• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஹைதராபாத்:

" மூவரும் இரவு டின்னரை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தவர்கள், ஆளுக்கு ஒரு பெட்டில் படுத்துக் கொண்டனர்".

"மச்சான், முதல்ல உன்னை பற்றி சொல்லுடா? என்று விஷால் கேட்க,சரிடா என்றவாறு,கபிலன் தன்னை பற்றி சொல்ல தொடங்கினான்".

" என்னோட ஊர் கடலூர் மாவட்டம் சதூர்வேதமங்கலம் டா. அப்பா பேரு கண்ணன், அம்மா பேரு தேவகி. அவங்களுக்கு நான் ஒரே பையன் தான்".

" அப்புறம் காலையில் மாமாவை பார்த்தீங்களே, அவர் தான் அம்மாவுடைய அண்ணன்".

" மாமாக்கு ஒரு பொண்ணு என்க, ஆஹான் என்றனர் நண்பர்கள் இருவரும்".

" அவள் இப்போ தான் மெடிசின் முடித்திருக்கிறாள் டா. அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை தான் எங்க நிச்சயம் முடிந்தது".

" அத்தை இல்லைடா".

" இவளுக்கு இரண்டு வயது இருக்கும் போது, அத்தை இறந்துட்டாங்கடா"

"ஜாயின்ட் பேமிலி.அப்புறம் கொஞ்சம் நிலம் இருக்கு,கண்ணன் மசாலா பொருட்கள் நம்மளுடையது , அவ்வளவு தான் என்றான்".

" மச்சி.....புது மாப்பிள்ளையா என்க, ஹாஹாஹா ஆமாடா".

" சரிடா, உங்களை பற்றி சொல்லுங்களென்க,என்னை பற்றி சொல்ல என்னடா இருக்கு".

" நான் விஷால் விஸ்வநாதன், ஒரு தங்கச்சி, லண்டன்ல செகண்ட் இயர் மெடிசின் படிக்குறாள்".

" அப்பா நம்ப தமிழ்நாட்டோட அக்ரி மினிஷ்டர், அம்மா ஹை கோர்ட் ஜட்ஜ்".

" எதேஏஏஏ மினிஸ்டர் பையனானு கபிலன் அதிர, ஆமாடா.இதுக்கு ஏன் டா எருமை, வாயை காது வரை திறக்குறனு விஷால் சிரித்தான்".

"மச்சி நீ சொல்லுடானு வெற்றியை கேட்க,ஊர் பொள்ளாச்சி.அப்பா பேர் சரவணன், அம்மா பேர் காந்திமதி".

" எனக்கு 2 வயது இருக்கும் போது, ஆக்ஸிடென்ல இறந்துட்டாங்கடா. சித்தப்பாவும், அத்தையும் தான் வளர்த்தது".

" ரெண்டு பேருமே இதுவரை கல்யாணம் பண்ணிக்கலைடா, அப்புறம், எனக்கும் போன வாரம் தான் நிச்சயம் ஆனதென்க, எதேஏஏஏஏ என்று இப்பொழுது விஷாலும், கபிலனோடு அதிர்ந்தான்".

"அடப்பரதேசி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே என்க, திடீர்னு நடந்ததுடா, அதான் நம்ப ப்ரண்ட்ஸ் யாருக்கும் சொல்ல முடியவில்லை'.
அப்புறம் ஊர்ல சின்னதா தேங்காய் மண்டியும், கொஞ்சம் நிலமும் இருக்குடா.

" நண்பன் சொல்லியதை கேட்ட விஷால், அடச்சண்டாளா, எவ்வளவு பெரிய சொத்துக்கு வாரிசு, இப்படி சொல்லுறானேனு வெற்றியை பார்க்க, அவன் கண்ணடித்தான்".

" சரி சரி...மரியாதையா ரெண்டு பயலும், என் தங்கச்சிங்க ஃபோட்டோவை காமிங்கடா என்க, வெற்றியும்,விஷாலும் அவரவர் இணையின் ஃபோட்டோவை விஷாலிடம் காட்டினர்".

"மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருக்க, அடேய் எனக்கு தூக்கம் வருதுடா.குட் நைட் என்றபடியே குப்புற படுத்து விஷால் தூங்க, கபிலனும், வெற்றியும், தங்கள் இணைகளின் நினைவில் மூழ்கினர்".

" தனது ஃபோனிலஇருந்த நிச்சயதார்த்த ஃபோட்டோவை பார்த்த கபிலனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது நினைவிற்குள் வந்தது".

" அதேப்போலவே,ஆதிராவோடு, ஊட்டிக்கு டிரைனில் போய்க் கொண்டிருந்த ரியாவும்,இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்".

கபி💞ரியா நினைவுகள், சதூர்வேதமங்கலம்:

"நால்வரும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,ரெடியாகி வாங்க, நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்கப் போகணுமென்று கண்ணன் சொல்ல, ம்ம் என்று தலையசைத்தனர்".

"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, தயாராகி கீழே வர அரைமணி நேரம் ஆனது".

" ஏண்டி பொம்பள புள்ளைங்களே கிளம்பி வந்துட்டுங்க. உன் மவன் இன்னும் என்ன பண்ணுறானென்று கண்ணன் கேட்க, தேவகியும் மகனின் வருகைக்காக தான் காத்திருந்தார்".

" ரியாவோ, இன்னும் இந்த விருமாண்டி என்ன பண்ணுறாரென்று யோசித்துக்கொண்டே மாடியை பார்க்க, அங்கே மெருன் கலர் டீ-ஷர்ட் வித் நீல கலர் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, தனது மீசையை முறுக்கிக் கொண்டே, கம்பீரமாக படியிலிறங்கி வந்தவனை பார்த்து வாயடைத்து போனாள்".

" வழக்கமாய் அவள் பார்க்கும் நேரமெல்லாம், கபிலன் கலர் சட்டையும், அதற்கு தகுந்த போல பார்டர் வைத்த வெள்ளை வேஷ்டியும் தான் போட்டிருப்பான்".

" அவளுக்கு தெரிந்த வரையில், கபிலனை இதைப்போல உடையில் பார்த்ததேயில்லை".

" கண்ணில் கூலர் இருப்பதால், படியிலிருந்து இறங்கும் போதே ரியாவின் ஆச்சர்யமான பார்வையை கண்டு கொண்டான்".

" அம்மா போகலாமா என்க, வாவ் அண்ணா செம்மையா இருக்கீங்களென்று ஆதிரா சொல்ல, மகிழ்ச்சிடா ஆதி என்று சிரித்தவன், என்ன கடைக்கு வர எண்ணமில்லையா? என்றான்".

" மகனையும், தனது கையில் கட்டி இருந்த வாட்ச்சையும் மாறி மாறி கண்ணன் பார்க்க, ஒரு முக்கியமான போன் வந்தது பா.அதான் பேசிக் கொண்டிருந்தேன்".

வாங்க வாங்க என்றபடியே கபிலன் வெளியே சென்றான்...

மகன் போன திசையை பார்த்தவர், மனைவியின் பக்கம் திரும்பி,உன் மகனை பார்த்தியாடி?.

"என்னமோ நம்ப கிளம்ப நேரம் ஆகிட்ட போல போறானென்க, அதற்கு தேவகியோ முருகாஆஆஆ",இந்த அப்பன் புள்ளை பஞ்சாயத்துக்கு ஒரு முடிவே கிடையாதா??என்க, ரியாவும்,ஆதிராவும் சிரித்து விட்டனர்".

" அந்நேரம் வெளியேயிருந்து கார் ஹாரன் அடிக்க, வாடி. இதுக்கும் உன் மவன் எதையாவது சொல்லுவானென்றவர், சாமி ரூம் பக்கம் திரும்பி , அம்மா ஆனந்தாயி, நல்ல படியா போய்ட்டு வரணுமென்று வேண்டிக்கொண்டு, அங்கிருந்து சென்றார்".

" வாங்கடாமா, பிறகு அப்பனும் மவனும் நம்ப தலைய உருட்டுவாங்கயென்று தேவகி சொல்ல, ஹாஹாஹா என்று மீண்டும் தோழிகள் சிரித்துக் கொண்டே வெளியே செல்ல, தேவகியும் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் ஏறி போகலாம்பா என்றார்".

" முக்கால் மணி நேர பயணத்தில், பக்கத்து ஊரான சிதம்பரத்தில் இருக்கும் சாலா சில்க்ஸின் பார்க்கிங் ஏரியாவிற்குள் வந்து காரை நிறுத்து உள்ளே போனார்கள்.

" இவர்களை பார்த்த கடை சிப்பந்தி, வாங்க,என்ன பாக்கணும்? என்க, பட்டுப்புடவை செக்க்ஷன்னு கபிலன் சொல்ல, மூன்றாவது ஃப்ளோர் சார் என்றார்".

" பிறகு அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாவது ஃப்ளோருக்கு வந்தவர்கள், வலது பக்கமாய் திரும்பி, பட்டுப்புடவை செக்க்ஷனிற்கு செல்ல, வாங்க எந்த மாதிரி புடவை வெண்டுமென்று கடையாள் கேட்டார்".

"விலை பிரச்சனை இல்லை, நீங்கள் எடுத்து போடுங்களென்று கண்ணன் சொல்ல, சரிங்க சார் என்றவர், உட்காருங்கம்மானு, ரேக்கிலிருந்த புடவைகளை எடுத்து போட்டார்".

" தேவகி புள்ளைங்களுக்கு எது புடிக்குதோ, அதை கேட்டுக்கயென்று கண்ணன் சொன்னார்".

" மலை போல் புடவைகள் குமிந்து இருக்க, எதை எடுப்பதென்று ரியாவிற்கு குழப்பம் வந்தது".

" இந்த விருமாண்டி எதுக்கு வந்தான். ஒரு புடவை செலக்ட் பண்ணி குடுக்க துப்பு இல்லையென்று, ரியா தன் மனதிற்குள் திட்டிக்கொண்டிருக்க, க்கும் என கணைத்துக்கொண்டே அவளருகில் வந்தவன்,புடவையாவது கட்ட தெரியுமா? என்றான்".

" கபிலனின் குரலில் அவன் பக்கம் ரியா திரும்பி முறைக்க, ஒற்றை கண்ணடித்தவன், அந்த புடவை குவியலிலிருந்த புடவையை எடுத்தவன்,இதை பிரித்து காட்டுங்களென்றான்".

"அவரும் புடவையை பிரித்து காட்ட,அது ரியாவிற்கு ரொம்ப பிடித்திருப்பதை, அவள் முகத்திலிருந்த வியப்பே காட்டிக் கொடுத்தது".

" அம்மா இது ஓகே தானே என்க, கட்டப்போறது உன் பொண்டாட்டி. அவகிட்ட கேளுப்பா என்கவும்,இது ஓகேவா?".

"ரொம்ப புடிச்சிருக்கென்று ரியா சொல்ல, புடவையா இல்லை நானாடி என்று அவள் காதில் விழுமாறு கபிலன் கேட்க,விருமாண்டிய தானென்றாள்".

"ஆஹான் என்றவன், ஆதி உனக்கும் அம்மாக்கும் எடுங்களென்க, தேவகி வைலட்டும், ரோஸூம் கலந்த கலரில் புடவையை எடுத்துக்கொண்டார்".

" ஆதிராவிற்கு தான் எந்த கலரை எடுப்பதென்று தெரியவில்லை. அவள் இதுவரை புடவை வாங்கியதில்லை என்பதால், அவளுக்கு அதை பற்றி தெரியவில்லை".

" தங்கை அமைதியாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட கபிலன், சிரித்துக் கொண்டே அவளுக்கும் புடவையை செலக்ட் பண்ணி எடுத்தான்".

"இது ஓகேவா பாருடா ஆதி என்க, திக் மெரூன் கலரில், தங்கநிறத்தில் பெரிய பார்டர் வைத்து இருந்த புடவையை பார்த்தவளுக்கு, பிடித்திருந்தது".

" இது ஓகேணா".

" பின்னர் ரியாவையும், ஆதிராவையும் பிளவுஸ் செக்க்ஷனுக்கு அனுப்பி விட்டு, ஐந்தாவது , ஃப்ளோரிலஇருக்கும் ஆண்கள் செக்க்ஷனிற்கு சென்றனர்".

" வாங்க சார் எந்த மாதிரி டிரஸ் வேண்டுமென்று கேட்க, ஷெர்வானி வேண்டுமென்றான்".

" ஓகே சார் என்றவர், வித விதமான ஷெர்வானியை அவரும் எடுத்து காட்டினார்".

"அதில் ரியாவின் புடவைக்கு மேச்சாக தேடி எடுத்துக்கொண்டான்".

" இதை கீழே பில்லுக்கு அனுப்பிடுங்கனு சொல்லி விட்டு, ஆதிராவிற்கு கால் பண்ணியவன், என்னாச்சுடா ஆதி என்க,அண்ணா நாங்க கீழே தான் இருக்கோமென்றாள்".

"ஓகேடா,இதோ நாங்க வரோமென்று கட் பண்ணியவன்,பெற்றோரை அழைத்துக் கொண்டு,லிப்டில் ஏறி கீழே வந்தவன்,வாங்கிய எல்லாவற்றையும் பில் போட சொல்லி பணத்தை கார்டில் பே பண்ணி, டிரஸை வாங்கிக்கொண்டு, போகலாமென்றான்".

"அடுத்து அங்குள்ள நகை கடைக்கு சென்று, ரியாவிற்கு கழுத்துக்கும், விரலுக்கும் தங்கநகைகளை வாங்கிக் கொண்டு வெளியே வர மதியம் மூன்று ஆனது".

" சரி வாங்க லஞ்ச் சாப்பிட்டுக்கலாமென்று அங்கிருந்த சரவணபவனுக்குள் செல்ல, ஏசி ரூம் வேண்டுமா, இல்லை நார்மல் ஓகே வா சார் என்று அங்கிருந்த வேலையாள் கேட்க, எதா இருந்தாலும் ஓகே என்றான்".

" உள்ளே போய் பார்த்து வந்தவர், சார் இப்போதைக்கு ஏசில தான் சீட் இருக்கு என்க, சரியென்று உள்ளே போய் உட்கார, வெய்டரும் மெனு கார்டோடு வந்தார்".

"கண்ணனும், தேவகியும் மீல்ஸ் சொல்லினர், ஆதிராவும், ரியாவும் பரோட்டா சொல்ல, கபிலன் கார்லிக்நான் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் பண்ணினான்".

" பத்து நிமிடத்தில் அவர்கள் ஆர்டர் பண்ணிய உணவுகள் வந்து சேர,இளையவர்கள் மூவரும் ஷேர் பண்ணிக்கொண்டு சாப்பிட்டு முடித்து, வெளியே வந்தனர்".

"இன்னும் ஏதாவது வாங்கணுமாப்பா? என கபிலன் கேட்க, பூ, பழம், இனிப்பெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம் ராஜா, இனி நாம வீட்டிற்கு போய்விடலாமொன்று கண்ணன் சொல்ல, சரியென்று காரில் ஏறிக்கொண்டு , வீட்டை நோக்கி சென்றனர்".

" காலையில் போனவர்கள் வீட்டிற்கு வந்து சேர மாலை ஐந்து மணியானது".

" தேவகி தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறக்கும் போது, கார் ஒன்று அவர்கள் வீட்டின் பார்க்கிங்கிற்குள் வந்து நின்றது".

" யாரென்று இவர்கள் திரும்பி பார்க்க, அதிலிருந்து இறங்கியவரைக் கண்டு அதிர்ந்து போயினர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்- நாயர் மருத்துவமனை:

" கிரியை ஒழுங்கா பார்த்துக்குங்களென்று சொல்லிய ஆது அங்கிருந்து செல்ல, அவ யாருக்கு பொண்டாட்டினு தெரியலையே? என்று சிம்ஹன் தாத்தா முணு முணுத்தார்".

" சிறிது தூரம் நடந்தவன், திரும்பி என்ன அங்க முணு முணுப்பென்று கேட்க, நல்லா பார்த்துக்குறேனென்று சிம்ஹன் தாத்தா சொல்ல,ஆமா ஆமா, நீங்க பார்த்துக்கிட்ட லட்சணம் தான் நல்லா தெரியுதேயென்று, கிரிஜா பாட்டி இருக்கும் அறையை காட்டினான்".

"ஆது சொன்னதை கேட்ட சிம்ஹன் தாத்தா, ஏண்டா? நானாடா இவளை இங்க வந்து பெட்ல சேர சொன்னேன் என்க, பின்ன வேற யாரு சொன்னால்? ".

" அவ்வளவு அவசரமா, சொல்லாமல்-கொள்ளாமல், இந்தியாவிற்கு வர வேண்டியதற்கு என்ன அவசியம் வந்தது?, சரி, அப்படி சென்னைக்கு வந்திருந்தாலும், அவங்களை பார்க்கவென்று நினைச்சிக்கலாம்".

" சம்பந்தமேயில்லாமல் , கேராளாவிற்கு வந்திருக்கீங்க, அதுமட்டுமில்லாமல், கிரி போல இங்கொரு அழகி இருக்காங்க?, இது எப்படி சாத்தியம்ணு ஒன்னும் தெரியலை? என்று, இவ்வளவு நேரம் தனக்குள் அடக்கி வைத்திருந்த கேள்விகளை வரிசையாக அடுக்கினான்".

" அய்யோ கிருஷ்ணா( கடவுள்).அப்பனை போலவே, இவனும் சிஐடி யா இருக்கானே?, சிம்ஹா இவன் கிட்ட மாட்டிக்கிட்டால் உன்னால் பதில் சொல்லி மாளாது".

" இவனுக்கு ஏற்ற ஆளு உன் பொண்டாட்டி கிரி தான். மறந்தும் வாயை குடுக்காதேயென்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பசிக்குது கண்ணா என்க,அதை கேட்டவன் இதோ வரேன் தாத்தானு அங்கிருந்து வேகமாக செல்ல,அந்நேரம்,அந்த ஃப்ளோரிலிருந்த லிப்டின் கதவு திறக்க, அதிலிருந்து ருத்ரன் வந்தான்".

" ஆதுவை பார்த்தவன் எங்கேடா போற? என்க,எதுவும் சொல்லாமல் தனது கையிலிருந்த வாட்சை பார்க்க, சாப்பாடு வாங்கிட்டு வந்துருக்கேன், வாடா எருமையென்று நண்பனின் கையை இழுத்துக்கொண்டு ருத்ரன் சென்றான்".

" தாத்தாவிடம் வந்தவன், பாட்டி தூங்கிட்டாங்களா?,பேரனின் குரலில் நிமிர்ந்து பார்த்த சிம்ஹன் தாத்தா, ருத்ரனை முறைத்து பார்த்தார்".

" அவரின் பார்வையை கண்ட ருத்ரன்,என்ன லுக்?,ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாமென்று, கதவை திறந்து உள்ளே போக, அங்கு கிரிஜா பாட்டி தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" பாட்டியின் தலையில் தடவி விட்டவன், சீக்கிரம் எந்திரிச்சி வா கிரி என்கும் போது, ருத்ரனின் கண்கள் கலங்கியது".

"ஐந்து வயதிலிருந்து இதோ இருபத்து ஒன்பது வயது ஆண்மகனாய் ஆனாலும், இன்னும் அந்த சிறு வயது பாலகனை போல பார்த்துக்கொள்ளும் ஜீவனாச்சே".

" அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து, ஒரு நாள் கூட உடம்பு முடியாமல் கிரிஜா பாட்டி இருந்ததில்லை".

" அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த இருவரும் ருத்ரனை கண்டு கொள்ளாமல், அங்கு டேபிள் மேலிருந்த உணவு பாக்ஸை எடுத்தவர்கள், பக்கத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்".

" அந்நேரம் சிம்ஹன் தாத்தாவின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து பார்த்தவர், தனது புருவத்தை சுருக்கினார்".

" முதல் அழைப்பு கட்ட ஆக, பின்னர் மீண்டும் கால் வர, அட்டென் பண்ணியவர், சொல்லுப்பா தனா, நாங்க நல்ல படியாக வந்து விட்டோம்".

" மற்றதை நேரில் வந்து சொல்லுறேனென்று சொல்லி அழைப்பை துண்டித்தவர், வீரா என்று கூப்பிட, தாத்தாவின் குரலில் திரும்பி பார்த்தான்".

" வா.. வந்து சாப்பிடு. காலையிலிருந்து நீயும் எதுவும் சாப்பிடவில்லையென்று தெரிகின்றது".

" கண்ணை துடைத்துக்கொண்டவன், பஸ்ட் நீங்க சாப்பிடுங்க தாத்தாயென்க, வ்வ்ஆஆஆஆ என்று ஆதவன் ஏப்பம் விட்டான்".

" ஆது செய்கையை கண்டு ருத்ரன் முறைக்க, பேரனின் சேட்டையைக்கண்ட சிம்ஹன் தாத்தாவிற்கு சிரிப்பு வந்தது.அதை மறைத்துக்கொண்டு,நாங்க சாப்பிட்டோம், நீ சாப்பிடு வீரா".

" மனமேயில்லாமல் சாப்பிட்டு வந்தவனை பார்த்தவர், என்ன நடந்துச்சி என்க, ருத்ரனோ,யாருக்கு என்னவென்றான்?.

" அதை நீ தான் சொல்லணும் வீராயென்க, அங்கிருந்த ஜன்னலின் அருகில் போய் நின்றவன், என்ன சொல்ல தாத்தா".

" எனக்கு துரோகம் பண்ணிட்டாளென்று சொல்லும் போதே, ருத்ரன் குலுங்கி அழுவது தெரிந்தது".

"நண்பன் அழுவதை கண்ட ஆதவன், சோபாவிலிருந்து எழுந்து வேக எட்டில் போய் அவன் தோளை பிடித்து திருப்பியவன், என்னாச்சு?".

" காலையிலிருந்து இதுவரை ஒரு வார்த்தை பேசாமலிருந்த நண்பன், இப்பொழுது தன்னிடம் பேசியதை பார்த்தவன், ஆது என்று நண்பனை கட்டிக்கொண்டு கதறினான்".

" என்னடா இங்கு நடக்குதென்று ஆதுக்கு புரியவில்லை".

" அடேய் அர்னால்டு, எதா இருந்தாலும் சொல்லிட்டு அழுது தொலைடா, ஒரு புண்ணாக்கும் புரியாமல் மண்டை காயுதென்று ஆதவன் சத்தம் போட,வீரா, ஆது வாங்கடா வெளியே போய் பேசலாமென்று சொல்லிக்கொண்டு சிம்ஹன் தாத்தா வெளியே சென்றார்".

" ருத்ரனை இழுத்துக்கொண்டு வெளியே வந்தவன்,என்ன நடந்ததுனு ரெண்டு பேரில் யாராவது ஒருவர் சொல்லி தொலைங்களென்று சத்தம் போட்டான்".

" எனக்கு தெரியாது, அவனையே கேட்டுக்கோயென்று சிம்ஹன் தாத்தா, ருத்ரனை கையைக் காட்டினார்".

"ருத்ரனோ எதுவும் சொல்லாமல், அந்த மாடி சுவற்றிலிருந்து, தூரத்தில் தெரியும் நிலவை பார்த்துக்கொண்டிருக்க, அவனின் தாடை இறுக்கத்திலே ரொம்ப கோவமாக இருக்கிறானென்று ஆதுக்கு புரிந்தது".

" திரும்பி தாத்தாவை பார்த்த ஆது, சிங்கம் நீ கிரி கூட இரு.நாங்க வரோமென்று ருத்ரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்த லிப்டில் ஏறியவன், கிரவுண்ட்ஃப்ளோர் பட்டனை அழுத்த, சிறிது நொடியில் லிப்டும் கீழே வந்து நின்றது".

" பின்னர் இருவரும் ஹாஸ்பிட்டலின் வெளி பக்கம் வந்தனர். கார் சாவி என்று ருத்ரனிடம் கையை நீட்ட, பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து கொடுத்தவன், கார் நம்பரையும், இருக்கும் இடத்தை சொல்ல, அங்கிருந்து வேகமாக சென்ற ஆது, சிறிது நிமிடத்தில் காரோடு ருத்ரனின் அருகில் வந்து நின்றான்".

" முன்பக்கம் கதவை திறந்து ருத்ரன் ஏறியதும், கார் அங்கிருந்து சீறிப்பாய்ந்தது".

"இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இரவு நேரமென்பதால், அந்த நெடுஞ்சாலையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை".

" அங்கங்கே காஃபி ஷாப் மட்டும் திறந்திருந்தது".

" ஒரு மணி நேரம் சென்று, மரங்கள் அடர்ந்து இருந்த பாதையின் ஓரத்தில் இருக்கும் ஷோட்டல் ஒன்றில், பகல் போல பிஸியாக கூட்டம் நிரம்பி இருந்தது".

" அதனிலிருந்து சில அடி தள்ளிப்போய் வண்டியை நிறுத்தியவன், ஹெட் லைட்டை ஆன் பண்ணி விட்டு, ஹோட்டலிற்கு சென்றவன், இரண்டு கூல்டிரிங்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு காருக்குள் வந்தவன், ருத்ரனிடம் ஒன்றை நீட்டினான்".

" இருவரும் அவரவர்கானதை குடித்து முடித்தனர்".

" என்ன ஆச்சி வீர் என்று ஆது கேட்க, நண்பனின் பிரத்தியோகமான அழைப்பை கேட்ட பின்னர், ருத்ரனால் அமைதியாக இருக்க முடியவில்லை".

சதூர்வேதமங்கலம்-ஆர்கலி வீடு:

"ஐயோ அண்ணா,எதுக்கு அண்ணா உங்களுக்கு சிரமமென்று ஆர்கலி சொல்ல, அட என்ன தங்கச்சிமா".

"தங்கச்சிமா என்று சொல்லிட்டேன், பின்ன உனக்கு செய்யாமல், அண்ணன் வேற யாருக்கு செய்யப் போறேன்?. கவலை படாதேமா".

"நம்பி சாப்பிடலாம். உன் அண்ணி நல்லா தான் சமைப்பாள். ரெண்டு புள்ளைங்கமா.ரெண்டு பேரும் சனி ஞாயிறு லீவுனு, பக்கத்து ஊரில் இருக்கும் ,அவங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க".

" உன் அண்ணிகாரி அப்படியே காடு மலையை வெட்டி முறிக்கிறது போல சிரமம், கிரமம்னு சொல்லிகிட்டு இருக்கியே,தின்னுட்டு தூங்கிட்டு தான் இருப்பாளென்று சங்கர் சிரித்தவன்
சரி தங்கச்சிமா, நீ முதல்ல ஜாமம் என்ன வேணும்னு எழுதி வை. கருப்பாயி வந்த பிறகு, அவளை கூட வச்சுக்கிட்டு வீட்ட சுத்தப்படுத்திக்கயென்றார்".

"வீடு தான் சுத்தமா இருக்கேணா. சும்மா ஒரு முறை கூட்டி மாப் போட்டுக்கலாம். நாளைக்கு பால் காய்ச்சிடலாம்ணா. பாத்திரமும் இங்கே இருக்கு".

"பால் மட்டும் வாங்கணுமென்று ஆர்கலி சொல்ல, அதுக்கு என்னமா,நம்ம வீட்டுலயே பசுமாடு இருக்கு.உன் அண்ணிய கொண்டு வந்து தினமும் கொடுக்க சொல்லிடுறேன்".

" அப்படியாணா என்றவள்,அப்போ நானும் டவுனுக்கு வரேன்ணா. நாங்க வந்த அவசரத்தில் ,வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாததால், லக்கேஜ்லாம் ஒன்னும் எடுத்துட்டு வரவில்லை".

" அப்படி எடுத்து வரும் அளவுக்கு பெருசா எங்களுக்கு எதுவும் இல்லைணா. போட்டுக்கொள்ள துணியும், வீட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டும், இப்போதைக்கு வாங்கினால் போதுமென்றாள்".

" ஆர்கலி சொன்னதை கேட்டவர்,அதுக்கு என்னம்மா,நம்ம டவுன்லே நாலு-அஞ்சு பெரிய கடைகள் இருக்கு. கருப்பாயியை கூட்டிட்டு போய் தேவையானதை வாங்கிட்டு வாங்க".

" நீங்க ரெண்டு பேரும் வரும் வரை,நான் ஆச்சியை பார்த்துக்கொள்கிறேன் என்று சங்கர் சொல்ல, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பாட்டியோ, அடேய் சுருட்டை மண்டையா,எனக்கு நீ துணையாடா? என்றார்".

" பின்னாடியிருந்து ஆச்சியின் குரலை கேட்டு அதிர்ந்து போன சங்கர், ஆச்சி நீ ஊமை இல்லையா? என்க,எவன்டா சொன்னான் நான் ஊமையென்று?.
ஒருத்தி அமைதியாக இருந்தாக்க, உன் இஷ்டத்திற்கு நீயே முடிவு பண்ணிக்கிறதாடா என்றார்".

" ஏஏஏஏ எப்பாஆஆஆஆ..வாய் என்ன காது வரைக்கும் போகுது?,இத்தனை நேரம் வாயில்லாத பூச்சி போல மூஞ்ச வச்சிக்கிட்டு இருந்ததால், ஒன்னும் தெரியாது அப்பாவினு உன்னை தப்பா நினைச்சு கணக்கு போட்டுட்டேன் என்று பாவமாக பார்த்தான்".

சங்கர் சொல்லியதை கேட்ட பாட்டி, உன்னை எவன்டா இப்படிலாம் நினைக்க சொன்னது? என்றார்.

பின்னர் ஆர்கலியிடம் திரும்பிய சங்கர், தங்கச்சிமா நம்ம ஊருக்கு ஏத்த ஆளுதானென்று சிரிக்க,ஆமாம்ணா ஆமாமென்று சிரித்தாள்".

"அப்பொழுது மாமா மாமா என்ற குரல் கேட்க, கருப்பாயி உள்ள வா".

"அங்கு அள்ளி முடித்த கூந்தலோடு, அழகான வாயில் புடவையை கட்டிக்கொண்டு,இடுப்பில் சாப்பாட்டு கூடையை வைத்துக் கொண்டு, நடுத்தர வயதை கொண்டு உள்ளே வந்த மனைவியை பார்த்த சங்கர்,புள்ளை, இவங்க தான் நம்ப ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்க டீச்சர், அவங்க அவங்களோட ஆச்சி என்றார்".

"சங்கர் சொல்லியதை கேட்ட ஆர்கலி,நான் உங்களை உரிமையா அண்ணா என்று சொல்லுறேன். ஆனால், நீங்களோ சும்மா பேச்சுக்கு தான் தங்கச்சியென்று சொல்லுறீங்க போல?".

" அய்யைய்யோஓஓ எம்மா, கண்ணு...மன்னிச்சிடு மன்னிச்சிடு தங்கச்சிமா என்றபடியே மனைவியிடம் திரும்பிய சங்கர், கருப்பாயி, இது தான் உன்னுடைய நாத்தனார், என்னோட ஒரே தங்கச்சிமா என்றார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top