சரியாக ஒரு மாதம் கடந்து இருக்கும்.
கோவில் படிக்கட்டில் வாழ்க்கையே வெறுத்து அமர்ந்து இருந்தார் பாண்டியன்.
அவரது கைபேசி விடாமல் அவரை இம்சை செய்ய. ஒரு கட்டத்தில் கைபேசி ஓசையை நிறுத்தி சட்டை பையில் வைத்தவர், மீண்டும் கண்களை மூடி அபப்டியே தூனில் சாய்ந்து சிலையென அமர்ந்து இருந்தார்.
“ஐயா.“ என்று பாண்டியணை நாகராஜன் அழைக்க.
பாண்டியனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“ஐயா நேரமாகுதுங்க. உங்க சம்மந்தி வீட்டுல இருந்து ஆளுங்க எல்லாம் மண்டபத்துக்கு வந்துட்டாங்க. வாங்க ஐயா வீட்டுக்கு போகலாம்” என்றான் நாகராஜன்.
“உன் நண்பன் வீட்டுக்கு வந்துட்டான்னா” என்று கதிரை பற்றி பாண்டியன் விசாரிக்க.
“கதிர் வந்துட்டான் ஐயா. ஆனா என் குடிசையில தான் படுத்து இருக்கான்” என்றான் நாகராஜன்.
“ரோஜாவை முல்லைக்கு போன் பண்ண சொன்னேனே. முல்லை என்ன சொல்லுறா. இன்னைக்காவது வீட்டுக்கு வருவாளா. இல்ல வர மாட்டாளா” என்று பாண்டியன் கனத்த இதயத்துடன் கேட்க.
“தெரியல ஐயா. அவங்க பக்கத்துல இருந்து எந்த பதிலும் வரல” என்றான் நாகராஜன்.
“எப்படி இருந்த குடும்பம் இது. சிங்கம் போல ரெண்டு ஆம்பள புள்ள, தேவதை போல ஒரு பொம்பள புள்ளைய பெத்து எடுத்தேன். ஆனா இப்போ அந்த ரெண்டு பசங்க வாழ்க்கையும் நாசமா போச்சு. அவனுங்கன்னால என் ரெண்டு தங்கச்சி பசங்க வாழ்க்கையும் வீனா போச்சு” என்று கண்கள் கலங்கினார் பாண்டியன்.
அவரின் நிலையை பார்த்து நாகராஜனுக்கு பாவமாக இருக்க. அவரை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கும் தெரியாமல் போனது.
“ஐயா. நேரமாகுதுங்க. நீங்க வாங்க நம்ம போகலாம். இப்போ இதெல்லாம் பேசி நீங்க கவலைப்படுறதால ஒன்னும் மறப்போவது இல்ல. வாங்க ஐயா போகலாம்” என்ற நாகராஜன் பாண்டியணை
அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றான்.
, , , , , , , ,
இன்றைய தினம் ரோஜாவிற்கு நிச்சியம் நடக்க இருக்க.
வீடே பொலிவு இல்லாமல் இருந்தது.
“அண்ணா. சப்பாட்டுக்கு சொன்ன இடத்துல சரியா நேரத்துக்கு வந்துடுவாங்க தானே” என்று கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு கஸ்தூரி அங்கே வந்து நிற்க.
“அதெல்லாம் சரியான நேரத்துக்கு வருவாங்க அம்மா” என்றான் நாகராஜன்.
“சரி சரி. சொந்தக்காரங்க எல்லாம் நேரா மண்டபத்துக்கு தான் வருவாங்க. அதனால நானும் என் புருஷனும் அங்க இருந்து வரவுங்கள கவனிச்சிக்கிறோம். மீனா, ரோஜா ரெண்டு பேரும் சரியான மணிக்கு மண்டபத்துக்கு வந்தா போதும்” என்றாள் கஸ்தூரி.
தன் தங்கை ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்க. பாண்டியன் பதில் தராமல் நேரே அவர் அறைக்குள் சென்று இருந்தார்.
“ஹ்ம். இந்த வீட்டுக்கு பெரிய சம்மந்தி நான். என் பொண்ணு தான் இந்த வீட்டோட மூத்த மருமக. எங்களுக்கு இருக்குற பொறுப்பு வேற யாருக்கும் இங்க இல்ல” என்று முணங்கிக்கொண்டு கஸ்தூரி அவர் வேலைகளை செய்துகொண்டு இருக்க.
இதே சமயம் குடி போதை தெளிந்து கதிர் நாகராஜன் வீட்டில் இருந்து தன் வீட்டுக்குள் நுழைந்தான்.
கதிரை பார்த்ததும் வேகமாக சமையலறையில் இருந்து ஓடி வந்த மீனா, அவன் முன்னே டீ கப்பை நீட்ட.
“அடியே. இவன் என்ன அப்படி வெட்டி முறித்தான்னு அவனுக்கு டீ தர” என்று கேட்டார் கஸ்தூரி.
“அம்மா. நீ கொஞ்ச நேரம் வாயை மூடுரியா. மாமா இந்தாங்க, டீய குடிச்சிட்டு போயி கிளம்புங்க. இன்னிக்கி உங்க அருமை தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம். அது கூட நினைவு இல்லாம உங்களை விட்டு ஓடிப்போன பொண்டாட்டிய நினைச்சு இப்படி குடிச்சு குடிச்சு உடம்ப வீணாக்காதிங்க” என்று மீனா வார்த்தையில் பொடி வைத்து பேச,
“அண்ணி. யாரும் யாரையும் விட்டு ஓடி போகல. முல்லை அண்ணியை பற்றி தேவையில்லாததெல்லாம் நீங்க பேசாதீங்க” என்று கடுகடுத்த குரலில் ரோஜா அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
“ஆமாடி ஆமா. முல்லையைப் பற்றி சொன்னா உனக்கு கோபம் பொத்திகிட்டு வந்துடும். ஆமா, நீயே சொல்லு, இப்ப என்ன ஆச்சுன்னு அந்த மகாராணி கதிர் மாமாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு ஒரு மாசமா வீட்டுக்கு வராம இருக்கணும். சொல்லு. நீயே நியாயத்தை சொல்லு” என்று மீனா கேட்க.“அது புருஷன் பொண்டாட்டி அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை, நீங்க தலையிட வேண்டாம்ம்” என்றாள் ரோஜா.
“ஏன் ஏன். என் பொண்ணு ஏன் தலையிடக்கூடாது. என் பொண்ணு தான் இந்த வீட்டோட மூத்த மருமக. அவளுக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கும் இல்ல. மீனா கதிருக்கு சப்போர்ட் பண்ணி பேசுனா எனக்கு கோவம் வரும். ஆனா இப்போ அவ முல்லையை பத்தி பேசுறது நியாயம் தானே. இப்ப என்ன ஆச்சுன்னு அந்த முல்லை ஒரு மாசமா கோச்சுக்கிட்டு போயி அவங்க அப்பா வீட்டில் இருக்கிறா” என்று கஸ்தூரி கேட்க,
“ஹ்ம். எனக்கு இவங்க கல்யாணம் நடக்கும்போதே தெரியும். இதெல்லாம் தேறாத கேசு” என்று மீனா சொல்ல,
“ஏன் , முல்லை அண்ணிக்கி என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியாதா. அவங்க கோவத்துல நியாயம் இருக்குது தான். அவங்கள குறை சொல்ல இங்க யாருக்கும் எந்த தகுதியும் இல்ல. போங்க, போயி வேலைய பாருங்க” என்ற ரோஜா மீனாவின் அருகே நின்றிருந்த கதிரை ஒரு பொருட்டாகவே காணாமல் இருக்க.
“அம்மா.“ என்று தழுதழுத்த குரலில் தன் தங்கையை அழைத்தான் கதிர்.
அவன் அழைப்பை காதில் வாங்காத ரோஜாவோ. நேராக தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.
, , , , , , , …
தன் மகளை பார்த்து வெறுமையாக சிரித்த பாண்டியன், “என்னடா மா.“ என்று கேட்க.
“அப்பா. நீங்க ஏன் கவலையா இருக்கீங்க. உங்க சந்தோஷத்துக்காக தானே, நீங்க சொன்ன மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். இன்னும் ஏன் நீங்க சோகமா இருக்கீங்க” என்று கேட்டாள் ரோஜா.
“என் சோகத்துக்கு காரணம் என்னன்னு உனக்கு தெரியாதா. நான் என்ன பாவம் பண்ணேன். ஏன் என் பிள்ளைங்க வாழ்கை இப்படி பிரச்சனையுடன் இருக்கு” என்று பாண்டியன் கண்கள் கலங்க.“எல்லாம் சரியாகும் அப்பா” என்று தன் தந்தைக்கு தைரியம் கொடுத்தாள் ரோஜா
தன் மகளுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கு. தன் கவலை அவளின் மனநிலையையும் மாற்றி விடக்கூடாது என்று எண்ணிய பாண்டியன்.
“சரி மா. உன் அண்ணி உன்னோட நிச்சியத்துக்கு வருவா தானே” என்று கேட்டார் பாண்டியன்.
தன் தந்தையின் கேள்விக்கு பெருமூச்சு எடுத்த ரோஜா, “அவங்க வரணும்ன்னு நான் ஆசைப்பட்டு தானே அப்பா. இந்த நிச்சியத்தை மண்டபத்துல வைக்க சொன்னேன்” என்று சொன்னாள் ரோஜா.
“ம். இந்த கொடுமையை எங்கன்னு போய் சொல்லறது. இந்த வீட்டுக்கு வாழ வந்த அஷ்டலக்ஷ்மி அவள். ஆனா அவளே இனி இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா. இதெல்லாம் நினைச்சா எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல ரோஜா” என்றார் பாண்டியன்.
“அப்பா. அண்ணி இடத்துல நான் இருந்தாலும் அப்படி தான் பண்ணி இருப்பேன். பாவம் அவங்க. நம்ம பக்கமும் தப்பு இருக்கு. அதனால அவங்க கோவத்துக்கு மரியாதை கொடுத்து நம்ம கொஞ்ச நாள் அவங்கள விட்டு பிடிக்கிறது தான் நல்லது” என்றாள் ரோஜா.
“ம். சரி மா, எல்லாம் அந்த இறைவன் செயல். சரி நீ போய் கிளம்புப்போ” என்று பாண்டியன் சொல்ல. ரோஜா தன் தந்தையின் அறையில் இருந்து வெளியே வந்தவள் அதுவரை அவளுக்காக காத்து இருந்த கதிரை கண்டுகொள்ளாமல் அவள் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அடர்ந்த தாடி, ஒழுங்கு படுத்தாத மீசை, அளவுக்கு அதிகமான தலை முடி என்று பார்க்க அக்மார்க் குடிகாரனாக மாறி இருந்த கதிரை பார்க்க நாகராஜனுக்கு பாவமாக இருந்தது.
“நண்பா, இன்னைக்கு சின்னமா நிச்சியதார்தம். உன் பெரிய அண்ணனும் நீயும் சேர்ந்து தான் இந்த நிகழ்வை கோலாகலமாக எடுத்து நடத்தி இருக்கனும். ஆனா இப்போ உன் அண்ணன் எங்கன்னே தெரியல.
உன் அப்பாவும் உங்கனால உடைஞ்சே போயிட்டாரு. இப்போ நீ தான் நண்பா முன்னாடி நின்னு இந்த நிச்சியத்தை நல்லப்படியா முடித்து தரணும்.
போ நண்பா. போய் குளிச்சிட்டு கிளம்பு. நம்ம மண்டபத்துக்கு போகலாம். ம். போ” என்று நாகராஜன் சொல்ல. கதிர் கண்களில் ஜீவன் இல்லாமல் அடி மேல் அடி எடுத்து வைத்து தன் அறைக்குள் நுழைந்தான்.
, , , , , , , , …
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து தன் அறைக்குள் வந்தவன் எதிரே “மாமா சார். சீக்கிரம் கிளம்புங்க. நம்ம தானே ரோஜாவுக்கு முன்னாடி நின்னு எல்லா நல்லதையும் பண்ணனும், ம். சீக்கிரமா கிளம்புங்க” என்று முல்லை சொல்ல. கதிரின் கண்கள் மகிழிச்சியில் மிளிர்ந்தது.
“ஆங் மாமா சார் இந்த சிவப்பு பட்டுபுடவை எப்படி இருக்கு. நீங்களும் எனக்கு ஏத்த மாதிரி சிவப்பு பட்டு சட்டை போடுங்க” என்று முல்லை சொல்ல. கதிர் வேகமாக அவளை நெருங்கியவன்,
“எங்கடி போன. நீ இல்லாம நான் நடைபிணமா ஆகிட்டேன் முல்லை. என்ன விட்டு எங்க போன நீ” என்று முல்லையை கட்டி அணைத்து அழ தொடங்கினான்.
“நீங்க என்ன பைத்தியமா மாமா சார். நான் எங்க போனேன்.?. நான் உங்க மனசுல தான் இருக்கேன்” என்று முல்லை அவள் பிஞ்சு விரலால் கதிரின் இதயத்தை சுட்டிகாட்ட.
“இனி நீ என்னை விட்டு எங்கேயும் போகக்கூடாது” என்றான் கதிர்.
“மாட்டேன். எங்கேயும் போக மாட்டேன்” என்று முல்லை சொல்ல.
“சத்தியமா போக மாட்ட தானே.?” என்று கதிர் அவன் வலது கையை முல்லையின் முன்னே நீட்ட. கதிரின் விழிகளை பார்த்து அழகாய் கண்கள் சிமிட்டிய முல்லை.
அவள் வலது கையை கதிரின் வலது கை மீது வைக்கும் தருணம்.
“நண்பா. பட்டு வேஷ்டி பட்டு சட்டை இஸ்திரி போட்டு வச்சி இருக்கேன். குளிச்சிட்டு இத போட்டுக்கோ” என்ற நாகராஜனின் குரலில் இதுவரை கற்பனையாக தன் முன்னே நின்று அன்பாய் காதலாய் வாய் மலர்ந்து பேசிக்கொண்டு இருந்த முல்லையின் உருவம் அருவமாக மறைந்து இருந்தது.
“முல்லை, முல்லை. ஏய் ரவா லட்டு எங்க டி போன. என்ன விட்டு எங்க டி போன?” என்று கத்தியவன் அருகே இருந்த பூ ஜாடியை தூக்கி கீழே போட, அவன் ஆத்திரம் தாங்காமல் ஜாடி சில்லுசில்லாக தெரித்தது.
கதிரின் அறையில் எழுந்த சத்தத்தை கேட்டு நாகராஜன் தலையித்தெரிக்க உள்ளே வந்தவன்.“நண்பா என்ன பண்ணுற” என்று கத்திக்கொண்டே கதிரின் அருகே ஓடிவந்தான்.
தன் நண்பனின் நிலையை கண்டு பதறியவன்.
“கதிர். நீ என்ன பைத்தியமா.“ என்று நாகராஜன் கோவத்தில் கத்தும் சத்தம் கேட்டு ரோஜாவும் அங்கே வந்தாள்.
, , , , , , …
“ஆமா பைத்தியம் தான். நான் பைத்தியம் தான். என்னை அவ முழு பைத்தியமா ஆகிட்டு இப்போ என்னை விட்டு தூரமா போய் உக்காந்து இருக்கா. இனி எனக்கு என்ன இருக்கு டா. நான் போறேன். இப்படியே நான் பைத்தியமாகி எங்காவது தொலைந்து போறேன்” என்று கதிர் ஆத்திரம் தாங்காமல் கத்தினான்.
தன் அண்ணனின் செயலை ஓரமாக கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து இருந்தாள் ரோஜா.
“நண்பா. சொல்றத கேளு. இன்னைக்கு இந்த வீட்டுல ஒரு நல்ல காரியம் நடக்கப்போகுது. அத முதல்ல முடிக்கலாம் வா டா” என்றான் நாகராஜன்.
தன் முகத்தை அவன் கைகளால் அழுத்தி துடைத்த கதிர். ஓரமாக நின்று இருந்த ரோஜாவை பார்க்க.
“நாகா, கிடைத்த வாழ்க்கையை வாழ தெரியாத மடையன் உங்க நண்பன். அவரோட ஆத்திரம் தான் அவரோட முதல் எதிரி. அவர் முல்லை அண்ணி மேல கோவப்படுறதுல எந்த நியமும் இல்லை, அண்ணி இடத்துல நான் இருந்து இருந்தா இந்நேரம் இங்க நடக்குறதே வேற” என்று ரோஜா சொல்ல. தன் தங்கையை அடிபட்ட பார்வை பார்த்தான் கதிர்.
“நாகா. எனக்கே விருப்பம் இல்லாம தான் இந்த நிச்சியம் நடக்குது. இவங்க வாழற வாழ்க்கையை எல்லாம் பார்த்தா கல்யாண வாழ்க்கையில இருக்குற நம்பிக்கையே எனக்கு சுத்தமா போச்சு. ஆனாலும் என் அப்பாவுக்காக தான் மறுபடியும் அந்த தனத்தோட தம்பியை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிருக்கேன். எங்க அப்பா மேல உங்க நண்பனுக்கு கொஞ்சமாவது பாசம் இருந்தா இந்த நிச்சியத்துல எந்த பிரச்சனையும் பண்ணாம ஒழுங்கா முன்ன வந்து நிக்க சொல்லுங்க. இல்லையா எப்பவும் போல இவரை குடிச்சிட்டு உங்க வீட்டுல படுக்க சொல்லுங்க. என் பெரிய அண்ணன் காணாமல் போன மாதிரி என் சின்ன அண்ணனும் காணாம போச்சுன்னு நான் நினைச்சிக்கிறேன்” என்ற ரோஜா கோபமாக அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
இது வரை தன் தங்கை பேசியதை கேட்ட கதிர். பெருமுச்சுடன் குளியலறை சென்று மண்டபத்துக்கு தயாராகினான்.
, , , , , , , ,
இதே சமயம். மறுபக்கம் மண்டப வாசலில் மாப்பிளை வீட்டார் தனம், ரவி, மற்றும் இவர்கள் இருவரின் அன்னை சரஸ்வதி ஆகிய மூவரும் வந்து இறங்கினார்கள்.
“டேய் தம்பி. எப்படி டா உன் அக்கா பிளான். எங்க அடிச்சா காய் விழுமோ. அத தெரிஞ்சி மறுபடியும் உனக்கும் ரோஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டேன் பார்த்தியா” என்று தற்பெருமை பேசினாள் தனம்.
“இந்த ஒரு மாசத்துல என்னென்னமோ நடந்து போச்சு. மறுபடியும் நான் பாண்டியன் வீட்டுக்கு சம்மந்தியாக வாய்ப்பு கிடைக்கும்னு நினைத்தே பார்க்கல. ஆனாலும் என் கதிர் தம்பி தான் பாவம்” என்று தனத்தை பெற்ற தாய் சரஸ்வதி சொல்ல.
“இருங்க அம்மா. முதல்ல அந்த ரோஜா கல்யாணம் முடிந்து நம்ம வீட்டுக்கு வரட்டும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கதிரை நம்ம நம்மளோட கட்டதுக்குள்ள அழைச்சிட்டு வரலாம்” என்றாள் தனம்.
“யாரு என்ன பேசினால் என்ன, எனக்கு ரோஜாவை கல்யாணம் பண்ண இஷ்டமே இல்லை” என்ற ரீதியில் ரவி நின்று இருந்தவன் மனதில் வேறொரு திட்டம் வைத்து இருக்க,
கடந்து வந்த ஒரு மாதத்தில், தனம் மீண்டும் பாண்டியணை சந்தித்து. மன்னிப்பு கேட்டு. ரோஜாவை அவள் தம்பிக்கு பொண்ணு கேட்க.
கதிர் முல்லை, மீனா ஜீவா என்று இவர்கள் வாழ்வில் நடந்த பிரச்சனையால் கவலைக்கு ஆளாகியிருந்த பாண்டியன் ரோஜாவிடம் எடுத்து கூறி அவளுக்கே விருப்பமே இல்லை என்றாலும் பாண்டியனின் நிம்மதிக்காக இந்த கல்யாணத்தை நடத்த சம்மதம் வாங்கி இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று நல்ல நேரத்தில் நிச்சியம் நடக்க இருக்க. இரு வீட்டாரின் சொந்த பந்தங்கள் மண்டபத்தில் நிறைந்து இருந்தார்கள்.
, , , , , , , …
சில நிமிடங்களில் ரோஜா, மீனா, கதிர், பாண்டியன், நாகராஜன் என்று அனைவரும் மண்டபத்துக்கு வந்து இருக்க. ரோஜா மண பெண்ணுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் இருந்தாள்.
நிச்சியத்தை நடத்தி வைக்க வந்த ஐயர் மீனாவை அழைத்து சில வேலைகளை கொடுக்க, எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல. மீனாவும் தனமும் அங்கே ஒன்று கூடி இருந்தார்கள்.
“ஏய் மீனா. இங்க வா. ஆமா எங்க உன் புருஷன். தங்கச்சி நிச்சியதுக்கு கூடவா அவன் வரல.?” என்று சொந்தங்களில் ஒருவர் கேட்க,
“அவர் கல்யாணத்துக்கு வருவாரு” என்று பட்டுப்படாமல் ஜீவாவை பற்றி பேச பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து இருந்தாள் மீனா.
மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் மண்டபத்துக்கு வருபவர்களை வரவேற்க கதிர் வாசலில் நின்று இருக்க “ஏய் கதிர்.“ என்ற அழைப்போடு தனம் அவன் அருகே சென்று நின்றுக்கொண்டவள். வருபவர்களுக்கு சந்தனம் கொடுக்க ஆரம்பித்தாள்.
“என்ன கதிர் இது. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. என்ன இன்னுமா உங்கள வேணான்னு சொல்லிட்டு போன முல்லையை எண்ணி கவலைப்படுறீங்க” என்று தனம் கிண்டலாக கேட்க.
“ஏங்க. முல்லை ஒன்னும் என் நண்பனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போகல” என்று கோவமாக பதில் சொன்னான் இவர்கள் அருகே நின்று இருந்த நாகராஜன்.
“இவன் வேற சந்துல சிந்து படுவான்” என்று தனம் கடுப்பாக நாகராஜனை மனதில் திட்டிக்கொண்டு இருக்க. அதே சமயம் நாகராஜனின் கைபேசிக்கு ரோஜா அழைப்பு விடுத்தாள்.
“சொல்லுங்க சின்னம்மா.“ என்று ரோஜாவின் அழைப்புக்கு நாகராஜன் பதில் கொடுக்க.
“அண்ணி வருவாங்க தானே நாகா. வேணும்னா நீங்க போய் காருல அவங்கள அழைச்சிட்டு வரிங்களா” என்று முல்லையை பற்றி கேட்டாள் ரோஜா.
“நீங்க கவலைப்பிடாதீங்க சின்னமா. முல்லை பாப்பா கண்டிப்பா வரும். அதான் அங்க KV இருக்கானே. அவன் முல்லையை அழைச்சிட்டு வருவான்” என்று நாகராஜன் சொல்லும் சமயம். மண்டபதின் வாசலில் நீல நிற ஆடி கார் வந்து நிற்க.
“சின்னம்மா. KV கார் வந்துடுது. முல்லை பாப்பா வந்தாச்சு” என்று நாகராஜன் உரக்க சொன்னான்.
நாகராஜனின் வார்த்தையை கேட்டு மணப்பெண் அறையில் இருந்து முல்லையை பார்க்கும் ஆர்வத்தில் ரோஜா ஓடி வர,
காரின் ஓட்டுனர் கதவை திறந்து கொண்டு KV என்கிற நபர் கீழே இறங்கியவன், காரின் பின் இருக்கை கதவை திறக்க.
சந்தன நிற புடவையில் முல்லை காரில் இருந்து இறங்கும் காட்சியை. ஜோடியாக நின்றிருக்கும் கதிரும் தனமும் பார்த்து இருக்க,
“அண்ணி. நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும், எப்படி இருக்கீங்க அண்ணி. அப்பா அண்ணி வந்தாச்சு” என்று ரோஜா முல்லையை கட்டி அணைத்து பாச மழை பொழிய.
“அக்கா. ரொம்ப நேரம் நீ வெயில்ல நிக்காத. வா உள்ள போகலாம்” என்று உரிமையுடன் முல்லையின் கரங்களை பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும் KV யை கதிர் கொலை காண்டில் முறைத்து இருக்க.
“நாகா ப்ரோ. அங்க நிக்குறது கதிர் அங்கிள் தானே.“ என்று கேட்கும் KV யார்??, முல்லை ஏன் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேறினாள்??,
கதிர் முல்லைக்கு நடுவே பிரச்சனையை பெரிதாக காத்து இருக்கும் மீனா தனம் கஸ்தூரி ஆகிய மூவரின் எண்ணம் அழிந்து எப்படி KM ஒன்று சேர போகிறார்கள் என்று வரும் கதைகளில் படிப்போம்.
தொடரும்