Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 4

CHAPTER 4

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · October 4, 2026

1

அத்தியாயம்-4-

மங்கலத்தின்  சொந்தக்காரர்கள் வள்ளியிடம் ஆச்சரியமும் குழப்பமுமாக அவளின் இந்த கோலத்திற்கான காரணத்தை  கேட்கவும்….. ​தெரியாது …!, என்றுவிட்டு, சுவரில் முட்டாத குறையாகத் திருதிருவென விழித்த வள்ளியை பார்த்து நக்கலாகச் சிரித்த மங்கலம்,   

      ‘ம்மா …. ஏன் மனசுக்குள்ள நினைக்கிறீங்க….? நேரா போய் அந்த சுவத்துலயே முட்டிக்க வேண்டியதானே….!’    

என்று மனதுக்குள்ளாக  வசைப் பாடுகிறவள் அப்படியே,   தன் கடந்த கால வலிகளை  அசை போடவும்….மாணிக்கத்தின் குடும்பம்  தன்னைப் பெண் பார்க்க வருவதற்கு முன்பாகத் தன் தாய் தகப்பனிடம்  மங்கலம் பேசிய உரையாடல் ஒன்று தற்போது அவளுக்கு நினைவுக்கு  வந்தது….    

” நான் காலேஜ் படிக்கிற சின்ன பொண்ணு தான் …. அதனால என் டிகிரி முடியட்டும்….. ஓஹோங்குற அளவுக்கு இல்லைன்னாலும், என் படிப்புக்கும் தகுதிக்கும் கிடைக்கிற சம்பளத்துல நான் வாழ்ந்துக்கிறேன்….. கல்யாணமே வேண்டாம்….!!!, அப்படியே ஏதாவது சமூக சேவை செஞ்சுட்டு என் காலத்தை ஓட்டிடுறேன்….!”     

  என அன்றைக்கு  பெற்றவர்கள்  காலில் விழுந்து தான்  அழுது பேசியது….., மங்கலத்திற்கு ஞாபகம்  வரவும்…    

  ‘அன்னைக்கு கேட்டீங்களா…?  நீங்களும் என் பேச்சைக் கேட்கல… எப்பவுமே நான் ‘அப்பா செல்லம்!’னு ஊரெல்லாம் பீத்திக்குவேனே…., அந்த அப்பாவும் அப்போ என் கண்ணீருக்கு இரங்கல….. மாறாக,      

   ” அய்ய… ஏ…. அழுவுற….  பச்ச புள்ளயாட்டம்…. இந்த மாப்புள வீடு பெரிய பணக்காரவுங்க…., இந்த மாப்புளயும் வெளிநாடெல்லாம் போய் நிறைய படிச்சுருக்காரு…. உன்னய மகராணி மாதுரி வெச்சு பாத்துக்குவாரு”னு

என்கிட்ட சொல்லியே…. என் கழுத்த இவன்ட்ட அடமானம்! வைக்க இவனும் தாலியும்  கட்டிட்டான் மாட்டுக்கு மூக்கனா கயிறு போடுறாப்புல …. அப்போ மாட்டை வித்த கணக்கா என்னையும் இவுங்க வீட்டுக்கு வித்துட்டீங்க  அப்படி தானே ….’      

என பல வருடங்களாக தன் மனதிற்குள்ளாக அவ அடக்கி வைத்து புதைந்திருந்த ரணம் வெளிப்பட…. மங்கலத்தின் கண்கள் குழம்பாகின….    

    ‘இப்போ…. அதுக்காக  கேள்விகேட்கலாம்ன்னு  நினைச்சாலும் அத கேட்டு பதில் சொல்ல  கூட என் அப்பா உயிரோடு இல்லயே….. என்னய இவன் கையில தவிக்கவிட்டுட்டு…., அவரு மட்டும் நிம்மதியா சொர்க்கத்துக்கு போயிட்டாரே … என் அப்பா கருப்பு பாவத்த….!’      

   என்று அவள்  நினைகைகுபோது , அவளது மனம் உடைந்து,  அவளின் அத்தனை கால வலியும் அந்த ஹால் முழுவதும் பரவவும்…. அவள் மனம் உடைந்து கண்கள்  அழுதிட காத்து  கொண்டிருந்தது …. ஆனாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு,   தன் ஆதங்கத்தை தனக்குள்ளே புதைத்து…, மேலும் அடக்கமுடியாமல் வரும் கண்ணீர் துளிகளையும்    கூலிங் க்ளாஸிற்குள்ளாக  மறைத்து துடைத்தாள் மங்கலம்…..     

  அந்த தருணத்தில் மாணிக்கமோ வீட்டு கதவை அவசர அவசரமாக தனது கைகளின் நடுக்கத்துடனே  வெளி ஆட்கள் யாரும் பார்த்திடாத வண்ணம் மெதுவாக சத்தம் இல்லாமல் கதவை மூடி தாழ்ப்பாளிடவும்…. வள்ளியை நோக்கி வந்தவன் , வள்ளி மாமியார் என்றாலும், அவனுக்கு தூரத்து உறவு முறை! என்பதால் வள்ளியை ‘அக்கா’ என்றுதான் அவன் அழைப்பது வழக்கம்….       அதனால் மாணிக்கம் தனது  நெற்றியில் புருவ முடிச்சுடனே  வள்ளியின் முகத்தை உற்றுப் பார்த்து,    

       “என்னக்கா… ஒருவேளை உங்க சொத்து, நிலம் நீச்சு எதையாவது ரகசியமா எனக்கு தெரியாம  வித்துட்டீங்களா….????,  அப்படியே எனக்கு தெரியாம ரகசியமா அந்த பணத்தையும் இவகிட்ட கொண்டு வந்து  குடுத்தீட்டீங்களா என்ன?”    

” அய்யய்யோ…. அப்படிலாம் இல்ல மாப்பிள்ளை…! நாங்க எந்த சொத்தையும் விக்கலயே…”  

     என்று மிகுந்த சந்தேகத்தோடு மாணிக்கம் விசாரிக்கவும்….!!!, பதற்றத்தோடு, அதேசமயம் உண்மையான குழப்பத்தோடு பதிலளித்தார் வள்ளி….. அந்த சமயம் அருகே ஆத்திரமாக வந்த அவனது தாய் பேச்சியம்மாள்,

“என்னடா மவனே… உம் பொண்டாட்டிய கோவில் சாமி கணக்கா அலங்கரிச்சு, ஆராதிச்சது பத்தாம…., நாங்க வளத்து உன்னய  தாரை வார்த்து கொடுத்துருக்கோமே உம் புதிய   ‘அக்கா!’ இந்த வள்ளிக்குமே ஏதாவது அர்ச்சனை, ஆராதனைன்னு செய்ய போறியா என்ன…? அப்படியே அவளுக்கும் படி அளக்கப் போறியாடா?”    

  என்று நக்கலும் கோபமுமாகக் கத்தினவள்  மேலும் தொடர்ந்து,   

   “ஆனா, ஒத்த பைசா… நான் பெத்த பொண்ணுகளுக்காகவோ, இல்ல எங்களுக்காகவோ கேட்டா மட்டும் ‘காசே இல்லம்மா’னு பஞ்சப் பாட்டுப் பாடுறியேடா… பாவி மவனே….!”         

   ” ஏம்மா நீ வேறயா…???,  இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம பேச வேண்டியது…?, எப்ப பாத்தாலும்….காசு, பணம், துட்டு, மனி…., மனீன்னுட்டு…!”

எனப் பொறாமையும் ஆத்திரமுமாக அவனின் அம்மா  கடிந்து கொள்ளவும்…     பதிலுக்குத் தன் தாயை இப்படிக் கடிந்து கொண்டான் மாணிக்கம்…..அவனது இந்த எரிச்சலைக் கண்டு பேச்சியம்மாள் சும்மா இருக்கவில்லை, மாறாக,      

    “ஏண்டா… நீ சொல்ல மாட்ட….?  சொத்த  பிரிச்சு உனக்குன்னு வாங்கிட்டு வந்தவன் தானே நீ…! அதான் உம் பொண்டாட்டியும்  அவ  கை நிறைய பணத்த வெச்சுக்கிட்டு இப்படி போஸ் குடுத்து உட்காந்துருக்கா….  மவராசி!… அத வச்சுட்டு என்னம்மா ஆடுறா…???., இவன் தான் நல்லா தூக்கி குடுத்துருக்கானே ஆடட்டும்ன்னு….  நாங்க கேட்டா மட்டும் காசு இல்லைன்னு பஞ்சப்பாட்டு பாடுறியேடா ஞாயமா….???!”     

   என்று பேச்சியம்மாள் மேலும் எகிறவும்…….பொறுமை இழந்த மாணிக்கமும்,      

“அம்ம்ம்ம்ம்ம்மா! சும்மா இருக்க மாட்டியா இப்போ நீ….?”

என்று ஆத்திரத்தில் சத்தமாகக் குரலை உயர்த்திப் பேசிவிட்டு , அப்படியே தனது பல்லையும் நர நரவென கடித்தவனை  கண்டு, பேச்சியம்மாளும் வள்ளியும் பயந்த விழிகளோடு அவனைப் பார்க்க…. அந்தச் சமயம் வரை அமைதியாக இருந்த மாணிக்கத்தின் அப்பா பாண்டியன், தன் மனைவியை மகன் அதட்டியதைக் கண்டு கோபத்தோடு குறுக்கே நுழைந்தவர்,       

“ஏண்டா! என் பொண்சாதிய அதட்டுற நீ? என்னடா பெரிய ஆளாயிட்டியா…?”   

    “அய்யோ அப்பா… நீயும்ப்பா…”

  என்றுவிட்டு, தன்னுடன் சண்டைக்கு வந்த அப்பாவால் தன் நிலையை நினைத்து நொந்துபோன மாணிக்கமோ,   அழாத குறையாக  பரிதாபமாக அப்பாவை பார்த்தப்படி இப்படி பேசவும்….. இப்படியாக  ஹாலில் நடக்கும் இந்தத் தேவையில்லாத கூத்துகளையும், சொந்தக்காரர்களின் ரகசியப் பேச்சுகளையும் அலட்சியமாக, துளியும் கவலையில்லாத பார்வையோடு கூலிங் கிளாஸ் வழியாக பார்த்து ரசித்து  கொண்டிருந்தாள் மங்கலம்….

இன்னொரு பக்கம், அவளது மகன் வேலனும் மகள் சாருலதாவும்,  

   ‘நம்ம குடும்பத்துக்குள்ளாக பேசி தீர்த்துக்க வேண்டிய  விசயத்துக்கு தேவையில்லாம அப்பா ரெண்டு பேர்  குடும்பத்தையும் வீட்டுக்குள்ளாக  கூப்பிட்டு வச்சு பஞ்சாயத்து பண்ண நினைச்சாருல… இவருக்கு இது தேவைதான்….! சொந்தக்காரங்க முன்னாடியே நல்லா மாட்டிக்கிட்டாரு…!’     

என்பது போலத் தங்கள் அப்பாவை நக்கலாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்… அந்த சமயம் ,   

‘ஓகோ இதான் பிரச்சனையா ….’    

  என இரு வீட்டுக் குடும்பமும்  அவர்குள்ளாக புரணிகள்  பேசி தீர்மானிக்கவும்… அதன் விளைவாக எதிரணியாக  பிரிந்தவர்கள்…. ஒன்று கூடி ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேச ஆரம்பித்து , அப்படியே   அடித்துக் கொள்ளாத குறையாகச் சண்டையிட்டுக் கொள்ள…, மாணிக்கம்  கூடியிருக்கும் இந்த அனைத்து  சொந்தங்களின் முன்னவும், 

‘ உண்மையில்  நடந்த சம்பவம் தான் என்ன…?,

‘  என சொல்லத் துடித்து போராடியவன் , சொல்லவும் முடியாமல்   நிலைகுலைந்து நிற்கிறான்….!,  அப்படியாக சொந்தங்கள்  கூச்சலும் குழப்புமாக  நடு ஹாலில் சுத்தி நின்றுக்கொண்டு கத்திக் கொண்டிருப்பதை ஷோபாவில் சவுகரியமாக சாய்ந்து உட்கார்ந்தப்படி வேடிக்கை பார்த்த மங்கலம்,

“சபாஷ்… சரியான போட்டி…!” என்று வாய்க்குள்ளாக முணுமுணுத்து லேசாகச் சிரித்துக் கொள்ளவும்….  அவள் பக்கத்தில் நின்று அதைக் காதில் வாங்கி கொண்டிருந்த வேலனும் சாருலதாவும் கூடத் தங்கள் அப்பாவின் அந்த நிலையைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தனர்…..

அந்தச் சமயத்தில் திடீரென்று ஒரு உரத்த ‘சைரன்!’ சத்தம் (“வூவூவூ… வூவூவூ…”) ஹால் முழுதும் அலற….!   

   அங்கே கத்திக்கொண்டிருந்தவர்களில் யார் அதைக் கேட்டு,  அரண்டார்களோ இல்லையோ, ஏற்கனவே,

‘இந்தப் பணம் எங்கிருந்து வந்தது….?’

என்ற குழப்பத்திலும் பயத்திலும் இருந்த மாணிக்கம் அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்படியே ,

“போச்சு….போச்சு… போலிஸா…??!!””

என அலறி அடித்துப் பதறிப்போனவன்…..     அந்த பதட்டத்துடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து, சுற்றும் முற்றும் பார்த்து,

“சைலன்ஸ்…!”

என்று கத்தவும்…… 

“சைலன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸ்……………… . இது காதல் செய்யும் நேரமிது…….. சைலன்…..ஸ்……….. இது காதல் செய்யும் நேரம்…. இது..!”    

  என்ற பாடலின் ஒலியால்  முழு ஹாலுமே அலறியது…. அதன் விளைவாக  அங்கே கூச்சலிட்டவர்களும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்க…., அவமானத்திலும் எரிச்சலிலும் பல்லைக் கடித்துக்கொண்டு தன் மூத்த மகன் வேலனை முறைத்துப் பார்த்த மாணிக்கம்,

        “டேய் மூத்தவனே இது உன் வேல தானே பக்கி…!”   

   “அய்யோ டாடி… நான் இல்ல….! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல…”

வேலன் சொன்னதும், அடுத்துத் தன் மகள் சாருலதாவைப் பக்கவாட்டில் லேசாக  மாணிக்கம் பார்த்து முறைக்கவும்….!, சாருலதாவோ பதறிப்போய்,    

“அய்யோ டாடி! நானும் இல்ல… நான்லாம் இந்த மாதுரி பாட்டெல்லாம் கேக்குறதே இல்ல டாடி…… நான் கேட்குறதெல்லாம்….

‘ இட்ஸ் டைம் டூ கிவ் இட்  பேக் யூ மாமே….. இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே’.!”

என்று அநியாயத்துக்கு அப்பாவித்தனமாக முகம் வைத்து பாடியவளைப் பார்த்து,

” ரெம்ப  முக்கியம் பாப்பா….”

என்றவனுக்கு, இன்னுமே காதில் அந்த பாட்டு சத்தமும் சைரன்! சத்தமுமாக சேர்த்தே கேட்கவும்….!!!!, அவனது இதயத்தில் இருந்த ஒருவிதப் பதைபதைப்போடு, கதவின் பக்கமாகத் திரும்பிய மாணிக்கத்தின் பார்வையானது கதவின் அடிப்பகுதியை நோக்கிச் செல்ல….

அங்கே, வாசற்கதவுக்குக் கீழேயிருந்த அந்தச் சிறிய இடைவெளியிலிருந்து சைரன்!  ஒளியின் வெளிச்சமும்…., அதே சமயம் அதன் சத்தமும் …. அப்படியே , ‘சைலன்ஸ்… இது காதல் செய்யும் நேரம் இது …” என்ற பாடலின் ஒலியுமாக சேர்ந்து மிகத் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது…!

அதன் விளைவாக சத்தம் வேறு எங்கிருந்தும் வரவில்லை…., சரியாக அந்தத் தரைப்பகுதி கதவின் அடியில் இருந்துதான் வருகிறது…. என்பதை உணர்ந்த நொடி… மாணிக்கத்திற்குள் பயமும் அரற்றலும் தொற்றிக் கொள்ளவும்…. .நடுங்கும் தனது கால்களை எடுத்து வைத்து மெல்லக் கதவை நெருங்கினான் மாணிக்கம்…..

-💒மறுமணாகும்…

♥️கதவுக்கு வெளியே என்ன இருக்கும்…???, உங்களின் கெஸ்ஸை கொஞ்சம் சொல்லிட்டு போங்க பட்டூஸ்……

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!