Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 19

CHAPTER 19

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 12, 2026

0

அத்தியாயம்-19-

நிதிமன்றத்திலிருந்து விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரச் சொல்லி  மங்கலத்தின் எதிர் தரப்பான மாணிக்கத்திற்கு  நீதிமன்ற முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ நோட்டீஸ்  தபால் மூலமாக அவன் வீட்டிற்கே  அனுப்பப்படவும்..  

   அதனை பெற்றுக்கொண்ட  மாணிக்கம் அந்த நோட்டீஸில் எந்தத் தேதி, எந்தக் கோர்ட் ஹால், எந்த நீதிபதி முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை  படித்துக் கொண்டிருந்தான்….அதனை பேச்சியம்மாளும் பக்கத்தில் நின்று வாசிக்கவும் அக்னிச் சிறகாக மாறி எகிறுகிறவள்,   

   ​”டேய் மாணிக்கம்! விஷயத்த ஏன்டா இவ்வளவு தூரம் வளர விடுற….? , ஒழுங்கா அவகிட்ட போய் மன்னிப்பை கேட்டு அவள இங்க கூட்டிட்டு வாடா…!”   

என்று அம்மா வெளுத்து வாங்கவும்….​மாணிக்கம் நக்கலாகச் சிரிக்கிறவன்,    

“அம்மா… எனக்கு உன்னய பத்தி  தெரியாதா…? , நீ ஏன் திடீர்னு உன் மருமகளுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றன்னு எனக்கு நல்லா தெரியும்…. உன்னால உன் பேர பசங்கள மேய்க்க முடியல…, அதுமட்டுமில்லாம எனக்கு சமைச்சு வடிச்சு கொட்டவும் உன்னால முடியல…!, சொல்லுங்க மேடம் உண்மைய அதானே மேட்டரு ….?”

என்று பாயிண்டாகக் கேட்கவும்…​பேச்சியம்மாளும் அசராமல்,    

      “ஆமாண்டா…! , உண்மையிலேயே அதுதான் மேட்டரு போதுமா…! என்னால முடியாது சாமி….!!!, நீயே வச்சுக்கோ இதுகள… அப்புறம் உனக்கும் ஒரு கும்பிடு…. என்னால தினமும் மங்கலம்  மாதுரிலாம் வித விதமா சமைச்சு கொட்ட முடியாது ஆளவிடு....!”   

  என்று அந்த வீட்டைவிட்டு ஓடாத குறையாக பேச்சி சொல்லிவிட… கடுப்பான மாணிக்கமோ,  

  ” ஓ…… அப்புடியாம்மா …. அப்போ சரி… நீ இனிமே என் வீட்டு பக்கமே வராதப்…..ப்ப்பப்பே…! கிளம்பு…கிளம்பு….!”    

என்று சொந்த அம்மாவையே அங்கிருந்து  துறத்தி அடிக்காத குறையாக பேசியே அவங்க திங்க்ஸை பேக் பண்ணியும் அங்கிருந்து  அனுப்பி வைக்கிறான் மாணிக்கம்….  ​அதே போலவும் புலம்பிக் கொண்டிருந்த  வள்ளியையுமே,  

“எக்கோவ் …. நீயும் கிளம்பு ….!!!”   

  என்றுவிட்டு அவளது வீட்டுக்கே மாமியாரையும்  திருப்பி அனுப்பி  விடுகிறவன்,

   ‘நான் ஒரே ஆளா கெத்தா இந்த  குடும்பத்தை நடத்துவேன்….  யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…!!!’   

     என்று சிங்கத்தை  போலவே கர்ஜித்து  பாடிவிட்டு மாணிக்கம் கெத்தாக  நிற்க… அந்த சிங்கமே சிங்கிளா சிக்கிய தருணமமும் வருகிறது…. அம்மா, மாமியார் இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிவிட்டு கெத்தாக  அந்த வீட்டில் திரிந்த  மாணிக்கத்துக்கு, அடுத்த பத்தாவது நிமிஷமே ஆப்பு! சத்தமில்லாமல் ,  

  ‘போட நீ சிங்கமா…?, இல்ல இல்லவே இல்ல…. நீ அசிங்கம்டா மாப்பிளே…!!!.’   

  என்பதை  உணர்த்துவிதாக  வீட்டில் இருந்த குட்டிச் சாத்தான்களான  மகன் வேலன் மகள் சாருலதா அதுகளின் ரூபத்தில் வரவும்…. அந்த இரண்டுக்களுக்கும் இப்போது கட்டுப்பாடு எதுவுமே இல்லாதிருக்க!… ஆகையால்  வீடே  அதுகளின் அட்ராசிட்டி ஜோனாக மாறுகிறது…..  

    ஒருத்தன் சாப்பிடுகளை இஷ்டத்திற்கு ஆன்லைனில் ஆர்டர் போட்டு  தின்று தீர்க்க…., இன்னாொருத்தியும் அவனுடனே சேர்ந்துக் கொண்டு சகோதரனுக்கே  ஆதரவாக இருக்கவும்… அப்படியே , மகள் ஏதாவது பாட்டை ஸ்ப்க்கரில் வீடே அதிரும்படி அலறவிட்டவாறே  மெத்தையிலும் குதியாட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டே , அதிலிருக்கும் தலையணையைப் பிச்சி பஞ்சாக பறக்கவிடுகிறாள்….  அதன் விளைவாக மாணிக்கம் பொறுமை இழந்து இருவரிடமும்,

“டேய்  போதும் நிறுத்துங்கடா….!”   

  என்று கத்தினால், அவன் பிள்ளைகள்  இரண்டும் அவனை எதிர்க்கும் விதமாக முறைத்துப் பார்த்துவிட்டு, அப்படியே அவன் முகத்திற்கு நேரே தங்களது கையும் இப்போதெல்லாம்  அடிப்பதற்காக ஓங்குகிறதுகள்….! , யாராவது அதுகளின் இந்தப் போக்கை தட்டிக்கேட்க முடியுமா என்ன…? , ஏனெனில்  இப்போது தான் அந்த  வீட்டில்  யாருடைய சொந்தபந்தங்களும் அவனுக்கு ஆதரவாக இருக்காங்களா என்ன…?,  ஒருத்தருமே அவனுக்காக வேண்டி இல்லை தானே… ஆகையால்  ,

“நாங்கதான்  டாடி இந்த வீட்டுக்கு டான்…!”

என்று  மாணிக்கத்திடம் சொல்லும் அளவுக்கு  அவனது  பிள்ளைகளிடம்  துணிச்சல் வந்துவிட்டது…. அதன் விளைவாக, மாணிக்கம்  அதுகளை அடிக்கக் கையை ஓங்கினாலுமே,  

   “டாடி அடிச்சுப் பாரு… நாங்களும் திருப்பி அடிப்போம்…!”   

என்பது போல அதுகளும்  கையை ஓங்கி இறுதியாக அடிக்கவும் செய்கிறார்கள் ….. ஆகையால்,மாணிக்கத்தின் மைண்ட்வாய்ஸூம் கண்ட மேனிக்கு  கதறி,   

      ‘​அட ஆண்டவா…! இவனுங்கள மங்கலத்தோடவே பேக் பண்ணி அனுப்பியிருக்கலாம் போலயே… தேவையில்லாம நம்ம கூடவே வச்சு மாட்டிகிட்டோமே…!’  

   என்று மாணிக்கம்  நொந்து நூலாகவும்….மேலும்,     

‘அப்படியே​ திட்டினாலும் கேட்க மாட்டேங்குதுங்க…., அடிக்க போனாலும் நம்மையே போட்டு தள்ளிடும் போலிருக்கே இதுகள்…!’  

  என்று புலம்பியபடியே அவன்  வீட்டின் நடுவில்  தலையில் துண்டை மட்டும் போடாத குறையாக தலையில் கை வைத்தவாறு  உட்கார்ந்துக் கொண்டு, ஜன்னல் வழியே எதையோ நினைத்தப்படியே வெறித்துப் பார்க்கிறவனின் கண்களில்  அப்போதுதான் நாட்காட்டியையும் தெரிய… மங்கலம் கோர்ட்டுக்கு வரச் சொன்ன அந்த ‘ரெட்கார்னர்‘ நாளும் அடுத்த  நாளில்  வந்துவிட்டது என மாணிக்கம் அறிந்துக்கொள்ள…!  

பின்னர் அந்த  அடுத்த நாளும் வந்துவிட்டது ….  ​கோர்ட் வாசலில் மாணிக்கம் குழந்தைகளுடன், வியர்வை வழிய, சோர்ந்து போய் அவனது காரில் வந்து இறங்கவும்…. பசங்களோ அடங்காமல்,

  ‘ கேண்டீன் எங்கிருக்கிறது…?’,

என்று  அங்கிருப்பவர்களிடம் விசாரித்தவாறே ஆளுக்கொரு திசையில் ஓட, மாணிக்கம் அவர்களைத் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது….   

     அப்போதும் அங்கே  ஒரு கெத்தான மாஸ் என்ட்ரி மங்கலம் கொடுக்கவும்… ​அப்படியாக மங்கலம்  அணிந்திருந்தது  ஜீன்ஸ் பேண்ட்! மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்….கண்ணிலோ கூலிங் கிளாஸ் ​கூடவே அவளது கையைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக இறங்குகிறான் நந்தா  தமிழ்! அவனும்…     

  ​மங்கலத்தின் இந்த கெத்தைப் பார்த்ததும் மாணிக்கத்தின் உள்ளுக்குள் இருந்த வில்லன் விழிப்பு பெற…. பல்லைக் கடித்துக்கொண்டு மனசுக்குள் காய் நகர்த்துகிறவன்,      

​ “ஹேய் இருடி… உனக்கு நான் அவ்வளவு சீக்கிரத்தில் டைவர்ஸ் தர போறது கிடையாது…! , நீயும் அந்த நந்தாவும் சந்தோஷமா நிம்மதியா வாழவும் போறதில்ல….  ஏன்னா நீதிபதிகிட்ட பேசி, கோர்ட் மூலமா உனக்கு ஒரு செக் வைக்க போறேன்….  டைவர்ஸ் கிடைக்காத வரைக்கும், நீ உன் முதல் புருஷனான என்னை தவிர வேற எந்த ஆளோடவும் நெருக்கமா இருக்க கூடாதுன்னு தடை உத்தரவு வாங்க போகிறேன்…. அப்போ தெரியும் என் பவர் உனக்கு…!”​  

  என்று தனக்குத்தானே பேசிக் கொள்ளவும்  ஒரு வில்லன் சிரிப்போடு திட்டமும் போடுகிறான் மாணிக்கம்….ஆனால் அப்பவும் அவனின்  பிள்ளைகளோ மங்கலத்தை பார்த்தும் கூட ‘அம்மா’ன்னு ஓடவில்லை…! மாறாக அப்பாகிட்ட தான்  நச்சரித்து,

“கேண்டீனுக்கு  போகணும், ஏதாவது வாங்கித் தாங்க டாடி!”​  

“கைல காசு இல்லடா!”ன்னு

மாணிக்கம் கோபமாக அதுகளிடத்திலே அப்படி  சொல்லவும்… உடனே, அவனை முறைத்துப் பார்த்த வேலனோ,  

   “நீங்ங தானே  பேச்சி பாட்டி சொன்னமாதுரி அவங்களோட சொத்தை அடிச்சு தின்றது… அப்போ அந்த பணத்துல இருந்து  உங்க பசங்க தானே நாங்களும்  எங்க பங்கா அதை எங்க செலவுக்கும்  கொடுக்க  வேண்டியதானே…!”ன்னு   

   குத்திக் காட்டுகிறான்….அதே பாயிண்ட்ஸை  உடனே பிடிச்சுக்கிற மகளான  சாரு,     

“அப்ப அந்தப் பணத்துல இருந்து எங்களுக்கு வாங்கி தாங்கப்பா!”ன்னு   

வேலனை போலவே கேட்கவும்…. மாணிக்கத்துக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது…! மனசுக்குள்ளேயே புலம்பவும் ,  

   ​’ என்னடா இது… இதுகளுக்கு அடிக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்…, இப்போ வாயும் நல்லாவே பேச வருது….! இது சரிபடாது… இதுகளையும் அப்படியே கொண்டு போய் அந்த மங்கலத்துக்கிட்டயே பார்சல் பண்ணி அனுப்பி தொலைச்சிட வேண்டியதுதான்…!  இந்தா வச்சுக்கோ’ன்னு அப்படியே அவகிட்ட போய் உங்களோட இந்த ஜால்ஜாப்பெல்லாம் வச்சுக்கீறீங்களாங்கன்னு பாக்கனும்!’

அப்படியாக மொத்தப் பொறுப்பையும் மங்கலத்தின் தலையில் கட்டத் திட்டமிடுகிறான் மாணிக்கம்!   

      பின்னர் எப்படியோ புயல் மாதிரி அடித்துப்பிடித்துக் குழந்தைகளை இழுத்துக்கொண்டு கோர்ட் ஹாலுக்குள் மாணிக்கம் நுழைய….  அங்கே மங்கலமோ கூலிங் கிளாஸோடு செம கெத்தாக நிற்கிறாள் நந்தாவுடனே…, அப்படியே அங்கே கேஸ் விசாரணையும்  ஆரம்பாகவும் …. அங்கே விசாரிக்கப்படுகிற அந்த வழக்கு சம்பந்தமான விசாரனைகள் யாவும் சூடுபிடிக்கிறது…..       

அப்படியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மங்கலமும் குழந்தைகளும் சொல்வதை வைத்துதான் நகர்த்த… அவரிடம் மங்கலமும், கூடவே குழந்தைகளும் அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று மாணிக்கத்தின் மீதே ஒட்டுமொத்தத் தவற்றையும் தூக்கிப் போடுகிறார்கள்….! ,   

  அதிலும் குழந்தைகள் சொன்ன வாக்குமூலத்தை தான்  நீதிபதி மிக முக்கியமாகக் கவனிக்கவும்…, மாணிக்கத்தின் தலையில் இடி விழுந்தது போலாகிறது… நீதிபதியின் பார்வையில் மொத்தத் தவறும் மாணிக்கம் மீதே இருப்பதாகவும் தெளிவுமாகிவிடுகிறது…..

ஆனாலும் நீதிபதி, மங்கலத்திடம் கொஞ்சம் சமாதானமாகப் பேசிப் பார்க்கும்படியும், ஒரு காலக்கெடுவும் வகுத்து கணவன் மனைவி இருவருக்குமிடையே இருக்கும் பிரச்சனையைச் சரிசெய்து கொள்ளும்படியும் அறிவுறுத்துகிறார்….. ஆனால், மங்கலமோ கொஞ்சமும் அசரவில்லை…!, ​

“ஐயா… இவர்கிட்ட பேசி பிரயோசனமே இல்ல….! இவர் திருந்தவே மாட்டார்….. எனக்கு உடனேயும் இவர்ட்ட இருந்து டைவர்ஸ் வேணும்…ப்ளிஸ்…ப்ளிஸ்….!”

என்று கோர்ட்டில் கெஞ்சுவிதமாகவும், அதே சமயம் நறுக்கென்றும் சொல்லிவிட்டு மங்கலம் நிற்கிறாள்….அதே நேரத்தில்தான் மாணிக்கமும் தன் கோரிக்கையை அதே நீதிபதியிடம் ,

“ஐயா…. எனக்கு இவளுக்கு டைவர்ஸ் தரவே இஷ்டம் இல்ல…! அதுமட்டுமில்லாம, இவ அந்த நந்தாவோட சேர்ந்து ஒரே வீட்டுலயும் வாழக்கூடாது… பொது இடங்கள்லயும் அவனோட சேர்ந்து கைக்கோர்த்துக்கிட்டும் சுத்தக்கூடாது….!”

என்று கோர்ட்டில் பகிரங்கமாகப் புகாரைக் கொடுக்கவும்…. நீதிபதியும் அவனது அந்தப் புகாரை ஏற்றுக் கொள்கிறார்…. அதே சமயம் நிதிபதி அவனிடம்,

“சரி…சரி….மாணிக்கம்…., எங்க எல்லோர் முன்னாடியும் சாட்சியாக உன் மனைவியிடம் ஒரு சின்ன மன்னிப்பை மட்டுமாவது அவளிடம் இப்பவே கேட்டுவிட்டு, இந்த பிரச்சினையை இத்தோடு அவள்ட்ட முடித்துக்கொள்ளேன்…. ”

என்று வலியுறுத்தவும்…. அவனுக்கோ ஈகோ தலைதூக்க மாணிக்கம் மசியவே இல்லை நீதிபதியிடம் , அப்படியே அவளிடம் மன்னிப்பு கேட்க மறுத்துத் திமிராக நிற்கிறான்…இதை உன்னிப்பாக கவனித்துப் பார்த்த நீதிபதியோ,

“அப்போ எப்படியப்பா உனக்கு விவாகரத்து தராமல் இருக்க முடியும்….?”

என்று கேட்க, மங்கலமும் தன் பங்கிற்கு நீதிபதியிடம் கைகூப்பி கெஞ்சுகிறாள்,

“நீங்களே கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க ஐயா… இவன் இப்புடி தான் திருந்தவே மாட்டான்…. ப்ளீஸ், எனக்கு உடனே இவன்ட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்க…!”

💒மறுமணாகும்…

🤔ஒத்த கேள்வி தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக வேணும்…? , கமெண்டடில் சொல்லுங்கோ அதுவே தீர்பாக வழங்கிடலாம்…. வாசகர் விருப்பமே என் விருப்பம் …. அதை மதிக்கிறேன்… அதை அறிய ஆவலும் கூட….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!