• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
22

எதிரில் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்து, “ஏன் சித்தார்த்.. கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி அபத்தமா பேசுறீங்க?” என்று கேட்டான்.

“நீங்கதான் லாயர் சார் அபத்தமா பேசுறீங்க. இவள் என் ஒய்ஃப். அவளுக்கு எப்படி நீங்க தாலி கட்ட முடியும்?”

“என்ன சித்தார்த் உளர்றீங்க? இடம் தெரியாம தப்பு பண்றீங்க” என்றான் எச்சரிக்கும் தொணியில்.

“நான் தேடி வந்த என் மனைவி இவள்தான் லாயர் சார்” என்றான் சித்தார்த்.

சட்டென்று எழப்போன நட்சத்திராவைக் கைபிடித்து உட்கார வைத்தவன், “இவரை உனக்குத் தெரியுமா?” என கேட்க, ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“அப்ப சித்தார்த் சொன்னது உண்மையா?” என்றதும் நடந்ததை இல்லையென்று மறுக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

“அண்ணா நான் சொல்றேன்” என்றபடி வந்த தங்கையைப் பேசவிடாமல் தடுத்து,

“சொல்லு நதி. எப்படி இது நடந்தது?”

“இல்ல வேண்டாம்” என்று அவள் மிரள,

“ரிலேடிவ்ஸ் எல்லாரும் மண்டபத்துலதான் இருக்காங்க. இங்க இருக்கிற எல்லாரும் நம்மளோட நெருங்கின உறவுகள் மட்டும்தான். தயங்காம நடந்ததைச் சொல்லு நதி. இல்லன்னா சித்தார்த் சொல்றதை நம்ப ஆரம்பிச்சிருவாங்க.”

“லாயர் சார் அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. எங்க வீட்டுப் பொண்ணை எங்களோட அனுப்புங்க” என்றான் சித்தார்த்.

“என்ன நடந்ததோ அதை நான் சொல்றேன் தம்பி. அதுக்கு முன்னாடி முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள தாலியைக் கட்டுங்க” என்று இடையிட்டார் திலகவதி.

“என் மருமகளுக்கு எவன்டா தாலி கட்டுவேன்றது?” திடீரென சத்தமாகக் கேட்ட கணீர்க் குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்றிருந்தார் செல்லம்மா. அவருடன் ரெங்கசாமி.

“என்ன லாயர் தம்பி? எங்க கேஸை நீங்க எடுத்து நடத்தினா எங்க மருமகள் உங்களுக்குச் சொந்தமாகிருவாளா?” நக்கலாகக் கேட்டார்.

“ஓ... அப்படிச் சொல்றீங்களா?” என்றவன் நட்சத்திராவின் புறம் திரும்பி “நீ சொல்லு நதி? கல்யாணம் எப்ப நடந்தது?”

“என்னோட பதினாலாவது வயசுல.”

“பதினாலு வயசுலன்னா? லவ்வா?” என்றான்.

“ஐயையோ இல்லைங்க. ஏன் இப்படிப் பேசுறீங்க? அந்த வயசுல எனக்கு லவ்னா என்னன்னே தெரியாது. அப்ப இவனையுமே யார்னு தெரியாது.”

“ஓகே நம்புறேன். இப்ப இவன்மேல...”

“லாயர் சார் இது கோர்ட் கிடையாது. உங்க வாதத்திறமையை என் பொண்ணுகிட்ட காட்டாதீங்க. அவள் ஏற்கனவே இவனால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா” என்று நந்தகுமார் கோவமாக இடையிட்டார்.

“அட இருங்க மாமா. நீ சொல்லு நதி. இவன் மேல எதுவும் இன்ட்ரெஸ்ட்?”

‘உனக்கு என்னைத் தெரியாதா? நான் அப்படிப்பட்டவளா?’ என்பதாய் பார்வையாலேயே எதிர்க் கேள்வி கேட்டுக் கண்கலங்கப் பார்த்தாள்.

‘உன்னை நானறிவேன்’ என்பதாய் கண்மூடி ஆறுதலளித்தவன், தங்கையிடம் கண்காண்பித்து, தன் அப்பா, அம்மா, பாட்டியையும், நட்சத்திராவின் அப்பா, அம்மா, சித்திக்கும் சைகை காண்பித்தான். அனைவரும் மணமக்கள் அருகில் செல்ல, அவர்கள் அருகில் வந்ததும் “நதி என்னை முழுசா நம்புறல்ல?” என கேட்டான்.

அவளோ ஏனென்று புரியாவிட்டாலும் ‘ஆம்’ என்று தலையசைக்க, “கொஞ்சம் சிரி” என்றான்.

‘எப்படி?’ என்பதாய் அவள் பார்வையிருக்க, “இப்படித்தான்” என்று புன்னகையுடன் தாலியைக் கட்ட, மின்னல் கொடி நாத்தனார் முடிச்சிட்டு, வாழ்த்துச் சொல்லி அண்ணியாகிய தோழியை அணைத்துக் கொள்ள, சந்தோஷமும் ஒருவித அமைதியும் மட்டுமே நட்சத்திராவிடம்.

தாலி கட்டுகையில் “டேய்! வேண்டாம்” என்ற வார்த்தைகள் வலுவிழந்து போக, சித்தார்த்தோ அவன் பெற்றோரோ கத்திய எதுவும் அவர்களை அசைக்கவில்லை.

“நமக்கு எப்பவுமே நான் டைமிங்தான் நதிமா. என்ன அப்படிப் பார்க்கிற? சந்தேகப்பட்டேன்னு நினைச்சியா?” என்றதும் அவள் தலையாட்ட, “நீ வேணும்னா என்னைச் சந்தேகப்படலாம். நான் என்னைக்கும் அதைச் செய்யமாட்டேன். இப்ப உன்கிட்ட இதைச் சொன்னா அபத்தமா தெரியும். ஆனால், நிஜம் இதுதான். ஐ லவ் யூ நதி” என்றானவன்.

‘ஐ லவ் யூவா!’ பே என மலங்க விழிக்க,

“நான்தான் நீ என்னைச் சந்தேகப்படுவ சொன்னேன்ல. பாரு என்னை நம்பல” என சடைப்பாக சொல்லி, “இப்ப நீ என் ஒய்ஃப். கல்யாணத்துக்குப் பின்னான காதலுக்கு பிள்ளையார் சுழி போடணும்ல. அதான் ஆரம்பத்துலயே ஹெவியா போட்டுட்டேன்” என்றான் கண்ணடித்து.

‘அரை நாளில் இவனின் காதலியை மறந்து இன்னொருத்தியான தன்னை ஏற்பது சாத்தியமா? ஆண் என்பதால் நம்மைப்போல் உணர்வுகள் இருக்காதோ!’

அவளின் குழம்பிய பார்வையில், “ஏய் அண்ணி பார்த்தது போதும். சாமி கும்பிட்டுட்டு மண்டபத்துல போய் உட்கார்ந்து நிதானமா பார்க்கலாம். எதிர்ல பார் அக்னி குண்டத்துக்கு ஈக்வலா ஆத்திரத்தில் சிலர் எரிஞ்சிட்டு இருக்கிறதை” என்று எரிகிற நெருப்பிற்கு இன்னும் எண்ணையை ஊற்றினாள்.

“தப்பு பண்ணிட்டீங்க அர்ஸ். அவள் என் ஒய்ஃப்னு சொன்னதை நம்பாம, கண்சிமிட்டுற நேரத்துல தாலியைக் கட்டிட்டா சரியாகிருமா? இந்தக் கல்யாணம் செல்லாது லாயர் சார்? என்று கத்தினான்.

நட்சத்திராவின் உடல் நடுங்க, “எதுக்கு இப்ப பயப்படுற நதிமா? அண்ணன் பார்த்துப்பான் நீ தைரியமாயிரு” என்றாள் மின்னல் பெண்.

“இந்தக் கல்யாணம் செல்லாதுன்னா. பதினாலு வயசுப் பொண்ணுக்கு தாலி கட்டினது செல்லுமோ? நான் படித்த எந்தச் சட்டமும் அப்படிச் சொல்லலையே சித்தார்த் சார். பெண்களுக்கான திருமண வயசு பதினெட்டில் இருந்து இருவத்தொண்ணுக்கு மாறி ரொம்ப காலமாகுது. பெண்களுக்கே இருவத்தொண்ணுன்னா ஆண்களுக்கான வயசை நீயே கணக்குப்போட்டுப் பார்.”

“அந்த வயசுல நடந்த கல்யாணத்தைச் சொல்லலை லாயர் சார். நான் இன்றைக்கு நடந்த எங்க கல்யாணத்தைப் பற்றிச் சொல்றேன்” என நக்கலாகச் சிரித்தான் சித்தார்த்.

“இல்லைங்க. இவன் பொய் சொல்றான்” என்று நட்சத்திரா அலற,

“பொய் சொல்றேனா? சைன் பண்ணும்போது நீ நிதானத்துலதான இருந்த. இப்ப என்ன அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காத மாதிரி பேசுற?”

“சைனா? நான் எதுலயும் சைன் பண்ணலை” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

ஏனோ அந்தக் கண்கள் சித்தார்த்திற்கு அந்நியமாகத் தெரிந்தன. ‘ரெஜிஸ்டர் ஆபீஸில் பார்த்த பெண்போல் தெரியவில்லையே’ என்று மனம் சொல்ல, ‘இல்ல மேக்கப் போட்டதால நமக்கு வித்தியாசமா தெரியுது’ என்று நினைத்தவன் தங்கள் திருமணத்தை நிரூபிக்கும் பொருட்டு, “ஜோஸ்” என்று சத்தமாக அழைத்தான்.

ஒருவன் வேகமாக வந்து கோப்பு ஒன்றைக் கொடுத்துச் சென்றான்.

அதை அரிச்சந்திரனிடம் நீட்டி, “இதைப்பார்” என்று கொடுத்த வேளையில், ஆங்காரத்துடன் வந்து அவன் சட்டையைப் பிடித்தாள் அவள்.

“ஏய்!” என கோபத்தில் அவள் முகம் பார்த்தவன் அதிர்ந்து அரண்டு நட்சத்திராவைப் பார்த்தான்.

“ஏன்டா இப்படிப் பண்ணின?” எனும்போதுதான் அவள் கட்டியிருந்த புடவையையும், தான் கட்டிய தாலியையும் அவளிடம் இருக்கக் கண்டவன் புரியாது விழித்தான்.

“என்ன சித்தார்த்? மாப்பிள்ளை இடத்துல உங்க பெயரும், மணமகள் இடத்துல வெண்மதி பெயரும் இருக்கு” என்றான் அரிச்சந்திரன்.

“நட்சத்திராவை வெண்மதின்னு நினைச்சிட்டீங்களா சித்தார்த்? அவள் வேணும்னா முறையா பேசி முடிச்சிருக்கலாமே. முறைப்பெண்தானே?” என்றதும் சட்டென்று ஒரு வேகம் எழ, அதை வாங்கிப் பார்த்தவன், தலையில் கைவைக்காத குறையாக தாயைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“அவன் கேட்டிருந்தா மட்டும் நான் இந்தப் பொறுக்கியை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேனா? ஏன்டா இப்படிப் பண்ணின? தூக்கி வந்த பொண்ணு யாருன்னு கூடத் தெரியலை நீயெல்லாம் என்ன...”

மேலே சொல்லவிடாமல் மகளின் கையைப் பிடித்துத் தடுத்த திலகவதி, “ஏன் சித்தார்த் இப்படிப் பண்ணின? சொத்தெல்லாம் இழந்து, அவரையும் இழந்தாலும் நாங்க மானத்தோட வாழ்றது உனக்குப் பிடிக்கலையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

“அ... அத்தை” என்று சித்தார்த் திணற,

“உங்க மானத்துக்கு என்ன குறை வந்தது திலகா? முறைதான?” என்றார் செல்லம்மா.

“முறையையும், முறை இல்லாமல் செய்தால் எல்லாமே தப்பா போயிரும் அண்ணி.”

“என் பையனைக் கல்யாணம் பண்ணிக்க உன் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்.” சற்று கர்வம் அவர் குரலில்.

“இந்த லூசைக் கல்யாணம் செய்ய கொடுத்து வேற வச்சிருக்கணுமா?” என்றதும் சித்தார்த் அவளைக் கடுப்பாய் பார்க்க, “கௌரவத்திற்காக என் அக்காவை வாழவிடாம ஓடஓட விரட்டினவனைக் கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கணுமா? அக்காவுக்கும், தங்கைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த காமாலைக்கண் உள்ளவனை கட்டிக்கக் கொடுத்து வச்சிருக்கணுமா? மத்தது எல்லாம் விடுங்க. இவன் ஏன் இப்படிப் பண்ணினான்னு கேளுங்க? எனக்கு இப்ப நியாயம் வேணும்” என்றாள் கோவமாக.

தாயின் முறைப்பையும், தந்தையின் ‘என்னடா இப்படிப் பண்ணிட்ட’ என்ற குற்றம்சாட்டும் பார்வையையும் கண்டுகொள்ளாது, “சாரி” என ஒற்றை வார்த்தையில் மன்னிப்பை வேண்டினான் சித்தார்த்.

தங்கையின் நிலைக்குத் தான்தான் காரணமோ என கண்கலங்க நின்றிருந் நட்சத்திராவின் கைபிடித்து கண்களால் சமாதானப்படுத்தினான் அரிச்சந்திரன்.

“என்னது சாரியா? அம்மா சாரியாம்” என நக்கலாகச் சொல்லி “ஒரு சாரியில இந்தக் கல்யாணம் ரத்தாகிருமா? இல்ல இவன் தாலியே கட்டலன்னு அகிருமா? எதுக்கு இந்த சாரின்னு கேளுங்கம்மா?”

“ஏய் வெண்மதி! புருஷனை அவன் இவன்ற?” செல்லம்மா மகனுக்காக வர,

“வாங்க மாமியாரே!” என்றதில் அனைவரின் புருவமும் ஏறி இறங்க, சிலருக்குள் புன்னகை, சிலருக்குள் கேள்விகள்.

“இப்பவும் உங்க பையனைக் கண்டிக்க முடியலை இல்ல. அவனா நினைச்சா பொண்ணைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டுவான். பாதிக்கப்பட்ட நாங்க எதுவும் கேட்கக்கூடாது. அப்படித்தான? பயந்து ஊரை விட்டு ஓட என்னை என்ன நட்சத்திரா நினைச்சீங்களா? நான் வெண்மதி!” என்றாள் தெனாவட்டாய்.

செல்லம்மா அவளை ஆச்சர்யமாக மெச்சுதலாகப் பார்த்ததை வெண்மதி அறியவில்லை.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“வெண்மதி” என தாய் அதட்டலிட்டு நட்சத்திராவைக் காண்பிக்க, அக்காவின் கலங்கிய கண்களைக் கண்டவள், “சாரிக்கா. நான் எதோ கோவத்துல... ரியலி சாரிக்கா” என்றாள்.

“ப்ச்... ஒண்ணுமில்ல பாப்பு. அப்ப எனக்கு தாலின்னா என்னன்னு தெரியாத வயசு. வீட்டுக்கு ஒரே பொண்ணா வளர்ந்ததால எதுவும் தெரியாது. உன்னளவு கூட அப்ப எனக்கு விவரம் கிடையாதுன்னா பாரேன்.”

“நதி” என்று தோள் தொட்ட தோழியின் கைபிடித்து, “இன்னைக்கு வெண்மதிக்கு நடந்த மாதிரி சூழ்நிலை எனக்கு வந்திருந்தா...” என்று சித்தார்த்தைப் பார்த்தவள் ”ஒண்ணு அவனைக் கொன்னுருப்பேன். இல்லையா எனக்கு நானே தண்டனை கொடுத்திருப்பேன். உன் அண்ணனைத் தவிர, கணவன் இடத்திற்கு யாரும் வரமுடியாது கொடி” என்றாள் நிதானமாகவே.

மனைவியின் தோளணைத்து, “அதான் நான் அந்த இடத்துக்கு வந்துட்டேனே. இப்ப என்ன செய்யுறதா உத்தேசம்?”

“உங்க பெயரோட முதல் எழுத்தை இன்ஷியலா போட்டுக்கிறதா உத்தேசம்” என்றாள் புன்னகையுடன்.

“இதையே மெய்ண்டெய்ன் பண்ணு நதிமா.” காதோரம் கிசுகிசுக்க, காதலாய் ஒரு பார்வை பார்த்தாள் நதி.

அதற்கு மேல் கோவிலில் வைத்துப் பேச வேண்டாமென்று ரவிச்சந்திரனும், நந்தகுமாரும் மணமக்களுடன் மற்றவர்களையும் மண்டபத்திற்கு அழைத்து வந்து மணமக்களுக்கான சம்பிரதாயங்களையும் செய்தார்கள்.

அந்த நேரத்துச் சடங்குகள் அனைத்தும் முடித்து வெண்மதியிடம் வந்த ரவிச்சந்திரன், “இப்ப என்ன செய்யலாம்னு சொல்லுமா?” என்றார்.

அவளின் கண்பார்வையில் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்து, “இவன்கிட்ட இருந்து டைவர்ஸ் வேணும் மாமா. உங்களால வாங்கித்தர முடியுமா?” என்றாள்.

“அவ்வளவுதானம்மா. வாங்கியாச்சின்னு வச்சிக்க. அது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது” என்றார் கூலாக.

‘டைவர்ஸ்’ என்றதும் வெண்மதியைப் பார்த்த சித்தார்த். “நான் சம்மதிச்சாதான டைவர்ஸ் கிடைக்கும்” என்றான் சற்று குரலை உயர்த்தி.

“ஏன் சம்மதிக்கமாட்டீங்க சித்தார்த்? தப்பு பண்ணினது நீங்கதான? அதுவுமில்லாம நதின்னு நினைச்சிதான கல்யாணம் பண்ணுனீங்க? இப்பதான் இல்லன்னு ஆகிருச்சே. அப்புறமும் ஏன் டைவர்ஸ் தரமாட்டேன்றீங்க?”

அரிச்சந்திரனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. தலை வெடிப்பது போலிருந்தது. கௌரவம், கௌரவம் என்று குதித்ததற்கு எல்லாம் தவிடு பொடியாவது போன்ற மாயை. ஒரு வகையில் நட்சத்திராவை முடிக்காதது நிம்மதியாகத்தான் இருந்தது. இன்னொரு புறம் அத்தை மகளே ஆனாலும், சம்பந்தமில்லாத பெண்ணிற்கு தாலி கட்டியது மனதை உறுத்தியது.

அவனை உணர்ந்தானோ அரிச்சந்திரன். அவனை யோசிக்கவிடாது “சொல்லுங்க சித்தார்த்?” என்றான்.

“என்ன சொல்லச் சொல்றீங்க லாயர் தம்பி? என்ன இருந்தாலும் அவள் என் தங்கை பொண்ணு. இப்ப மகனுக்கு மனைவியாகிட்ட பிறகு டைவர்ஸ் எதுக்கு? நாங்க எங்களோட கூட்டிட்டுப் போறோம்” என்றார் ரெங்கசாமி.

மகன் தாலி கட்டியது வெண்மதிக்கு என்ற உண்மை உணர்ந்த நிமிடம், அவளால் தங்களுக்கு உண்டான நன்மைகளைப் பார்த்த அதே நேரம், அவளின் எதிர்வாதம் புரியும் தன்மையும் செல்லம்மாவிற்குப் பிடித்திருந்தது. ‘இந்த வழியை ஏன் முதலில் யோசிக்கவில்லை’ என்று இப்பொழுது தோன்றியது.

கேஸை வாபஸ் வாங்கி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம். அதைவிட என்னதான் தங்கையின் சொத்து என்றாலும் பலரின் ஜாடைப் பேச்சுகளை சந்திப்பவராயிற்றே. தற்பொழுது தங்கை மகளே மருமகளாகிவிட்டால், ஊரில் ஒருவரும் தவறாக பேச முடியாது என்பதை உணர்ந்தார் ரெங்கசாமி.

“அதெல்லாம் முடியாது சார். பொண்ணைக் கடத்திட்டுப் போய் தாலி கட்டினவனுக்கே பொண்ணைக் கொடுக்கிறதா இருந்தா, ஊர் உலகத்துல நூத்துக்கு தொண்ணூறு கல்யாணம் இப்படித்தான் சிறப்பா நடக்கும். தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைச்சே ஆகணும். பொண்ணும் அதைத்தான் சொல்றாங்க. மியூச்சுவலா பிரிச்சி விட்டுரலாம்” என அரிச்சந்திரன் விடாமல் பேசினான்.

“இதையே உன் முதல் கேஸா எடுத்துக்கோ சந்துரு. அதோட சேர்த்து சித்தார்த்தோட சொத்து வழக்கு கேஸை நீதான் பார்த்திட்டிருக்க. அதையும் நீ தனியா பார்த்துக்கோ” என்று தன்யா அவனின் வாழ்க்கைக்கான வழியைக் காட்டினாள்.

“நான் கொஞ்ச நாள் போகட்டும் நினைச்சேன் மேம்” என்றான் யோசனையாய்.

“கல்யாணம் முடிஞ்சிருச்சி சந்துரு. இனி எதுக்கு யோசனை?”

“எனக்கும் தன்யா சொல்றது சரின்னு தோணுது அரி” என்றார் ரவிச்சந்திரன்.

சில நொடி மௌனத்திற்குப் பின் திலகவதியைப் பார்த்தவன், அவரின் மௌன பரிபாஷையில் அவனுக்கான பதில் கிடைக்க, மனைவியை ஒரு பார்வை பார்த்து, “நீங்க சொல்ற மாதிரி செய்திடலாம்பா” என்றான்.

மகன் தனி வழக்கு எடுத்ததிலேயே அவன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டான் என்பது புரிந்ததும், மகன் மேல் மனதில் சின்னதாக இருந்த சுணக்கம் மறைய, அவனை தட்டிக்கொடுத்து “கங்க்ராட்ஸ்” என்று வாழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்துச் சொல்ல, நட்சத்திராவின் முகம் மட்டும் தெளிவில்லாமல் இருந்தது. என்னவென்று சைகையில் கேட்க, ‘ஒன்றுமில்லை’ என்ற பதில் அவள் தலையசைப்பில்.

“ஹாய் நட்சத்திரா! நான் தன்யா நிதின். கொஞ்சம் முன்னாடி வரை சந்துருவோட சீனியர்” என்று கைகொடுத்துப் புன்னகைத்தாள்.

“ஹலோ மேம்! கொடி உங்களைப்பற்றி நிறைய சொல்லியிருக்கா” என்று புன்னகையுடன் கை குலுக்கினாள்.

“என்கிட்டயும் சொல்லியிருக்கா” என்றபடி மின்னலைத் தேட தூரத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து, “ஏய்! மின்னல் பெண்ணே! அங்க என்ன பண்ற?” என்று அவளை அழைத்து கணவனையும், பெண்ணையும் நட்சத்திராவிற்கு அறிமுகப்படுத்தி, “உண்மையைச் சொல்லட்டுமா நட்சத்திரா? மின்னல் பெண் தோழியா கிடைக்க நீ புண்ணியம் பண்ணியிருக்கணும். எனக்கு மட்டும் ஒரு தம்பியிருந்தா, இல்ல நிதின்கு ஒரு தம்பி இருந்தால் கூட யோசிக்காம மின்னலைக் களவாடிட்டு போயிருப்பேன்” என்று சிரிக்காமல் சொன்னாள்.

தன்யா பேசுவதைக் கேட்டபடி வந்த கொடி, “மேம்” என்று சிணுங்கினாள்.

“உண்மைதான் மேம். கொடி ஃப்ரண்டா கிடைக்க புண்ணியம்தான் செய்திருக்கணும். அந்த கடவுள் எனக்குச் செய்த மிகப்பெரிய நல்லதுன்னா, அது கொடிதான்” என்றாள் மனதார.

“அப்ப நான்” என அரிச்சந்திரன் இடையிட்டான்.

“அவள்னா, அவளைச் சார்ந்த நீங்க எல்லாரும்தான்.”

“என்ன இருந்தாலும் சந்துரு பாய்ண்ட் லெவல் கம்மியாதான் இருக்கு. இல்ல நட்சத்திரா?” தன்யா அரிச்சந்திரன் கால்வார,

“யா மேம் கொஞ்சம்” என்று சிரிக்க, அரிச்சந்திரனோ மனைவியவளை முறைத்தான்.

சத்தமாகச் சிரித்து, “மேம் வேண்டாம் நட்சத்திரா. அக்கான்னே கூப்பிடு. சுத்தி உள்ள எல்லாரும் மேம்னு சொல்றதா,ல எனக்குதான் என்னவோ மாதிரி, எக்ஸ்ட்ரா கொம்பு இருக்கிறதா ஃபீல் வருது.”

“அப்ப நான் உங்களை ஆன்ட்டி சொல்லவா?” என்று மின்னல் தன்யாவின் கால்வார,

“நீ செய்தாலும் செய்வ. என்னை அக்கா, அண்ணி கூப்பிடதான் ஆள் இல்லை. ஆன்ட்டி சொல்ல பாப்பா ஸ்கூல்ல பெரிய பட்டாளமே இருக்கு.”

“சரிங்க அண்ணியாரே” என்று தலைதாழ்ந்து சொல்ல, அவள் முதுகில் தட்டி, “ஓகே சந்துரு. நாங்க கிளம்புறோம். உனக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா, எனி டைம் கால் பண்ணு” என்றாள்.

“சரிங்க மேம்” என்றான் அரிச்சந்திரன்.

“நீ திருந்தமாட்ட. இந்த விஜய் பாரு என்னைவிட ஒரு வயசு சின்னவன். மேம் வேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு அக்கா சொல்றானா?”

“அவர்லாம் டார்ச்சர் பிடிச்ச ஆள் அண்ணி” என முகம் சுளித்தாள் மின்னல் பெண்.

“யார் அந்த டார்ச்சர் பார்ட்டி” என்ற குரலில் சட்டென்று திரும்ப விஜய் நின்றிருந்தான்.

“நீதான் டார்ச்சர் பண்றியாம்.

“நானா? நானா? நானா? ஹா... பிஸ்லெரி வாட்டருக்கும், ஃப்ரிட்ஜ் வாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுங்களா இருக்கும்” என்றான் நடிகன் தோரணையில்.

“இப்படி மொக்கை போடுறதால தான், உன்னைக் கண்டாலே மின்னல் மின்னலா மறைஞ்சிடுறா.”

“ஆமா அப்படியே பயந்த பொண்ணு பாரு.”

“பயமா? உங்கிட்டயா? நீங்க சிரிப்பு போலீஸ்” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

“என்ன நக்கலா” என்று பேசிக் கொண்டிருக்க, நட்சத்திரா அவர்களின் விளையாட்டை ரசித்திருந்தாள். இங்கொரு பார்வையும், சித்தார்த் வெண்மதி மேல் ஒரு பார்வையுமாக இருந்த அரிச்சந்திரனுக்கு இருவரின் பெற்றோரும் விவாதிப்பது புரிந்தது.

நிதின், தன்யா சென்ற கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் வந்தான் அவன். “நதிமா வாழ்த்துகள்” என்றதும் தன் அண்ணன் முகில் என்ற முகில் குமாரைக் கண்டு சந்தோஷத்தில், “எப்படி இருக்கீங்கண்ணா? இப்பதான் வர்றீங்களா?” என ஆவலாய் வரவேற்றாள்..

“நல்லா இருக்கேன்மா. நீ எப்படியிருக்க?” என்றதும் அவள் நன்றாக இருப்பதாகப் பதிலளிக்க, “ஏர்போர்ட்டில் இருந்து வர டைமாகிருச்சி. சென்னை ஓவர் ட்ராபிக்” என்றவன் “வணக்கம் மாப்பிள்ளை. எப்படியிருக்கீங்க? ஒரு வழியா நினைச்சதைச் சாதிச்சிட்டீங்க போல” என்றான் அரிச்சந்திரனிடம்.

‘என்ன சாதிச்சாங்க?’ என பெண்ணவளோ புரியாது விழிக்க, அரிச்சந்திரன் நட்சத்திராவை திருமணம் செய்ததற்காக சொன்னதை மறைத்து “அது கேஸ் விஷயமா” என்றான்.

“அம்மா எங்க நதிமா?”

“சித்தி அங்க” என்று கைநீட்டிய திசையில் பார்த்தவன் திகைப்பைக் காட்டி “என்னாச்சி?” என்பதாய் அவர்களிடம் செல்ல, நடந்ததைக் கேள்விப்பட்ட முகில், சித்தார்த்தின் சட்டையைப் பிடித்து, “என் இரண்டு தங்கச்சிங்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டியாடா? நன்றி கெட்டவங்கடா நீங்கள்லாம். எங்க தாத்தா சொத்துல ஆரம்பிச்சி, கொஞ்சம் கொஞ்சமா எங்களை குடும்பத்தோட அழிக்கிறீங்க. என்னடா பாவம் செய்தோம் உங்களுக்கு? இறந்தவங்களுக்கு கொள்ளி வைக்கச் சொன்னது அவ்வளவு பெரிய தப்பா? அதான் எங்களை உறிஞ்சி எடுத்துட்டீங்களே. திரும்பவும் எங்க வீட்டுப் பொண்ணுங்களை... நீயெல்லாம்...” என்று ருத்ரதாண்டவமே ஆடிவிட்டான் முகில்.

“மச்சான் அமைதியா இருங்க. எதுக்கு எனர்ஜி வேண்ட் பண்றீங்க? வெண்மதி டைவர்ஸ் கேட்கிறாங்க” என்றான் அரிச்சந்திரன்.

“அதை முதல்ல செய்யுங்க” என்று முடிக்க,

“மியூச்சுவல் டிவோர்ஸ் வாங்கிக்கலாம் சித்தார்த். நீங்க என்ன சொல்றீங்க?”

தன்னை முறைத்து நின்ற மனைவியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “நான் எதுக்கும் ஒத்துக்க முடியாது லாயர் சார். அவள்தான் என் ஒய்ஃப்! எனக்கு டைவர்ஸ் வேண்டாம்” என்றான் திடமாக.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top