• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
619
வழக்கமாய் தூங்கி எழுந்த வேலு பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர அங்கே செல்வியும் தனது அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் இவளாஆஇஇ...எப்போ வந்தாள் என்ற யோசனையோடு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துந்து கொண்டு அம்மா டீ என்றான்.

மாமா எப்படி இருக்கீங்க என்று கணவனிடம் கேட்க தனது அம்மாவிற்கு முன்பு எதையும் காட்டிக் கொள்ளாமல் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க செல்வி என்றான்.

நான் நல்லா இருக்கேன் எக்ஸாம் முடிஞ்சிடுச்சு ரெண்டு மாசம் லீவு அதான் நானும் அண்ணனும் அம்மா கூட கிளம்பி வந்துட்டோம்.

என்ன செமஸ்டர் லீவா அப்ப ரெண்டு மாசம் இங்க இருந்து நம்பலை சித்ரவதை படுத்த போறாளே என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க பார்வதியும் டீயை எடுத்துட்டு வந்து மகனுக்கு கொடுத்தார்.

அதை வாங்கி குடித்தவன் சரி நான் வயலுக்கு போயிட்டு வரேன் என்று அங்கிருந்து தப்பித்து ஓடினான்.

போகும் கணவனை பார்த்தவள் உன்னை ஒரு வழி பண்ணாமல் திரும்பிப் போக மாட்டேன் யா. பொண்டாட்டி ஒருத்தி இருக்கிறதே உனக்கு ஞாபகம் இல்லை தானே...நீ வாடா உனக்கு வச்சிக்கிறேன் கச்சேரி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

வண்டியில் ஏறி ஏரிகரைக்கு வந்தவன் அங்கிருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து கொண்டு ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டிருந்தான்.கடவுளே இத்தனை மாசம் கழிச்சு எதுக்கு வந்தாள்? பக்கத்துல பொண்டாட்டிய வச்சிக்கிட்டு அவளை தொடாமல் இருக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று அனுபவிக்கிறவனுக்கு தான் தெரியும்.

ரோஷமா வேற சொல்லிட்டோம் இவ்வளவு நாள் கழிச்சு பார்த்தது என்னமோ பண்ணுதே.ஆள் வேற கொஞ்சம் இளைச்சு போயிருக்கிறாள்.
சரியா சாப்பிடறது இல்லையா?
நல்லா படிக்கிறா என்று சொன்னான் ஆனா ஒழுங்கா சாப்பிடலன்னு சொல்லலையே என்னவா இருக்கும்?

வேறு ஏதாவது பிரச்சனையா இருக்குமா அப்படி இருந்தா அத்தையும் நிலவனும் சொல்லி இருப்பார்களே நம்மகிட்ட..ஒருவேளை நம்மள நினைத்து ஏங்கி போறாளோ என்று தானாக பேசிக் கொண்டிருக்கும்போது அவன் முதுகில் வந்து ஏதோ ஒன்று விழ ஐயோ என்ற கத்திட்டு திரும்பி பார்க்க அங்கே வளவன் நின்று கொண்டிருந்தான்.

ஏண்டா இப்படி என்று முதுகை தேய்த்துக்கொண்டு வேலு கேட்க மாமா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் உனக்கும் செல்விக்கும் என்ன பிரச்சனை என்றான்.

திடீரென்று தனது மச்சான் இப்படி கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவனும் அதிர்ந்து போனான்.யோவ் உன்னை தான் கேட்கிறேன்..இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல இருந்தா என்ன அர்த்தம் சொல்லு?

உனக்கும் தங்கச்சிக்கும் என்ன பிரச்சனை என்று மீண்டும் கேட்க அடேய் யாருடா உனக்கு சொன்னது?அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்றான்.

நீ சொல்றது நான் நம்பனுமா ஆறு மாசமா அந்த ஊர்ல இருக்கு ஒரு வாட்டி கூட நீ போய் பாக்கல எதனால?
விரும்பி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ரெண்டு பேரும் அதுக்குள்ள என்ன வந்துச்சு என்றான்.

அட அறிவு கெட்ட முட்டாப் பயலே உனக்கு எவன்டா சொன்னது எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைன்னு படிக்கிற பிள்ளை மனசுல தப்பான எண்ணத்தை விதைச்சாக்க என்ன ஆகும் அந்த அறிவு எல்லாம் உனக்கு கிடையாதா நாயே...

படிச்சிட்டு வரட்டும் டா சின்ன வயசு தான் ஆகுது அவ கூட போய் குடும்பம் பண்ண சொல்றியா?நான் பார்த்து பொறந்து வளர்ந்தவ 18 வயசு தான் ஆகுது அது கிட்ட போயிட்டு எப்படி பொண்டாட்டியா உரிமை கொண்டாட முடியும் என்று வேலு திட்ட நீ சொல்றது வாஸ்தவம் தான் மாமா..

ஆனா இது மட்டும் உண்மையா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் செல்வியை பாரு எப்படி இளைத்து போய் இருக்கு அது உனக்கு தெரியுதா இல்லையா என்க...

யாரு உன் தங்கச்சிகாரி இளைத்து போய் இருக்கா நல்ல தின்னுட்டு பூதம் போல வந்திருக்கிறாள் இவன் பேசுறான் பாரு என்றான்.

நீ உடனே பேச்ச மாதா உண்மையிலேயே அதுதானா காரணம் என்க ஆமாண்டா வேற ஒன்னும் இல்ல அப்படி பிரச்சினை இருந்தால் என் பொண்டாட்டியும் நானும் சரி பண்ணிப்போம்.உன் வேலை மயிரை பாருடா என்றான்.

யோவ் அத்தமவன் எல்லாம் அடுத்த விஷயம் தான்.முதல்ல என் தங்கச்சி தான் முக்கியம் ஏதாச்சு கண்ண கசிக்கிட்டு வந்துச்சுன்னு வச்சுக்க கழுத்து எலும்பெல்லாம் திருகி போட்டுருவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தண்ணீருக்குள் குதித்தான்.

சண்டால பாவி கைகால்களை உடைக்கிறதிலேயே நமக்கு மச்சான வந்து சேர்ந்திருக்கானுங்க பாரு என்று திட்டிகிட்டு வேலும் தண்ணீரில் குதிக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அக்கரையை நோக்கி நீந்தி சென்று திரும்பி வந்தவர்கள் பின்னர் பேசிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினார்

ஜான் வீடு:

இங்க பாருடி முடிவா நீ என்னதான் சொல்றே என்று ஜான் கேட்க ஏன்யா உனக்கு மண்டையில் ஏதாவது கூறு இருக்கா இல்லையா?இப்பதான் அத்தை கொஞ்சம் தேரி வராங்க இந்த நேரத்துல போயி நம்ம ரெண்டு பேரும் ஊர் சுத்த போனா என்ன அர்த்தம் என்கவும் அடியே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதுடி இதுவரைக்கும் நாம ஹனிமூன் போகலை.இதெல்லாம் எவ்வளவு பெரிய தெய்வ குத்தம் தெரியுமா என்க,அதைக் கேட்டு கணவனைப் பார்த்து முறைத்தவள் அதான் தினமும் கொண்டாடுறியே அது போதாதா என்று பல்லை கடித்தாள்..

தினமும் வீட்டில் இருப்பதற்கும் வெளியில போறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி நான் கல்யாணம் பண்ணிருக்கேன் அப்போ சட்டப்படி பாத்தா ரெண்டு வாட்டி நாம ஹனி மூன் போகணும் டி.

நீ என்னை கல்யாணம் பண்ணியா இல்லை எங்க அப்பா அம்மாவ கல்யாணம் பண்ணிட்டியா என்று ஜான் கேட்க,இந்த கழுத்துல எந்த முட்டாப் பயல் மூணு முடிச்சு போட்டான் உனக்கு தெரியாதா என்று அல்லி கேட்கவும், என்னாடி பொசுக்குன்னு புருஷனை முட்டா பயனு சொல்ற என்றான்.

நீ கேட்கிற கேனத்தனமான கேள்வியே உன்ன முட்டாப் பயல்னு சொல்லாம உலகறிந்த அறிவாளினா சொல்லுவாங்க என்றாள்.

அதுலாம் எனக்கு தெரியாது டி.
உனக்கு செமஸ்டர் ஹாலிடேஸ் விட்டுட்டாங்க இன்னைக்கு நைட்டு நம்ம ரெண்டு பேரும் கூர்க்கு போறோம் நான் டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன் ஒழுங்கு மரியாதையா போய் உன் அத்தை மாமா கிட்ட சொல்லிட்டு வந்து பேக்கிங் பண்ற நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு ரெண்டு பேரும் ரெடியாகுறோம்.

உன் மாமன் மூணாவது புள்ளைக்கு அட்டையை போட்டு பொண்டாட்டி கூட சிங்கப்பூருக்கு ஹனிமூன் போயிருக்கிறான் டி.நான் முதல் புள்ளைக்கு இன்னும் வழி இல்லாம இருக்கிறேன் என்று புலம்பி கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல அல்லிக்கு கணவன் புலம்புவதை கேட்டு சிரிப்பு வந்தது.

படியிலிருந்து இறங்கி வரும் மகனை பார்த்த லாரன்ஸ் டேய் நில்லுடா என்க ஜானோ என்னவாம் என்ற பார்வையோடு தனது தந்தையை பார்க்க இவ்வளவு வேகமா எங்க போற என்றார்...

ம் எருமை மேய்க்க போறேன் என்க... என்னடா சொன்ன என்று அவர் எந்திரிக்க எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்க்கு போறேன்னு வேகமா சொன்னேன் காதும் கேட்டு தொலையில என்று முணுமுணுத்தான்.

ஏண்டா கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது இதுவரைக்கும் அல்லியை எங்கேயாவது வெளியில கூப்பிட்டு போய் இருக்கியா? காலேஜ் விட்டா வீடு.வீடு விட்டா காலேஜ்.
இப்பதான் செமஸ்டர் லீவ் விட்டாச்சே, எங்கேயாச்சும் கூட்டிட்டு போடா என்க, நானா கூப்பிட்டு போக மாட்டேங்குறேன்? அவ வர மாட்டேங்குறாளே என்று மனதிற்குள் சொன்னவன் தெரிஞ்சு தான் பேசுறியா தெரியாம பேசுறியா?

இப்பதான் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இருக்கு அதுக்குள்ள எங்களை ஊர் சுத்த போக சொல்ற உனக்கு அக்கறை இல்லனாலும் எங்களுக்கு இருக்கே என்றான். ..

அடேய் இந்த சோப்பு போடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதடா என் பொண்டாட்டியை எனக்கு பாக்க தெரியும் உன் பொண்டாட்டி கூப்பிட்டு நீ முதல்ல வெளில போடா என்கவும் நான் அவளை கூப்பிட்டு போயிட்டா பள்ளிக்கூடத்தை யாரு உங்க அப்பா வந்து பார்த்துப்பாரா என்று முறைத்தான்.

எங்கப்பா பார்க்க மாட்டாரு உன் அப்பன் நான் பாத்துக்குறேன் முதல்ல என் மருமகளை கூப்பிட்டு போய் நாலு இடத்தை சுத்தி காட்டிட்டு வாடா அந்த புள்ளைக்கு ஆசை இருக்கும் இல்லையா?.

பாக்கலாம் பாக்கலாம் என்று சொல்லியவன் இன்னைக்கு 12வது எக்ஸாம் ஆரம்பிக்குது நீ வேற காலையிலேயே உயிரை வாங்காதே என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றவன் ஊர்ல இருக்கிறவன் பொண்டாட்டியெல்லாம் அது வேணும் இது வேணும்னு அடம் புடிப்பாள்.

என் பொண்டாட்டி அத்தை மாமாவை விட்டுட்டு எட்ட நகர மாட்டேங்குறாள்.எனக்குனு வந்து வாச்சிருக்கிறாளே என்று திட்டிக் கொண்டு காரில் ஏறி தனது ஸ்கூலுக்கு சென்றான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
619
வேலு வீடு:

ஏரியில் குளித்தது ஈரமாக இருப்பதால் முதலில் துணியை மாத்தணும் என்று சொல்லிக்கொண்டு கதவை திறந்தவன் அங்கே தனது மனைவி செல்வி இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு பட்டென்று தனது முந்தானை எடுத்து மேலே போட்டுக் கொண்டு திரும்பியவளோ கணவனை பார்த்து மௌனமாக சிரித்தவள் பின்னர் சாவகாசமாக புது பிளவுசை போட்டு பார்த்துவிட்டு அவனைத் தாண்டி செல்ல மனைவியின் தலையில் வைத்திருக்கும் மல்லிகை பூ வாசத்தில் நினைவுக்கு வந்தவன் யாத்தே ஆரம்பிச்சிட்டாளே என்று சொல்லிக்கொண்டு நேராக உள்ளே இருக்கும் பாத்ரூமுக்கு போய் ஷவரை திறந்து அதன் கீழே நின்றான்.

சிரித்துக் கொண்டே கிச்சனிற்கு வந்த செல்வி கணவனுக்கு பிடித்தமான வெங்காய தோசைக்கு வெங்காயத்தை கட் பண்ணி ரெடியாக வைக்க வேலுவோ மீண்டும் ஒரு முறை குளித்து முடித்துவிட்டு டிரஸ்சை மாற்றிக் கொண்டு சாப்பிட வந்தவனோ அம்மா என்றான்.

அத்தை அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்கள் என்றாள்.வீட்டில் வேற அப்பாவும் இல்லையே கடவுளே என்று முணவிக் கொண்டு அங்கிருந்த டைனிங் டேபிள் போய் உட்கார்ந்தான்.

எட்டிப் பார்த்தவள் ஹாட் பாக்ஸையும் தட்டையும் எடுத்து வந்து வைத்தவள் இரண்டு இட்லியை வைத்து விட்டு உள்ளே போய்விட்டாள்.சட்னியும் சாம்பாரையும் இவள் அண்ணன் வந்து பரிமாறுவானா என்று முணுமுணுக்கும்போது நான் இருக்கும்போது எதுக்கு எங்க அண்ணனுங்க பரிமாற வரணும்?.

நம்ம பேசுறதெல்லாம் ஒட்டு கேட்டு கொண்டு தான் இருக்கிறாள் போல என மனதிற்குள் பேசிக் கொண்டான்.

சாம்பாரையும் வெங்காய சட்னியும் தட்டில் வைத்து விட்டு உள்ளே போனவள் ஆனியன் தோசை போட்டு எடுத்து வந்து கொடுக்க சாப்பிட்டு முடித்தவன் எந்திரிச்சு வெளியே போக ஒரு நிமிஷம் நில்லுங்க...உங்களையும் என்னையும் நம்ம கோயிலுக்கு போயிட்டு வர சொல்லி இருக்கிறார்கள் என்றாள்.

இன்னைக்கு என்ன விசேஷம் என்று வேலு யோசனையாக விசேஷம் எல்லாம் ஒன்னும் இல்ல...

எக்ஸாம் எழுதிருக்கனே நல்லபடியாக சாமிகிட்ட போய் வேண்டிட்டு வர சொல்லிட்டு தான் அத்தை போயிருக்காங்க என்க...அதுக்கு நீ போய் வேண்டுடி நான் எதுக்குடி வரணும் என்றான்.

சரி நீங்க போங்க சிவா மாமா வர சொல்லி நான் அவங்க கூட போய்க்கிறேன் என்கவும் அதில் கோபப்பட்டு திரும்பி வேகமாக மனைவியிடம் வந்து அவள் கழுத்தை பிடிக்க போக பின்னர் தான் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது...

எவ்வளவு திமிரு என் தம்பி கூட போவேன்னு சொல்லுவ...போய் ரெடியாகிட்டு வா டி கூப்பிட்டு போறேன் என்றான்.

அப்படி வாடா வழிக்கு என்று மனதிற்கு சொல்லியவள் துரைக்கு தான் வேலை இருக்கே நீங்க கிளம்பி போங்க நான் மாமாவ வர சொல்லுகிறேன் என்கவும் கையை ஓங்கி அறைய போனவன் அடிச்சி செவுலை பேத்துருவேன்.
ஒழுங்கு மரியாதையா கிளம்பி வாடி என்று சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்.

ஒரு மாதத்திற்கு பிறகு சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மனைவி மகன் மருமகள் பேரப்பிள்ளைகளை நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களுக்கெல்லாம் வாங்கிட்டு வந்த பொருள்களை சீதாவும் தாமரையும் எடுத்துக் கொடுக்க அப்பொழுது கதிர் தனது அம்மாவுக்கு கிடைத்த ஷீல்டைப் பற்றி சொல்ல கேட்டவர்களுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

என் பொண்டாட்டிக்கு இவ்வளவு திறமை இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனா அவ தான் என்கிட்ட காட்டுறது இல்லையே என்று பெருமாள் சொல்ல அது அதுக்கு ஒரு நேரம் வரணும் என்ற வள்ளி அப்பாயி மொத மொதல்ல எனக்கு ஒரு புடவை நஞ்சி குடு ஆத்தா என்று மருமகளை கேட்க கண்டிப்பாகத்தை என்றார்.

ராதாவும் தனது அக்காவின் கையை பிடித்துக் கொண்டு ஏன் கா நான் படிக்கணும் என்பதற்காக தான் உன் படிப்பை விட்ட,உனக்கு பெரிய ஆர்டிஸ்ட்டா வரணும்னு தானே ஆசை என்று கண் கலங்கினார்.

அடியே ராதா யாருடி சொன்னா உனக்காக நான் படிப்பை விட்டுட்டேன்னு.அப்படிலாம் ஒன்னும் இல்ல எனக்கு படிப்பு வரல நான் போகவில்லை என்று சீதா சமாளிக்க..

எனக்கு தெரியும் அக்கா என்று உள்ளே போனவர் ஒரு பழுப்பு நிற நோட்டை எடுத்துட்டு வந்து சீதாவிடம் நீட்ட அதை பார்த்த உடனே சீதாவிற்கு அழுகை வந்தது.தங்கையின் கையில் இருந்த நோட்டை வாங்க கையை நீட்டிய சீதாவிற்கு கைகள் நடுங்கியது...

திறமை இல்லாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை அதில் சீதா மட்டும் விதிவிலக்கா? சிறு வயதிலிருந்து சீதாவிற்கு ஓவியம் வரைவது என்றால் அவ்வளவு பிடிக்கும்.
எதை பார்க்கிறாரோ அதை அப்படியே தத்ரூபமாக வரைவார்.பள்ளியில் நடக்கும் ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டு எத்தனையோ பரிசுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவராச்சே...
மாவட்ட அளவில் நடக்க போகும் ஓவிய போட்டிக்கு பெயரை கொடுத்துவிட்டு அதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் சீதாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

அப்பொழுது ராதாவோ ஐந்தாவது படிக்கும் சிறு பெண்ணாக இருந்தார். எனக்கு ஒன்னும் இல்ல சாதாரண நோவு தான் நீ போய் போட்டியில் கலந்து பரிசு வாங்கிட்டு வா என்று சீதாவின் அம்மா எவ்வளவோ சொல்ல மனதிற்கு ஏதோ தவறாக படவும் சீதா அந்த போட்டியில் கலந்துக்க போகவில்லை..மேலும் தாயின் உடல்நிலை வர வர மோசமாவது பார்த்து படிப்பை விட்டு வீட்டை பார்த்துக்க ஆரம்பித்தார்.

இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையில் இருந்தவரின் அம்மாவோ ஒரு நாள் படுக்கையிலே உயர் பிரிந்து விட அதன் பிறகு தனது தந்தைக்கும் தங்கைக்கும் சீதாவோ அம்மாவாக மாறினார்.

எப்பொழுது குடும்ப பொறுப்பை ஏத்துக்க தொடங்கினாரோ அப்பொழுதே தனது தனிப்பட்ட விருப்பங்கள் எல்லாம் கை கழுவிய சீதாவும் தங்கையை வளர்த்து ஆளாக்கி பார்ப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார் அதன் பிறகு அவர் எந்த சூழ்நிலையிலும் ஓவியம் வரவில்லை அவர் அழகாக கோலம் போடுவதை பார்த்து தான் மனைவிக்கு இந்த திறமை இருக்கு என்பதை பெருமாலும் புரிந்து கொண்டார்.

ஏத்தா ராதா அப்படி என்ன அந்த புத்தகத்தில் இருக்க என்று அங்கு சூழலை இலகுவாக்க வள்ளி அப்பாயி கேட்கவும் தனது கண்ணை துடைத்துக் கொண்ட சீதாவோ ஒன்னும் இல்லைங்கத்தை.

சின்ன வயசுல நான் இந்த நோட்ல தான் கிறுக்குவேன் அதுதான் ராதா எடுத்து வைத்திருக்கிறா என்று சொல்லிக்கொண்டு தங்கையின் கையில் இருந்து நோட்டை வாங்கி முதல் பக்கத்தை திருப்ப அதில் சீதாவின் அம்மா அப்பா அவர்களோடு சிறு பிள்ளைகளான ராதா சீதா அவர்களின் சிறு வயது உருவங்கள் வரைந்திருந்தது.

அந்தப் வரைபடத்தில் தனது அப்பா அம்மாவை பார்த்த சீதாவிற்கு கண்ணிலிருந்து கண்ணீர் பொல பொல என்று வடிந்து ஓடியது இதையெல்லாம் பார்வையாளராக வீட்டினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மடியில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எழுந்து வந்த தாமரை அத்தை காமிங்க பார்க்கலாம் என்று அந்த நோட்டை வாங்கியவள் முதல் பக்கத்தில் இருந்த ஓவியத்தை பார்த்து அசந்து போய்விட்டாள்.

அதிர்ச்சியாக தனது மாமியாரை பார்த்துக்கொண்டு அடுத்தடுத்த பக்கத்தை திருப்பியவன் எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் நீங்க என்றவள் வீட்டினரிடமும் அந்த நோட்டைக் காட்ட மற்றவர்களும் அதை பார்த்து வியந்து போனார்கள்.

வேலு-செல்வி:

கோயிலுக்கு போக சொன்னவ இன்னும் என்ன பண்றா என்று திட்டுக் கொண்டிருந்தவன் அங்கே கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி மனைவியை பார்த்தவன் ரைட்டு என் பொண்டாட்டி போருக்கு தயாராகிட்டா...

வேலு ஸ்டெடி ஸ்டடி என்று சொன்னாலும் மனைவியின் அழகை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.கணவனை பார்த்துக் கொண்டே எதிரே வந்து நின்றவள் இமைக்காமல் இருப்பவனின் முன்பு கையை அசைக்க அதில் சுதாரித்தவன் ஏன்டி கோவிலுக்கு தான் போகணும் என்னமோ கல்யாணத்துக்கு போற போல இப்படி சிங்காரிச்சிட்டு வரியே என்று கோபமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள, பின்ன மஞ்சள் கலர் சிகப்பு கலர் புடவை கட்டிட்டு வருவாங்க ஏன் இதுக்கு என்ன குறைச்சலாம்? உங்களை யாரு என்ன பாக்க சொல்ற என்க..நான் பாக்காம வேற எவண்டி பார்க்கணும் என்று பல்லை கடித்தான்.

அப்பாயி ஒரு பழமொழி சொல்லும் என்க...என்னவா என்று மனைவியிடம் கேட்க ஆகாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தமாம்.என்னை உங்களுக்கு புடிக்கல அதனால நான் எது பண்ணாலும் உங்களுக்கு அது தப்பா தான் தெரியுது.

இதுக்கு தான் சொன்னேன் நான் சிவா மாமா கூட போகிறேன் என்று உங்க கூட போக நான் ஒத்தக்கால நிக்கல எங்கவும் அதில் இன்னும் கடுப்பானவன் என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன் என் தம்பி கூட வண்டில போறேன்னு சொல்லிட்டு இருக்க என்று மனைவியின் கையை பிடித்து பின்பக்கமா வளைத்தவன் அங்கிருந்து சுவற்றில் போய் வேகமாக சாய்த்து விட்டு அவளோடு வேகமாய் போய் இவனும் சாய்ந்தான் அதில் வலியும் செல்விக்கு வர ஆனால் அது சுகமாய் இருந்தது.

சொல்லு இனிமே போவியா உன் அண்ணன் தம்பி கூடவே போனா கூட எனக்கு பிடிக்காது.இதுல என் தம்பி கூட வண்டில போறேன்னு நினைக்கிற இன்னொரு வாட்டி சொல்லுவியாடி என்று புடவையின் இடைவெளியில் தெரியும் மனைவியின் இடுப்பை பிடித்து நன்கு திருக வலித்தாலும் அமைதியாக இருந்தவள் சிறிது நிமிடங்களுக்கு பிறகு, நம்ம கோயிலுக்கு போகணும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க என்க ஐயோ ஐயனாரே என் விரதத்தை கலைச்சிட்டாளே என்று சொல்லிக்கொண்டு தனது தலையில் தட்டியவன் சீக்கிரம் வந்து தொலைடி என்று அங்கிருந்து வெளியே சென்றான்.

மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாற்ற வேண்டும் கர்த்தரு என்று சிரித்துக் கொண்டே பாடிய செல்வி அந்த விசுவாமித்திரரே மேனகைக்கு மயங்க..நம்ப வேலு இந்த செல்வி கிட்ட மயங்க மாட்டானா என்று சொல்லிக் கொண்டே கதவை பூட்டிட்டு போக,வேலு சிரித்துக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்திருந்தான்.

பின்னர் செல்வி போய் ஏறி உக்காந்ததும் என்னடி போகலாமா என்க ம்ம் போகலாம் என்றாள். நடுவுல பள்ளமெல்லாம் வரும் என்க...அதான் கம்பி இருக்கே அத எனக்கு பிடிச்சுக்க தெரியாதா என்றாள்.

புருஷன்காரன் இருக்கேன் என்னை புடிச்சு உட்காராம நொம்பியை புடிக்கிறாளாம் என்று முணுமுணுப்பது அவளுக்கு நன்கு கேட்டது.உன்னை காய விட்டு தாண்டா வழிக்கு கொண்டு வருவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மனைவியோடு வண்டியில் போவதை மனதிற்குள்ளே ரசித்துக்கொண்டு விசில் அடித்தபடி அந்த ஏரிக்கரை ரோட்டில் பைக்கை ஓட்ட செல்விக்கும் கணவனோடு பைக்கில் செல்வது மனதுக்கு இதமாக இருந்தது இருவரும் அங்கிருக்கும் அய்யனார் கோவிலுக்கு வந்தனர்.

கையில் எடுத்துட்டு வந்த சூடத்தை ஏற்றி இருவரும் கண்ணை மூடினர். என்னைக்கும் போல என் குடும்பம் நல்லா இருக்கணும் என்று செல்வி வேண்ட... என் பொண்டாட்டி நல்ல மார்க் வாங்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் என்று அவன் பங்குக்கு அவன் வேண்டிக் கொண்டான்.

பின்னர் இரும்பு கேட் இடைவெளியில் இருக்கும் வழியாக கையை விட்டு அங்கிருந்த விபூதி குங்குமத்தை எடுத்து மனைவிக்கு பூசி விட்டு தனது நெற்றியிலும் பூசிக்கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அந்த மரத்து நிழலில் அமைதியாக உட்கார்ந்தனர். பின்னர் வண்டியில் ஏறி இப்ப எங்க போகணும் மேடம் என்கவும் எங்க வீட்டுக்கு போகணும் என்றாள்..

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top