அத்தியாயம்-23-
தன் மேல் தான் அனைத்துத் தவறுகளும் இருக்கவும் … குற்ற உணர்ச்சியும், ஆத்திரமும் உள்ளுக்குள் கொதிக்க, வெளியே எதுவும் பேச முடியாமல் கப்சிப்! என அமைதியாக நின்றிருந்தான் மாணிக்கம்….அவனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கவுன்சிலர் வாசுகி,
“மாணிக்கம், உன் வீடியோவ எனக்கு அனுப்பியது வேறு யாருமில்ல… உன் ரெண்டு குழந்தைகள்தான்…,”
என்று போட்டுடைக்கவும்…அதைக் கேட்டதும் மாணிக்கத்தின் உள்ளே ஒரு நிமிடம்,
‘ அதான் எனக்கும் தெரியுமே… கண்டுபுடிச்சுட்டேனே அதுக தான் இந்த. ப்ளாக் ஷீப்! வேலய பாத்திருக்குங்க’ன்னு
எண்ணம் அவனுக்கு தோன்றி மறைந்தது…. ஆனாலும், மாணிக்கம் தன் முகத்திலே அது எதையும் தெரிந்தார் போலவும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே நின்றிருந்தவன், மேலும் மனதுக்குள்ளாக,
‘ வீட்டுக்கு போயிருக்கு அதுகளுக்கு இன்னைக்கு கச்சேரி…!”
எனவும் கறுவிக்கொண்டவனின் கண்களில் மின்னிய அந்தக் கோபத்தையும், முக மாற்றத்தையும் கவுன்சிலர் வாசுகி துல்லியமாகப் படித்துவிடவும்…. உடனே குரலை உயர்த்தி,
” இங்க பாரு மாணிக்கம்… வீட்டுக்குப் போய் குழந்தைகளை இது சம்பந்தமாக மிரட்டுவதோ, விசாரிப்பதோ கூடாது…. மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்…,”
“சரிங்க மேடம்…”
என்று பல்லைக் கடித்துக்கொண்டே கடுமையாக எச்சரிப்பவளிடம் இவ்வாறு கூறிவிட்டு, வேறு வழியின்றி மாணிக்கம் தன் தலையையும் சம்மதிப்பது போல ஆட்டி வைக்கவும்… இதையெல்லாம் பார்க்கும் அந்த அறையின் இன்னொரு மூலையில் நின்றிருந்த மங்கலத்தின் முகத்திலோ எந்தச் சலனமும் இல்லை…. மாறாக வெறுமையும், ஒருவித நிம்மதியும் மட்டுமே அவளிடம் குடியிருந்தது….
”ரொம்ப நன்றிங்க ஐயா …. மேடம்… எனக்கு நீதி கிடைச்சுருச்சு…. அதான் டைவர்ஸ் கிடைச்சிடுச்சே, அது தான் எனக்கு சரியான நீதியும் … தீர்வுமாகும்… அதுவே எனக்கு போதும். நன்றி…”
என்று அமைதியாக நீதிபதி மற்றும் கவுன்சிலரை மட்டுமாக பார்த்து கை கூப்பியப்படியேச் சொன்னவள்,அப்படியே அங்கிருந்த நீதிபதியிடமும் கவுன்சிலரிடமும் விடைபெற்று வெளியே நடக்கவும்… அங்கேவெளியே, மங்கலத்தின் வரவுக்காகவே சில பல மணி நேரம் வரையிலும் பொறுமையாகக் காத்திருந்தது போலவே, ஒருத்தி பாஸ்! போன்ற கம்பீரமான தோற்றத்துடன் நேர்த்தியாக கோட் சூட் உடை அணிந்தை நின்றிருந்தாள் அவளே நந்தினி ….மங்கலத்தைப் பார்த்ததுமே அவளுக்கு கண்களில் வாஞ்சை பொங்கவும்…ஓட்டமும் நடையுமாகச் சென்று நந்தினியை ஆதுரமாகக் கட்டிக்கொண்ட மங்கலத்திற்கு, இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுகை ஆனந்தக் கண்ணீராகப் பீறிட்டது…. கலங்கியவளைத் தோளோடு அணைத்துத் தூக்கி நிறுத்திய நந்தினியோ,
“இங்க பாரு, உன்ன…”
என்று ஏதோ அவள் சொல்ல வருவதற்குள், மங்கலமே சுதாரித்து அவளை முந்திக்கொண்டு, தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.
” நிச்சயம் உன் டார்ல்ஸ் இனி எதுக்காகவும் அழமாட்டேன், போதுமா…?”
என்று மங்கலம் உறுதியாகவும் புன்னகையுடனும் சொன்னதைக் கேட்டு நந்தினி,
“அதுதான் என் டார்ல்ஸ்க்கு அழகு!”
என்றாள் ஒரு தேவதையைப் போலப் புன்னகைத்தபடியே , நந்தினி அவ்வாறு சொல்லவும்…. தூரத்திலிருந்தபடியே இவையனைத்தையும் பொறாமையும் எரிச்சலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்…. அவனது பார்வையைக் கவனித்துவிட்ட கவுன்சிலர் வாசுகியோ, அங்கிருந்தபடியே சத்தமாக நக்கலாகக் குரலிலே சிரித்தப்படியே ,
“ஊரு கண்ணு, உறவு கண்ணு, சில புருஷனுக கண்ணு எல்லாம் பட போகுது… போய் நல்லா சுத்தி போடுங்க மங்கலம்…!”
“சரிங்க மேடம் அப்புடியே நாங்க செஞ்சுடுறோம்…!”
என்று சிரிப்புடனே வாசுகிக்கு ஒருமித்த குரலில் ஒன்றாகவே பதிலளித்த மங்கலமும் நந்தினியும், புதிய வாழ்க்கையை நோக்கித் திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்லவும்….அங்கிருந்து தானுமே கிளம்ப எத்தனித்த மாணிக்கத்தை நீதிபதியும் கவுன்சிலருமாக கட்டளையாகக் குரல் கொடுத்துத் தடுத்து நிறுத்தியவர்கள், குழந்தைகள் நலன்! மற்றும் அவனது நடத்தை குறித்துப் பல கடுமையான நிபந்தனைகளை விதித்து, சில பல பத்திரங்களில் அவனின் கையெழுத்தெல்லாம் வாங்கிய பிறகே அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்கவும்…. அப்படியாக வீட்டுக்கு வந்த மாணிக்கத்தை, அவனது இரண்டு குழந்தைகளும் ஆவலுடன் எதிர்நோக்கி,
“டாடி…., கோர்ட்ல என்ன நடந்தது…?”
என்று அப்பாவியாய் விசாரித்தன… அதைக் கேட்டதுமே மாணிக்கத்திற்குப் பற்றிக்கொண்டு வர,
“ம்ம்ம்… சுரைக்காய்க்கு உப்பு பத்தல, அந்த உப்பை நானே என் கையாலயே போட்டுட்டு வந்தேன், போதுமா…? ”
என்றுவிட்டு ,
‘அடங்கோப்பா உலக மகா நடிப்புட சாமி…!!!, எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி வேற கேட்க வேண்டியது… நடிப்பு அரக்கனாகிய எனக்கே டஃப் கொடுப்பானுங்க போலயே நம்ம புள்ளைங்கோலாம் ரெம்ப பயங்கரம்…!”
என்று மனதுக்குள்ளாகவும் அலட்டிக்கொண்டவனுக்கு, அப்படியே பிள்ளைகள் மேலும் வருகிற கோபத்தை அதுகளிடம் காட்ட முடியாமலே தன் கையைத் தானே கடித்துக்கொண்டு, தனக்கு வரும் ஆத்திரத்தை தனக்குள்ளாகவே தண்டனை கொடுத்துக் கொண்டு அடக்கிக் கொண்டவனுக்கு தான்… வேறு வழி இல்லையே…?, கோர்ட் நிபந்தனை அவனின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறதே…!, ஆகையால் மாணிக்கம் அடக்கி வாசிக்கவும்…
இப்படியாகப் பல மாதங்களும் உருண்டோடின….
ஒரு மாலைப் பொழுதில், மாணிக்கத்தின் பிள்ளைகள் இருவருக்கும் அவர்களது பள்ளியிலிருந்து கொடுத்துவிடப்பட்ட தங்களின் மார்க்! கார்டை வீட்டிற்கு கொண்டு வந்து, தனது தந்தை மாணிக்கத்தின் முகத்திற்கு முன்னால் அதுகள் இருவருமாக நீட்டவும்…. அதை வாங்குவதற்கு முன்பே மாணிக்கம் தன் மனதுக்குள்ளாக கணக்கு ஒன்றைப் போட்டு வைத்திருந்தவன்,
”சரிதான் … எப்படியும் ரெண்டும் முட்டைதான் வாங்கியிருக்குங்க… பரவாயில்ல, அந்த முட்டைய வச்சே இன்னைக்கு நைட் டின்னர் செஞ்சு டின்னரை முடிச்சுக்க வேண்டியதுதான்…!”
என்று தனக்குத்தானே நக்கலாகத் தேற்றிக்கொண்டிருந்த மாணிக்கம் அந்த மார்க் கார்டைப் பிரித்துப் பார்க்கவும்… மாணிக்கத்தத்திற்குத் தூக்கி வாரிப் போட்டது…! , இரண்டு பிள்ளைகளும் மிகச்சிறந்த மதிப்பெண்களை வாங்கி, வகுப்பில் முதல் இடங்களில் இருக்க...அதைப் பார்த்த மாணிக்கத்திற்கு, தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் கசக்கியும் பார்த்துவிட்டு,
“எப்புட்றா…?!”
என்று வாயைப் பிளந்து நின்றிருந்தவன் , அந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் அடக்க முடியாமல், மாணிக்கம் அதை வாய்விட்டே கேட்டுவிட,
”என்னடா இது…?, ரெட் இங்! பென்! வச்சு ஏதும் மார்க்குல சீட்டிங் பண்ணீங்களாடா?”
”டாடி, அது உங்க புத்தி…!, இது உண்மையான மார்க் தான்…. நாங்க அப்புடி சீட்டிங் பண்ணியிருக்கோம்னு உங்களுக்கு தோணுச்சுன்னா, நீ அடிக்கடி வழிஞ்சு,
‘மேம், மேம்’னு
பேசுவிங்களே… அந்த எங்க டீச்சர்ஸ்கிட்டயே கேட்டு பாருங்க டாடி…!”
என்று சந்தேகத்துடன் விசாரிக்கும் தந்தையிடம் பட்டென்று பதில் சொன்னான் வேலன்…. உடனேமாணிக்கத்திற்குத் தூக்கி வாரிப் போடவும்,
“அடேய்…! , டீச்சர்ஸ்ட்ட நான் எங்கடா வழிஞ்சு பேசினேன்..?, உங்க பாடம் சம்பந்தமா டவுட் தானே கேட்பேன்…!”
”அடங்கேப்பா, நம்பிட்டோம்…!, டவுட் கேட்டவரு எங்களுக்கு சொல்லி தந்து கிளிஞ்சீங்களா…?”
”என்னடா, சட்டுன்னு மரியாதை இல்லாம பேசுற”ன்னு…
நக்கல் தோனியில் கேட்டிருந்த வேலனிடம் ஒருவிதத் தோய்ந்த குரலிலேயே இவ்வாறு மாணிக்கம் கேட்க … உடனே சாருலதா குறுக்கிட்டு,
“ராணி இருந்தா தான்ப்பா ராஜாவுக்கே மரியாதையாம்…!”
”எதே…?!”
என்று, நக்கலாக கேட்கும் மகளிடமும் மாணிக்கம் அதிர்ந்து கேட்க,
”அதான்… அந்த சதுரங்க விளையாட்டுல டாடி..”ன்னு
சட்டென்று சமாளிப்பவளைப் பார்த்து,
“பாப்பா, நீயுமா…?, அதுசரி, நான் சீட்டிங் பண்ணி மார்க் போடுவேன்னு யாரு சொன்னது உங்க கிட்ட…?”
” வேற யாரு, உங்கம்மா பேச்சி தான்…!”
என்று வேலன் கிண்டல் செய்ய,
”இது வேறயா…! , இந்த வீட்டுக்கு வந்து ஒரு நாளுக்கு மேல தங்குறது கிடையாது…. மக வீடு! தான் முக்கியம்’னு ஓட வேண்டியது… ஆனா… இந்த மாதுரி தேவையில்லாத விஷயத்தை மட்டும் என் பிள்ளைங்க காதுல போட வேண்டியது…!”
என்று மாணிக்கம் தன் அம்மா பேச்சியம்மாளை குறித்து இவ்வாறு புலம்பி தீர்க்கவும்…, பிள்ளைகள் இருவருமோ அதைக் கேட்டுவிட்டு,
‘ கெக்க புக்க’ன்னு சிரித்துக்கொண்டே நின்றிருந்தனர்…அப்படியாக அந்த கல கல சிரிப்புகள் எல்லாம் ஒருவழியாக அடங்கியதும்,
“அதுசரி, அதெல்லாம் இருக்கட்டும்… நீங்க எப்புடி இவ்ளோ நல்ல மார்க் எடுத்தீங்க…?, நீங்க ரெண்டு பேருமே எந்த டியூஷனும் போகலயே…, உங்க அம்மாவும் உங்களுக்கு இப்போலாம் சொல்லி தரதுக்கு இல்லயே…, நானுமே சொல்லி தரலயே…”
“நாங்களாகவே படிச்சுக்கிட்டோம் டாடி…”
என்று மாணிக்கத்தின் அடுக்கடுக்கான அந்தக் கேள்விகளுக்கு ஒரே பதிலாக இவ்வாறு பிள்ளைகள் இருவருமாக சொல்லி முடிக்கவும்….
“அதான்டா…, அது எப்படிச் சாத்தியம்…? , ஏன்னா… நீங்க தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு திரிஞ்சீங்களே… அப்புறம் எப்புடி இதெல்லாம்…?”
”டாடி, அதெல்லாம் வெறும் நடிப்பு தான் டாடி…! , ஏன்னா… அப்போ நீங்க எங்களை கண்டிக்கிறீங்களா இல்லையான்னு பார்க்க தான் அப்புடி நாங்க இருவருமா நடிச்சோம் போதுமா…. ஆனா… நீங்கதான் அப்புடி ஏதும் பண்ணலையே…, எங்கள சமாளிக்க முடியலைன்னு ஒருகட்டத்துல அவுத்து விட்டிட்டீங்களே…! , ஆனா டாடி, மம்மி அப்புடி கிடையாது… எங்கள சமாளிச்சு… கண்டிச்சு… படிக்க வச்சு, ஒரு தாய்க்கே உரிய அத்தனை வேலையும் செஞ்சு, உங்களையும் பார்த்துக்கிட்டு, இந்த வீட்டையும் பார்த்துட்டு, ஆன்லைன்ல வேலையும் பார்த்து எப்படி மேனேஜ் பண்ணாங்க தெரியுமா…? , அதான் டாடி வுமன்ஸ் டே! என்னைக்குமே கெத்து…!, ஆனா… நாம ‘மென்ஸ் டே’ல கவனிக்கப்படாத காரணமே இதான்… அதான் ஒரு பையலும் கொண்டாடல பாருங்க நம்மள…!”
“அட ஆமாண்டா வேலன்… மென்ஸ் டேக்கு நாம ரெண்டு பேரும் கூட இதுக்கு ஒருத்தரை ஒருத்தர் விஷ் பண்ணிக்கல பார்த்தியா…?”
என்று சொல்லிவிட்டு, அப்படியே மங்கலத்தின் நினைவுகளுமே மாணிக்கத்திற்கு வந்து வாட்ட, அப்படியே அவளை நினைத்தப்படியே, தன் தலையை குனிந்து தொங்கப்போட்டவாறு , தரையை வெறித்தப்படியே பார்த்து நின்றிருந்தான் மாணிக்கம்…. அப்படியாக அவன் உள்ளுக்குள் ஒரு பெருமூச்சு எழுந்து,
‘இனி என்ன பண்ணி என்ன செய்ய முடியும்…?, காலம் தான் கடந்துவிட்டதே… இந்நேரத்துக்கு அவ மறுமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக இருப்பா.., அப்படித்தானே…? , அப்படி இருந்தாலும் தப்பில்ல… நம்ம கிட்ட இருந்து கஷ்டப்பட்டதுக்கு எங்கேயோ, எப்படியோ சந்தோஷமாக இருக்கட்டும்…’
என்று மனதுக்குள் நினைத்து பார்க்கவும்… அப்படியே மங்கலத்தின் நினைவிலும் விம்மி கொண்டிருந்தான் மாணிக்கம்…. அப்போது அவன் பார்த்துக்கொண்டிருந்த டிவியிலும்,
“அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே…”
என்கிற பழைய பாடல் ஒன்று மெதுவாக ஒலித்துக்கொண்டிருக்கவும் ,
‘இதுகளும் சதி பண்ணுதே..!‘
என்று அதையும் பார்த்து கவலையாகி தேவதாஸை போல விட்டத்தை பார்த்து அழுகவா..?, சிரிக்கவா..?, என்றிருந்தான் மாணிக்கம்…..
💒மறுமணமாகும்…
🤔அப்போ மங்கலத்திற்கு மறுமணம் ஆகி இருக்குமோ …?, அதை பார்க்க கோவா ரிசாட்டுக்கு வந்துடுங்க காய்ஸ்✈️👋😜🤭….