Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 28

CHAPTER 28

பனித்துளி 28

By seema · November 7, 2026

0

இரண்டு வீட்டாரும் ஒன்று கூடிப் பேசி, வரும் வைகாசி மாதத்திலேயே கல்யாணத்தை அமோகமாக நடத்திவிடலாம் என்று சுபமுகூர்த்த நாளைக் குறித்து முடிவெடுத்தார்கள்.வழக்கம் போல் எழில் பகலில் மருத்துவமனை வேலைக்குச் சென்றுவர, மாலை வேளைகளில் ராயனின் காதல் சேட்டைகளும் அக்கிரமங்களும் எல்லை மீறிக்கொண்டே இருந்தன.

கல்யாணத் தேதி குறித்த நாளிலிருந்து அவனது உரிமையும் காதலும் பலமடங்கு கூடியிருக்க, அவனது அசுரத்தனமான காதலைச் சமாளிப்பதே அவளுக்குப் பெரும் பாடாக மாறியிருந்தது.

அப்படித்தான் ஒரு நாள், வழக்கம்போல மாலை டியூட்டி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்திச் சாய்ந்து இருள் மெல்லப் படர்ந்துகொண்டிருந்த நேரம். திடீரென வழியோரப் பெரிய மரத்தின் பின்னாலிருந்து பாய்ந்து வந்த இரண்டு கரங்கள், அவளைப் பற்றி இழுத்து வாயைப் பொத்தின.

அதிர்ச்சியில் எழில் விழி பிதுங்க, “நான்தான்டி… கத்தாத!” என்று அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

“இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் காட்டுக்குள்ள போறோம்!” என்றான் அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றியபடி.

எழில் அவனது மார்பில் லேசாகக் குத்தி, “என்னது? இந்த இருட்டுல காட்டுக்குள்ளயா? காதல் பண்றதுக்கு இந்த நேரம்தான் கிடைச்சுதா?” என்று படபடத்தாள்.

“அதெல்லாம் பொண்டாட்டி கூட வரும்போது நேரம் காலம் பார்க்க முடியாதுடி… வா!” என்று அசால்ட்டாகச் சொல்லி, அவளது ஆட்சேபனைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அவளைக் காட்டுப் பாதைக்குள் அழைத்துச் சென்றான்.

நிலவின் மெல்லிய வெளிச்சம் மரக்கிளைகளின் இடைவெளியினூடே கசிந்து வர, கானகம் ஒரு மாய உலகத்தைப் போல அமைதியாகக் காட்சிளித்தது. ராயன் நேராக அவளை அந்தச் சுனை பாறை அமைந்திருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

சில்லென்றக் காற்றும், சுனை நீரின் சலசலப்புச் சத்தமும் அந்த இரவின் அமைதிக்கு மேலும் அழகு சேர்த்தன.பாறையின் மீது அவளை உட்கார வைத்தவன், சற்றும் யோசிக்காமல் அவளது மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டான்.

அவளது சேலைத் தலைப்பை எடுத்துத் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டவன், நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.”எத்தனை நாளுடி இதற்காக எல்லாம் ஏங்கி தவிச்சிருக்கேன் தெரியுமா? கண்ணு முன்னாடி உன்னை வச்சுக்கிட்டு, உன்னைத் தொட முடியாம என் கையும் உடம்பும் பட்ட பாடு இருக்கே… அதெல்லாம் எனக்குத்தான் தெரியும்! உனக்கு அதெல்லாம் புரியுதாடி நர்சம்மா?” என்றான் உணர்ச்சி கொந்தளிக்கும் குரலில்.

பேசிக்கொண்டே அவனது கரங்கள் அவளது இடுப்பையும் உடலையும் மெல்ல உரசியபடி மேலே நகரத் தொடங்கின.எழில் சடாரென அவனது கையைப் பிடித்துத் தட்டிவிட்டு, “கல்யாணத்திற்கு முன்னாடி என்ன வேலை பண்றீங்க? ஒழுங்கா அமைதியா படுத்து தூங்குங்க!” என்று பொய்யான கோபத்தோடு சொன்னாள்.

ராயன் மீசையோரச் சிரிப்போடு, “எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணப் போறதுக்கு ஒரு சின்ன டிரையல் பார்க்கிறதுதான்டி!” என்று கரகரத்தக் குரலில் சொல்லி முடிக்கும் முன்பே, மின்னல் வேகத்தில் எழுந்து அவளது கழுத்தை வளைத்துப் பிடித்து, தன் வலிய உதடுகளால் அவளது இதழ்களை ஆழமாகச் சிறைபிடித்தான்.

அவனது காதலின் வேகம் அவளைச் சுழன்றடிக்க வைத்தது. நீண்ட நேரமாக அவளது கழுத்தை வளைத்து, இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டே இருக்க, எழிலுக்குக் கழுத்துப் பகுதி லேசாக வலிக்கத் தொடங்கியது. அவளது உடலில் ஏற்பட்ட சிறிய அசைவையும் சிரமத்தையும் உடனே உணர்ந்துகொண்டான் அந்த அசுரன்.

மெல்ல நிதானமாக அவளிடமிருந்து விலகியவன், அவளது கண்களைப் பார்த்து, “என்னடி… கழுத்து வலிக்குதா?” என்று அக்கறையோடு கேட்டான்.

எழில் மூச்சிரைக்க, அவனைக் கொஞ்சம் வம்பிலுப்பதற்காக, “இல்லையே… குளு குளுன்னு நல்லாத்தானே இருக்கு!” என்று கண்சிமிட்டிச் சொன்னாள்.

அவனது முகத்தில் ஒரு குறும்புத்தனமான அசுரச் சிரிப்பு பரவியது. “அப்படியா மேடம்? அப்ப அடுத்தடுத்த லெவலுக்குப் போலாமா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, அவளை நோக்கி இன்னும் நெருங்கி வர…”ஐயோ!” என்று அலறிய எழில், அவனைத் தள்ளிவிட்டு எழுந்து ஓட முயல, ராயன் உரக்கச் சிரித்தபடியே அவளை மீண்டும் வளைத்துப் பிடித்துத் தன் மார்போடு இறுக்கிக்கொண்டான்.

ராயனின் பலமான கையணைப்பில் எழிலின் உடல் கட்டுண்டிருக்க, இருவரின் கால்களும் கீழே சலசலத்தோடும் சுனை நீரில் மிதந்து கொண்டிருந்தன. குளிர்ந்த நீர் பட்டதும், அவள் தன் கால்களை லேசாக உதறிக்கொண்டே, அன்னார்ந்து அவனது கம்பீரமான முகத்தைப் பார்த்தாள்.

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…” என்று அவள் தயக்கத்தோடு தொடங்க…அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதை அவளது விழி அசைவிலேயே படித்தவன் போல, ராயன் நிலவை வெறித்தபடி அமைதியான குரலில் பேசத் தொடங்கினான்:

“நீ என்ன கேட்க வர்றேன்னு எனக்குப் புரியுதுடி… அன்னைக்குக்கு நீ விருப்பமில்லைன்னு சொல்லிட்டுப் போனப்ப, உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நீ படிச்ச பொண்ணு. உனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்துல உன்னை வற்புறுத்த வேண்டாம்னுதான் நானும் அமைதியா இருந்துட்டேன்”

“ஆனா அதுக்கப்புறம் தங்கச்சிக்கும் சொக்கனுக்கும் கல்யாணம் முடிஞ்சு, குழந்தையும் பிறந்துடுச்சு. ஊர்ல இருக்குறவங்க, தெரிஞ்சவங்க எல்லாரும் ‘என்ன ஆச்சு? ஏன் இன்னும் இவனுக்குக் கல்யாணம் ஆகல?’ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ ஒரு கட்டத்துல, வீட்ல தெரிஞ்சவங்க மூலமா செம்பாவை பொண்ணு பார்த்து ஏற்பாடு பண்ணாங்க…”

ராயன் ஒரு பெருமூச்சோடு அவளது கண்களைப் பார்த்தான்.

“உண்மையிலேயே… நான் மனசார அன்னைக்கு அவ கழுத்தில் தாலி கட்டவே இல்லைடி. சொல்லப்போனால் தாலி கட்டுற நேரத்துக்கு மட்டும் தான் கோயிலுக்கே போனேன். அப்போ கூட அந்த மலையாத்தாகிட்ட மனசுக்குள்ள புலம்பினேன்… ‘மனசுக்குள்ள என் அரசியை நினைச்சுக்கிட்டு, வேற ஒரு பொண்ணுகூட என்னால எப்படி வாழ முடியும்?’னு கேட்டு வடிச்ச கண்ணீர்தான்டி அது அறுந்து போயிட்டு..ஆனால் நம் பந்தம் இது கடவுள் போட்ட முடிச்சு..!”தான் கேட்க நினைத்த கேள்விக்கு, அவன் இவ்வளவு உணர்வுப்பூர்வமாகப் பதில் சொன்னதும் எழினின் மனம் உருகிப் போனது.

இத்தனை வருடங்களாகத் தன் மீது அவன் வைத்திருந்த ஆழமான காதலையும் ஏக்கத்தையும் நினைத்து அவளது கண்கள் பனித்தன.

எதுவும் பேசாமல், தன் இரண்டு கரங்களையும் அவனது பிடரி வழியே கொண்டு சென்று, அவன் கழுத்தில் மாலை போல இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டு, அவனது காதோரம் நெருங்கி,”லவ் யூ” என்று முதன்முறையாகத் தன் மனதிலிருப்பதை உரக்கச் சொன்னாள்.

ராயன் அப்படியே அதிர்ந்துபோய் அவளைப் பார்த்தான். “என்னடி சொன்ன?” என்று அவனது அசுரக் குரல் தழுதழுத்தது.

“அதான்டா மாங்கா மண்டையா… ஐ லவ் யூ-ன்னு சொன்னேன்!” என்று அவனது மூக்கைத் தொட்டுச் சிரித்தாள்.

“நிஜமாவாடி சொல்றே?” – ராயனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“என்ன நிஜமாவா? பின்ன பொய்யா சொல்றேன்னு நினைக்கிறீங்களா?” என்று அவள் செல்லமாகக் கோபப்பட…”இல்லைடி… இதுவரைக்கும் நீ என்கிட்ட இப்படிச் சொன்னதே இல்லையே!” என்றான் அவளது இடையை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடி.

“ஏன்… நீங்கள் மட்டும் என்னிக்காவது என்கிட்ட இப்படிச் சொல்லியிருக்கீங்களா என்ன?” என்று அவனை வம்பிற்கு இழுக்க…”நான் தமிழ்ல சொன்னேன்டி அரசி!” என்றான் தன் மீசையை முறுக்கியபடி.

“நான் இங்கிலீஷ்ல சொன்னேன்… எப்படிச் சொன்னாலும் விஷயம் ஒண்ணுதானே அசுரா?” என்று எழில் குறும்போடு சிரிக்க, அந்தச் சலசலக்கும் சுனை நீரின் நடுவே இருவரின் சிரிப்பொலியும் காதலைச் சுமந்து கொண்டு கானகமெங்கும் எதிரொலித்தது.

நிலவொளி சுனை நீரின் மிளிரலில் காதலியின் வெதுவெதுப்பான அணைப்பும், அவளது அசைவுகளும் சேர்ந்துகொள்ள ராயனின் உணர்ச்சிகள் எல்லை மீறி ஆன்மா வரை ஊடுருவின.

அவளது மெல்லிய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து, மோகத்தின் லாகிரியில் திளைத்தவன், “நமக்குத்தான் காடு சாட்சியா கந்தர்வ திருமணம் ஆயிடுச்சேடி…” என்று மெல்லிய கிசுகிசுப்பான குரலில் அடுத்த கட்டத்திற்கு அழைப்பது போலச் சொல்லாமல் சொன்னான்.

அவன் சொல்ல வருவதைப் புரிந்துகொண்ட எழில், “ஐயோ!” என்று உதடசைத்து அலற முயலும் முன்பே, அவளது உடலோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு அந்தச் சுனைப் பாறையில் அவளோடு சரிந்தான்.

அவனது அசுரத்தனமான கம்பீர தேகம் தன் மெல்லிய உடலை அழுத்தவும், எழில் லேசாக முகத்தைச் சுருக்கினாள். அதைக் கண்ட ராயன், அவளது பயத்தைப் போக்குவது போல முகம் முழுவதும் எண்ணற்ற முத்தங்களைப் பொழிந்தான்.

“முறைப்படி ஊர் அறிய மூன்று முடிச்சு போட்டுத்தான்டி உன்னைக் முழுசா எனக்குள்ள எடுத்துப்பேன்… சும்மா பயப்படாத,” என்று அவள் காதோரம் முணுமுணுத்தான்.

எழில் லேசான குறும்பான சிரிப்போடு, “எனக்குத் தெரியுமே… நீங்கள் அதுக்கெல்லாம் லாயக்கே இல்லைனு!” என்று அவனை வம்பிலுக்க…”என்னடி சொன்ன? இப்போ நான் என்ன பண்றேன் பாருடி!” என்று ஆத்திரமும் காதலும் மேலிட அவளது சேலை முந்தானையில் கை வைத்தான்.

“நீங்கள் அடுத்த கட்டத்துக்கு முயற்சி பண்ண மாட்டீங்க… உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும் அசுரா!” என்றவளோ தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினாள்.

“ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் நல்லவன் இல்லைடி!” என்று கரகரத்தக் குரலில் சொன்னவன், பட்டென்று அவளது முந்தானையை லேசாக இழுத்தான்.அவனது அந்த திடீர் செய்கையில் எழில் பதறிப்போய், “என்ன பண்றீங்க!” என்று பிரண்டு விலக முயன்றாள்.

நிலவொளியில், சேலை விலகி பாவாடை சட்டையோடு கைகளை குறுக்கே அணை போல கட்டிக்கொண்டு நிற்கும் தன் அரசியின் பேரழகைக் கண்ட ராயனின் விழிகளில் காதலும் காமமும் ஒருசேரக் கலந்தன.

அவளது முகத்தில் தெரிந்த லேசான தயக்கத்தையும் பயத்தையும் கண்டவன், “அரசி…” என்று உருகும் குரலில் அவளை மீண்டும் தன் மார்போடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

“வேண்டாங்க… இது தப்பு,” என்று அவளது குரல் நடுங்கிக் கெஞ்சியது.அவளது மென்மையான குரலும், உணர்வுகளும் அவனைக் கட்டுப்படுத்தின.

“மனசுக்கு நீ சொல்றது புரியுதுடி… ஆனா என் உடம்பும் உணர்ச்சியும் கேட்க மாட்டேங்குதே! சரி வா… நாம இங்கிருந்து போயிடலாம்,” என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவளது உணர்வுகளுக்கு முழு மதிப்பு கொடுத்தவன் கீழே விழுந்து கிடந்த அவளது புடவையை எடுத்து அவளிடம் நீட்ட, எழில் வேகமாகத் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.

பின்னர், இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி தோளில் கை போட்டுக் கொண்டு காட்டின் ரகசியப் பாதை வழியே அமைதியாக நடந்து வந்தனர்.

வீட்டின் பின்வாசல் வரை அவளைப் பத்திரமாகக் கொண்டுவந்து விட்டவன், தன் மாடி அறையை நோக்கிச் சென்றான்.

மாடி அறையில் வந்து படுத்த ராயனுக்குத் தூக்கம் வரவில்லை. அந்த நிலவொளியில் தான் கண்ட தன்னவளின் தேக வனப்புகளும், அவளது உடலின் வாசமும், இதழ்களின் மென்மையும் அவனது நெஞ்சை ஆழமாக இம்சித்துக் கொண்டிருந்தன.

அங்கே தன் வீட்டில் படுத்திருந்த எழிலின் நிலைமையும் அதற்கு விதிவிலக்கல்ல!

தன்னவனது கரங்களின் கரடுமுரடான தீண்டலும், அவன் கொடுத்த முத்தங்களின் சூடும் தன் உடலெங்கும் பரவியிருக்க, கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தபடி அந்த அசுரனின் நினைவுகளிலேயே இரவு முழுவதையும் கழித்தாள்.

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!