Stories that touch hearts

Home  /  15. யாத்ரிகா (ஆதவனின் வெண்பனி)  /  Chapter 1

CHAPTER 1

ஆதவனின் வெண்பனி

By Yathriga · October 11, 2026

0

என் குடும்பம்

அந்த முருகன் கோவில் சன்னதியில் தன் எதிரே நின்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கையில் தாலியை பிடித்த நின்றிருந்தவனைப் பார்த்தால் வெண்பனி, அவள் முகத்தில் மருந்திருக்கும் சிரிப்பு இல்லை, உள்ளுக்குள் ஒரு பயம் பிறந்தது, அவனும் அவளைத்தான் ஆழப் பார்த்துக் கொண்டிருந்தான், அவனின் அளவிடும் பார்வையும், ஊசியாய் அவளைத் துலைத்தெடுக்க அவனின் பார்வை வீச்சை தாள முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் வெண்பனி.

“ஆதவா என்ன பாத்துட்டு இருக்க ,தாலி கட்டு” என்று அம்மா தேவகியின் குரலில் தான், ஒரு கணம் ஆழ பெருமூச்செறிந்தவன், “ஹம்” என்று மட்டும் சொல்லி அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான். அவளால் நம்பவே முடியவில்லை, தன் வாழ்வில் மீண்டும் மறுமணம் என்பது கிடையாது என்று தீர்மானமாய் இருந்தவளால் இதை ஏற்கவும் முடியவில்லை, அவன் தீண்டிய அக்கணம், அவன் விரல்கள் அவள் கழுத்தில் உரசிய அந்நொடி அவளுக்குள் பெரும் பிரளயமே எழுந்தது, முகத்தில் உணர்வுகளை காட்டாமல் இருக்க பெரிதும் பாடுபட்டாள் அவள்.

சற்று தள்ளி தன் பாட்டி தேவகியிடம் நின்று கொண்டிருந்த ஆதவனின் ஐந்து வயது பெண் குழந்தை அதுல்யா, “அம்மா” என்று ஓடி வந்து, நின்று கொண்டிருந்த வெண்பனியின் காலை கட்டிக்கொண்டாள். சட்டென குனிந்து குழந்தையை பார்த்தாள் வெண்பனி.

“இனி நீங்க எங்க கூடத்தானே இருப்பீங்க, எனக்கு அம்மா வந்துட்டாங்கள?” என்று மழலை மாறாமல் தன் மருண்ட விழிகளால் உருட்டி உருட்டி பேச, குழந்தையை பார்த்த வெண்பனியின் மனம் உருகித்தான் போனது. சிரித்துக் கொண்டவள் குழந்தையை தூக்கிக் கொண்டாள், கண்டிப்பாக குட்டி என்று அவள் சொல்லவும்,

“ அப்போ நான் உங்களை அம்மா என்று கூப்பிடவா?” என்று கேட்க, “இது என்னடா கேள்வி?” என்று அவள் கேட்க வரவும்..

“அதுல்யாவிற்கு அவ அம்மானா, அப்ப நான் யாரு?” என்று அங்கு ஒருத்தி வந்து நின்றாள், உடன் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் 60 வயதுக்கு இருக்கும் ஒரு நபரும் இருந்தார்கள், அவர்கள் இருவரும் அவளின் பெற்றோர் போல, அவர்களைப் பார்த்ததும் மேலும் இறுகியது ஆதவனின் முகம், அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பனி, ‘யார் இவங்க?’ என்று அவள் மனதில் ஒரு யோசனை அப்போது வெண்பனியின் காலை கட்டிக் கொண்டிருந்த அதுல்யா, அவளின் கால்களை மேலும் இருக்க பிடிக்க குழந்தையை தூக்கிக் கொண்டாள்..

“என்ன மிஸ்டர் ஆதவன், என் குழந்தைக்கு இன்னொருத்தர் அம்மானு கூப்பிட ட்ரைனிங் கொடுத்துட்டு இருக்கீங்களா? அதுவும் பெண் குழந்தை கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா?” என்று கேட்க,

“இங்க பார் உன்னால நினைச்சாலும் என் பொண்ண, என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது, உன்னால முடிஞ்சத நடத்தி காமி” என்று அவன் கர்ஜனையாக சவால் விடவும், “ஆதவ்” என்று அவள் ஒற்றை விரலை நீட்டி அவனிடம் பேச, இடம் பொருள் ஏவல், கோவில் சன்னதி என்றெல்லாம் பார்க்கவில்லை ஓங்கி ஒரு அரை வைத்தான்,

“அம்மா” என்று கீழே போய் விழுந்தாள், அதை பார்த்த பின்பு தன் கையில் வைத்திருந்த அதுல்யாவை இறுக்க பிடித்தாள் வெண்பனி, அதுல்யாவும் அவளை இறுக பிடித்திருந்தாள், ஆனால் அவளின் பயம் வேறு அவள் பயம் வேறு.அந்தப் பெண்ணுடன் வந்திருந்தவர்கள்,

“ஆதவ் என்ன பண்றீங்க? என்று அவருடைய அப்பா போல் இருந்தவர் கேட்கவும், தன் கையில் இருந்த காப்பை இறக்கியபடியே, “இங்க பாருங்க ஒழுங்கா உங்க பொண்ணு கூட்டிட்டு போய்டுங்க, உங்களுக்கு உங்க பொண்ணு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் எனக்கு என் பொண்ணு, அவளுக்காக என்ன வேணாலும் செய்வேன் திரும்பவும் இவளை என் கண்ணு முன்னாடி கூட்டிட்டு வந்துறாதீங்க அப்புறம் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்று எச்சரித்தான் ஆதவன்.

அவன் பேச பேச அதிர்ந்து போய் நின்றது என்னவோ வெண்பனி தான், அவள் கொஞ்சம் பயந்த இளகிய சுபாவம் கொண்டவள் இக்கணத்திலிருந்து தன் கணவனாக மாறியவனின் இந்த சுபாவம் அவளை அச்சுறுத்த தான் செய்தது.

“ஆதவ்” என்று கீழே விழுந்திருந்தவள் எழுந்து அவனைப் பார்த்த முறைக்க, “அடச்சீ போடி” என்றவன் சொடக்கிட இரண்டு பேர் அங்கே வந்தார்கள்.

“இதற்கான விலைய நீ கொடுத்து தான் ஆகனும், என் பொண்ணு என் கூட தான் இருப்பா, அவளா வாங்குறேன்னா இல்லையா என்று மட்டும் பார்” என்று கோபமாக கத்திக்கொண்டு அங்கிருந்து சென்றாள் வசுந்தரா..

அவன் தன் காதைக்குடைவது போல செய்தவன், “ப்பா ஒரே சத்தமா இருக்கு, சீக்கிரம் இவளை வெளியே அனுப்புங்க” ன்று சொல்லிக் கொண்டே திரும்ப, அப்பொழுது தான் வெண்பனியின் இரண்டு வயது மகன் ஹர்ஷன் தன் அம்மாவை பார்த்து தேம்பி கொண்டு இருந்தான் அவளிடம் செல்வதற்க்காக. அதுவும் தன் பாட்டி பத்மாவதியின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு, அவன் முகத்தில் அப்பட்டமான பயம், அதுவும் தன்னை பார்த்து என்றதும் என்று தலையை உலுக்கியவன்..

‘எவ்வளவு டென்ஷன் பண்றா, இவளால குழந்தைகள் முன்னாடி எப்படி பிஹேவ் பண்ணிட்டேன்’ என்று நினைத்தபடி குழந்தையை நோக்கி வரவும், ஹர்ஷன் தன் பாட்டி பத்மாவதி கழுத்தை மேலும் இறுக்கமாக கட்டிக் கொள்ள, அவன் அருகில் போய் நின்றவன், “என்ன கண்ணா பயந்துட்டியா?” என்று அவன் சிரித்த முகமாக கேட்க, இவ்வளவு நேரம் அவன் தான் கடுப்பாக பேசினானா? அல்லது தன்னிடம் இறுகிய முகத்துடன் காணப்பட்டவன் முகமா இது என்பதைப் போல பார்த்தாள் வெண்பனி.

சற்று முன் இருந்த அவனின் கடுமையும் முற்றிலும் மறைந்து குழந்தையிடம் பேசினான்.“ஹம்” என்று ஒரு எம் என்ற சத்தம் மட்டும்தான் வந்தது ஹர்ஷனிடம், அதை பார்த்து லேசாக புன்னகைத்தான்.

“வா” என்று அவனை நோக்கி கரத்தை நீட்டி.. ஹர்ஷன் மிரண்டு மிரண்டு விழித்தான், “அட வாடா, அப்பாடா” என்று கூறியதும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்த ஹர்ஷன், “அப்பா” என்று சட்டென தாவிக் கொண்டான் ஆதவனிடம்.

அதை பார்த்து வெண்பனியின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை, பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டு பெற்றோர்களுக்கும் மனதில் ஒரு நிறைவு, இதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கை சீர்பட்டுவிடும் என்று நினைத்தனர்.

ஆனால் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை, குழந்தைகளின் வாழ்வு சீர்படும், ஆனால் பெற்றவரின் வாழ்வு சீர்படுமா சிறைபடுமா என்று காலம் தான் பதில் சொல்லும், பார்ப்போம். அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தான் ஆதவன், காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல தயாரானார்கள்.

வெண்பனியின் பெற்றோரையும் தன் வீட்டிலே இருந்து கொள்ள சொன்னான் ஆதவன், காரணம் அவளும் அவர்களுக்கு ஒரே பெண் தான், உடன் பிறந்தவர்கள் என்று எல்லாம் யாரும் இல்லை,ஆனால் அவர்கள் தான் வேண்டாம், அது நன்றாக இருக்காது, என்று வெண்பனியின் அப்பா விஸ்வநாதன் உறுதியாக மறுத்துவிட்டார்,

எங்கள் பெண் வந்து தங்குவதற்கு என்று எங்கள் வீடு நிச்சயம் இருக்க வேண்டும், அவளுக்காக நாங்கள் இருப்போம், வேண்டுமென்றால் பக்கத்தில் ஏதாவது வீடு பார்த்து தங்கி கொள்ளலாம் என்று சொல்லி, அருகிலேயே ஒரு சிறிய வீடு அவர்களுக்கு வாங்கி கொடுத்திருந்தான் ஆதவன்.

ஆம் வாங்கி தான் கொடுத்திருந்தான், அவர்களும் அங்கே இருக்க சம்மதித்தனர், தற்போது அவர்கள் இருக்கும் வீட்டை வாடகைக்கு கொடுத்து இருந்தார்கள்.அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆதவனின் வீட்டிற்கு கிளம்பினார்கள்,

அவளை விட்டு விட்டு தான், தங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று இருந்தனர் வெணிபனியின் பெற்றோர் மற்றும் இரு பக்கத்து தோழர் வட்டம்.

இருவருக்கும் உறவினர்கள் அல்ல, நண்பர்கள் தான் வந்திருந்தார்கள், ராகவ், மதுமதி, வர்ஷிதா என்று வெண்பனியின் நண்பர்களும், அதேபோல் ஆதவனின் பக்கமும் அவன் நண்பர்கள் கிஷோர் ,ஸ்வரன், ஆனந்தி வந்திருந்தார்கள்.

எல்லாரும் ஆதவன் வீட்டில் விட்டு செல்லலாம் என்று வர ,ஆரத்தி எடுப்பதற்காக வாசலில் நிற்க சொன்னார் தேவகி, கையில் அவன் ஹர்ஷனைத் தூக்கிக் கொண்டிருக்க, அதுல்யா வெண்பனியின் கரங்களை இறுக பிடித்திருந்தாள்.

தனியாக காரில் வரும் பொழுது கூட ஒரு வார்த்தை பேசவில்லை ஆதவனும் வெண்பனியும், ஹர்ஷன் ஆதவனிடம் ஒட்டிக் கொண்டான், அதேபோல் அதுல்யாவும் வெண்பனியிடம் ஒட்டிக்கொண்டாள், குழந்தைகள் அசதியில் உறங்கிவிட பெற்றவர்கள் அமைதியாக வந்தனர்.

இப்போது ஆரத்தி எடுக்க வர, “இதெல்லாம் தேவையில்லை எனக்கு டைம் ஆகுது, நான் ஹாஸ்பிடல் கிளம்பனும்” என்றவன், “போலாம்” என்று அவன் பாட்டுக்கு உள்ளே செல்ல, “ டேய் இருடா” என்று மகனை அழைத்துப் பார்த்தும் அவன் ஹர்ஷனை தூக்கி கொண்டு உள்ளே சென்று விட்டதால், வேறு வழி இல்லாமல் வெண்பனியும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

வீட்டிற்குள் வந்து குழந்தையை இறக்கி விட்டான்,“ என்னக்குட்டி, அப்பாவை பார்த்து பயப்படக்கூடாது, உனக்கு எது தேவைனாலும் என்கிட்டயும் கேட்கலாம், ஓகேவா?” என்று அவன் பேச, முத்து பற்கள் தெரிய என்று “ஹம்” சிரித்தான் ஹர்ஷன்.

” தட்ஸ் குட், சரி அப்பா இப்ப ஹாஸ்பிடல் போகணும்” என்று சொல்லவும்,“ அப்பாக்கு ஊசி போட போறாங்களா?” என்று சரித்தபடி ஹர்ஷன் கேட்க, ஆதவன் சிரித்துக்கொண்டு, அப்பாக்கு ஊசி போடல, அப்பா தான் மத்தவங்களுக்கு போய் ஊசி போடணும், பெரிய ஊசியை குத்தலாமா?’ என்று அவன் கேட்க,ஹம் .. என்று கைதட்டி சிரித்தான் ஹர்ஷன், “அப்போ அப்பா டாக்டரா?” என்று இரண்டு வயதிலேயே தெளிவாக பேச ஆச்சரியமாகத்தான் இருந்தது அவனுக்கு,“ ஆமாடா குட்டி” என்று குழந்தையின் உப்பியிருந்த கன்னங்களை பிடித்து இருபக்கமும் ஆட்டியவன் ,

“அதுல்யா” என்று மகளிடம் திரும்பி,“ தம்பி கூட சமத்து பிள்ளையா விளையாடனும் சரியா?” என்று அவன் கேட்க,

“ அப்பா, இனிமே நான் தனியா இருக்க மாட்டேன்ல, எனக்கு அம்மா தம்பி இருக்காங்கல்ல” என்று அவள் கேட்கவும், அவன் மனதில் ஒரு சிறு வலி.“ ஆமா டா இனி நீ தனியா இருக்க மாட்ட, உன் கூட விளையாட தம்பி இருக்கான், உன்ன பாத்துக்க நானும் இருக்கேன், அப்புறம் அம்..” என்று அவன் நிமிர்ந்து வெண்பனியை பார்த்தான்.

அவன் விட்டதை அவள் தொடர்ந்தாள். “ஆமாக்குட்டி, உனக்கு என்ன தேவைனாலும் என்கிட்ட கேளு” என்று அவள் சொல்ல, “அப்போ எனக்கு தலை எல்லாம் நீங்க வாரி விடுவீங்களா?” என்று கேட்டாள். கண்டிப்பா என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட, இனி எனக்கு அப்பா இருக்காங்க அம்மா இருக்காங்க தம்பி இருக்கிறான் என்று குதித்தாள் அதுல்யா,

அதை பார்க்க இரு வீட்டு பெற்றோர்களுக்கும் மனதில் ஒரு வலியும் கூடவே மகிழ்ச்சியும் வந்தது. ஒரு குடும்பத்திற்காக ஏங்கி இருக்கிறது 5 வயது குழந்தை, அக்குழந்தை மனதில் அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய அந்த ராட்சசியை நினைத்து ஆதவின் கண்கள் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது. சிரித்துக் கொண்டே திரும்பிய வெண்பனியின் விழிகள் அவன் முகம் பட, பக்கென்று இருந்தது.

அவ்வளவு கோபம், கண்களில் அவ்வளவு ரௌத்திரம்.இந்தக் கோபத்தின் காரணம் அவளுக்கு தெரியவில்லை. அவன் அவர்களை விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான்.

அதேபோல் அவரவர் நண்பர்களும் சென்றுவிட்டார்கள் வெண்பனியின் பெற்றோரும், “நாங்க பக்கத்துல தானமா இருக்கோம், டயர்டா இருக்கு, நாங்களும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறோம்” என்று சொல்லிவிட்டு செல்ல முயல..

தேவகி தான், “சம்மந்தி.. பொண்ணு வீடுன்னு வராம இருக்காதீங்க, அப்பப்ப வந்து கொஞ்சம் பார்த்துட்டு போங்க” என்று அர்த்தமுடன் கூறினார்.“ சரி” என்று அவர்களும் சம்மதித்து சென்றனர் குழந்தைகள், ஆதவனிற்கு ஒரு தங்கையும் இருக்கிறாள், அவள் பெயர் மதுவந்தி..“வா உனக்கு அத்தைய காட்டுறேன்” என்று ஹர்ஷனை அழைத்து சென்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

வெண்பனி எங்கே இருப்பது என்று தெரியாமல், அவளை ஆதவன் அறையில் ஓய்வெடுக்க சொன்னார் தேவகி, அவள் அவனுக்காக காத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அந்த அறையோ முதலிரவு அறைப்போல் அலங்காரம் வேறு செய்யப்பட்டு இருக்க செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

மனதிற்குள் பயப்பந்து உருண்டு கொண்டு இருந்தது ,ஏற்க முடியாத ஒரு திருமணம் அப்போது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஆதவனின் பார்வை அப்படியே கோபமாய் மாறியது, அவளின் அலங்காரத்தையும் ,அந்த அறையின் அலங்காரங்களை பார்த்து.

யார் இந்த ஆதவன்? யார் இந்த வெண்பனி, இப்ப தெரிஞ்சிருக்கும் இது இவங்களுடைய செகண்ட் மேரேஜ் என்று.. எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா எப்படி, போக போக கதையின் ஊடே பார்க்கலாம், ஆனா ஆதவனுக்கு இந்த கோபம் எதற்கு?

தொடரும்..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!