Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மழைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 2

CHAPTER 2

மழைச்சாரல் – 2

By Prabha Amuthan · October 8, 2026

0

வருணின் பைக் ஐடி நிறுவனத்தில் உள்ளே நுழைந்தது. பைக்கை பார்க்கிங்கில்  வைத்து விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

அவனுடன் வேலை பார்க்கும் சக பெண் ஊழியர்கள் அவனை நோக்கி “குட்மார்னிங் வரு “எனக் கத்த

“குட் மார்னிங் கேர்ள்ஸ்”  என சிரித்தான் வருண்.

அவனுடன் வேலை பார்க்கும் அவனின் நண்பனான குணா, வருணைப் பார்த்து 

“மச்சான் வாழ்றடா! நாங்க குட் மார்னிங் சொன்னா  முறைச்சிட்டு போவாளுக!உனக்கு என்னடா அவள்களே  வந்து குட் மார்னிங் சொல்றாங்க 

உனக்கு எங்கேயோ மச்சம்

இருக்குடா! எனக்கு மட்டும் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சுச்சுனா, பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்னு போய்க்கிட்டே இருப்பேன்,

பல்லு இல்லாதவனுக்கு எல்லாம் பக்கோடா கிடைக்குது, பல்லு இருக்கிறவனுக்கு எல்லாம் பாயாசம் தான் கிடைக்குது இதான் தலையெழுத்து போல” என சலித்துக் கொண்டான் குணா.

வருண் தான் டீம் லீடர்  குணா, ஷாலினி, மணி, திவ்யா வருணின்  டீமில் வேலை பார்க்கின்றனர்.

“என்ன மச்சான், எப்படி இருக்க?”என மணி கேட்க

“நேத்து தானடா பார்த்தோம் அதுக்குள்ள ஏன் கேட்கிற?” என வருண்  கேட்டான்.

“உன்ன பாத்து பத்து மணி நேரம் ஆகிட்டுல அதான் கேட்டேன்!”என கலாய்த்தான் மணி.

“புது மாப்பிள்ளை கலாய்க்காதிங்க?”

என திவ்யா கூற மற்ற மூவரும் புன்னகைத்தனர்!.

 “திவ்யா என்ன உளர?”

“ ராகவ் ,உன் கனவுல நடந்ததை எல்லாம் சொல்லிட்டான்” என சொல்லி சிரித்தாள் திவ்யா

“சொல்லிட்டானா அந்த படுபாவி

அவனுக்கு இதே வேலையா போச்சு” என செல்லமாய் ராகவ்வை திட்டினான் வருண்.

“கனவுலயே பொண்ண பார்த்து,

லவ் பண்ணி, ப்ரொபோஸ் பண்ணி அந்தப் பெண்ணையே கல்யாணமும் பண்ணி இருக்க கலக்குறடா மச்சான்” என கலாய்த்தான் குணா.

“அத விடு மச்சி,உம்மா குடுக்குற நேரத்துல நம்ம ராகவ் போன் பண்ணி தடுத்து இருக்கான்” என்ற திவ்யா கூற,

“இந்த சம்பவம் எப்ப நடந்துச்சு?”என கேட்டான் மணி.

“இன்னைக்கு காலையில  தான்” என்று திவ்யா சொல்லி சிரித்தாள்.

“மச்சான் பெரிய ஆளுதான் கல்யாணத்தை செலவு இல்லாம கனவுலயே பண்ணி இருக்கான்  பணம் மிச்சம்” என மணி சொல்ல  அனைவரும் சொல்லி சிரித்தனர்!!

“டேய் என்னைய கிண்டல் பண்றீங்க, எழுதி வச்சுக்கிறுங்க, சீக்கிரமா என்னோட கனவு காதலிய கண்டுபிடிச்சு, என் கனவுல நடந்த மாதிரி அவளை   நிஜத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!

அப்ப தெரியும் இந்த வருண் யாருன்னு” 

“கனவுல பார்த்தவள இனிமேல் கண்டுபிடிக்கிறது விட்டுட்டு நம்ம சுவீட்டியா  இல்ல ப்ரீத்தியானு முடிவு பண்ணு.அவளுங்க  ரெண்டு பேரும் ஆறு மாசமா வருண் எனக்கு தான்!  எனக்கு தான்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க”என ஷாலினி கூறினாள்.

“அந்தப் பிரீத்தி, என்னையும் மணியையும் கூப்பிட்டு, ஐஸ்கிரீம் பானி பூரி எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு  உங்க பிரண்டு வருண நான் காதலிக்கிறேன்,எனக்காக நீங்க அவர்கிட்ட ரெகமெண்ட் பண்ணுங்கன்னு சொல்றா?”என குணா கூறினான்.

“ஸ்வீட்டையும் ப்ரீத்தியும் என்னோட எக்ஸ்பெக்டேஷன்ல வர மாட்டாங்க,

நான் காதலிக்கிறதா இருந்தாலும் கல்யாணம் பண்றதா இருந்தாலும் அது என்னோட கனவுல வர காதலியா மட்டும் தான் இருக்கும் “ என வருண் சொல்ல

“லூசு மாதிரி பேசாதடா மச்சான் , கனவுல வர்றவங்க எல்லாம் நிஜத்துல உண்மையா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.

அப்படியே இருந்தாலும் அவங்க நம்ம கண் முன்னாடி வருவாங்களான்னு சொல்ல முடியாது, நீ இந்த உலகத்துல வாழ வேண்டியவனே  இல்லடா,கற்பனைகளையும் நிஜத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கிறாத! பிராக்டிகலா யோசிச்சு முடிவெடு, கனவு காதலின்னு கற்பனையா   உலகத்துல வாழாத!அப்புறம் சைக்கார்டிஸ்ட்ட தேடி போக வேண்டியது வந்துரும்” என ஷாலினி கூறினாள்.

“மணந்தால் மகாதேவி

இல்லையேல் மரண தேவீனும் போய்கிட்டே இருப்பேன்” என  சிரித்துக் கொண்டே   கூறினான் வருண்.

அலுவலகத்தில் ஹெச் ஆர் வந்துவிட அனைவரும் வேலை செய்ய தொடங்கினார்கள்

“வருண் உன்கிட்ட கொஞ்சம்

பேசணும்”

“சொல்லு ஸ்வீட்டி” என்று சூர்யா கூறினான்.

“உன்னைய காதலிக்கிறேன்னு சொல்லி ஆறு மாசமா, உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன். நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்கிற!” என்று வருத்தமாய் கூறினாள் ஸ்வீட்டி

“ஸ்வீட்டி நான்தான் அன்னைக்கே உன்கிட்ட பதில் சொல்லிட்டேனே!

எனக்கு உன் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு,அப்புறம் திருப்பி வந்து இப்படி கேட்டா  என்ன அர்த்தம்” 

“இந்த ஆறு மாசமா உன்னைய நான் எந்த இடத்திலுமே இம்ப்ரஸ் பண்ணலையா?ஏன் என்னை உனக்கு புடிக்கல வரு, நான் அழகா இல்லையா?” என ஸ்வீட்டி கேள்விகளை கேட்டுக் கொண்டே போக,

“நீ அழகா தான் இருக்க” என்று கூறினான் வருண்.

“அப்புறம் ஏன் என்ன உனக்கு புடிக்கல?”

“இங்க பாரு ஸ்வீட்டி,என் மனசுல வேற ஒருத்தி இருக்கா, அவள தவிர என் மனசுல யாருக்கும் இடம் இல்லை!” என்று வருண் கூறினான்.

“யாரு அந்த ப்ரீத்தியா?”

“இல்ல?”

“அப்ப நம்ம ஆபீஸ்ல உள்ள வேற பொண்ணா? இல்ல  அவ எங்க இருக்கா!  நான் அவளை பார்க்கலாமா?ஆபீஸ்ல உள்ள பொண்ணுங்க எல்லாரும் உனக்காக ஏங்கும் போது, உன் மனசுல இடம் புடிச்ச அந்த பொண்ணு யாருன்னு பாக்கணும்!

எனக்கு அந்த பொண்ண இன்ட்ரோ கொடு”  என   ஸ்வீட்டி சொல்ல திகைத்தான் வருண்.

ஸ்வீட்டி வருண் காதலிக்கும் பெண் யார் என்று இன்ரோ கொடுக்க சொல்ல  திகைத்து அமைதியாக நின்றான்!!

வருணின் முகத்தை பார்த்துக் கொண்டே ஸ்வீட்டி,” ரொம்ப நேரமா கேட்டுக்கிட்டே இருக்கேன்?  பதில் சொல்லாம  அமைதியாவே   இருந்தா என்ன அர்த்தம்” என்று ஸ்வீட்டி வருணைப் பார்த்து கேட்டாள்

அது வந்து…… என்று சூர்யா தடுமாற,

“வரு எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லு, நான் ஸ்போட்டிவா எடுத்துக்கிற கேரக்டர் தான்” என்று கூறினாள்  ஸ்வீட்டி.

“ஸ்வீட்டி என்னோட காதலியை கனவுல மட்டும் தான் நான் பார்த்து இருக்கேன் “ என்றுவருண் சொல்ல,

“வாட்” என அதிர்ந்து விட்டாள் ஸ்வீட்டி.

ஒரு கணம் ஸ்வீட்டிக்கு வருண் நம்மிடம் விளையாடுகிறானோ என்று தோன்ற, “வரு சும்மா விளையாட்டுக்கு தான சொல்ற?”

“இல்ல  ஸ்வீட்டி உண்மைதான் சொல்றேன்” என்று  முடிக்கவில்லை

“ஆர் யூ மேட்”என கேட்டாள் ஸ்வீட்டி

“நீ என்ன  வேணும்னாலும் என்னை பத்தி நினைச்சுக்க,

நான் என் கனவுல வர்ற பொண்ண தான் லவ் பண்றேன்!கல்யாணம்னு ஒன்னு பண்ணுனால் , அவளதான்  பண்ணிக்குவேன்” என்று கூறினான் வருண்

“வரு சின்ன புள்ள மாதிரி பேசாத,

உலகம் எங்கெங்கயோ போய்கிட்டு இருக்கு, இப்ப போய் கனவு காதலின்னு  கதை விட்டுகிட்டு இருக்க, உனக்கு மண்டையில எதுவும் அடி படலையே” என கேட்டுக்கொண்டு  சிரித்தாள்  ஸ்வீட்டி

ஸ்வீட்டின் பேச்சு  சூர்யாவை கோபமாக்கினாலும்,  அவள் கூறுவது உண்மைதானே! நவீன உலகத்தில் கனவு காதலி என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத கற்பனை  என்பது அவன்

கம்ப்யூட்டர் மூளைக்கு  நம்ப முடியாத எண்ணங்களாக தோன்றினாலும்

அவன் ஆழ் மனது

‘அவள் எனக்கானவள்

என்னை தேடி வருவாள்’ என்று  வருணிடம்   சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது.

அவன் மூளையும் மனதும் சண்டையிட்டு கடைசியில் அவன் மனது வென்று விடுகிறது, அதனால்  அவன் மனதை கனவில் கவர்ந்த மங்கை சீக்கிரத்தில் நிஜத்தில் காட்சியளிப்பாள் என்று  நம்பிக் கொண்டிருக்கிறான்.

ஸ்வீட்டியோ வருண் என கத்திக்கொண்டே இருக்க, கனவில் வரும் தேவதையின்  நினைவுகளில் மூழ்கி விட்டான்  வருண்.

லேசான வாடைக்காற்று அவன் முகத்தில் வீச, இவ்வளவு நேரம் அவன் முகத்தில் இருந்த குழப்பம்  மாறியது.

வருணின் நடவடிக்கைகள் விசித்திரமாய் இருக்க ஸ்வீட்டி  ‘சரியான லூசா இருப்பான் போல,

இவன பத்தி இப்பயே தெரிஞ்சிட்டு,

இல்லைனா இவன கல்யாணம் பண்ணிட்டு சைகாட்டிஸ்ட்ட தேட வேண்டியது இருந்திருக்கும்’ என நினைத்துக் கொண்டே   வருணிடம் சொல்லாமல் ஓடிவிட்டாள்.

ஸ்வீட்டின் இந்த செயல்  வருணை மேலும் குழப்பத்தை ஆழ்த்தியது.

கை நிறைய சம்பாதிக்கணும்,

வீடு வாங்கணும், கார் வாங்கணும் என்று இந்த ஐடி ஃபீல்டை தேர்ந்தெடுத்தான்.ஏறக்குறைய அவன் நினைத்தது நடந்து விட்டது

அவனுக்கென அவன் ஊதியத்தில் அவனின் ஊரில் பல ஏக்கர் நிலத்தையும்  ஒரு பெரிய வீட்டையும் கட்டியிருக்கிறான்.

எந்திர வாழ்க்கையில் அவனும் இயந்திரமாய் இருப்பதைப் போல உணர்ந்து கொண்டிருக்கிறான் ஒவ்வொரு நாளும்,

காதல் தேவதை அவன் கனவில் வரும் நாள் மட்டுமே  அவனை

உயிர்ப்போடு வைத்திருப்பதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறான் வருண்.

காதல் தேவதையும் கனவில் மட்டுமே வந்து காதல் வசனத்தை அள்ளி தெளித்துக் கொண்டிருக்க களிப்புற்றுக்  கொண்டிருக்கிறான்.

அலுவலகம் முடிந்துவிட  நண்பர்களுக்கு விடை கொடுத்துவிட்டு   குழம்பிய  மனநிலையில், அவனின் நண்பர்கள் பேசியதையும், ஸ்வீட்டி பேசியதையும் யோசித்துக் கொண்டே வீட்டிற்கு செல்லாமல்  கடற்கரைக்குச் சென்றான்,

கடலின் குளிர்ந்த காற்று அவன் மனதை லேசாக குளிர்விக்க, கடல் அலை தந்த இரைச்சலை, இன்னிசையாக உணர்ந்து, கடலை நோக்கி அமர்ந்திருந்தான் வருண்.

திடீரென்று அவன் முகத்தில் வெளிச்சம் பட  என்னவென்று எதிரே பார்க்க அந்தி சாயும் நேரம் சூரியன் பிரகாசமாய்   காட்சியளிக்க,  

சூரியனும் எனக்கு முன் பிரகாசத்தில் தோற்று விடுவான்  என்பதைப் போல் பெண்ணவள் ஒருத்தி அவன் முன் நிற்க  அவளின்  முகப்பிரகாசத்தில் ஆடவனின் கண்கள் கூசிட அவளைக் காண வேண்டும் என்று உந்துதலில் தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க திகைப்பின் உச்சத்தில் நின்றான் வருண்.

ஆம்,   அவளே  தான்!! வருணின்

கனவில் வந்து காதல் செய்த ராட்சசி,

மான்விழி கொண்ட மங்கையாய்

மாய வனையும் வீழ்த்தும்

கத்தி போன்ற மூக்கோடு

மாதுளம் பழ நிற அதரங்களோடு

செப்பு சிலையாய்

செங்காந்தள் மலராய்

சேலை கட்டிய வனமாய்

காதில் ஜிமிக்கிகள் தாளம் போட

அவள் கார் கூந்தல் காற்றிலாட

அவள் கண்ணசைவு காண்போரை

காந்தமாய் இழுக்க

மந்தகாசம் சிந்தும் புன்னகையில்

முழுமதியாய் காட்சியளித்தாள்

பெண்ணவள்…!!

எதிரே நின்றவளை

பார்த்த  வருணின்

இதயம் படபடக்க,

தன் கனவு காதலியை

கண் முன்னே பார்க்க, பூமி சுழலும்   கடைசி  நாள்  இதுதான்  என்பதை போல்  இமைகளை கூட சிமிட்ட மறந்து அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருக்க

“சிந்து இங்க வா” என்ற குரல் கேட்க  தன்னிலை மீண்டான்  வருண்.

காளையவன்  கண்ணியவளை நோக்க   கண்ணிமைக்கும் கண நேரத்தில் மறைந்து விட்டாள் மாயக்காரி.

கதையை படிச்சிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் தந்து விட்டு செல்லுங்கள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!