• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
527
சதூர்வேதமங்கலம்:

அப்படியே ஒரு வருஷம் போயிடுச்சி.

நானும் பாதர் கிட்ட பிடிவாதம் பிடித்து சென்னைக்கு வேலைக்கு வந்துட்டேன்.
அப்போ ஒரு நாள் பாதர் என்னை கோயம்புத்தூருக்கு வர சொல்ல,நானும் சனி ஞாயிறு லீவ் என்பதால் அங்கு போனேன்.

என்கிட்ட ஒரு கவரை கொடுத்தவர் இதை இங்கு படிக்காதே சென்னையில் போய் படித்து பாருமாயென்று சொன்னார்.நானும் ஒரு நாள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன்.

வந்து அலைச்சல்லையும் ஒரு வாரம் துவைக்காத துணியெல்லாம் ரூம்ல இருந்ததை பார்த்த உடனே இந்த கவர் விஷயத்தை நான் மறந்துட்டேன்.

இப்படியே ஒரு வாரம் போனது.

அப்போ ஓர் நாள் நான் வேலை முடிந்து வந்துட்டு இருக்கும் போது நல்ல மழை.

தி.நகர்ல தான் நான் தங்கியிருந்தேன். அங்கு நடேசன் பார்க் ஏரியாவில் இருக்கும் சிக்னலை தாண்டி தான் நான் இருக்கிற வீட்டுக்கு வரணும்.

அப்படி நான் வந்துட்டு இருக்கும் போது தான் அங்கு ஒரு கார் நிற்பதையும் அந்த கார்ல நீ உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.

உன்னை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம் தாங்கவில்லை.லாம்ப் போஸ்ட் என்று கத்தி உன்னை கூப்பிட,
நீயும் கதவை திறந்து வந்து பார்பி என்றவாறு என்னை இறுக்கி கட்டி புடிச்சிக்கிட்டாய்.

ஹேய் நடு ரோடுனு நான் சொல்ல இத்தனை நாளா உன்ன தேடி எங்கெல்லாம் பைத்தியக்காரன் போல அலைஞ்சேன் தெரியுமாடி அப்படின்னு சொன்ன.நீ கிட்ட வரும் போதே தெரிஞ்சிடுச்சி போதையில் இருக்கிறேன்னு.அப்போ உன் மேல ரொம்ப கோவம் வந்தது.

நடு ரோட்டில் உன்கிட்ட என்ன சண்டை போடறதுன்னு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.

என் கையாலே சமைத்து உனக்கு ஊட்டினேன் தெரியுமா டா.விரும்பி நீ சாப்ட்ட.அதன் பிறகு கணவனா உன் தேடல் தொடங்கியது.

என்னாலும் மறுக்க முடியவில்லை.நீ நல்லா தூங்கிட்டு இருந்த.சரி ஆபிஸ் போய் லீவ் போட்டுட்டு வீட்டிற்கு வரலாமென்று நானும் கிளம்பி போய் லீவ் சொல்லிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் உன்னை காணலை.யார் கிட்ட போய் உன்னை நான் கேட்க முடியும்.இரவு என் புருஷன் வந்தான் நீங்க பாத்தீங்கலாயென்று அக்கம் பக்கத்தில் கேட்டால் என்னை என்ன நினைப்பாங்கடா?.

சரி உனக்கு போதை தெளிஞ்சி தான் போயிருக்க.திரும்ப வருவாயென்று நானும் வழக்கம் போல வேலைக்கு போயிட்டிருந்தேன்.

அப்படி தான் ஒரு நாள் வீடு சுத்தம் பண்ணிட்டு இருக்கும் போது கோவைக்கு எடுத்து போன பேகை திறந்து கிளீன் பண்ண அதில் பாதர் கொடுத்த கவர் இருந்தது.
டிரஸ்ங்களுக்கு கீழே இருந்ததால் இத்தனை நாள் அந்த கவர் கண்ணுக்கு தெரியவில்லை.

பாதர் சென்னை போன பிறகு படித்து பார்க்க சொன்னாங்களே என்பது அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது.

உடனே அந்த கவரை திறந்து உள்ளே பார்த்தேன்.அதில் முதலில் கண்ணுக்கு தெரிந்தது நமக்கு டைவர்ஸ் ஆன பேப்பர்.

எனக்கு ஒன்னுமே புரியலை.படிச்சதும் பயங்கர அதிர்ச்சி.அடுத்து அதில் சில போட்டோஸ்ங்களும்,லெட்டரும் இருந்தது.

லெட்டரை எடுத்து படிக்க படிக்க எனக்கு ஏன் டா உயிரோட இருக்கிறோம் என நினைக்காமல் இருக்க முடியலைடா என்று அழுதவள்,எழுந்து போய் கபோர்டை திறந்து அவள் பேகில் இருந்த கவரை எடுத்து வந்து ருத்ரனின் முகத்தில் விசிறி எறிந்தாள்.

ருத்ரனும் அந்த கவரை திறந்து பார்க்க அதில் பாதர் எழுதிய லெட்டர் இருந்தது.

ஆர்கலிக்கு பாதர் எழுதுவது...

முதலில் என்னை மன்னிச்சிடுமா.
நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.அதே நான் தான் இன்று உனக்கு விவாகரத்தும் வாங்கி தர காரணமாகிவிட்டேன்.

ருத்ரனின் அம்மா திருமதி விஷாலா தேவி அவர்களுக்கு உன்னை மருமகளாக ஏற்க விருப்பம் இல்லாததால்,டைவர்ஸ் வாங்குவதற்கு என்னை கருவியாக்கிவிட்டார்.

ஆசிரமம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்துவதாக சொல்லிவிடுவேனென்று மிரட்ட எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உன் ஒரு ஆள் வாழ்க்கையை பார்ப்பதா இல்லை இந்த ஆசிரமத்தில் இருக்கும் மற்ற 150 குழந்தைகளின் நலனை பற்றி யோசிப்பதாயென்று தவித்து போனேன்.

நீ படித்திருக்கின்றாய்.நிச்சயமாக ருத்ரன் உன்னை தேடி வந்துவிடுவாரென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நானும் அவர்கள் சொன்னதற்கு சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது.

உன்னிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க தான் அன்று உன்னை பார்க்க கல்லூரிக்கு வந்தது.

நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக தான் அவர்கள் என்னை மிரட்டிய சில போட்டோக்களை இதில் வைத்துள்ளேன்.இந்த பாவியை மன்னித்துவிடுமா என்று அதில் இருந்தது.

கடிதத்தை படித்தவன்,கைகள் நடுங்க போட்டோவை பார்க்க அதில் அவ்வளவு அசிங்கமாக பாதரோடு ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை இணைத்து மார்பிங் பண்ணிய போட்டோக்கள் இருந்தது.

அதுமட்டுமின்றி விபச்சார கேஸில் ஆர்கலியை போலீஸ் கைது பண்ணிய போல செய்தியும் உள்ள நியூஸ் பேப்பர் துண்டும் அதில் இருந்தது.

ஒரே எட்டில் தேவியின் முன்பு போய் நின்றவன் சிறிதும் யோசிக்காமல் அவர் தொண்டையை பிடித்து நெரித்தான்.மற்றவர்களோ அவனிடமிருந்து போராடி தேவியை பிரித்தனர்.

மிஸ்டர் தன வீர சிம்ஹன் இனி ஒரு நிமிஷம் இவள் என் கண்ணு முன்னாடி நின்றால் இந்த நிமிஷமே இவளை வெட்டி போட்டுருவேன் என்று கர்ஜித்தான்.

அந்த நேரம் இரண்டு பாட்டிகளும் வீட்டிற்குள் வந்தனர்.

அங்கிருந்த சூழலை பார்த்து விட்டு என்னாச்சி என்க,யாரும் எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.

பாட்டியிடம் வந்தவன் லெட்டரை மட்டும் கொடுத்து விட்டு போட்டோக்களை கிழித்து தேவியின் முகத்தில் எறிந்தவன்,ஆர்கலி என்று போய் அவளை அணைத்துக்கொண்டு கதறி அழுதான்.

லெட்டரை படித்த கிரிஜா பாட்டியோ அவர் பங்கிற்கு தேவியை அறைந்தவர் நீயெல்லாம் ஒரு பொம்பளையா த்தூ...

போடி வெளியேயென்று தேவியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியவர்,தனா அவள் இனி என் முகத்திலே விழிக்க கூடாது என்கும் போதே அவருக்கும் அழுகை வந்தது.

அம்மா என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அழுங்கம்மா.அவனும் அவ கழுத்தை புடிச்சுட்டு நெரிக்கிறான்.

நீங்களும் அவளை அடிச்சு வெளியே துரத்திட்டீங்கள் இங்கு என்ன நடக்குதென்று எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லைமா என தனா கேட்க,அழுது கொண்டிருந்த கிரிஜா பாட்டி உன் பொண்டாட்டியோட கேவலமான செயலை நீயே பார்த்து தெரிஞ்சுக்க என்று இப்பொழுது மகன் முன்பு அந்த கடிதத்தை நீட்டினார்.

என்ன பண்ணி தொலைஞ்சாளென்று தெரியலையே ஆண்டவா என நினைத்துக் கொண்டு அம்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிய தனா படித்துப் பார்க்க அவர் கண்கள் கோவத்தில் சிவந்து விஷாலா தேவியென்று கத்தினார்.

தனாஆஆஆ வாய மூடு என்ற சிம்ஹன் தாத்தா.இந்த வீட்டில் இதுவரை நீங்கள் ஓட்டிய படம்லாம் போதும்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லியவர் தனா உன் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு இங்க இருந்து நீ போ என்றார்.

அப்பா என்னப்பா இப்படி சொல்றீங்க?

அவள் பண்ணிய கேவலமான செயல்களுக்கு நான் என்னப்பா பண்ணுனேன் என்று கேட்கும் போது இத்தனைக்கும் மூலக்காரணமே நீ ஒருவன் தான்.

முப்பது வருஷத்திற்கு முன்னர் இந்த பொண்ணை பற்றி சொல்லும் போது நான் உன்கிட்ட வேண்டாம் என்று சொன்னேன்.நீ எங்க பேச்சைக் கேட்டியா?.மகன் ஆசைப்படுறானென்று விசாரிக்கும் போது தான் உன்னுடைய உண்மையான காதலுக்கு சொந்தக்காரி வசந்தி என்பது தெரிந்தது.


ஏழை பொண்ணு என்பதால் தான் நான் சம்மதிக்கவில்லையென்று உன் அம்மாகிட்ட சொன்ன.

உண்மையை மனதிற்குள் வைத்து,வேறு வழியில்லாமல் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.

வருஷம் போனது குணம் மாறியிருக்குமென்று இருந்தேன்.ஆனால் என் பேரனை இருட்டறையில் பூட்டி வைத்த கொடூற தாயா நடந்து கொண்டது கூட தெரியாமல் இத்தனை வருஷமா இருக்கியே நீயெல்லாம் ஒரு மனுஷனா?

அந்த கடிகத்தில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது ஆனால் என் பொண்டாட்டி கோபப்பட்டு அடிக்கும் போதே உன் மனைவி தவறான செயல் எதுவோ செஞ்சிருக்காள் என்பது நல்லா புரிஞ்சிருச்சு.

தயவுசெய்து இங்கிருந்து கூப்பிட்டு போயிடு.இருக்கும் கொஞ்ச நஞ்சம் நிம்மதியையும் நீ கொடுத்துடாதேயென்று மகனிடம் சொல்ல,ருத்ரனின் கையணைவில் இருந்த ஆர்கலியிடம் சென்றவர்,அம்மாடி ஆர்கலி என் பையனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகியதும்,டைவர்ஸ் ஆனதையும் என்னுடைய அப்பா அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும்.

உன்னோட வாழ்க்கையில் இவள் இவ்வளவு கேவலமான செயல் செய்திருப்பது எனக்கு தெரியாதுமா.

என் மகனுக்கு கல்யாணம் ஆகிட்டென்று என்னோட அப்பா சொல்லும் போது உன்னை பார்க்க என் மனசு ரொம்ப துடிச்சிது.

அவனுக்கு அவ்வளவு எளிதில் யாரையும் பிடிக்காதென்று எங்கம்மா சொல்லி நான் கேள்விபட்டுருக்கேன்.
நீ எனக்கு மருமகளா இருக்க வேண்டாம்.எனக்கு மகளா இருமாயென்று. ஆர்கலியின் காலில் விழப்போக அதைப்பார்த்து அய்யோ மாமா என்று பதறியவள்,ஏன் இப்படி பண்ணுறீங்கள்? புருஷன் மட்டும் சரியாக இருந்தால் அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தாங்கிப்பாள்.

எனக்கும் அதைப்போல நல்ல மனுஷன் தான் புருஷனாக கிடைத்திருக்கிறார்.
முடிந்து போனதை பற்றி பேசி இருக்கிற நாட்களை வீணடிக்க நான் விரும்பவில்லை மாமா.

அவர்கிட்ட கூட இதுவரைக்கும் என் மனசுல இருக்கும் காதலை நான் வெளிப்படையாக சொன்னது கிடையாது.

வாழ்வும் சாவும் எனக்கு இவர் கூடதான் மாமா.எந்த கோர்ட் சொன்னாலும் என்னுடைய புருஷனென்றால் அது உங்க பையன் மட்டும் தான்.

நிச்சயமாக அவர் என்னை தேடி வருவார் என்னும் நம்பிக்கை மலையளவு எனக்கு இருந்தது.என் நம்பிக்கையும் பொய்த்து போகவில்லை.

இருக்கிற நாட்களை குழந்தைகளோடு அவருக்காக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஆர்கலி சொல்லியதை கேட்டவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ருத்ரனுக்கு மனைவி பேசிய வார்த்தைகளை கேட்டு கண்கள் கலங்கியது.

பேரனையும் பேத்தியையும் பார்த்து விட்டு சரி வாங்க நம்ம வெளியே இருக்களாமென்று சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,தொட்டிலில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் இரண்டு பாட்டிகளும் தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
527
தன் எதிரில் இருக்கும் காதல் மனைவியை பார்த்த ருத்ரன் எட்டி அவளை இழுத்து காற்று புகாதவாறு இறுக்கி அணைத்தவன் பின்னர் அவளின் இதழோடு தன் வல்லிய இதழை வன்மையாய் புதைக்க,கணவனின் மனக்காயத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொண்டவள் மனைவியாய் அவனோடு இசைந்து போனாள்.


எவ்வளவு நிமிடங்கள் இருவரும் அப்படியே இருந்தார்களென்று தெரியவில்லை.பார்பி உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்டி என்றான்.

ம்ம் காது நல்லா தான் எனக்கு கேட்கும்.நீ சொல்லு என்றவளின் தலையை தடவியவன்,ஒரு ஊரில் தாரா என்று ஒரு பொண்ணு இருந்தாள்..
ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜிற்கு படிக்க போன இடத்தில் அவளுக்கு காதல் வருகின்றது.

அதைப்போல் அந்த பொண்ணு மேல அந்த பையனுக்கும் காதல் வருகிறது. ஆனால் இருவரும் அவர்களுடைய காதலை வாயைத் திறந்து சொல்லிக்கவில்லை.இப்படி இரண்டு வருஷம் ஓடிவிட,அப்போ அவங்க பைனல் இயர் படிக்குறாங்கள்.காலேஜ்ல டூர் போன இடத்தில் அந்த பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது.

அந்த பையனும் அவளுடைய நண்பர்களான இருவரும் தான் அந்த பொண்ணுக்கு துணையாக இருக்காங்க.

அந்நேரம் அந்த பையன் என்ன பண்ணுறான் பாவம் எதுவும் சாப்பிடாமல் இருக்காளே என வருத்தப்பட்டு வெளியே இருக்கும் கடையில் போய் டீ வாங்கிட்டு வந்து குடிக்கிறாங்க அதற்கு பிறகு அவங்க ரெண்டு பேருக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியலை.

கொஞ்ச நேரம் கழிச்சு நினைவு வரும் பொழுது தான் இருவருக்குள்ளும் தாம்பத்தியம் நடந்திருப்பது தெரிந்து அதிர்ந்து போறாங்க.

அந்த பொண்ணோட அப்பா சமூகத்துல பெரிய ஆளு.இது வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோயென்று பயந்து கதறி அழுறாள்.அங்கிருந்து வெளியே போன அந்த பையன் கொஞ்ச நேரம் கழித்து ரூமிற்குள் வந்தவன் அந்த பொண்ணு கழுத்துல அவங்க அம்மாவோட தாலியை கட்டுறான்.

நான் வேலைக்கு போயிட்டு உங்க வீட்ல வந்து பொண்ணு கேக்குறேன்னு அந்த பையனும் சொல்றான்.இப்படி ஒரு விஷயம் நடந்தது அவர்கள் கூட இருந்த இரண்டு நண்பர்களுக்கும் தெரியாது.

ஏனென்றால் அவங்க இருவரும் லவ்வர்ஸ்.தன்னவளால் அவங்களும் டூருக்கு வந்த இடத்தை சுத்தி பார்க்க முடியாமல் போகுதேயென்று அந்த பையன் தான் ரெண்டு பேர்கிட்டையும் பேசி பக்கத்துல போய் சுற்றி பார்த்துவிட்டு வாங்களென்றே அனுப்பி வைத்திருந்தான்.

பிறகு டூர் முடிஞ்சி காலேஜ் வந்துட்டாங்க. இரண்டு மாதத்தில் செமஸ்டரும் வந்துவிட்டது.

பைனல் எக்ஸாம் முடிந்து அந்த பொண்ணுகிட்ட அதாவது தன்னுடைய மனைவி கிட்ட அந்த பையன் பேசிட்டு இருக்கும் போது,டேய் உனக்கு தந்தி வந்திருக்கு சீக்கிரம் வாடாயென்று அவருடைய நண்பன் வந்து சொல்றான்.
என்னாச்சோயென்று பதறி அடிச்சுட்டு ஓடுறேன்.அவனுக்கு உறவென்று இருக்கிறது அம்மா மட்டும் தான்.

அப்பா, அவன் 12 வது படிக்கும் போது
இறந்துட்டாங்க.அவனுடைய அப்பா அம்மா காதல் திருமணம் பண்ணிக்கிட்டதால் வீட்ல சேர்க்கவில்லை.ஓடிப்போய் தந்தியை வாங்கி படித்து பார்க்க அவனுடைய அம்மா சீரியஸா இருக்காங்களென்று தந்தி வந்துருக்கு.

நண்பர்களிடமும் அவன் மனைவியிடமும் சொல்லிட்டு போனவன் தான் அதன் பின்னர் அவனை பற்றி எதுவும் தெரியவில்லை.

ஏய் நிறுத்து நிறுத்து என்று ஆர்கலி சொல்ல என்னடி என்றான்.ஆமாம் இது யாருடைய கதை?அதை ஏன் என்கிட்ட சொல்லுறயென்றாள்.

முழுவதும் கேட்ட பிறகு நீ நினைப்பதை சொல்லுடியென்றவன் மீண்டும் சொல்ல தொடங்கினான்.காலேஜ் லைப் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த பொண்ணு கன்சீவாக இருப்பது தெரியுது.ஆள் வைத்து அந்த பையனை தேடுறாள் ஆனால் எந்த நியூஸும் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அவளுடைய அப்பாவிற்கு தெரிந்து சண்டை போடுறார்.மகளுடைய பிடிவாதத்தை பார்த்து வேற வழியில்லாமல் அங்கிருந்து போய்டுறார்.

மாதமும் போகுது குழந்தை பிறந்துடுச்சி.அவள் கண் விழித்து குழந்தையை பற்றி கேட்கும் பொழுது குழந்தை இறந்தே பிறந்துடுச்சினு சொல்றாங்க.இதை கேட்டு அவளுக்கு பிக்ஸ் வந்துடுது.பிறகு ஒருவழியா தேறி வந்தவள் அவள் ஆசைப்பட்ட படிப்பை படித்து உயர் பதவிக்கு போறாள்.

அவளுடைய அப்பா அம்மா இருவரும் தன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவோ பிடிவாதம் பண்றாங்க. இப்படியே 23 வருஷம் போயிடுது. அப்போ தான் ஒரு நாள் உன் குழந்தை உயிரோட தான் இருக்கென்று அவங்க அப்பா வந்து சொல்றாரு.

அதைக் கேட்டவுடனே அந்த அம்மா மயங்கி விழுந்துடுறாங்க.பிறகு எப்படியோ தன் மகளை கண்டுபிடித்து அவங்களோட வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டாங்க.அப்புறம் ஒரு நாள் தனது கணவரை மீட் பண்றாங்க அவரோட வாழ்க்கையில் நடந்தது சொல்லும் போது எல்லாருக்கும் பேரதிர்ச்சி.

ஏன்னா அவங்க அம்மாவ பாக்க போன போது அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி அவர் கோவமாவிற்கு போய்விட்டார்.
நடந்த விஷயங்கள் பாதி அவருக்கு நினைவு இல்லை தன்னோட மகள் பற்றி தெரிந்து கதறி அழுறார்.

அவர் மேல தப்பு இல்லையென்பதை அந்த அம்மா புரிஞ்சுகிட்டாங்க.இப்போ அவங்க மகள் கிட்ட அவங்க தான் அப்பா அம்மான்னு சொல்லணுமா? சொல்லலாமா? இல்லை வேண்டாமா?.
இதை பத்தி நீ என்ன நினைக்கிற சொல்லுடி என்று கேட்டேன்.

ருத்ரன் சொல்லியதையெல்லாம் கேட்ட ஆர்கலிக்கு கண்ணீர் வந்தது.நிச்சயமாக இரண்டு பேரும் தான் பாவம்.இருவரும் வேற எந்த கல்யாணமும் பண்ணிக்காமல் இத்தனை வருஷமாக தனியாக வாழ்ந்திருக்காங்களே அதுவே அவங்களுக்கு கொடுமை தான்.

சில விஷயத்தை வெளியே சொல்லி ஆறுதல் தேடிக்கலாம்.ஆனால் இவங்க நிலை ரொம்ப வேதனையென்று சொல்லி கண் கலங்கியவள்,இனி அவர்கள் குடும்பமாய் ஒன்றாக வாழணும்.தூய்மையான அன்புக்கும் காதலுக்கும் அந்த தாய் தந்தையே மிகச்சிறந்த உதாரணமென்றாள்.

மனைவியின் வார்த்தைகளை கேட்டவன் உன் மனசு இருக்கேடி அது ஒரு போதும் தவறான முடிவுகள் எடுக்காது.நீ சொல்வது போல அவங்கள் இருவரும் இணைந்து வந்தால் அந்த மகளோட மனநிலை எப்படி இருக்கும்டி என்று மனைவியை ஆழம் பார்த்தான்.

நிச்சயமாக அந்த பொண்ணுக்கு இது பேரதிர்ச்சி மட்டுமில்லை அவளுக்கு அப்பா அம்மா கிடைத்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இருக்காது.

அனாதையென்ற பெயரோடு வாழ்வது எவ்வளவு வேதனையென்று தெரியுமா என்கும் போது அம்மு என்கும் வசுந்தராவின் குரல் கேட்டவள்,மேடமென்று திரும்ப,அங்கு வசுந்தராவும் சத்தியமூர்த்தியும் கண்ணில் கண்ணீரோடு நின்றனர்.

வாங்க மேடமென்று ஆர்கலி சொல்ல வர, பார்பி நான் சொன்ன கதையோட ரியல் கதாபாத்திரங்கள் என்னுடைய அத்தை வசுந்தராவும் மாமா சுந்தரமூர்த்தியும் தான்.

அவங்களுடைய ஒரே பொண்ணு என்னுடைய பொண்டாட்டி ஆர்கலி என்க,என்னாயென்றவாறு மயங்கி சரிந்தவளை நெஞ்சில் தாங்கியவன் பதறி ஓடி வந்தவர்களை பார்த்து அவளுக்கு அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான்.

நீங்க கவலைப்படாதீங்களென்று தனது அத்தை மாமாவிடம் சொல்லியவன் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து ஆர்கலியின் முகத்தில் தெளிக்க சில நொடியில் கண் விழித்தவள்,தன்னை தாங்கியிருக்கும் கணவனின் முகத்தை பார்த்தவள் நீ சொன்னது என்று தடுமாற கண்ணை மூடி ஆம் என்றான்.

ஆர்கலியின் மனநிலையை விவரிக்க வார்த்தையில்லை.அம்மாடி ஆர்கலி உன் அப்பன் வந்துருக்கேன் கண்ணு.இந்த பாவிக்கு நீ இருப்பது தெரியாதும்மா.என்னை மன்னிச்சிடு கண்ணுயென்று கை கூப்பிய சத்தியமூர்த்தி கதறி அழுதார்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல ருத்ரனிடமிருந்து வேகமாக எழுந்தவள் அப்பா என்க,தங்கமே என்று வேகமாக வந்தவர் மகளை அணைத்துக்கொண்டு கத்தி கதற, ஆர்கலியோ அங்கு கண்ணீரோடு நின்றிருக்கும் வசுந்தராவை பார்த்தவள் அம்மா என்று அவரை நோக்கி கையை நீட்ட அம்முயென்றவாறு வேகமாக வந்தவரும் மற்றொரு பக்கம் மகளை அணைத்துக்கொண்டு அழுதார்.

வாசலில் நின்று இவைகளையெல்லாம் பார்த்தவர்களுக்கும் கண்கள் கலங்கியது.

அப்பொழுது குழந்தைகள் இருவரும் சிணுங்க,பாரேன் அம்மா அழுறாளென்று இவைங்களும் சிணுங்குவதையென்று தன் கையிலிருக்கும் பேரனை பார்த்து சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,பின்ன இருக்காதா தம்பியென்றார் சிம்ஹன் தாத்தா.

மூவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு மற்றவர்கள் வெளியே சென்றனர்.
மகளை இரண்டு பக்கமும் அணைத்தவாரு உட்கார்ந்திருந்தனர்.

அம்முயென்று வசு கூப்பிட போதும்மா.இனி நீங்கள் அப்பா கூட சநதோஷமா நாட்களை போக்குங்களென்றவள்,அப்பா உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றாள்.

மன்னிச்சிடுடா கண்ணு என்றவர் தன் குடும்பத்தை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தவர்,உன் அண்ணன் ஐபிஎஸ் டிரைனிங்கில் இருக்கான் டா.
உன் அத்தை வள்ளி மட்டும் ஊர்ல இருக்காங்க.நாங்க இலங்கைக்கு போய்ட்டு நேராக இங்கு வந்துவிட்டோமென்றார்.மறந்தும் யாரும் தேவியை பற்றி பேசவில்லை.

வெளியே வந்த ருத்ரனை பார்த்த கிரிஜா பாட்டி வீராயென்று கையை நீட்ட,அந்த முதிய கைக்குள் அடைக்கலமானவன் சத்தமின்றி குலுங்கி அழுதான்.

பேரனின் வேதனையை கண்டவர் அவன் மனபாரம் குறையட்டுமென்று அமைதியாக தலைமுடியை கோதிவிட்டார்.

சிறிது நிமிடம் சென்ற பின்னர் வீரா என்று சிம்ஹன் தாத்தா கூப்பிட,ம்ம் என்றான்.இங்கு வா என்க,அவரின் முன்பு போய் நின்றான்.நடந்ததை எதுவும் மாற்ற முடியாது.ஆனால் இதற்கு மேல் யார் மனமும் கஷ்டப்படாமல் நம்மளால் பார்த்துக் கொள்ள முடியும்.
வேதனை உனக்கு மட்டுமல்ல என்னோட புள்ளைக்கும் தான்.

ஆர்கலி விஷயத்தில் தற்போது வசுவும் சத்யாவும் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு நீ கொஞ்சம் பொறுத்துக்கோ.இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் அவங்க ஒரு குடும்பமாக இருக்கிறார்கள். நான் சொல்வது உனக்கு புரிகிறது தானே? ,புரியுது தாத்தா.

அவ எவ்வளவு நாள் இல்லை எத்தனை மாதம் வேண்டுமானாலும் அவங்க அப்பா அம்மா கூட குழந்தைகளோடு இருந்துட்டு வரட்டும்.எனக்கு பிரச்சினை இல்லை என்றான்.

இது போதும் என்றவர்,அம்மாடி கருப்பாயி இந்த கிழவனுக்கு ஒரு வாய் காப்பி தண்ணீர் தரமுடியுமா என்க,அய்யோ தாத்தா இதோ என்று உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் காபியம் டீயும் போட்டு ஒரு டிரேவில் வைத்து எடுத்துட்டு வந்தவர் அவரவருக்கு விருப்பமானதை கேட்டு கொடுத்தார்.

டேய் உன் மகளுக்கு என்னை பார்த்தாள் ரெஸ்ட்ரூம் போல இருக்காடா?

எத்தனை முறை உச்சா போய்டாள் தெரியுமாயென்று சிம்ஹன் தாத்தா பேரனை கேட்க,ஆமா என்னமோ ஆசிட் ஊத்துன போல ரொம்ப பதறாதீங்க என்றார் கிரிஜா பாட்டி.

இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைந்து மற்றவர்கள் அவர்கள் பேச்சில் சிரித்தனர்.

கண்ணு நம்ப வீட்டுக்கு போகலாமாயென்று சத்தியமூர்த்தி கேட்க,அவரின் முகத்திலிருக்கும் ஆவலே ஆர்கலியை சம்மதம் சொல்ல வைத்தது.

விஷயத்தை மற்றவர்களிடம் வந்து சொல்ல சரியென்றனர்.அதைப்போல அதிகாலையிலே அனைவரும் பொள்ளாச்சியை நோக்கி பயணமானார்கள்.

ஆர்கலியில் விழுந்தேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top