Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 43

CHAPTER 43

முல்லை – 43

By Roja Roslin · October 29, 2026

0

முல்லையை எரிக்கும் பார்வையில் பார்த்து இருந்த மீனாவை பார்த்தும் பார்க்காததை போல முல்லை அங்கிருந்து சென்றவளை மீனாவும் பின் தொடர்ந்து சென்றாள்.

“அக்கா அக்கா. ரோஜா அக்கா தோத்து போயிட்டாங்க” என்று சிறுமி கத்தியதும்.

“சரி சரி மீதி விளையாட்டை நாளைக்கு விளையாடிபோம். இப்போ போய் தூங்கு” என்று ரோஜா சொல்ல,

“சரி அக்கா டாட்டா”என்ற சிறுமி அவள் வீட்டிற்கு சென்றாள்.

“அண்ணி. ரொம்ப வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு தான் இப்படி விளையாட முடிஞ்சது. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ரோஜா சொல்ல.

மீனா முல்லையை அழுத்தமாக முறைத்து பார்த்தபடி தான் நின்று இருந்தாள்.

முல்லையை மீனா முறைத்து இருக்க

“ஐயோ அண்ணி. என்ன உங்க உதட்டுல ரத்தம்” என்ற ரோஜாவின் கேள்வியில் முல்லை அவள் சிவந்த இதழ்களை வருடி பார்க்க. ஆம். அவள் இதழ் ஓரத்தில் சிறு துளி ரத்தம் கசிந்து கொண்டு தான் இருந்தது.

கேள்வி கேட்டது ரோஜாவாக இருந்தாலும். முல்லையின் பார்வை மீனாவை பார்க்க. மீனாவோ “ச்சீ”என்றபடி ஜீவாவின் அறைக்குள் நுழைந்தவள், இருந்த ஆத்திரத்தில் அந்த அறையின் கதவை அடித்து சாத்தி இருந்தாள்.

“என்னாச்சு இந்த மீனா அண்ணிக்கு, ஏன் இப்படி கோவமா போறாங்க” என்று ரோஜா கேட்க. முல்லை வேக வேகமாக அவள் அறைக்குள் புகுந்தவளை புரியாமல் பார்த்து இருந்த ரோஜாவிற்கு சற்று முன் நடந்த முத்த யுத்தம் தெரியாமல் போனது.

இதே சமயம் நாகராஜனின் இல்லத்திற்குள் நுழைந்த கதிரோ புதிய பூரிப்புடன் தன் நண்பனை நெருங்கி இருக்க.

“என்ன நண்பா பிளீச்சிங் பவுடர் போட்டு முகத்த மூணு முறை கழுவுனியா. பார்க்க இவ்ளோ ப்ரெகாசமா இருக்குற.?” என்று கேட்டதும்.

கதிரின் சிந்தையில் சற்று முன் நடந்த சிறு கூடல் நினைவுக்கு வந்து. அவனின் அதரங்கள் தானாக புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.

“டேய் டேய் நண்பா. என்னாச்சு? ஏன் தானா சிரிக்கிற?” என்று நாகராஜன் கேட்க. அதற்கும் கதிரின் பதில் புன்னகையாக மட்டுமே இருந்தது.

“ம். என்னமோ போ நண்பா. கல்யாணம் முடிந்ததில் இருந்தே நீ ஆள் சரியில்ல. சரி வா உனக்கு பிடிச்ச மேல் நாட்டு சரக்கு வாங்கி வச்சிருக்கேன். வா வா குடிக்கலாம்” என்றான் நாகராஜன்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் முல்லையின் பேச்சை கேட்டு மதுவை தொடாமல் இருந்த கதிருக்கு இப்பொது மதுவை விடவே மாதுவின் இதழ் முத்தம் போதையை தந்து இருக்க.

“எனக்கு வேண்டாம்ம் டா நண்பா” என்றான் கதிர்.

“ஐயோ. இது கனவா இல்லை நினைவா, என்ன.? உனக்கு சரக்கு வேண்டாம்மா.? உண்மையாவா.? நம்பவே முடியலயே” என்று நாகராஜன் நெஞ்சில் கைவைத்து பாவனை காட்ட,

“ஏன்டா. நல்லா இருக்குற என்னை கெடுக்குற?போ போ எனக்கு எதுவும் வேண்டாம்ம். நீயும் சாராயம் குடிச்சு நாசனமா போகாம. சுடு தண்ணியில சீரகத்தை போட்டு குடி. அப்போ தான் சீராகும் நம்ம தேகம்” என்ற கதிரை ஆச்சிரியமாக பார்த்தான் நாகராஜன்.

இதே சமயம் போலீஸ் அதிகாரி சுந்தரேசன் மறுபுறம் தன் வீட்டில் வாய்க்கு வந்த வார்த்தையை எல்லாம் சொல்லி கேசவனை வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தான்.

“சார். என்னை என்னதான் பண்ண சொல்றிங்க, என் மாமாவே எனக்கு வில்லனாக வருவாருன்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று கேசவன் சொல்ல,

“ச்சி வாய்யை மூடு, எதாவது அசிங்கமா சொல்லிட போறேன்” என்றான் சுந்தரேசன்

“அண்ணா. இனி இவங்கள எல்லாம் நம்பாம, நீங்க வேற விதமா யோசியுங்க” என சுந்தரேசனின் தம்பி ஸ்ரீனிவாசன் சொல்ல.

“எல்லாம் உன்னை சொல்லணும் டா. அன்னைக்கு கோவில்ல மட்டும் நீ அந்த ரோஜா கழுத்துல தாலியை கட்டி இருந்தால். இன்னைக்கு அந்த குடும்பமே நமக்கு அடிமை” என்றான் சுந்தரேசன்.

“சரி அண்ணா. அதான் அப்படி எதுவும் நடக்கலையே. இனி என்ன பண்ணுறதுனு சொல்லுங்க” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல,

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எனக்கு என் முல்லை வேணும்” என்ற கேசவனை கொலை வெறியில் முறைத்தான் சுந்தரேசன்.

“ஆமா, இந்த ஜீவா எங்கன்னு விசாரிக்க சொன்னேனே. அவனை பற்றி எதாவது தகவல் தெரிஞ்சதா” என்று சுந்தரேசன் கேட்க.

“அண்ணா. நீங்க தான் போலீஸ். உங்களுக்கே அவன் எங்கன்னு தெரியலைனா எங்கனால எப்படி தேடி கண்ட பிடிக்க முடியும்” என்று கையை விரித்தான் ஸ்ரீனிவாசன்

“ம், கண்டு பிடிக்கணும். ஜீவாவை கண்டு பிடுச்சா தான் நம்ம வேற பிளான் போட்டு கதிர்வேலன் குடும்பத்தை பிரிக்க முடியும்” என்று சுந்தரேசன் கையேடு அவன் அடியாட்களுக்கு ஜீவாவை தேடும் படி உத்தரவு போட்டான்.

அன்றைய தினம் இரவு நேரம் முல்லையும் ரோஜாவும் சமயலறையில் நின்றபடி சப்பாத்தியை திரட்டிக்கொண்டு இருக்க. முல்லையின் மனதிலோ எப்படி கதிர் தனக்கு முத்தமிட்டான் என்ற கேள்வி கரையை தொடும் அலையை போல அவள் சிந்தையில் வந்து வந்து சென்றது.

முல்லையின் மனநிலையை அறிந்திடாத ரோஜாவோ வேறு கதைகளை பேசிக்கொண்டு இருக்க. அதே சமயம் மீனா அங்கே வந்தவள், “என்ன முல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்டாள்

மீனாவின் கேள்விக்கு உண்டான அர்த்தத்தை முல்லை அறிந்து இருந்தாலும் “என்ன அண்ணி. நீங்க தானே கஸ்தூரி அத்தையை பார்க்க போனீங்க. நீங்க தான் உங்க அம்மாவை பார்த்த சந்தோஷத்துல இருக்கணும். நீங்க ஏன் முல்லை அண்ணியை பார்த்து இப்படி கேக்குறீங்க” என்று கேட்டாள் ரோஜா

“நான் சரியா தான் கேட்டு இருக்கேன். முல்லை இன்னைக்க்கு ரொம்ப சந்தோஷமா இருப்பா” என்று மீனா சொல்ல.

“மீனா. என்ன வேணும் உனக்கு. ஏன் இப்படி பேசுற” என்று கோவமாக கேட்டாள்

முல்லை

“ஓ. உனக்கு கோவமெல்லாம் வருதா முல்லை. உனக்கு இப்படியெல்லாம் பண்ண அசிங்கமா இல்லை” என்று மீனா கேட்க,

“இங்க என்ன நடக்குது. மீனா அண்ணி நீங்க எதை பற்றி பேசுறீங்க” என்று கேட்டாள் ரோஜா.

“நீ சும்மா இரு ரோஜா. ஏன் முல்லை. கதிர் மாமா என்னை தானே நேசிச்சாறு. ஏன்? நீயும் கூட ஜீவா மாமாவை தானே கல்யாணம் பண்ண ஆசை பட்ட. ஆனா இப்போ எப்படி அதுக்குள்ள கதிர் மாமாக்கூட கூத்தடிக்க உனக்கு மனசு வருது” என்ற மீனாவின் கேள்வியில் முல்லைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“அண்ணி என்ன பேசுறீங்க நீங்க” என்று ரோஜா முல்லைக்காக வாதாடும் முன்னே மீனாவின் சொல்லை தாங்கிக்கொள்ளாத முல்லை கண்களில் கண்ணீருடன் கதிரின் அறைக்குள் ஓடியவள். அவன் கட்டிலில் படுத்து தேம்பி தேம்பி அழ தொடங்கி இருந்தாள்.

நாகராஜனின் வீட்டில் இருந்து நேரே கதிர் தன் வீட்டிற்குள் வந்தவனின் விழிகள் தேவியின் தரிசனத்தை காண தவமிருந்து.

ஆனால் அவனின் எண்ணத்துக்கு எதிராக முல்லை அங்கே இல்லையென்று தெரிந்ததும் கதிர் நேரே சமயலரைக்குள் புகுந்தான்.

தன் அண்ணனை பார்த்த ரோஜா.

“என்ன வாத்தி நேரத்தோட வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ஆச்சிரியமா இருக்கு” என்று கேட்க, தன் தங்கையின் கேள்விக்கு பதில் தராத கதிரின் கண்கள் இரண்டும் கன்னியின் காட்சியை காண காத்து இருந்தது

“என்ன வாத்தி. யாரை தேடுறீங்க” என்று ரோஜா கேட்க. அங்கே நின்று இருந்த மீனாவோ.“என்ன மாமா பசிக்குதா.“ என்று கேட்க.“வாத்தி. நீங்க போய் அண்ணியை அழைச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் ரோஜா.

கதிர் அவன் அறைக்கு செல்லும் முன்னே, “அதான் முல்லை அழுதுட்டு போய் படுத்து இருக்காளே. அவ எங்க இருந்து சாப்பிட போறா” என்று மீனா சொன்னதும், “என்ன அழுதுகிட்டு போனாளா” என்று புரியாமல் கேட்டான் கதிர்

மீனாவின் கேவலமான குணத்தை அறிந்திடாத ரோஜாவும்.“ஆமா வாத்தி. என்னனு தெரியல, மீனா அண்ணி என்னமோ சொன்னாங்க. அதுக்கு முல்லை அண்ணி அழுதாங்க” என்று சொன்னவளின் வார்த்தையை முழுதாக கேட்டிடாத கதிர் இரண்டே எத்தில் அவன் அறையை சென்றடைந்தான்.

கதிர் உள்ளே வந்ததை கூட உணராமல் முல்லை அழுதபடியே உறங்கி இருந்தவள் கன்னத்தின் இரு பக்கமும் கண்ணீரின் காய்ந்த கோடுகளை பார்த்த கதிருக்கு காரணம் புரியாமல் போனது.

“ச்சே. ஒரு வேள நம்ம அவசரப்பட்டு முத்தம் கொடுத்ததை எண்ணி தான் இவள் அழுது இருப்பாளா.“ என்று யோசித்த கதிருக்கு. இனி அவளை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தில் அவளை பார்த்தபடி அவள் அருகே அமர்ந்தவனுக்கு இந்த நொடி வரை காமத்தை தாண்டிய காதல் தான் அவள் மீது நிரம்பி இருந்தது.

“இந்த வீட்டில் என்னதான் நடக்கிறது” என்று ரோஜா யோசித்து இருக்க. அவளின் தந்தை அதே சமயம் வீட்டுக்குள் நுழைந்ததும் பாண்டியனுக்கு இரவு உணவை கொடுத்து அவருக்கு மருந்து மாத்திரை கொடுக்கும் கடமையில் ரோஜா முழுகி இருந்தவளுக்கு முல்லையின் நிலையென்ன என்பதை யோசிக்க நேரமிள்ளாமல் போனது.

இரவு பதினாறு மணியை கடந்தும் கதிரும் முல்லையும் சாப்பிடாமல் இருக்க.“வாத்தி.“ என்ற அழைப்புடன் கையில் இரண்டு கோப்பை பாலை கொண்டு வந்து கொடுத்த ரோஜா.

“நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடவே இல்ல. இந்தாங்க இந்த பாலை குடிச்சிட்டு படுங்க. நாளைக்கு பேசிக்கலாம் குட் நைட்” என்ற ரோஜா சோர்வாக அவள் அறைக்குள் சென்றாள்.

தன்னால் தான் முல்லை கவலையாக இருக்கிறாள் என்று நினைத்த கதிர் தயக்கத்துடன் முல்லையை நெருங்க, அப்போது தான் அவளின் இதழ் ஓரத்தில் காய்ந்து இருக்கும் சின்ன காயத்தை பார்த்தவனுக்கு முதலில் சின்னதாக பூரிப்பு எழுந்தாலும் அவள் விருப்பமின்றி அவளை முத்தமிட்டதை எண்ணி கவலையும் அடைந்தான்

இனி எப்போதும் இப்படி ஒரு காரியாதை செய்யவே கூடாது என்று எண்ணிய கதிர் “ஏய் ரவா லட்டு.“ என்று முல்லையை அழைக்க. அவளோ அவன் குரலை காதில் வாங்காமல் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று இருந்தாள்.

அவளை எழுப்பவும் கதிருக்கு மனமில்லாமல் இருக்க. எப்படி பசியுடன் நிம்மதியாக உறங்குவாள் என்ற கேள்வியும் அவனுள் இருக்கதான் செய்தது.

கையில் இருந்த பால் குவளைகளை மேசை மேல் வைத்தவன், முல்லை படுத்து இருக்கும் கட்டிலில் அமர்ந்து, “ஏய் ரவா லட்டு. உன்னை தான்” என்று அவளை செல்லமாக அழைக்க, அவளோ மேலும் நிம்மதியாக உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்.

கதிர். முல்லை அருகே அமர்ந்து. தாமரை இலையின் மீது தவழும் நீரை போல அவனின் விரல்கள் பட்டும் படாமலும். தொட்டும் தொடாமலும் அவளின் இதழ்களை வருட. பொறுமையாக கண்கள் மலர்ந்தாள் பெண்ணவள்.

தன் அருகே அமர்ந்து இருக்கும் கதிரை பார்த்து மீண்டும் சின்ன சிரிப்புடன் கண்கள் மூடியவளின் செயலில் கதிருக்கு சிரிப்பு தான் வந்தது.

முல்லையின் இயல்பே இது தானே, இன்பமோ துன்பமோ எதையும் ஒரே மனநிலையில் தாங்கிக்கொல்லும் முல்லைக்கு அவளை யார் வேதனை படுத்தினாலும் அந்த நொடி அழுதும் தன் கவலைகளை மறக்க முடியவில்லை என்றாலும், இனி நினைக்காமல் இருக்க முயற்சி செய்வாள்.

மீனாவின் வார்த்தையால் முல்லை இப்போது அழுகிறாளே தவிர. அவளும் கதிரின் காதலை அனுபவிக்க காத்து தான் கிடக்கிறாள் என்ற உண்மையை அறிந்திடாத கதிரோ.“ஏய் ரவா லட்டு” என்று மீண்டும் அவளை எழுப்பினான்.

“என்ன மாமா சார். எனக்கு தூக்கம் வருது” என்ற முல்லை வேறு பக்கமாக திரும்பி படுத்தவளை பார்த்து கதிர் மேலும் சிரித்துக்கொண்டான்.

“இவ இப்போதைக்கு எழுந்திரிக்க மாட்டா. தூக்க மூஞ்சி” என்று அவளை மனதிற்குள் வசைபாடியவன் மீண்டும் பாலை எடுத்துக்கொண்டு சமயலறைக்குள் நுழைய. அவனை பின் தொடர்ந்து வந்தாள் மீனா.

மீனாவை அங்கே எதிர் பார்க்காத கதிர் அவளிடம் பேச்சுக்கொடுக்காமல் அங்கிருந்து சென்றவனிடம் என்ன பேசுவதென்று மீனாவுக்கும் தெரியவில்லை.

ஏனெனில் ஜீவாவின் கையால் தாலியை ஏற்றுக்கொண்ட மீனாவுக்கு இப்பொது கதிரின் மீது எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தாலும்.

கதிருக்கு முல்லையை பிடிக்காமல் தான் அவளை இவன் திருமணம் செய்து இருக்கிறான் என்று எண்ணி இருந்தவளுக்கு இன்றைய தினம் மாலை நேரம் கதிரும் முல்லையும் அந்நுனியமாக இருந்த காட்சி பல கேள்விகளை அவளுக்குள் விதைத்து இருந்தது.

இந்த சூழ்நிலையில் என்ன பேசினாலும் அது வேறு விதமாக முடியும் என்று எண்ணிய மீனா அவள் அறைக்குள் சென்று படுத்துக்கொள்ள.

கதிரும் தன் அறைக்குள் வந்தவன் கண்ணுறங்கும் தன் கண்மணியின் அழகினை கண்ணார ரசித்தபடியே அவனும் உறங்கி இருந்தான்.

மறுநாள் காலை முதல் ஆளாக தூக்கம் களைந்து எழுந்த முல்லைக்கோ நேற்றைய தினம் நடந்த நிகழ்வுகள் எண்ண அலையில் வந்து செல்ல.

பாயில் படுத்து இருக்கும் கதிரை வைத்த கண் எடுக்காமல் கண்டு ரசித்து இருந்தாள் முல்லை.

கண் இமைக்காமல் அவனை ரசித்த முல்லையின் மனதில் கதிர் எப்படி தனக்கு முத்தம் கொடுத்தான்.

காதல் இல்லாமல் ஒருவருக்கு முத்தம் தர முடியுமா. இல்லை அவன் முத்ததிற்கு ஈர்ப்பு மட்டும் தான் காரணமாக இருக்குமா.

என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்ட முல்லை

முடிவாக எது நடந்தாலும் விதிப்படி நடக்கட்டும் என்று நினைத்தவள், தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று இருந்தாள்.

முல்லை குளித்து முடித்தவள் மொட்டை மாடிக்கு சென்று அவளின் துணிகளை உளற வைத்தவளின் கண் முன்னே கதிர் உடற்பயிற்சிக்காக பயன் படுத்தும் கர்லாக்கட்டை இருப்பதை பார்த்தவள்.

“ஐ. இது மாமா சாருது தானே. சின்ன வயசுல இத நம்மள தொட விடவே மாட்டாரு” என்று எண்ணிய முல்லை நேராக சென்று ஒற்றை கையில் அந்த கட்டையை தூக்கியவள் எடை தாங்க முடியாமல் பட்டேன்று கீழே போட்டாள்.

அத்தனை கனமான கட்டை விழுந்ததும் பயத்தில் முல்லை நடுங்கியவளின் கண்களின் முன்னே கதிர் கோபத்துடன் வந்து நின்று இருந்தான்.

“ஐயையோ. இவுக எங்க இங்க வந்தாக. இப்போ நம்மள திட்ட போறாகளா” என்று எண்ணிய முல்லை சட்டென்று சுதாரித்துக்கொண்டவள்.

“என்ன மாமா சார் இது. இந்த கட்டைக்கு அறிவே இல்லையா” என்று கேட்டாள்.

முல்லையின் கேள்வியில் ஒற்றை புருவத்தை உயர்த்தி இடுப்பில் கையை வைத்தபடி அவளை முறைத்தவன்,

“எதுக்கு டி என் பொருளை தொட்ட” என்று கேட்டதும் முல்லையின் அஞ்சன விழிகள் பதட்டத்தில் பம்பியது.

“கேக்குறேனே. ஏன் டி இத தொட்ட” என்று கதிர் மிரட்ட.

“இந்த கட்ட பார்க்க அழகா இருந்துச்சு. இத தூக்கி பார்க்க ஆசையா இருந்துச்சு. அதான் தொட்டேன்” என்ற முல்லையை அழுத்தமாக பார்த்தான் கதிர்.

அவனின் பார்வை முல்லையை மேல் இருந்து கீழ் வரை அங்குலம் அங்குலமாக அளந்துக் கொண்டு இருக்க.

அவன் கண்கள் மேயும் இடத்தினை ஆழமாக கவனித்த முல்லை தன் புடவையை சரி செய்துகொண்டாள்.

ஆள் இல்லாத மொட்டை மாடியில் கதிரும் முல்லையும் மட்டும் தனித்து இருக்க. அடி மேல் அடி வைத்து கதிர் முல்லையை நெருங்கி வந்தவன். சட்டென்று தன் கரம் கொண்டு அவள் இடையை சுற்றி வளைத்துக்கொண்டான்.

“அழகா இருந்தா என் பொருளை என் அனுமதி இல்லாமல் தொட்டு பார்பியா.?” என்று கதிர் கேட்டதும். அவன் அணைப்பில் முல்லையின் தேகம் ஒரு கனம் சிலிர்த்து அடங்கியது.

ஈர துணி சுற்றி இருக்கும் கூந்தல்.

வட்ட பொட்டை ஏந்தி இருக்கும் நெற்றி. படபடக்கும் அவளின் கண் இமைகள்.

எதையோ சொல்ல துடிக்கும் அவளின் இதழ்கள் என்று அனைத்தையும் அழுத்தமாக ரசித்த கதிர்.

“அடுத்த முறை என் பொருளை என் அனுமதி இல்லாம தொடக்கூடாது” என்று எச்சரிக்கும் குரலில் பேசினான்.

மேல் சட்டை இல்லாமல். உள் பணியன்னுடன் தன்னை கட்டிக்கொண்டு நிற்கும் கதிரின் அணைப்பில் முல்லைக்கு மயக்கம் ஒன்று தான் வராத குறையாக இருந்தது.

அவளின் இதழ் ஓரத்தில் சின்னதாக காய்ந்து இருக்கும் காயத்தை வருடிய கதிரோ.“வலிக்குதா” என்றவன். தன் விரல் கொண்டு அவள் இதழ்களை மேலும் வருடி கொடுத்தான்.

அவன் தொடுதலில் இமைகள் மூடி அவன் முன்னே மீண்டும் பொம்மையாக மாறி இருந்தாள் முல்லை.

தன் எதிரே அழகு பதுமையென விழிகள் மூடிய தங்க விக்ரம்கமாக முல்லை நின்று இருக்க.

மீண்டும் அவளை முத்தமிட நினைத்த ஆடவின் எண்ணத்திற்கு இடைஞ்சளாக, “நண்பா.“ என்ற குரல் கதிரின் செவிகளை தாண்டி முல்லையின் காதில் ஒலித்தது.

நாகராஜனின் குரலை கேட்ட முல்லை. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பேன கதிரின் பிடியில் இருந்து வேக வேகமாக தப்பித்து கிழே இறங்கி ஓடியவளின் அழகினை உள்ளுற ரசித்துக்கொண்டு இருந்தான் கதிர்.

சிறுவயதில் இருந்து முல்லை மீது உயிரையே வைத்திருந்த கதிருக்கு ஒரு முறை கூட அவன் காதலை அவளிடம் தெரியப்படுத்த வாய்ப்பில்லாமல் போக.

திருமணம் முடிந்த பிறகு இவனாகவே அந்த வாய்ப்பை உருவாக்கிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கதிர்.

“நண்பா.“ என்று மீண்டும் நாகராஜன் கதிரை அழைக்க. மொட்டை மாடியின் சுவற்றில் கை வைத்தப்படி கிழே நின்று இருந்த தன் நண்பனை பார்த்து கொலை காண்டில் முறைத்தான் கதிர்.

“நண்பா. எவ்ளோ நேரம் உன்னை கூப்பிடுறது. சீக்கிரம் கிழே இறங்கி வா. நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு போகணும்” என்று நாகராஜன் கதிரை அழைக்க. காலை உணவை உண்ணாமல் கூட கதிரும் நாகராஜானும் எங்கேயோ வெளியே கிளம்பி சென்று இருந்தார்கள்.

அன்றைய தினம் மாலை நேரம் ரோஜா, முல்லை, மீனா ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டு இருக்க.“என்ன ரோஜா. ஏன் மாமா சார் மதியம் கூட சாப்பிட வரல” என்று கேட்டாள் முல்லை.

“தெரியல அண்ணி. நான் போன் பண்ணி கேட்டதுக்கு வாத்தி நைட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னாரு” என்ற ரோஜா.

“சரி நீங்க பூ கட்டிக்கிட்டு இருங்க நான் உங்களுக்கு போயி காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றவள் சமையலறைக்குச் சென்றாள்.

ரோஜா தங்கள் அருகே இருக்கும் வரை அமைதியாக இருந்த மீனா ரோஜாவின் தலைமறைந்ததும்.“என்ன முல்லை, கதிர் மாமா கையாள தாலி கட்டிக்கிட்டா போதுமா. அவர் ஏன் சாப்பிட வரல. அவருக்கு என்ன ஆச்சு. அவருக்கு என்ன பிடிக்கும். என்ன பிடிக்காது. இதெல்லாம் தெரிஞ்சுவச்சுக்கணும்னு உனக்கு கொஞ்சம் கூட தோனலையா” என்று கேட்டாள் மீனா.

மீனாவின் கேள்வியில் கடுப்பான முல்லை.“இங்க பாரு மீனா. நீ சாதாரணமா என்கிட்ட பேசினால் நானும் உன்னை ஒரு சகோதரியா நினைத்து பதில் சொல்லுவேன். ஆனா நீ பேசுற பேச்சு. நடந்துக்கிற விதம் இது எதுவுமே எனக்கு சரியா படல”“என்று முல்லை மீனாவிடம் கோபத்துடன் பேச.

“என்ன. நான் நடந்து கொள்வது சரி இல்லையா.? அதை நீ சொல்றியா?என்று கேட்டாள் மீனா.

“ஆமா. நான் தான் சொல்றேன். உன் மனசுல நீ என்னதான் நினைச்சுகிட்டு இருக்க. நானும் மாமா சாரும் பேசினால் உனக்கு என்ன வந்துச்சு. நீயேன் எங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ன நடக்குதுன்னு வேவு பாத்துக்கிட்டு இருக்க” என்று தன் மனதில் உள்ள கேள்வியை நேரடியாக மீனாவிடம் கேட்டாள் முல்லை.

“இங்க பாரு முல்லை. இந்த ஜென்மத்துல கதிர் மாமா என்னுடையவர் இல்லை. அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் என் கதிர் மாமாவுக்கு நான் கிடைக்கலைன்னு ஆன பிறகும் அவருக்கு அவரைப் புரிஞ்சுகிட்ட ஒரு நல்ல பொண்ணு கிடைக்கனும்னு தான் நான் ஆசைப்பட்டேன்.“ என்று மீனா சொல்ல

முல்லை அதிக கோபத்துடன் மீனாவை முறைக்க.“முறைக்காத. நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு தான். ஆனாலும் கதிர் மாமா மனசுல என் அளவுக்கு உன்னால இடம் பிடிக்க முடியுமா?” என்று கேட்டாள் மீனா.

“என்ன உளர்ற. ஏன்? நான் பார்த்த வரைக்கும் மாமா சார் ஒன்னும் உன்னையே நினைச்சுகிட்டு இருக்குற மாதிரியெல்லாம் எனக்கு தோணல. அவரு இயல்பா தான் இருக்காரு. இன்னும் கேட்டா உன்ன விடவே அவருக்கு என் மேல தான் அதிக பாசம் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது” என்று முல்லை கதிரின் அன்பை உணர்ந்தவளாக அங்கே பேசியதும் மீனாவின் முகம் மேலும் கோபத்தில் இறுகி போனது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!