Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 69

CHAPTER 69

நிறைவுப்பகுதி – 69

By Roja Roslin · October 29, 2026

0

ஒரு வருடம் கடந்த நிலையில்.

பாண்டியனின் வீடே விழா கோலமாக காட்சி அளித்தது.

பாண்டியனின் சொந்த பந்தங்கள் அனைவரும் இன்று இங்கே கூடி இருக்க காரணம் இந்த வீட்டில் நடக்கப்போகும் பிறந்தநாள் விழா தான்.

சொந்தங்களை எல்லாம் எப்போதும் போலவே நாகராஜனும் வேலனும் வரவேற்று அவர்களை உபசரித்தார்கள்.

“அண்ணா. உங்கள உங்க பொண்டாட்டி வர சொன்னாங்க” என்ற வேலன் பந்தி நடக்கும் இடத்துக்கு செல்ல, நாகராஜனோ ரோஜாவை பார்ப்பதற்காக தென்னத் தோப்பில் உள்ள மாடி வீட்டுக்கு சென்றான்.

ஆம், இந்த ஒரு வருடத்தில் நாகராஜன் தன் மனைவிக்காக அவனின் கனவு இல்லத்தை கட்டி முடித்து இருந்தான்.

“என்ன சின்னமா. ஏன் கூப்பிட்டீங்க” என்ற கேள்வியோடு நாகராஜன் வீட்டுக்குள் நுழைய.“என்ன. மறுபடியும் சின்னமாவா. நமக்கு கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் ஆச்சு. இன்னுமா நீங்க சின்னம்மா பொண்ணாம்மான்னு கூப்பிடுவிங்க” என்று கடுக்கடுத்தாள் ரோஜா.

“எத்தனை வருஷம் கடந்தா என்ன, நீங்க எப்பவுமே எனக்கு சின்னமா தான்” என்ற நாகராஜனின் பேச்சில் அவனை பொய்யான கோபத்துடன் முறைத்தாள் ரோஜா.

“ஏன் இப்படி கோவமா இருக்கீங்க, வயத்துல குழந்தை இருக்கும் போது கோவப்படக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா” என்று சரியாக கேட்டான் நாகராஜ்.

“வயத்துல பிள்ள இருக்கும் போது என்னை கோவப்படுத்தக் கூடாதுனு உங்களுக்கு தெரியாதா” என்ற ரோஜா, அவள் கையில் இருக்கும் இரண்டு தங்க சங்கிலியையும் நாகராஜனிடம் நீட்டினாள்.

“சரி சரி ரோஜா மலரே. கோவிக்காதீங்க. அடியேன் உங்கள் கோவத்தை தாங்க மாட்டேன்” என்ற நாகராஜனின் செய்கையில் ரோஜா கிளுகேன சிரித்து இருந்தாள்.

தன் மனைவியின் சிரிப்பை ரசித்திவனாக,

“ம். இப்படி சிரிச்சு பழகுங்க, இப்போ சொல்லுங்க, ஏன் வர சொன்னிங்க” என்று கேட்க,

“இந்த சங்கிலியை நீங்களே பாக்கெட்ல வச்சுக்கோங்க” என்று அவனிடம் நகை பெட்டியை கொடுத்தாள் ரோஜா.

“ம். சரி. நீங்க ரெடியா இருக்கீங்களா. அங்க function ஸ்டார்ட் ஆகப்போகுது” என்றவன், அருகே இருந்த பூ சரத்தை ரோஜாவின் கூந்தலில் சூட்டியதும், அவளுக்கு உமட்டிக்கொண்டு வர, வேகமாக குளியலறையை நோக்கி ஓடினாள் ரோஜா.

தன் மனைவியின் நிலையை பார்த்து பதறியவனாக நாகராஜனும் அவளை தொடர்ந்து சென்றவன். அவள் தலையை பிடித்துக்கொள்ள. காலையில் சாப்பிட்ட உணவு மொத்தத்தையும் வெளியேடுத்தவளின் வாயை துடைத்து அவளுக்கு தண்ணீர் புகட்டினான் அவன்.

“வாங்க. வந்து fanல உக்காருங்க”என்றவன் அவள் முகத்தை துடைத்து விட. சில நொடிகள் தன்னை ஆஸ்வாசப்படுத்தி க்கொண்டவள், “இந்த பூ வாசனை எனக்கு ஒத்துக்கவே இல்லை” என்றாள்.

“சரி சரி. இனிமே இந்த ரோஜாவுக்கு எந்த மலரும் வேண்டாம்ம்” என்றவன் பூவை தூக்கி ஓரம் வைத்தவன். அவள் அருகே அமர்ந்து அவளை தன்னோடு அணைத்துக்கொண்டதும்.“எல்லாம் உங்கனால தான்” என்று அவன் மார்பில் குத்தினாள் ரோஜா.

அவள் செய்கையை கண்டு சிரித்தவன், “நான் என்னங்க பண்ணேன். நீங்க தான் என்னை மாதிரியே சமத்து குழந்தை வேணும்னு கேட்டீங்க. அதான் உங்க ஆசையை நானும் நிறைவேத்தி வச்சேன்” என்ற நாகராஜனின் பதிலில் அவனை மேலும் முறைத்தாள் ரோஜா.

“ஆமா. அப்படியே சொன்ன பேச்சை கேட்கும் கனிவான கணவன் தான் நீங்க” என்று ரோஜா முகத்தை திருப்பிக்கொள்ள,

“நீங்க சொல்லி நான் என்ன கேக்கல” என்றான்.

“இப்படி வாங்க போங்கன்னு கூப்பிடாம, அழகா ரோஜான்னு கூப்புடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன். ஆனா பாருங்க. நீங்க இன்னும் அப்படி தானே கூப்பிடுறீங்க” என்று கேட்டாள்.

“அது மட்டும் என்னால முடியவே முடியாது. உங்களுக்கும் எனக்கும் 90வயசு ஆனாலும் நான் உங்கள இப்படி தான் கூப்புடுவேன்” என்றவன் அவளை கை தாங்கலாக தூக்கியவன், “சரி வாங்க கிளம்பலாம்” என்று தங்கள் வீட்டில் இருந்து கீழே இறங்கி பாண்டியனின் இல்லத்திற்கு தன் கருவுற்ற மனைவியை அழைத்து சென்றான்.

இதே தருணம் பாண்டியனின் இல்லத்தில் தன் சொந்த பந்தங்களின் நடுவே கஸ்தூரி அமர்ந்து இருக்க, “என்ன கஸ்தூரி. எங்க? உன் பொண்ணு மீனாவை காணோம்” என்று கேட்டார் ஒரு பெண்மணி.

“அவ தான் இந்த வீட்டோட மூத்த மருமக. அவளுக்கு தானே இங்க எல்லா பொறுப்பும் இருக்கு. அதான் வயத்து புள்ளத்தாச்சியா இருந்தாலும் பரவாயில்லைனு. இங்க இருக்குற எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செஞ்சிகிட்டு இருக்கா” என்ற கஸ்திரியின் கையில் சுட சுட வடை ஒன்று அகப்பட்டு இருந்தது.

“என்ன சொல்ற. மீனா மாசமா இருக்காளா.?” என்று அந்த பெண்மணி கேட்க, “ஆமா, என் பொண்ணு தான் இந்த குடும்பத்தோட முதல் வாரிசை பெத்து எடுக்க போறா” என்றார் கஸ்தூரி.

“என்ன உளறுற. உன் பொண்ணுக்கு பிறக்க போற குழந்தை எப்படி மூத்த வாரிசா ஆகும்” என்று அந்த பெண்மணி கேட்க.

“ஆமா. என் பொண்ணோட ஆண் குழந்தை தான் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு” என்றார் கஸ்தூரி.

“அதானே. நீ திருந்திட்டா இந்த உலகமே அழிஞ்சிடும் ஆச்சே” என்ற பார்வதி. அவர் கையில் இருந்த பாயசத்தை கஸ்தூரி முன்னே நீட்டியவர், “இந்தா இதையும் குடி. அப்போ தான் இன்னும் தெம்பா இந்த மாதிரி பேசிகிட்டு சுத்தலாம்” என்றபடி அங்கிருந்து சென்று இருந்தார்.

இதே தருணம் ஜீவாவின் அறைக்கு வந்த மீனா மேசை மீது இருக்கும் மாத்திரையை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் முன்னே தங்கள் அறைக்குள் வந்து கதவை பூட்டிய ஜீவா மீனாவின் கையில் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

“ஐயோ பார்த்துட்டிங்களா மாமா. உங்களுக்கு தெரியாம மாத்திரையை போடலாமுன்னு நினைச்சேன்” என்ற மீனாவை ஏகத்துக்கும் முறைத்தான் ஜீவா.

“உனக்கு எத்தன முறை சொல்லுறது. சாப்பிட்டதும் மாத்திரை போட தெரியாது” என்று ஜீவா கோவம் கொள்ள.

“இப்போ என்னாச்சுன்னு இப்படி கத்துறீங்க” என்று பதிலுக்கு மீனாவும் அவனிடம் முறைத்துக்கொண்டாள்.

“என்னச்சா. .?? ஏய். டாக்டர் ஏற்கனவே உனக்கு டெலிவரி நேரத்துல ரொம்ப கஷ்டமா இருக்கும். எப்பவும் ஜாக்கிரதையா இருங்க. மாத்திரை மருந்தேல்லாம் நேர நேரத்துக்கு சாப்பிடுங்கனு சொன்னது எல்லாம் மறந்து போச்சா” என்று மேலும் அவளை சீறினான் ஜீவா.

“எனக்கு எதுவும் மறக்கல. முதல் குழந்தை abot பண்ணதால ரெண்டாவது குழந்தையை பெத்து எடுக்க பிரச்சனைன்னு டாக்டர் சொன்னது என் காதுல நல்லா கேட்டுச்சு” என்று முகத்தை திருப்பிகொண்டாள் மீனா.

“தெரிஞ்சும். நீ இப்படி தான் அஜாக்கிரதையா இருப்பியா” என்று ஜீவா கேட்க, “ஐய. ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் மாத்திரை போட்டால் என்ன ஆகிட போகுது” என்று முகத்தை சுணங்கினாள் மீனா.

“உங்க அம்மா வேற நீ தான் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசை பெத்து எடுக்க போறன்னு, ஊரெல்லாம் பேசிகிட்டு இருக்காங்க. ஆனா நீ என்னமோ இவ்ளோ Carelessஆ இருக்கியே” என்று ஜீவா கிண்டலாக சொல்ல, “என் அம்மா ஒரு லூசு. அது பேச்ச கேட்டா நான் நடு ரோட்டுல தான் நிக்கணும்” என்றாள் மீனா.

“பரவாயில்ல. என் பொண்ணு வயத்துல இருக்கும் போது தான் உனக்கு நல்ல புத்தி வந்து இருக்கு” என்று ஜீவா சொல்ல. அவனை கடுங்கோபத்துடன் முறைத்தாள் மீனா.

“முறைக்காத, உண்மையை தான் சொன்னேன். சரி மாத்திரை போட்டுட்ட தானே. வா வெளிய போகலாம்” என்ற ஜீவா கருவுற்ற தன் மனைவி மீனாவை அழைத்துக்கொண்டு அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

“என்னப்பா வேலா. வந்தவுங்களுக்கு எல்லாம் சாப்பிட ஜூஸ் கொடுத்துட்டியா” என்று முருகன் கேட்க.

“எங்களுக்கு இன்னும் தரல அண்ணா.“ என்ற குரலோடு அங்கே வந்து சேர்ந்தார் தனத்தின் அம்மா சரஸ்வதி.

“அட ஆன்ட்டி. உங்களுக்கு இல்லாத ஜூஸா. இருங்க உங்களுக்காக கத்திரிக்காய் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்றான் வேலன்.

“என்ன கத்திரிக்காய்ல ஜூஸா.?” என்று சரஸ்வதி கேட்க.

“ஆமா. உங்களுக்கு கதிர்+ரிக்காய் ஜூஸ் மட்டும் தான் பிடிக்குமுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே” என்று கிண்டலாக சொன்னான் வேலன்.

“ஹலோ, என்ன என் அம்மாவை கலாய்க்கிறிங்க. அவங்களுக்கு கதிர் மேல இருக்குற பாசத்துக்காக கத்திரிக்காய் ஜூஸ் இல்ல. கருவாடு ஜூஸ் கூட குடிப்பாங்க” என்ற தனம் கேசவனும் ஜோடியாக வந்து இருந்தாள்.

“பாருடா. என்னை விடவே உங்க அம்மாவை நீங்க நல்லா கலாய்க்கிறிங்க” என்ற வேலன் கேசவனை ஒரு மார்க்கமாக பார்க்க.“என்ன மச்சான். ஏன் அப்படி பாக்குற” என்று வினாவினான்.

“இல்ல. ஆள் பார்க்க ஒரு மார்க்கமா இருக்கீங்களே. என்ன விஷயம்” என்று வேலன் கேட்க, “அது. அது வந்து” என்று வெட்கப்பட்டு நெளிந்தான் கேசவன்.

“இங்க பாருங்க, ஏற்கனவே இந்த மாதிரி நிறைய நடிப்பை பார்த்த்தவன் நான். So pls ஸ்டாப். என்ன விஷயம் முதல்ல சொல்லுங்க” என்றான் வேலன்.

“அது ஒண்ணுமில்ல மச்சான்” என்ற கேசவன் வேலனின் சட்டையை பிடித்து நோண்டியதும், “ஒண்ணுமில்லையா அப்போ போ” என்ற வேலன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து இருந்தான்.

“என்ன இவன் கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கானே” என்ற கேசவனின் கண்கள் வேலனை தேட, “என்னடா கேசவா. எப்ப தான் கல்யாண சாப்பாடு போட போற” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்து சேர்ந்தார் முருகன்.

“தனத்துக்கும் எனக்கும் இப்போ தான் மாமா ஒரு புரிதல் வந்து இருக்கு. அதனால அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கோம்” என்று கேசவன் சொல்ல.“வாழ்த்துகள் கேசவா” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் முருகன்.

“வாங்க நேரமாகுதே கேக் வெட்டிடலாமா” என்று பார்வதி குரல் கொடுக்க.

“அது எப்படி. இன்னும் பிறந்தநாள் பிள்ளைங்களே வராம நம்ம எப்படி கேக்க வெட்டுறது” என்று கேட்டாள் ரோஜா.

“அதானே. எங்க இந்த கதிரு. சீக்கிரமா பிள்ளைகளை அழைச்சிட்டு வர சொல்லு” என்று பாண்டியன் குரல் கொடுக்க, “வாத்தி கிளம்பிட்டீங்களா?” என்று கதிர் அறையின் வாசப்படியில் நின்றுக்கொண்டு சத்தமாக கத்தினாள் ரோஜா.

தன் தங்கையின் குரல் கேட்ட கதிர், “ஹாங் இதோ வரோம் அம்மா” என்றவன் அப்போது குளித்து வந்து தன் ஆடையை அணிந்துகொண்டு இருந்தான்.

“இதோட மூணாவது முறை குளித்து துணியை மாத்தும் கதிருக்கு இப்போதெல்லாம் இது சகஜனமான ஒன்றாக மாறி இருந்தது.

வெளியே சொந்த பந்தங்கள் எல்லாம் நிறைத்து இருக்க, கதிரோ கண்ணாடி முன்னே நின்று தன் shirt பட்டனை சரி செய்துகொண்டு இருந்தான்.

“முல்லை. ரெடி ஆகிட்டியா” என்ற கதிரின் கேள்விக்கு, “இல்ல மாமா சார்” என்ற முல்லையின் பதிலில் கதிர் தன் அறைக்குள் இருக்கும் இன்னோரு அறைக்குள் செல்ல, அங்கே குழந்தைக்கு பசியாற்றிக்கொண்டு இருந்தாள் முல்லை.

ஒரு குழந்தை முல்லையின் மடியில் இருக்க, மற்றுமொரு குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தது.

“நமக்காக தான் எல்லோரும் காத்துகிட்டு இருக்காங்க” என்ற கதிர் முல்லையின் பின்னாத கூந்தலை சிகை அலங்காரம் செய்ய ஆரம்பித்து இருந்தான்.

“நான் என்ன பண்றது மாமா சார். இவ எழுந்தா அவ அழறா. அவ அழுதா இவ எழுறா” என்ற முல்லையின் பதிலில் கதிர் தனக்குள் சிரித்தவன், “இதெல்லாம் இந்த ஒரு வருஷமா நம்ம அனுபவிக்கும் சுகம் தானே” என்றான்.

“ஆமா ஆமா சுகம் தான், ஆனாலும் இந்த முதுகு வலி” என்று முல்லை இடுப்பை பிடித்துக்கொள்ள, “ஆபரேஷன் பண்ண உடம்பு அப்படி தான் வலிக்கும் டா” என்றவன் முல்லையின் முதுகில் தலையணையை வைத்தான்.

முல்லை குழந்தைக்கு பசியாற்ற. முல்லைக்கு கதிர் தலை வாரி, பூ வைத்து, அவள் கண்களில் அஞ்சனம் தீட்டியவன், முல்லையின் காது பின்னே அழகாய் சின்னதாக பொட்டு வைத்தான் அதே மையில்.

“என்ன மாமா சார் இதெல்லாம். பாப்பாவுக்கு தானே கண்ணு பட்டுடுமுன்னு இந்த மாதிரி பொட்டு வைப்பாங்க” என்று முல்லை கேட்க,

“ஏழு மாசத்துல ஆபரேஷன் பண்ணி ரெண்டு தங்கக்கட்டியை ஆரோக்கியமா பெத்து எடுத்த உன் மேல தான் டி இந்த ஊர் கண்ணே இருக்கு” என்று கதிர் சொன்ன பதிலில் முல்லை சிரித்துக்கொண்டாள்.

“என்னடி சிரிக்கிற” என்று கதிர் கேட்க,

“அப்படின்னு பார்த்தா. என்னோட சேர்த்து நம்ம ரெண்டு பிள்ளைய்ங்களுக்கும் தாயாக இருந்து எங்கள பார்த்துக்குற உங்க மேல தான் இந்த ஊர் கண்ணு இருக்கும்” என்ற முல்லை அவள் பங்குக்கு அவளும் மையை எடுத்து கதிரின் காது பின்னே தடவினாள்.

முல்லையின் செயலில் சட்டென்று அவள் கரங்களை பற்றிய கதிரின் கண்கள் கலங்கி போக, “நான் திரும்ப இந்த மாதிரி எழுந்து உக்காருவன்னு நான் நினைக்கவே இல்ல மாமா சார்” என்றாள் முல்லை.

கதிர் அவன் கண்ணீரை துடைத்துக் கொண்டவன், “ எழாமல் எங்க போயிட போற, இல்ல நான் தான் உன்னை சும்மா விட்டுடுவேனா”என்ற கதிர் முல்லையின் நெற்றியின் செல்லமாக முத்தமிட, “ப்பா. ப்பா, “ என்று தொட்டிலில் இருந்து கழுத்தை நீட்டிக்கொண்டு கதிரை அழைக்கும் குட்டி அழகி தான் “தமிழரசி”.

“இதோ என் செல்ல மகள் எழுந்துட்டாங்க” என்று கதிர் தொட்டிலை நோக்கி நடக்க, “ப்பா, ப்பா, “ என்று முல்லையின் மடியில் இருக்கும் பெண் பிள்ளை பால் குடிப்பதை நிறுத்தி, கழுத்தை திருப்பி கதிரை அழைக்கும் பெண் பிள்ளை தான்”தமிழ்செல்வி”.

“இதோ ரெண்டு பேரும் ஆரம்பிச்சிட்டாங்க. இனி ப்பா. ப்பான்னு உங்கள என் பக்கமே வர விட மாட்டாங்க” என்ற முல்லையின் உரிமை தன் பிள்ளைகளால் பரிப்போனது என்று எண்ணி தன் கணவனிடம் புகார் செய்துகொண்டு இருந்தாள் வளர்ந்த குழந்தை முல்லை.

முல்லை மடியில் இருக்கும் குழந்தையை தன் இடது கரங்களில் ஏந்திவன் முல்லையைப் பார்த்து சிரித்த வண்ணமாக தொட்டிலில் இருந்து தன்னை அழைக்கும் குழந்தையை வலது கரங்களில் ஏந்திகொண்டான்.

“பார்த்தீங்களா செல்லங்களா. உங்க அம்மாவுக்கு இப்பவே நம்ம மேல கோபம் வருது. இன்னும் கொஞ்ச நேரம் நம்ப இங்கே இருந்தா உங்க அம்மா பங்க்சனுக்கு கிளம்பவே மாட்டாங்க. அதனால நம்ம மூணு பேரும் வெளியே போய் வெயிட் பண்ணலாம். அம்மா கிளம்பிட்டு வருவாங்க” என்ற கதிர் இரண்டு குழந்தைகளோடு இன்னொரு அறைக்கு சென்றான்.

கதிரின் பேச்சைக்கேட்டு சிரித்த முல்லைக்கு, தன் பிள்ளைகளோடு சேர்த்து தன்னையும் அன்பாய் கவனித்துக் கொள்ளும் கணவனின் மீது நொடிக்கு 100 முறை காதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

சொந்தங்கள் அனைவரும் குடி இருக்க.

கதிர் அவன் கையில் ஒரு வயது குழந்தைகளான இரட்டை பெண் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் நடுவே போடப்பட்டு இருக்கும் அலங்கார மேசையின் அருகே வந்தான்.

“பார்வதி. அங்க பாரு பேத்திங்க வந்துட்டாங்க” என்ற முருகன் குழந்தையை ஆசையாக தூக்க சென்றதும்,

“ப்பா. ப்பா” என்று தூரத்தில் இருக்கும் ஜீவாவை அழைத்தாள் தமிழரசி.

“என் பொண்ணுக்கு என்னை தான் பிடிக்கும்” என்று அங்கே இருந்து ஓடி வந்த ஜீவா அன்பாக குழந்தையை வாங்கிக்கொள்ள, “த்த. த்த” என்று ரோஜாவை அழைத்தாள் தமிழ் செல்வி.

“என் மருமகளுக்கும் என்னை தான் பிடிக்கும்” என்ற ரோஜா வேகமாக வந்து கதிரின் கையில் இருந்த இன்னோரு குழந்தையை தன் வசம் வாங்கிக்கொள்ள, “அம்மா பார்த்து” என்று கருவுற்ற தன் தங்கையை பார்த்து பதறினான் கதிர்.

“நல்லா சொல்லு நண்பா. நம்ம சொன்னா இவங்க கேக்குறது இல்ல” என்ற நாகராஜனை ஏகத்துக்கும் முறைத்தாள் ரோஜா.

“ஹலோ. என்ன என் அண்ணனை முறைக்கிறிங்க. முல்லை அக்கா பிரசவ நேரத்துல எவ்ளோ பிரச்சனை வந்துச்சுனு மறந்துட்டீங்களா” என்று அங்கிருந்த வேலன் கேட்க, “என்ன. இங்க என் பேர் அடிப்படுது” என்று கேட்டுக்கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் முல்லை.

“அண்ணி. இங்க பாருங்க இந்த வேலன் உங்கள பற்றி தான் குறை சொல்லுறாரு” என்ற ரோஜாவை வேலன் முறைத்து பார்க்க, “அங்க என்ன்டா முறைக்கிற” என்று கேட்டாள் முல்லை.

தன் அக்காவின் பேச்சுக்கு பதில் தராமல் வேலன் வேறு எங்கோ பார்த்து இருக்க, “என்னடா. இன்னுமா நீ உன் அக்காகிட்ட பேசாம இருக்க?” என்று கேட்டார் முருகன்.

“நான் ஏன் பெரியப்பா பேசணும். நான் இனி அவங்ககிட்ட பேச மாட்டேன்” என்றான் வேலன்.

“என்னடா இது. உன் அக்காவுக்கு ஒன்னுனா நீ தானே எப்பவும் முன்னாடி வந்து நிப்ப. ஏன் இப்போ என்னாச்சு உனக்கு” என்று பார்வதி கேட்க,

“அது வேற ஒன்னுமில்ல கஸ்தூரி. முல்லை வயத்துல குழந்தைங்க இருக்கும் போது கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தால்ல. அப்போதுல இருந்து வேலன் அவகிட்ட பேசுறது இல்ல” என்றார் பாண்டியன்.

“டேய் வேலா. அதான் டாக்டர் ஆபரேஷன் பண்ணி முல்லையோட சேர்த்து குழந்தைகளை நல்ல விதமா காப்பாந்திட்டாரே” என்று ஜீவா சொல்ல,

“இருந்தாலும் இவங்களோட அஜாக்கிரதையால தானே அதெல்லாம் நடந்துச்சு”, என்று கேட்டான் வேலன்.

“சரி டா. இப்போ என்ன பண்ண சொல்லுற. ஆமா. என் மேல தான் தப்பு, அதனால தான் இனி நான் ஐஸ் வாட்டரே வேணான்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இல்லாம இப்போ என்ன, நான் நல்லா தானே இருக்கேன்” என்று முல்லை தன் தம்பியிடம் கோவித்துக்கொள்ள, “நீங்க நல்லா இருக்கணும்னு தான் நாங்களும் வேண்டிக்கிறோம்” என்றான் வேலன்.

“சரி சரி. இவன் விட்டா ரொம்ப சீன் போடுவான். வாங்க வாங்க நேரத்தோடு பசங்களுக்கு கேக் வெட்டலாம்” என்று பார்வதி அனைவரும் அருகே அழைக்க,

ஜீவா ரோஜாவிடம் இருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கதிரும் முல்லையும் வாங்கிக்கொண்டார்கள்.

“எல்லோரும் வந்தாச்சா. கேக் கட் பண்ணலாமா” என்று கதிர் கேட்டதும்,

“நான் இல்லாம இந்த வீட்டுல நல்ல காரியம் நடக்குமா” என்று கேட்டுக்கொண்டே கையில் அன்பளிப்புடன் உள்ளே நுழைந்தான் ஸ்ரீனிவாசன்.

“அட, ஸ்ரீனி எங்க இந்த பக்கம்” என்று வேலன் நாகராஜனை கேட்க,

“பாம்பு கொத்துனதுல இருந்து பயபுள்ள பொட்டி பாம்பா அடங்கிட்டாரு” என்றான் நாகராஜன்.

“வா ஸ்ரீனி. எங்க உன் அண்ணன் வரலையா” என்று கதிர் நட்புடன் சுந்தரேசனை பற்றி அவன் தம்பியிடம் விசாரிக்க, “அண்ணனுக்கு டூட்டி கதிர். அண்ணா இன்னோரு நாள் வந்து பாக்குறேன்னு சொன்னாரு” என்றான் ஸ்ரீனிவாசன்.

“என்னடி மீனா இது. கெட்டவங்க எல்லாம் நல்லவுங்களா மாறிட்டா இந்த உலகம் என்னத்துக்கு தான் ஆகுறது” என்று கஸ்தூரி தன் மகளின் காதை கடித்தார்.

கஸ்தூரியை பார்த்து முறைத்த மீனா “அவங்கவங்க பக்குவப்படும் போது கெட்டது எது நல்லது எதுன்னு தெரிஞ்சி தன்னை தானா மாத்திக்க தான் செய்வாங்க. எல்லோரும் உன்ன மாதிரி அவங்க தான் சரின்னு தற்குறி தனமா இருப்பாங்கன்னு நினைக்காத” என்று மீனா சொல்ல. கஸ்தூரி அவளை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தார்.

“வாத்தி. நேரமாகுது. கேக் கட் பண்ணுங்க” என்று ரோஜா சொல்ல. May 2 ஆம் தேதி அன்று கதிர்வேலன் முல்லையின் பெண் குழந்தைகளான தமிழ் செல்வி, தமிழரசிக்கு சொந்தங்கள் நண்பர்கள் நடுவே முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்ய.

அடுத்தடுத்து அந்த வீட்டில் நடக்க இருக்கும் ரோஜா மற்றும் மீனாவின் சீமந்தம் பற்றிய பேச்சும் நடந்தேறியது.

“கதிரு. ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி. நீயும் முல்லையும் உங்க பிள்ளைங்ககூட சந்தோசமா இருக்கனும்” என்ற சரஸ்வதி மனமார இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க,

“குழந்தைங்க ரெண்டு பேரும் உன்னை மாதிரியே இருக்காங்க கதிர்” என்றாள் தனம்.

“இல்ல இல்ல. குழந்தைங்க ரெண்டு பேரும் முல்லை மாதிரி தான் இருக்காங்க” என்று கேசவன் சொல்ல. தனம் சட்டென்று அவனை முறைத்து பார்த்ததும்.“ஐயோ இல்ல இல்ல. ஆமா கதிர் மாதிரி தான் இருக்காங்க” என்று பம்பிய கேசவனை பார்த்து முல்லையும் கதிரும் உள்ளுற சிரித்துக்கொண்டார்கள்.

“சரி கதிர் அப்போ நான் கிளம்புறேன். நீங்க மறக்காம என் கல்யாணத்துக்கு வந்துடணும். ரோஜா நீயும் உன் புருஷனை அழைச்சிட்டு வந்துடு, ஜீவா அண்ணா நீங்களும் சிஸ்டர் கூட வந்துடுங்க, வேலன் சார் நீங்களும் தான்” என்று அங்குள்ள அனைவரையும் தன் திருமணத்திற்காக அழைத்து இருந்தான் ஸ்ரீனிவாசன்.

“ஹலோ ஹலோ ஸ்ரீனி சார். அப்போ எல்லாம் நீங்களும் உங்க அண்ணனும் எவ்ளோ பெரிய அப்பா டக்கர்ஸ். ஆனா இப்போ என்ன சார் ஆளே மாறிட்டீங்க” என்று கேட்டான் வேலன்.

அவன் கேள்வியில் மெலிதாக சிரித்த ஸ்ரீனிவாசனோ, “பாம்பு கடிச்சு படுத்த படுக்கையா ஆன பிறகு வந்த பக்குவம் சார் இது” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல.

“இந்த அளவுக்கு உங்களுக்கு பக்குவம் வரும்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே அந்த பாம்பை உங்க வீட்டுக்கு பார்சல் அனுப்பி வச்சிருப்பேன்” என்றான் வேலன்.

“டேய் சும்மா இரு டா” என்று வேலனை கண்டித்த கதிர்.“கண்டிப்பா நாங்க வந்துடுவோம் ஸ்ரீனி. கல்யாணத்துல எங்களுக்கு எதாவது வேலை இருந்தாலும் சொல்லு” என்ற கதிரை நட்பின் ரீதியாக அவன் முதுகில் தட்டிக்கொடுத்த ஸ்ரீனிவாசன் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியியேறி இருந்தான்.

அன்றைய தினம் மாலை நேரத்துக்குள் வீட்டுக்கு வந்த அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்று இருக்க.

குழந்தைகள் இருவருமே அனைவரும் அவர்களை தூக்கி களைப்பில் உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

“அண்ணி. பாப்பாங்க தூங்கும் போதே நீங்களும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று ரோஜா சொல்ல. ஹாலில் அனைவரின் முன்னிலையிலும் ஓயரமாக உறங்கிக்கொண்டு இருந்தார்கள் இரண்டு தேவைதைகளும்.

குழந்தைகள் உறங்கும் அழகை ரசித்த வண்ணம் முல்லை தன் அறைக்குள் சென்றவள். அவள் பட்டுபுடவையை களைந்து மாற்று உடையில் கட்டிலில் அமர்ந்து சோர்வாக கண்களை மூடினாள்.

“என்னடி Tiredஅ இருக்கா” என்று கேட்டுக்கொண்டே கதிர் உள்ளே வந்தவன் முல்லையின் அருகே அமர்ந்ததும் அவள் அவன் மார்பில் தலை வைத்து சாய்ந்துக்கொண்டாள்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “என் ரவா லட்டுக்கு என்னாச்சு” என்று அவள் கன்னத்தை தன் கரங்களால் ஏந்தி கேட்டான் கதிர்.

“இல்ல மாமா சார். வேலன் சொன்னது போல நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருக்கனும்” என்று முல்லை சொல்ல,

“அடியே. நமக்கு குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகிடுது. இப்போ போய் அந்த கதையெல்லாம் ஏன் பேசுற” என்று கேட்டான் கதிர்.

“ஆயிரம் சொன்னாலும் நான் அன்னைக்கு பண்ணது தப்புதான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருக்கணும். நீங்க எல்லாம் எனக்கு ஏதாவது ஆகிடுமுன்னு எப்படி துடிச்சு இருப்பீங்க” என்று முல்லை சொல்ல, அவளை மீண்டும் ஆறுதலாக கட்டிக் கொண்டான் கதிர்.

“அன்னைக்கு டாக்டர் உன்னைய இல்லனா நம்ம பிள்ளைகளை தான் காப்பாற்ற முடியும்ன்னு சொன்னதும் எனக்கு நீதாண்டி பெருசா தெரிஞ்ச” என்று கதிர் சொல்ல, அவன் இதய பகுதியில் தன் இதழ்களால் முத்தமிட்டாள் முல்லை

“எந்தக் கடவுள் புண்ணியமோ. ஆபரேஷன் பண்ணி உன்னையும் நம்ம குழந்தையையும் அந்த டாக்டர் காப்பாற்றி கொடுத்ததும் தான் எனக்கு உயிரே வந்தது” என்று கதிர் சொல்ல,

“ஆனால் ஆபரேஷனுக்கு அப்புறம் நம்ம குழந்தையை இந்த நொடி வரை பார்த்துக்கிறது நீங்க எல்லாரும் தானே” என்றாள் முல்லை.

“அதாண்டி கூட்டு குடும்பத்துடைய மகிமை. இப்ப இருக்கிற காலகட்டத்தில் புருஷன், பொண்டாட்டி ஒரு குழந்தை இதுதான் கூட்டு குடும்பமாகிறது. சரி அவங்க கதை நமக்கு எதுக்கு. இப்போ, நீ, நான், நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாரும் நல்லா இருக்கோம் தானே. அதுவே போதும். இன்னும் கொஞ்ச நாள்ல(ரோஜா)அம்மாவுக்கும் மீனாவுக்கும் வளயக்காப்பு பண்ணனும். அடுத்தடுத்து நிறைய நல்ல விஷயங்கள் நம்ம வீட்டுல நடக்க வேண்டியது இருக்கு” என்றான் கதிர்

“ஆமாங்க. அந்த பாண்டி சாமி துணையில எல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கட்டும்” என்ற முல்லை மீண்டும் தன் கணவனின் இதயத்தில் தலை சாய.

“ஆமா ஆமா. நான் வேற என் பொண்டாட்டியுடைய ஆசையே எப்படியாவது இன்னும் ரெண்டு வருஷத்துல நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்றான் கதிர்

“என்ன சொல்றீங்க என்னுடைய ஆசையா. எனக்கென்ன ஆசை? அழகான இரண்டு குழந்தைகள். அன்பான கணவன். நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்கிற நம்முடைய சொந்த பந்தங்கள். இதை மீறி எனக்கு என்ன வேணும்” என்று முல்லைச் கேட்க,

“என்னடி. மறந்துட்டியா.?” என்று கேட்டான் கதிர்.

கதிரின் கேள்வி புரியாமல் அவனை முல்லை உறுத்து பார்த்தவள், “புரியலையே என்ன சொல்றீங்க” என்று கேட்டாள்.

“அட ஆமாடி. என் ஆசைக்கு ரெண்டு பொம்பள புள்ளைய பெத்து கொடுத்துட்ட. இப்போ உன் ஆசைக்கு நான் இன்னும் ரெண்டு ஆம்பள புள்ளைய நீ பெத்தெடுக்க உதவி செய்ய வேண்டாம்மா.? ஆனா இப்பலாம் இல்ல இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என்ற கதிரை பார்த்து முல்லை அர்த்தமாக சிரிக்க,

“என்ன, மாமா உன் ஆசையை நிறைவேற்றட்டுமா.? வேண்டாம்மா.?” என்று கேட்டான் கதிர்.

கதிரின் அவன் கேள்வியில் உள்ளுக்குள் சிரித்தவள், “கண்டிப்பா மாமா சார். அதுதானே புருஷ லட்சணம். பொண்டாட்டியோட எல்லா ஆசையையும் புருஷன் நிறைவேற்றி வைக்கனும். ஆனா இப்ப இல்ல. நீங்க சொன்ன மாதிரி இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்” என்ற முல்லை, முன்பை விட அதீத காதலோடு தன் கணவனை கட்டிக்கொள்ள.

இந்த நொடி. இந்த உலகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சியோடு வாழ்வது யார் என்று கேட்டால் அது நான் தான் என்று மார்பு தட்டிச் சொல்லும் அளவுக்கு கதிரும் தன் காதல் மனைவியுடன் இன்பமான ஓர் அழகிய இல்லற வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்க,

கதிருடன் சேர்ந்து, பாண்டியனின் குடும்பம் முழுதும் சீரும் சிறப்புமாய் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

முற்றும்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!