அத்தியாயம்-12-
”யோவ்… ரீல் அந்து போய் பல வருஷமாச்சு, போவியா…இன்னும் கனெக்ஷன் குடுத்துட்டு…!”
என்றுவிட்டு மங்கலம் தன் முகத்தைச் சிலுப்பிக்கொள்ளவும்…. காரணம், மாணிக்கத்தின் கண்கள் மட்டும் ‘முதல்மரியாதை!’ சிவாஜியைப் போலவே உருண்டு… உருண்டு …. தன் காதலைக் கண்கள் வழி மங்கலத்திடம் கடத்திக் கொண்டிருந்தன… அதனால், தற்போது மாணிக்கம்,,….
‘அடிப்பாவி முன்னலாம் கண்ணுல ஒரு காதல்! சொன்னா போதும்…. உடனே, உன் முகத்துல ஆயிர வாட்ஸ் பல்ப்! எரியுமே டீ …. உனககு அல்வா கூட தேவைபாடதே டீ பாவத்த… மயங்கி மடங்கி மடியில தான் வாரேன்னு வருவியே டீ பாவத்த….’
என மனதுக்குள்ளாக கணவன் அலுத்துக்கொளளவும்…..
‘ஆமா எத்தனை வருஷம் தான் நீயும் இப்படியே ஏமாத்துவ… நான் இனி உன்ட்ட ஏமாறமாட்டேன் …. போடா யோவ்….!, ‘
என அதே போல மனைவியுமே அவ மனதுக்குள்ளாக இப்படி நினைத்துக் கொண்டு சிலுப்பியவள்,மேலும்,
‘ ஆனா யோவ்…. விட்ல மாட்டேன்னு அடம் பிடிச்சு பார்த்தேன் கல்யாணம் வேண்டாம்ன்னு…. என்ன பெத்தவங்க கேட்கலன்னதும்…. நீயா வேற போன் அடிச்சியா…. அன்னைக்குன்னு பார்த்து… ‘
என்று அன்றைக்கு நடந்த சம்பவத்தை பற்றி மங்கலம் யோசிக்கவும்….
‘அடப்பாவி…., நான் போன் அடிச்ச அன்னைக்கு நல்லதா போச்சுன்னு என் ப்ளஸ், மைனஸ் எல்லாத்தையும் உன்கிட்ட ஒன்னுவிடாம தானே சொன்னேன்…. அப்பவே துண்டை காணோம்…. துணிய காணோம்னு நீ ஓடிருவேன்னு பாத்தா…,’
அப்போது, காட்சிகள் அன்றைய நாளில் நடந்த சம்பவத்தை நோக்கி விரிகிறது ….
அன்று கைப்பேசியில் எதிர் முனையில் புது மாப்பிள்ளையான மாணிக்கம்,
“அது கடக்குது விடு …. உன் குறைகளோடே அப்படியே உன்னை ஏத்துகிறேன் போதுமா …. அதுமட்டுமல்ல… நீ சொன்னதெல்லாம் ஒரு குறையே இல்ல …”
என்று அவன் அன்றைக்குச் சொன்னதை இன்றைக்கு நினைவு கூறி…!!!, அந்த பழைய நினைவுகளை மனசால் அசைபோட்டவள்…. இப்போ,
“அப்பவும் சரி…. இதே முதல்மரியாதை சிவாஜி போல தானே டா, லவ்… லவ்…!!! வார்த்தையா பேசி…. அன்னைக்கு வாக்குறுதிகள் பல கொடுத்த பக்கி நீ என்னய தேற்றினாயே டா…. அதான் நீ பல வருஷம் எனக்கு வயது மூத்தவன்ன்னாலும் கல்யாணம் செய்து கொள்ள பேசாம ஒத்துக்கிட்டு இருந்தேன்…. பாவி…. பாவி….ஆனா இப்போ குறை சொல்றதே வேலயா வச்சுட்டு இருக்க போயா யோவ்….”
”இப்போ என்ன செய்யணும் அதுக்கு…?”
என்று அவ பொறுமவும் … இவன் இப்படி எரிச்சலாகக் கேட்க…,
“ம்ம்ம்… மறுமணம்… ?”
” எதே…!, இவளுக்கு இதே வேலையா போச்சு…!”
என்று மாணிக்கம் தன்னை சுற்றியிருப்பவர்களிடம் ஜாடையாகப் பேசி இதை புலம்பினான்…. அப்போது, நேரம் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த ‘ஹிட்டலர் மங்கலம்!’ தன் அதிரடியைக் காட்டி,.
“போதும் நிறுத்திக்குவோம்….! லேட்டாச்சு…, இப்படியே எல்வோருமா பேசிக்கிட்டே உட்கார்ந்திருந்தா நவராத்ரி! முடிஞ்சிரும் போல… அடுத்து தீபாவளியே வந்திடும் போல…!, அதனால , ஒழுங்கா மரியாதையா நீங்களாகவே எல்லாருமா எந்திரிச்சு போய்…. அந்த மாடி படியில கொலு பொம்மைகளா நிக்குற வழிய பாருங்க…!”
என்று அவள் ஹிட்டலரை போலவே ஆர்டரை போடவும்…., சொந்தத்தில் ஒருத்தி அதிர்ச்சியோடு குறுக்கிட்டவள்,
”ஏம்மா, நாம இப்போ… நான்வெஜ்! சாப்பிட்டு இருக்கோமே…, அப்புறம் எதுக்கு கொலு பொம்மைகளா போய் நிண்ணுகிட்டு..? தப்புமா..!”
“சாமி பொம்மையை வைக்கத்தான் அவ்ளோ ஆச்சாரம்….! நீங்க போயும் போயும் மனுஷ பொம்மைகள் தானே…. போய் நில்லுங்க போங்க…!”
என்று மங்கலமும் சும்மாவிடாது கவுன்ட்டர்! கொடுக்கவும்…,
“இவள இப்போலாம் நம்மளால சாமிளிக்கவே முடியலப்பா சாமி…!!!”
என சொந்தக்கார கூட்டத்தினர் தங்களுக்குள்ளளாக குசுகுசுவென பேசி…. புலம்பி கிசுகிசுத்து தள்ள…., உடனேயும் , கணவனும் மாமியாருமாக சேர்த்துக்கொண்டு அவர்களுமே, அங்கே கிசு கிசுத்தப்படி சுற்றியிருந்த சொந்தங்களிடம், ‘உம்‘! போட்டு பேசி சிங்குச்சா…!!! என சால்ரா! அடிக்கத் தொடங்கினதைக் கவனித்துவிட்ட ஹிட்லர் மங்கல!ம்,
“அங்க என்ன குசு..குசு…?”
என்று அதட்டினவளிடம் ஒரு சொந்தக்காரன்,
“நீ ஒன்னு மறந்துட்ட மங்கலம்…”
“நானா எத…???”
“ம்ம்ம்…. சொராக்காவுக்கு உப்பு போட மறந்துட்ட போ போய் போடு மங்கலம்….!”
“என்ன பன்ச்! டயலாக் எல்லாம் பலமா இருக்கே…?,
இந்த மங்கலத்து மேல இருந்த பயம் எல்லாம் போயிடுச்சா என்ன….???”
” ஆமா …. ஏன்னா … நீ அடிச்சுப்ப… நாங்க சாப்பிடாம தெம்பு இல்லாம இருந்தோம்… இப்போ நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கோம்…. அததான் நீ மறந்துட்ட மங்கலம்…. அதனால, ஜாக்கிரத மங்…கலம்… இப்போ சண்டைக்கு வந்தன்னு வை…. நீதான் தோத்துப்போவ பாவத்த…., அப்புறம் அசிங்கமா போயிடும் பரவாயில்லயா!”
என்றதும் , கணவன் மாணிக்கமும், அம்மா பேச்சியம்மாளும் கூட சேர்ந்தே அந்த சொந்தக்காரக் கூட்டத்தோடு கூட்டாகக் குரல் கொடுக்க…மங்கலமும் சளைக்காமல் பதிலடி கொடுப்பவளோ,
“ஓகோ …. அப்படியா சங்கதி!…?, அப்ப நீங்களும் ஒன்னை மறந்துட்டீங்க… நானும் நல்லா சாப்பிட்டு தெம்பாத்தானே இருக்கேன்….! வாங்க, ஒரு கை பார்க்கலாம்….!”
என்றுவிட்டு, ஜாக்கிசானின் தங்கச்சி போல மங்கலம் கையை மடித்து சவால் விடவும்….தடுத்தது ஒரு குரல்…!!!,
”மம்மி………!!!!, இந்த அவதாரம் போதும்…, வேற …வேற… அவதாரம் எடு மம்மி ப்ளிஸ்…!”
என்றுவிட்டு, சாருலதா சிரிக்க…,
“அப்படியா தங்கம் சரிம்மா… அப்போ உனக்கா அம்மா புது அவதாரம் எடுத்துட்டா போச்சு…!”
என்றவள் அடுத்த நோடியே குரலை உயர்த்தி ,
“அடேய் வேலன்…, அத தூக்கிப் போடுடா மகனே!”
என்றதும், மகன் வீசியெறிந்ததைச் அவ காற்றிலே மின்னலாய் பறந்து சட்டுனு கையிலே அதைப் பிடிக்கவும்….. மங்கலம் கையில் சுற்றிய சுத்து இருக்கே…. அந்த சிலம்பு! மின்னலாய் மாறி அவ கையிலே பல வித்தைகள் காட்ட. காத்திருக்க …. அதற்கு முன்னதாக, அதை ஒருக் கையில் வாளைப் போல எந்தியிருந்தவள்… அப்படியே, மறு கையில் பூமியைத் தொட்டு வணங்கவும்…, சிலிர்ப்பாய் ஒரு சிலம்பாட்டம்! ஆடினவளை பார்த்த மாணிக்கமோ,
“இதோடா…. சிலம்பரசன்னு! நினைப்போ…?”
என்று கிண்டலடிக்க…, மங்கலம் நில்லாமல் அடுத்த கட்டத்திற்குத் தாவினவள்,
“இல்ல இல்லவே இல்ல… சாருமா, உனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கே அத போடும்மா…!”
என்றதுமே, சாருலதாவும் ஒருப் பாடலை ஒலிக்க விட…
” போற்றிப் பாடடி பொண்ணே… !!!, தேவர் காலடி மண்ணே…தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்… முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்…”
“இல்ல இல்லவே இல்ல… தேவர் மகள்தான் டா டோய்…!’
என்று மங்கலம் சீறிப் பாய்ந்து பாடினவளிடம், மாமனார் பாண்டியன் ஆச்சரியப்பட்டு,
“ஓகோ… கமலஹாசனா?”
என்று கேட்க, மங்கலம் கொஞ்சமும் தாமதிக்காமல் ,
“ஆமா இருக்கலாம்…”
என்றுவிட்டு, அப்படியே, இந்த பாட்டு இல்ல வேற… என சாருவிடம் உத்தரவிடுகிறவளுக்கு இணங்கி… மகளும் உடனே, அடுத்த பாட்டைப் போட்டுவிடுகிறாள்…
’சாந்து பொட்டு …!!!, ஒரு சந்தன பொட்டு….!!!, எடுத்து …. வச்சுக்க வச்சுக்க மாமே…. நீ பூ முடிச்சு…ஒரு சேலையை கட்டு… இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா மாமே… கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்…!ஜல்லிக்கட்டு! காளையை போல் துள்ளி குதிப்பேன்…ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹொய்!…உங்க பாட்டனுக்கும் கத்துக்கொடுப்பேன்…!’
என்கிற பாட்டுக்கு ஏற்றபடியே, மாணிக்கத்தை எழுப்பிவிட்டு, நிற்கவைத்து மங்கலம் ஆவேசமாய் ஒரு குத்தாட்டம்! போடவும்…., கூட்டத்தில் நின்ற வள்ளி! திகைத்துப் போய் நின்றிருந்தவளிடம,
“அடியே வள்ளி…, உம் மவ… அரசாங்க பள்ளியில படிச்சதா சொன்னியே ஒழிய…, அவளுக்கு அங்க சிலம்பமும் நடனமும் கத்துக்கொடுத்தாங்கன்னு நீ சொல்லவே இல்லையேடி….!”
என்று பேச்சியம்மாள் விசாரிக்கவும்…வள்ளி அப்பாவியாகக் கையை விரித்தவள்,
“எங்கம்மா…. எனக்கும் தெரியாதே…! அவ பள்ளிக்கூட பக்கம்லாம் மழைக்கு கூட நான் ஒதுங்குனதே இல்லம்மா…! என் பெரிய பொண்ணு இருக்காளே மெட்ரிக்ல பெரிய ஸ்கூல்ல படிச்சாளே… அவளதான்மா ஸ்கூல் பஸ்ல ஏத்துறதும், இறக்குறதும், டியூஷனுக்கு அனுப்புறதுன்னு அவள கவனிக்கிற வேலைய தானே பாத்தேன்…!”
” அடிப்பாவி…. அப்போ… மங்கலத்த நீயே வளர்க்கல…, பாவம் அவளாவே வளர்ந்திருக்கான்னு சொல்லு…!”
என்றுவிட்டு , பேச்சி தலையில அடித்துக்கொள்ளவும்….அப்போது குறுக்கிட்ட பேரன் வேலன்,
“பாட்டீஸ்…. அம்மா, இதையெல்லாம் இப்போதான் கத்துக்கிட்டாங்க…!”
என்று சொல்ல, மாமியாரும் அம்மாவும் வாயைப் பிளந்து நிற்க… அங்கேமங்கலத்தின் கம்பீரக் குரல் மீண்டும் ஓங்கி! ஒலித்தது….
“சாரு பாப்பா, இந்த பாட்டும் இல்லடா… வேற….வேற….!”
”ஓகோ… அந்தப் பாட்டா மம்மி…? ஓகே இதோ போடுறேன்!”
என்று சொல்லியபடியே சாரு அடுத்த பாடலை ஒலிக்கவிட,
“தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா…”
என்று அந்த வீடே அதிரத் தொடங்கி, பேபி ஷாமிலி! தேவர் வீட்டு பொண்ணு படத்தில் லாவகமாகச் எப்படி சிறுமி! சீறிப்பாய்ந்து சண்டை போடுவாளோ, அப்படியே அதேபோலவும்….. மங்கலம் சிலம்பைத் தூக்கி மிரட்டலாகச் சுழற்றினவளை பார்த்த மாணிக்கம்,
“அதுசரி…, எனக்கும் ஒரு கம்பு கூடேன்….!”
என்று சொல்லித் தானும் ஒரு கம்பைப் பிடித்துக் கொண்டு..,
‘இவளுக்கு எங்க இதெல்லாம் தெரியப் போகுது…? , இவ வீட்டுக்குள்ளாக இருக்குற கழுதைதானே…”
எனவும்… அவளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே, சண்டைக்கு நின்றான்…. ஆனால், மங்கலமோ எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை…. லிட்டில் சூப்பர் ஸ்டராக நைட்டிஸில் கலக்கிய சிறுமி பேபி ஷாமிலியை போலவே மங்கலமும் காற்றில் பறந்து பறந்து மிரட்டலாகச் சிலம்பத்தை சுற்றி காட்டினவள் அவனுடன் அசராது சண்டையிடவும்…! ,அசந்துபோன சொந்தக்காரக் கூட்டங்களோ தங்களது வாயை அடைக்க மறந்து அப்படியே திகைத்துப்போய் விழி பிதுங்கி நின்றதுகள்…. மாணிக்கம் சிலம்பால் அவளிடம் அடி வாங்க …வாங்க… ‘அடித்தால் அம்மியும் நகரும்…‘ என்பார்களே, அது போலவே அங்கிருந்த அத்தனை பேரும் நகர்ந்து… அந்த மாடிபடிக்கு அவர்களாகவே சென்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட கொலு பொம்மைகளாக நின்றதுகள்…!
💒மறுமணாகும்…
🔥அடுத்தாக என்ன…?,
🔥 தீபாவளி! அதிரடி சரவெடியாக அந்த வீட்டுக்கு புது நபர் ஒருவர் வரப்போகிறார் …?
🔥அவர் யார் …? பார்ப்போம் பட்டூஸ்….