• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இலங்கை-களுத்துறை:

பாட்டி என்று ருத்ரன் கூப்பிட, இதோ வீரா என்றவர், தனது அருகில் உள்ள பையிலிருந்த வெள்ளி தட்டை எடுத்தவர், அதில் வாங்கி வந்த பழங்களையும், இன்விடேஷனையும் வைத்து கணவரை பார்த்தார்.

பின்னர் சிம்ஹன் தாத்தா தனது மனைவியோடு எழுந்து நிற்க,இங்கு என்னடா நடக்குது என்ற தொணியில் மேகலாவும், சுந்தரும் பார்த்தனர்.

"மாப்பிள்ளை, அம்மாடி மேகலா இதை வாங்கிக்குங்க என்றனர்".

"என்ன மேகுனு மனைவியிடம் சுந்தர் கேட்க, எனக்கு எதுவும் தெரியாதுங்க".

தட்டை இருவரும் வாங்கிக்கொண்டு, ஏதோ நல்ல விஷயமாக தான் தெரியுதென்ற சுந்தர், மேகு இதை பூஜையறையில் வைத்து எடுத்துவா என்க, சரிங்க என்றவாறு மேகலா அங்கிருந்து சென்றார்.

"பூஜையறைக்கு வந்த மேகலா, கையில் இருந்த தட்டை சாமிக்கு முன்பு வைத்தவர், அம்மா துர்கா தேவி, உன் கருணையால் எல்லாம் நல்லதா நடக்கட்டும்மானு வேண்டிக் கொண்டார்".

"பின்னர் தட்டின் மேலிருந்த இன்விடேஷனை மட்டும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவரோ,கணவர் முன்பு நீட்டினார்".

"அதை வாங்கிய சுந்தர், கவரை திறந்து,உள்ளே இருந்த கார்டை பார்த்து அதிர்ந்து போனார்".

"பிறகு அதிர்விலிருந்து வெளியே வந்தவர், படித்து முடித்து விட்டு, மனைவியிடம் கார்டை கொடுத்து, கண்ணா என்று மருமகனை நோக்கி தனது கையை நீட்ட,அவரின் கைக்குள் தனது வலது கையை வைத்தான்".

"மேன்மேலும் வெற்றியும் புகழும் உன்னை வந்து சேரணும் கண்ணானு தனது மருமகனை ஆசீர்வதித்தார்".

"மேகலாவும் படித்து விட்டு மருமகனின் அருகில் வந்தவர், வாழ்த்துக்கள்பா என்க, ருத்ரனோ தனது அத்தையை பார்த்து அவ்வளவு தானா என்றான்".

" சிரித்துக்கொண்டே,நான் தான் முதல் கஷ்டமர்".

"ஹாஹாஹா என்று சிரித்தவன், கடைக்கு ஓனரம்மாவே கஷ்டமரா என்க, அண்ணன் மகனின் பரந்த மனதை கேட்டு மேகலாவிற்கு கண் கலங்கியது".

"பின்னர் மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள், கண்டிப்பாக வரவேண்டுமென்று மூவரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்".

"மேகு, வீராவிற்கு அப்படியே என் மாமனார் போல குணமென்று சுந்தர் சொல்ல,ஆமாங்க.எங்கே,உங்க தங்கச்சி குணம் போல இருந்து, அப்பா வீடே எனக்கு இல்லாமல் போகிடுமோயென்ற கவலை இருந்துச்சி".ஆனால், கண்ணா என் அப்பா ரத்தம்னு நிருபிச்சிட்டான்".

"பாப்புக்கும் இந்த வருஷம் படிப்பு முடியுது".கையோடு இருவருக்கும் கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டால், மனசு திருப்தியாகிடுமென்று மேகலா சொல்ல,யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும் மேகு".வீண் ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்காதே என்றவர்,கொஞ்ச நேரம் நான் படுக்குறேன்".

"ஈவ்னிங் லோடு அனுப்ப போகணும், அஞ்சு மணிக்கு எழுப்பிவிடுமா என்றவாறு, சுந்தர் தனது அறைக்குள் சென்று விட்டார்".

சுந்தருடன் திருமணமாகும் வரை, ருத்ரனை பார்த்துக்கொண்டது மேகலா தான்.ஐந்து வயது பாலகனாக இங்கு வந்தவன், இன்று தனித்து தொழிலை தொடங்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதை கண்டு, மேகலாவிற்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.

"தனக்கு மகள் பிறந்தால்,அண்ணன் மகனுக்கு தான் கட்டி வைக்க வேண்டுமென்று மேகலாவிற்கு மனதிற்குள் ஆசை".ஆனால், தனது அண்ணியின் பேராசை குணம் தெரிந்த பின்னர்,மேகலாவின் மனதிற்குள் பெரும் தடுமாற்றம் வந்தது".

"இருந்தும்,நிச்சயமாக தனது பெற்றோரும் அண்ணன் மகனும் தன் மன ஆசைக்கு தடை சொல்லமாட்டாங்களென்று,பெரும் நம்பிக்கை இருக்கிறது".

"இந்த யோசனையோடு இருந்த மேகலாவிற்கு, அவரது செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

"டீப்பாயின் மேல் இருந்த போனை எடுத்து பார்க்க, அதில் பாப்பு என்ற பெயர் வந்தது".அட்டென் பண்ணியவர், பாப்புமா, நல்லா இருக்கியாடா பட்டு?

மாம்...

"டெய்லி உங்க கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்".அதற்குள் என்ன ஆகிடப் போகுதென்று கேட்டாள் சுந்தர்- மேகலா தம்பதியரின் ஒரே செல்ல மகள் ஆதிரா".

"பாப்புமா", தினமும் பேசினால் என்ன?.

"என் மகளை நான் விசாரிக்க கூடாதா?".

"இதற்கு யார் தடை சொல்ல முடியுமென்று மேகலா கேட்க,அய்யோ மாம்"."போதும்... போதும்".

"உங்களுக்கு மட்டுமில்லை, இந்த உலகத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் தடை போட முடியாதென்று ஆதிராவும் சிரித்தாள்".

"செல்ல மகளின் சிரிப்பை கேட்டவர்,சாப்டியா பாப்பு என்க, ஆச்சுமா".

"பாப்பு, நம்ப வீட்டுக்கு இன்றைக்கு யார் வந்தாங்க சொல்லு பார்க்கலாமென்று மகளை கேட்க, மிசஸ்.மேகலா சுந்தர், நீங்க என்ன லூசா?".

"மகளின் கேள்வியில், என்னடி திடீர்னு லூசுனு சொல்லுற என்க, பின்ன என்னம்மா".

"அங்க யார் வந்துருப்பாங்களென்று நான் என்ன ஞானக்கண்ணிலா பார்த்து சொல்ல முடியும்?.நான் இருப்பது இந்தியாவில்".

"நீ இருப்பது இலங்கையின் களுத்துறையில்".

"இப்படி இருக்க,அங்கு வந்த ஆளை பற்றி என்னிடம் கேட்கிறாயே?, உன்னை வேறு என்ன சொல்ல".

"ஹிஹிஹி.... ஆமாம் இல்லையானு சிரித்தவர், தாத்தா, பாட்டியோட, கண்ணாவும் வந்தான் பாப்பு".

"என் கண்ணா, நாளைக்கு ஷோரூம் ஓப்பன் பண்ண போறான் தெரியுமா?".

"என்ன மாம் சொல்லுறன அதிர்ந்து போய் கேட்டாள்! ".

"ஆமா பாப்பு".

"இரு உனக்கு வாட்சப்பில் இன்விடேஷனை அனுப்பி வைக்கிறேன் என்றவர், நீ தான் படித்து முடித்து, உனக்கான பேர் சம்பாதிக்கும் வரை, அவனுங்க ரெண்டு பேர்கிட்டையும் பேச மாட்டேனு சத்தியம் பண்ணிட்டியே".

"ஆமா மாம், அந்த ரெண்டு வளர்ந்த மாடுங்களை நான் மீண்டும் பார்க்கும் போது, இந்த ஆதிரா நல்ல பொசிஷன்ல இருக்கணும்".அந்த எண்ணத்தில் தானே மாம், உங்களை எல்லாம் விட்டு இங்கே நான் தனியா இருக்கேன்".

இன்னும் கொஞ்ச நாள் தான் மாம்.இந்த ஆதிரா யாருனு நிரூபித்து விட்டு, உன்னை தேடி வரேன்.அதுவரை, நீ அமைதியா இருந்து தான் ஆகணுமென்றாள்".

"மகளின் உறுதியான குரலை கேட்ட மேகலாவிற்கு, கண்கள் கலங்கியது". மகளை பார்த்து,மூன்று வருடங்களாகின்றது".எத்தனையோ முறை இங்கு அழைத்தும், தன் எண்ணம் நிறைவேறாமல் வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள்".

"சரி பாப்பு".

"உன் ஆசைப்படியே நடக்கட்டும் டா".

" உடம்பை பார்த்துக்கோ, அம்மா வைக்குறேன் என்று சொல்ல ஓகே மாம்".

" நீயும், அப்பாவும் உடம்பை பார்த்துக்கோங்க என்றபடியே ஆதிராவும் அழைப்பை துண்டித்தாள்".

சென்னை மகாபலிபுரம் :

தேவியும்,வசந்தியும் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு, தூரத்து அலையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.வந்து அரைமணி நேரம் ஆகியும், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".

"தேவி, தனா எப்போ வராங்கள்னு கேட்க, இன்னும் ரெண்டு நாள் ஆகும் வசந்தி".

"ம்ம் என்றவர், இந்த கடற்கரை அலையை பாரேன், எப்படியாவது தனக்கு முன்னே செல்லும் அலையை தொட்டுவிடனுமென்று ஓயாமல் ஓடி வருது".அதனால் தொட முடியாதென்று தெரிந்தும், அலை தன் வேலையை நிறுத்துறதில்லை".

"ஆனால், நம்ப மனுஷ பிறவி இருக்கே, சின்ன விஷயத்தில் தோல்வி ஏற்பட்டாலும் குடி மூழ்கியது போல ஆகிடுறோம்".

"போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை இல்லையா என்க, புரிஞ்சிட்டு வசந்தினு தனது தோழியின் கையை பிடித்துக்கொண்டு சொல்லியவர், டெண்டர் நம்ம கை விட்டு போனதும் அப்சட் ஆகிட்டேன்".

"இப்போ நிதர்சனம் புரிஞ்சிட்டுடி".

"தேங்க்யூடி வசந்தி.நீ கூட இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு தொடராது".

"இல்லை தேவி".

" உனக்கு நான் தான் நன்றி சொல்லணும்டி".

" நீ மட்டும் இல்லையென்றால், இந்த கடல்ல என்றோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்.இந்த உசுரும் வாழ்க்கையும் நீ போட்ட பிச்சைடி வசந்தி கண்கலங்கினார்".

"வாய்லே அடி விழும்டி".

"என்னடி பிச்சை கிச்சைனு சொல்லிட்டு இருக்க?நம்முடையது என்ன,இன்னைக்கு நேற்று பழக்கமா?.
நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க.

"இடையில் ஏதோ நடந்துட்டுடி".அதற்காக உன்னை அப்படியே விட்டுறுவேனாடி?.
இன்னொரு முறை இப்படிலாம் பேசுன, நான் உங்கிட்ட பேச மாட்டேனென்று தேவி சொல்ல,அதற்கு வசந்தியோ என்னை மன்னிச்சிடுடி".

"இந்த உலகத்தில் எனக்கு சொந்தம்னு இருப்பது, நீயும் தனாவும் தான் தேவி".
நீயும் பேசவில்லை என்றால் நிச்சயமா நான் உசுரோட இருக்கமாட்டேன்டி என்கவும்,அடியேய் என்னடி பேச்சு இது?.

"உங்கிட்ட மட்டும் பேசாமல் என்னால் இருக்க முடியுமா?".

சரி வா அப்படியே காலார கொஞ்சம் நடந்து வரலாமென்று தேவி எழுந்திருக்க, வசந்தியும் எழ, இருவரும் மண்ணில் கால் புதைய நடந்தனர்.

"அங்கங்கே சிலர் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த தேவிக்கு, தனது காதல் கணவரின் நினைவு வந்தது".

"முதல் முறை தனது கணவர் தன வீர சிம்ஹனை சந்தித்ததும் இதே மகாபலிபுர கடற்கரையில் தான் என்பதால், தேவிக்கு இந்த கடற்கரை மிகவும் பிடித்தமானது".

"அன்று சந்தித்ததை நினைத்து தேவிக்கு சிரிப்பு வர,என்ன தேவி மலரும் நினைவுகளாடினு வசந்தி கேட்கவும்,அந்நாளை நினைத்து சிரிப்பு வந்தது".

"ஹாஹாஹா என்று இருவரும் சத்தமிட்டு சிரித்து விட்டு, அதுலாம் அழியா பொக்கிஷங்கள் என்று பேசிக்கொண்டே ரிசார்டிற்கு வந்தனர்".

"பின்னர் வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளை இருவரும் ரூமில் இருந்தே ஆர்டர் பண்ணியவர்கள், ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஃப்ரஷ் ஆகவும், ஆர்டர் பண்ணிய உணவுகளை எடுத்துக்கொண்டு வேலையாளும் அங்கு வந்து கதவை தட்ட சரியாக இருந்தது".

"இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்கவும், தேவியின் செல்ஃபோனிற்கு தனாவிடமிருந்து கால் வந்தது".

"அவர் தாண்டி என்றபடியே அட்டென் பண்ணியவர், வசந்தியோடு மகாபலிபுரம் வந்திருப்பதை சொல்ல,அடிப்பாவி...புருஷனோடு செல்ல வேண்டிய இடத்துக்கு, தோழியை கூப்பிட்டு போய் தெய்வ குத்தமாக்கிட்டியே டார்லிங்னு தனா சொல்ல,அதற்கு தேவியோ பரவாயில்லைங்க என்றார்".

"நீயும் கூட வந்திருக்கலாம் டார்லிங்".

"நாளைக்கே நான் கிளம்பிடுவேன் பாரென்றார்".

அச்சோ!!

ஏன் தனா இப்படி?.

என்னமோ, இப்போ தான் புதுசா கல்யாணம் ஆன போல பண்ணுறீங்களே என்க, அந்தளவுக்கு என்னை மயக்கி வச்சிருக்கிறியே டார்லிங்.

உள்ளே இருக்கும் கண்ணாடி சுவற்றின் வழியாக, கடற்கரையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வசந்திக்கு, சற்று தள்ளி போய் பால்கனியில் நின்று ஃபோன் பேசும் தேவி கண்ணில் பட, பெரு மூச்சு வந்தது.

இந்த ஆண்டவன், எனக்கு மட்டும் ஏன், குடும்பம் என்ற ஒன்றை எழுதவில்லை என்பதை எண்ணி,மனதிற்குள் வருத்தப்பட்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"காலை வேலையை தனது வீட்டில் முடித்து விட்டு, மதிய உணவை எடுத்துக்கொண்டு, முதல் நாள் வயல் வேலை செய்த பெண்களும், வயலுக்கு சென்றனர்".

"மலர் வந்திருப்பதால், ஜனனி இன்று வேலைக்கு போகவில்லை".

"பாட்டிகள் இருவரோடு, கீதா மட்டும் வயலுக்கு வந்து கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த வெற்றிக்கு, இவள் எங்கே காணுமென்று யோசனையானது?".

"இடி விழுந்தாலும் தன்னவள் வேலைக்கு வராமல் இருக்கமாட்டாளே? என்று முணுமுணுத்தவன், கீதாவிடமும் கேட்க முடியாமல் தவித்தான்".

"உடம்பு சரியில்லையா?..".

"இல்லை, அவங்க அப்பாவை ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிருப்பாளாயென்று,தனக்குள்ளே கேள்விகள் கேட்டுக்கொண்டான்".

"வரப்பின் அருகே மூவரும் வந்து கொண்டிருப்பதை பார்த்தவன், தொண்டையை செருமி,கீதாவை பார்க்க,அவளோ இல்லையென்று தலையசைத்தாள்".

"எங்கே போயிருப்பாளென்று வெற்றிக்கு மண்டை காய்ந்து".

"ஜனனி வாயேன்டா, போய் வள்ளியம்மைய பார்த்து விட்டு வரலாமென்று மலர் கூப்பிட, இதோ போகலாம்மா என்றவள், அப்பா இந்தாங்க மாத்திரை என்று கொடுக்க,நாளைக்கு போட்டுக்குறேன்த்தா".

"இதை போட்டால், வாயெல்லாம் கசக்குதுமா என்கும் மாரியப்பனை முறைத்து பார்த்தாள்".

"சரி குடுத்தா என்று கையை நீட்ட, தந்தையின் கையில், 5 வகையான மாத்திரைகளை வைத்தாள்".

"பக்கத்தில் இருக்கும் சொம்பில் இருந்த நீரை வாய்க்குள் ஊற்றி, மாத்திரைகளை போட்டு விழுங்கியவர், போதுமா?.

"தந்தையின் சிறு பிள்ளை தனமான செயலை பார்த்தவளுக்கு, சிரிப்பு வந்தது".பின்னர் மாரியப்பனிடம் சொல்லிக்கொண்டு,தனது பெரியம்மாவோடு,பெரிய வீட்டை நோக்கிச்சென்றாள்".

"சாமி படங்களுக்கு மாலை கட்டி போடுவதற்கா, தோட்டத்தில் இருக்கும் பூஞ்செடிகளில் இருந்து பூக்களை பறித்துக்கொண்டிருந்த வள்ளியம்மை, கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசலை பார்க்க, அங்கே ஜனனியும், மலரும் வருவதை பார்த்து, மலரு என்று குரல் கொடுத்தார்".

"தனது தோழியின் குரல் வந்த திசையை நோக்கி மலரும் பார்த்து விட்டு, வள்ளி என்றவாறே பூஞ்செடிகளை நோக்கிச்சென்றார்".

"வாடி, எப்போ வந்தடி என்றபடியே தோழியின் கையை வந்து பிடித்துக்கொண்டு வள்ளியம்மை கேட்க, நேற்று சாய்ந்தரமா வந்தேன்டி".

"நான் நல்லா இருக்கேன் வள்ளி".நீ எப்படி டி இருக்கிற?".எனக்கென்னடி, எப்போ மேல இருக்கவன் கூப்பிடுகிறானோ, போக வேண்டியது தான்".

" தோழியின் பேச்சைக் கேட்ட மலர், ஏண்டி இப்படி பேசுற என்றவரா, ஜனனி நீ போய் சாமிக்கு பூவை பறிச்சிட்டு வாடா".

"நாங்க பேசிட்டு இருக்கோமென்று சொல்லியபடியே, வள்ளியம்மையிடமிருந்து பூக்கூடையை வாங்கி,மகளிடம் கொடுத்து விட்டு,இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர்".

" புள்ளைங்க நல்லா இருக்காங்களா?, வேணியை போய் பார்த்தியா?, எல்லாரும் நல்லா இருக்காங்கடி".

" எங்கேடி போக முடியுது?, சின்னவன் இந்த வருஷம் 12 வது, ஸ்பெஷல் கிளாஸ்னு,வீட்டுக்கு வர இரவு ஏழு, எட்டு ஆகுது".இதில் எங்க போய் நான் வேணிய பாக்க முடியும்?".

"மூன்று மாதத்திற்கு முன்னர்,அவங்க சின்ன மாமனார் பொண்ணுக்கு வளையல்காப்புக்கு போயிருந்தேன்". அப்பதான் பார்த்ததுடி என்றவர், நீ இப்படியே காலத்தை ஓட்டிட்டியேடினு தனது ஆருயிர் தோழிக்காக மலர் வருத்தப்பட்டார்".

"இனி என் வாழ்க்கையில் என்ன மலரு இருக்கு?, காலம் போய்ட்டுடி என்றவாறு கிச்சனிற்குள் சென்று, தோழிக்கு டீயை தயாரித்தார்".

"அப்பொழுது வாம்மா மலரென்ற சத்தம் கேட்டு திரும்பியவரோ அங்கிருந்த சத்தியமூர்த்தியை பார்த்தவர் வரேங்கண்ணா".நல்லா இருக்கீங்களாண்ணா?".

" நான் நல்லா இருக்கேன்மா".நீ, மாப்பிள்ளை, பிள்ளைகளெல்லாரும் நல்லா இருக்கீங்களா?".

"எல்லாரும் நல்லா இருக்கோம்ணா என்று சொல்லும் போது,வள்ளியும் டீ டிரேயோடு அங்கு வந்தார்".

"இந்தா மலரென்க,அண்ணனுக்கு வள்ளி?".

"அண்ணாக்கும் தான்டி என்றவாறே சத்தியமுர்த்தியிடம் ஒரு டம்ளரை எடுத்து கொடுத்து விட்டு, மலரிடமும் கொடுத்தார்".

"பின்னர் பொதுவா சிறிது நேரம் மலரிடம் பேசிவிட்டு, வள்ளி நான் கரும்பு தோப்புக்கு போய்ட்டு வறேன், மதியம் சாப்பாட்டை அங்க அனுப்பிடுமானு சொல்லிக்கொண்டே சத்தியமூர்த்தி வெளியே சென்று விட்டார்".

"ஏன் வள்ளி, இன்னும் நீ மாமாவை தான் நினைச்சிட்டு இருக்கியாடினு, தனது அருகில் உட்கார்ந்திருந்த தோழியிடம் மலர் கேட்க,ம்கும்..."தெரியலை மலர்".

"ஆனால், அவரை தவிர வேற யாரையும் புருஷனா ஏத்துக்க மனசு வரலையேடி நான் என்ன செய்ய?".இதுல ஒரு கொடுமை என்ன தெரியுமா மலரு, என் மனசுல அவர் இருக்கார்னு இன்னும் அவருக்கு தெரியாது என்பது தான் உண்மைனு சொல்லி கண் கலங்கினார்".

"நான் அப்பவே உன் கிட்ட சொன்னனேடி, நீ என் பேச்சை கேட்கலையே வள்ளி?, ஒரு முறை நான் சொல்லிருந்ததை கேட்டிருந்தால்,நீயும் குடும்பமா இருந்திருப்பியேடி".

என்ன மலரு செய்ய?.

"உசுரு இருக்கும் வரைக்கும், அவர் நினைப்பிலே வாழ்ந்து சாவனுமென்று, என் தலையில் எழுதியிருக்கு போலடி".

"விடு மலர்".

" அவர் முகத்தை பார்த்துக்கிட்டே காலத்தை ஓட்டிருவேன்".

"இப்ப ரெண்டு வாரமா, அவரை பாக்க முடியாமல் மனசு படும் பாடு இருக்கே, சொல்ல வார்த்தையில்லை."அவர் நல்லா இருக்காறாடி?".

"நல்லா இருக்காங்க டி, இவ்வளவு பாசத்தை மனசுக்குள் வைத்துக்கொண்டு, ஏன் டி இப்படி உனக்குள்ளே ஒடுங்கிப்போற?.

"ஒரு முறை அந்த மனுஷன் கிட்ட, வாயை திறந்து சொன்னால்,குடியாடி மூழ்கி விடும்?".

"நான் இனி சும்மா இருக்க போறது இல்லை வள்ளி".கண்டிப்பா அவர்கிட்ட, உன்னை பற்றி சொல்ல தான் போறேன்".

"என்ன நடந்தாலும் பரவாயில்லை, நீ என் மேல் கோவப்பட்டாலும் பரவாயில்லைடினு கராறாக மலர் சொல்ல, நான் உயிரோட இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், நீ இதை பற்றி முடிவெடுடினு சொல்லி விட்டு, வள்ளி அமைதியாகிவிட்டார்".

திருச்சூர்:

"சமைத்த உணவுகளையெல்லாம் டைனிங் டேபிளின் மேல் எடுத்து வந்து வைத்து விட்டு, நால்வரையும் பார்த்த ஆர்கலி, ம்ம் சாப்பிட வாங்களென்று கூப்பிட்டாள்".

"வசுவின் மனதிற்குள் இருக்கும் மகிழ்ச்சி, அவர் முகத்தில் நன்கு தெரிந்தது".மற்ற மூவரும் அதை பார்த்து மனதிற்குள்ளே மகிழ்ந்தனர்".

"அவர்களுக்கு தெரிந்து இத்தனை வருடத்தில், வசு இவ்வளவு இயல்பாய் இருந்ததே இல்லை".எப்போதும் இறுக்கமான முகத்தோடு தான் இருப்பார்".

"சுந்தரபாண்டியன் தாத்தாவிற்கு, மனதிற்குள் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது".

என்ன இப்படியே இருக்கீங்க, வாங்க வாங்கனு மீண்டும் ஆர்கலி கூப்பிட, நால்வரும் கையை கழுவி விட்டு வந்து, சாப்பிட உட்கார்ந்தனர்.

"நானே பரிமாருகிறேன் என்றவள், நால்வருக்கும் சமைத்தவைகளை தட்டில் பரிமாறி விட்டு, ம்ம் சாப்பிடுங்கள் என்க, முதல் வாய் எடுத்து வைத்த சுந்தரபாண்டியன் அதிர்ந்து போனார்".

"அவரைப்போலவே தான், மற்ற மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

"நால்வரையும் பார்த்தவள், என்னாச்சி?".

"நல்லா இல்லையா? என்கும் போதே, அவள் குரலின் சுருதி குறைந்தது".

" மைக்கேலை பார்த்தவள்,மாமா, நீங்களாவது சொல்லுங்க?".

"அவ்வளவு கொடுறமாவா என் சமையல் இருக்கென்றாள்?".

"அவளின் முகத்தை பார்த்த மைக்கேல், அம்மாடி அம்மு, அப்படியே பெரியம்மா கையில் சாப்பிடுவது போலவே இருக்குடா".

என்னாஆஆஆ!

"என்ன மாமா சொல்லுறீங்க?".

"பாட்டி கை பக்குவம் போல இருக்கானு ,ஆர்கலியும் அதிர்ந்து போனாள்".

"ஆமாடா, கடந்த இருபது வருஷமா இந்த ஆத்தா கையால் சாப்டுறேனே, எனக்கு தெரியாதாடா அம்மு என்றவர், என்னப்பா எதுவும் சொல்லமாட்டுறீங்கனு சுந்தரபாண்டியனிடம் கேட்டார்?".

"அம்மாடி அம்மு, இந்த கிழவி கையால் சாப்புடுற போல தாண்டா இருக்கென்றார்".

"ஆர்கலிக்கு இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை".

"இத்தனை வருடத்தில், ஒரு முறை கூட இவர்களை நான் பார்த்ததில்லை, பின் எப்படி இது சாத்தியம்?".

"கல்லூரியில் படிக்கும் போதும் சரி, ஸ்கூல், வேலை பார்த்த இடத்திலும் இரத்த உறவுகளில் மட்டுமே இதைப்போல விஷயம் சாத்தியமென்பதை கேள்வி பட்டிருக்கின்றேன்".

"இவர்களுக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?,பிறகு எப்படினு தனக்குள்ளே கேள்விகளை கேட்டுக்கொண்டாள்".

"அவளின் குழப்பமான முகத்தை பார்த்த வசு, அம்மு அம்மு பாயாசம் இன்னும் கொஞ்சம் குடுமா என்க,வசுவின் கம்பீர குரலில் கலைந்தவள், இதோ மேடமென்று இன்னும் கொஞ்சம் பாயாசத்தை ஊற்றி கொடுத்தாள்".

"வயிறும், மனதும் நிறைய சாப்பிட்டு முடித்த நால்வரும், ஆர்கலியை வெகுவாய் பாராட்டினர்".

"பின்னர், அம்மு இந்தா என்று ஒரு கவரை வசு நீட்ட,என்ன மேடமென்றாள்?".

"வசுந்தராவோ, பிரித்து பாரு என்றார்".

"ம்ம் என்றவாறு கவரை திறந்தவள், அதற்குள் இருந்த லெட்டரை எடுத்து படிக்க,ஆனந்த அதிர்ச்சியானாள்".

"மற்ற மூவருக்கும்,என்ன விஷயமென்று புரியவில்லை".

"படித்து முடித்தவள், தேங்க்யூ மேடமென்றாள்".

அப்பொழுது மைக்கேலோ,அம்மாடி அம்மு, என்ன விஷயமென்று சொன்னால், நாங்களும் சந்தோஷப்படுவோமே என்றார்".

"இதோ சொல்லி விட்டால் போகுது மாமா.தாரா எஸ்டேட்டில், எனக்கு வேலை கிடைத்திருக்கின்றது என்றாள்".

"ஆர்கலி சொன்னதைக்கேட்ட மூவரும், என்ன என்று அதிர்ந்து போய் வசுவை பார்த்தனர்".

" அவர்களின் பார்வையை கண்ட வசுவோ,ஆர்கலி கண்டிஷனோடு தான் இங்கு வந்தாள்".அதாவது, இங்க அவள் சும்மா இருக்கமாட்டாளாம், எதாவது வேலை வேண்டும்னு சொல்லிருந்தாள்மா".

"அவளோட பிறந்த நாள் இன்றைக்கு.சரி இதையே கிப்டா குடுத்திடலாம்னு இருந்தேனென்றார்".

"அப்போ என்று சைலஜா பாட்டி தயங்கியவர், அம்மு நீ வேலைக்கு போய் தான் ஆகணுமா?".நம்ம கிட்ட இவ்வளவு வசதி வாய்ப்பு இருக்கேயென்றார்".

"அம்மாச்சி, என் சொந்தகாலில் நிற்கவே நான் விரும்புறேன்".உங்கள் அன்பு போதும். தனியாவே பழகினவளுக்கு நீங்களெல்லாரும் கிடைத்திருப்பதே கோடி புண்ணியம்".

"அப்படியே கெஸ்ட்ஹவுஸ் கீ கொடுத்தீங்க என்றால்,நான் அங்கையே தங்கிப்பேனென்று ஆர்கலி சொல்ல, என்னாஆஆஆ என்று,மீண்டும் முதிய தம்பதியினர் அதிர்ந்தனர்" .

"அம்மாடி அம்மு, புள்ளதாச்சி பொண்ணு, இந்த நேரத்தில் யாராவது கூட இருக்கவேண்டும்".என்னை அம்மாச்சியாக நினைப்பது உண்மை என்றால்,நீ இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும்".

இல்லை, நான் வெளியாள், உங்களை உறவாக நினைக்க முடியாதுனு நீ நினைத்தால், தாராளமாக போய் அங்க தங்கிக்கோனு சைலஜா பாட்டி சொல்லி விட்டார்".

" அது என்னமோ தெரியவில்லை, சைலஜா பாட்டியின் பேச்சை மட்டும் ஆர்கலியால் தட்டி கழிக்க முடியவில்லை".

"அய்யோ அம்மாச்சி, இன்னொரு முறை இப்படி பேசாதீங்க".

"இப்போ என்ன, நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் அவ்வளவு தானே சரி, இருக்கேன் போதுமா?".

"ஆனால் நான் வேலைக்கு போவேன், அதில் மாத செலவிற்காக கொஞ்சம் பணத்தை கொடுத்து விடுவேன்.இதற்கு நீங்க சம்மதிக்க வேண்டுமென்றாள்.

"ஆர்கலி சொன்னதை கேட்டவரோ, முதலில் இங்கே தங்கட்டும், மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், ஓகே டீல் அம்மு என்றார்".

ஆர்கலி எங்கே...?
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top