• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
537
பொள்ளாச்சி:

தனது அண்ணன் மகள்,ஜமீனின் அடுத்த வாரிசுகளோடு தம்பதியராய் வாசலில் நிற்க எல்லையில்லாத மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து போன வள்ளியம்மைக்கு தலை கால் புரியவில்லை.

இரட்டை குழந்தைகளின் வருகையால் வீடே கலகலப்பாக மாறியது..
சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவருக்கும் பேரப்பிள்ளையே உலகமானார்கள்

நாட்களும் வேகமாக ஓடியது..

பதினாறாம் நாள் பூஜை முடிந்து அன்றே குழந்தைகளுக்கு பெயர்சூட்டு விழாவை கோலகலமாக கொண்டாடினர்.

வெகு விமர்சையாக நடந்த விழாவை விஷாலாதேவி ஒரு ஓரமாய் நின்று கொண்டு கவனித்தார்.

வசுந்தரா தான் தனது அண்ணனின் மனைவி என்ற உரிமையில் அவரை வரவழைத்தது.

குழந்தைகளுக்கு இஷான் வீர சிம்ஹன்-இஷானி வீர சிம்ஹனென்று பெயர் சூட்டினர்.

இரண்டு வழி தாத்தா-பாட்டிகளும் தங்கள் பேரப்பிள்ளைங்களுக்கு விலைமதிப்பில்லா பரிசுகளை வாரி வழங்கினர்.

குழந்தைகள் பெயர் சூட்டு விழா முடிந்ததும் ருத்ரன் தனது தாத்தா பாட்டியோடு இரத்தினபுரிக்கு வந்து விட்டான்.

வாரம் வாரம் தனது பிள்ளைகளை பார்க்க செல்ல மட்டும் அவன் மறக்கவில்லை.ஏன் கிரி உன் பேரன் இப்படி பிளைட்காரனுக்கு பணத்தை அள்ளி குடுக்குறதுக்கு,அங்கு மாமியார் வீட்டிலே இருக்க வேண்டியது தானே என்க,ருத்ரனோ முறைத்துக்கொண்டு ஷோரூமிற்கு சென்றான்.

நல்ல நாளில் ஆதுக்கும் ராகினிக்கும் திருமணத்தை முடித்து வைத்தனர்.அவர்களும் தங்கள் வாழ்க்கை தொடங்கினர்.

ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இந்த முறையாவது என்னை கூப்பிட்டு போவியாயென மனைவி கேட்பாளென்று ருத்ரனும் ஆர்வமாய் பார்ப்பான்.அவளோ கிணற்றில் விழுந்த கல்லு போல அதை கண்டுக்காமல் இருப்பாள்.

பொள்ளாச்சிக்கு வந்து இதோ மூன்று மாதங்கள் சென்று விட,மதிய சாப்பாடை சாப்பிடும் போது அப்பா என்று ஆர்கலி கூப்பிட்டாள்.

சொல்லு கண்ணுயென்க..

ஃபிளைட்ல டிக்கெட் போடுங்கப்பா என்க,மறுநாளே இரத்தினபுரிக்கு மனைவி மகள் பேரப்பிள்ளைங்களோடு வந்து சேர்ந்தார்.

ருத்ரன் பிசினஸ் விஷயமாக அதிகாலையிலே சென்றிட ஆர்கலியும் குழந்தைகளும் வந்தது தெரியாமல் போய்விட்டது.

போன விஷயத்தை முடித்து விட்டு வீடு திரும்பவே ருத்ரனுக்கு இரவு பத்து மணிக்கு மேலானது.

வீட்டிலிருக்கும் மற்றவர்கள் சாப்பிட்டு படுத்துவிட,கிரிஜா பாட்டி மட்டும் பேரனுக்காய் காத்திருந்தார்.

ரொம்ப டயர்டாக உள்ளே வந்தவன் ஹாலில் இருந்த பாட்டியை பார்த்து என்ன பாட்டி இன்னும் தூங்காமல் என்ன பண்ணுறீங்களென்று கோவப்பட்டான்.

தூக்கம் வரலை கண்ணா.அதான் உனக்காக வெயிட் பண்ணினேன் என்றார்.

நீங்க இருக்கீங்களே என்றவாறு சோபாவில் ஹப்பாடா என்று சாய்ந்து உட்கார்ந்தவனை பார்த்தவர்,டின்னர் எடுத்து வைக்கட்டுமா என்க,சாப்பிட்டு தான் கிளம்பினேன்.

நீ சாப்டியா?உன் டார்லிங் சாப்டாச்சா என கேட்க,ம்ம் என்றவர் போன விஷயம் என்ன ஆச்சு கண்ணா என்க,சக்சஸ் தான் பாட்டி.

என்ன மொத்தமா ஆர்டர் கொடுத்துருக்கிறார்கள்.மினிஸ்டர் வீட்டோடது என்பதால் நமக்கு நல்ல பேர் கிடைக்கும்.

ரஞ்சன் வேற அங்க இருக்கிறதால நானும் இவனும் தான் டிசைன் பண்ணுறோமா,அது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கு என்றான்.

ஏன் கண்ணா இதற்கா இந்த சோகம்.எனக்கு தெரிந்த டிசைனர் இருக்காங்கள்.அவங்களை வேண்டுமானால் அனுப்பட்டுமா என்க...

பாட்டி நிஜமாவா என்று கேட்க,ஆமா கண்ணா என்றவரிடம் யாரு அந்த நாலாவது தெருவில் இருக்கும் மேல் வீட்டு ஆன்டியா?

இல்லை உன் வாக்கிங் தோழி சீதா பாட்டியோட பேத்தி ஜானுவா என்று ருத்ரன் கேட்க,கண்ணா என்று முறைத்தவர் ஏன் என்னை பார்த்தால் டிசைனரா தெரியவில்லையா என்றார்.

பாட்டி சொன்னதைக் கேட்டவன் அட ஆமா.ஒரு பெரிய டிசைனரையே பக்கத்துல வச்சுக்கிட்டு நான் ஏன் கவலைப்படணும் என்றவாறு தனது பாட்டியை அணைத்துக் கொண்டான்.

ரஞ்சன் இல்லாதது ரொம்ப சிரமமா தான் இருக்கென்று தாத்தாவும் சொன்னாங்க கண்ணா.நானே நாளையில் இருந்து ஷோரூமிற்கு வரலாம்னு சொல்ல தான் உனக்காக காத்திருந்தேன் என்க,உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே பாட்டி என்கும் பேரனை பார்த்தவர் இல்லை வீரா.

போய் ரெஸ்ட் எடுப்பா.

எல்லாம் அந்த கண்ணன் பார்த்துப்பான் என்றவாறு வாசல் கதவை பூட்டியவர் இரவு விளக்கை ஆன் பண்ணி விட்டு மற்ற விளக்கங்களை ஆஃப் பண்ணியவர் அவர் அறையை நோக்கி செல்ல ருத்ரனும் தனது சூட்கேஸோடு முதல் மாடியில் இருக்கும் அவன் அறையை நோக்கி சென்றவன் உள்ளே போய் ரெப்ரஷாகி வந்து பெட்டில் படுக்க மனைவி,பிள்ளைகளின் நினைவு வந்தது.

கடந்த இரண்டு வாரமாக கல்யாண ஆர்டர்களுக்கு நகைகள் ரெடி பண்ணுவதால் ருத்ரனால் பொள்ளாச்சிக்கு போக முடியவில்லை.

இந்த வாரமாவது போக வேண்டுமென்று நினைத்து கண்ணை மூடியவன்,அசதியின் காரணமாய் உறங்கிவிட்டான்.

செம்மஞ்சளை குழைத்து பூசியது போல ஆதவனும் கிழக்கே உதிக்க தயாராகினான்.

வழக்கமாய் எழும் நேரம் தாண்டி தூங்கியவனின் முகத்தில் எதோ பஞ்சு பொதிகள் தீண்ட இன்னைக்கும் கனவில் வந்தாச்சா.

உங்களுக்கு இதே வேலை சாம்(இஷான்)என்று தனது மகனை சொன்னவன் எங்கே உங்க அம்மாகாரி...

எப்போ பாரு தலை முடியை காய வைக்கிறேன் என்ற பெயரில் என் முகத்திலேயே ஈரத்தை உதறி தள்ளுவாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அதே போல் நடந்தது.

அடியேய் ராங்கி..இன்னைக்கும் வந்துட்டியாடி.ஒரு நாளைக்கு உன்னை என்ன பண்ண போறேன் பாரென்று ருத்ரன் புலம்பிக் கொண்டிருந்தான்.

சிறிது நொடிகள் சென்று இன்னொரு பிஞ்சு கால்கள் அவன் வலது பக்க இடுப்பில் உதைக்க,இஷிமா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்க என்றவாறு திரும்பி படுத்தவன் கன்னத்தில் வலிக்க கடித்து வைத்தாள்.

அந்த வலியில் ஆஆஆஆ என்றவாறு எழுந்தவன் அங்கிருந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.

என்ன மேன் இப்படி கனவிலே வாழ்க்கையை ஓட்டிடலானு முடிவு பண்ணிட்டியாயென்று ஆர்கலி கேட்க,தனது இரண்டு கண்களையும் நல்லா தேய்த்து விட்டு மீண்டும் ருத்ரன் பார்க்க சீப்பு ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது.

பார்பியென்று வேகமாய் எழுந்து மனைவியிடம் போனவன் வந்துட்டியாடி என்றவாறு அவளை கைகளில் தூக்கி சுற்ற ஏய் என்ன பண்ணுற லாம்ம் போஸ்ட் என கத்தியவள் தலை சுத்துவது போல இருக்க கண்களை மூடி ருத்ரனின் தலையில் சாய்ந்தாள்.

பின்னர் கீழே இறக்கியவன் எங்கேடி லட்டூஸ்ங்களென்க,பெட்டை காட்டினாள்.

கையிலியுந்தவளை அம்போயென்று விட்டு விட்டு குழந்தைகளை நோக்கி போனவன் செல்ல குட்டிங்களா அப்பாவை தேடி வந்துட்டீங்களா?

உங்களுக்காவது அப்பா மீது பாசம் இருக்கேயென்று இருவரையும் ஒரு சேர அணைத்து முத்தமிட்டவன்,ஏண்டி வந்ததை சொல்லவில்லையென்று மனைவியை பார்த்து கேட்க அவளோ கணவனை முறைத்தவாறு நிற்பது தெரிந்தது.

ஏய் என்னடி லுக்?

வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கென்றவன் இருங்க அப்பா ப்ரஷாகிட்டு வரேனென்று டவளோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன் குளித்து முடித்து வெளியே வர,அங்கே ஆர்கலி கபொர்டில் டிரஸ்களை அடுக்குவது தெரிந்தது.

பொறுமையாக போய் பின்னிருந்து மனைவியை அணைத்தவன் ரெண்டு வாரமா வொர்க் பிரஷர் அதிகம் பார்பி டால்.

அதனால் தான் பார்க்க வரமுடியலைடி என்றான்.

நேற்று வந்த போதே பாட்டியும் இரண்டு வாரமாக பேரன் வீட்டிற்கு வருவது இரவு 12 மணிக்கு மேலென்று சொல்லி வருத்தப்பட்டார்.

குளித்து முடித்துட்டு வந்த ஈர உடம்பு என்பதால் ஆர்கலியின் முதுகில் பட்டு சிலிர்த்தது.

சொல்லுடி?

கோவமாயென்று மீண்டும் கேட்க கணவனின் கையணைப்பில் இருந்தவள் வாய் திறந்து எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள்.

ஓஓஓ என்றவன் அவள் கழுத்தோரம் லேசாக கடித்து வைக்க வேம்பயரென்றவாறு திரும்பியவளின் இதழோடு தன் முரட்டு இதழை உறவாடவிட்டான்.

நிமிடங்களும் கடந்து செல்ல ருத்ரனின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் தொடர்ந்து கேட்க இப்போ தான் ஒரு முத்தம் ஆரம்பிச்சேன் அதுக்குள்ள எந்த கிராஸ் டாக் என்று தெரியலையே என்றவன்,ஒரு கையால் தன்னவளை நெஞ்சோடு அணைத்தவாறு போய் போனை எடுத்து பார்த்தவன் காண்டு ஆனான்.

மீண்டும் கால் வர அட்டென் பண்ணியவன் சொல்லு கரடி என்க,ஏன் தடிமாடு என் மருமக குட்டிங்க வந்ததை சொல்ல முடியாமல் என்ன வெட்டி மாய்க்குறடாயென்று ஆது திட்ட கீழ வந்தேன் குருத்தெலும்பு காணா போய்டுமென்றே சொல்லி கட் பண்ணியவன் உன் அண்ணன் நாரதர் பயலை வச்சிக்கிட்டு ஒரு முத்தம் கூட குடுக்க முடியலையேடி என்றவன் மனைவியோடு பெட்டில் சரிய அய்யோஓஓ என்று பதறினாள்.

பதறியவளை கொஞ்சி கெஞ்சி தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் கணவனாய் அவளை ஆள தொடங்க ஆர்கலியும் விரும்பியே தன்னவனிடம் தொலைத்தாள்.

ராகினிக்கு தனது அண்ணன் பிள்ளைகளை கீழ விட மனமே வரவில்லை.

பின்னர் பேசிக்கொண்டே மதிய உணவை செய்யும் போது ராகினிக்கு வாமிட் வந்தது.

சிறிது நிமிடங்கள் செல்ல,முகத்தை கழுவியவளிடம் என்னடா ராகினி ஆச்சு என்றவரிடம் தெரியலங்கத்தை.

திடீர்னு இப்படி இருக்கென்றவளின் முகத்தை பார்த்தவர் அம்மாடி நாள் எதாவது தள்ளி போயிருக்கானு வசு கேட்க,யோசித்து பார்த்தவள் ஆமாங்கத்தை என்றாள்.

உடனே பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வர,அங்கே ஆர்கலி குழந்தைகளோடு ஹாலில் உட்கார்ந்திருந்தாள்.

காலடி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அம்மா ராகினிக்கு என்னாச்சி?புட் பாய்சன் எதாவது ஆகிடுச்சா என்க,எல்லாம் நல்ல விஷயம் தான் அம்மு.

இரு இரு ஆது வரட்டும் பிறகு சொல்லுறேனென்க,அம்மா பிளீஸ் என்ன விஷயமென்று சொல்லுங்களென்றாள்.

அந்நேரம் ஆதுவும் வேகமாக வீட்டிற்கு வந்தவன் அம்மா என்னாச்சி?ஏன் உடனே வர சொன்னிங்க? யாருக்கும் எந்த பிச்சினையும் இல்லையே என்க,பிரச்சினை தான் கண்ணா.

நீயே ராகினிகிட்ட தெரிஞ்சிக்கோயென்றவாறு கிச்சனிற்குள் சென்று விட ஏய் என்னடி பிரச்சினையென்றான்.

ராகினி எதுவும் சொல்லாமல் கீழே இருக்கும் ரூமிற்கு செல்ல பின்னாடியே போய் கதவை சாத்தியவன் அடியேய் அங்க வேலை எவ்வளவு இருக்கு.

அதை போட்டு பதறியடித்து வந்தால் நீ முகத்தை திருப்பிட்டு போறியோ என்க,ஆதுவின் அருகில் வந்தவள் அவனின் வலது கையை எடுத்து தனது வயிற்றில் வைத்தவள் நீங்க அப்பா ஆகிட்டீங்களென்று வெட்கபட்டு சொல்ல,சந்தோஷத்தில் ஆதுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
537
களுத்துறை:

ஒருவாரம் மகள் வீட்டில் தங்கி விட்டு வசுந்தரா சத்தியமூர்த்தி தம்பதியினர் மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தவர்கள் அவர்களின் வழக்கமான வேலையில் மூழ்கினர். நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது..

பகல் முழுவதும் பிசினஸில் புலியாக இருக்கும் ருத்ரன்,வீட்டிற்கு வந்துவிட்டால் குழந்தைகளோடு இருக்கும் போது தந்தையாகவும் அவர்களின் அறைக்குள் வந்துவிட்டால் காதல் மன்னனே அவனிடம் தோற்றுவிடுவான்.

ஐந்து வருடங்களாக தனக்குள் பொத்தி வைத்திருந்த காதலை வெளிப்படுத்தவே ருத்ரனுக்கு நேரம் சரியாக இருந்தது.

ஆர்கலிக்கு தான் குழந்தைகளை விட தன் கணவனை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது.

பாட்டியும் ஷோருமிற்கு வருவதால் ஆதுக்கும்-ருத்ரனுக்கும் வேலை பளு குறைந்தது.மேலும் மாதங்கள் வேகமாக ஓட குழந்தைகளுக்கு முதல் வருட பிறந்தநாளும் வந்தது.

காலையிலிருந்தே ஆர்கலிக்கு மனசு ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது.மனைவியின் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை படித்து தனக்குள் சிரித்தவன் மற்ற வேலைகளை பார்க்கலானான்.

நேரமும் இதோ அதோ என்று ஓடியது...

சிம்ஹன் பேலஸ் வண்ண விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்க விழாவிற்கு அழைத்தவர்களும் வரத்தொடங்கினர்.

முதிய தம்பதியினர் அவர்களை வாசலில் நின்று வரவேற்தனர்.வந்திருந்த கெஸ்ட்ங்களோ அங்கிருக்கும் அலங்காரத்தை பார்த்து அதிசயிக்காமல் இல்லை.

ராகினிக்கு இது 5 வது மாதம் என்பதால் வாந்தி எடுத்து எடுத்தே சோர்ந்து போனவள் உள்ளே இருக்கும் அறையில் படுத்துவிட்டாள்.ஆர்கலியோ நொடிக்கொருமுறை தன் பார்வையை வாசல் பக்கம் வீசாமலில்லை.

அப்பொழுது அங்கிருந்த விளக்குகள் எல்லாம் ஆப் பண்ண சின்ன குழந்தைகளோ பலவித ஓசைகளில் கத்த வாசல் பக்கமிருந்து விளக்குகள் ஒவ்வொன்றும் ஆன் ஆக எல்லாரின் பார்வையும் அங்கே இருந்தது.

முதலில் சுந்தரபாண்டியன் தாத்தாவும்-சைலஜா பாட்டி மைக்கேலும் உள்ளே வர,அடுத்து சத்தியமூர்த்தி- வசுந்தரா, வள்ளியும்,அடுத்து கண்ணன்-தேவகி,அவர்களுக்கு அடுத்தாக விசாலாட்சி பாட்டி,அவர்கள் கையை பிடித்தவாரு தீபன்,தீபாவும்,அடுத்ததாக வந்த சங்கரையும் கருப்பாயியையும் பார்த்த ஆர்கலி அங்கிருந்து வேகமாய் ஓடியவள் அண்ணன்-அண்ணினு இருவரையும் அணைத்துக்கொண்டு அழுதாள்.

ருத்ரனின் கையிலிருந்த குழந்தைகளும் அவனிடமிருந்து இறங்கி ஓடியவர்கள் சங்கரிடம் வந்து முறைத்து நின்றனர்.

அம்மு குட்டிக்கும் அப்பு குட்டிக்கும் எதுக்கு கோவம் என்க,மாமா என்ன சொன்னீங்க?,அம்மா அழுறாளென்று மழலை மொழியில் கேட்க,யாத்தே வக்கீலுங்க கேள்வி கேட்குறாங்களே என்று சிரித்தவர்,தங்கையின் கண்ணை துடைத்து விட்டு தனது மருமக பிள்ளைங்களின் உயரத்திற்கு குனிந்தார்..

பின்னர் தனது காதை பிடித்தபடி தோப்புக்கரணம் போட்டவர் செல்லகுட்டிங்கள் மாமவை மன்னிச்சிடுங்கயென்க,வாண்டுகள் இரண்டும் ஒன்று இரண்டு நாலு ஏழு என்று தப்பு தப்பாக எண்ண மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அடேய் விட்டா என் அண்ணன் காலை உன் வாரிசுங்கள் தேயவச்சிட்டு தான் விடுவாங்க போல..

போய் தூக்குடாயென்று ஆது சொல்ல ருத்ரனும் சிரித்தவாறு அங்கு வந்தவன் எல்லாரையும் வாங்களென்று வரவேற்தவன் எப்படி என் சர்ப்ரைஸ் என்று மனைவியிடம் கேட்க,பரவாயில்லை.

அங்க இருக்கும் களிமண்ணும் கொஞ்சம் வேலை செய்யுதேயென்று ஆர்கலி சொல்ல ஏண்டி சொல்லமாட்டாயென்று முறைத்தான்.

டேய் கேக்கை வெட்டுங்கடாயென்று ஆது கத்த ஆளுக்கொரு குழந்தையை தூக்கியபடி முன்னே இருந்த கேக்கை வெட்டினர்.

வந்தவர்களெல்லாரும் குழந்தைகளின் அழகை பாராட்டி விட்டு,கையிலிருந்த கிப்டை கொடுத்து செல்ல அவர்களையெல்லாம் சங்கரும் ரஞ்சனும் சாப்பிட அழைத்து சென்று கவனித்து அனுப்பினர்.

பங்ஷனும் நல்லமுறையில் நடந்து முடிந்தது.

தாராயென்று சத்தியமூர்த்தி குரல் கொடுக்க,இதோ சத்தி என்றவாறு உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் கையில் தாம்பாளத்தோடு அதில் பழங்களும் அதன் மேல் பத்திரிக்கை வைத்து எடுத்து வந்தவரை கண்ட சத்தியமூர்த்தி மனைவியோடு இணைந்து தங்கள் மகன் வெற்றிவேல் திருமணத்திற்கு வருமாறு சிம்ஹன் தம்பதியை அழைத்தனர்.

அதைப்போல ஆனந்த் வீட்டிற்கே சென்று முறைப்படி பத்திரிக்கை வைத்து அழைத்தனர்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றது. நாங்கள் போய் அதற்கான வேலையை பார்க்கணுமென்று சொல்லியபடி சத்தியமூர்த்தி தம்பதியினர் கிளம்பிவிட மற்றவர்களும் அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பினர்.

பிள்ளைகள் படிப்பு இருப்பதால் ஆர்கலியும் அண்ணன் அண்ணி நிலமையை புரிந்து கொண்டாள்.

இதோ இரண்டு மாதங்கள் கண்மூடி திறப்பதற்குள் ஓடி விட்டன.
குழந்தைகளோடு ஆர்கலி பத்து நாளைக்கு முன்பே பொள்ளாச்சிக்கு வந்து விட,ஏழாம் நாள் நலுங்கும் ஆரம்பமானது.

வாண்டுகள் இருவரும் வெற்றியின் மடியில் உட்கார்ந்திருக்க,தாய் நலுங்கை வசுந்தராவே ஆரம்பித்து வைத்தாரா.

குட்டிங்கள் இருவரும் அது மாமா இது மாமாயென்று பேச பேச வெற்றிக்கு சந்தோஷம் தாளவில்லை. டிரைனிங்கில் இருந்ததால் தங்கையோடும் பிள்ளைகளோடும் போனிலே பேசி நாட்களை ஓட்டினான்.

அதேப்போல் ஜனனிக்கும் ஐந்து நாட்களாக சொந்தங்கள் சூழ நலுங்கு வைத்து முடித்தனர்.பொண்ணழைப்பு நாளும் வர,வேடன்புத்தூர் கிராமமே திருவிழா கோலம் பூண்டது.

உங்கப்பாக்கு இன்னும் இங்கு வர முடியலையென்று திட்டியவாறு குழந்தைகளை ரெடி பண்ணிய ஆர்கலி அறையிலிருந்து வெளியே வந்தவள் அங்கிருந்த வள்ளியிடம் இருவரையும் ஒப்படைத்துவிட்டு அவள் தயாராக சென்றாள்.

ஒருத்தி ஊருக்கு போய் பத்து நாள் ஆகுதே ரெண்டு நாளைக்கு முன்னாடியோ போகணுமென்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.
ஆனால் பேச்சை பாரு பெரிய காதல் ரோமியோ போல இஷ்டத்திற்கு சரளமா வருமென்றபடியே புடவையை கட்ட போக அவள் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

நாம தான் ரெடியாக போறோமேயென்று சொல்லிட்டு தானே வந்தோம்.பிறகு யார் இப்படி தட்டுவதென்று சொல்லியவள் புடவையை வைத்துவிட்டு நைட்டியை மட்டும் எடுத்து மேலே போட்டுக் கொண்டு யாரு என்று போய் கதவின் ஓரம் நின்று கேட்க மீண்டும் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.

அம்மா,அத்தை,ராணி என்று ஆர்கலி குரல் கொடுத்தும் கதவு சத்தம் மற்றும் நிற்கவில்லை.யார் தான் இப்படி பண்றாங்களென்று கோவமாக கதவை திறந்தவளை இடித்துக்கொண்டு உள்ளே வந்தவன் கதவை லாக் பண்ணி விட்டு ஓய் பொண்டாட்டி என்று மனைவியை தூக்க,தன்னவனை பார்த்த சந்தோஷம் உள்ளுக்குள் பொங்கினாலும் கோவமாக இருப்பது போல முகத்தை வைத்தவாறு வேறு பக்கம் திரும்பினாள்.

என்ன செல்லம் வெய்ட் குறைஞ்சிருக்கு.ஓஓஓ புருஷனை பார்க்காமல் கவலையோ என்று தனது கைகளில் ஏந்தியவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டு கேட்க கண்ணை மூடி அமைதியாக இருந்தாள்.

ஏண்டி இத்தனை நாள் கழித்து வந்துருக்கேனே வாயை திறந்து பேசினால் என்னடி என்றவாறு அவள் கன்னத்தில் பல் பதியும் போல கடித்து வைத்தான்.

அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க அந்த கரடியாக தான் இருக்குமென்று சொல்லியவன் போய் ரெடியாகுடி என்றபடியே கீழே இறக்கி விட்டவன் ஆர்கலி உள்ளறைக்குள் போனதை உறுதி செய்துவிட்டு கதவை திறக்க அங்கு ரஞ்சன் நின்றான்.

என்னடா என்க,தடிமாடு அம்முவை வர சொல்லுடா.ஜனனி வீட்டிற்கு நல்லநேரத்தில் போய் சேரணுமென்று சிங்கமும் பாண்டியும் சத்தம் போடுறாங்கடாயென்க,சரி போய் சமாளி மச்சான். இதோ 5 மினிட்ஸில் வரோமென ருத்ரன் சொல்ல நண்பனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன்க யாரு நீயா டா என்றவன்,அடேய் சீக்கிரம் வாடா.

ரெண்டு இம்சைராஜாக்கள்கிட்ட முடியலைடா என்கும் போது ரஞ்சா என்கும் வசுவின் குரல் கேட்க அங்கிருந்து சென்றான்.

ஆர்கலியும் வைலட்கலரில் தங்க சரிகை போட்ட பட்டுப்புடவையை கட்டி வெளியே வந்தவள் டிரஸிங் டேபிளின் முன்பு போய் நின்று தயாராக கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தவன் மனைவியின் அழகை இமைக்காமல் பார்த்து ரசித்தான்.

கணவனின் பார்வையில் இருக்கும் காதலை கண்டாலும் அதை காணாமல் தயாராவதிலே கவனமாக இருந்தாள்.

ஆளு ஒரு சுத்து பாலீஷ் ஆகிட்டாளே...

இவளை பார்த்தால் புருஷனை பார்க்காமல் பீலிங்கில் இருந்த போலவையில்லை.ஆனால் முகத்தை மட்டும் ஏழு முழம் தூக்கி வச்சிக்கிட்டு இருக்காள்.ஒன்னுமே புரியலை என் பொண்டாட்டியை பற்றி,
என்னமோ முறைக்கிறாள் மர்மமாய் இருக்குறாளென்று பாடினான்.

தனது நீண்ட பின்னலை பின்னி முடித்தவள் வாழை இலையில் மடித்திருந்த பூவை பிரிக்க அதன் வாசனை ருத்ரனின் மூக்கை துளைக்க ஆஹா....

உசுப்பேத்துறாளே அடேய் மச்சானுக்கு கல்யாணம் வேற இருக்கு.இந்த நேரத்தில் என் பொண்டாட்டி இவ்வளவு அழகா இருக்காள்.

நான் இவளை ரசிப்பதா இல்லை பங்ஷனை அட்டென் பண்ணுவதாயென்று யோசனையோடு மேலே பார்க்க சீப்பு ஒன்னு வந்து அவன் முகத்தில் விழ ஸ்ஆஆஆ என்று வலியில் முகத்தை சுருக்கியவன் திரும்பி பார்க்க ஆர்கலி நின்ற இடம் காலியாக இருந்தது.

கதவை சாத்தும் சத்தம் கேட்டு திரும்ப, மனைவி வெளியே போய்விட்டாளென்று தெரிந்தது.

பின்னர் வேகமாக தயாராகி வெளியே வந்தவன் தனது மச்சானிடமிருந்த குழந்தைகளை பார்த்தவன் சாம் இஷி என்க தந்தையின் குரல் கேட்ட இருவரும் டாடிஇஇஇஇ என்று பாய்ந்து ஓடி வந்தவர்களை வாரி அணைத்து முத்தமிட்டான்.

ருத்ரனை போல குழந்தைகளும் கணக்கில்லா முத்தங்களை தந்தைக்கு வழங்க தூரத்திலிருந்து இதையெல்லாம் அவன் பொண்டாட்டி முறைக்க அங்கிருந்த கோபியோ அண்ணா கொஞ்சம் அண்ணியை பாருங்களென்றான்.

என்னடா தம்பி ரொம்ப புகையுதாடா என்க அடி நிச்சயம்.எதுக்கும் ஹெல்மேட் போட்டபடி திரிவது நல்லதுணா என்ற கோபியை பார்த்தவன் ஏண்டா நீயெல்லாம் தம்பியாடா?.அவள் கிட்டயிருந்து காப்பாற்றாமல் இப்படி பீதியை கிளப்புறியே என்றான்.

வீராஆஆஆ இன்னும் உன் மேக்கப் முடியலையாயென்று சிம்ஹன் தாத்தா அங்கு வந்து கேட்க,லட்டூஸ் சித்தப்பா கூட விளையாடுங்க இதோ வரெனென்று வெளியே சென்றவன் வீட்டு மருமகனாய் அவன் கடமையில் மூழ்கினான்

பரிசம் போடும் கூடையை தூக்கி கீதாவின் தலையில் வைத்த கிரிஜா பாட்டி,கீதா கண்ணு பார்த்து எடுத்துட்டு போடாமா என்றவர்,மற்றவர்களையும் ஜனனி வீட்டிற்கு பொண்ணழைப்பிற்கு அனுப்பி வைத்தார்.

ஒரு மணி நேரம் சென்று, பெண்ணழைப்பு பாடலான மணமகளே மணமகளே வா வா என்று ஒலிக்க,வழக்கமான சம்பிரதாயங்களை செய்து முறைப்படி தனது மருமகளை வீட்டிற்குள் அழைத்து போன வசுந்தரா பூஜையறையில் விளக்கேற்ற வைத்தார்.

பலவருடமாக தெரிந்த வீடு என்றாலும் ஏனோ ஜனனிக்கு திக் திக்கென்று தான் இருந்தது.

இரவு பந்தி முடியவே நள்ளிரவு ஆனது.

வீட்டின் முன்பே கல்யாண மேடை தயாராக,கோபி ருத்ரன் ரஞ்சன் மூவரும் அதை பார்த்து கரைஷன் சொல்லி மீண்டும் எல்லாம் சரியா இருக்கின்றதா என்பது பார்த்து முடிய நள்ளிரவிற்கு மேலானது.

வெற்றியின் நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருப்பதால் அவனை அவர்களோடு அனுப்பி வைக்கவே போதும் போதுமென்றாகிவிட்டது.

இதற்கு மேல ரூமிற்கு போய் என்னத்தை தூங்குவதென்று மூவரும் ஹாலில் இருந்த சோபாவிலே படுத்து கண்ணை மூடினர்.


ஆர்கலியில் விழுந்தேன்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top