Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 7

CHAPTER 7

மலர்மாலை – 7

By Yuva Sri · October 26, 2026

0

ஈசன் தன் நண்பனுடன் பேசி இருந்து விட்டு சரி குளிக்கலாம் என்று நினைத்தவன் குளியல் அறைக்குள் போக,,

அவன் குளியல் அறைக்குள் சென்றவுடன் ஒரு ரெண்டு மூணு நிமிஷத்தில் துர்கா கண் விழித்து பார்த்தவள்,

தன் மாமன் படுத்திருந்த இடத்தில் இருக்கிறானா என்று பார்க்க,, அவன் இல்லை,

எங்க போயிட்டாரு அதுக்குள்ள எழுந்துட்டு இருக்காரு என்று நினைத்தவளுக்கு குளியலறையில் இருந்து தண்ணீரின் சத்தம் கேட்க,

ஓ குளிக்க போயிட்டாரா என்று நினைத்தவள் எழுந்து அப்படியே வெளியே சென்றாள்,,

இங்கே வெளியே வந்து பார்க்க மாதவி டீ குடித்துக் கொண்டிருக்க வேலைக்கார பெண்மணி வேலை செய்து கொண்டிருந்தாள்,

அம்மா நீயும் எழுந்துட்டியா என்று சொல்லிக் கொண்டே வந்து தன் தாயின் பக்கத்தில் துர்கா அமர,

அதற்கு தன் மகளை பார்த்த மாதவி,

என்ன துர்கா படுத்து எழுந்து அப்படியே வந்து இருக்க,,

குளிச்சிட்டு வெளியே வர வேண்டியதுதானே என்று கேட்க,

அம்மா என்ன இது எனக்கு டீ குடிக்கணும் போல இருக்கு அதனால தான் வந்தேன் என்றவள், அக்கா எனக்கு டீ எடுத்துட்டு வாங்க என்று வேலைக்கார பெண்மணி இடம் சொல்ல,

சரி என்று அவளும் எடுத்துட்டு வந்து துர்கா கையில் கொடுத்துவிட்டு சென்றாள்,,,

அவள் சென்ற நேரம்,,

இல்லடி நேத்து நைட்டு உள்ளே போன மாதிரியே    வந்து உட்கார்ந்து இருக்க,, எழுந்து குளிக்கணுமா இல்லையா, குளிக்காம வந்திருக்க இது உனக்கு நல்லா இருக்கா இத்தனை நாள் நீ எப்படி இருந்தியோ தெரியல ஆனா இதுக்கு அப்புறம் இப்படி தான் இருக்கணும்னு ஒன்னு இருக்கு, அத கவனிச்சு நடந்துக்கோமா என்றாள்,

சரி மா இப்ப குளிக்காம வந்தது தப்பா என்றவள் ,

 நான் குளிச்சிட்டு தான் வந்து இருப்பேன் ஆனா மாமா குளிச்சிட்டு இருக்காரு அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி அவர் குளிக்கும் பொழுதே போய் குளிக்க முடியும்,,,

 அதான் என்னுடைய ரூம்லயாவது போய் குளிக்கலாம் என்று வந்தேன், வந்து பார்த்தா நீ டீ குடிச்சிட்டு இருந்த எனக்கும்  குடிக்கணும்னு தோணுச்சு என்றவள்,,

சரி மா நான் போய் குளிக்கிறேன் என்று எழுந்தவள், டீ குடித்துக் கொண்டு அவள் அறைக்கு போக,

துர்கா என்று மாதவி அழைத்தாள் அந்த நேரம்,

என்னமா என்று அவள் திரும்பிப் பார்க்க,

இல்ல உன்னுடைய டிரஸ் எல்லாம் மாமா ரூம்ல எடுத்துட்டு போய் வச்சுக்கோ இனிமே உன் ரூமும்னு ஒன்னு கிடையாது சரியா, இனிமே எதுவா இருந்தாலும் அந்த ஒரு ரூம் தான் உங்க ரெண்டு பேருக்கும் என்று சொல்ல,

சரி மா என்றவள் அவள் அறைக்குள் போனாள்,,

இங்கே ஈசன் அறை,,

குளித்து முடித்து வந்தவன் பார்த்தது மெத்தையில் அவள் இல்லாமல் இருந்ததை தான்,

அவள் இல்லாத போக எங்கே போனாள் என்று அவன் கண்கள் அலைபாயத்தான்  செய்தது,

அவளை மனதளவில் தேடியவன் பிறகு தன் உடைகளையும் அழகாக போட்டுக் கொண்டு ஒரு கம்பெனிக்கு போக எப்படி ரெடி ஆகனுமோ அப்படி ரெடியாகி வெளியே வந்தான்,

அவன் வெளியே வந்தவுடன் அதை கவனித்த வேலைக்கார பெண்மணி அவனுக்கு காபி எடுத்துட்டு வந்து கொடுக்க,

அதை வாங்கி குடிக்க அமர்ந்தவன்,

அக்கா காபி குடிச்சிட்டியா என்று தன் அக்காவிடம் கேட்க,

அதெல்லாம் முடிச்சுட்டேன் ஈசா என்றவள்,

ஈசா இப்ப நீ எங்க கிளம்பி இருக்க என்று கேட்க,,,

என்னக்கா கேள்வி நான் ஆபீஸ் தான் கிளம்புறேன் என்றான்,

என்ன ஈசா உனக்கு நேத்து தானே கல்யாணம் ஆயிருக்கு இந்த நேரத்துல ஆபீஸ் போகலாமா,

துர்காவை கூட்டிட்டு எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம் இல்ல என்ற இவள் சொல்ல,

அக்கா ஏன்கா என் மனச புரிஞ்சுக்காம இப்படி பேசுறீங்க,

அவ சின்ன பொண்ணுக்கா அவளை கூட்டிக்கிட்டு  நான் எங்க போறது, முடியல அக்கா சென்றவன் அக்கா இப்ப கூட ஒன்னும் இல்ல அவ கிட்ட கொஞ்சம் நாசுக்கா பேசி இந்தக் கல்யாணம் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லு அக்கா,

அந்தச் சின்ன பொண்ணு வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல என்ற அவன் சொல்ல,

ஈசா என்ன பேசுற நீ, வாழ்க்கையோடு நடைமுறை உனக்கு தெரியும் தானே, கல்யாணம் ஆயிட்ட பிறகு ஒன்னு பண்ண முடியாது டா, அதுவும் இல்லாம துர்கா உன்னை ஏத்துக்கிட்டா

அத நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்,

சும்மா முடிஞ்சு போன கல்யாணத்தை ஒன்றும் இல்லாம ஆக்க பார்க்காதே,

இதுல உன் வாழ்க்கை மட்டும் இல்ல என் மகளோட வாழ்க்கையும் இருக்கு,

என் வாழ்க்கை தான் ஆரம்பிக்கும்போதே முடிஞ்சிடுச்சுன்னு பாத்தா என் பொண்ணு வாழ்க்கையும் அப்படியே முடிக்க நினைக்கிறியே, இது உனக்கு நியாயமா இருக்கா,

உன்னையே நம்பி இருக்கிற எங்கள கைவிட்டுடாத ஈசா என்று கண்ணீர் சிந்தினாள் மாதவி,,,

இல்லக்கா அவ என் வாழ்க்கைல இருந்தால் என்னால் அவளுக்கு எந்த சந்தோசத்தையும் கொடுக்க முடியாது, அதுக்கு தான் சொல்றேன் என்றான்,

இங்க பாரு காலையிலேயே என் மனச கஷ்டப்படுத்தாதே டா,

இப்பதான் அலை அடிச்சு ஓஞ்ச மாதிரி கொஞ்சம் பெருமூச்சு விட்டு   உட்கார்ந்து  இருக்கிறேன்,, இப்போ திரும்பவும் வந்து புயலை கிளப்பி விட்டு விடாதே,

உனக்கு என் மகள் கூட வாழ விருப்பம் இல்லையா சொல்லுடா, நான் துர்கா கிட்ட பேசுறேன்,

ஆனா அவ வாழ்க்கை, அவ சின்ன பொண்ணு அவா அவளுக்கேத்த வாழ்க்கை அமையட்டும் இந்த மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு என்கிட்ட வராதே,,

உனக்கு அவளை பிடிக்கலையா சொல்லு நான் அவ கிட்ட பேசுறேன் என்று மாதவி கொஞ்சம் டென்ஷன் ஆக  கத்த,,

அம்மா நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆக்குற,

மாமா என்ன பிடிக்கலைன்னு சொல்லிடுவாரா என்ன என்றவள் வேகமாக தன் மாமா முன்னாடி வந்து நின்ற துர்கா,

இங்க பாருங்க மாமா எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் உங்கள பத்தி என்ன பத்தியோ பேசறதா இருந்தா நம்ப ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான் பேசனும்,,

நம்ம ரெண்டு பேரும் பேசி  தீர்க்க முடியாத விஷயத்தை அம்மா, அப்பா கிட்ட இல்ல வெளிய சொல்லலாம் ,,

இப்போ ஒன்னும் இல்லாத கதையே அம்மாகிட்ட பேசி அம்மாவை எதுக்கு பயம்புறுத்திட்டு இருக்கீங்க,

ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சுக்கோங்க என் வாழ்க்கையில நீங்க மட்டும் தான்,

அத நீங்க நேத்து என் கழுத்துல தாலி கட்டும்போது முடிவு பண்ணிட்டேன்,

அப்படி உங்களுக்கு என்ன பிடிக்கலன்ன  சொல்லுங்க,,

நேத்து நீங்க என் கழுத்துல தாலி கட்டாம இந்த வீட்ட விட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தேன் இல்ல,,

இப்போ  ஒரு அங்கீகாரத்தோட இந்த வீட்டை விட்டு போறேன் உங்க பொண்டாட்டியா என்றவள், என் அம்மாவையும் கூட்டிக்கிட்டு என்று அவனைப் பார்த்தவள்,,,,

அதுக்கப்புறம் என்ன உங்க அக்கா மகனு இல்ல என் அம்மா உங்க அக்கா என சொல்லிக்கிட்டு நீங்க வரக்கூடாது, நாங்க எங்க வேணா போவோம் எது வேணா பண்ணிப்போம் இதுக்கு சம்மதிக்கிறதா இருந்தா,,

இப்பவே நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது அது இதுன்னு நீங்க டயலாக் பேசுங்க என்றவள்   அவனைப் பார்க்க,

அப்படி பேசிய அவளைப் பார்த்தான்,,

காலையில் அழகாக குளித்துவிட்டு ஒரு மெல்லிய புடவையை எடுத்து கட்டிக்கொண்டு, முகத்தில் அழகான சின்ன பொட்டு கண் மை என்று அனைத்தையும் வைத்துக்கொண்டு தலையில் சீப்பை வைத்து வாரிக் கொண்டே தன் முன்னாடி நின்ற தன் மனைவியை பார்த்தான்,

பேச வாய் வரவில்லை, ஆனால் அவன் கண்கள் அவளைக் கீழே இருந்து மேல் வரைக்கும் அளந்தது,

இத்தனை நாளா இவளை தப்பான பார்வை பார்த்ததில்லை,

ஆனால் இன்று ஏனோ அவள் இடை முதல் அவள் கழுத்து வரை பார்க்க தோன்றியது அவனுக்கு,

சிறிது நேரம் தன்னையும் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் எவ்வளவு அழகா இருக்கா, பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கே என்று நினைத்தவன்,

பிறகு சேச்சே   சின்ன பொண்ணு,,,, அவள போய் நீ தப்பா பாக்கலாமா டா என்று மனதில் நினைத்தவன்,

சட்டென்று அந்த இடத்திலிருந்து எழுந்திருக்க,

என்ன மாமா நான் கேட்டா கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாம நீங்க பாட்டு எழுந்து நிக்கிறீங்க,

என்ன சொல்லப் போறீங்க, நம்ம பிரிஞ்சுடலாம்னு நீங்க இப்ப சொன்னா கண்டிப்பா செய்யலாம் ஆனா நான் என் அம்மாவை கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயிடுவேன் என்ற அவள் சொல்ல,

அதற்கு எதுவும் சொல்லாதவன் வேகமாக ஆபீஸ்க்கு கிளம்பினான்,

போகும் அவனை பார்த்து,

ஈசா சாப்பிடாம போறியேப்பா என்றாள் மாதவி,,

அதற்கு திரும்பியவன் இல்லக்கா நான் கேண்டீன்ல   சாப்பிடுகிறேன் என்று சொன்னவன் துர்காவை பார்த்து ,

துர்கா என்று அவளை அழைத்தான்,

அவளும் தன் மாமா அழைக்க,

மாமா என்று வேகமாக நடந்து அவனிடம் சென்றாள்,

தன்னிடம் ஓடி வந்த அவளை பார்த்தவன்,

இல்ல ஒரு விஷயம் என்று தயங்கிக் கொண்டே அவன் சொல்ல,

சொல்லு மாமா என்ன விஷயம் என்று ரொம்ப ஆவலாக அவன் முகத்துக்கு நேராக தான் முகத்தை வைத்து கேட்டாள்,

அவள் முகம் தன் முகத்துக்கு நேராக வர,,,,அப்பொழுது அவள் முகத்தை பார்த்தான்,

பார்த்த சில நொடி சுயநினைவு இழந்தவன்,, அதே நொடியில் தன்னை  சுய நினைவு வர வைத்துக் கண்டு,

அது ஒன்னும் இல்ல நம்ப ரகு நைட் டின்னருக்கு நம்ம ரெண்டு பேரையும் கூப்பிட்டு இருக்கான்,

அவன் கூப்பிட்ட உடனே நான் சம்மதம் சொல்லல,,

உன் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன், உனக்கு என் கூட ரகு வீட்டுக்கு வர விருப்பம் இருந்தா வரியா என்றான்,

அவன் அப்படி கேட்டவுடன் தன்னை மறந்து அவனை பார்த்தவள்,,

மாமா எனக்கு ஓகே மாமா நான் வரேன் என்றவள் வேகமாக அவனை கட்டி பிடித்துக் கொண்டாள்,,,,

கட்டிப்பிடித்துக் கொண்டவள்,

மாமா நீங்களா இது என்னால நம்ப முடியல ஆனா நம்பாமலையும்  இருக்க முடியலையே என் மாமா தானே என்ன வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு என்றவள் அவன் காதோரம் பேசிக் கொண்டிருக்க,

அவள் பேசும் பொழுது அவள் மூச்சு காற்றின் சூடு அவன் காதோரம் பட,

அதில் ஒரு நிமிடம் தன் உடல் எல்லாம்  ஆட்டம் கண்டான்,

ஒரு மாதிரி ஆனது அவனுக்கு அவளது அணைப்பு,

ஒரு நிமிஷம் தன்னையும் மறந்து மயங்கி நின்றான் அவள் ஸ்பரிசத்தில்,

மாமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா நான் ரெடியா இருப்பேன் என்றவள்,

வேகமாக அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவனிடமிருந்து மென்மையாக பிரிந்து உள்ளே ஓடினாள் துர்கா,

இவ்வளவு நேரம் தான் எங்கே இருக்கிறோம் ஏதாவது மேலோகத்துல இருக்கோமா இல்ல வானத்துல பறக்குறோமா ஒண்ணுமே புரியல ஏதோ மிதப்பது போல அவனுக்கு தோன்ற,

அந்த உணர்வு என்ன மாதிரி உணர்வு என்று தெரியவில்லை அவனுக்கு,, புதிதாக இருந்தது,, அதே மாதிரி அவள் அவ்வாறு செய்தது அவனுக்கு பிடிச்சு இருக்கா பிடிக்கலையா தெரியல,

அதற்கு என்ன மாதிரி ரியாக் பண்ணனும்னு கூட புரியாமல் அப்படியே திரும்பி கார் இருக்கும் இடத்திற்கு சென்றான் ஈசன்,,

தொடரும்,,

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!