அலுவலக வேலையிலும் யூ டியூப் சேனல் வேலையிலும் பிசியாக இருந்ததால் குழந்தைப்பேறுக்கான மருத்துவச் சிகிச்சைப் பற்றி அவன் சிந்திக்காமல் இருக்க, வள்ளியோ இதை நினைத்துக் கவலையில் இருந்த பொழுது ஒரு நாள் சந்தேகம் கொண்டு அவளே பரிசோதனை மேற்கொண்டாள்.
சனிக்கிழமை அன்று காலை கழிவறைச் சென்று விட்டு வந்தவள்...
ஒரு புறம் காதல் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் ஏற்பாட்டுத் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர்.
கார்த்திகேயன் கலராக மார்டனாக ஸ்டைலிஷ் பையனாகத் தெரிய, அருகிலே பின்னிய நீண்ட கூந்தலுடன் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்கு...
நாள்கள் பறந்தோட இவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதமாகி இருந்த நிலையில் ஒரு நாள், அலுவலகத்தில் வேலைச் செய்து கொண்டிருக்கும் போதே வள்ளிக்கு அழைத்த கார்த்திகேயன், "உனக்கு இப்ப ஒருத்தங்க கால் செய்வாங்க. அவங்க கேட்குறதுக்குலாம் பதில் சொல்லு போதும்" என்று அவளை மறுமொழி பேச விடாமல் அழைப்பை வைத்திருந்தான்...
அவளின் தோளோடு அணைத்தவாறு சாய்ந்து அமர்ந்தவன், "இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயம் வள்ளி. எல்லாருக்கும் நடக்கிற விஷயம் தான். இதுக்கு நீ இவ்ளோ பேனிக் ஆக வேண்டிய அவசியமே இல்ல" என்றவன்,
"Even aravind Swamy faced this problem u know (அரவிந்த் சாமிக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கு தெரியுமா)"...
மறுநாள் சென்னை வந்து சேர்ந்ததும் இருவருக்குமே அலுவலக வேலை நிரம்பவே இருக்க, மதிய உணவு இடைவேளையின் போதும் சந்தித்துக் கொள்ளவில்லை இருவரும்.
மாலை தான் கிளம்பத் தாமதமாகும் என்றவனாய் வள்ளியை வாடகை மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்ன போதும் அவனுடனே செல்வதாக உரைத்து காத்திருந்தாள் வள்ளி.
இரவு...
"எனக்கு யார் சொல்றதை நம்புறதுனே தெரியலை கார்த்தி. உதயாவையும் அப்பாவையும் கெட்டவங்களா நினைக்க முடியலை. ஆனா அதுக்காக இங்கே இருக்கவும் பிடிக்கலை. எனக்கு இந்த ஊரும் வேண்டாம். யாரும் வேண்டாம். நீங்க மட்டும் போதும். நாம இங்க இருந்து போய்டலாம் கார்த்தி. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. நம்மளை யாராவது...