Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 6

CHAPTER 6

“இளவேனில்🍀🫂சாய்ந்தாட ஒரு தோள்…!!!”

By மோ.நித்யா சபரி · November 7, 2026

2

அத்தியாயம்-6-

‘வாரிசு!’ என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், பிள்ளைகளின் பாசத்திலும் பொறுப்பிலும் உருகிப்போகும் சாரதாவின் செண்டிமெண்டான தாய்மனம் பலவீனமடையவும்…..

தன் முடிவை டேவிட்டுடைய கண்களிலேயே பேசினவளது தலையை மென்மையாகத் தடவிக்கொடுத்து,   

“உன் விருப்பம் என்னவோ அதை தைரியமா சொல்லு சாருமா… எதுனாலும் எனக்கு ஓகேதான்!”        

என்று முழுச் சுதந்திரமும் ஆதரவும் அளித்தவர் தந்த  அந்தத் தைரியத்தைக் கொண்டு, தன் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும் வாரிசுக்காகவும் ,

‘நமக்குள்ளாக இந்த மறுமண வேண்டாம்! ‘

என்ற முடிவைச் சாரதா டேவிட்டுடன் பகிர்ந்துகொண்டவளின் தியாக மனதைப் புரிந்துகொண்ட டேவிட்டும்,   

     “ஒன்னும் பிரச்சனை இல்ல சாருமா… நீ சொல்றதுதான் சரி…!”    

    என்று கனிவோடு ஏற்றுக்கொள்ள….​மகன் குமரனும் மருமகள் யாழினியும் தங்களது நயவஞ்சகத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதில் குதூகலித்தனர்…. ஆனால், வருணியோ உள்ளம் குமுறிக் கொதித்தெழுந்து,  

  ​’ என்ன மம்மி டீச்சரா இருந்தும் இவ்வளவு பழமைவாதமா, முற்போக்கு சிந்தனை இல்லாம இருக்காங்களே…!, இதுக்காக போய் மறுமணம் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க…. அதேபோல டேவிட் அங்கிளும் அதை  கேட்டு மம்மிட்ட மறுத்து பேச மாட்டேங்குறாரே…!’   

  என்று மனதுக்குள்ளாக மகள் ஆதங்கப்பட…, அதே நேரம் அடுத்த கணமே…!, டேவிட்டின் மாண்பையும் எண்ணி வியந்தவள்,    

​’ஆனா, டேவிட் அங்கிள் ரொம்ப நல்லவர் போலயே….!, இதே வேற யாராவது இருந்திருந்தா… இந்த இடத்துல நடப்பதே வேற மாதுரி இருந்திருக்கும்ல…! தம்பியையும் தம்பி மனைவியையும் நாலு வார்த்தை திட்டியதுபோக…., அம்மாகிட்டயும் சண்டை போட்டுட்டு பிரேக்கப் பண்ணிட்டு  போயிருப்பாங்க…!’

என்று  வருணி நினைக்கவும்…..​அதே எண்ணம் தான் சாரதாவின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது…. டேவிட் காட்டிய அந்தப் பெருந்தன்மையையும் பாசத்தையும் எண்ணி நெகிழ்ந்த சாரதா, அவரின் தோளில் சாயாந்தவாரே உடனேயே அப்படியே அவரை இறுக்கமாகக் கட்டிக்கொண்டும் கண் கலங்க….. 

    ​அதே நேரத்தில், குமரனும் யாழினியுமாக தங்கள் மனதிற்குள்ளேயே ஒரு கண யோசனைக்கு வந்தவர்களாக,     

‘ஆமாம்ல… இந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா…., நம்மகிட்ட சண்டை போட்டுட்டு அம்மாவ என் கூட வாடி பேசாமன்னு அவரோடு கூடவே இழுத்துட்டு இங்கிருந்து கூட்டி போயிருப்பாங்க….! , இல்ல அம்மாவின் முடிவை எதிர்த்து பேசிவிட்டு அப்படியே அம்மாவ  வெறுத்தும் பிரிஞ்சே போயிருப்பாங்க….!, அதையெல்லாம் செய்யுறத விட்டுட்டு உடனே  இவர் அமைதியா ஓகே சொல்லிட்டாரே… மனுஷன் ரொம்ப பெருந்தன்மையானவர் தான் போல…! அதேபோல ரொம்ப பொறுமையானவரும் கூட....!’

என்று அதுகள் நினைக்க …. ஆனாலும், அடுத்த வினாடியே மீண்டும் தங்களின் சுயநல முடிவுக்கே திரும்பவும் செய்தவர்களோ, 

   ‘சரி, மனுஷன் நல்லவனாத்தான் இருக்கான்…. ஆனா அதுக்கென்ன செய்ய முடியும்…?,  நமக்குத்தான் அம்மா கண்டிப்பா தேவையா இருக்காங்களே.., இப்போதைக்கு அவங்கள வெச்சுப்போம்…, அப்புறம் பாத்துக்கலாம்….!’        

என்று தங்கள் வஞ்சக எண்ணத்தை மூடி மறைக்கவும்…​ மகள் வருணியோ, தன் தாயின் தியாகத்தையும், டேவிட்டின் பெருந்தன்மையையும் தாங்கிக்கொள்ள முடியாமல் குறுக்கிட்டவள்,        ​

“இங்க பாரு குமரன்…!, மம்மிக்கு இப்படி ஒரு தங்கமான மனிதர் கிடைக்கவே வாய்ப்பில்ல….!, அவங்களுக்குமே தேவையான ஸ்பேஸ் கொடுடா ப்ரோ…!”     

என்று தம்பியைக் கண்டித்து முறைக்கவும்….. குமரனுக்குள்ளும் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது… ஆனால், தங்களின் திட்டம் பலித்த மகிழ்ச்சியில் மீளாது மேலும் அமைதி காக்க….​அப்போது அனைவரையும் அமைதிப்படுத்தும் விதமாக குறுக்கிட்டு டேவிட் பேசினவன்,      

     ​”வருமா… தம்பி குமரன் பாவம்மா, விடு….!, மேரேஜ் பண்ணாத்தான் சாரதா என் ஒய்ஃப்னு இல்ல… இப்பவே அவ என் ஒய்ஃப்பா தான் என் மனசுல இருக்கா…!, இந்த பிரிவெல்லாம் எனக்கு பெருசேயில்ல… நான் அப்பப்போ வந்து சாரதாவ பார்த்துட்டு போயிக்குறேன் எனக்கொண்ணும் அதுல சிரமமோ பிரச்சனையோ இல்ல…. அப்புறம் என்ன உதவி வேணும்னாலும், குமரன்… என்னை உங்கப்பாவாக நினைச்சுக்கிட்டு வந்து சொல்லு..!, ஒரு அப்பாவோட இடத்தை முழுசா என்னால நிரப்ப முடியாதுதான், ஆனாலும் உனக்கு தேவையான அத்தனை உதவியையும் என்னாலும் செய்ய முடியும் செய்வேன் நம்பு….!”      

 

​ அவன் பேசிய அந்தப் பக்குவமான வார்த்தைகள் அங்கே நின்ற அத்தனை பேரையும் ஒரு நிமிடம் தலைகுனிய வைக்கவும்… தொடர்ந்து சாரதாவையும் பார்த்துக் கூறினார் டேவிட்,        ​

” சாருமா… நீ இன்னைக்கே அவங்க வீட்டுக்கே போயிடு…!, உன் வீட்டை வேணும்ன்னா வாடகைக்கே விட்டுரு… நான் என் வீட்ல தனியா இருந்துக்குறேன்…., சரியா…?”  

     ​டேவிட் அப்படிச் சொன்னதும், சாரதாவின் முகம் வாடிப்போக…. அந்தப் பிரிவைத் தாங்க முடியாத அவளது தவிப்பைக் கவனித்த வருணியும் மிகுந்த மனவேதனை அடைந்தாள்.. இதைப் பார்த்துக் கொண்டிருந்த குமரனுக்கும் யாழினிக்குமே,      

‘தாங்கள் செய்தது முறையா…? ‘   

    என்கிற குற்ற உணர்வு! சிறிதளவாக அவர்களுக்குள்ளேயும் ஏற்பட்டு…. , அவர்களின் கல்நெஞ்சத்தைக் கரைக்க …

அப்படியாக  அங்கே முழுவதும் ஒரு கனத்த அமைதியும் குற்ற உணர்ச்சியும் கலந்த மௌனம் நிலவிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில்… திடீரென்று அந்தப் பார்ட்டி ஹாலின் ஸ்பீக்கர்களில் இருந்து ஒரு இனிமையான குழந்தைப் பிறப்புக்கான பாடல் ஒலிக்கத் தொடங்கியது….!​,       அதன் விளைவாக,  அங்கு என்ன நடக்கிறது…?, என்று ஒன்றும்  புரியாமல் அனைவரும் ஒருவருக்கொருவர் திருட்டு விழியுடன் விழித்து, 

     ‘திடீர்னு என்ன பாட்டு சத்தம் கேட்குது…? , எதுக்கு போட்டாங்க…?, யாரு போட சொன்னது….?’    

  என்று  சாரதாவும், அவளின் குடும்பத்தினரும்  திகைத்து நின்றிருந்தார்கள்…..​ஆனால், அங்கே டேவிட் முகத்தில் மட்டுமே ஒரு கள்ளம்கபடம் இல்லாத சிறு புன்னகை மலர்ந்திருக்கவும்….. எல்லாரும் குழப்பமாக அவரையே பார்க்க…., அவரோ கூலாகச் சிரித்தபடியே பேசத் தொடங்கினவர்,​

“ஹேய்…   யாழினி கர்பமா இருக்காளே அதுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமில்லயா…?, அதான்… நீங்க எல்லாருமா உங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருந்தப்போ, நான் தான் ரகசியமாக ஹோட்டல் மேனேஜர்கிட்ட போன்ல பேசி இதையெல்லாம் ஏற்பாடு பண்ணேன்…!”  

என்று டேவிட் சொல்லவும்….. அடுத்த நொடியே, பார்ட்டி ஹாலின் நடுவே மற்றொரு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது….!, மிக நேர்த்தியான, அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய, ஒரு சின்னஞ்சிறு குழந்தை பொம்மை அமர்ந்திருக்கும் ஒரு ஸ்பெஷல் கேக்! அவர்களிருந்த  பார்ட்டி  ஹாலுக்கு கொண்டுவரப்பட்டு,  அங்கேயிருந்த வசீகரமான டைனிங் டேபிளில் பத்திரமாக அலங்கரித்து வைக்கப்பட்டது….. அதுவுமே டேவிட்டின்  ஏற்பாடுதான்…!,   

   ஆகையால் , அப்படியே டேவிட் தனது பாசமான பார்வையை குமரன் மற்றும் யாழினி மீது  செலுத்திவிட்டு,

“ம்ம்… என்னப்பா  வேடிக்கை பாக்குறீங்க….?, கடைக்குட்டி சிங்கம் குமரன்… நீயும் உன் ஓய்ஃபும் சேர்ந்து சீக்கிரமா இந்த கேக்கை வெட்டுங்கப்பா…!”    

என்று உரிமையோடு அழைக்க….​சாரதாவும் தன் பங்குக்கு,   

   “அதான் அங்கிள் சொல்றாருல… வெட்டுங்கப்பா!”   

   என்று பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கினவள் சொன்னதற்காகக் குமரன் முகத்தை மலர வைத்துக்கொண்டு,    

     ‘மம்மிய இப்போதைக்கு கவர்ந்தால் தானே…. மம்மி நம்ம பேச்சை கேட்டு நம்ம கூட நம்ம வீட்டுக்கு வர சம்மதிப்பாள்…!’    

     என்ற சுயநலக் கணக்கோடு கேக்கை வெட்டத் தயாராகவும்…. அதை போலவே அவனுடன் சேர்ந்து யாழினியும் ஒரு செயற்கையான சிரிப்போடு கேக்கை வெட்ட தயாரானவள், ஜோவிகா பாப்பாவையும் சேர்த்து தங்களுடன் நிற்க வைத்துக் கொண்டு, தம்பதிகளும் ஜோ பாப்பாவுமாக கேக் வெட்டும்  கத்தியை தங்களின் கரங்களால் ஒனன்றாகப் இணைந்துப் பிடித்துக் கொண்டு  அந்தக்  கேக்கை இன்பமுடனே வெட்டினார்கள்….   

அப்படியாக அங்கே குழுமியிருந்த மற்றவர்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே அந்த கேக் வெட்டப்பட்டாலும், அங்கே நின்றிருந்த வருணியின் முகம் மட்டும் கவலையிலும் வருத்தத்திலுமே மூழ்கியிருக்கவும்….காரணம், தன் தாயின் தியாகத்தையும், டேவிட்டின் பெருந்தன்மையையும் பார்த்துக் கொதித்த அவளது மனம், அந்தச் சுயநலக் கூட்டத்தின் நாடகத்தைக் கண்டு உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது…..   

அப்போது சாரதாவின் நெஞ்சிலோ கனத்த பாரம் ஒன்று அழுத்திக் கொண்டிருக்க…. அதனைத் தொடர்ந்து ​அவளுக்குள்ளே பலவிதமான வேதனைகளும் அலைமோதின…      

        தன் காதல் கணவன்  தமக்கென ஆசையாகக் கட்டிய அந்தச் சொந்த வீட்டை விட்டுவிட்டு, அவள் வேறு எங்குமே போனதில்லையே…  ஆனாலும், தன் வாரிசுக்காக மன்றாடும் மகன் வீட்டுக்குத் தான் போய் ஆக வேண்டுமே என்ற நடைமுறைச் சிக்கல் அவளை வாட்ட…. ​அதைவிடவும் பெரிதாக அவளது தாய்மனதைத் துளைத்தெடுத்தது வருணியின் எதிர்காலம்….!,     

    ‘எனக்குப் பிறந்து, இத்தனை வருடங்கள் என்னோடு போராடி, என் கஷ்டங்களையெல்லாம் தாங்கி வளர்ந்த மூத்த மகள் வருணி இவள் ஆயிற்றே…! இவளுக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல வாழ்க்கையும் துணையும் இன்னும் அமையவில்லையே…?’  

   என்று எண்ணியபோது, சாரதாவின் நெஞ்சம் விம்மி தவிக்க…. அதோடு டேவிட்டின்  பிரிவையும்  நினைத்து வருந்த,அப்படியே  மூத்த மகளின் நினைப்பும் திரும்ப வர….மகளது தனிமையும் அவளது எதிர்காலமும் அவளுக்குப் பெருந்துயரமாகத் தொற்றிக் கொண்டது….

   அவளது முகத்தில் நிழலாடிய இந்த வேதனைக் ரேகைகளையும்…, அவள்  மனம் படும் பாட்டையும் குறிப்பால் உணர்ந்து கொண்ட டேவிட்டோ​எப்பொழுதும் போலத் தன் இயல்பான பக்குவத்தோடு அவளருகிலே வந்து, மென்மையாகத் தன் அகன்ற தோளை அவளுக்கு ஆதரவளிக்கும் விதமாகத் தட்டவும்…..        வார்த்தைகள் ஏதும் பேசத் தேவையில்லை…. அவனது அந்த செய்கையே போதும் அவளது அத்தனை வலிகளுக்கும் ஆறுதலாக இருந்தது….

ஆனாலும் , தன் துயரங்களை அடக்க முடியாமல், டேவிட்டின் தோள்களிலேயே சாய்ந்து கண்கலங்கினாள் சாரதா…. அதை கண்ட வருணிக்கு மூளையில் ஒரு பொறி தட்டவும் …. உடனே அதை தனது சகோதரனிடம் பகிர்ந்திக் கொள்கிறாள் … அப்பொழுது அவர்களுடன் இருந்த அவனது மனைவியும்  அதை கேட்டுக் கொண்டிருக்கவும்… அப்போதைக்கு வருணி சொன்ன அந்த யோசனைக்காக… ‘சரி’  என்று தம்பதிகளான குமரனும் யாழினியும் ஒப்புக்கொண்டார்கள்…

அவர்களின் அந்தச் சம்மதத்திற்குப் பிறகு, அடுத்த வினாடியே அந்தப் பார்ட்டி ஹாலில் ஒரு புதிய சூழல் உருவாகி…. சற்று முன்பு குழந்தைப் பிறப்பிற்கான பாடல் ஒலித்த அந்த இடத்தில், இம்முறை மிக மெல்லிய, காதலைத் தாலாட்டும் ஒரு ரம்மியமான திருமண இசைப் பாடல் ஒலிக்கத் தொடங்க…!    

    ​அங்கு என்ன நடக்கிறது…?, என்று புரியாமல் திகைத்த சாரதாவோ, உடனே தான் தோள் சாய்ந்திருந்த டேவிட்கிட்ட ,   

      “இதுவும் உங்க வேலைதானா….?”    

🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…

♥️😁இது டேவிட் வேலையா இல்ல யாரு வேலை கொஞ்சம் கமெண்டையும் எட்டிப் பார்த்து பதிலை சமிட் பண்ணிட்டு போங்க பட்டூஸ்….

🔥🪔இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏♥️💛🙏

← Previous All Chapters Next →

1 comment

Jeyanthi November 7, 2026 - 3:42 pm

சூப்பர் சூப்பர் மா 👌👌👌👌👌👌

Leave a Comment

error: Content is protected !!