கல்யாணம் பண்ணு
தன் அறைக்குள் நுழைந்த ஆதவனின் கண்கள் கோவத்தில் சிவந்தது, அங்கே இருந்த மலர் அலங்காரமும், தயாராகி படுக்கையில் அமர்ந்திருந்த வெண்பனியின் அலங்காரமும் அவனைக் கோபத்தின் உச்சி கேஸ் அழைத்து சென்றது.
கோபமாக அரை கதவு அறைந்து சாத்தி உள்ளே வந்தவன், “என்ன இது?” என்று கடுப்புடன் கேட்டான்.“ அது ,அது.. அத்தை ஏற்பாடு பண்ணி வச்சிருக்காங்க” என்று தடுமாற்றத்துடன் கூறினாள் வெண்பனி,“ அவங்களுக்கு தான் அறிவில்ல, உனக்குமா இல்ல அவங்க கிட்ட இதெல்லாம் வேண்டான்னு சொல்ல வேண்டியது தானே” என்று கடுப்புடன் கேட்டான். “என்னன்னு அவங்க கிட்ட சொல்ல சொல்றீங்க..?” என்று திக்கி திணறி கேட்டாள்.
“என்ன, என்னன்னு சொல்லனுமா? அதுக்கு என்கிட்ட கேக்குற ,அப்போ நீ எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கியா?” என்று அவன் எரிச்சலுடன் கேட்க, அவள் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
“இல்லைங்க, அவங்க.. ஏதோ செஞ்சுட்டு போறாங்க, நாம எதுக்கு… அதை நினைச்சு கவலைப்படணும்…” என்று அவள் திக்கி திணறி பேச,“ நீ இப்படி ஒவ்வொரு வார்த்தையும் விட்டுவிட்டு பேசுறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும் நினைக்கிறேன், எவ்வளவு தைரியம் இருந்தா நீ இந்த மாதிரி பண்ணி இருப்ப, அதுவும் நீயும் வேற..” என்று கடுப்புடன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்,
“ இது கூட அம்மா தான் பண்ணாங்களா?” என்று அவளுடைய அலங்காரத்தை சுட்டிக் காண்பித்து கேட்டான், ஆனால் அந்த அலங்காரம் அவனை ஏதோ செய்ததுதான் உண்மை, அதை வெளி காண்பிக்காமல் கடுப்புடன் கேட்டான் அவன்.
“இல்லங்க.. அது நான் எதுவும்..” என்று அவள் சொல்லவும் “கல்யாணம் முடிஞ்சா உடனே படுத்துடனுமா இதுக்காக தான் அலையுறீங்களா?” என்று அவன் வார்த்தைகள் அவளை தீயாய் சுட்டது, அவள் அதிர்ந்து போய் பார்த்தாள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
கடும் சொற்களை கேட்டு கேட்டு மறுத்துப் போயிருந்த உள்ளம் தான் அவளுடையது, இருந்தாலும் கடும் சொற்களின் வகையறாக்கள் மட்டும் மாற மறுக்கின்றதே, புதுவிதமாக ஒவ்வொரு வழியில் அல்லவா வருகிறது, புது புதிதாக கேட்க கேட்க மனம் பாரமாகி ரணமாகி தான் போனது.
“ இல்லங்க நான்..” என்று இரு கண்களிலும் நீர் திறல, “இதோ பார் ,இன்னொரு முறை என்கிட்ட இந்த மாதிரி நெருங்குனோம்னு நினைக்காத, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன், இந்த கல்யாணத்துக்கு முதல் இரவு ஒன்னு தான் குறைச்சல், இது முதல் இரவு தானா ரெண்டு பேருக்கும்..” என்று அவன் எரிச்சலாக கேட்க, அடிபட்ட பாவனை அவள் முகத்தில்,
என்ன வார்த்தை சொல்லிவிட்டான் உடல் எல்லாம் கூசியது போலானது அவளுக்கு, அப்படியே எரிந்து விட மாட்டோமா என்று இருந்தது.
“குழந்தைகள் தவிர என்கிட்ட நெருங்க நினைச்சா தொலைச்சிடுவேன்” என்றவன் அங்கிருந்து தன்னுடைய வாட்ரோபை திறந்து, அவன் இரவு உடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட்டான், கூனிக் குறுகிப் போனாள் வெண்பனி.
சத்தம் போட்டு அழ வேண்டும் போல் இருந்த மனதை கல்லாக்கி கொண்டு, உதட்டை கடித்த படி அப்படியே நின்றிருந்தாள், அவன் படுக்கையில் படுத்தால் கூட ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயமே மேலோங்கி இருந்தது அவளுக்கு, அதனால் அங்கிருந்து மற்றொரு அறைக்கு செல்லலாமா? வேணாமா என்று யோசித்தாள்.
இப்போது முதலில் இந்த உடையை மாற்ற வேண்டும், அவளுக்கு இது அசௌகரியமாக இருந்தது, ஆனாலும் மாமியாரின் மனம் நோகாமல் இருக்கவும், தன் பெற்றோர்களின் மனம் நோகாமல் இருக்கவும் தான் சம்மதித்தாள்.
அலங்கரித்துக் கொண்டாள் என்று கூட சொல்ல முடியாது. சாதாரண ஒரு காட்டன் சில்க் புடவையும் ,எப்போதும் அணியும் ஒரு செயின், சிறு கம்மல் கைகளில் வளையல், இப்போது திருமணமானதால் அந்த புதுமஞ்சள் தாலி, நெற்றிய வகிட்டில் குங்குமமும், அவ்வளவு அலங்காரம் இதை தவிர்த்து அவள் வேறு எதுவும் செய்யவில்லையே அழுகையாக வந்தது. இன்னும் இந்த வாழ்விலும் இதே பிரச்சனையா தாங்க முடியவில்லை அவளுக்கு..
அவள் கீழே படுத்து இருப்பதை ஆதவன் குளித்து வெளியே வரும்பொழுது பார்த்தான், அவளிடம் இருந்து விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது, ஒரு கணம் அப்படியே நின்று விட்டான்.
தன் கைமுஷ்டிகளை இறுக மூடித் திறந்தவன், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, “இப்ப எதுக்கு கீழ படுத்துக்கிட்டு இருக்க, நீ மேலயே படு” என்று கூறினான்.
“ இல்ல பரவால்லங்க, நான் இங்க..” என்று அவள் கூறி முடிப்பதற்குள், உன் இஷ்டம் என்று போய் படுத்துக் கொண்டான் அவன்.அவனின் இந்த விட்டேற்றியான குணம், அவள் மனதை பெரிதும் காயப்படுத்தியது, ஏற்கனவே ஒரு பெரிய தொல்லையிலிருந்து விடுபட்டால் என்று பார்த்தால், இவனுடைய இந்த குணம் அவளை மேலும் பயமுறுத்தியது,
அங்கேயே அந்த புடவையில் படுத்து இருக்க, மிகவும் அசௌகரியமாக உணர்ந்தவள், அவளுடைய பெட்டியில் இருந்து சாதாரண இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட்டாள். சிறிது நேரத்தில் உடைமாற்றி வந்து படுப்பதை அவன் புரிந்து கொண்டான், ஆனாலும் அவளிடம் சாப்பிட்டியா ,என்ன ஏது என்று எதுவும் கேட்கவில்லை, அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை, வாயை திறந்தாலே தேள் போல் கொட்டுபவனிடம் என்னவென்று கேட்பது அமைதியாகவே வந்து படுத்துக்கொண்டாள். குழந்தைகள் இருவரும் தேவகியிடம் இருந்தார்கள் ,
ஆதவன் வெண்பனியின் நினைவுகள் அவர்கள் சந்தித்த அந்த இரு தினங்கள் முன் நோக்கி சென்றது. இந்த திருமணம் முழுக்க முழுக்க கட்டாயத்தினால் நடந்த திருமணம், அதுவும் குழந்தைகளுக்காக, குழந்தைகள் மட்டுமே அவர்களின் பிரதான காரணம். இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் தன் ஆபீஸூக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு பெண்களுக்காகவும் நியாயத்திற்காக போராடும் பெண் வக்கிலான தமயந்தியை பார்க்க வந்திருந்தாள் வெணபனி,
உள்ளே ஆள் இருப்பதாக தெரிவித்திருக்கவும் வெளியே காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளை அழைப்பதாக தமயந்தி ஜூனியர் வந்து கூறினார், வாங்க வெண்பனி, “உட்காருங்கள்” என்று கூறவும் தன் அருகில் அமர்ந்திருந்த அவனை அப்போதும் அவள் பார்க்கவில்லை.
இவர்தான் மிஸ்டர் ஆதவன் டாக்டரா இருக்கார் என்று சொன்னதும், பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள், அவன் கூர்மையாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கிட்டத்தட்ட ரெண்டு பேருக்கும் சேம் பிராப்ளம் தான். ஒய் நாட் நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்க கூடாது” என்றதும் அதிர்ந்து போனது வெண்பனியின் முறையாகிவிட்டது.
காரணம் சற்று முன்னரே அவனிடம் விஷயத்தை விளக்கி இருந்தாள் தமயந்தி, தமயந்தி ஆதவனின் குளோஸ் ஃபிரின்ட், வெண்பனி வந்து இருப்பதாக தகவல் வந்ததுமே அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“ இங்க பாரு கேசு கோர்ட்டுக்கு வருது, இன்னும் ஒன் வீக் இருக்கு, நீ அதுக்குள்ள மேரேஜ் பண்ணி இருந்தா தான் உன்னால உன் பொண்ண தக்க வச்சிக்க முடியும்,இல்லனா உன் வொய்ஃப்.. என்று முடிப்பதற்குள், “ஷட் ஆப், எக்ஸ் ஒய்ஃப், எக்ஸ்னு கூட சொல்லக்கூடாது, எனக்கு அசிங்கமா இருக்கு, அவள என்ன சொல்றதுன்னு தெரியல” என்று ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டியவன்,
“ ஓகே லீவ் இட், அதுக்கு திரும்பவும் மேரேஜ் பண்ணிக்க சொல்றியா, என்னால முடியாது” என்றான் கடுப்புடன் அவன்.
“டேய் கூல், நமக்கு இத தவிர வேற வழி இல்ல, கண்டிப்பா ஒரு பெண் பிள்ளைய நீ பாத்துக்கணும்னா, நிச்சயமா நீ மேறீடா இருந்து அப்போ மட்டுமே அவள நீ கஸ்டடியெல் கொண்டுவர முடியும், சட்டங்கள் அப்படித்தான் இருக்கு, அவ அந்த வசந்தரா நல்லவளா கெட்டவளா, ப்லாப்லா, அதெல்லாம் கோர்ட்டு பாக்காது அதுக்கு தேவையான சாட்சிகள் ஆதாரம், சட்டம் இத வச்சு மட்டும் தானே மூவ் பண்ண முடியும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான், வெண்மதியை பற்றி கூறினாள்.
அவளும் கிட்டத்தட்ட உன்ன மாதிரி சிச்சுவேஷன் தான், அவ ஹஸ்பண்ட் ஒன்றா வாழும் பொழுது இன்னொருத்தன் கூட அபார்ல போய்ட்டான், போனதும் இல்லாம இவ டிவோர்சுக்கு அப்ளை பண்ண அந்த செகண்ட், அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டான், இப்போ வந்து குழந்தை, என் குழந்தை என் கூட தான் இருக்கணும்னு குழந்தையை கஸ்டடிக்கு கேட்டுட்டு இருக்கான்,
அதுவும் இல்லாம உன்னால குழந்தையை பார்க்க முடியாது சிச்சுவேஷன், அது வளர்க்க முடியுமா அதெல்லாம் பார்த்து தான் கோர்ட் வந்து குழந்தையை அப்பா கூட, அம்மா கூட வா என்று பார்க்கும் ,ஆனா பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பா பஸ்ட் பிரபரன்ஸ் அம்மா தான் அதுக்காக தான் சொல்றேன்.
அவளும் அவளுடைய ஃபர்ஸ்ட் லைஃப்ல நிறைய காயப்பட்டு இருக்கா, வெண்பனிக்கு நான் 100% கேரன்ட்டி, எனக்கு தெரியும் ஆனால் அவளும் உன்னுடைய குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவும் இருப்பா புரிஞ்சுக்க,நான் அவ கிட்ட பேசுறேன் என்று சொன்னாள்.
“இங்க பார் தமயந்தி, நார்மல் ஹஸ்பண்ட்ஸ் மாதிரி இருக்க முடியாது, எனக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்ல, அதுல நம்பிக்கை இல்லை, திரும்பவும் பழைய மாதிரி என்னால.. என்று அவன் மீண்டும் ஏதோ சொல்ல வர, டேய் நீங்க பேசிக்கோங்க அவளுக்கும் அதுல எல்லாம் இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல, அவளும் ஒரு சூடு கண்ட பூனை, இதுக்கே என்ன சொல்லுவானு என்று எனக்கு தெரியல, ஜஸ்ட் பேசி பார்க்கிறேன், ஆனா உங்க ரெண்டு பேருடைய அம்மாவுக்கும் உங்களுக்கு ஒரு நல்ல லைஃப் அமையாதான்டா இருக்காங்க, ஒரு மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்ல நடக்கிற மேரேஜ் கூட வச்சுக்கோயேன்,
மேபி போக போக உங்க ரெண்டு பேருக்கும் பிடித்து நீங்க வாழ ஸ்டார்ட் பண்ணலாம்…”
“நடக்கவே நடக்காது..” என்று அவள் முடிப்பதற்குள் கூறினான் ஆதவன்.
“சரி ஆஃபடர் மேரேஜ், நீ உன்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூ ல இருந்து பேசுற, நான் என்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பேசுறேன், அது நடக்கட்டும் நடக்காமல் போகட்டும், தனித்தனியா இருந்து கஷ்டப்படறதுக்கு ஒன்னா இருந்து பிள்ளைகளை பார்த்துக்கோங்க” என்று என்னவோ காரணங்களை சொல்லி, முதல் காரணமாக குழந்தையின் கஸ்டடியை தான் வைத்தாள்.
அவன் சிறிது நேரம் யோசித்தவன், “சரி ஃபர்ஸ்ட் அந்த பொண்ணு என்ன சொல்றான்னு பார்க்கலாம், அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு பாப்போம்” என்றான்.
அப்போதுதான் தன் அருகில் வந்து அமர்ந்திருந்தவளை பார்த்தான் ஆதவன், வெண்பனியை கூர்ந்து நோக்கியவனின் பார்வை இடுங்கியது, முகத்தில் கடுமை பரவியது.
தொடரும்..
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் 🙏 நான் எழுத்தாளர் கூட்டத்தில் சிறு புள்ளி, எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும், படித்து மறக்காம கமெண்ட் பண்ணுங்க மற்றும் ரிவியூ பண்ணுங்க,அது என்னை மேலும் ஊக்குவிக்கும்.. குறை நிறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், என் எண்ணங்களை எழுத்துக்களாக அது மெருக்கேற்ற உதவும்.. நட்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🫰