Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 7

CHAPTER 7

மழைச்சாரல் – 7

By Prabha Amuthan · October 14, 2026

0

பாதி ஜாமம் முழுவதும்  சிந்துவின்   நினைவில்  உருகி விட்டு, பின் ஜாமத்தில் தூங்க   காலையில்  லேட்டாக விழித்தான் வருண்.

கண் விழித்த போது மணி காலை எட்டறையை தாண்டி இருந்தது

அவசர அவசரமாக எழுந்து, குளித்துவிட்டு, ஒயிட் கலர் ஷர்ட், பிளாக் கலர் பேண்ட், அணிந்து பிளாக் கலர் ஷூ  அணிய  ஃபார்மல் உடையில்  கூடுதல் அழகனாய் தெரிந்தான்

தன் தலை கேசத்தை ஜெல்லால் நீவி, பர்பியும் போட்டுக் கொண்டு, தன் அழகுக்கு இன்னும் அழகை  சேர்த்து கொண்டிருந்தான்,

இன்று   சிந்துவிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு, வெகு சிரத்தையாக  அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான்

அவனுடைய பைக்கை ஸ்டார்ட் செய்ய, ராகவ் வந்து,

“மச்சி சாப்டுட்டு போ” என கூற, “வேண்டாம் மச்சான்! நான் வெளியில் போய் சாப்பிட்டுகிறேன்”  என அவசரமாக கூறிக்கொண்டு விடைபெற்றான்

“ஏண்டா அவசரமா போற,

சாப்பிட்டு போக வேண்டி தானே! இன்னைக்கு புது ரெசிபி ஒன்னு யூடியூப் பார்த்து சமைச்சு வச்சிருக்கேன்.சாப்பிட்டு போ “ என ராகவ் சொல்ல,

“இப்பவே  லேட் ஆயிட்டு, கோயிலுக்கு வேற போயிட்டு ஆபீஸ் போகணும்.அதான் வேகமா போறேன்!”

“கோயிலுக்கு போறியா? இன்னைக்கு எந்த விசேஷ நாளும் இல்லையேடா!” என்று ராகவ் சொல்லிவிட்டு யோசிக்கப் புன்னகைத்தான்  வருண்.

“இன்னைக்கு என் வாழ்க்கையில முக்கியமான நாள் தான். இன்னைக்கு  சிந்துகிட்ட என் லவ்வ சொல்லலாம்னு இருக்கேன், அதனால சாமிகிட்ட போயி வேண்டிட்டு  போனோம்னா   நல்லது நடக்கும் என்று என் மனசுக்கு தோணுச்சு, அதனால தான் போறேன்!”

“டேய் ரொம்ப ஓவரா போற,

முடியலடா என்னால, அது எப்படி டா ஆபீஸ் வந்து சேர்ந்த ரெண்டு நாள்லயே லவ்வ சொல்லுவ!” என்று கூறினான் ராகவ்.

“அவ ஆபீஸ் வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு.ஆனால் என் கனவுல வந்து ஆறு மாசம் ஆச்சுனு  நீ  தானடா  சொன்ன.நேத்து நைட்டு  உன் மனசுல உள்ளத  சொல்லிருன்னு சொன்ன,  இன்னைக்கு காலைல இப்படி பேசுற?” என்று வருண் கேட்கச்  சிரித்தான் ராகவ்.

“ஏண்டா எரும சிரிக்கிற?”

“நேத்து நான் பேசினதெல்லாம் நீ வாங்கி கொடுத்த பிரியாணிக்காகத்தான் மச்சான் அதெல்லாம் உண்மைன்னு நம்பிட்டியா? “ என கேட்டான் ராகவ்.

“மச்சான் விளையாடாத!

என்  காதல சொல்லலாம்னு போய்கிட்டு இருக்கேன்

நீ என்னடானா ஒரு ஆல் த பெஸ்ட் கூட சொல்லாம  கலாய்ச்சிகிட்டு இருக்க?” என வருண் கேட்டான்.

“அப்புறம் என்னடா,

காலையிலேயே கஷ்டப்பட்டு சமைச்சா , சாப்பிடாமல் போறேன்னு சொல்ற

முன்னாடியே சொல்லிருந்தா நான் சமைச்சு இருக்க மாட்டேன்ல்ல” என   ராகவும் கூறினான்

“சாரி மச்சான்,  சமைச்சத நீ சாப்பிட்டுட்டு பிரிட்ஜ்ல எடுத்து வை, நைட்டுக்கு நான் அதையே வந்து சாப்பிடுறேன்!” என கூறிக்கொண்டு விடைபெற்றான் வருண்.

வருண் செல்லும்போது “மச்சான் ஒரு நிமிஷம், அந்த அம்மாவை பாத்துட்டு வருவோம்னு சொன்னியே போய் பாத்துட்டு வந்துருவோமா? “ என்று ராகவ் கேட்க,

“இப்ப முடியாது மச்சான் சாயந்தரம் கண்டிப்பா பார்க்கலாம்! இப்ப நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

போகும் வழியில்,  முருகன் கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு

கோயிலுக்குள்ள செல்ல,கோயிலில் இருந்த ஐயர்,” வா வருண்

எப்படி இருக்க?எப்பவும் வார வாரம் வெள்ளிக்கிழமை தானே வருவ?

இன்னைக்கு என்ன புதன்கிழமை வந்திருக்க  ஏதாவது விசேஷமா?” என கேட்க,

“என் வாழ்க்கையில ஒரு முக்கியமான விஷயம் இன்னைக்கு பண்ணலாம்னு இருக்கேன்,அது நல்லபடியா நடக்கணும்னு, சாமிகிட்ட வேண்டுறதுக்காக வந்தேன்!”

“அதெல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று சொல்லிவிட்டு வருண் கொடுத்த பிரசாத பையை வாங்கிக் கொண்டு சாமிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார் ஐயர்.

சிறிது நேரம் கையை கும்பிட்டு, கடவுளை வணங்க  ஐயர் தன் கையில் இருந்த விபூதியை வைத்து,

“நீ நெனச்ச காரியம் நல்லபடியா நடக்கும்” என விபூதியை வருணின் நெற்றியில் வைத்தார்.

அவர் சொன்ன வார்த்தையில்  மனம் குளிர்ந்த   வருண் தன் பர்சிலிருந்து ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்து  ஐயர் தட்டில் போட

ஐயரின் மனமும் குளிர்ந்து

“வருண் நினைச்சது நடக்கணும்” என ஐயரும் தன் மனதால், சாமியிடம் வேண்டினார்

கோயிலில் இருந்து வெளியில் வர, பக்கத்தில் இருந்த   பூக்கடையில், ரோஜா பூக்கள் இருப்பதை பார்த்த வருணுக்கு  நேத்து இரவு பார்த்தப் படங்கள்  எல்லாம்  நியாபகம்  வர  பூக்களை வாங்கினான்,

‘எப்படி லவ்வ சொல்லனும்  என்று நிறைய படம் பார்த்துக் கொண்டிருந்தான்  நேற்று இரவில்,

பல படங்களில், காதலன் தன் காதலை சொல்லும்போது  காதலிக்கு ரோஜா பூக்களை கொடுக்க

காதலியும் அதனை வாங்கிக் கொண்டு, காதலை ஏற்றுக் கொண்டதாய்,  தெரிவிக்க   நம் நாயகனும் அதையே செய்யலாம் என முடிவு கொண்டவனாய் வாங்கி விட்டான்,

மீண்டும் ஒருமுறை காதலை எப்படி சொல்ல வேண்டும் என தன் மனதில் ஒத்திகை பார்த்துவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்து அலுவலகத்திற்கு விரைந்தான்,

வண்டியை பார்க்கிங்கில், பார்க் செய்துவிட்டு, அலுவலகத்தில் உள்ளே நுழைந்தான்,

அலுவலகத்திற்குள் நுழைந்த உடனே  சிந்துவின் இருக்கையை நோக்கி, வருணின் கண்கள் தானாக பார்த்தது

வெள்ளை நிற சுடிதாரில், சிவப்பு ரோஜா பூக்கள் போட்ட எம்ராய்டரிங் இருக்க , இமையே அசைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

அவனும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருக்க, அவளும் வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்து இருக்க,  அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு நெடுங்கால பந்தம் இருப்பதாக உணர்ந்து கொண்டிருந்தான் வருண்.

“என்னடா மச்சான் உள்ள வரலையா?” என குணா கேட்க  அப்போதுதான் நிலாவை அவன் பார்த்துக் கொண்டிருந்தது  அவனுக்கு உரைக்க  தன் பின்னந்தலையை அவன் கைகளால் தட்டி  உள்ளே சென்றான்,

அவன் உள்ளே சென்று  அவனுடைய இருக்கையில் அமர,  குணா, ஷாலினி, மணி, திவ்யா, நிலா என ஐவரும் அவனுக்கு  “குட் மார்னிங்” என கூறினர்

அவனும் அவர்களுக்கு குட் மார்னிங் என உரைத்துக்கொண்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்

உணவு வேளையில், தன் காதலை உரைத்து விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டே தன் கோப்புகளில் கவனத்தை செலுத்தினான்.

வருண்   சிந்துவின் அருகே சென்று, ஒற்றை நிற ரோஜா பூவை நீட்டி ஐ லவ் யூ என உரைக்க,

முதலில் பெண்ணவள் அதிர்ந்தாலும்  பின்னால் வருணின் கையில் இருந்த அந்த ரோஜா பூவை வாங்கிக் கொண்டு,

“நானும் உங்களை காதலிக்கிறேன்” என கூறிக்கொண்டு   வருணின் நெற்றியில் ஒரு முத்தத்தை பரிசாக அளித்தாள்.

பதிலுக்கு அவனும் அவள் நெற்றியில் இதழ் பதிக்க  வர, அவளும் அதை ஏற்பதற்காக கண்களை மூடினாள்.

வருண் அவள் நெற்றியில் முத்தத்தை பரிசாக கொடுக்க “அடச்சீ, என்ன வேலை டா பண்ணிட்டு இருக்க,எருமை மாடு!”, என மணி கூற,அப்போதுதான் அது கனவு என்று வருணின்  மூளை உணர்ந்து கொண்டது.

“சாரிடா மச்சான், என்னோட ஆளுனு

 நினைச்சிட்டேன் “ என்று இளிக்க,

“இதுக்குத்தான்  லவ் பண்றவங்க கிட்ட  கவனமா  இருக்கணும்னு சொல்லி இருப்பாங்க  போல, உன் கூட இருந்தால் என் கற்புக்கு கேரண்டி இல்லாம போயிடும் போல, என்னை ஆள விடு “ என சிரித்துக்கொண்டு அவ்விடத்தை விட்ட நகந்தான்.

“மச்சான் நில்லு நான் ஒன்னும் பண்ண மாட்டேன் “ என்று   வருண் சொல்ல, “ டேய் உன் சகவாசமே எனக்கு தேவை இல்லை என்னை ஆள விடு!” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான் மணி.

சிந்துவிடம் எப்படி காதலை சொல்றது என்று யோசித்துக் கொண்டே சில வினாடிகள் தடுமாறினான். பின்பு ஒரு முடிவு எடுத்தவனாக  தன் காதலை சொல்ல துணிந்து  சிந்துவின் இருக்கையை நோக்கி சென்றான்.

‘கனவுல நடந்த மாதிரியே, சிந்து என் காதல ஏத்துக்கிட்டு, என்னைய கிஸ் பண்ணுனா எப்படி இருக்கும்’ என்று நினைக்க அவன் உடலும் உள்ளமும் ஒரு முறை சிலிர்த்தது.

சிந்துவை நெருங்க நெருங்க வருணின் இதயம் அதிவேகமாக துடித்தது. எச்சில் விழுங்கி கொண்டு, சிந்துவை நோக்கி  நகர மறுத்த கால்களையும், வலுக்கட்டாயமாக நகர்த்தி   அவள் அருகே சென்றான்.

அவன் தன் அருகே வருவதை பார்த்த சிந்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்க்க  பிறந்த பயனை அடைந்து விட்டதைப் போல் உணர்ந்தான்.

வருண் அதற்கு மேல்  முன்னேறி போகாமல் நிற்க, சிந்து  வருணை   நோக்கி முன்னேறி வந்து, தன் கையில் இருந்த  ரோஜா பூக்கள் நிறைந்த பொக்கே ஒன்றை வருணின் கைகளில் கொடுக்க,   அதிர்ச்சியாய்  சிந்துவை பார்த்துக் கொண்டிருக்க  அவன் தலை மேல்  நிறைய பூக்கள் வந்து விழுந்தது

என்ன நடக்கிறது என்று புரியாமல்  அதிர்ச்சியில் சிந்து கொடுத்த பொக்கையை   வருணின் கைகள் தானாக வாங்கிக் கொண்டது.

கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் கமெண்ட்களில் பதிவிட்டுச் செல்லுங்கள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!