Stories that touch hearts

Home  /  41. தமிழாழினி (பிறை தேயவில்லை)  /  Chapter 4

CHAPTER 4

பிறை 4

By Tamizhyayini · November 6, 2026

1

இவ்வளவுக்கும் இத்தனை வருடங்கள் கழித்து, பிறை இப்படி அழுதுகொண்டு படுக்க…

குழந்தையை அவள் மடியில் இருந்து வாங்கியவன், அவளை நேருக்கு நேராகப் பார்த்து… “நீ இவ்வளவு அழற… ஆனா, உன்மேல எனக்கு இரக்கமே வரமாட்டேங்குதே! பாரேன்!” என்றான் அலட்சியமாகச் சிரித்தபடி.

அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அந்த நொடி  பிறையின்  அழுகை  நின்றது.அவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கோபம் இருந்தது. ஆற்றாமை இருந்தது. எல்லாவற்றையும்விட, தான் உயிராக நேசித்த ஒருவன் தன்னுடைய வலியைக் கூட உணர மறுக்கிறானே என்ற வேதனை நிறைந்திருந்தது.

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “நான் என்னடா உனக்குப் பாவம் பண்ணேன்?” என்று கேட்டு குரல் உடைந்து அழுதாள். நீயே கதின்னு இருந்தேனே! உன்னைத் தவிர எனக்கு வேற யாருமே வேண்டாம்னு நினைச்சேனே! உனக்காக எத்தனை வலிகளைத் தாங்கியிருப்பேன்? எத்தனை அவமானங்களைச் சகிச்சிருப்பேன்? அப்போதெல்லாம் உன்னை விட்டுப் போகணும்னு கூட நினைக்கலையேடா!” என்று  அவள் தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள்.

பாவம் அவளும் என்ன செய்வாள்  இவையெல்லாம் ஒரு நாள் மாறும்  தன் அன்பை அவன் புரிந்து கொள்வான், என்று நம்பினால்  ஆனால் அந்த நம்பிக்கை  அவன் கூறிய அந்த ஒற்றை வார்த்தையில் உடைந்து போனது.

நீண்ட நேரமாக அழுதவள்,  நான் உனக்கு என்ன குறை வச்சேன்? சொல்லுடா… நான் என்ன குறை வச்சேன்? என்று கேட்டாள்.

ஆனால் அவளுடைய ஒவ்வொரு கேள்வியும் சுந்தரின் காதுகளில் விழுந்தாலும், அவற்றை உணர மறுத்தவனைப் போல அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவனுடைய கைகளில் இருந்த அப்பு, அம்மாவின் அழுகையைப் பார்த்துப் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

அவளுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்ததும், தன்னுடைய சின்னஞ்சிறு கைகளை நீட்டி அவளின் கண்ணீரை துடைக்க முயன்றான்.

ஆனால் சுந்தரோ அவனை தன் பக்கம் திருப்பிக்கொண்டு, “அப்பா உனக்குப் புது மம்மி ரெடி பண்றேன் பா! இவ கிடக்குறா… டம்மி!” என்றான் ஏளனமாக.

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறை, தன் மகனைப் பார்த்தாள்.அவளுடைய இதயத்தில் ஏற்கெனவே ஆறாத காயங்கள் நிறைந்திருந்தன. இப்போது தன்னுடைய குழந்தையின் முன்னிலையிலேயே, அதன் அம்மாவை வேண்டாதவள் என்று சுந்தர் பேசுவது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சுந்தர்! என்று அழைத்து இதோட நிறுத்திக்கோ, என்றாள்.

ஆனால் அவனோ அவளுடைய வார்த்தையைப் பொருட்படுத்தாமல் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, என்னடா செல்லம்… அப்பா உனக்கு இன்னொரு அம்மாவைக் கூட்டிட்டு வரட்டுமா? என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்டதும், அப்புவின் முகம் சட்டென்று மாறியது.

அவனுக்கு அப்பா சொல்வதன் அர்த்தம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால், அம்மாவைச் சுட்டிக்காட்டி அப்பா பேசுவது மட்டும் பிடிக்கவில்லை. உடனே சுந்தரின் கைகளிலிருந்து திமிறிய குழந்தை, பிறையை நோக்கித் தன்னுடைய இரு கைகளையும் நீட்டி அம்மா… அம்மா வேணும்! என்று மழலை குரலில் அடம் பிடித்தது.

அதைப் பார்த்து பிறையின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீருடனே “அப்பு…” என்று அவள் அழைத்த அடுத்த நொடியே, சுந்தரின் பிடியிலிருந்து விடுபட்ட குழந்தை அவளுடைய மடியில் வந்து விழுந்தது.

அவளை இறுகக் கட்டிக்கொண்டவன், தன்னுடைய சின்னஞ்சிறு முகத்தை அவளுடைய மார்பில் புதைத்துக்கொண்டு, “எனக்கு இந்த மம்மிதான் வேணும்… வேற மம்மி வேணாம்!” என்று அழுதான்.

அந்த ஒரு வாக்கியம் பிறையின் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது. தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைத்திருந்தவளுக்கு, இன்னும் தன்னை உயிராக நேசிக்கும் ஒரு உறவு இருக்கிறது என்பதை அந்தக் குழந்தையின் அணைப்பு நினைவூட்டியது. அவள் அவனைத் தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

அம்மா இருக்கேன்டா செல்லம்… அம்மா உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன் என்று கூறி கண்ணீரோடு முத்தமிட்டாள். ஆனால், அந்த நொடி அவளுடைய மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. தன்னை வேண்டாமென்று சொல்லும் இந்த மனிதனோடு வாழ்ந்து, தினமும் என் குழந்தையின் முன்னால் இப்படியே அவமானப்பட வேண்டுமா?. என்று யோசித்தவளுக்கு பதில் தெரியாமல் தன் மகனின் தலையைக் கோதினாள்.

அப்புவோ அவளுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவளிடமிருந்து விலகவே மறுத்து அவளுடன் ஒட்டி இருந்தான்.

அவர்களுடைய பாசப் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரின் முகத்தில் ஒரு நொடி எரிச்சல் தோன்றியது.

சரி, சரி… அழாதே! உனக்கு இந்த மம்மிதான் வேணும்னா இருந்துட்டுப் போகட்டும். அப்பா வேற மம்மியைக் கூட்டிட்டு வர்றதை யாராலும் தடுக்க முடியாது! என்றான்.

அந்த வாக்கியத்தை கேட்ட பிறை அவனை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்குன்னா, எனக்கும் என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு, சுந்தர். அதுக்காக இந்தக் குழந்தையை மட்டும் உன்னோட சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதே! என்றாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.

அவளின் வார்த்தையில் நிதானமும் உறுதியும் இருந்தது. அதைக் கவனித்த சுந்தர் ஏதோ பதில் சொல்ல வாயைத் திறந்தபோது, அவனுடைய கைப்பேசி ஒலித்தது. திரையில் அவளது பெயர் காயத்திரி… எடுத்து பேசியவன் ஒரு நிமிஷம் இரு என்றவன் ஃபோனை தன் கைகளால் மறைத்துக் கொண்டு இப்ப கூட நான் சொல்றதை நீ நம்ப மாட்ட… உனக்கு நம்பிக்கை வரணும்னா அவ கிட்ட பேசுறியா ? என்று கேட்டு அவனுடைய ஃபோனை பிறையின் காதில் வைக்க சென்றான்.

“ச்சி” என்று அவனது கையை தட்டிவிட்ட பிறை அவனை பார்த்து முறைக்க…

ஒரு நிமிஷம் நீ கட் பண்ணு செல்லம் மாமா உன் லைன்ல வரேன் என்றவன் காலை கட் செய்ததும். பிறையின் புறம் திரும்பி என்னது “ச்சி”யா? என்று கேட்டு அவளை அடிக்க கையை ஓங்கினான்.அடுத்த நொடி அவனது கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

கதை ரொம்ப சோகமா இருக்கா அழுகாச்சியா இருக்கா எதுனாலும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க ஃபிரண்ட்ஸ்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!