New member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 13
- Thread Author
- #1
கர்நாடகா-கூர்க்:
"அண்ணே...அந்த இன்ஸ் ஏதோ தப்பு பண்றான்"
"ரொம்ப நாளா எனக்கு சந்தேகமா இருக்குன்னு சொல்லும் கந்தனை பார்த்த ராமரோ,ஏன் டா குடிச்சிட்டாலே உன் கூட இதே ரோதனையா இருக்கு டா"
"நான் குடிச்சிருக்கேன் தான் இல்லைனு சொல்லலை ஆனால் நான் சொல்றது சத்தியமான உண்மைணே"
"ரெண்டு மூணு தடவை அந்த இன்ஸை நம்ப காட்டு பங்களா போற வழியில் பார்த்தேன்னே அதை வச்சி சொல்லுறேன்"
"ராயரும் கந்தன் சொல்வதை வழக்கம் போல் குடிகாரன் பேச்சு என்று தள்ளிவிடாமல்,இதை பற்றி யோசனை பண்ணிப் பார்த்தான்"
"ஏனென்றால்,கடந்த இரண்டு மாதமாக கந்தன் இதை தான் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்"
ஒரு வேலையை கந்தன் சொல்வது போல அந்த சேதுராமன் ஏதாவது திருட்டுத்தனம் பண்றானோ??என்று யோசிக்க,கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வந்த சேதுராமனோ ரொம்பவும் கெடுபிடியான ஆள் என்று கேள்விப் பட்டிருக்கிறான்.
"அப்படி உள்ளவன் மேல் கடந்த இரண்டு மாதமாக இப்படி சொல்வது ஏதோ தவறாக இருப்பது போல் ராயருக்கு தோன்றியது"
"எப்படி இதை கண்டுபிடிப்பது???என்று யோசனையாக நடந்து கொண்டிருக்கும்போது அந்த பங்களாவில் வேலை பார்க்கும் காவலாளியோ அந்த நேரம் இவர்கள் எதிரில் வந்தவன்,எப்பா ராயரு உன்னை எங்கெல்லாம் தேடுவது என்க,ஹம் சொல்லுங்க என்ன விஷயம்"
"பங்களாவ சுத்தியும் செடி கொடினு மண்டி கிடக்கு ராயரூ"
"ஊர்ல இருந்து சின்ன முதலாளி வரார் பா.தோட்டத்தை கொஞ்சம் சுத்தம் பண்ணி கொடுக்க வேண்டும்"
"ஓஓஓ.. சரி பரசு,நாளைக்கு வரோம் என்று ராயர் சொல்லவும்,இந்தாப்பா அட்வான்ஸ் என்று பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து காவலாளி நீட்ட,ராமரும் அதை வாங்கிக் கொண்டார்"
இருவருக்கும் ஆளுக்கு 500 என்று பிரித்தவர்,இவன் முழு போதையில் இருப்பதால் பணத்தை எங்கேயாவது போட்டு விடுவான் என்று நினைத்தவர், அவன் பங்கை தன்னிடமே வைத்துக் கொண்டு காலையில் கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
"வீட்டில் போய் சாப்பிட்டு படுத்தாலும் ராயருக்கு அந்த இன்ஸ்பெக்டர் மேலயே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது"
"அவரும் ஏதேதோ யோசித்துப் பாருங்கள், சேதுராமன் மேல் தவறான எண்ணம் வருவது போல் இல்லை"
“நெருப்பில்லாமல் எங்கிருந்து புகையுமா???,நாளைக்கு தான் நம்ம காட்டு பங்களாவுக்கு போவோமே,அங்க போய் வாட்ஸ்மேன் கிட்ட பேச்சு கொடுத்து விஷயத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து தூங்கலானார்"
"மறுநாள் காலையில் ராயரும்-கந்தனும் சைக்கிளில் ஏறிக்கொண்டு காட்டு பங்களாவை நோக்கி சென்றனர்"
"ஊருக்குள் இருந்து காட்டு பங்களா தூரம் என்பதால்,அவ்வளவாக அங்கே ஆட்கள் நடமாட்டமும் இருக்காது"
"முக்கால் மணி நேரத்தில் இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர்"
வாட்ச்மென் பரசுவும் அவர்களுக்கு கதவை திறந்து விட சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு, கையோடு எடுத்து வந்து மண்வெட்டி அருவாளை வைத்து அங்கேயே புதர் போல் மண்டி கிடக்கும் செடி கொடிகளை எல்லாம் இருவரும் சுத்தம் பண்ண தொடங்கினர்.
ராயர் மண்வெட்டியால் தரையை கொத்தி போட,கந்தனோ கையில் இருந்த அருவாளால் செடி கொடிகளை எல்லாம் அறுத்து போட்டு விட்டு,அடர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான்.
"நேரமும் கடந்து செல்ல இருவருக்கும் டீ வடையோடு பரமு வந்தார்"
பின் மூவரும் அங்கிருந்த மர நிழலில் உட்கார்ந்து கொண்டு டீ குடிக்கும் போது,ஏன் பரசு எப்படி இந்த காட்டு பங்களாவில் நீ தனியா இருக்கிறாய்??என்று ராயர் பேச்சு கொடுக்க,நான் என்ன இங்கே வா தங்கி இருக்கிறேன்??
நீ வேற ராயரூ...இந்த இடத்தில் மனுஷன் இருப்பானா?
"நித்தமும் இங்கு காலையில் வந்து அந்தி வருவதற்குள் இங்கே இருந்து ஓடிடுவேன்னா பாரு"
நம்ம இன்ஸ்பெக்டர் தான் கையில் சின்னதா பொட்டி வச்சுக்கிட்டு வேலைக்காக அப்பப்போ இங்க வருவாரு என்று வாட்ச்மேன் சொல்ல, அப்படியா என்று தெரியாது போல் இருவரும் கேட்டுக்கொண்டார்.
சென்னை-இரண்டு வருடங்களுக்கு முன்பு...
இன்று மகளுக்கும் கணவருக்கும் விடுமுறை என்றாலும்,வழக்கம் போல எழுந்த கண்ணகி குளித்து பூஜையை முடித்தவர் அரக்க பரக்க இல்லாமல் நிதானமாக கிச்சன்! சென்று அடுப்பில் பால் சுட வைத்தவர், இன்னொரு அடுப்பில் காபிக்கு டிகாசனை தயார் பண்ணினார்.
அப்போது காலிங் பெல் சத்தம் கேட்கவும்,யாரு என்ற யோசனையோடு அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு கதவைப் போய் திறந்த கண்ணகி, அங்கிருந்தவரை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்!!
மருமகளின் அதிர்ச்சியை பார்த்த பலராமன் உள்ள வரலாமா? என்று கேட்கவும்,அதில் சுய உணர்வுக்கு வந்த கண்ணகி உள்ளே வாங்க சார் என்கவும், தன்னை சார் என்று கூப்பிடும் மருமகளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர்,அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு சீவகன் இல்லையா மா??
“இதோ சார் என்று உள்ளே போனவர் ரூம் கதவை திறந்து கணவரை பாருங்க, சீவகன் பாத்ரூமில் இருப்பது தெரிந்து கதவை தட்ட இரண்டு நிமிடம் கண்ணகி”
என்னங்க உங்க அப்பா வந்துருக்கார் என்று குரல் கொடுக்க,பட்டென்று கதவை திறந்து அதிர்ச்சியோடு சீவகன் பார்க்க,ஆமாங்க ஹாலில் தான் உட்கார்ந்திருக்காங்க என்கவும், வேகமாக முகத்தை துடைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்த சீவகன் அங்கிருந்த தனது அப்பாவை பார்த்து வாங்கப்பா எப்படி இருக்கீங்க??
வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா??
"20 வருடங்களுக்குப் பிறகு தனது மகனைப் பார்த்தவர் நல்லாருக்கேன் கண்ணு,வா வந்து உட்காரு என்று தனது பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்டி"
"தனது தந்தையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர்,அம்மா எப்படி இருக்காங்க என்க..எல்லாரும் நல்லாருக்கோம் கண்ணு"
"இந்த வருஷம் பொங்கலுக்கு உன்னை குடும்பத்தோடு கூப்பிட்டு போலாம்னு வந்திருக்கேன்"
கடந்த இருபது வருஷமா உன் அம்மா என்கிட்ட பேசுறது கிடையாது.கொஞ்ச நாளாகவே அவளுக்கு உடம்பு சரியில்லை பா.
“நானும் எவ்வளவோ வைத்தியம் பாத்துட்டேன்.உடம்புக்கு ஒரு குறையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.மனசுல உன்ன பத்தி கவலை இருக்குன்னு எனக்கு. நல்லா தெரியும்"
இந்த முறை பொங்கலுக்கு குடும்பமாய் நீ வந்தால் அவளுக்குள் இருக்கும் நோய் பறந்துடும் என்க,
"சீவகனோ தனது தாயை நினைத்து கலங்கினார்"
அப்போது ஒரு டிரேவில் இரண்டு கப் காஃபியை எடுத்து வந்து கண்ணகி அவர்கள் முன்பு நீட்ட,ஆளுக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டார்கள்.
"நல்லா இருக்கியா மா??என்று பலராமன் விசாரிக்க,நல்லாருக்கேன் சார் என்றார்"
வருஷம் இத்தனை ஓடிப் போயிடுச்சு இன்னும் உனக்கு நான் சாராக தான் தெரிகிறேனா? என்று வருத்தமாக பலராமன் கேட்க அதற்கு கண்ணகி எந்த பதிலும் சொல்லவில்லை.
ஏன் கண்ணு உனக்கு ஒத்த புள்ளைனு உன் அண்ணன் சொன்னான். பாக்குறதுக்கு அப்படியே உன் அம்மா போலயே இருக்குமாமே..!!
புள்ள எங்க கண்ணு என்று மகனிடம் பலராமன் கேட்க,இதோ வர சொல்றேன் பா என்றவர் மனைவியிடம் மகளை அழைத்து வருமாறு கண்ணை காட்ட,அவரும் கணவருக்கு தலையை அசைத்து விட்டு மகள் இருக்கும் ரூமை நோக்கி படியில் ஏறி மேலே சென்றார்.
அறை கதவை தட்ட,சிறிது நொடியில் கதவை திறந்து மகளைப் பார்த்தவர் மலரு உங்க தாத்தா வந்திருக்கிறார் வா..
எதேஏஏ தாத்தாவாஆஆஆ..!!!
என்ன மா உளரிட்டு இருக்க???
"நிஜமாக தான் சொல்றேன்"
உங்க அப்பாவோட அப்பா தான் வந்திருக்கிறார்.சீக்கிரம் வாடி என்று சொல்லிவிட்டு கீழே போக,இது என்ன டுவிஸ்ட்?என்று முணவியவளோ ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தாள்.
"காலடி சத்தம் கேட்டு மாடிப்படியை பாருங்க,அங்கே தனது மனைவியின் இளம் வயது உருவம் கொண்ட பேத்தி வருவதை பார்த்தவர்,அப்படியே உன் அம்மா போல தான் இருக்கு என்றார்
கீழே வந்து தயங்கி நிற்கும் மகளை பார்த்த சீவகன்,மலரு இங்கு வா என்க, வேகமாக தனது அப்பாவிடம் வந்தவளின் பார்வையோ அவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் பலராமனின் மேல் தான் இருந்தது.
இவங்கதான் என்னுடைய அப்பா உங்க தாத்தா என்கவும்,அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க,நல்லாரு கண்ணு என்றவாறு எந்திரிச்சு நின்று இடுப்பில் இருக்கும் பச்சைவார் பெல்ட்டை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து பேத்திக்கு...
“அவளோ தனது தாய் தந்த இருவரையும் பார்த்தாள்.வாங்கிக்க கண்ணு என்று பலராமன் சொல்லவும்,சீவகன் தலையசைக்க அந்த பிறகே அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டாள்"
பின்னர் அன்றைய பொழுது அவர்களோடு தங்கியவர் மறக்காமல் பொங்கலுக்கு வருமாறு சொல்லியவர் அன்று இரவு டிரெயினில் ஏறி பொள்ளாச்சிக்கு புறப்பட்டார்"
நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா- அம்மா இருவரின் நண்பர்கள் குடும்பங்கள் மட்டுமே உறவுகளாய் எண்ணி வாழ்ந்தவளுக்கு,தாத்தா பாட்டி மற்றும் சொந்தங்களெல்லாம் தனக்கும் இருப்பதை கேள்விப் பட்டதிலிருந்து தனது சொந்த ஊருக்கு போக வேண்டும் என மலர்விழியும் ஆர்வமாக காத்திருந்தாள்...
சொல்வாளா...???

Last edited: