Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 6

CHAPTER 6

மழைச்சாரல் – 6

By Prabha Amuthan · October 13, 2026

0

“நம்ம வீட்டுக் கதவை இந்நேரம் யாரு தட்டுறா? “ என்று வருண் தன் சந்தேகத்தை கேட்க “விஷ்வத்தோட அம்மா தான் விஸ்வத்த கூப்பிடுறதுக்கு வந்திருப்பாங்க” என்று கூறினான் ராகவ்.

ராகவ் சொல்லியபடி சிந்து தான் வருணின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

வருண் கதவை திறக்க செல்ல அவனின் அலைபேசி அடித்தது! “யாரு போன் பண்றாங்கன்னு தெரியலையே?” என்று வருண்  சொல்லிக்கொண்டு கதவை திறக்க செல்ல,

“மச்சான் போன் பண்றது யாருன்னு நீ பாரு நான் போயி கதவை திறக்கிறேன்” என்று சொல்லிவிட்டு  ராகவ்  கதவை திறக்கச் சென்றான்.

வீட்டு வாசலில் சிந்து நிற்க, “ உள்ள வாம்மா!”என்று கூறினான் ராகவ்.

“ரொம்ப லேட்டா ஆயிடுச்சு விஷ்வத்த கூப்பிட்டு போகலாம்னு வந்தேன்! இன்னும் ஒரு நாள் வரேன் அண்ணா” என்று கூறினாள் பெண்ணவள்.

 சிந்துவை பார்க்கவும் நின்று கொண்டிருந்த விஷ்வத் ஓடி சென்று அவளின் கால்களை பிடித்தான்.

“போவோமா, அங்கிளுக்கு பாய் சொல்லு!” என்று சிந்து சொல்ல, “பாய் அங்கிள், நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன்! அந்த அங்கிள் கிட்டயும் சொல்லிருங்க “ என்று சொல்லி புன்னகைத்தான்.

“நீயே வரலைன்னாலும் நானே உன் வீட்டுக்கு வந்து உன்னைய தூக்கிட்டு வந்துருவேன்!” என்று ராகவும்  சொல்ல சிரித்தான் விஷ்வத்.

இங்கு அலைபேசியை கையில் எடுத்தவன் யோசனையாக  அழைப்பை ஏற்காமலே சில வினாடிகள் நின்று கொண்டிருந்தான்.

பின்பு என்ன நினைத்தானோ அலைபேசியை ஏற்று காதில் வைக்க

“வரு எப்படி இருக்க?” என்ற குரல் கேட்டது.

“நான் நல்லா இருக்கேன் பா, நீங்க எப்படி இருக்கீங்க?அம்மா எப்படி இருக்காங்க?ரேணு நல்லா இருக்காளா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தான் வருண்.

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்யா, நீ எப்படி இருக்க நல்லா வேள வேலைக்கு சாப்பிடுறியா?” என்று கேட்டார் வருணின் தந்தை.

“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லப்பா,நானும் ராகவும் ரூம்லயே  சமைச்சு தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்” என்று கூற

“எத்தனை காலத்துக்குயா நீயே சமைச்சுசாப்பிடுவ,பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா அவ கையால நீ சாப்பிடலாம்ல?” என்று வருணின் தந்தை கேட்க, ‘இதுக்குத்தான் போன் எடுக்கவே யோசிச்சேன்’ என்று தனக்குள் முனகினான்.

பேசிக் கொண்டிருந்தவருக்கு எந்த பதிலும் வராமல் இருக்கவும் “வரு லைன்ல இருக்கியா?” என்று கேட்டார் வருணின் தந்தை.

“ இருக்கேன் பா”

“உன் அம்மா தரகர்கிட்ட உனக்கு பொண்ணு பாக்க சொல்லி இருந்தா,தரகர் ஒரு பத்து பொண்ணுங்க போட்டோவ அனுப்பி இருக்காங்க!ரேணு கிட்ட சொல்லி  உங்க செல்லுக்கு அனுப்ப சொல்றேன்.நீ பாத்துட்டு எந்த பொண்ணு உனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லு, பேசி முடிச்சு இப்போதைக்கு

நிச்சயதார்த்தத்தை மட்டும் வச்சுக்கிடுவோம்.கல்யாணத்தை கூட கொஞ்சம் லேட்டா வச்சுக்கிடுவோம்!” என மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் வருணின் தந்தை  சந்திரன்.

“அப்பா என்னப்பா அவசரம்”

“உனக்கு இருபத்தி எட்டு வயசு ஆச்சு,

உன்னோட சேர்ந்த இளந்தாளி பயல்கள் எல்லாம் கல்யாணம் முடிஞ்சு புள்ள குட்டியோட இருக்காங்க,

என் மகனும் பொண்டாட்டி பிள்ளைகளோட வாழ்வதை நானும் உங்க அம்மாவும் பார்க்க வேண்டாமா?

எப்ப கல்யாணத்தை பத்தி பேசினாலும் புடி குடுத்தே   பேச மாட்டேங்கற,இந்த தடவை அம்மாவும் நானும் உன்னை விடுறதா இல்ல

சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி, குடும்பஸ்தன் ஆகிற வழிய பாரு

எங்க பேரன், பேத்திய பாக்கணும் வளர்க்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்குது!” என கோபமாய் பேசியவர் ஏக்கமாய் முடித்திருந்தார்.

“அப்பா புரியுதுப்பா இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்!”என 

வருண்  சொல்ல

சந்திரனிடம்,செல்போனை வாங்கிக் கொண்டு அழுதார் சாந்தா.

“அம்மா இப்ப எதுக்கு அழுகிற?”

“பத்து வருஷமா  காலேஜ்ல படிக்கப் போனதிலிருந்து   சென்னையிலேயே இருக்க,வருஷத்துக்கு ஒரு தடவை தலையை காட்டிட்டு போற,

நாங்க என்ன மூணு, நாலு பிள்ளைகளையா பெத்து வச்சிருக்கோம்,எங்க வாரிசுனு நீ ஒருத்தன் தான் இருக்க,

உனக்கு நல்லது பண்ணி பாக்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா,எங்க குலம் தழைக்கிறதை  பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா

நானும் உங்க அப்பாவும் ஒருத்தரு ஒருத்தர் முகத்தை பார்த்துட்டு இருக்கோம்.

அப்பப்ப ரேணு,எங்களை வந்து பார்த்துட்டு போறதனால தான், எங்க வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு!எப்ப கேட்டாலும் கல்யாணம் இப்ப  வேண்டாம்னு தட்டி கழிச்சு கிட்டே  இருக்க,

இல்ல சென்னையில ஏதாவது ஒரு பொண்ண விரும்புறியா? அதையாவது சொல்லு!”  என சாந்தா கேட்க வருணுக்கு சிந்துவின் முகம் வந்து போனது.

“சொல்லு, நீ கல்யாணம் பண்ணால் எங்களுக்கு போதும், நீ சொல்ற பொண்ணையே   உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!”என சொல்லிக்கொண்டே அழுதார்   சாந்தா.

“அம்மா ப்ளீஸ்மா, அழுகாத!

இன்னும் கொஞ்ச நாள் மட்டும்  பொறுமையா இருங்க,

சீக்கிரத்துல கல்யாணம்  பண்ணிக்கிறேன்!”  என கூறினான் வருண்.

“இன்னும் ஒரு மாசம் உனக்கு டைம்,

அதுக்குள்ள நீ கல்யாணம் பண்ணிக்கணும்,

இல்லைனா அம்மா அப்பா நாங்க இருக்கோம்னு நீ மறந்துடு !” என்று சொல்லிவிட்டு   கோபமாக    அழைப்பை  அணைத்தார் சாந்தா.

“ஏன் சாந்தா, புள்ள கிட்ட இப்படி கோவமா பேசுற?”என  சந்திரன் கேட்க

“இப்படி பேசினால் தான் நம்ம வழிக்கு வருவான்,இல்லைனா அவன் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு  பேசிக்கிட்டே இருப்பான்.

இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது,

ஒரு மாசம் அவனுக்கு டைம்,

அதுக்குள்ள அவன்  பொண்ண பார்த்து இதான் உங்க மருமகள்னு கொண்டு வந்து நின்றாலும் பரவால்ல,அப்படி அவன் ஏதும் சொல்லலனாலும் நான் பாக்குற பொண்ணுக்கும்  அவனுக்கும்    அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்

இத அவன்கிட்ட தெளிவா சொல்லிருங்க! “என  கோபத்தில் நெடித்துக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்றார் சாந்தா.

திடீரென்று சாந்தா அலைபேசியை அணைக்கவும் தன் தாய் எவ்வளவு கோபத்திலும் வருத்தத்திலும்  இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான் வருண்.

சாந்தா பேசியதை யோசித்துக் கொண்டே   வருண் சோகத்தில் அமர்ந்திருக்க

“என்னடா மச்சான், சோகத்துல இருக்க போல!” என ராகவ் கேட்க  சாந்தா  கூறியதை கூறினான்,

“ஒரு மாசம் தான் டைம், அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு  சொல்லுறாங்க” என வருண் வருத்தமாய் சொல்ல

“எப்பவும் அப்படித்தான்டா சொல்லுவாங்க, இது வழக்கமா நடக்கிறது தானே, அப்பறம் என்ன?” என ராகவ் கேட்டான்

“இல்ல இந்த தடவை அம்மாவும் அப்பாவும் உறுதியாக இருக்கிறது அவங்க பேச்சிலேயே தெரியுது இதுக்கு மேல நான் நினைச்சாலும் காலம் கடத்த முடியாது, நீ கல்யாணம் பண்ணிக்க இல்லனா அம்மா அப்பா இருக்கிறதே மறந்துடுனு அம்மா சொல்லிட்டாங்க”

“அதுக்கு ஏன்டா கவலை படுற

நீ தான் பொண்ண பார்த்து வச்சிருக்கியே. கூட்டிட்டு போய் உங்க அம்மாகிட்ட இவதான் உங்க மருமகனு நிறுத்த வேண்டியதுதானே “ என்று கூறி சிரித்தான் ராகவ்.

“என்னடா சொல்ற

நான் இன்னும் என் லவ்வ சொல்லலையே,

முதல்ல நான் என் காதல சிந்துக் கிட்ட சொல்லணும்,அதுக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு அதையும் கேட்கணும்,அம்மா  ஒரு மாசம் தான் கொடுத்து இருக்காங்க” என்று கூறினான் வருண்.

“நீ ஒன்னும் வருத்தப்படாத,,

நாளைக்கே சிந்துவ  பாத்து உன் லவ்வ சொல்லிரு” என்று கூறினான் ராகவ்.

“பார்த்து ரெண்டு நாள் தாண்டா ஆகுது அதுக்குள்ள என் லவ்வ சொன்னா ஏத்துக்குவாளா?”

“ஆனா நீ ஆறு மாசமா அந்த பொண்ண கனவுலயே காதலிச்சுட்டு இருக்கியே டா” என்று ராகவ் கேட்டான்.

“அது சிந்துவுக்கு தெரியாதுல,

திவ்யா அன்னைக்கு அவ கிட்ட சொல்லும் போதே  கனவு காதலினு கதை விட்டுட்டு இருந்திருக்காரு

நீங்களும் நம்பி இருக்கீங்கனு  நக்கலா சொன்னாங்க,

அப்படி இருக்கும்போது கண்டிப்பா அவங்க  என்ன நம்ப மாட்டாங்க”.. என கூறி வருத்தப்பட்டான் வருண்.

“அவங்க என்ன நினைப்பாங்கனு நீயே சொல்லாதடா,முதல்ல

உன் லவ்வ சொல்லு,அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பாப்போம்!இப்ப வா தூங்கலாம்” என ராகவ் கூற இருவரும், படுக்கை அறையை நோக்கி சென்றனர் ராகவ், மருத்துவமனை, ஆபீஸ் சென்றதால் வேலை பளுவில் சீக்கிரம் தூங்கி விட்டான்.

வருணோ நாளை சிந்துவிடம்  எப்படி காதலை சொல்வது என்ற ஒத்திகையை தன் மனதிலே, செய்து பார்த்துக் கொண்டிருந்தான்

சிந்துவின் முகம் அவன் கண்முன்னே நின்று, ஆடவனை அசத்திக் கொண்டிருக்க, தன் செல் போனில் பாடலை   ஒளிர விட்டான்

ஓஹோ….. ஓ…..ஓஹோ

எங்கிருந்தாய் நான் மண்ணில்

பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய்

அடி எங்கேயோ வளர்ந்தாய்

இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்

இதற்கு என்ன அர்த்தம்

என் உயிர் எல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும் வந்தாய்

ஓ….. ஓஹோ

ஓஹோ…… ஓஹோ… ஓஹோ…

என்ற பாடல் ஒலிக்க அவள் நினைவில் ஒன்றி போனான்.

நாளை காலையில் தன் காதலை சிந்துவிடம்  உரைக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு துயில் கொண்டான்.

இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் மழைச்சாரலாய் நீ மருத நிலமாய் நான்.

கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்ற உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள் செல்லம்ஸ்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!