அத்தியாயம்-8-
மங்கலம் புடவையைக் கழட்டிவிட்டு, ஜாலியாக ஒரு நைட்டி அணிந்துக் கொண்டு செம மாஸாக போஸ் கொடுத்து நின்றுகொண்டிருக்கவும்…!
காட்சிகள் பின்னோக்கி நகர்ந்து….. மாமியாரை மருமகள் கண்களால் தாக்கியதிலிருந்து காட்சிகள் விரிகிறது…. ”
“மாமியாரும் மருமகளுமா சேர்ந்துக்கிட்டு ஏதோ மறுமணம் கதை அது இதுன்னு பேசிக்கிறாளுக என்னவா இருக்கும்… ?, மங்கலத்திற்கு ஏது இந்த காசு…???!!!”
என்று அந்தப் பஞ்சாயத்துக் கூட்டத்தினர் அவர்களுக்குள்ளாக கூச்சலும் குழப்பமுமாக பேசிக் கொள்ளவும்…. அந்தப் புரணிப் பேச்சுகள் எதுவும் மங்கலத்திற்குச் சற்றும் பிடிக்கவில்லை…. அணிந்திருந்த புடவையும் அவளுக்கு அசுவுகரியமாக இருந்தது…..,
ஆகையால், உடனேயும் அமைதியாகப் படுக்கையறைக்கு பக்கமாக செல்ல…. மாமியாரும் கணவரும் தடுக்க…. அவர்களை புறம்பே தள்ளிவிட்டு முன்னேறிச் சென்று, உடையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினவள், வெளியே குடும்பமாக கதவை உடைக்கப் போராடுகிறது என்ற சின்னக் கவலை கூட இல்லாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று நிதானமாக மங்கலம் உடை மாற்றிக்கொண்டிருக்கவும்…!,
அவள் கதவைத் திறந்த விநாடிதான் ஹைலைட்டே…! கதவை உடைக்கப் பாய்ந்த மாமனாரும் கணவனும் தடுமாறி அப்படியே தரைமட்டமாகிப் பொத்தென்று விழுந்தனர்….. அப்போது, அந்த சமயம் உள்ளே நின்றிருந்த மங்கலத்தைப் பார்க்கவும்…. பேச்சியம்மாளுக்குக் கண்களில் விளக்கு எரியவில்லை, இருண்டது…! அப்படியே, அங்கு நின்றுகொண்டிருந்த மொத்தக் கூட்டமும் கூட மங்கலத்தின் இந்தத் தோற்றத்தைப் பார்க்கவும்…..!!!, வாயைப் பிளந்து, ஸ்தம்பித்துப் போனது…..
காரணம், அவள் அணிந்திருந்தது என்னவோ அவளுக்கு சௌகரியமான நைட்டிதான்….! ஆனால், அந்த நைட்டியுடன் சேர்த்து அவளது கழுத்தில் மின்னிய அதே நகைகளும், முகத்தில் ஜொலிக்கும் மேக்கப்பும், கண்ணில் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸும், தலை முடியை வாறிக் கொண்டை போட்டு மாட்டப்பட்ட கிளிபபும் என எல்லாமே கச்சிதமாக இருக்க…… அதைப் பார்த்த பேச்சியம்மாள், தன்னையும் மீறி உதட்டைச் சுழித்துச் சிலுப்பிக் கொண்டவள்,
“இவளுக்கு மேக்கப்புக்கும் நகைக்கும் எந்த குறைச்சலும் இல்ல பாரு…!”
உடனே மங்கலமும் பதிலுக்குச் சிலுப்பிக் கொண்டு,
“என்ன மாமியாரே முறைக்கிறீங்க…?, நகை, மேக்கப் போடலைன்னா ‘இவ நம்ம ஸ்டேஸ்க்கு தகுதி இல்லாதவ… உனக்கு பொருத்தமில்லாதவ’ன்னு உங்க மகனை தூண்டிவிட்டு பேசுவீங்களே…! , இப்போ என்னடான்னா இதையெல்லாம் போட்டுகிட்டு நைட்டி போட்டா அது குத்தமா…?”
“என்னடி கேள்வி…. குத்தம் தான்…!, நைட்டிய எதுக்குடி போட்டுக்கிட்டு நிக்கிற…? , பொது இடத்துல நைட்டி போடக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா…?”
“மாமியாரே … இது என் வீடு…!, என் வீட்டுக்குள்ள நான் நைட்டி போட்டா உங்களுக்கென்ன…?”
“என்னது… இது உன் வீடா…?, திமிர பாரு…! ,இது என் மவன் வீடுடி..!”
“மாமியாரே …. சரி சரி… உங்க மகன் வீடுதான் வச்சுக்கோங்க…! ,யார் வேண்டாம்னு சொன்னா…?, நீங்க சாகும் போது அந்த வீட்டையும் சேர்த்து உங்க தல மேலயே கட்டிக்கிட்டு தூக்கிட்டு போயிடுங்க…, போதுமா…?”
“என்னது… என்னய சாக சொல்றியாடி…?”
என்று கொஞ்சமும் அசராமல் பேசிய மருமகளிடம் மாமியாரும் கோபமாக இப்படி பேச்சிலே பாயவும் … மங்கலமோ அலட்சியமாகத் தோளை உயர்த்தினாள்…. உடனே குறுக்கிட்ட மாணிக்கம் தன் பங்கிற்குச் சண்டைக்கு வந்து,
“ஏய்… அடங்குடி…! அம்மா சொன்ன மாதிரி ஏன் நீ இந்த நேரத்துல நைட்டி போட்டுக்கிட்டு நிக்கிற…?”
அப்படியே , கோரஸாக பஞ்சாயத்துக்கு வந்த சொந்தங்களுமே அதே கேள்வியைக் கேட்கவும்…, மங்கலம் கைவிரித்துச் சிரித்தவள்,
“இதோ பாருங்க… உங்க எல்லாருக்கும் தனித்தனியா என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது…!, என் உடை, என் உரிமை! பிக்பாஸ் வீடா இருந்தாலும் சரி, எங்க வீடா இருந்தாலும் சரி… எல்லாம் அவுங்க அவுங்க இஷ்டம்தான் போதுமா…?”
பேச்சியம்மாளுக்குத் தூக்கி வாரிப்போட…. அப்படியே, அவளது இந்த அதிரடிப் பேச்சால் எல்லாரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்…. அப்போது, பசியோடு இருந்த மாமனார் பாண்டியன், அடிபட்ட வலியையும் மீறிச் சமாளித்துக்கொண்டு ,
“சரி சரி… மருமகளே ரொம்ப பேசாதேம்மா..! எங்களுக்கெல்லாம் பசிக்குது…அப்படியே சமையகட்டுக்கு போய் சமைக்க பாரு மருமகளே…!”
“நோ …நெவர் மிஸ்டர் டீலக்ஸ் பாண்டியன்….! நான் இன்னைக்கு சமைக்கவே மாட்டேன்..! உங்க மகனயே போய் சமைக்க சொல்லுங்க…!”
என்றுவிட்டு, மங்கலம் நக்கலாகச் சிரித்தாள். உடனே, மாணிக்கம் அதிர்ந்து போய்,
“எதே…?! நான் சமைக்கணுமா…?”
“ஆமா! நீங்க சமைக்கணும்…! மிக்சர் சாப்பிடும் மாமனாரே நீங்க துணி துவைக்கணும்…! மாமியாரே நீங்க பாத்திரம் கழுவணும் சரியா….!”
என்று மங்கலம் ஒவ்வொருத்தரையாக பார்த்து அதிகாரத் தோரணையிலே, ஆர்டர் போடவும்…., அங்கிருக்கும் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவளது அம்மா வள்ளி! பெருமிதத்தோடு மைண்ட் வாய்ஸில்,
‘ஐய்யா..!, நம்ம பொண்ணு நம்மள ஒன்னும் சொல்லல… !’
என்று நினைத்தவளையும் மோப்பம் பிடித்தவிட்ட மங்கலம்,
“அம்மா… என் செல்லம்ல நீங்க…! , சும்மா நிக்காதீங்க…, சீக்கிரமா வந்து வீட்டை கூட்டுங்க முதல…! ”
என்று அம்மாவை ஆதரிப்பது போல நைசாக பேசி, அப்படியே கட்டளையான பேச்சிலே அவர்களையும் வேலைக்கு இழுத்தாள்…. உடனே, பஞ்சாயத்துக்கு வந்த சொந்தகாரக் கூட்டமும் பயந்துபோய்,
“நாங்களாம் வேலை பாக்க மாட்டோம்…!”
என்று அவள் தங்களை வேலை வாங்குவதற்கு முன்பாகவே கோரஸாக சொல்லிவிட்டு பின்வாங்க முயலவும்….மங்கலம் தன் மூத்த மகன் வேலனைப் பார்த்து கூலாகக் குரல் கொடுத்தவள்,
“அடேய் வேலன்… அந்த போன கொஞ்சம் எடுத்துட்டு வாடா..!”
உடனே, வேலன் கைப்பேசியை எடுத்து வந்து நீட்ட, அதை வாங்கியவள் , நேராகப் போலீஸ் நம்பருக்கே அழுத்துவது போலப் பாவனைச் செய்யவும்…..அவ்வளவுதான்….! அவுங்க அவுங்களுக்கு அவ கட்டளையாக பிறப்பிக்கிற வேலை என்னவோ …?, அதை அவர்களாகவே அவளிடம் பனிவாக கேட்டுவாங்கிவிட்டு, அத்தனை பேருமே அலறி அடித்து ஓடியப்படி, அந்த வேலைகளைச் செய்யத் துவங்கினர்…..
அதே அதிகாரத் தோரணையில் மாமியார் , மாமனார் , மாணிக்கதைதையும் அவள் வேலைச் செய்யச் சொலி விரட்டவும் ….!!!,
“அய்யய்யோ… நாங்க வேலையெல்லாம் பாக்குறோம் தாயே….!”
என்று மாமியார் பாத்திரம் துலக்க ஓட…, மாமனார் துணியைத் தூக்கிக் கொண்டு ஓட…, மாணிக்கம் கரண்டியை எடுத்துச் சமைக்கவே தொடங்கிவிட்டான்….சொந்தக்காரக்கூட்டமோ வள்ளியுடனே குப்பையைக் கூட்டவும் வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டும் திரிந்தனர் …. அவர்களது அவலத்தைக் பார்க்கவும் மங்கலம், பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டே ,
‘அப்பாடா… அப்படிவாங்க வழிக்கு ஆடூற மாட்ட ஆடி கறக்கனும்…பாடுற மாட்ட பாடியே கறக்கனும்… போலிஸ் இருக்க பயமேன்….!’
என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டவள், சிறிது நேரத்திற்குப் பிறகு , மாமியார் சோப்பையும் தேங்காய் நாாரையும் போட்டு பாத்திரங்களை விளக்கித் தள்ளிக் கொண்டிருக்கவும்… அங்கே என்ட்ரி கொடுக்கிறாள் மங்கலம்… அப்படியே அவ முகத்தில் விவரிக்க முடியாத ஒரு வில்லி!ப் புன்னகையோடு,
” மாமியாரே… ஒரு சந்தேகம்…!, இன்னைக்கு காலையில எந்திரிச்சு பல்ல சுத்தமா தேச்சு விலக்கினீங்களா…?”
என்று நக்கலாகக் கேட்கவும்… கையில் இருந்த எமக்கல் சட்டியைக் கீழே வைக்காமலே, முறைத்துக் கொண்டே,
” என்னது…?, காலையில பல்ல விலக்கினேனா கேக்குற…?, ஆமா… ஏன் கேக்குற…???”
“இல்ல மாமியாரே… இதையே ஒழுங்கா தேச்சு விலக்க மாட்டீங்கிறீங்களே, அப்புறம் பல்லை எங்க போய் நல்லா தேய்ச்சிருக்க போறீங்க…? அதான் ஒரு கன்ஃபர்மேஷனுக்காகக் கேட்டேன்…!”
என்றதும், மாமியார் மனதுக்குள்ளாக புகைச்சல் வர… பற்களை நர நரவென கடித்தப்படியே,
‘கொழுப்புடி உனக்கு…’
என முணு முணுத்துக் கொண்டே, பாத்திரத்தை இன்னும் நல்லா தேய்த்து துலக்குகிறவளை கண்டு, …. மங்கலம் சற்றும் அசராமலே,
” அப்ப சரி… தேய்க்கிற வேகத்த வச்சு பாத்தா, பாத்திரத்தோட சேர்த்து உங்க பல்லையும் கழட்டி தேய்ச்சிருவீங்க போலியே…. சரி …சரி …., வேலைய ஒழுங்க பாருங்க…!
என்றுவிட்டு துணி துவைக்கும் கல் பகுதிக்கு மங்கலம் செல்லவும்…. அங்கே மாமனாரோ சோப்பை ஏதோ பெயரளவுக்கு சுமராகத் தேய்த்து, துணிகளை துவைத்துக் கொண்டிருக்க…, கைகளை இறுக கட்டியபடியே, அவருக்கருகே வந்து நின்ற மருமகள்,
“மிஸ்டர் டீலக்ஸ் பாண்டியன்… உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா….? ”
அப்போது மாமனார், அங்கே அவள் வந்திருப்பதையே அறியாது, ஈரக் கையோடு, லேசாகத் திடுக்கிட்டவர்…,
“தாராளமா கேட்கலாமே.. கேளு..?”
“நீங்க உங்க மனைவியையோ இல்ல பிள்ளைகளையோ எப்போதாவது அடிச்சிருக்கீங்களா…?”
மாமனார் யோசித்துக்கொண்டே,
“ மனைவியையா…? அச்சச்சோ…., அம்மாடி அவள தொட்டுக்கூட பார்த்ததில்லமா…! ஆனா பிள்ளைகள எப்பவாவது ரெண்டு தட்டு தட்டியிருக்கேன்….. அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு கிடையாது…!”
” அப்படிங்களா மாமனாரே… அதான் துணிய நல்லா அடிச்சு கூடத் துவைக்க மாட்டேங்குறீங்க…!, துணிய நல்லா அடிச்சு துவைச்சாதானே அழுக்கெல்லாம் போகும்…?, அதே மாதுரிதான்… சிலரோட மனசுல இருக்கிற அழுக்கும் போகாது… அடி உதவுறாப்புல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்…!”
என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே மருமகள் சொல்லவும்…. ஒரு நிமிஷம் அவ சொன்னதையெல்வாம் நினைவுபடுத்திப் பார்த்து யோசித்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டவர்,
‘அட ஆமாம்ல….! இவ சொல்றதும் சரிதான்… அப்புடி அன்னைக்கே இவங்கள எல்லாரயும் நல்லா அடிச்சு துவைச்சிருந்தேனா….?, இன்னைக்கு இந்த நிலைமை எனக்கு வந்திருக்காதுல….!’
என்று அவர் நினைக்கவும் … ஹஸ்கி! வாய்ஸில் ,
“மறுமணம்…! “
என்கிற சொல் முணு முணுக்கிற சத்தம் காற்றுவாக்கில் திசை எங்கிலும் பரவி….!!!, அவர் காதிலும் கேட்கிறது…. அதே சத்தம் தான் அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோர் காதிலுமே கேட்கவும்….
💒மறுமணாகும்…
♥️மறுமணம் என்கிற ஒற்றைச் சொல், கூடிய சீக்கிரத்தில் உங்கள் எல்லோர் காதிலும் கேட்கும் பட்டூஸ் ……
3 comments
நைட்டி பிரச்சனை செம காமெடி என் ஆடை என் உரிமை 🔥 அதைவிட எல்லாரையும் வேலை வாங்குறது போலிஸ்க்கு நல்லா பயப்படுது குடும்பம் 😄😄 மருமகள் வேலை வாங்கிய காலம் மாறி இப்போ அவ தான் இவங்கள ஆட்டி படைக்குற பரவாயில்ல அம்மா குடும்பத்தையும் விடல 😄😄🔥🔥🔥 இன்னும் சூடு ஏத்துங்க பதறட்டும் மறுமணம் என்பதை வைத்து எதோ சொல்ல போறீங்க புரியுது சஸ்பென்ஸ் தாங்கல பார்ப்போம்
மொதராத்திரி படம் மாதிரி மொத்த கதையும் ஒரே நாள்ள முடிச்சிருவிங்க போல..
அதுவும் அந்த ஒத்த வார்த்தைல..
“மறுமணம் “
Super