அத்தியாயம்-16-
வீட்டின் அழைப்பு மணி! அடித்த சத்தம் கேட்டதும்,
‘ஒருவேளை போலீஸ்தான் வந்திருக்கோமோ…? ,
என எப்பவும் நினைக்கும் மாணிக்கம் ,
‘ இப்ப வந்ததாவது போலீஸா இருந்தா நல்லா இருக்கும்… இந்த திருடிய புடிச்சு உள்ள வைக்கிறதுக்கு… எவ்ளோ தைரியம்….?, எனக்கு போய் டைவர்ஸ் நோட்டீஸ் குடுக்குறா…!”
என்று மனதுக்குள் ஆவேசமாகக் கருவிக் கொண்டே கதவைத் திறந்தவனுக்கோ அங்கே ஒரு ஈ, கொசு கூட இல்லை என்று அதிர்ச்சி!யாக இருக்க…..
”ஹையோ… இந்த ஏரியா பசங்க பந்து காம்பவுண்டுக்குள்ள விழுந்துருச்சுன்னு வந்து காலிங் பெல் அடிச்சுட்டு …. கதவ திறப்பது நான்னு தெரிஞ்சதும் ஓடிட்டானுங்க போலயே…?”
என்று பொறுமியபடியே அவன் திரும்ப முயல, மீண்டும் அவனது விழிகள் அதிர்ச்சியில் விரிகிறது….!!!, காரணம், அங்கே அவன் கண்ட காட்சி! அப்படி இருக்கவும்…. வாயை பிளந்தப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான்…
அப்படியாக ஒரு சொகுசு கார்! ராயலாக மண் தரையில் புழுதி பறக்க வந்து நின்றது!…. அந்த புழுதி மாணிக்கத்தின் கண்ணில் பட்டு பதம் பார்க்கவும்…. ,
“குய்யோ முய்யோ….!!!”
என்று கத்துகிறவன் மேலும் , நாசியிலும் புழுதியை நுகர்ந்திவிட,
“ஹாச்சூ…!, ஹாச்சூ…!”
என தும்மலும் எடுக்கிறது …. அதோடு வாயினுள்ளும் நுழைய ,
‘லொக்…!, லொக்….!’
என்று இருமலும் வருகிறது…. பிறகு ஒருவழியாக எல்லாத்தையும் சரிசெய்துக் கொண்டு மாணிக்கம் ஆசுவாசபப்படுத்திக் கொள்ளவும்… கண் இமைகளை கசக்கியப்படியும், நாசியை தேய்த்துவிட்டப்படியும் தன் கரங்களால் தொடர்ச்சியாக இவ்வாறு செய்துக் கொண்டே , மூக்கையும் உறிஞ்சிவிட்டு கண்ணையும் சுருக்கி புருவ மூடிச்சுகளுடனே கேள்வியாக…,
”யாருடா இது….?”
என்று மாணிக்கம் கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பந்தாவுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் காரில் இருந்து ஒருவன் இறங்கவும்…..அப்படியே, டிப்டாப்பாக கோட்-சூட்! போட்டுக்கொண்டு, மாணிக்கத்தின் வீட்டை நோக்கி வீரநடை போட்டு வந்தவன், நேராக மாணிக்கத்தைப் பார்த்து,
“ஹலோ… மிஸ்டர் தோட்டக்காரன்….!”
‘அடேய்….!, என் வீட்டுக்கே வந்துட்டு என்னையவே தோட்டக்காரன்னு சொல்றியாடா!…’
என்பதைப் போல மாணிக்கம் அவனை வெறித்துப் பார்க்க, வந்தவனோ அசராமல்,
“ஓகோ… தோட்டக்காரன் இல்லையா? ஆஹான்… அப்போ டிரைவர் தானே….!”
என்றவனை பார்த்து, மாணிக்கம் பல்லை ‘நரநர!’வெனக் கடித்துக் கொண்டே,
“இல்லை!”
எனத் தலையாட்டினான்….
“அப்போ… ம்ம்ம்… நீ சமையல்காரன்! சரியா…?”
”அடேய்…….. அடேய்… என்னை ரொம்ப டேமேஜ் பண்ணாதடா!”
என்று மாணிக்கம் புலம்பவும்…. வந்தவனோ விடுவதாக இல்லை….
”அப்போ நீ இந்த வீட்டுக்கு பால் போட வந்தவனா….?, இல்லை பேப்பர் போட வந்தவனா…?“
என்றுவிட்டு மேலும் ,
“இல்லை தண்ணீர் கேன்! போட. வந்தவனே ….? ”
என்றும் அவன் பாட்டாகவே பாடவும் … அப்படியே,
“ஆஹான்… ஆஹான்…”
என வரிசையாகவும் அவன் பட்டியலுமிட,
“இல்லை… இல்லை… இல்லவே இல்லை கோபாலு…!”
என்று சரோஜாதேவியை போல , வந்தவனுக்கு பதில் சொல்லிச் சொல்லியே மாணிக்கத்திற்கு வாய் வலித்ததுதான் மிச்சம்…!, இருந்தும் கட்டுபடுத்திக் கொண்டு,
” யோவ்! நீ யாருடா முதல்ல…?, அத சொல்லுடா!”
என்று மாணிக்கம் கடுப்பாகிப் பேச, வந்தவனோ, மாணிக்கத்தின் முகத்திற்கு நேராக தனது ஆள் காட்டி விரலை நீட்டி அவனது முகத்தை அளவெடுத்துவிட்டு, அப்படியே சுட்டிக் காட்டி ,
“இரு… இரு… கண்டுபிடிச்சுட்டேன்… நீ யாருன்னு….! , நீ……………நீ… ஒரு பிச்சைக்காரன்… சரிதானே …. உன் முகப்பொருத்தம் சொல்லுதே நீ ஒரு பிச்சைக்காரன்னு…!”
என்று மிகச் சாதாரணமாக சொல்லவும்…. அவ்வளவுதான்…!,
‘எரிமலை! எப்படிப் பொறுக்கும்…?’
என்பது போல கொதித்துப் போனான் மாணிக்கம்…. அப்படியே அவன் தன் ஒரு கையில் டைவர்ஸ் பேப்பரை வைத்துக் கொண்டே, இன்னொரு கையால் அந்த கோட்-சூட் ஆசாமியின் காஸ்ட்லி ரோலக்ஸ்! வாட்ச் இருந்த கையை பிடித்து நச்சுருவென வலுவாக அமுக்கினான்…!
அடுத்த நொடி, ‘டக் …டக்….!!!!’ என எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கவும்… அந்த சத்தம் கோட்-சூட் போட்டவனின் கையிலிருந்து வந்த சத்தம் இல்லை…., மாறாக மாணிக்கத்தின் விரல்களோட எலும்புகள்தான் அங்கே நொறுங்கிப் போயின…! ,
காரணம் வந்தவன், சும்மா இரும்புக் கம்பி! மாதிரி கம்பீரமாக நிற்க…, மாணிக்கம்தான் வலி தாங்காமல் கையை பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தவன் அப்படியே….
“அம்மே..!!!!.”
என சினுங்கி, உடனே தன் கையை உதறியபடியே,
“அம்மா இவன் அம்மா இவனுக்கு என்னதான் தீனி போடுறாங்களோ தெரியல…? , நான் அவன் கையை பிடிச்சு அமுக்கினா … இவனுக்கு வலிக்கவே இல்லமா…, ஆனா…. அமுக்குன எனக்குத்தான் வலிக்கு….து!”
என்று மாணிக்கம் கத்தவும்…..அவன் சொல்வதைக் கேட்டு அந்த கோட்-சூட் ஆசாமி நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்…. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேச்சியம்மாளுக்கு சுர்ரெனக் கோபம் தலைக்கேறி,
“அடேய்! அதுக்கு எதுக்குடா அவன் அம்மாவை பெருமையா பேசுற…?, நான் உனக்கு சாப்பாடு போட்டவரை நீ நல்ல இரும்பு மாதிரிதானேடா இருந்த…! இப்போ ஏதோ இவ போடுறான்னு தின்னுக்கிட்டு திரியிறியே… அதான் உன் உடம்பு இப்படி போச்சு…!”
என்று மகனைக் கிண்டல் செய்ய….அதைக்கேட்ட மங்கலம்,
“இதோ… ஆரம்பிச்சுட்டாங்கள்ல!”
என்று முகத்தைச் சுளித்துச் சிலிப்பிக் கொள்ளவும்,
“கவலைப்படாதீங்க பாட்டி… இனிமே உங்க மகனே சமைச்சு சாப்பிடுவாருல, அப்போ உடம்பு தேறிடும்!…”
என்று மகன் வேலன் அவன் பங்குக்கு நக்கலாகச் சிரித்தப்படியே சொன்னான்….
“சரி, சரி… எல்லோரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா….! சும்மா ஒரு வார்த்தைக்கு சொல்ல கூடாதே… உடனே ஆளாளுக்கு வரிசை கட்டி வருவீங்களே பேசுறதுக்கு…!”
என்று மகனை முறைத்து பார்த்தப்படியே வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் முறைத்து பார்த்து மாணிக்கம் கடிந்து கொள்ளவும்…. , அதைவிட தீ! பார்வையாக அந்த கோட்-சூட் ஆசாமியைத் திரும்பி பார்த்து முறைத்தவன் ,
“இங்க பாருடா… திறந்த வீட்டுக்குள்ள ஒன்னு நுழையும்’னு சொல்லுவாங்களே…., அதுபோல…. எந்த அனுமதியும் இல்லாம என் வீட்டுக்குள்ள வந்துட்டு…., என்னையவே நீ வரிசையா கிண்டல் பண்ணிட்டு இருக்க…இது சரியில்….ல…. ஆமா சொல்லிபுட்டேன்….?”
என்று மாணிக்கம் சீறவும்….. அதற்கெல்வாம் அஞ்சாத நெஞ்சமாக அதைச் சிறிதும் கண்டுகொள்ளாத அந்த ஆசாமி…,
“ஓகோ! ஐயா இந்த வீட்டு ஓனரா…?”
என்று ஒற்றைப் புருவத்தி உயர்த்திக் தனது குறுந்தாடியை தடவிக் கொண்டே கேள்வியாக மாணிக்கத்தை பார்த்தப்படி கேட்டவனிடம் …
”அடேய்! நீ இருக்கியே… என் பொறுமையை ரெம்பவும் சோதிக்காதடா!….”
என்று மாணிக்கம் கத்தவும்…., அவனோ சற்றும் அசராமல் சிங்கமாக கர்ஜித்தவன்,
“அப்படித்தான் சோதிப்பேன்….! என்ன பண்ணுவடா….?, உன்னால் முடிஞ்சதை பண்ணு பாப்போம்…!”
என்று சவாலாகச் சொல்லிவிட்டு, ஸ்டைலாகவும் அதிரடியாகவும் அந்த வீட்டுக்குள் நுழைந்தவன் அங்கே மங்கலத்திற்காக ஏற்கனவே போடப்பட்டிருந்த ராஜநாற்கலியில் அதே அதிரடி குறையாது கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் யாரும் உட்காருங்க என்று சொல்லாமலே அவனாகவே கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் அதைபோலவே யாரும் சாப்பிடுங்க என்றுச் சொல்லமலே அங்கே மேஜையில் வைக்கப்பட்டிருந்த லட்டுவை அவனாகவே கையில் எடுத்து பிட்டு பிட்டாக வாயில் போட்டு ருசித்தப்படியே,
” ம்ம்ம் லட்டு சூப்பர்”
என்றும் வாய்மொழிந்தவனிடம் மாணிக்கம்…..!,
“ஏய்ய்ய்ய்ய்ய்ய்…. எந்துரி…. நீ யாரு …? உன் பேரு என்ன…?”
“நீ சொல்லு நான் சோல்றேன்…”
என்றவனின் அதிகாரத் தோரணையை பார்த்து, சற்று ஆடிதான் போன மாணிக்கத்தின் தோளை உலுக்கி! பாண்டியனும் பேச்சியுமாக சேர்ந்து ஒரே குரலாக,
” இவன் யாருடா…???”
“அட…. அத தானே நானும் அவன்ட்ட கேட்டு தொலைக்கிறேன்… சொல்ல மாட்டேங்கிறானே....”
அப்ப கூட தான் பெத்த பிள்ளைகளிடமும் மங்கலத்திடமும்,
‘அவன் யாரு…? உங்களுக்கு அவனை தெரியுமா…?’,
என விசாரிக்கனும் என்று அவனுக்கு தோன்றவேயில்லை…. ஆகையால் அவர்களும் அமைதியை காத்து நின்றிருந்தனர்…. பிறகும் மாணிக்கமே தலையிட்டு ,
“ ஏய்…. என் பேரு மாணிக்கம்… இது என்னுடைய வீடு… நான் தான் இந்த வீட்டு தலைவன் … நான் மங்கலத்தின்….”
என்று சொல்லவும்…. இடைமறித்தவன் ,
” நீ மங்கலத்தில் எக்ஸ் ஹஸ்பண்ட் தானே …?.”
என்றதும், மாணிக்கத்திற்கு சுளீரென்று இருக்கவும்…
“ஏய்… …..”
“என் பேரு ஏய் இல்ல நந்தா ….”
“எதோ ஒன்னு…. அடேய் ரெம்ப பேசாத …? ,அவ எனக்கு டைவர்ஸ் நோட்டிஸ் குடுத்துட்டா அவளுக்கு நான் புருஷன் இல்லன்னு ஆகிடுமா என்ன…???
“”சரி …சரி … அத நீ சொல்லாத….. கோட்! முடிவு பண்ணட்டும் …. டார்ல்ஸ்! வா போகலாமா…?, நம்ம வீட்டுக்கு…. ப்ப்ப்ளீச்….சாரி இல்ல….இல்ல…. உன் வீட்டுக்கு …. “
நந்தா அப்படி சொன்னதும்…. வீட்டிலிருக்கும் சிறியவர்களை தவிர்த்து பெரியவர்கள் மட்டுமாக ,
‘யாரை இவன் டார்ல்ஸ்ன்னு சொல்லுறான்…?’
என விழிக்கவும்….
“ஹான் …. இதோ வந்துட்டேன் பேபி … நான் ரெடி தான் வா போகலாம்…”
என்றது ஒரு குரல் …!!!, அது மங்கலத்தின் குரல்…. அப்படியே அவள் புது அவதாரமாக அலுவலகத்துக்கு செல்லும் பெண்களுக்கான உடையை போலவே பார்மல் சர்ட் அண்ட் பேண்ட் உடுத்தியிருக்க…
‘எப்புடுறா …!!!’
என்கிற மொமண்ட்டில் வாயை பிளந்து நின்றிருந்தது வழக்கம் போல அந்த வீட்டிலிருந்தக் கூட்டம் …
💒மறுமணாகும்….
♥️அப்புறம் என்ன எல்லாயிருக்கும் பிரியாவிடை இல்ல …இல்ல… பாய்… பாய்… காமித்துவிட்டு ந்ந்தாவுடனாக சென்றுவிடுவாளா மங்கலம்…???…. பார்ப்போம்……..
💛உங்க கெஸ்ஸை சொன்னேங்கன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்ல பட்டூஸ் ப்ளீஸ் … ப்ளிஸ் … சொல்லுங்கோ கமெண்ட்டில்….