்று நினைத்துக் கொண்டு அவரவர் வேலையை பார்த்தனர்.

கதவைத் தட்டிக் கொண்டு இருவரும் உள்ளே போக அங்கு ஏதோ பைலை பார்த்துக் கொண்டிருந்த வேதநந்தன் மலர்விழியை நிமிர்த்து பார்த்தவர் வெல்கம் மா என்க தேங்க்யூ பா என்றாள்.

யாராவது அப்பாக்கு தேங்க்யூ சொல்லுவாங்களா மா என்க,கண்டிப்பா சொல்ல மாட்டாங்க.வாபஸ் வாங்கிக்கிறேன் என்கவும் நல்லது நல்லது..உன் ஆளுக்கு வேலை கொடுத்து வலு கட்டாயமாக பூனாக்கு அனுப்பி இருக்கிறேன் .

மாறன் வருவதற்கு இன்னும் மூணு நாள் இருக்கு சரியா அதுக்குள்ள இளமதி கிட்ட என்ன பேசணுமோ பேசிக்க எந்த காரணத்தை கொண்டும் இந்த விஷயத்துல எனக்கும் இவனுக்கும் சம்பந்தம் இருக்க போல காட்டிக்காத மா.

அவ்வளவுதான் அப்புறம் எதுவுமே எங்க கையில இல்லை என்று வேதநந்தன் சொல்ல,ஏங்கப்பா அவருக்கு பெரிய அதிகாரி நீங்க அந்த சின்ன போலீசுக்கு போய் பயப்படலாமா என்றாள்.

யாரு அவனா சின்ன போலீசு போக போக அவன் லட்சணம் உனக்கே தெரியும் அப்போ என்ன சொல்லுவேன்னு பார்க்கலாம் என்றார்.

சரி நிலவா வீட்டுக்கு கூப்பிட்டு போ என்று வேதநந்தன் சொல்ல ஓகே பா என்று இருவரும் அவர்கள் தங்கி இருக்கும் வில்லாவிற்கு வந்தார்கள்.

அவர்கள் வீட்டிற்கு எதிர் பிளாட்டை தான் மலர் தங்க ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள் அந்த வீட்டில் எல்லா வசதியோடும் இருக்க இளமதியோ மலரை கட்டிக் கொண்டவள் வாங்க அண்ணி, எப்படி இருக்கீங்க என்க..

நல்லா இருக்கேன் அண்ணி.நீங்க எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்தனர்.மூன்று நாட்கள் அவர்கள் வீட்டிலே தங்கியவள் இன்று இரவு அவன் வந்து விடுவான் என்பது தெரிந்து தனது பிளாட்டிற்குள் சென்று விட்டாள்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மாறன் அங்கு விழித்துக் கொண்டிருந்த வேதநந்தனிடம் போன விஷத்தை பற்றி சொல்லி முடித்தவன், இவ்வளவு நேரம் தூங்காம எதுக்கு முழிச்சிட்டு இருக்கீங்க என்று சத்தம் போட்டான்.

நீ வருவனு தான் பா காத்துட்டு இருக்கேன் என்கவும்,நான் என்ன சின்ன புள்ளையா எனக்கு வர தெரியாதா? அதான் என்கிட்ட ஒரு சாவி இருக்கே மாமா..போய் படுங்க என்றவன் நானும் போய் படுக்கிறேன் என்று தனது ரூமிற்கு சென்று விட்டான்.

எவ்வளவு லேட்டாக படுத்தும் வழக்கம்போல் விழிப்பு வந்ததும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் வெளியே வர அவனுக்காக அங்கே கிரீன் டீ போட்டு தயாராக வைத்துக்கொண்டு இளமதி நின்றாள்.

அதை எடுத்துக் குடித்தவன் சரி நான் ஜிம்முக்கு போறேன் உன் புருஷன் ரெடி ஆகிட்டானா என்க,அவர் இன்னைக்கு வரலை அண்ணா நீ மட்டும் போயிட்டு வா என்றாள்.

சரியான சோம்பேறி புடிச்சவன் உன் புருஷன்.இவன் எல்லாம் போலீஸ்காரனா? கொஞ்சமாவது பிட்டா இருக்குறது இல்லையா என்று சொல்லிக்கொண்டே கதவை திறக்க அப்பொழுது எதிர் பிளாட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே புத்தம் புது மலரை போல் புடவை கட்டிக்கொண்டு தலை குளித்ததற்கு சாட்சியாக துண்டால் கொண்டையிட்டுக் கொண்டு நெற்றியில் சிறிய கீற்றாக சந்தனமும் மெரூன் கலரு பொட்டை வைத்துக் கொண்டு எழில் ஓவியமாக நிற்பவளை பார்த்தவன் இவளா என்று அதிர்ந்தான்...

அங்கிருந்தவளோ புருவத்தை தூக்கி என்ன என்கவும் அதில் சுதாரித்தவன் கோவமாய் இருப்பது போல் அங்கிருந்து போனவனுக்கு,இது நிஜமா இல்லை கனவு எதாவது காண்கிறோமா என்று திரும்பிப் பார்க்க அவளோ அங்கிருந்து முத்தத்தை பறக்கவிட்டு டாட்டா சொன்னாள்.

அதைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஜிம்மிற்கு சென்றான்.

போடி மாப்பிள்ளை போ."ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" அப்படின்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.சாமியார இருக்கிற உன்னை சம்சாரியா ஆக்கிட்டு தான் டா இந்த டெல்லியை விட்டு நான் போவேன் என்று சூளுரைத்துக் கொண்ட மலர்விழி கதவை சாத்திவிட்டு உள்ளே போனாள்...!

முற்றும்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top