• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
433
இலங்கை- இரத்தினபுரி:

"என்ன இவள் கொஞ்சம் கூட நம்மை கண்டுகொள்ளவே இல்லை.ஒரு வேளை நம்மை மறந்துட்டாளோ? என ஆது யோசனையில் இருக்க,க்கும் என தொண்டை கணைக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன், அங்கிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்".


"ஹலோ..டீ என்றவள்,அவனுக்கு முன்பு இருக்கும் டீப்பாயின் மேலே வைத்து திரும்பி செல்ல,ஏய் ராகினி என்றான்".

"எத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த குரலை கேட்கிறோமென உள்ளுக்குள் மகிழ்ந்த ராகினி,வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்".

"அவளருகில் வந்து நெருங்கி நின்றவன்,ஏண்டி என்னை மறந்துட்டியாடி?என்கும் போதே வார்த்தைகள் வராமல் ஆதுவின் தொண்டையடைக்க,பட்டென்று வேகமாக திரும்பியவள்,சத்தியமாக உங்களை நான் மறக்கலைங்க என்றாள்".

"நிஜமாவா?,பின்ன ஏன் டி ,இங்கு வீட்டிற்கு வந்து மூனு மாதம் ஆகியும் என் முகத்தை கூட பார்க்கவில்லை? ".

"நீங்க பேசுனீங்களா? என திருப்பி கேட்டாள்".

"அது வந்துயென பேச ஆது தடுமாற, சொல்லுங்க?,காதலை சொல்லிட்டு பதிலை கூட எதிர் பார்க்காமல் போனீங்களே?,இப்போ தான் உங்களுக்கு என் கிட்ட பேச தோணியதா?,ம்ம்".

ராகினி, உனக்கு, உனக்கு என்றவன், இன்னும் அவளோடு நெருங்கி நிற்க,இருவருக்கும் நூலளவு இடைவெளியிருந்தது.

"அப்பொழுது, என்னடா இங்கு நடக்குதென்று ஆனந்த் குரல் கேட்க, பேசிக்கிட்டு இருக்கிறோம் தெரியலையா என்றவன், பின்னர் தனது தந்தையின் குரலென்று சுதாரித்து, ராகினியை விட்டு விலகி வந்து நின்றான்".

" அம்மாடி ராகினி, டிபன் மா என ஆனந்த் குரல் கேட்க, இதோ மாமா என ஓடியவள், சமைத்த உணவுகளை டைனிங் டேபிளின் மேலே எடுத்து வந்து வைத்தவள், மூவருக்காக காத்திருந்தாள்.

"ரஞ்ஜா, சாயங்காலம் ராகினிய பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களாம், ஜேம்ஸ் நம்மை வர சொல்லியிருக்கார்".

"உனக்கு ஓகே தானே ராகினி என்க, அவள் என்ன பதில் சொல்லுவாளென்று ஆவளாக ஆது பார்க்க,நீங்கள் பார்த்து எந்த கழுதையை கட்டி வச்சாலும் எனக்கு ஓகே தான் மாமா என்றாள்".

" சரிமா".

" ராகினி, நீயும் சாப்பிட்டுக்கம்மா என்றவாறு சாப்பிட்டு எழுந்து சென்றார்".

" ஆது தனது பல்லை கடிக்க, என்னடா நீ மட்டும் காலையிலே நான் வெஜ் சாப்டுற? என ரஞ்ஜன் கேட்க, நண்பனை ஒரு முறை முறைத்தவன், எழுந்து சென்றான்".

" கழுதை வேண்டுமா, இருடி எப்படி இந்த கல்யாணம் நடக்குதுனு பாக்குறேன்டி என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், இதோ வரேன் இருடி என்றவாறு, தனது தந்தையின் அறைக்கு கோவமாக போனான்".

"ஒரே குழப்பமாக இருக்கே, எந்த டிரஸை போடயென அங்கே ஆனந்த் புலம்பிக்கொண்டிருக்க, ஆமா, இவருக்கு தான பொண்ணு பார்க்க போறாங்க, இந்த குழப்பம் அவசியம் தான் என்றான்".

" வாடா வாடா, நீயே சொல்லுப்பா, இதில் எதை போடயேன கேட்டவர், ராகினிக்கு அம்மா அப்பா இடத்தில் இருந்து ,நாம தான் நல்ல முறையில் கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆது".

" இந்த மூனு மாதமா தான் இந்த வீடு வீடாக இருக்கு. உன் அம்மா இருந்த போது எப்படி இருந்ததோ அந்த உணர்வுகள், ராகினி இங்கு வந்த பிறகு நான் உணர்ந்தேன்".

" செல்லா எல்லாம் பண்ணினாலும், ஏதோ ஒரு குறை. அது ராகினியால் நிறைவேறிட்டு. நீதான் கூட இருந்து நல்லபடியா முடித்து கொடுக்கணும்பா".

" நம்ப பொண்ணு, அது வாழ்க்கை கடைசி வரை நல்லா இருக்கணும் இல்லையா என ஆனந்த் மகனிடம் கேட்க,ஆதுவால் சொல்ல வந்த விஷயத்தை தந்தையிடம் சொல்ல முடியவில்லை".

" மனதை தேற்றிக்கொண்டவன், சரிப்பா. உன் ஆசை போல நல்ல முறையில் பண்ணிடலாமென்று, அங்கிருந்து சென்றான்".

" போகும் மகனை பார்த்தவர், பின்னர் களுத்துறைக்கு செல்வதற்காக ரெடியாகினார்".

" சிறிது நிமிடத்தில் தயாராகி கீழே வந்தவர், செல்லா செல்லா என குரல் கொடுக்க பூஜையறையில் இருந்து வந்தவரிடம், எங்கம்மா இவனுங்க என்க, அதோணா என கையை காட்ட,ஆதுவும் ரஞ்ஜனும் வந்தார்கள்".

" நான் போய் கார் எடுக்கிறேன் என்று சொல்லிக் கண்டு ஆது வெளியே செல்ல, இரு எருமை நானும் வரேன் என்று அவன் பின்னாடியே ரஞ்ஜனும் சென்றான்".

ராகினி இன்னுமா ரெடியாகுற என செல்லா குரல் கொடுக்க, இதோ வந்துட்டேம்மா என சொல்லிக்கொண்டு அங்கு வந்தவள், போலாம் என்க,பின்னர் மூவரும் காரில் ஏறியதும், களுத்துறையை நோக்கி காரை ஓட்டினான்".

" சிறிது நிமிடம் வரை காரில் அமைதி நிலவியிருக்க, ஏன் டா, அந்த மியூசிக் பிளேயரை ஆன் பண்ணினால் கார் தேய்ஞ்சி போய்டுமா?, பாட்டை போடுங்கடா".

" எவ்வளவு நேரம் தான் உம்மென்று போவது என ஆனந்த் சொல்ல, ஆதுவோ கண்ணாடி வழியாக தனது தந்தையை பார்த்து முறைத்தான்".

" ஆமா மாமா, நல்லா பாட்டா போட சொல்லுங்க, நாலு மணி நேரமாச்சே என்று ராகினி சொல்ல, உனக்கு பாட்டு கேட்கும் டி".

" இங்க ஒருத்தன் என்ன தவிப்பில இருக்கேன், அதை பற்றி கவலையில்லாமல், பாட்டு கேட்குது".

" ம்கும்.... இதுக்கு தான் காதல் பண்ணாதீங்கனு பாரதிராஜாவோ, பாண்டியராஜனோ பாடினாங்களென்று மனதிற்குள் முணு முணுத்துக்கொண்டவன், பிளேயரை ஆன் பண்ண, அவன் நேரம் போல,காதல் தோல்வி பாடல் ஓட, டைமிங் சாங்கென்று ஆனந்த் சொல்ல, யாருக்கு மாமா என்றாள் ராகினி".

சதூர்வேதமங்கலம்:

கொஞ்சம் கூட புருஷன் என்கிற மரியாதை இல்லை என்க, உனக்கு நான் ஏன்டா மரியாதை கொடுக்கணும்?.

நீ என் புருஷன்னு யாருடா சொன்னா உனக்கு என்கும் போது,இப்பொழுது உண்மையிலேயே ருத்ரனுக்கு கோவம் வந்து ஓங்கி விட்டான் ஒரு அறை.

என்னடி நானும் பார்த்துட்டே இருக்கிறேன் புருஷன் இல்ல புருஷன் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிற.

நான் தான் உன் புருஷன் இல்லையே பிறகு என்ன மயிருக்கு,அங்கு சர்ச்சில் உனக்கு நான் போட்ட செயினை இன்னும் போட்டுருக்க?.

கழட்டி கொடுடி என அவள் கழுத்தில் இருந்த செயினில் ருத்ரன் கையை வைக்க, அவன் கையை தட்டி விட்டாள்.

" நான் தான் தேவையில்லையே, பிறகு எதுக்குடி என் குழந்தைகளை உன் வயித்துல வச்சிருக்க?,ஒழுங்கா நல்ல முறையில் பெத்து கொடுத்துட்டு, உனக்கு எவனை புடிச்சிருக்கோ அவன் கூடயே நீ போ".

"அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என் குழந்தை ரொம்ப முக்கியம்.நான் இருக்கும் போது அவங்கள் எந்த சூழலிலும் கஷ்டபடுவதை என்னால் ஏற்க முடியாது என்றவாறு, அங்கிருந்து ஷோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்".

"ஆர்கலி குழந்தையை பிரிந்து இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றால் இத்தனை மாதமும் அவள் சுமந்திருக்க மாட்டாள். குழந்தையை வைத்து தான் தன்னவளை சமாதானப்படுத்த வேண்டுமென்று திட்டம் போட்டு,இப்படி சொன்னான்".

"ஆனால்,ருத்ரன் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் ஆர்கலி உடைந்து போனாள்.ஓஓஓ குழந்தைக்காக தான் வந்திருக்காங்க".

"அப்போ என் மேல கொஞ்சம் கூட இவனுக்கு அக்கறையே இல்லையா?,பாவி மனசு, இவனை பார்த்த ஒரு நொடி, நம்மளை தேடி வந்துட்டாங்களே என சந்தோஷப்பட்டு விட்டதே என்பதை நினைத்து, மனதிற்குள் வருந்தினாள்".

"இல்லை நான் அழக்கூடாது. இவனை நம்பி ஒன்னும் நான் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே என தனக்குள் சொல்லிக்கொண்டவள், ஓகே மிஸ்டர். ருத்ர வீர சிம்ஹன் என்றாள்".

"ஓஓஓ என்றவன் அப்போ உனக்கு என் கூட வாழ விருப்பமில்லை தானே என்க, ஆமாம் இல்லை என்றாள்".

"குழந்தையை பெற்று குடுத்து விட்டு போய்டுவ தானே?,ஆமாம் போய்டுவேன் என ஆர்கலி சொல்ல, அப்போ இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை தானேடி ?, சட்டப்படி உங்களுக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லையென்று கோர்ட் எப்பவே சொல்லிட்டு என்றவளை முறைத்து பார்த்தான்".

"ரைட்...அப்போ அக்ரிமெண்டில் சைன் பண்ணிடு என ருத்ரன் சொல்ல, என்ன அக்ரிமெண்ட்? என்று ஆர்கலி கேட்க, இப்போ நீ சொன்னது எல்லாம் எழுதி கையெழுத்து போட்டு கொடு".

"கொஞ்ச நாளைக்கு பின்னர் உன் மனசு மாறி,நான் தான் வேணும்னு ஒத்த கால நீ நிக்கக்கூடாது இல்லையா,அதற்கு தான் கேட்குறேனென்றான்".

"ருத்ரன் சொன்னதை கேட்டு ஹாஹாஹா என சிரித்தவள்,உங்க கூட நான் சேர்ந்து வாழ்வேனென்று கற்பனை கூட பண்ணாதீங்க".

"முடிந்து போன சாப்டரை திருப்பி பார்க்க எனக்கு இஷ்டம் இல்லை.டாக்குமெண்ட்ஸ் ரெடிரானதும் சொல்லுங்க, சைன் பண்ணுறேனென்றாள்".

"ஓஓஓ எல்லாத்துக்கும் தான் தயாரா இருக்கியா என்க, லுக் மிஸ்டர், சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்கள் தானே, நான் கிளம்புறேனென்க, ஒரு நிமிஷம்".

"அப்புறம் மேடம் இந்த அக்ரிமெண்ட் பற்றி எனது தாத்தா பாட்டிக்கு தெரியக்கூடாது. இப்போ தான் என் பாட்டி டிரீட்மெண்ட் முடிந்து வீட்டுக்கு வந்துருக்காங்க".

" திரும்ப ஒரு அட்டாக் வந்தால் அவங்க உயிரோட என வார்த்தையை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற, அவன் வேதனையை புரிந்து கொண்டவள், நம்பலாம்".

" எந்த சூழலிலும் உங்களை சார்ந்தவங்களுக்கு, என்னால் எந்த சூழலிலும் மனக்கஷ்டமும் வராது".

"நிச்சயமாக இதைப்பற்றி யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். பிராமிஸ் பண்ணுவது இதுவரை எனக்கு பழக்கமில்லை.

சோ,சொன்ன வாக்கை நான் காப்பாற்றுவேனென்றவள், அங்கிருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.

ஆமா பொல்லாத வாக்கு போடி என்றான்.

"சில நொடிகள் சென்று ஆர்கலி சொல்லி சென்றதை கேட்க,வேதனையாக தான் இருந்தது.எந்த அளவுக்கு நாம் இவள் மனதை நோகடித்திருக்கிறோம் என்பதை,அவனாலும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது".

"ஒரு நிமிடம் கண்ணை மூடியவனுக்கு,ஆர்கலியை பொள்ளாச்சியில் பார்த்த நினைவுகள் வர,பாப்பா என்பதை கேட்டு,அவள் கோவப்பட்ட அந்த நிகழ்வு மனக்கண்ணில் வந்து,ருத்ரனுக்கு சிரிப்பை தந்தது".

டேய் ரொம்ப சிரிக்காதே.எந்த நேரத்தில் உன் பொண்டாட்டி என்ன முடிவு எடுப்பாளோ அதை கொஞ்சம் யோசித்து பாருடா மாங்கா மண்டையா.

சொல்ல முடியாது சொல்லாமல் நைட்டே ஊர விட்டு போனாலும் போவாள் என்றது ருத்ரனின் மனசாட்சி".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
433
"கண்ணை துடைத்துக்கொண்டு வெளியே வந்தவள், ஹாலில் யாரும் இல்லாததை பார்த்து, இவர்களெல்லாரும் எங்க போயிட்டாங்க?,விளங்காதவன் இப்படி தூக்கிட்டு போயிட்டான்".

" என்ன நினைத்திருப்பாங்கனு மனதிற்குள் திட்டிக் கொண்டே வெளியே வந்து பார்க்க, எல்லாரும் வராண்டாவில் இருந்த திண்ணையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது".

" அங்கு வர சைலஜா பாட்டி அழுவது தெரிந்தது".

" பாட்டி, யாருக்கு என்னாச்சி?, சொல்லுங்க என்று பதற, வசுக்கு குண்டடி பட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கா அம்மு என்க, அய்யோ என பதறினாள்".

" இப்போ வசு நல்லா இருக்கா. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுறாங்க.அதான் உன் மாமாவும், தாத்தாவும் இங்கே வரவில்லை "

" ஏன் அம்மு, உனக்கு எதாவது அந்த வீட்டில் குறையா?, யாராவது உன்னை எதாவது சொன்னாங்களா, அதனால் தான் நீ வீட்டை விட்டு வந்தியா?, சொல்லுமா என்க..".

" இல்லை பாட்டி, உங்கள் யார் மேலயும் எந்த குறையுமில்லை என்றாள்".

" ரூமில் இருந்த ருத்ரனிடம் மனசாட்சி பேச,உன்னை யாராவது பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டாங்களா?, போ இங்க இருந்து".

" அதுலாம் இனி எங்கையும் அவள் போக மாட்டாள், போய் உன் வேலையை பாரென்று மனசாட்சியை துரத்தி விட பார்க்க, ஹா ஹா ஹா என சிரித்துக்கொண்டே மனசாட்சி அங்கிருந்து சென்றது".

" அய்யோ...இவள் அப்படி பண்ணுற ஆள் தானே டா ருத்ரா".

" ஒரு வேளை இங்க சம்மதம் சொல்லிட்டு நைட்டோடு எஸ்கேப் ஆகி விட்டால் என்ன பண்ணுறது என புலம்பினான்".

" இப்பதான் ஓரளவுக்கு அவளை ஒரு டீலிங்கிற்கு கொண்டு வந்தேன்.அதற்குள் இந்த மனசாட்சி பயல் வந்து நம்மை பாழாக்கிட்டானே என்றவன், எங்கே போனாளென அங்கிருந்து வெளி வந்தான்".

"இப்பொழுது இருக்கும் ஒரே வழி இவளை நம்மோடு கூப்பிட்டு போறது மட்டும் தான் டார்கெட்".

"மற்றதை பிறகு பார்த்துக்கலாமென்று முடிவு பண்ணியவன், மனதிற்குள் ஒரு முடிவை தீர்மானமாக எடுத்துக்கொண்ட ருத்ரன்,ஏய் பார்பி டால், அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவேனா டி? இனி தான் டி, உன் புருஷனோட ஆட்டத்தை பார்க்க போற என சொல்லிக்கொண்டான்.மதிய உணவு ரெடியாக இருக்கு என்று கருப்பாயி எல்லாரையும் வந்து கூப்பிட்டார்".

" எனக்கு வேண்டாம் அண்ணி, காலையில் சாப்பிட்டதே நெஞ்சுகரிக்கிற போல இருக்கென்க, அதுக்கு தான் இதென்று மலர் ஒரு டம்ளரோடு வந்து ஆர்கலியிடம் நீட்ட, என்னக்கா இது? ".

" குடி மா, பயப்படாதே என்க, வாங்கி குடித்தவளுக்கு, அதன் சுவை லெமன்-சோடா என்பது தெரிந்து, நல்லா இருக்குங்கக்கா என்றவாறு குடித்து முடித்தவள், நீங்களாம் போய் சாப்பிடுங்கள், நான் கொஞ்ச நேரம் நடக்குறேனென்று எழுந்து செல்ல.. ".

" மற்றவர்கள் உள்ளே போய் சாப்பிட உட்கார, மலரும், கருப்பாயியும் பரிமாறினர்".

" ஏங்க, கண்ணனும்- தேவகியும் எப்போ கிளம்புறாங்களென்று சிம்ஹன் தாத்தாவிடம் கிரிஜா பாட்டி கேட்க, இன்னைக்கு தான் மீட் பண்ணுவாங்க".

"பார்த்து பேசிட்டு நாளைக்கு கிளம்பிடுவாங்க மா".

" அப்புறம், உன் பேரன் எங்கே? சாப்ட வரலையா என கேட்க, கணவரை முறைத்து பார்த்தவர், நானும் உங்க கூட தானே இவ்வளவு நேரம் இருந்தேன்".

" என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும்?, அக்கரை இருந்தால் போய் இழுத்துட்டு வந்து ஊட்டி விடுங்களென்று சொல்லி விட்டு சாப்பிடும் வேலையை பார்க்க, சிம்ஹன் தாத்தாவால் மனைவிக்கு எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை".

" நான் போய் கூப்பிட்டு வரேனென்று சொல்லிய சங்கர், கீழே இருந்த கெஸ்ட் ரூம் வாசலின் முன்பு போய் நின்று கதவை தட்ட, சில நொடிகளில் கதவை திறந்த ருத்ரன், அங்கிருந்த சங்கரை பார்த்து சிரித்தவன், சொல்லுங்க மாமா என்றவன், ஒரு நொடி தயங்கி அப்படி கூப்பிடலாம் தானே? என கேட்டான்".

" ஆர்கலிக்கு நான் அண்ணன் என்பது உண்மை, அப்போ நீங்க தாராளமா கூப்பிடலாமென்று சங்கர் சொல்ல, தேங்க்ஸ் மாமா".

" நீங்களாவது என்னை உறவாக ஏற்றுக்கொண்டீர்களே என்றவனிடம், சாப்பிட வாங்க தம்பி என்க, இல்லை காலையில் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்கு".

" இவ்வளவு ஹெவி சாப்பாடுலாம் நான் சாப்பிட்டதில்லை. அப்புறம் மாமா, நீங்க சாப்பிட்டு வாங்க,உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமென்க, சரிங்க தம்பியென்று அங்கிருந்து சங்கர் சென்று விட, டைனிங் ஹாலை பார்த்தவன், அங்கே ஆர்கலி இல்லாததை கண்டு, அய்யோ ஓடிட்டாளா என்றவாறு வேகமாக வாசலுக்கு வந்தான்".

"சாப்பிட்டுக் கொண்டிருந்த சிம்ஹன் தாத்தா, வேகமாக போகும் தனது பேரனை பார்த்தவர்,எதுக்கு உன் பேரன் இப்படி விழுந்து அடிச்சு ஓடுகிறான் என எதிரில் இருக்கும் மனைவியிடம் கேட்க, கிரிஜா பாட்டியோ மீண்டும் தனது கணவரை முறைத்து பார்த்தார்".

" அய்யோ தெரியாமல் கேட்டுவிட்டேன் மேடம். நீயும் இங்கதான் இருக்க, அதுதான் டி சொல்ல போற என்க, தனது மாமா பேசியதை கேட்டு, சைலஜா பாட்டிக்கு சிரிப்பு வந்து விட்டது".

" மாமா நீங்க கொஞ்சம் கூட மாறவேயில்லை. என்ன வயசு மட்டும் தான் கூடி இருக்கென்று சொல்ல, ஹா ஹாஹா என சிரித்த சிம்ஹன் தாத்தா, அப்படியா பாப்பு".

" இந்த சால்ட் லுக்கில்,உன் மாமன் ஹேண்ட்சமா இருக்கேன்னு, நம்ப ஷோரூம்ல இருக்குற பொண்ணுங்க எல்லாம் சொல்லுறாங்க என்று சிரித்தார்".

" இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிரிஜா பாட்டி எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு முடித்து எழுந்தவர், இந்த வயதில் டைவர்ஸ் பண்ணனுமென்று விதி இருக்கு போல என்றவாறு அங்கிருந்து செல்ல..".

" மனைவியின் வார்த்தைகள் காதில் விழ, அய்யோஓஓஓ, ஏய் கிரி நீ இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுடி. இப்படி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே என்று சத்தமாக சொல்ல, அங்கிருந்தவர்களெல்லாரும், அவர் சொல்வதைக் கேட்டு சத்தமாக சிரித்தார்கள்".

வாசல் படியில் நின்று ருத்ரன் பார்க்க, சற்று தள்ளி வரிசையாக இருக்கும் மர நிழலில் ஆர்கலி நடந்து கொண்டிருப்பது தெரிந்து, ஹப்பாடா".

" இவள் என்ன நமக்கு இப்படி பீதிய கிளப்புறாள்?, நான் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் டி, கொஞ்ச நிமிஷத்தில் என்னை கலங்கடிச்சிட்டியே என முணு முணுத்தவன், மனைவியுடைய தாய்மையின் அழகை ரசித்து பார்த்தான்".

"நடந்து கொண்டிருந்தவளுக்கு கால் வலிப்பது போல இருக்க, நின்று மூச்சை இழுத்து விட்டவள், அங்கிருந்த புல் தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்தவள், அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்".

" இந்த ஊருக்கு வந்த இத்தனை மாதத்தில், இன்று தான் இந்த இடத்தையெல்லாம் பார்க்கிறாள்".

" வேலையாட்கள் அந்த இடத்தை எவ்வளவு அழகாக பராமரிக்கிறார்கள் என்பது, அங்கிருந்த அழகே சொல்லியது".

இரத்தினபுரி- களுத்துறை:

" காரில் இருப்பவர்களில் செல்லாவையும், ராகினையையும் தவிர, மற்ற மூவருக்கும்,ஆதிராவின் பார்ட்டியில் நடந்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தது".

" கொஞ்ச நாளில் மேகலா கர்பம் ஆக, ஆலீஸ் தான் தங்கச்சியை ( மேகலா) பார்த்துக்கொண்டாள்".

" ஆதிரா பிறந்த பிறகு வாழ்க்கையும் அழகா ஆரம்பித்தது. எங்களோட பொண்ணாக தான் நாங்களும் ஆதிராவை வளர்த்தோம்".

" மேகலாகிட்ட இருந்ததை விட, ஆலீஸ் கூட தான் அவள் அதிக நேரம் இருப்பது".

"எங்களோட கவலைகளை மறக்க வந்த தேவதை தான் பேபிமா. உங்களுக்கு அவள் ஆதிரா, எங்களுக்கு எப்போதும் பேபிமா தான்".

" என் தங்கச்சியை தேடி அலையாமல் இல்லை. எந்த குளுவும் இல்லாமல் எப்படிப்பா உங்கள் இடம் எனக்கு தெரியும்?

" கிருபா ஓடிப்போனதால், இங்கு சொந்தகாரவங்களெல்லாம் பேசும் பேச்சு தாங்காமல், இவளோட குடும்பம், லண்டனுக்கு போய்விட்டது".

"ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஆலிஸோட அண்ணன், லண்டன்ல இறந்துட்டாங்கன்னு போன் வந்தது".

" ரெண்டு பேரும் அங்க போய்விட்டோம்.அப்போ, இவளோட அம்மாவும் உடம்பு சரியில்லாமல் இருந்தாங்க".

"கொஞ்ச நாள் அவங்க கூட இருந்து இவளோட அண்ணி பார்த்துக்க சொல்ல, நாங்களும் ஆண் துணை இல்லாத வீடென்று தங்கிட்டோம்".

"இங்கு இருப்பதை சுந்தர் கிட்ட சொல்லி பார்த்துக்க சொல்லியாச்சி.அதன் பிறகு,இப்பொழுது தான் ஆதிராவுக்காக இங்க வந்தோமென்று சொல்லி முடித்தார்".

" யாரை குறை சொல்வதென்று தெரியவில்லை".

" ரஞ்ஜா, என் தங்கச்சிக்கு என்னாச்சி என்க, நடந்ததை ருத்ரன் சொல்ல, அடப்பாவி, இப்படி என் தங்கச்சி வாழ்க்கையை நாசமாக்கிட்டானே என கதறினார்".

" இனியாவது நாம குடும்பமாய், ஒன்றாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் சொல்ல, மன்னிச்சிடுங்க மாமா. உங்களை வந்து அப்பப்போ நான் பாத்துட்டு போறேன். ஆனால் என்னால இங்க தங்க முடியாது என்று சொல்லிவிட்டான்".

"ரஞ்சனுடைய மனநிலையை ஜேம்ஸ் தம்பதிகளுக்கு புரிந்து கொள்ள முடிந்தது. சரிப்பா உன் விருப்பம் ஆகட்டும். நாளைக்கு ராகினியை பார்க்க நாங்களும் வரலாமா?என்று கேட்க, மாமா நான் இங்க தங்க முடியாது என்று தான் சொன்னேன்".

"அதற்காக உங்கள் தங்கச்சி பிள்ளைகள் இல்லை என்று நான் சொல்லவே இல்லை. மன்னிச்சிடுங்க மாமா. அம்மா மேலையும் இதுல தப்பு இருக்கு என்பது இப்பொழுது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது"

"முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் மாமா.இனி நடப்பதை பார்க்கலாம் என்றான். சரிப்பா நேரமாகிவிட்டது. நீங்க அந்த ரூமை யூஸ் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்ல,சரியென்று நண்பர்களும் அந்த அறைக்குள் செல்ல, ஜேம்ஸ் தனது தங்கையின் புகைப்படத்தை தடவி பார்த்துக் கொண்டிருக்க, அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது".

" என்னடா இன்னைக்கு என்னென்னவோ நடந்திடுச்சி. ஆனால் இதில் நமக்கு இரண்டு நல்ல விஷயம் டா என ஆது சொல்ல...".

"ஆமாடா, முதலாவதாக நம்ப ராகினிக்கு நினைவு வந்தது, மற்றொன்று, ரஞ்ஜனோட மாமாவை பற்றி தெரிந்தது என ருத்ரன் சொல்ல, அதேடா என்ற ஆது, என்ன ரஞ்ஜா யோசனையென்றான்".

" இல்லைடா, ராகினிக்கு நம்மை நினைவு இருக்காமாயென்ற யோசனை தான். கிட்ட தட்ட பத்து வருஷத்திற்கு மேல ஆகிட்டுடா. அவளுக்கு பழசெல்லாம் நினைவில் இருக்குமா என்று வருத்தப்பட, டேய் ரொம்ப யோசிக்காதே?.

" பார்த்துக்கலாம் விடுயென ருத்ரன் சொல்ல, சரிடா என்றபடி,அங்கிருந்த பெட்டில் படுத்த மூவரும் ,சிறிது நிமிடத்தில் உறங்க தொடங்கினர்".

ஆர்கலி எங்கே...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top